|
|
|
பறையர் சத்திரியரா?
சிலர், பறையர்கள் என்றாலே அவர்கள் சூத்திரர் என்று கண்ணையும், காதையும் , கட்டிக்கொண்டு பாடிய பாட்டையே பாடுகின்றனர். பறையர்கள் அரசராகவும் இருந்திருக்கின்றனர். அடிமையாகவும் இருந்திருக்கின்றனர். ஆதிக்க வெறி கொண்ட போலி வரலாற்று ஆசிரியர்கள், பறையர் தாழ்ந்தபட்டவர்கள் என்று சொல்லி வருகிறார்கள், ஆம், அனைவருக்கும் நல்லது செய்த பறையர் கீழ் சாதி என்றும் , திருடர்கள் , பிற உயிரை கொல்பவர்கள், ஏமாற்றுபவர்கள் போன்றோர்கள் இன்று மேல்சாதி என்று கூறி அலைகிறார்கள் .
சிலப்பதிகாரம் தோன்றிய காலகட்டத்தில் சேரர் , சாக்கியர் என்பதை ஆதிக்க வெறி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் ? கூற தயங்குகிறார்கள் , கூறினால் பொறையர் என்பது பறையர் என மருவிய உண்மை தெரிந்துவிடும் அல்லவா!. பொறையர் என்றால் பொறுமையானவர்கள் என்று பொருள். அத்தகைய பொறுமை பறையர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுகிறது.
அதேபோல வீரமும் மிக அதிகமாக காணப்படுவது பறையர்களிடம் மட்டும்தான். சத்திரியர்களுக்கெல்லாம் சத்திரியர் பறையர் : வீரம் என்றால் என்னவென்றே தெரியாத மடையர்கள், * பிற மனிதனை கொல்வது, வீரம் * பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது, வீரம் * ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, வீரம் * கலவரங்களில் ஈடுபடுவது, வீரம் * ஆதரவுஅற்றவனை அடிப்பது, வீரம் என்கிறார்கள். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் வீரர்கள் அல்ல மனிதரிலும் கேடுகெட்ட மடையர்கள், சொல்லபோனால் அரக்கர்கள் .
உண்மையான வீரம் என்பது பிறரை துன்புறுத்தாமல் தன் உடல் மற்றும் மன திட்பத்தை வெளிப்படுத்துவதாகும். தன் மக்கள் நலத்திற்காக, அஞ்சாமல் தன் உயிரையும் கொடுக்க துணிபவனே வீரன். அவனே உண்மையான சத்திரியன் . பிற மனிதனை கொல்வது: பிற மனிதனை மனிதநேயமின்றி கொல்வது வீரமல்ல, அது கொலை.
எந்த ஒரு காரணமும் கேட்காமல் தன் நாட்டு அரசர் யாரை கொல்ல சொல்கிறாரோ அவர்களை கொன்று , கொலையுண்டவரின் குடும்பத்தை அனாதையாக்கி தவிக்கவிடும், ஈவு இரக்கமற்ற கொலையாளியை சத்திரியன் என்று கூற முடியாது. பிற மனிதர்களிடம் பொருள் பறிப்பது: வழிமறித்து பிறரின் பசுக்களையும், உடமைகளையும் பறிப்பவர்கள் சத்திரியர் அல்ல, அவர்கள் திருடர்கள்.
அது போன்று ஐந்தாறு மனைவிகள் வைத்திருப்பது, கலவரங்களில் ஈடுபடுவது, இத்தகைய ஈன செயலில் ஈடுபடுபவர்கள் கொடும் அரக்கர்கள் ஆவார்கள். சத்திரியருக்கான அனைத்து பண்புகளும் பறையரிடம் மட்டுமே உள்ளது. அவற்றை கீழே காண்போம். நாட்டை ஆள்பவன் அரையன் நாட்டை காப்பவன் பரையன் என்ற பழமொழிக்கேற்ப கடவுளை போன்று பறையர்கள் நாட்டையும், ஊரையும் பாதுகாத்து வந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். என்ற செய்தி வாயிலாக நாம் அறியலாம். இன்னும் பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது.
(தெ.இ.க. 14; க.எ. 56). . பறையர்கள் யாருக்கும் துன்பம் தராமல் நன்மை செய்து வாழ்ந்திருக்கிறார்கள். முன்னர் மழை நீரை கண்மாயில் சேமித்து தேவையானபோது கண்மாய் மடையை திறந்து வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள். இப்படி திறக்கும்போது சில தடவைகளில் பாம்பு தண்ணீர் வரும் பகுதியை அடைத்துகொள்ளும் இத்தகைய சமயங்களில் யாராவது ஒருவர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி கொல்ல வேண்டும்.
இத்தகைய உயிருக்கு அஞ்சாத வீர செயலை எந்த ஆண்ட பரம்பரையாவது அல்லது நாங்கள் சத்திரியர் என கூவி திரிபவர்கள் செய்திருக்கிறார்களா ? இப்படி உயிருக்கு பயந்தவர்களை எப்படி சத்திரியன் என்று அழைக்கலாம், பொட்டைகள் என்றுதானே அழைக்க வேண்டும். ஆனால் பறையர் தண்ணீருக்குள் போய் அடைத்துகொண்டிருக்கும் பாம்பை தேடி தண்ணீருக்குள் வெட்டி மடை திறந்து அனைவரையும் மகிழ செய்தனர்.
இத்தகைய யாரும் செய்ய அஞ்சும் செயல்களையே பறையர் அஞ்சாமல் செய்தனர். அதனாலேயே யாரும் செய்ய அஞ்சும் செயல்களை யாரேனும் செய்தால் அவர்களுக்கு "பறையன்" என்கிற பட்டம் கொடுக்கபட்டிருக்கிறது. அதனை கீழ்காணும் செய்தி உணர்த்துகிறது. விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். "வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்" என்பவன் குறிக்கப்பெறுகிறான்.
இவன் செய்த வீர செயலுக்கு பறையன் என்கிற பட்டம் கொடுத்திருக்கிறார்கள். எத்தகைய வீர செயலாய் இருந்தாலும், அச்செயலால் பிறருக்கு துன்பம் ஏற்படும் என தெரிந்தால், அச்செயலை பறையர்கள் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அனைவர்மேலும் அன்பு கொண்டவர்களாகவும், ஆழ்ந்த பொறுமை உடையவர்களாகவும், பறையர் இருந்திருக்கின்றனர்.தன் மக்கள் நலத்திற்காக, அஞ்சாமல் தன் உயிரையும் கொடுக்க துணிபவனே வீரன். அவனே உண்மையான சத்திரியன் .எனவே பறையர் சத்திரியரே.
தந்தை பெரியார்
|
பண்டைய இந்துக் கலாச்சாரம்
------------------------------------------------ கணவன் பாண்டுவை மணம் செய்து கொள்வதற்கும் முன்பே குந்தி தேவியைப் புணர்ந்து குழந்தை பெற்ற கடவுள் சூரிய பகவான்.
கணவன் பாண்டு ரோகத்தின் காரணமாகவும், போகத்தின் காரணமாகவும் இறந்த பின் எம தர்மன், வாயு பகவான், இந்திரன் ஆகியோர் கணவனற்ற குந்தியை வனத்தில் புணர்ந்து குழந்தை பெற்றனர்.
கணவனை இழந்த மாதுரியை வனத்தில் புணர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் அஸ்வினி குமாரர்கள்.
கணவன் பாண்டுவை மணம் செய்து கொள்வதற்கு முன்பு பிறந்த கர்ணன் குந்தியின் புதல்வன்.
கணவன் பாண்டுவை மணம் செய்து, அவன் இறந்ததற்குப் பின்பு மற்றவர்களைப் புணர்ந்து பாண்டுவின் இரு மனைவியர்களான குந்தியும், மாதுரியும் பெற்ற புதல்வகள் பாண்டு குமாரர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள்தான் பாண்டவர்கள்.
அவர்கள் திருமணத்தின் காரணமாகப் பிரிந்து விடக்கூடாது என ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவே குந்தி, துருபதன் மகள் பாஞ்சாலியை ஐவருக்கும் பத்தினியாக்குகிறாள். ஐவரும் பாஞ்சாலியை முறை வைத்துப் புணர்ந்து வாழ்ந்து வந்தனர்.
அதனால்தான் பிறருக்குப் பிறந்த பாண்டவர்களுக்குச் சொத்தின் ஒரு துண்டைக்கூட அதாவது ஐவருக்கும் ஐந்து வீடுகள் கூட வசிப்பதற்குத் தரத் தயாராக இல்லாத இறுதி நிலைமையில் குருச்சேத்திர யுத்தம் நடந்தது.
அர்ச்சுனன் பாஞ்சாலி தவிர்த்துப் பலரோடும் புணர்வாழ்க்கை வாழ்ந்து வந்தான். பீமனும் அதுபோலவே இடும்பி போன்ற பழங்குடிச் சமூகத்தின் பெண்ணோடு உறவு வைத்து வாழ்ந்து வந்தான். இவ்வாறு பிறந்த பிள்ளைகளின் உறவினர்கள் பின்னர் குருச்சேத்திர யுத்தத்த்தில் பாண்டவர்களின் அணியில் இருந்து சொத்து மீட்புப் போராட்டத்தில் போரிட்டு மடிந்தனர்.
-ஸ்ரீலஸ்ரீரசானந்தர்
| |
| |
| ||||
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு, குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல்லவர் காலத்துக்கு உரியன என்று சொல்கின்றனர். பல்லவர் காலத்துக்கும் இந்தச் சின்னங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை அந்தக் காலத்துக்கு மிக முற்பட்டனவாகும். அங்கு செங்கட்டிகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தின் இடிபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. பார்ப்பவர்கள் எவருக்கும் இது புலனாகும். அந்தக் கட்டடத்தினுள் சற்று முன்புறமாக ஒரு வெள்ளைக் கல்லில் அமைந்த ஒரு உருவம் தெரிகிறது. அதில் பௌத்த படிமம் போல எதுவும் காணப்படவில்லை. ஆதி காலத்து தொல்பொருள் சின்னங்களில் அனேகமானவை நாகர்களோடு தொடர்புடையவையாகும். நாகர்கள் வழிபட்ட சிவலிங்க வடிவங்கள் பனங்காமம் தொடக்கம் ஓமந்தை போன்ற இடங்களிலே பெருமளவிலே காணப்படுகின்றன.
இங்கே காணப்படுவது சிவலிங்க வடிவம் என்று கொள்வது சாலவும் பொருந்தும். இதைத்தான் வேறு ஆய்வாளர்களும் சொல்லியுள்ளார்கள். அது சிறிய கட்டிடத்தில் அமைந்திருப்பது இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது. அதில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நாகர்களுடைய கடவுள் பெயர் அதிலே காணப்படுகின்றது. அந்த லிங்கத்திலே மணி நாகன் என்ற பெயர் தெளிவாகத் தெரிகின்றது. அது மட்டுமன்றி வேள் நாகன் என்ற பெயரும் அதிலே காணப்படுகின்றது. வழமையாக கடவுள் சின்னங்களிலும் கடவுள் பெயரை எழுதுவதோடு அதை தாபனம் பண்ணியவர்கள் அல்லது நன்கொடை செய்பவர்களுடைய பெயரை எழுதுவது வழமை நாகர்களுடைய வழமைப்படி வேள் நாகன் என்று தான் அது எழுதப்பட்டிருக்கிறது. வழிபாட்டிச் சின்னங்கள் எல்லாவற்றிலும் அவர்கள், கடவுள் பெயர்களை தமிழ்ப் பிராமி வடிவங்களிலே பொறித்தார்கள். சிவலிங்கம், புத்தர் படிமம், நந்தி, மயூரம், பூசகம் முதலிய எல்லாவற்றிலும் இந்தக் கடவுள்ப் பெயர் காணப்படும். சின்னத்தின் அடிப்படையிலே தான் அது எந்த வழிபாட்டு மரபுக்கு உரியது என்பது நிர்ணயிக்கப்படும். இங்கு காணப்படுவது சிவலிங்கம். அதிலே காணப்படுகின்ற எழுத்துக்களைக் கொண்டு பார்க்குமிடத்து இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்ளத் தக்கது. சில சமயங்களில் இலங்கையில் வட்டெழுத்து மரபு பரவியிருக்காததனாலே தமிழ்ப் பிராமி வரி வடிவங்கள் தொடர்ந்தும் சில நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்திருக்கின்றன.
ஆனால் இந்த வடிவத்தைப் பொறுத்தவரையில் இது சர்ச்சைக்குரிய வடிவமன்று. உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் இது ஒரு பழங்காலத்து லிங்க உருவம். லிங்க உருவத்தின் ஆரம்பகால வடிவமைப்பினை பிரதிபலிக்கின்ற வடிவம். நாகர்களின் கடவுள் பெயர் எழுதப்பட்டுள்ள வடிவம், சைவ சமய சின்னமாக அது அமைகின்றது. அவனியாபுரம் பல நாட்களாக மதுரையில் நான் பிறந்த அவனியாபுரம் கிராமத்தின் பெயர் காரணத்தை அறிய முற்பட்டுக் கொண்டே இருந்தேன். இந்த பெயர் காரணத்தை அறிய முற்பட்டதன் காரணம் . சில நாட்களுக்கு முன்னர் நான் பகிர்ந்த எனது இரண்டு ஆய்வு கட்டுரைகளான அவனியாபுரம் - மதுரையின் பூர்வகுடி கிராம்ம என்ற கட்டுரையும் . பழைய மதுரையின் புதிய கோட்டையும் , நீர் நிலைகளும் ஆகும் . இனி அவனியாபுரம் கிராமத்தின் பெயர் காரணத்தை அறிய முற்படுவோம் . மதுரையின் மிகவும் முக்கிய தாய் கிராமமான அவனியாபுரம் குறித்து வரலாற்று ஆய்வு மாணவர் உதயகுமார் தரும் தரவுகளை பார்ப்போம். பாண்டியர் காலத்தில் (அவனிப சேகரன்) என்ற மன்னன் இருந்தான். அவன் பெயரில் இன்றைய அவனியாபுரம் - அவனிபசேகரசதூர் வேதிமங்கலம் என்பது பழைய பெயராக இருந்தது . பின் நாயக்கர் காலத்தில் அவனி நாராயணபுரம் என்றும் அதன் பின் மங்கமாள் காலத்தில் அவனியாபுரம் என்றும் அவனியாபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகள் வழியாக தரவை வெளிக்கொணர்கிறார் . இனி ஆய்வாளர் தரும் தரவின் காரணத்தை ஆராய்வு செய்வோம். பாண்டிய நாட்டில் மட்டுமே தமிழ்நாட்டின் பிறபகுதிகளைக் காட்டிலும் சங்க காலத்தில் சமணம் மக்களிடையே பேராதரவை பெற்று வளர்ந்துள்ளது என்பதை உணரலாம் என்று மாமதுரை நூலில் ஆசிரியர் சொ.