தாய் மொழி


தமிழை வாழ வைக்க சில வழிகள் உண்டு. வீட்டு மொழி தமிழாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பெயர் தமிழாக இருக்க வேண்டும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனைச் சந்தித்தால் தமிழில் பேச வேண்டும். கோயில் வழிபாடு தமிழில் இல்லாத கோயில்களுக்குப் போகக் கூடாது. 

தமிழ் தெரியாத கடவுளர் எங்களுக்குத் தேவையில்லை. எங்கேயிருந்து வந்தார்களோ அங்கு போய்விட வேண்டும். எடுத்துக்காட்டு வாதாபி கணபதி. அவர் வாதாபிக்குப் போய்விட வேண்டும். திருமணம் செந்தமிழில் திருக்குறள் ஓதி நடத்த வேண்டும். 

அல்லது திருமுறை ஓதி செய்ய வேண்டும். நுண்கலை கற்றுக் கொடுப்போர் தமிழில் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு கோயில் கட்டினால் ஒரு தமிழப் பள்ளிக்கூடமும் கட்ட வேண்டும். அங்கே தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நீதி நெறி இருக்க வேண்டும். அவற்றை பிள்ளைகளுக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிநெறி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வுலகிற்கு பல நீதி நூல்களை வழங்கி உள்ளது. அனைத்திற்கும் மேலாக உலகப் பொதுமறையான திருக்குறள் தமிழர்களின் ஒப்பற்ற படைப்பாகும். அறம், வீரம் , காதல், சமூக வாழ்வு, இலக்கியம் என பலவற்றையும் உள்ளடடிக்கிய சங்க இலக்கிய நூல்கள் ஏராளாமாக உள்ளன. இவ்வனைத்தும் உலக மக்கள் படித்து பயன்பெற வேண்டிய நூல்களாகும். 

நம் தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.மு 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.மு 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. மு 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.மு 5000 பரிபாடல்;
கி.மு 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன. மேலும் பழமையான நூல்கள் கடல் கோளாலும், சூழ்ச்சிகளாலும் அழிந்து விட்டன...
...
  • நிகண்டு நூல்கள்

    நிகண்டுக்குத் தோற்றுவாய் தொல்காப்பியச் சொல் அதிகாரத்தின் உரியியல் ஆகும். அதில் உள்ள 100 நூற்பாக்களும் நிகண்டின் பொருளையே கூறுவன. சிறுபகுதி இதற்கு முந்திய இடையியலிலும், பொருளதிகார மரபியலிலும் காணப்படும். இவ்விடங்களில் தாம் விளக்க வேண்டும் என்று கருதிய சொற்களை மட்டுமே தொல்காப்பியர் விளக்கி உரைத்தார். எல்லாச் சொற்களையும் சொல்ல அவர் எண்ணவில்லை. உரியியல், ‘உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை' என்று தொடங்குகிறது. நிகண்டு என்ற சொல் 15ஆம் நூற்றாண்டு வரை வழக்கத்திற்கு வரவில்லை.

    கூட்டம் எனினும் நிகண்டு எனினும் ஒக்கும்

    என்பது சங்கர நமசிவாயர் நன்னூலில் (சூத்திரம் 460க்கான உரை) எழுதியிருக்கும் குறிப்பு. ‘இவ்விலக்கணம் அறிவதற்கு முன் நிகண்டறிக' என்றாம், அறியும் முறை அதுவாகலான்' என்றும் அவர் எழுதுகிறார். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகள் - ஏழு எட்டுக்கு உட்பட்ட வயதில் - நிகண்டினை நெட்டுருச் செய்து வந்தார்கள்.

    முதன்முதலாக 16வது நூற்றாண்டில் தான், ‘மண்டல புருடர்' தம் நூலை, ‘நிகண்டு சூடாமணி என்று ஒன்று சொல்வேன்' என்கிறார். அதற்கு முன்பு வரை நிகண்டுகள் உரிச்சொல் என்ற பெயராலேயே வழங்கின. சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரும் அகராதிகளாக நிகண்டுகள் இலங்கின.

    5.4.1 திவாகர நிகண்டு

    ‘நிகண்டு' எனும் பிரிவில் திவாகரம் முதலில் தோன்றிய நூல் ஆகும். இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைக்காலத்தில் வாழ்க்கையின் எத்துறையிலும் முக்கியமான பொருளை நினைவில் இருத்த வேண்டும் என்றால் அதைப் பாட்டாகவே எழுதி வைத்தார்கள். அதே நிலை இடைக்காலத்திலும் தொடர்ந்தது. இலக்கணமும் பாட்டாகவே எழுதி வைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். நிகண்டுகள் முதலியன இன்றுவரை பாட்டாகவே இருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லாம்.

    தமிழின் ஆதி நிகண்டு திவாகரம் ஆகும். திவாகரத்தைச் செய்தவர் திவாகரர் ஆவார். ‘திவாகரர்', ‘திவாகரன்' என்ற சொற்களுக்கு, ‘பகலைச் செய்பவன், சூரியன்' என்று பொருள். படைக்கலங்கள் பற்றி இவர் விரிவாகவும், விளக்கமாகவும் கூறி உள்ளார். எனவே இவர் ஒரு போர் வீரராக இருத்தல் வேண்டும் என்று பேராசிரியர் அருணாசலம் கூறுவார்.

    “அம்பர் காவலன் சேந்தன் அம்பிகை மீது அந்தாதி பாடினான்” என்று சொல்ல வந்த திவாகரர், அம்பிகையைப் புகழ்வதால் இவர், சைவர் என்று கூறுவர். அம்பிகையைப் புகழ்வது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முனிவர் என்ற பெயரை வைத்துச் சமணர் என்பது தவறு என்கிறார் பேராசியர் அருணாசலம். 880இல் திவாகரர் நிகண்டு செய்தார்.

    திவாகரம் 12 பிரிவுகளைக் கொண்டது. அவை,

    (1)
    தெய்வப் பெயர்த் தொகுதி
    (2)
    மக்கள் பெயர்த் தொகுதி
    (3)
    விலங்கின் பெயர்த் தொகுதி - மக்கள், தேவர், தாவரம் அல்லாத பிற யாவும்
    (4)
    மரப் பெயர்த் தொகுதி - தேவதாரு முதல் மூங்கில் வரை 79 மரங்கள்.
    (5)
    இடப் பெயர்த் தொகுதி - உலகு, திசை, கடல், மலை, ஆறு முதலியன.
    (6)
    பல்பொருள் பெயர்த் தொகுதி - பிற தொகுதிகளில் சொல்லாதன - உலோகம், மணி போன்றவை.

    முதலியவை ஆகும்.

    பதினோராம் பகுதியாகிய ஒரு சொல் பலபொருள் பெயர்த் தொகுதியில் - ‘அரி' என்ற ஒரு சொல்லை எடுத்து அதற்கு 23 பொருள் தந்து இதில் 15 தமிழ்ப் பொருள் ; 8 வடமொழியில் இருந்து வந்த பொருள் என்கிறார்.

    12ஆம் பகுதி பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி ஆகும். இது பிற்காலத்தில், ‘தொகை அகராதி' எனப்பட்டது (தொகை - தொகுதியாக, கூட்டமாக உள்ள பொருள்கள்)

    கூறியது கூறினும் குற்றமில்லை
    வேறொரு பொருளை விளக்குமாயின்

    என்ற முன்னுரையோடு ஒன்றில் தொடங்கி 83 வரையில் தொகைப் பொருளைக் கூறுகிறார்.

    ஆங்கிலத்தில் உள்ள, ‘Dictionary', ‘Thesauras' என்ற இரண்டும் நிகண்டை ஒத்தவை. சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி. திவாகர நிகண்டின் பதினொராம் பகுதி அகராதி போன்றது. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது, ‘thesauras' ஆகும். நிகண்டின் முதல் பத்துத் தொகுதிகளும் இவ்வமைப்பினது. ஆங்கில மொழியில் ரோஜட் என்பவர் 19வது நூற்றாண்டில் முதன்முதலாக இப்படி ஒரு தொகுதி செய்து வெளியிட்டார். தமிழில் ஒன்பதாவது நூற்றாண்டிலேயே செய்யுள் வடிவத்தில் திவாகரரால் செய்யப்பட்டு, அதைத் தழுவிப் பின்னர் இருபதாம் நூற்றாண்டு வரை சுமார் இருபது நிகண்டுகள் வந்திருப்பது தமிழின் சிறப்பாகும்.


எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.
தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன. திருக்குறளில் கூட, உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம்.
இப்பண்பாட்டியல் செய்கையைப் பார்ப்பனியம் பிள்ளையார் சுழியாகப் பறைசாற்றியது. அதாவது, பிள்ளையாரை வணங்கிய பின்பு காரியம் செய் என்னும் பார்ப்பனிய வழிபாட்டு மரபோடு நமது தமிழர் எழுத்தியல் பண்பாட்டு மரபையும் இணைத்து விட்டார்கள்.
ஆகவே , உ என்பது சமயக் குறியோ பிள்ளையார் சுழியோ அல்ல, உலகம் என்பதன் சுருங்கிய குறி. இதுவே தமிழரின் எழுத்துப் பண்பாட்டியலின் குறி என்பதைப் பரவலாக்கம் செய்திட வேண்டும்.
அக்காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். தூவல்(பேனா), காகிதம் இல்லாத காலம் அது. அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும். கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. எனவே வளைவுக் கோடும், நேர்க்கோடும் சரியாக எழுத, ஓலையும் எழுத்தாணியும்
தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின் கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஒரு வளைவு கோடும், ஒரு நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார்.
இன்று நாம் எழுத ஓலைச் சுவடியைப் பயன்படுத்த வில்லையென்றாலும், அன்றுபோல் இன்றும் தமிழர்களாகிய நாம், இந்த உ இடுவது வழக்கத்தில் இருந்த வருகிறது.                                                                                                          

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

பாடல் : பாரதிதாசன்


தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவர்!!
தமிழுக்காக பாடுபட்டவர்களை தமிழினம் என்றும் மறக்காமல் போற்றும். 
அந்த வகையில் இத்தாலி நாட்டை சேர்ந்த கிருத்துவ மதபோதகரான கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi) அவர்களை தமிழினம் என்றுமே நினைவில் வைத்துக் கொண்டாடும்.
எங்கிருந்தோ வந்த கிருத்துவர் தமிழர் மதத்தின் நூல்களை படித்து தமிழின் பெருமைகளை உலகறியச் செய்தார். ஆனால் இந்தியாவிலே தோன்றிய இந்துத்வா கொள்கை கொண்ட விவேகானந்தர் தமிழகம் வந்து எந்த தமிழ் அற நூல்களையும் கற்கவில்லை. தமிழின் சிறப்புகளை வெளிநாட்டில் சொல்லவும் இல்லை என்பது வேதனை.

வீரமாமுனிவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறது.
வீரமாமுனிவர் தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.                                                                                                          

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

பாடல் : பாரதிதாசன்



தமிழ் அறிவு நூல்கள்  ..

1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
............
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிவப்பிரகாசர்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
.............
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40.பால சித்தர்
41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
42. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. 
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
43. அஷ்ட வசுக்கள்
44. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய இனிய மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஆகிய 12 (உயிர் எழுத்துக்களுக்கும்)முன்பு ஓர் என்ற எழுத்து வரும்.

உதாரணம் ஓர் அம்மா,ஓர் இலை,ஓர் உடும்பு,ஓர் ஓளவைப்பாட்டி.
மற்றய (மெய் எழுத்துக்களுக்கு) முன்னால் ஊதாரணம் ஞ ய ன ந ம ண ய ர ல வ ழ ற பேன்றவைகளுக்கு முன் ஒரு என்ற எழுத்து வரும்.

ஊதாரணம் ஒருமாடு,ஒரு ஞானி,ஒரு நண்பன்.

ஆக்கம்

ஆசியர் தமிழன்பன் லண்டன்














தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247.


247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக 
விளங்குகின்றன.

 அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. 

அவற்றைத் தெரிந்து கொள்வோம் .

அ -----> எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

 சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்.




பிழை திருத்தம்:
சபதம் -பிறமொழிச் சொல்.
உறுதிமொழி, சூளுரை - தமிழ்ச் சொற்கள்.
சரீரம், தேகம் - வடமொழிச் சொற்கள்.
உடல், மேனி, மெய், யாக்கை, காயம் - தமிழ்ச் சொற்கள்.
சத்ரு, விரோதி- வடமொழிச் சொற்கள்.
எதிரி, பகைவன், இன்னான், துன்னன், ஒன்னான்- தமிழ்ச் சொற்கள்
வணக்கம், முத்துப் போன்ற தமிழ்ச் சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தேவையில்லை நமக்கு. தமிழ்ச் சொற்களின் பயன் அறியாதவரே, வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தித் தானும் கெட்டுத் தமிழையும் கெடுப்பர். தமிழை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப் படுத்தத்தான், தமிழ் வாழும், வளரும், நிலைத்திருக்கும். புறக்கணிப்போம் வடமொழிச் சொற்களை. ஒப்படைப்போம் தமிழ்ச் சொற்களுக்காவே நம்மை.
அத்திப்பூ பூப்பது போல், தமிழை அன்றும் இன்றும் சிலர் சங்கம் வைத்துக் காத்தே வந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் கூட தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார். செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார். மரமாகத் தழைக்கச் செய்தவர் பாவாணர். உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உட்பட பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழ் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்துகொண்டிருக்கிறோம் இன்று தமிழுக்காக?
பாலில் தண்ணீரைக் கலப்பின், பாலின் சுவை குன்றிவிடும். அதே பாலில் ஒரு துளி நஞ்சைக் கலந்தால் கூட, அப்பால் கெட்டுவிடும், அதைப் போலவே ஒரு மொழியும். என்றும் தமிழையும் வடமொழிச் சொற்களையும் கலக்கக் கூடாது.
உணவில் கலப்படம் இருந்தால் அது உடலைப் பாதிக்கும். மொழியில் கலப்படம் ஏற்பட்டதால் அது ஓர் இனத்தையே வீழ்த்திவிடும்.
உடலுக்கு உயிரென்றால், ஓர் இனத்திற்குத் தாய்மொழியே மிக முக்கியமானது என்பதை உணர்ந்து, நாளும் ஒரு தமிழ்ச் சொல் அறிவோம்.
வாழ்க தமிழ்.
உயிர் 12, மெய் 18 , மொத்தம் 30 என எளிமையாக சொல்லிக்கொடுப்போம்,
மீதியெல்லாம் சார்பு எழுத்துகளே அவை -10
உயிர்மெய்
ஆயுதம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரகுறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆயுதக்குறுக்கம்
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது*.
----------------------------
*தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். 

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஆகிய 12 (உயிர் எழுத்துக்களுக்கும்)முன்பு ஓர் என்ற எழுத்து வரும்.

உதாரணம் ஓர் அம்மா,ஓர் இலை,ஓர் உடும்பு,ஓர் ஓளவைப்பாட்டி.
மற்றய (மெய் எழுத்துக்களுக்கு) முன்னால் ஊதாரணம் ஞ ய ன ந ம ண ய ர ல வ ழ ற பேன்றவைகளுக்கு முன் ஒரு என்ற எழுத்து வரும்.

ஊதாரணம் ஒருமாடு,ஒரு ஞானி,ஒரு நண்பன்.

ஆக்கம்

ஆசியர் தமிழன்பன் லண்டன்









தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247.


247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக 
விளங்குகின்றன.

 அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. 

அவற்றைத் தெரிந்து கொள்வோம் .

அ -----> எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

 சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்.


எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லித்தர, பிள்ளைகளுக்குச் சில விளக்கங்கள்...*

"", "" மற்றும் "" எங்கெல்லாம் வரும்?

ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி”,

ரெண்டு சுழிமற்றும்

"" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்

ரெண்டு சுழி "" என்பதும், மூன்று சுழி "" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

*"" இதன் பெயர் டண்ணகரம்,*

*"" இதன் பெயர் றன்னகரம்,*

*"" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.*

மண்டபம், கொண்டாட்டம்என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து '' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான்என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து '' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல '' இருக்கா,

அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல '' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்"

என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் '' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து

வரக்கூடிய உயிர்மெய் '' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "", "" மற்றும் "" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

 

'' பழக்கத்திலாக்குவோம்:-

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

} ஞஞ்ஞை - போதை; மயக்கம்; மையல்; உளத்தடுமாற்றம் - "நங்கையைக்கண்டதும் ஞஞ்ஞையடைந்தேன்"

} ஞமலி; ஞாளி; ஞெள்ளை - நாய்

} ஞரல்[வு] - முழக்கம்; சங்கொலி

} []வல் - மின்மினிப்பூச்சி

} ஞறா - மயிலின் அகவல் ஒலி

} ஞாட்பு - போர்; வலிமை; கூட்டம்; படை

} ஞாத்தல் - பொருத்துதல்; கட்டுதல்

} ஞாதி - பங்காளி; சுற்றம்

} ஞாய் - தாய்

௧०} ஞாயில் - கோட்டைச்சுவர் மீது இருக்கும் வீரர்கள் மறைந்திருந்து அம்புகளை/குண்டுகளை ஏவும் ஏவறை.

௧௧} ஞாயிறு - கதிரவன் - சூரியன் எனக்கூறுவதற்குப் பதிலாக ஞாயிறு எனக் கூறிப்பழகலாம்.

௧௨} ஞாலம் - பார்; புவி; உலகம்

௧௩} ஞாற்சி, ஞாற்று - தொங்கல்; தொங்குகை; தொங்கியநிலை - "என் மடிக்கணினி தீடீரென்று ஞாற்சிவிட்டது" - ஞால்: தொங்கு

௧௪} ஞான்று - பொழுது; நாள்.

௧௫} ஞான்றை - காலம்

௧௬} ஞிமிர் - (வண்டு எழுப்பும்) ஒலி

௧௭} ஞிமிறு - வண்டினம்; தேனி

௧௮} ஞெகிழ்தல் - கழல்தல்; தளர்தல்;

௧௯} ஞெகிழம் - சிலம்பு

௨०} ஞெகிழி - பிலாசுடிக்; சிலம்பொலி; தீப்பந்தம்

௨௧} ஞெண்டுகம் - [பெரு]வாகை மரம்

௨௨} ஞெமலி - ஞாயிறிலிருந்து 79 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இலியோ விண்மீன் குழாமுள் பளிச்சென ஒளிரும் மகம்/இரெகுலுசு விண்மீன்.

௨௩} ஞெமல் - சருகு

௨௪} ஞெமல்தல் - அலைந்து திரிதல்

௨௫} ஞெமிடுதல் - கசக்குதல்

௨௬} ஞெமி[ர்[த்]]தல்; ஞெமு(க்|ங்)குதல் - நெரித்தல்; நெருக்குதல்; ஒடித்தல்; அழுத்தல்; அமிழ்த்துதல்; அழுந்துதல்; அமுக்குதல்; வருத்துதல்

௨௭} ஞெரல் - விரைவு

௨௮} ஞெலி - (மத்து போன்றவற்றால்) கடை; (மூங்கிலால் செய்யப்பட்ட) தீக்கடைக்கோல்

௨௯} ஞெலுவர் - நண்பர்

௩०} ஞெள்(|[கு|ளு])ல் - உடன்படுதல்

௩௧} ஞெளிர் - (வயிறு போன்ற உடலின் உள்ளுப்புகளாலோ, கம்பி இசைக்கருவிகளிலோ எழும்) உள்ளொலி

௩௨} ஞெளிர்தல்; ஞெறித்தல் - குரலை உயர்த்தி பேசுதல்

௩௩} ஞொள்குதல் - தளர்தல்; மெலித்தல்; (வலு) குறைத்தல்; இளைத்தல்; சோம்புதல்; குலைதல்; அஞ்சுதல்;

.

