புதன், 2 ஏப்ரல், 2025

ஊழல் குற்றச்சாட்டு – எஸ்.எம். ரஞ்சித் முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை!

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந...