புதன், 2 ஏப்ரல், 2025

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்த இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்த இளம்பெண் விக்னேஸ்வரி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் காதலன் தலைமறைவாகி உள்ளார். விக்னேஸ்வரியும், புதுக்கோட்டையை சேர்ந்த தீபன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று இரவு விக்னேஸ்வரியை தீபன் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். வெகுநேரமாகியும் விக்னேஸ்வரி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் இருவரையும் தேடி உள்ளனர். இந்த நிலையியல், கொளத்தூர் சுடுகாடு நுழைவாயில் முன்பு விக்னேஸ்வரியின் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது போல் இருந்துள்ளது. 

தகவலறிந்து வந்த காவல் துறையினர் விக்னேஷ்வரியின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இளம்பெண் ஆணவக் கொலையா என்ற கோணத்தில் பெற்றோர்களிடம் டி.எஸ்.பி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

அமெரிக்க - ஈரான் விவகாரத்தில் ரஷ்யா!

  ஈரான் மீது குண்டுவீசப்போவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம் பகிரங்க எச்சரிக்கையை விடுக்கின்றார். மத்தியகிழக்கிலும், இந்துமா கடலிலும் உள்ள ...