மொழிமுதலாக '' வரிசை எழுத்துகள் கொண்ட சொற்களை நாம் அன்றாடம் பயன்படுத்துவதே இல்லை எனலாம். மேலே பட்டியலிலுள்ள முப்பத்துமூன்று சொற்களில் உங்கள் உள்ளத்தை கவர்ந்தவைகளை குறித்துவைத்துக்கொண்டு ஞெலுவர்களிடமும் ஞாதிகளிடமும் ஞான்றுதோறும் தக்க தருணம் நோக்கி விளையுட்டாகவும் களிப்பாகவும் பயன்படுத்தி அறிமுகப்படுத்துங்கள். ஏதோ, நம்மால் முடிந்தது!!!

 


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும்.ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும்,நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடலும் தான்..



ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலியூர் சோமசுந்தரப் புலவர்-

 


பழங்காலத்து தமிழ் எழுத்து.











 





வழக்குத் தமிழ் – தனித்தமிழ்

1.தை – சுறவம்
2.மாசி – கும்பம்
3.பங்குனி – மீனம்
4.சித்திரை – மேழம்
5.வைகாசி – விடை
6.ஆனி – இரட்டை
7.ஆடி – கடகம்
8.ஆவணி – மடங்கல்
9.ஐப்பசி – துலை
10.புரட்டாசி – கன்னி
11.கார்த்திகை – நளி
12.மார்கழி – சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

1.ஞாயிறு – ஞாயிறு
2.திங்கள் – திங்கள்
3.செவ்வாய் – செவ்வாய்
4.புதன் – அறிவன்
5.வியாழன் – வியாழன்
6.வெள்ளி – வெள்ளி
7.சனி – காரி

தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.

1.இளவேனில் -தை – மாசி மாதங்கள்
2.முதுவேனில் -பங்குனி – சித்திரை மாதங்கள்
3.கார் – வைகாசி – ஆனி மாதங்கள்
4.கூதிர் – ஆடி – ஆவணி மாதங்கள்
5.முன்பனி- புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6.பின்பனி– கார்த்திகை – மார்கழி மாதங்கள்





               






















ஆத்திசூடி

1.அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் / 2. Control anger.

3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5.
உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6.
ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7.
எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8.
ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9.
ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10.
ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11.
ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12.
ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13.
அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14.
கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15.
ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16.
சனி நீராடு / 16. Shower regularly.
17.
ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18.
இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19.
இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20.
தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21.
நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22.
பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23.
மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24.
இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25.
அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26.
இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27.
வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28.
அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29.
இளமையில் கல் / 29. Learn when young.
30.
அரனை மறவேல் / 30. Cherish charity.
31.
அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32.
கடிவது மற / 32. Constant anger is corrosive.
33.
காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34.
கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35.
கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36.
குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37.
கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38.
கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39.
கேள்வி முயல் / 39. Learn from the learned.
40.
கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41.
கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42.
கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43.
கெளவை அகற்று / 43. Don't vilify.
44.
சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45.
சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46.
சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47.
சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48.
சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49.
சூது விரும்பேல் / 49. Don't gamble.
50.
செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51.
சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52.
சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53.
சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54.
சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55.
தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56.
தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57.
திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58.
தீவினை அகற்று / 58. Don't sin.
59.
துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60.
தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61.
தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62.
தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63.
தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64.
தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65.
தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66.
நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67.
நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68.
நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69.
நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70.
நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71.
நூல் பல கல் / 71. Read variety of materials.
72.
நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73.
நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74.
நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75.
நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76.
நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77.
பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78.
பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79.
பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80.
பீடு பெற நில் / 80. Follow path of honor.
81.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82.
பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83.
பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84.
பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85.
பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86.
பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87.
போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88.
மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89.
மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90.
மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91.
மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92.
முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93.
மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94.
மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95.
மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96.
மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97.
மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98.
மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99.
வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100.
வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101.
வித்தை விரும்பு / 101. Long to learn.
102.
வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103.
உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104.
ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105.
வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106.
வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107.
வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108.
ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109.
ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.
-
ஔவையார்.



வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்


1 டிரேடரஸ் : வணிக மையம்

2 கார்ப்பரேஷன் : நிறுவனம்

3 ஏஜென்சி : முகவாண்மை

4 சென்டர் : ம்மைய, நிலையம்

5 எம்போரியம் : விற்பனையகம்

6 ஸ்டோரஸ் : பண்டகசாலை

7 ஷாப் : கடை, அங்காடி

8 அண்கோ : குழுமம்

9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி

10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி

11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்

12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி

நன்றி
செந்தமிழ் சோழன் விஜய் குமார் ..







‪#‎பிறமொழி‬ = ‪#‎தாய்மொழி‬
*ஸ்வீட் ஸ்டால் = இனிப்பகம்
*காபி பார் = குளம்பிக் கடை
*ஹோட்டல் = உணவகம்
*தியேட்டர் = திரையகம்
* போட்டோ ஸ்டூடியோ = புகைப்பட (அ) நிழற்பட நிலையம்
*ஆட்டோ = தானி
*பியூட்டி பார்லர் = அழகு நிலையம் (அ) எழில் புனையகம்
*ரெடிமேட்ஸ் = ஆயத்த ஆடைகள்
*பேக்கரி = அடுமனை
*பேட்டரி = மின்கலன்











1 கப் = 1 ஆழாக்கு = 168 கிராம் (168 மிலி)
1 வராகன் = 4.2 கிராம்
1 கழஞ்சு = 5.1 கிராம்
1 பலம் = 41 கிராம் (35 கிராம்)
1 தோலா = 12 கிராம்
1 ரூபாய் எடை = 12 கிராம்
1 அவுன்ஸ் = 30 கிராம்
1 சேர் = 280 கிராம்
1 வீசை = 1.4 கிலோ
1 தூலாம் = 3.5 கிலோ
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி = 1 வராகன்
10 வராகன் = 1 பலம்
40 பலம் = 1 வீசை
6 வீசை = 1 தூலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்
பண்டங்கள் முகத்தலளவை
1 ஆழாக்கு = 168 மிலி
1 உழக்கு = 2 ஆழாக்கு = 336 மிலி
1 நாழி = 1.3 லிட்டர்
1 குறுணி = 5.3 லி
1 தேக்கரண்டி = 4 மிலி
1 உச்சிக்கரண்டி = 1 மேஜைக்கரண்டி = 16 மிலி
1 பாலாடை = 30 மிலி
1 உழக்கு = 2 ஆழாக்கு = 1/4 படி
2 உழக்கு = 1 உரி
2 உரி = 4 உழக்கு = 8 ஆழாக்கு = 1 படி
1 சேர் = 5 ஆழாக்கு
1 சின்ன படி = 1/2 பெரிய படி
8 படி = 1 மரக்கால்
96 படி = 1 கலம் = 12 மரக்கால்
1 பக்கா படி = 2 படி = 2 லிட்டர்
1 தூக்கு விறகு = 20 கிலோ விறகு

பெண்ணின் பருவங்கள் ஏழு... 

 > பேதை : 1 முதல் 8 வயது வரை

 > பெதும்பை : 9 முதல் 10 வயது வரை...

 > மங்கை : 11 முதல் 14 வயது வரை...

 > மடந்தை : 15 முதல் 18 வயது வரை...

 > அரிவை : 19 முதல் 24 வயது வரை...

 > தெரிவை : 25 முதல் 29 வயது வரை... 

> பேரிளம் : பெண் 30 வயது முதல்...
 பெண்மையை போற்றுவோம்...!



ஆய கலைகள் அறுபத்து நான்கும்!!!





பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே"
- போதையனார்
விளக்கம்:
இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.
இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்."

எவ்வளவு எளிமையாக உள்ளது.! தமிழின் பெருமைகளை தமிழர்களே உணர்வீர்களாக..!
வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்

1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : ம்மைய, நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி

நன்றி
செந்தமிழ் சோழன் விஜய் குமார் ..

தான தனத்தன தான தனத்தன
தான தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே! 


பாரதி








நம்ம நாட்டு பாரம்பரிய இன மரங்கள்....

தற்போது...மழை ! பல பகுதிகளில் பொழிகிறது...இதனை பயன்படுத்தி நம்ம வீடு.. ஊரு...நாடும் செழிக்க...

* நாட்டு விதைகளை விதைத்தும்..
நாட்டு மரக் கன்றுகளை நட்டும்...

வருங்கால தலைமுறைகளுக்கு...

ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை யை கொடுப்போம்.!

மரம் வளர்ப்போம்.!
மழை பெறுவோம்..!
வளம் பல பெறுவோம்..!!

20 தமிழ் பழமொழிகள்

தமிழில் பழமொழிகள் பலவிதம் அதில் சில இங்கே

 

தமிழ் பழமொழிகள் (tamil proverbs) கூறும் கருத்துக்களும் , பொருள் விளக்கங்களும் மிகவும் இனிக்கும் .மேலும் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மிகவும் எளிய முறையில் விளங்கும் .அதில் இருக்கும் உண்மையான கருத்துக்கள் பலவிதமான உண்மைகளை எடுத்துரைக்கும்தன்மை கொண்டவை .அப்படியான சில பழமொழிகளை பகிர்ந்து கொள்கிறேன் .உங்களுக்கும் மனதில் விளங்கும் பலமோகிலான காரணத்தையும் விளக்கத்தையும் பகிரவும் .இதனால் பலருக்கும் இந்த பழமொழிகள் சொல்லும், பொருளும் இனிது விளங்கும். 

proverbs in tamil – பழமொழிகள்

1.      பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.

2.      பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

3.      எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

4.      நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.

5.      பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

6.      இஞ்சி இலாபம் மஞ்சளில்.

7.      அகல உழுகிறதை விட ஆழ உழு.

8.      எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

9.      ஏரி நிறைந்தால் கரை கசியும்.

10.    சுண்டைக்காய் காற்பணம், சுமை கூலி முக்காற்பணம்.

11.    செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

12.    சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.

13.    நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

14.    அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

15.    கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.

16.    கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.

17.    இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

18.    உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

19.    ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.

20.    கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

 


தனித்தமிழை காப்போம்,
வடமொழியை புறக்கனிப்போம்,

வடமொழி
அங்கவஸ்திரம்_மேலாடை
அசங்கியம்_அருவருப்பு
அன்ன சத்திரம்_உண்டிச் சத்திரம்
அத்தியாவசியம்_இன்றியமையாமை
அந்தரங்கம்_மறைமுகம்
அநேக_பல
அப்பியாசம்_பயிற்சி
அபிவிர்த்தி_மிகுவளர்ச்சி
அபராதம்_குற்றம் (தண்டம்)
அபிஷேகம்_திருமுழுக்கு
அபூர்வம்_அருமை
அமாவாசை_காருவா
அர்ச்சனை_தொழுகை (வழிபாடு)
அர்த்தம்_பொருள்
அவசரம்_விரைவு (பரபரப்பு)
அவசியம்_தேவை
அவயவம்_உறுப்பு
அற்புதம்_புதுமை (இறும்பூது)
அன்னவஸ்திரம்_ஊணுடை
அன்னியம்_அயல்
அனுபவி_நுகர்
அனுஷ்டி_கைக்கொள்
அஸ்திபாரம்_அடிப்படை
ஆக்கினை(ஆணை)_கட்டளை
ஆகாரம்_உணவு
ஆச்சரியம்_வியப்பு
ஆசாரம்_ஒழுக்கம்
ஆசீர்வாதம்_வாழ்த்து
ஆதரி_தாங்கு (அரவணை)
ஆதியோடந்தமாய்_முதலிலிருந்து முடிவுவரை
ஆபத்து_அல்லல்
ஆமோதி_வழிமொழி
ஆரம்பம்_துவக்கம், தொடக்கம்
ஆரோக்கியம்_நலம், நோயின்மை
ஆலோசி_சூழ்
பாகம்_2,
ஆயுள்_வாழ்நாள்
ஆனந்தம்_களிப்பு
ஆஸ்தி_செல்வம்
ஆக்ஷேபி_தடு
ஆட்சேபணை_தடை
இந்திரன்_வேந்தன்
இருதயம்_நெஞ்சம், நெஞ்சாங்குலை
இஷ்டம்_விருப்பம்
ஈஸ்வரன்_இறைவன்
உத்தேசம்_மதிப்பு
உத்தியோகம்_அலுவல்
உபகாரம்_நன்றி
உபசாரம்_வேளாண்மை
உபயானுசம்மதமாய்_இருமையால் நேர்ந்து
உபவாசம்_உண்ணா நோன்பு
உபாத்தியாயர்_ஆசிரியர்
உற்சவம்_திருவிழா
உற்சாகம்_ஊக்கம்
உஷ்ணம்_வெப்பம்
கங்கணம்_வளையல் (காப்பு)
கங்கண விஸர்ஜனம்_சிலம்பு கழி நோன்பு ஆக்கினை
கபிலை_குரால்
கருணை_அருள்
கர்வம்_செருக்கு
கவி_செய்யுள்
கனகசபை_பொன்னம்பலம்
கஷ்டம்_வருத்தம்
கஷாயம்_கருக்கு
காவியம்_தொடர்நிலைச் செய்யுள்
காஷாயம்_காவி
கிரகம்_கோள்
கிரீடம்_முடி
கிருகப்பிரவேசம்_புது வீடு புகல்
கிருபை_அருள், இரக்கம்
கிருஷிகம்_உழவு
கோஷ்டி_குழாம்
சக்கரவர்த்தி_மாவேந்தன்
சக்தி_ஆற்றல்
சகலம்_எல்லாம்
சகஜம்_வழக்கம்
சகுனம்_குறி, புள்
சகோதரன்_உடன் பிறந்தான்
சங்கடம்_இடர்ப்பாடு
சங்கரி_அழி
சங்கீதம்_இன்னிசை
சத்தம்_ஓசை
சத்தியம்_உண்மை
சத்துரு_பகைவன்
சந்ததி_எச்சம்
சந்தி_தலைக்கூடு
சந்திப்பு_கூடல் (Junction)
சந்திரன்_மதி, நிலா
சந்தேகம்_ஐயம், ஐயுறவு
சந்தோஷம்_மகிழ்ச்சி
சந்நிதி_முன்னிலை
சந்நியாசி_துறவி
சம்பந்தம்_தொடர்பு
சம்பாஷணை_உரையாட்டு
சம்பூரணம்_முழுநிறைவு
சமாச்சாரம்_செய்தி
சமுகம்_மன்பதை
சமுசாரி_குடும்பி (குடியானவன்)
சமுச்சயம்_அயிர்ப்பு
சமுத்திரம்_வாரி
சர்வமானியம்_முற்றூட்டு
சரணம்_அடைக்கலம்
சரீரம்_உடம்பு
சன்மார்க்கம்_நல்வழி
சாதம்_சோறு
பாகம்_3,
சாதாரணம்_பொதுவகை
சாஸ்திரம்_கலை(நூல்)
சாஸ்வதம்_நிலைப்பு
சாக்ஷி_கண்டோன்
சிங்காசனம்_அரியணை
சிநேகிதம்_நட்பு
சிரஞ்சீவி_நீடுவாழி
சீக்கிரம்_சுருக்கு
சுகம்_உடல் நலம் அல்லது இன்பம்
சுத்தம்_துப்புரவு
சுதந்தரம்_உரிமை
சுதி (சுருதி)_கேள்வி
சுபம்_மங்கலம்
சுபாவம்_இயல்பு
சுயமாய்_தானாய்
சுயராஜ்யம்_தன்னாட்சி
சுரணை (ஸ்மரணை)_உணர்ச்சி
சுவர்க்கம்_துறக்கம், உவணை
சுவாசம்_மூச்சு (உயிர்ப்பு)
சுவாமி_ஆண்டான், கடவுள்
சுவாமிகள்_அடிகள்
சேவகன்_இளையன்
சேவை_தொண்டு (ஊழியம்)
சேனாபதி_படைத்தலைவன்
சேனாவீரன்_பொருநன்
சேஷ்டை_குறும்பு
சொப்பனம்_கனா
சோதி_நோடு
சௌகரியம்_ஏந்து
ஞாபகம்_நினைப்பு
ஞானம்_அறிவு
தயவு_இரக்கம்
தருமம்_அறம்
தாசி_தேவரடியாள்
தானியம்_கூலம், தவசம்
தினம்_நாள்
துக்கம்_துயரம்
துரோகம்_இரண்டகம்
துஷ்டன்_தீயவன்
தூரம்_சேய்மை
தேகம்_உடல்
தைலம்_எண்ணெய்
தோஷம்_சீர் (குற்றம்)
நதி_ஆறு
நமஸ்காரம்_வணக்கம்
நஷ்டம்_இழப்பு
நக்ஷத்திரம்_வெள்ளி (நாண்மீன்)
நித்திரை_தூக்கம்
நியதி_யாப்புறவு
நியமி_அமர்த்து
நியாயம்_முறை
நாசம்_அழிவு
நாதம்_ஒலி
நிஜம்_மெய்
நிச்சயம்_தேற்றம்
நீதி_நயன்
பிரயோகம்_எடுத்தாட்சி (வழங்கல்)
பிரயோஜனம்_பயன்
பிரஜை_குடிகள்
பிராகாரம்_சுற்றுமதில்
பக்தன்_அடியான் (தேவடியான்)
பிராணன்_உயிர்
பிராணி_உயிர்மெய் (உயிர்ப்பொருள்), உயிரி
பக்தி_தேவடிமை
பகிரங்கம்_வெளிப்படை
பிராயச்சித்தம்_கழுவாய்
பசு_ஆன்(ஆவு)
பாகம்_4,
பிரியம்_விருப்பம்
பஞ்சேந்திரியம்_ஐம்புலன்
பத்திரம்_தாள் (இதழ்)
பத்திரிகை_தாளிகை
பத்தினி_கற்புடையாள்
பதார்த்தம்_பண்டம் (கறி)
பதிவிரதை_குலமகள் (கற்புடையாள்)
பந்து_இனம்
பரம்பரை_தலைமுறை
பரிகாசம்_நகையாடல்
பரியந்தம்_வரை
பக்ஷி_பறவை (புள்)
பாத்திரம்_ஏனம் (தகுதி)
பார்வதி_மலைமகள்
பாவம்_தீவினை
பானம்_குடிப்பு (குடிநீர்)
பாஷை_மொழி
பிச்சை_ஐயம்
பிச்சைக்காரன்_இரப்போன்
பிசாசு_பேய்
பிரகாசம்_பேரொளி
பிரகாரம்_படி
பிரசங்கம்_சொற்பொழிவு
பிரசவம்_பிள்ளைப்பேறு
பிரசுரம்_வெளியீடு
பிரத்திக்ஷணம்_கண்கூடு
பிரதக்ஷிணம்_வலஞ்செய்தல்
பிரயாசம்_முயற்சி
பிரயாணம்_வழிப்போக்கு
பிரயாணி_வழிப்போக்கன்
பிரேதம்_பிணம்
புண்ணியம்_நல்வினை (அறப்பயன்)
புத்தி_மதி
புத்திமதி_மதியுரை
புருஷன்_ஆடவன்
புஷ்டி_தடிப்பு (சதைப்பிடிப்பு)
புஷ்பம்_பூ
புஷ்பவதியாதல்_முதுக்குறைதல் (பூப்படைதல்)
பூமி_ஞாலம், நிலம்
பூர்வீகம்_பழைமை
பூரணசந்திரன்_முழுமதி
பூஜை_வழிபாடு
போதி_கற்பி, நுவல்
போஜனம்_சாப்பாடு
போஷி_ஊட்டு
பௌரணை_நிறைமதி
மத்தி_நடு
மத்தியானம்_நண்பகல் (உச்சிவேளை)
மயானம்_சுடுகாடு, சுடலை
மரியாதை_மதிப்பு
மாமிசம்_இறைச்சி
மார்க்கம்_வழி
மிருகம்_விலங்கு
முக்தி_விடுதலை
முகஸ்துதி_முகமன்
மூர்க்கன்_முரடன்
மைத்துனன்_அத்தான் (கொழுந்தன்), அளியன்
மோசம்_கேடு
மோக்ஷம்_வீடு, பேரின்பம்
யதார்த்தம்_உண்மை
யமன்_கூற்றுவன்
யஜமான்_தலைவன் (ஆண்டான்)
யாகம்_வேள்வி
யோக்கியம்_தகுதி
யோசி_எண்
ரகசியம்_மறைபொருள், மருமம்
ரசம்_சாறு
பாகம்_5,
ரணம்_புண்
ரத்தினம்_மணி
ரதம்_தேர்
ராசி_ஓரை
ருசி_சுவை
ரோமம்_மயிர்
லஜ்ஜை_வெட்கம்
லக்ஷ்மி_திருமகள்
லாபம்_ஊதியம்
லோபம்_இவறன்மை
லோபி_இவறி (கஞ்சன், பிசிரி)
வசனம்_உரைநடை
வமிசம்_மரபு
வயசு_அகவை
வர்க்கம்_இனம்
வர்த்தகம்_வணிகம்
வருஷம்_ஆண்டு
வாத்தியம்_இயம்
வாயு_வளி
வார்த்தை_சொல்
விகடம்_பகடி
விசுவாசம்_நம்பிக்கை
விசனம்_வாட்டம்
விசாரி_வினவு, உசாவு
விசேஷம்_சிறப்பு
வித்தியாசம்_வேறுபாடு
விநோதம்_புதுமை
வியவகாரம்_வழக்கு
வியவசாயம்_பயிர்த்தொழில்
வியாதி_நோய்
வியாபாரம்_பண்டமாற்று
விரதம்_நோன்பு
விரோதம்_பகை
விஸ்தீரணம்_பரப்பு
விஷம்_நஞ்சு
வீரன்_வயவன் (விடலை)
வேசி_விலைமகள்
வேதம்_மறை
வைத்தியம்_மருத்துவம்
ஜயம்_வெற்றி
ஜலதோஷம்_நீர்க்கோவை, தடுப்பு
ஜன்மம்_பிறவி
ஜன்னி_இசிவு
ஜனம்_நரல் (நருள்)
ஜனசங்கியை_குடிமதிப்பு
ஜன மரணம்_பிறப்பிறப்பு
ஜாக்கிரதை_விழிப்பு
ஜாதகம்_பிறப்பியம்
ஜாதி_குலம்
ஜீரணம்_செரிமானம்,
ஜீரணோத்தாரணம்_பழுது பார்ப்பு
ஜீவன்_உயிர்
ஜீவனம்_பிழைப்பு
ஜீவியம்_வாழ்க்கை
ஜோதி_சுடர்
ஜோதிடன்_கணியன்
ஸ்தாபனம்_நிறுவனம்
ஸ்திரீ_பெண்டு
ஸ்தோத்திரி_பராவு
ஸ்நானம்_குளிப்பு
க்ஷணம்_நொடி
க்ஷீணம்_மங்கல்
க்ஷேமம்_ஏமம், நல்வாழ்வு (காப்பு)
இங்ஙனம் நூற்றுக்கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாமை(அனாவசியம்)யாய் வழங்குகின்றன. இவை எங்ஙனம் வந்தன? தமிழர் மொழி வடமொழியன்று.
தாய் தமிழ் நிலைத்து வாழவேண்டும் எனில் தனித்தமிழை பாதுகாத்து தினம் எழுதி,பேசி பழகி புலங்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை...
தனித்தமிழை காப்போம்,
வடமொழியை புறக்கனிப்போம்,
தமிழ் கலவை மொழியாகும் இழிவிலிருந்து தமிழை பாதுகாப்போம்,,,,,,
பாவாணர் நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது...


