வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்த இளம்பெண் விக்னேஸ்வரி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் காதலன் தலைமறைவாகி உள்ளார். விக்னேஸ்வரியும், புதுக்கோட்டையை சேர்ந்த தீபன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு விக்னேஸ்வரியை தீபன் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். வெகுநேரமாகியும் விக்னேஸ்வரி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இருவரையும் தேடி உள்ளனர். இந்த நிலையியல், கொளத்தூர் சுடுகாடு நுழைவாயில் முன்பு விக்னேஸ்வரியின் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது போல் இருந்துள்ளது.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் விக்னேஷ்வரியின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இளம்பெண் ஆணவக் கொலையா என்ற கோணத்தில் பெற்றோர்களிடம் டி.எஸ்.பி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும் என பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் எட்டாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட பின்னர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (01.04.25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை மீண்டும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசினார். அப்போது; இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 200 படகுகள் நாட்டுடைமையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஒன்றிய அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு எம்.பி.; தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அதிபர் கூறினார்,
ஆனால் உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் அவர்களது உடைமைகளை இலங்கை அரசு பறிமுதல் செய்கிறது எனக் குறிப்பிட்டார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் லோக்சபாவில் இருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன்மூலம் கூட்டணி உறுதியான நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்த்தே ஆகவேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ளது தெரிந்தும், சொல் பேச்சைக் கேட்க மறுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், செங்கோட்டையனை பாஜக கையில் எடுத்துள்ளது.
இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளரைச் சந்தித்துப் பேசவேண்டிய பாஜக தலைமை, செங்கோட்டையனை அழைத்துப் பேச வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியோடு எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
இந்நிலையில், செங்கோட்டையனை 2 ஆவது முறையாக டெல்லிக்கு வருமாறு, பாஜக மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. தங்களது பேச்சைக் கேட்காத எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
சின்னத்தை முடக்குவதுடன், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை காரணமாகக் காட்டி, செங்கோட்டையனை பொதுச் செயலாளராக ஆக்கிவிடத் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி, மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார்.
அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலைத் திறக்கச் சென்ற அவரது முகத்தில் எந்தப் புன்னகையும் இல்லை. நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் மடக்கினர். வழக்கமாக பேட்டி கொடுக்கும் அவர், அன்று எதுவும் பேசாமல் சென்று விட்டார்.
அப்போது முன்னாள் அமைச்சர்களான காமராஜ், நாமக்கல் சரோஜா ஆகியோர் எடப்பாடியைச் சந்தித்து விட்டுச் சென்றனர்.
மாலை 3 மணி அளவில், இப்பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கட்சியினரால் கூறப்படும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, எடப்பாடி வீட்டிற்குச் சென்றார்.அங்கு இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பேசினர். பின்னர், இருவரும் ஒரே மகிழுந்தில் புறப்பட்டு, காமலாபுரம் சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.
தங்கமணியுடனான சந்திப்பில், செங்கோட்டையன் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்து எடப்பாடி ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால்,பாஜகவுக்குப் பயப்பட மாட்டேன் என்று காட்ட செங்கோட்டையனைக் கட்சியில் இருந்து நீக்கும் உத்தரவை எடப்பாடி வெளியிடுவாரா? அல்லது பாஜகவின் மிரட்டலுக்குப் பயந்து அனைவருடனும் இணைவாரா? என்பதுதான் இப்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறது.
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணியாற்றிய ஒரு காவல்துறை உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (31) காலை முன்னியலையாகினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நேற்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் 31, 2023 அன்று, மாத்தறை வெலிகமவின் பெலேனா பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்திருநதார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.