சந்தலிங்கம் கூறுகிறார் . இதில் இருந்து அவனிபசேகர என்ற பாண்டிய மன்னன் சமண நெறியை ஏற்றிருந்தான் . அவன் மட்டும் அல்ல மாமதுரையை ஆண்ட பாண்டிய அரசர்களும் ,மக்களும் பௌத்தம் , சமணமும் ஏற்றிருந்தார்கள் என உறுதி செய்ய முடிகிறது . இப்படி இருக்க அவனியாபுரத்திற்கு அவனிபசேகர சதூர்வேதி மங்கலம் என்ற பெயர் எப்படி வந்திருக்க முடியும் . சில நாட்களுக்கு முன்னர் .தமிழக அளவில் பெயர் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் பின்புறமாக இருக்கும் ஈஸ்வரன் கோவிலுக்கு சைவ சமய பரப்புரையாளர் திருஞான சம்பந்தர் விஜயமா|கியிருக்கிறார் என்ற தகவலை அக்கோவில் பூசாரியிடம் கேட்டு உறுதி செய்துக்கொண்டேன். பெரும்பாலும் திருஞானசம்பந்தர் கட்டமைக்கப்பட்டு இருக்கும் சமண | பௌத்த தளங்களுக்கு பயணம் செய்வது மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார். அதன் பின்னரே சமண -பௌத்த தளங்கள் சைவ தளமாக மாற்றம் கொண்டது . சதூர்வேதி மங்கலம் என்பது பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட இடம். சமண பௌத்தர்களுக்கு தானமாக கொடுக்கப்படும் இடத்தின் பெயர் பள்ளிச்சந்தை . அதாவது குகை பள்ளி நடத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடம் என்பதே அதன் பொருள். அப்படி இருக்க சதூர்வேதி வழியாக நிலம் தானம் பெற்ற சைவ பார்ப்பனர்கள். அன்றுதொட்டு இன்றும் சந்ததி சந்த்தியாக. ஈஷ்வரன் கோவில் பின்னே வாழந்து வருகிறார்கள்.
இன்றும் அதை அக்கிரகாரம் என அழைத்து வருகிறோம். இக்காரணங்களால் அவனியாபுரம் கிராமத்துக்கு அவனிபசேகர சதூர்வேதி மங்கலம் என பெயர் பெற்று இருக்கிறது . திருஞானசம்பந்தர் சைவ கோவிலாக மாற்றிய புத்த கோவில். சமண பௌத்த கோவில்கள் தான் சைவ , வைணவ கோவில்களாக மாற்றம் கண்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் பொது கூற்று. புகைப்படத்தில் குறிக்கப்பட்ட இடமே முன்னொரு காலத்தில் புத்த கோவிலாக இருந்திருக்கிறது.அதற்கான தரவை பின்னே பார்ப்போம். இந்த இடத்தில் இருந்த புத்த| சமண கோவிலே பின்னாளில் . பார்ப்பனர்கள் குடியிருப்பின் அருகில் நகர்ந்து . சதூர்வேதி மங்கலத்தின் அடையாளமாக திகழ்ந்த ஈஷ்வரன் கோவில் ஆகும் . சம்பந்தர் வருகைக்கு முன் இருந்த பௌத்த கோவிலை பற்றி அறிந்துக்கொள்ள எனது முந்தைய ஆய்வு கட்டுரையை வாசிக்கவும். http://forefatherapporach.blogspot.in/2017/12/blog-post.html .கோவில் சுவற்றின் அருகே எனது புகைப்படத்தை பார்க்க முடியும் . அதன் பின்னர் வந்த நாயக்கரின் வருகை அவனியாபுரத்திற்கு . அவனி நாராயணபுரம் என பெயர் வைத்தது சைவ சமயத்திற்கு நிகராக அவனியாபுரத்தில் வைணவம் எழுச்சி அடைய தொடங்கியது. சதூர்வேதி மங்கலம் என்னும் அவனி நாராயணபுரம் என பெயர் மாற்றம் கொண்டது. அதன் பின்னர் வந்த ராணி மங்கம்மாள் அவனி நாராயணபுரத்திற்கு அவனியாபுரம் என பெயர் வைத்தது மட்டும் அல்லாமல் சைவ தளத்திற்கு நிகராக கி.பி 1693இல் வைணவ தளம் அமைத்து அங்கு அனுமார் ஆழ்வார் என்ற அனுமார் கோவிலை கட்டி, அதை சுற்றி பல வைணவ அடையாளம் பொறிக்கப்பட்டும், அலங்காரப்பிள்ளயார் கோவிலையும் கட்டியிருக்கிறார். ஆனால் பிள்ளையார் கோவில் தற்போது அங்கு இல்லை. எனது கள-ஆய்வின் வழியாக கிடைக்கும் தகவல் ஆனது .அனுமார் கோவிலின் அருகே ஒரு ஊரணி இருக்கிறது அதன் பெயர் சாது ஊரணி. என கல்வெட்டு சான்று கிடைக்கப்பெறுகிறது. சமண பௌத்த துறவிகளை சாதுகள் என அழைப்பது வழக்கம்.சமண பௌத்த பிக்குகள் பயன்படுத்தும் ஊரணியின் பெயர் சாது ஊரணி ஆகும். இனி மயிலை சீனி வேங்கடசாமி சாமி அவர்களின் தரவை பார்ப்போம். அனுமார் கோவில் கட்டப்பட்டு இருந்தால் அது பௌத்த தளத்தை கைபற்றியதன் சான்றாகவும், நரசிம்மர் கோவில் கட்டப்பட்டு இருந்தால் அது சமண தளத்தை கைப்பற்றியதன் சான்றாதாரங்கள் ஆகும் என கூறுகிறார். அதன் பொருட்டு அனுமார் கோவில் கட்டியதன் வழியாக முன்பு அங்கு இருந்த பௌத்த தளத்தை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது . மேலும் ராணி மங்கம்மாள் அவர்களால் கி.பி 1693 இல் கட்டப்பட்ட அனுமார் ஆழ்வார் என்ற அனுமார் கோவிலுக்கு ஆனந்த அனுமார் என்னும் பெயரும் இருக்கிறது .