சங்க இலக்கியம்
தமிழின் அரும்பெரும் செல்வங்களுள் தலையாயது சங்க இலக்கியங்களும், தொல்காப்பியமுமே. தொல்காப்பியம் நனி சிறந்த இலக்கண நூல்.
ஆனால் இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் இயம்புதல் தமிழ் மரபு. அந்த வகையில் இலக்கணத்தை விட மொழி ஓடையில் முந்து நீராய் ஓடத் தொடங்கியவை இலக்கியங்களே.
சங்க இலக்கியங்களைப் பயில்வது என்பது வெறும் பழைமையைக் கற்பதல்ல. அதன் கூறுகள் பலவும் இன்றும் தமிழ் உலகின் நனவிலி மனதில் தொடர்ந்து வருபவை.
தமிழ்கூறு நல்லுலகின் பல்வேறு மனித இயல்புகள், வரலாற்றின் சுவடுகள், காலம், களம் பற்றிய சொல்லாடல்கள், வகைமாதிரி வாழ்வியல் மாந்தர்கள் என்று பலவற்றையும் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பவை சங்க இலக்கியங்கள்.
அந்த நதியில் தலைமுறை தோறும் நீராடி மகிழ்தல் தமிழ் கூறு நல்லுலகின் உற்சாகங்களுள் ஒன்றல்லவா!

சும்மா இதை படியுங்கள் நிச்சயம் நீங்கள் அசந்து போவீர்கள் – 
இது தான் தமிழ் மொழியின் சிறப்பு:-

உலகில் 6800 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்பு மிக்கது என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உலகின் மூத்த குடியெனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. 
மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.

உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போக, தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த பீடிகை தொடர்ந்து  படியுங்கள் புரியும்,

*சும்மா*... சொல்லுவோம் தமிழின் சிறப்பை,
 
அது சரி சும்மா என்றால் என்ன? 
அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா. 
பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை இது.

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 அர்த்தங்கள் உண்டு வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, 

நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக்காட்டும்.

1, அமைதியாக - சும்மா (அமைதியாக) இருங்கள் – Quiet

2. களைப்பாறிக்கொண்டு - கொஞ்ச நேரம் சும்மா இருக்கின்றேன் - Leisurely

3. உண்மையில் - சும்மா சொல்லக்கூடாது அருமை - in fact

4. சும்மா ( இலவசமாக) கிடைக்காது - Free of cost

5. பொய் - சும்மா கதை அளக்காதே - Lie

6. உபயோகமற்று - சும்மா தான் இருக்கின்றது எடுத்துக்கொள் - Without use

7. அடிக்கடி - சும்மா சும்மா சீண்டுகின்றான் இவன் - Very often

8. எப்போதும் - இவன் இப்படித்தான் சும்மா சொல்லுவான் - Always

9. தற்செயலாக - ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன் - Just

10. காலி - இந்த பெட்டி சும்மா தான் இருக்கின்றது - Empty

11. மறுபடியும் - சொன்னதையே சும்மா சொல்லாதே - Repeat

12. ஒன்றுமில்லாமல் - சும்மா ( வெறும்கையோடு) போகக் கூடாது - Bare

13. சோம்பேறித்தனமாக - சும்மா தான் இருக்கின்றோம் - Lazily

14. நான் வெட்டியாக (சும்மா) ஏதாவது உளறுவேன் - idle

15. விளையாட்டிற்கு - எல்லாமே  சும்மா தான் சொன்னேன் - Just for fun

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல். நாம்  பயன்படுத்தும் இடத்தின்படியும்…. தொடரும் சொற்களின்படியும்..  பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்றால் அது சும்மா இல்லை

சும்மா வாவது சிந்தித்தீர்களா இதனை..?

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றமை, 

ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

இந்த சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்கு சும்மா பிடித்து இருந்தால் சும்மா ஒரு Forward பண்ணுங்கள்..
 
சும்மா பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ள..




 எங்கள் உயிர்காத்து உயர்வடைந்த அத்தனை தமிழினத்தின் தோழர்களே 

உங்களுக்காக என்றும் இது அனையா விழக்கு.
 






400 #தமிழ்ப்பெயர்கள் - இரா.திருமாவளவன்

 

1 = அகரன் > முதன்மையானவன்

2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்

3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்

4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்

5 = அகிலன் > உலகம் போல் அகன்ற மனத்தன்

6 = அகில் > அகிலைப் போலும் மணம் வீசுபவள்

7 = அணவன் > நெருங்கிய தன்மையன்; பொது உறவினர்

8 = அணன் > நெருங்கிய அன்பின் தன்மையின்

9 = அணியன் > அழகானவன்

10 = அண்டன் > அண்டன் போல் விரிந்த மனத்தன்

11 = அண்ணல் > மேலானவன்

12 = அண்ணல் > மேன்மையானவன்

13 = அதிகன் > மேலானவன்

14 = அத்தன் > முதன்மையானவன்

15 = அந்தணி > அகம் தணித்தவன்

16 = அமரன் > வீரன்

17 = அமுதன் > இனிமையானவன்

18 = அமுதினி > அமிழ்தைப் போலும் இனியவள்

19 = அம்மை > அழகியவள்

20 = அரசி > தலையானவள்

21 = அரணன் > அரணானாக விளங்குபவன்

22 = அரண் > பாதுகாப்பாக விளங்குபவன்

23 = அரவன் > கூரிய அறிவாளன்

24 = அரன் > அரம் போலும் அறிவுக் கூர்மையாளன்

25 = அரி > அரிமா போன்றவன்

26 = அருவி > அருவி போலும் குளிர்ந்தவள்

27 = அருளி > அருள் உள்ளங் கொண்டவள்

28 = அருளினி > அருள் தன்மை கொண்ட இனியவள்

29 = அல்லி > அல்லி மலர் போன்றவள்

30 = அவ்வை > பெருமைக்குரிய பெண்

31 = அழகன் > அழகானவன்

32 = அழகி > அழகானவள்

33 = அறவான் > தூய உள்ளத்தவன்

34 = அறன் > தூய நெஞ்சம் உடையவன்

35 = அறிவன் > அறிவாளன்

36 = அன்பி > அன்புக்குரியவள்

37 = அன்பினி > அன்புக்குரிய இனியவள்

38 = ஆகன் > ஆக்க மனம் கொண்டவன்

39 = ஆதன் > உயிரைப் போன்றவன் / முதன்மையானவன்

40 = ஆதி > முதன்மையானவள்

41 = ஆயன் > ஆய்ந்த அறிவாளன்

42 = ஆயி > அறிவார்ந்த முதிர்ந்த பெண்

43 = ஆரன் > செம்மையான அறிவாளன்

44 = ஆலன் > ஆல மரம் போல் உறுதியானவன்

45 = ஆவலன் > மிகுந்த ஈடுபாடுடையவன்

46 = ஆவன் > ஆகும் எண்ணம் கொண்டவன்

47 = ஆழியன் > ஆழமான மனம் அறிவு உள்ளவன்

48 = ஆளன் > ஆளுமை உடையவன்

49 = ஆற்றல் > வலிமை உடையவன்

50 = இசை > இசை போலும் இனியள்

51 = இமிழ் > அலையோசை / இனிய ஓசை

52 = இமை > இமையைப் போலும் காப்பவள்/ உயர்ந்தவள்

53 = இலங்கி > ஒளி வீசுவது புகழ் பெறுபவள்

54 = இனி > இனிய மனத்தினள்

55 = இனியள் > இனிய பண்புடையவள்

56 = இனியன் > இனிய நெஞ்சன்

57 = இனியாள் > இனிய உள்ளத்தினள்

58 = இன்பன் > இன்பம் விழைபவன் / இன்புறுத்துபவன்

59 = இன்பா > இனிய பாவினைப் போன்றவள்

60 = இன்மொழி > இனிய மொழி பேசுபவள்

61 = ஈழவன் > ஈழத்தைப் போற்றுபவன் / சார்ந்தவன்

62 = ஈழன் > ஈழத்திருமகன்

63 = உயிரன் > உயிரைப் போலும் சிறந்தவன்

64 = உய்யன் > விடிவை உடையவன்

65 = உரன் > உரம் வாய்ந்தவன்

66 = உலகன் > உலகம் போலும் விரிந்தவன்

67 = உறவன் > உறவாய் விளங்குபவன்

68 = ஊங்கன் > எதிலும் முதன்மையானவன்

69 = ஊரன் > ஊரைச் சார்ந்தவன்

70 = ஊரன் > ஊரைச் சேர்ந்த உரிமையாளன்

71 = ஊழி > காலங் கடந்தும் நிலைப்பவன்

72 = எல்லன் > கதிரவன்

73 = எல்லோன் > கதிரவன்

74 = எழிலன் > அழகானவன்

75 = எழிலி > அழகியவள்

76 = எழில் > அழகன்

77 = எழினி > முகில் போன்றவன்

78 = எழுவன் > எழுச்சிக்குரியவன்

79 = எளியன் > எளிமையானவன்

80 = ஏந்தல் > பெருமைக்குரியவன்

81 = ஏந்தன் > உயர்ந்து வாழ்பவன் / தாங்கி நிற்பவன்

82 = ஏந்தி > ஏந்துபவன்/ பொறுப்புகளை தாங்கி வாழ்பவன்

83 = ஏரகன் > வான் போல் உயர்ந்தவன்

84 = ஏரன் > வான் போல் உயர்ந்தவன் / மேலானவன்

85 = ஏறன் > ஏற்றம் உடையவன்

86 = ஐயன் > மேலான அறிவாளன்

87 = ஒண்மை > ஒளியைப் போன்ற அறிவையுடையவள்

88 = ஒளி > ஒளி வீசுபவள்

89 = ஒளியன் > ஒளி வீசும் அறிவாளன்

90 = ஒளிர் > ஒளி வீசுபவள்

91 = ஓங்கல் > மலை போலும் உயர்ந்தவன்

92 = ஓங்கன் > உயர்ந்தவன்

93 = ஓரகன் > ஒரே குறிக்கோளை உடையவன்

94 = ஓரி > தேன் போலும் இனியவன்

95 = ஓரையன் > ஒரு நெறியாளன் / விண் மீன் போன்றவன்

96 = ஓவன் > ஓவியம் போன்ற அழகன்

97 = ஓவியன் > அழகு ஓவியம் போன்றவன்

98 = கணியன் > கணிக்கும் அறிவாளன்

99 = கதிர் > ஒளியைப் போன்றவன்

100 = கயல் > கயல் மீனைப் போன்றவள்

101 = கயல் > கயல் மீனைப்போன்ற கண்ணை உடையவள்

102 = கலை > எழிலானவள்

103 = கவரன் > கவரும் தன்மையன்

104 = கவினன் > அழகானவன்

105 = கனகன் > பொன்னைப் போன்றவன்

106 = கனலி > தீமையைக் கண்டு கனல் போல் சுடுபவள்

107 = கனி > கனி போலும் இனிமையானவள்

108 = கன்னல் > கரும்பைப் போன்ற இனியவள்

109 = கன்னி > இளைமையானவள்

110 = காந்தல் > ஈர்க்கும் மலர்

111 = காரன் > கரியன்/ உணர்ச்சியுள்ளவன்

112 = காரி > காரிக் கோளைப் போன்றவன்

113 = காரோன் > கார் முகில் போன்றவன்

114 = காவலன் > காக்கும் தன்மையன்

115 = காவன் > காக்கும் காவலன்

116 = காழன் > உறுதி வாய்ந்தவன்

117 = காளை > காளையைப் போல் திண்மையன்

118 = குணன் > பண்பாளன்

119 = குமரி > இளமையானவள்

120 = குயிலி > குயில் போலும் குரலைக் கொண்டவள்

121 = குழலன் > குழலிசை போலும் உள்ளத்தவன்

122 = குழலி > அழகிய கூந்தலை உடையவள்

123 = குன்றன் > மலை போலும் உறுதியானவன்

124 = கெழுவன் > நிறம் மிகுந்த அழகன்

125 = கொடி > கொடியைப் போலும் மென்மையானவள்

126 = கொவ்வை > கொவ்வைப் பழம் போல் சிவந்தவள்

127 = கொற்றன் > அரசனைப் போன்றவன்

128 = கோ > அரசன்

129 = கோதை > அழகிய கூந்தலை உடையவள்

130 = கோவன் > அரசனைப் போன்றவன்

131 = கோவை > கோவைப் பழத்தைப் போலும் சிவந்தவள்

132 = கோளன் > குறிக்கோள் உடையவன்

133 = கோன் > அரசன்

134 = சமரன் > போர் வீரன்

135 = சாந்தி > சந்தன மணம் போன்றவள்

136 = சாந்தினி > சந்தன மணம் போன்றவள்

137 = சாரன் > கொள்கைச் சார்புடையன்

138 = சாலன் > சால்புடையவன்

139 = சிவலை > சிவந்தவள்

140 = சிற்பன் > சிலையைப் போலும் நிலையானவன்

141 = சின்னன் > இளையவன்

142 = சீரன் > சீர்மையான போக்குடையவன்

143 = சீரியன் > சீரிய பண்பாளன்

144 = சுடர் > சுடர் ஒளி போன்றவள்

145 = செக்கன் > செம்மையானவன்

146 = செங்கனி > சிவந்த கனியைப் போன்றவள்

147 = செங்கை > சிவந்த கரத்தை உடையவள்

148 = செங்கொடி > சிவந்த கொடியைப் போன்றவள்

149 = செம்பகன் > செம்மை அகத்தவன்

150 = செம்பன் > செந்தன்மையன்

151 = செம்பன் > செந்நிறமானவன்

152 = செம்மல் > செவ்விய அறிவாளன்

153 = செம்மாள் > செம்மை மகள்

154 = செம்மை > வெவ்விய ஒழுங்குடையவள்

155 = செல்லன் > அன்புக்குரியவன்

156 = செவ்வன் > ஒழுங்கானவன்

157 = செவ்வி > செம்மையானவள் / தக்கவள்

158 = செவ்விழி > சிவந்த கண்ணையுடையவள்

159 = செவ்வை > ஒழுங்குடையவள்

160 = செறிவன் > சிறந்த, செறிந்த சிந்தனையாளன்

161 = சேகன் > செந்தன்மையாளன்

162 = சேந்தன் > சிவந்தவன் / காப்பானவன்

163 = சேம்பன் > செந்தன்மையுள்ளவன்

164 = சேயோன் > கதிரவன்

165 = சேரன் > சேரனைப் போன்றவன்

166 = சேல் > சேல் மீனைப் போன்ற சிவந்த கண்ணைக் கொண்டவள்

167 = சேல்விழி > சேல் மீன் போன்ற கண்ணை உடையவள்