இதன் வழியாக ஆனந்தர் என்பது புத்தரின் தலைமை சிடரின் பெயர் ஆகும். புத்தரின் இறுதி சடங்கை தலைமையேற்றி நடத்தியவரும் . புத்தருக்கு பின் சங்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ஆனந்தரே ஆவார். அவனியாபுரம் பெயர் காரணம் அறிவோம். இனி அவனியாபுரம் பெயர் வந்த காரணத்தை ஆராய முற்படுவோம். பாண்டிய அரசன் சைவ பார்பனர்களுக்கு நில தானம் வழங்கியதன் பெருட்டு அவனிபசேகர சதூர்வேதி மங்களம் என்றும் அவனி நாராயணபுரம் என்றும் அவனியாபுரம் என்றும் நடைமுறையில் இருக்கிறது .கல்வெட்டுகளில் சொல்லிவந்த அனைத்து பெயர்களிலும் அவனி என்ற சொல் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள முடியும். அவனி என்றால் உலகம் (அ) லோகம் என்பது பொருளை உணர்த்துகிறது. நான் முன்னர் வெளியிட்ட புகைப்பட்டத்தில் கோவிலில் இருந்த குளத்தின் பெயர் செண்பகம் குளம் , கோவில் சிதைவுக்கு உள்ளான பின்னர் இன்று அக்குளம் ஊரணியாக மாற்றம் கண்டு செண்பக ஊரணியாக என்னும் பெயர் பெற்றிருக்கிறது. தமிழ் பௌத்தம் பொருத்தவரை பகவான் புத்தருக்கு பல பெயர்கள் உள்ளன அதில் இந்திரன் , அவலோகிதேஷ்வரா , மைத்ராயா , வஜ்ரபாணி என மொத்த 8 போதிசத்துவர் உள்ளனர் . அந்த போதிசத்துவர்களில் தலைமையானவர் அவலோகிதேஷ்வரர் ஆவார். சித்தார்த் கௌதமர் என்ற புத்தரின் வருகையை (அ) பிறப்பை மகாமாயாவின் கனவில் வெள்ளையானை தனது தும்பிக்கையில் தாமரை மலரோடு உருவத்தில் தோன்றி உணர்த்தியது அவலோகிதேஷ்வரர் என்ற போதிசத்துவார் ஆவார் . அந்த அவலோகிதேஷ்வரர் உரைவிடமாக போதலோகா என்ற பொதிகை மலை இருக்கிறது .அந்த உரைவிடத்தில் இருந்தே செண்பக அருவி தனது போக்கை தொடங்குகிறது . இன்று குற்றாலத்தில் இருக்கு செண்பக அருவியே ஆகும். ஆக அவலோகிதேஷ்வரர் அருகே செண்பக அருவி இருக்கிறது போல செண்பக ஊரணியன் அருகே அவலோகிதேஷ்வரர் இருக்கிறார். அவலோகிதேஷ்வரர் என்ற சொல்லை பிரித்து பார்க்கும் போது அவலோ+ கிதேஷ்வரா (ஈஷ்வரா) . இன்றும் நாம் புகைப்படத்தில் இருந்து மாற்று இடத்தில் உள்ள கோவிலின் பெயர் ஈஷ்வரன் கோவில் தவிர சிவன் கோவில் என்று கூறும் பேச்சு வழக்கில் இல்லை . மேலும் அக்கோவில் மீனாட்சி அம்மனுக்கே முக்கியமான அங்கீகாரம் தரக்கூடிய கோவிலாக இருக்கிறது.அந்த அம்மனின் கைகளில் வெள்ளை யானை கைகளில் இருந்த அதே தாமரை பூவோடு கருவறையில் மீனாட்சி சிற்பம் இருக்கிறது . ஆக அவனி என்றால் உலகம், அவலோகிதேஷ்வரர் என்றால் உலகத்தை (அ) லோகத்தை காப்பவர் , ஆள்பவர் என்பது பொருள். (#அவ|னியாபுரம் ...,#அவ|லோகிதேஷ்வரா) இந்த இரண்டுமே சொல்லும் உலகை குறிக்கும் சொல்லாக பார்க்கமுடியும் ... இதன் வழியாக இன்றைய அவனியாபுரம் என்ற சொல் அவலோகிதேஷ்வரர் என்ற புத்தரின் பெயரில் இருந்தே மறுவி வந்திருக்க வேண்டும் . மேலும் மாமதுரையில் அவனியாபுரம் மிகவும் முக்கியமான பௌத்த நிலமாகவும் திகழ்ந்து இருந்திருக்கிறது என்பதை உறுதிசெய்ய முடிகிறது. இந்த ஆய்வு கட்டுரையை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது பாண்டியர் பௌத்த சங்கம். | |
கீரிபாறை, காளிகேசம் வனபகுதி கன்னியாகுமரி...!
கன்னியாகுமரி மிகவும் அழகிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கீரிபாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக பார்க்க முடியும். கீரிபாறையை இந்தியாவின் செழிப்பான காடுகள் பார்க்க விரும்பும் சர்வதேச பார்வையாளர்களுக்கான இயற்கை மலையேற்ற இடமாக மாறியுள்ளது.அதை பற்றி பார்ப்போம் .. கீரிபாறை வன பகுதி : பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவிகள் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. கீரிபாறையில் பலவிதமான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன, அவை உலகில் உள்ள வேறு இயற்கை மலையேற்றங்கள் மற்றும் வாழ்விடங்களில் ஒப்பிடுகையில் இணையற்றவை. கீரிபாறையின் சமவெளிகளில் பெரிய யானைகளை பார்ப்பது மிகவும் எளிது. கூடுதலாக, பல மிருகங்களும் சுலபமாக காணில் படும் மேலும் மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளன ... கீரிபாறை வனத் துறையால் கண்காணிக்கபட்டுவருகிறது இப்பகுதியில் சில சிறிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன - பிரபலமான வட்டப்பாறை நீர்வீழ்ச்சி. கீரிபாறையின் மலைகளில் மேல் உள்ளது இது காட்டு யானைகளுக்கு பிரபலமானது. தென்னிந்திய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழையற்றில் பூதப்பாண்டி கிராமத்திற்கு அருகே கீரிபாறை ரிசர்வ் வனத்தில் வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த 20 கிமீ பரப்பளவானது வனவிலங்கு சரணாலயமாக உள்ளது. இந்த காட்டில் காணப்படும் பல்வேறு தாவர வகைகள் இயற்கை கட்சிகளும் வனப்பகுதிகளுக்கும், மலையேற்றங்களுக்கும் இந்த வனம் ஒரு கடவுளின் வரப்பிரசாதமாக உள்ளது. பல சிறிய நீரோடைகள் மற்றும் ஆறுகள் காட்டுப்பகுதிகளில் ஓடுகின்றன. கூடுதலாக, இயற்கை ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த இடம். ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவின் சில பாதுகாக்கப்பட்ட காடுகளில் கீரிபாறையும் ஒன்று. காடுகளில் வன விலங்குகள் சிறிய மரங்கள் பூக்கும் குன்று, புதர்கள், மதிப்புமிக்க மூலிகைகள், பல்வேறு வகையான மரங்களைக் கொண்டிருக்கின்றன. தேக்கு, ரோஸ்வூட், வேங்கை மற்றும் ஐனி ஆகியவை முக்கியமான மரங்களும் உள்ளன. இந்த இடத்தில் குறைந்தபட்சம் 25 வகையான பாலூட்டிகளால் நிறைந்திருக்கிறது, சுமார் 60 வகையான பறவைகள், 14 வகையான புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பல வகையான மீன்கள், ஊர்வன மற்றும் புலி, யானை, மான், மற்றும் காட்டுப்பன்றி ஆகியவை அடங்கும் பார்ப்பதற்கு அருமையான இந்த பகுதியை கன்னியாகுமரி வந்தால் மிஸ் பண்ணாதிங்கள் நண்பர்களே | |
சதியால்
கொல்லப்பட்ட சோழ இளவரசர் 'ஆதித்த
கரிகாலன்-கல்வெட்டு கடல் கடந்து நாடுகளை வென்ற சோழர்களின் வரலாற்றில் ராஜ ராஜ சோழன் ஆட்சி முறை, ராஜேந்திர சோழனின் வெற்றிகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு இணையாக, பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம் பற்றி வரலாற்று ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் கூட இன்றளவும் விவாதிக்கிறார்கள். இதற்கு பொன்னியின் செல்வன் நாவலும், திரைப்படமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சோழர் வரலாற்றில் மன்னருக்கு இணையான அதிகாரங்களுடன் இளவரசர் ஆதித்த கரிகாலன் வலம் வந்தார் என்பதற்கான கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. சோழர் காலத்தில் பெரும்பாலும் மன்னர்களின் பெயரை முன்னிலைப்படுத்தியே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன என்ற போதிலும் இளவரசர் ஆதித்த கரிகாலனின் பெயர் தாங்கிய கல்வெட்டுகள் மன்னருக்கு இணையாகவே பொறிக்கப்பட்டுள்ளன என்கிறார் பேராசிரியர் ரமேஷ். விழுப்புரம் அருகே ஏமப்பூரில் கல்வெட்டு "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி" என்று தொடங்குகிறது. இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் ரமேஷ், "ஆதித்த கரிகாலன் ஆட்சியின் நான்காவது ஆண்டான பொது ஆண்டு 960 -ல் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு என்று இந்த ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது. ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் மூலவருக்கு (இறைவனுக்கு) காலம் முழுவதும் (சந்திரன்- சூரியன் உள்ள வரை ) விளக்கு ஏற்றுவதற்காக 96 ஆடுகளை இந்த கோவில் அறங்காவலர் பான் மகேஸ்வரர் என்பவரிடம் வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கின்றது" என்றார். "சுந்தர சோழன் தன் மூத்த மகனான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கி இருக்கிறார். எனவே தான் இப்பகுதியில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன" என்று அவர் கூறினார். சிறு வயதிலேயே வீரத்துடன் விளங்கிய ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீர பாண்டியனைப் போரில் வென்றான் என்பதைக் குறிக்கும் வகையில், "இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்," என்கிறது ஆனைமங்கலச் செப்பேடு. இந்த கிராமம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ளது. "ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டி கொண்டு வந்து தஞ்சை அரண்மனை முன்பு செருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. எனவே இவன் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான். பெரும்பாலான கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலன் இந்த பெயரில்தான் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏமப்பூர் கல்வெட்டிலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது" என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும் என்று கல்வெட்டு செய்தியையும் அவர் விளக்கிக் கூறினார். தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில் "ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 ஆகும். ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார். இவர் காஞ்சிபுரத்தை (தொண்டை நாடு பகுதி) தலைநகராக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தார். பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் மிக வலிமை வாய்ந்த இளவரசர் ஆவார்." என்று கூறினார்."கி.பி. 966- ல் ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே, அதாவது கி.பி. 969இல் அவர் கொல்லப்பட்டார். இந்த சோகம் தாங்காமல் அடுத்த சில மாஆதித்த கரிகாலன் கொலை பற்றிய கல்வெட்டு ஆதித்த கரிகாலன் சதியால் கொல்லப்பட்டார் என்பதை காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனால் ஆதித்த கரிகாலனை எதற்காக கொலை செய்தார்கள், யார் அவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது போன்ற தகவல்கள் அதில் இல்லை." என்று பேராசிரியர் ரமேஷ் கூறினார்.தங்களிலேயே ஆதித்த கரிகாலனின் தந்தையான சுந்தர சோழன் உயிரிழந்தார்" என்று ஆதித்த கரிகாலனின் பேராசிரியர் ரமேஷ் வரலாற்றை விவரித்தார். நண்றி பிபிசி | |
சந்திரிகா கணவர் ரணதுங்கா சுட்டுக்கொலை!! ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் இளைய மகள் சந்திரிகா சந்திரிகாவுக்கும், விஜயகுமார ரணதுங்காவுக்கும் திருமணம் நடந்தது. ரணதுங்கா பிரபல நடிகர். 1969 ம் ஆண்டில் ரணதுங்கா நடித்த முதல் சினிமா படமான "அந்தனே கதரேலி" வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் 100 க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடித்தார். 1978 ம் ஆண்டில் ரணதுங்கா அரசியலில் நுழைந்தார். முதலில் தனது மாமியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவின் "ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பிறகு மாமியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு லங்கா மகாஜன கட்சியை தொடங்கினார், ரணதுங்கா. அவருடைய கட்சியே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. இந்த புதிய கட்சியின் தலைவராக ரணதுங்காவும், பொதுச்செயலாளராக சந்திரிகாவும் இருந்தார்கள். இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக (ஜனாதிபதி) ஜெயவர்த்தனா பதவி வகித்தார். 1988 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரணதுங்கா புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கினார். ரஷிய ஆதரவு கம்யூனிஸ்டு கட்சி, டிராப்ஸ்கிய சமசமாஜ கட்சி ஆகிய கட்சிகளை சேர்த்து சோசலிச கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியின் சார்பில் அதிபர் பதவிக்கு ரணதுங்கா நிறுத்தப்பட்டார். சுட்டுக்கொலை ரணதுங்கா கொழும்பில் இருந்து 9 மைல் தூரத்தில் இருக்கும் `பொலங் கொடா' என்ற இடத்தில் வசித்து வந்தார். 16.2.1988 அன்று காலை 11.30 மணி அளவில் வீட்டு வராண்டாவில் அமர்ந்து கட்சிப் பிரமுகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ரணதுங்காவை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். குண்டுகள் ரணதுங்கா உடலை சல்லடை போல துளைத்தன. 9 குண்டுகள் உடலில் பாய்ந்தன. அடையாளம் தெரியாதபடி அவரது முகம் சிதைந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். டாக்டர்கள் உடலை பரிசோதித்துவிட்டு, ரணதுங்கா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். ரணதுங்காவை சுட்டவர்கள் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஒரு சூட்கேஸ், தலையில் அணியும் "டோபா" (விக்) ஆகியவை தரையில் விழுந்து கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். கொலையாளிகள் மாறுவேடத்தில் வந்தது ஊர்ஜிதமானது. ரணதுங்கா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி, ரேடியோவில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது வீட்டில் கூடினார்கள். சம்பவம் நடந்தபோது ரணதுங்காவின் மாமியாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகா கிராமத்தில் உள்ள தன் வீட்டில் இருந்தார். மருமகன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தெரிந்ததும், அவர் கொழும்புக்கு விரைந்து வந்தார். சுட்டுக் கொல்லப்பட்டபோது ரணதுங்காவுக்கு வயது 43. மனைவி சந்திரிகாவும், 2 குழந்தைகளும் இருந்தார்கள். ரணதுங்கா இடதுசாரி கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ரணதுங்கா சிங்களவராக இருந்தாலும், இலங்கை தமிழர்கள் மீது அனுதாபம் உடையவர். இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரித்து வந்தார். இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்தவேண்டும். ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சு நடத்தவேண்டும் என்று ரணதுங்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவர் பலமுறை யாழ்ப்பாணம் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களையும், மற்ற இலங்கை தமிழர் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். தேர்தலில் தனது கூட்டணியில் சேரும்படி ஈழம் மக்கள் புரட்சி முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மக்கள் விடுதலை தமிழ் ஈழ அமைப்பு (பிளாட்) ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு ஏற்பட தனிப்பட்ட முறையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக மனைவி சந்திரிகாவுடன் 1986 ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழ்நாட்டுக்கு வந்தார். 3 நாட்கள் சென் னையில் தங்கி தமிழக தலைவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இங்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் ரணதுங்கா பேசுகையில், "மனிதாபிமான அடிப்படையில் நல்லெண்ண தூதுவனாக வந்து இருக்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி அதிபர் ஜெயவர்த்தனாவை வற்புறுத்திக்கொண்டே இருப்பேன்" என்று கூறினார். மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரை ரணதுங்கா சந்தித்துப் பேசினார். இருவரும் 1 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், ஜெயவர்த்தனாவுடன் நடத்த இருக்கும் பேச்சு பற்றியும் எம்.ஜி.ஆரிடம் ரணதுங்கா கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க ஆலோசகர் பாலசிங்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்க தலைவர் உமாமகேசுவரன், ஈழபுரட்சிகர அமைப்பு (ஈராஸ்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவற்றை சேர்ந்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். "மீண்டும் இந்தியா வருவேன். பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து பேசுவேன்" என்று ரணதுங்கா கூறிவிட்டு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், சமரச முயற்சியை தொடரும்முன், துப்பாக்கி குண்டுக்கு இரையாகிவிட்டார். ரணதுங்கா தமிழர்களை ஆதரிப்பது சிங்கள வெறியர்களுக்கு பிடிக்கவில்லை. அவருடைய கொலைக்கு இதுவும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
| |
யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆசியக்
கண்டத்திலேயே தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக யாழ்ப்பாணப் பொது
நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே
மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. எரிக்கப்பட்ட நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்கள் சில: 1660ல் றொபெர்ட் க்னொக்ச் எழுதிய History of Ceylon, ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்உள்ள 700 நூல்கள் சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்) ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம்,தத்துவம் பற்றிய நூல்கள் 250) கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்) ஆறுமுக நாவலர் நூல் தொகுதி பைபிள் - முதன்முதலாக தமிழில் எழுதப்பட்ட கையெழுத்துப் படி சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் பிரிட்டானியா கலைக்களஞ்சியம் அமெரிக்க கலைக்களஞ்சியம் கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம் மாக்மில்லன் கலைக்களஞ்சியம் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிய அரிய நூல்கள் யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் ராஜநாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம் , தமிழில் முதல் முதலாக வெளிவந்த இலக்கிய கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம், அதன் பின் வந்த சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி, சித்த வைத்தியம் சம்பந்தமான பனையோலையில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்பன இருந்தன.. அங்கிருந்த ஓலைச்சுவடிகளில் தமிழினத்தின் கலை கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, பண்டைய ஈழத்தை ஆண்ட தமிழரசர்களின் வரலாறு என்பன எழுதப்பட்டிருந்தன. மேலும் சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் அங்கிருந்த ஓலைசுவடிகளின் மூலம்தான் சைவத்தையும் தமிழையும் வளர்த்தெடுத்தார் . மிக முக்கியமாக சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தற்கால தமிழில் எழுதப்பட்ட பல ஓலைசுவடிகள் அவற்றுள் அடங்கும் . பண்டைய புவியியல் நிலவரைகள்(geo. maps) பண்டைய நிலவரை நூல்கள்(map books) அது மட்டுமா எமது அரசர்கள் ஈழதேசத்திற்காய் கட்டுவித்த குளங்கள், மேற்கொண்ட நீர்ப் பாசன முறைகள், வழங்கிய வயல் நிலங்ககள் , கோவில்களுக்கு ஆற்றிய பணிகளின் ஆவணங்கள் என்பன அங்கிருந்தன நன்றி -தகவல் - நன்ணிச் சோழன். | |
மாவீரர் நாள் மரபாகி வந்த கதை வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவுகூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்துகொண்டிருந்தன. அத்துடன் இலங்கைத்தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளியாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்வேறு நாடுகளில் யூதர்கள் என்ற காரணத்துக்காக கொல்லப்பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்குள்ளாக்கி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் ஒடடுமொத்தமாக யூத இனம் தாம் சந்தித்த இன அழிவுகளை வரலாறாகப் பதிவு செய்வதில் காட்டிய அக்கறையை விலாவாரியாக விபரித்தார். அதனைப் போலவே ஈழநாதம் காட்டும் அக்க றையை குறிப்பிடத்தக்க விடயம் எனப் பாராட்டினார். இறுதி யுத்தம் முடிந்து பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னமும் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட தமது உறவுகள் பற்றிய பதிவுகளை எம்மினம் பூரணப்படுத்த வில்லை. இறுதி நாட்களில் நடைபெற்ற வீரச்சாவு விபரங்கள் கூட முழுமைப்படுத்தப் படவில்லை. இந்த விடயங்களில் யாராவது அக்கறை காட்ட முனைந்தால் தலையில் குட்டி அமர வைக்கும் போக்கினையே சிலர் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். வரலாற்றை மாற்றி எழுதும் பிரகிருதிகள் தமது கற்பனைகளை ஓரிரு சம்பவங்களில் சோடித்து இணையத்தளங்கள், முகநூல்களில் உலாவ விடுகின்றனர். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரைக்கொண்ட மாவீரருக்கு சீலன் எனப் பெயர் வைத்தவன் தானே என்றும் தான் ஒரு மூத்த உறுப்பினர் என்றும் அண்மையில் ஒருவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். மூத்த உறுப்பினர் என்று சொல்வதற்கு அவர் தலை நரைக்கும் வரை காத்திருந்தார் போலும். வரலாற்றில் நடைபெறும் திணிப்புக்கள் என்ற விடயத்தில் நாம் எச்சரிக்கையாகத் தான் இருக்கவேண்டும். அந்த விடயத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் பற்றியும் குறிப்பிட்டாகவேண்டும். ஏனெனில் இன்றைய நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களின் செயற்பாடுகள்,முடிவுகள் தொடர்பாக தீர்மானிக்கும் உரிமை தமக்கே உள்ளது என்ற நினைப்பு சிலரிடம் ஊறிவிட்டது போல் உள்ளது. விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் வித்துடல் தமிழகத்தில் எரியூட்டப்பட்டது. (கொள்ளி வைத்தவர் அப்பையா அண்ணர்) இரண்டாவது,மூன்றாவது மாவீரர்களான லெப்.