168 = சேவன் > செந்தண்மையாளன்

169 = சேனன் > உயர்ந்தவன் / செம்மையானவன்

170 = ஞாலன் > உலகத்தைப் போலும் விரிந்தவன்

171 = தகவன் > ஏற்புடையன்

172 = தகையன் > தகைமைக்குரிய பெருமகன்

173 = தகையன் > பெரும்பண்புடையவன்

174 = தக்கன் > தகுதியானவன்

175 = தக்கன் > தகுதியானவன்

176 = தக்கான் > தகுதிப்பாடுடையவன்

177 = தங்கம் > பொன்னைப் போன்றவள்

178 = தங்கன் > தங்கமானவன்

179 = தணலி > தீமையைக் கண்டு தணல் போல் சுடுபவள்

180 = தண்டலை > குளிர்ந்த சோலையைப் போன்றவள்

181 = தண்ணல் > குளிர்ந்தவள்

182 = தத்தன் > மூத்தவன்

183 = தமிழவன் > தமிழுணர்வன்

184 = தமிழி > தமிழைப் போன்றவள்

185 = தவன் > கொண்ட கொள்கையை நிறைவேற்றுபவன்

186 = தழல் > தீமையைக் கண்டு தழல் போல் எரிபவள்

187 = தளிர் > மென்மெயானவள்

188 = தாதன் > முந்தையன்

189 = தாமரை > தாமரை மலரைப் போன்றவள்

190 = தாயகன் > தாய் நாட்டு உணர்வுடையவன்

191 = தானன் > கொடுக்கும் மனம் உடையவன்

192 = திங்கள் > நிலவைப் போலும் ஒளி வீசுபவள்

193 = திண்ணன் > திண்மையான உள்ளத்தவன்

194 = திருநுதல் > பெருமைக்குரிய நெற்றியை உடையவள்

195 = திருமான் > பெருமைக்குரியவன்

196 = திருமொழி > பெருமைக்குரிய மொழியைப் பேசுபவள்

197 = திருவிழி > பெருமைக்குரிய விழியை உடையவள்

198 = திலகம் > ஒளி வீசும் புகழுக்குரியவள்

199 = திறலன் > திறமை மிக்கவன்

200 = தீங்கனி > இனிமையுடைய கனியைப் போன்றவள்

201 = தீஞ்சுவை > தேன் போன்ற இனிய சுவை உடையவள்

202 = தீரன் > வீர மிக்கவன் / திறமையானவன்

203 = துணையன் > நன்மைக்குத் துணையாக விளங்குபவன்

204 = துய்யன் > தூய்மையானவன்

205 = தூணன் > தூண் போலும் துணையானவன்

206 = தூயவள் > தூய மனத்தினள்

207 = தூயள் > தூய்மை எண்ணம் உடையவள்

208 = தூயன் > தூய உள்ளத்தன்

209 = தூவன் > தூயவன்

210 = தூவி > வெள்ளை இறகினைப் போன்ற தூயவள்

211 = தெம்பன் > மன உறுதியானவன்

212 = தெய்வன் > கதிரவனைப் போன்றவன்

213 = தெளிதேன் > தெளிந்த தேனைப் போன்றவள்

214 = தெளியன் > தெளிந்தவன்

215 = தென்றல் > தென்றல் காற்றைப் போன்றவள்

216 = தென்னள் > தெற்குத் திசையள்

217 = தென்னன் > தென் திசைக்குரிய பாண்டியன்

218 = தென்னாள் > தெற்குத் திசைக்குரியவள்

219 = தேயன் > நாட்டுக்குரியவன் / ஒளி வீசுபவன்

220 = தேரன் > தேரியவன்

221 = தேறல் > தேன் போல் இனிப்பவள்

222 = தேறன் > தேனைப் போன்ற இனியவன்

223 = தேனன் > தேன் போன்ற இனியமையன்

224 = தேனாள் > தேனைப் போன்றவள்

225 = தேன் > தேன் போலும் இனியள்

226 = தொகையன் > செல்வச் சிறப்பானவன்

227 = தொன்மன் > தொன்மைச் சிறப்பைக் கொண்டவன்

228 = நகை > என்றும் சிரிப்பவள் / நகையைப் போன்றவள்

229 = நங்கை > அழகிய பெண்

230 = நந்தன் > நட்புறவானவன்

231 = நம்பி > நம்பகம் உடைவன் / நம் அன்பன்

232 = நயனன் > அழகானவன்/ இனிய உரையாளன்

233 = நல்லன் > நல்ல மனத்தன்

234 = நல்லான் > நல்ல உணர்வாளன்

235 = நல்லி > நல்லவள்

236 = நவ்வி > மானைப் போன்றவள்

237 = நளினன் > அழகன்

238 = நளினி > அழகிய தன்மை உடையவள்

239 = நன்னன் > நன் மனம் கொண்டவன்

240 = நாடன் > நாட்டுக்குரியவன்

241 = நாவலன் > சொல் வன்மை உடையவன்

242 = நாவன் > சொல்லாற்றல் உடையவன்

243 = நாவினி > இனிய பேச்சாற்றல் உடையவள்

244 = நிரையன் > நேர்மையானவன்

245 = நிலா > நிலவைப் போன்றவள்

246 = நிறன் > நிறமுள்ள அழகன்

247 = நிறை > நிறைவான மனம் கொண்டவன்

248 = நிறையன் > நிறைந்த உள்ளம் உள்ளவன்

249 = நின்றன் > சொல் மாறாத நெறியாளன்

250 = நீடன் > என்றும் இனியவன்

251 = நீரன் > நேர்மையானவன் / நீரைப் போலும் குளிர்ந்தவன்

252 = நீரியன் > நீர் போல் குளிர்ந்த வன்/ நேர்மையானவன்

253 = நீலன் > நீல நிறம் போல குளிர்ந்தவன்

254 = நுதலி > அழகிய நெற்றியை உடையவள்

255 = நூலன் > நூலைப் போன்ற அறிவாளன்

256 = நெடியன் > உயர்ந்த உள்ளத்தன்

257 = நெடியோன் > உயர்ந்த மனம் உடையவன்

258 = நெறியன் > ஒழுங்கானவன்

259 = நெறியன் > முறையானவன்

260 = நேரன் > நேர்மையானவன்

261 = நோற்பன் > உறுதியானவன்

262 = பகலன் > கதிரவன்

263 = பகவன் > பகுத்து உணர்த்தும் அறிவாளன்

264 = பணியன் > பணிந்த மொழியாளன்

265 = பணிவன் > பணிவானவன்

266 = பண் > இசையானவள்

267 = பண்பன் > பண்பாளன்

268 = பதி > தலைவன்

269 = பரவன் > பரந்த மனம் உள்ளவன்

270 = பரன் > விரிந்தவன்

271 = பரிதி > கதிரவன்

272 = பரிதி > சூரியனைப் போன்றவன்

273 = பனி > பனி போல் குளிர்ந்தவள்

274 = பாரி > உலகம் போல் விரிந்தவன் / கொடையாளன்

275 = பாவை > அழகிய பெண்

276 = புகழன் > புகழுக்குரியவன்

277 = புகழி > பலரால் போற்றப்படுபவள்

278 = புகழி > புகழை உடையவள்

279 = புதியன் > புதிய சிந்தனையாளன்

280 = புதுவன் > புதிய சிந்தனையாளன்

281 = புயலவன் > புயலைப் போன்றவன்

282 = புயலன் > புயல் வேகம் உடையவன்

283 = புரவன் > பேணிப் பாதுகாப்பவன்

284 = பூங்கனி > பூவைப் போல கனியாள் /

285 = பூஞ்சோலை > பூக்கள் நிறைந்த சோலையைப் போன்றவள்

286 = பூவணி > பூக்களின் அணி

287 = பூவனம் > பூஞ்சோலை

288 = பூவன் > பூவைப் போன்றவன்ன

289 = பூவாள் > பூவைப் போன்றவள்

290 = பூவிதழ் > பூவின் இதழைப் போன்ற மென்மையானவள்

291 = பூவை > பூவைப் போன்றவள்

292 = பெரியன் > சிறந்தவன்

293 = பெரியன் > பெருமைக்குரியவன்

294 = பெற்றி > எல்லாச் சிறப்பும் பெற்றவன்

295 = பேகன் > அருள் உள்ளம் கொண்ட பேகன்

296 = பொற்பன் > பொன்னைப் போன்றவன்

297 = பொற்பு > பொன்னைப் போன்றவள்

298 = பொன் > பொன் ஆனவள்

299 = பொன்மை > பொன்னைப் போல் ஒளிர்பவள்

300 = பொன்னன் > பொன்னைப் போன்றவன்

301 = பொன்னாள் > பொன்னைப் போன்றவள்

302 = பொன்னி > பொன்னைப் போன்றவள்

303 = மகிழி > என்றும் மகிழ்பவள்

304 = மங்கை > பெண்

305 = மணி > அழகன்

306 = மணி > அழகன்

307 = மணியன் > அழகானவன்

308 = மண்ணி > பொருத்தம் உடையவள்/ மண்ணுக்குரியவள்

309 = மதி > அறிவாளன்

310 = மதி > அறிவாளன்/ நிலவைப் போன்றவன்

311 = மதி > நிலவைப் போன்றவள்

312 = மயில் > மயில் போலும் அழகியவள்

313 = மலர் > பூவைப் போன்றவள்

314 = மலையன் > மலைபோலும் உயர்ந்தவன்

315 = மல்லி > மல்லிகை மலர் போன்றவள்

316 = மறத்தி > வீரமானவள்

317 = மறத்தி > வீரம் உடையவள்

318 = மறவன் > வீரன்

319 = மறன் > வீரன்

320 = மறையன் > ஆழமானவன்

321 = மனன் > நல்ல மனத்தன்

322 = மன்றன் > தலைவன்

323 = மாங்கனி > மாங்கனியைப் போன்றவள்

324 = மாணன் > மாண்புக்குரியவன்

325 = மாண்மொழி > பெருமைக்குரிய மொழி உடையவள்

326 = மாயோன் > அன்பில் மழை போன்ற மேலோன் / கரிய வண்ணத்தன்

327 = மாலன் > அன்பில் மழை போன்றவன்/ கரிய வண்ணத்தன்

328 = மாள் > அழகிய மகள்

329 = மாறன் > அழகானவன் / அன்புக்குரியவன்

330 = மானன் > பெருமன்

331 = மான் > மானைப் போன்றவள்

332 = மான்விழி > மான் விழியைப் போன்ற கண்ணை உடையவள்

333 = மிசையன் > மேலானவன்

334 = மிளிர் > மினுக்கிடுபவள்