சீலன் மற்றும் ஆனந்தின் உடலங்கள் யாழ்.போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. எப்படியோ தகவல் அறிந்த சீலனின் தாயார் தனது மகனின் உடலை தன்னிடமே கையளிக்கவேண்டுமென பொலிஸாரிடம் வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோளை பொலிஸார் நிராகரித்தனர். ஊர்காவற்துறைப் பகுதியிலேயே பொலிஸாரால் இவ்விரு உடல்களும் எரியூட்டப்பட்டன. வரலாற்றுச் சமரான 1983 ஜூலை திருநெல்வேலியில் வீரச்சாவெய்திய லெப். செல்லக்கிளி அம்மானின் வித்துடலைப் புலிகளே கொண்டு சென்றனர். நீர்வேலிப் பகுதியில் இவ் வித்துடல் விதைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இவ் விடயம் பகிரங்கப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. சுவரொட்டிகள் மூலமே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது. முதல் மாவீரரான சங்கரின் ஓராண்டு நினைவு நாளை யொட்டியே அவரது வீரச்சாவுச் சம்பவமும் வெளிப்படுத்தப்பட்டது . முதல் மாவீரர் சங்கர் அன்றைய காலகட்டத்தில் இருவரின் பாதுகாப்புக் கருதி சங்கரின் வீரச்சாவை உடனடியாக வெளிப்படுத்த முடியவில்லை. பல்கலைக்கழக விரிவுரையாள ரான நித்தியா னந்தனையும், அவரது துணைவியார் நிர்மலாவை யும் கைது செய்ய இராணுவத்தினர் யாழ். நாவலர் வீதியிலுள்ள அவர்களது வீட்டுக்குச் சென்றனர். ”27.10 1982 அன்று இடம்பெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலன்,புலேந்திரன். ரகு (குண்டப்பா) ஆகியோர் இவர்களது வீட்டிலேயே தங்கவைத்து சிகிச்சை யளிக்கப்பட்டனர்” என்ற தகவல் படையினருக்குக் கிடைத்திருந் தது. படையினர் இவர்களது வீட்டை முற்றுகை யிடச் சென்ற போது அங்கிருந்த சங்கர் அந்த முற்றுகையிலிருந்து தப்ப முயன்றார்.படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வயிற்றில் காயமடைந்த அவர் கைலாசபிள்ளையார் கோவிலடிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தார் அப்போது யாழ்.பல்கலைக்கழக மாணவனும் பின்னாளில் 18 ஆண்டுகளுக்கு மேலாக ஈழநாதம் நாளிதழின் பிரதம ஆசிரியராக விளங்கிய வருமான பொ .ஜெயராஜ் . அவர் சங்கரைக்கண்டார். ஏற்கனவே அறிமுகமாயிருந்த சங்கரை தனது துவிச்சக்கர வண்டி யில் ஏற்றிக்கொண்டு சென்றார். யாழ்.பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள குமாரசாமி வீதியிலுள்ள 41 எண்ணுடைய வீட்டுக் குக்கொண்டுபோனார். இந்தப்போராட்டத்துடன் சம்பந்தமுடைய பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பழகி வந்த இந்த வீட்டில் இருந்த ஏனையோருடன் இணைந்து சங்கரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அன்றைய காலகட்டத்தில் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது முடியாத விடயம். எனவே மேலதிக சிகிச்சைக்காக சங்கர் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சிவகுமார் என்னும் இயற்பெயரைக் கொண்ட அன்ரனே இவரைத் தமிழகத்துக்குக் கொண்டு சென்றார். சங்கருக்காக உண்ணாவிரதமிருந்த தலைவர் பொதுவாக எவருமே நினைவு தப்பி வலியில் துடிக்கும் போது “அம்மா ..... அம்மா .. „ என்றே அரற்றுவதுண்டு . ஆனால் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்தச் சமயத்தில் சங்கர் “ தம்பி ... தம்பி “ என்றே அரற்றினார். தலைவர் சங்கரின் மனதில் எந்தளவுக்கு ஆழமாக உறைந்திருந்தார் என்பதற்கு இதுவோர் சிறந்த உதாரணம். தமிழர்களின் விடுதலைக்காக இதுவரை 36 ஆயுதப்போராட்ட இயக்கங்கள் தோன்றிய போதும் அதில் புலிகள் மட்டுமே வித்தியாசமாகத் தெரிந்தார்கள் என்றால் அதற்கு இது போன்ற உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். வேறு எங்கும் காண முடியாத விடயம் இது . அந்தப் பாசப்பிணைப்பே வரலாற்றில் முதல் மாவீரனாக (விடுதலைப் புலிகள் இயக்கத்தின்) பெயர் பதித்த சங்கரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருக்கும் எண்ணத்தைக் தலைவருக்கு ஏற்படுத்தியது மாவீரர் நாள் அறிவிப்பு இதன் அடுத்தகட்டம் தான் மாவீரர் நாள் பற்றிய அறிவிப்பு.இந்திய இராணுவம் செயற்பட்ட காலத்தில் 1989 ம் ஆண்டில் இந்த அறிவிப்பு மணலாற்றுக் காட்டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்திய தளபதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின்போது போர்க்களத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்கர் என்ற மூத்தபோராளி உரையாடலொன்றின்போது தலைவரிடம் குறிப்பிட்டார் (இவரே பின்னாளில் விமானப் படையின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்ததுடன் அதனை வழிநடத்தியவர். (இயற்பெயர் வை.சொர்ணலிங்கம்) இந்த பொப்பி மலர் உதாரணமே இலங்கையில் ‘சூரியமல்’ எனப்படும் சூரியகாந்தி இயக்கத்துக்கு வழி வகுத்தது. அந்தப்பொறியை சங்கர் தட்டியபோதே எங்களது தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய போராளிகளுக்கும் ஒரு நாளைப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற சிந்தனை தலைவர் மனதில் உருவானது . அந்தவகையிலேயே புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் (சத்தியநாதன் ) நினைவு நாளை மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினார் அவர். இது பற்றி குறிப்பினை தேவர் அண்ணாவும் வெளியிட்டிருந்தார் . கிழக்கில்...! மட்டக்களப்புக்கு இந்த அறிவிப்பு வந்தபோது வடக்கு,கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் கட்டம்கட்டமாக வெளியேறும் நிலையில் இருந்தது .முதலாவது தொகுதியினர் அம்பாறை மாவட்டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்றாக வெளியேறிவிட்டனர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்கங்களுக்கு கூடுதலான ஆயுதங்களையும் அவர்களால் பிடிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியும் வழங்கிவிட்டே இம் மாவட்டத்திலிருந்து வெளியேறினர்.இந்தியப்படையினர். இவர்களால் பயிற்சியளிக்கப்பட்டோர் திருக்கோவில் மற்றும் தம்பிலுவில் ஆகிய இடங்களில் இரு பெரும் முகாம்களை அமைத்திருந்தனர். இந்தநிலையில் அன்றைய அம்பாறை மாவட்டத் தளபதியாக விளங்கிய அன்ரனி தலைமையில் ஒரு முகாமையும் இன்னொன்றை அன்றைய மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக விளங்கிய ரீகன் தலைமையிலும் 05.11.1989 அன்று தாக்கி கைப்பற்றினர்புலிகள். இந்த நிலையில் அம்பாறையில் அன்ரனி முதல் மாவீரர் நாளை திறம்பட நடத்தினார். திருக்கோயில் பகுதியில் தளபதி அன்ரனி தலைமையில் போராளிகள் பாதுகாப்பு வழங்க அம்பாறை மாவட்ட அரசியல் துறையினர் நிகழ்வை நடத்தினர். ஆனால் மடடக்களப்பு மாவடடத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்ததால் பெரும்பாலான கிராமங்களில் மாவீரர்களின் படங்கள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது. வந்தாறுமூலையில் புலிகளும் மக்களும் கூடியிருந்த இடத்துக்கு எதிர்பாராத விதமாக இந்தியப்படையினர் வந்தபோதும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. திருகோணமலையைப் பொறுத்தவரை இந்திய இராணுவத்தின் நெருக்கடி அதிகமாக இருந்தது. அவ்வாறிருந்தும் சாம்பல்தீவு மகாவித்தியாலயத்தில் நிகழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 150 க்கு மேற்பட்ட பொதுமக்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் பாதுகாப்புக்காக ஒரு அணி அனுப்பப்பட்டிருந்தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலையிலான சுரேஷ் என்ற போராளியையும் (பின்னர் படகு விபத்தில் ஆகுதியானார் ) நிகழ்வைப் பொறுப்பேற்று நடந்த அரசியல் பொறுப்பை ஏற்றிருந்த ரூபனையும் அனுப்பியிருந்தார் பதுமன். அன்றைய காலகட்டத்தில் சங்கரின் புகைப்படம் கூட இவர்களின் கைவசம் இருக்கவில்லை. நிகழ்வு நடைபெறும் தகவல் அறிந்து இந்தியப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்களை எதிர்த்து புலிகள் போரிட்டனர். ஒரு பக்கம் மோதலில் ஈடுபட்டுக்கொண்டே நிகழ்வையும் நடத்திமுடித்தனர் .