335 = மின்னல் > மின்னலைப் போன்றவள்

336 = மின்னி > மின்னுபவள்

337 = மீனன் > மீன் கொடியுடைய பாண்டியன்

338 = மீனன் > மீன் போல் மின்னுபவன் / பாண்டியன்

339 = மீனாள் > மீனைப் போலும் மின்னுமவள்

340 = முகிலி > வான் முகிலைப் போலும் மென்மையள்

341 = முதலன் > முன்னே இருப்பவன்

342 = முதல்வன் > தலைமையாக இருப்பவன்

343 = முத்து > முத்துமணியைப் போன்றவன்

344 = முல்லை > முல்லைப் பூ போன்றவள்

345 = முறுவல் > அழகிய சிரிப்பைக் கொண்டவள்

346 = முனைவன் > முனைந்த அறிவாளன்

347 = மெய் > உண்மைத் தன்மையள்

348 = மெய்மை > மெய்த்தன்மை உடையவள்

349 = மெய்யன் > உண்மையானவன்

350 = மெய்யாள் > உண்மையானவள்

351 = மெல்லி > மென்மையானவள்

352 = மென்மொழி > மென்மையான மொழி பேசுபவள்

353 = மேலன் > மேலானவன்

354 = மேழி > ஏர் போன்றவள்

355 = மேனன் > மேன்மைக்குரியவன்

356 = மொழியன் > நல்லதை உரைப்பவன்/ செம்மையானவன்

357 = யாழன் > யாழ் போலும் இசையாளன்

358 = யாழி > யாழைப் போன்றவள்

359 = யாழினி > யாழிசை போன்றவள்

360 = வடிவு > அழகானவள்

361 = வண்ணன் > அழகான வண்ணத்தன்

362 = வரணன் > கடலைப் போன்றவன்

363 = வருணன் > கடலைப் போன்றவன்

364 = வல்லன் > வலிமையானவன்

365 = வல்லி > வன்மையானவள்

366 = வளவன் > வளமானவன்

367 = வளன் > வளம் பொருந்தியவன்

368 = வள்ளி > வள்ளிக் கொடியைப் போன்றவள்

369 = வாகையன் > வெற்றி ஈட்டியவன்

370 = வாணன் > என்றும் வாழ்பவன்

371 = வாணன் > நெடிது வாழ்பவன்

372 = வாணி > என்றும் வாழ்பவள்

373 = வாரியன் > கடல் போலும் வளமை உடையவன்

374 = வாரியன் > பெருங்கடல் போல் வளம் உள்ளவன்

375 = வானன் > வான் போல் உயர்ந்தவன்

376 = விசும்பன் > விண்ணைப் போலும் உயர்ந்தவன்

377 = வித்தன் > விதைபோலும் மூலவன்

378 = வியலன் > விரிந்த உள்ளம் உடையவன்

379 = வியன் > வியப்புக்குரிய செயலாளன்

380 = விரியன் > விரிந்த நெஞ்சன்

381 = விரியன் > விரிந்த மனம் உள்ளவன்

382 = விழி > கண்ணாக விளங்குபவள்

383 = விழுப்பன் > அழியாத புகழுடையவன்

384 = விழுப்பன் > என்றும் நிலைத்த செயலைச் செய்பவன்

385 = வெண்பா > வெண்பாவைப் போன்ற சுவையள்

386 = வெயினி > தென்றலைப் போன்றவள்

387 = வெளியன் > விரிந்த உள்ளம் கொண்டவன்

388 = வெற்பன் > வெற்றியாளன் / மலையைப் போன்றவன்

389 = வெற்றி > வெற்றியாய் விளங்குபவன்

390 = வென்றி > வெற்றியாளன்

391 = வேங்கை > புலி போன்றவன் / வீரன்

392 = வேங்கை > வேங்கைப் புலி போன்றவன்

393 = வேண்மாள் > சீரிய அன்புக்குரியவள்

394 = வேந்தன் > மாமன்னன் ( வேய் > வேய்தோன் > வேந்தன்)

395 = வேயன் > வேந்தன்

396 = வேயோன் > மணிமுடி தரித்த வேந்தனைப் போன்றவன்

397 = வேலன் > வேலை ஏந்தியவன் / வேல் போன்ற கூரிய அறிவாளன்

398 = வேல் > வேல் போன்ற கூரிய விழி உடையவள்

399 = வேள்> வேட்கையுடையவன் / உழவன்

400 = வையன் > உலகுக்குரியவன் / கூரிய அறிவாளன்

 

நல்லத் தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் நானொரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்


பனை #மரத்தில் #மொத்தம் 34 #வகை #இருக்கின்றன. அவை,

1. ஆண் பனை

2. பெண் பனை

3. கூந்தப்பனை

4. தாளிப்பனை

5. குமுதிப்பனை

6.சாற்றுப்பனை

7. ஈச்சம்பனை

8. ஈழப்பனை

9. சீமைப்பனை

10. ஆதம்பனை

11. திப்பிலிப்பனை

12. உடலற்பனை

13. கிச்சிலிப்பனை

14. குடைப்பனை

15. இளம்பனை

16. கூறைப்பனை

17. இடுக்குப்பனை

18. தாதம்பனை

19. காந்தம்பனை

20. பாக்குப்பனை

21. ஈரம்பனை

22. சீனப்பனை

23. குண்டுப்பனை

24. அலாம்பனை

25. கொண்டைப்பனை

26. ஏரிலைப்பனை

27. ஏசறுப்பனை

28. காட்டுப்பனை

29. கதலிப்பனை

30. வலியப்பனை

31. வாதப்பனை

32. அலகுப்பனை

33. நிலப்பனை

34. சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :

பனை உணவு பொருட்கள் :

நுங்கு

பனம் பழம்

பூரான்

பனாட்டு

பாணிப்பனாட்டு

பனங்காய்

பனங்கள்ளு

பனஞ்சாராயம்

வினாகிரி

பதநீர்

பனங்கருப்பட்டி

பனைவெல்லம்

சில்லுக் கருப்பட்டி

பனங்கற்கண்டு

பனஞ்சீனி

பனங்கிழங்கு

ஒடியல்

ஒடியல் புட்டு

🌴ஒடியல் கூழ்

புழுக்கொடியல்

முதிர்ந்த ஓலை

பனை குருத்து

உணவுப்பொருள் அல்லாதவை :

பனை ஓலைச் சுவடிகள்

பனை ஓலைத் தொப்பி

குருத்தோலை

வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :

பனையோலை

நீற்றுப் பெட்டி

கடகம்

பனைப்பாய்

கூரை வேய்தல்

வேலியடைத்தல்

பனைப்பாய்

பாயின் பின்னல்

பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

கிணற்றுப் பட்டை

எரு

துலா

அலங்காரப் பொருட்கள் :

பனம் மட்டை

#வேலியடைத்தல்

நார்ப் பொருட்கள்

தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள் :

கங்குமட்டை

தும்புப் பொருட்கள்

விறகு

மரம்

கட்டிடப்பொருட்கள் :

தளபாடங்கள்

பனம் விதை

எரிபொருள்

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பனை உணவுப் பொருட்கள் பனைத் தொழிலாகளிடம் இருந்து நேரடி விற்பனை தமிழ் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*

கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :

பனங்கருப்பட்டி

பனைவெல்லம்

சில்லுகருப்பட்டி

சுக்கு கருப்பட்டி

பனங்கற்கண்டு

பனஞ்சக்கரை

பனங்கிழங்கு மாவு

பனங்கிழங்கு சத்துமாவு

பதநீர்

பனம்பழம் ஜுஸ்

பனை விதை

பனங்கன்று

பனங்கிழங்கு

பனைப்பாய்

புழுக்கொடியல்

ஓடியல்

நன்றி 

 






















 

பழந்தமிழரின் மழைமானி எது?

ஆட்டுக்கல்தான் அது. வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல, அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும்.

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறைசெவிஅல்லதுபதினுஎனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனைபதினைஎன்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனைபதினுமழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள்.

மழைக்குப் பெய் திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.

சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.

அடைமழை” – ஐப்பசியில் பெய்வது

கனமழை” – கார்த்திகையில் பெய்வது..

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.

மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

- (குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவர்!

நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

- (குறள் 452)

எனவே வள்ளுவர்மாறாநீர்எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

ஒரு உழவு மழை :

பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீ அளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’

நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....

பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

மாவீரர் வாரம் ஆரம்பம் - உணர்வெழுச்சியுடன் தயாராகும் தமிழர் தேசம்

இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி த...