மாவீரர்களின் பெற்றோரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சுருக்கமாக நிகழ்வு நடந்தன. ரூபன் சுடரேற்றி வைத்தார்.அதேவேளை இந்தியப்படையினரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட லெப்.ரிச்சாட் (இராமசாமி குணராசா, இறக்கண்டி, திருகோணமலை.)என்ற போராளி களப்பலியானார். இன்னுமொரு போராளியும் இந்தச் சமரில் காயமடைந்தார்.மாவீரர் நாளின் மாண்பைப் பேணவும் மாவீரரின் பெற்ரோரைக்காக்கும் முயற்சியி லும் தன்னை ஆகுதியாக்கிய முதல்மாவீரனாக ரிச்சாட்டின் வரலாறு அமைந்தது. வடக்கில்..! கிளிநொச்சி மாவட்டத்தின் நிகழ்வு பிரதேசப் பொறுப்பாளராக இருந்த அத்தாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. உருத்திரபுரம் சிவன்கோயி லடி, அக்கராயன்,கிளிநொச்சி ஆகிய இடங்களில் இந்திய இராணுவ முகாம்கள் இருந்தபோதும் இவற்றுக்கு நடுவில் இருந்த கோணாவில் அ.த.க பாடசாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. வாடகை மோட்டார் வண்டியில் ஒலி பெருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டது. சில வேளை இவர்களுக்கு இந்தியப்படையினரால் தொந்தரவு ஏற்படலாம் எனக்கருதி, நகரில் இருந்த சகல ஒலிபெருக்கி மற்றும் வாடகை மோட்டோர் வண்டிகளின் உரிமையாளர்கள் நிகழ்விடத்துக்கு அழைக்கப்பட்டனர். “வானம் பூமியானது பூமி வானமானது” என்ற பெருமாள் கணேசனின் பாடலை பின்னாளில் பிரபல எழுச்சிபாடகராக விளங்கிய S .G சாந்தன் பாடினார். அடிமைத்தனத்துக்கு எதிரான சினிமாப் பாடல்களை மாணவர்கள் பாடினர். (சத்தியமே இலட்சியமாய் கொள்ளடா , உள்ளத்திலே உரம் வேண்டுமடா போன்ற) “ஓநாயும் ,சேவல்களும்” என்ற நவீன குறியீட்டு நாடகமும் மேடையேற்றப்பட்டது.வன்னியில் முதன்முதல் மேடையேற்றப்பட்ட இக் குறியீட்டு நாடகத்தை நா. யோகேந்திரநாதன் எழுதியிருந்தார். அன்ரன் அன்பழகன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். மாவீரர் நாளுக்கான சுடரேற்றல் முதலான நிகழ்வுகளுடன் மிகச் சிறப்பான முறையில் அனைத்தும் நடைபெற்றன.மூன்று முகாம் களிலிருந்தும் இந்தியப்படையினர் வந்தால் எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதும் அசம்பாவிதம் ஏதுமின்றி அனைத்தும் நடைபெற்றன. மன்னார்ப் பிராந்தி யத்தின் சகல மாவீரர் விபரங்களை யும் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் அமுதன் (சுரேஷ் ) தலைவரிடம் சமர்ப்பித்திருந்தார். பண்டிவிரிச்சான் , நானாட்டான், கறுக்காய்க் குளம், முழங்காவில் ஆகிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. பண்டிவிரிச்சான் பாடசாலையில் பிரதேசப்பொறுப் பாளர் கணேஷின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது. கவிதை, பேச்சு, நாடகம் என பல்வேறு நிகழ்வுகளின் போட்டிகளும் முன்கூட்டியே ஏற்பாடு செயப்பட்டிருந்தன. நானாட்டான் நெல் களஞ்சியத்தில் பிரதேசப் பொறுப்பாளர் ஞானியின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடந்தன. பின்னாளில் தமிழீழ நிர்வாக சேவையில் பிரமுகராக விளங்கிய சின்னப்பா மாஸ்டர் இந் நிகழ்வை திறம்படச் செய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார். கறுக்காய்க் குளத்திலும் நெற்களஞ்சியத்திலேயே நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதேசப்பொறுப்பாளர் பாரதி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.பூநகரி பிரதேசத்துக்கான நிகழ்வு முழங்காவில் மகா வித்தியாயத்தில் நடைபெற்றது. பிரதேசப் பொறுப்பாளர் சாம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக பொட்டுவே செயற்பட்டார். அவர் தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜன் (பின்னாளில் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவர்) சூட் ( தவளை நடவடிக்கையின் போது வீரச்சாவெய்தி யவர்) ஜக்சன் (தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசிப்பவர்) முதலானோரிடம் மாவீரர் நாள் அறிவிப்பு பற்றிக் குறிப்பிட்டார். இந்தியப் படையினரின் நடவடிக்கை தீவிரமாயிருந்ததால் சிறு சிறு குழுக்களாக காலத்துக்கேற்ப செயற்பட்டுக் கொண்டிருந்தனர் புலிகள். நீர்வேலி வாதரவத்தை, குப்பிளான், மாதகல் போன்ற இடங்களில் இந்த நகரும் குழுக்கள் பெரும்பாலும் தங்கியிருந்தன. பகிரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வது சிரமமென்பதால், சுவரொட்டிகள் அடித்து சாத்தியமான இடங்களில் ஒட்டுவோம் என ராஜனிடம் தெரிவித்தார் பொட்டு. முதல் சுவரொட்டி திலீபன் காலத்தில் அரசியற் பணிகளை மேற்கொண்டவர் என்ற வகையில் நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் பற்றி ராஜனின் அபிப்பிராயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. ‘‘உங்கள் சுவடுகளில் தொட ரும் பாதங்கள்’’ என்றொரு வசனத்தை (சுலோகம் என்றும் சொல்லலாம்) எழுதிக் கொண்டுபோய் பொட்டுவி டம் காட்டப்பட்டது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். எனினும் மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதிய வைப்பது எப்படி என்று சிந்தித்த வாறே தொடர்ந்து செயலில் இறங்கினார். எங்கேயாவது கறுப்பு வர்ணம் (பெயின்ற்) எடுத்து வரும்படி சொன்னார். வெளியே சென்றவர்கள் ஒரு வாளியில் அதனைக் கொண்டு வந்தனர். வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அருகில் நின்ற சூட்டை அழைத்து அவரது காலின் அடிப்பாதத்தில் பெயின்றை அடித்து அத்தாளில் பதிய வைத்தார். அச்சொட்டாக கால் பதிந்தது. எனினும் அங்கு நின்ற அன்னையொருவர் இவரது கால் சிறியதாக உள்ளது; வேறொருவரின் கால் பெரிதாக இருக்குமாயின் நன்றாக இருக்கும் எனத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். அது சரியாகவே இருந்தது பொட்டுவுக்கு. உடனே அருகில் நின்ற ஜக்சனின் காலில் மை பூசப்பட்டது. அது மிகப் பொருத்தமாக இருந்தது. ராஜன் எழுதிய வசனத்தில் பாதங்கள் என்ற சொல்லை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக .... (டொட் டொட்) என குறிப்பிட்டார் பொட்டு. அந்த வகையில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டியே முதன் முதலில் மாவீரர் நாளுக்கென மக்களின் பார்வைக்கு வந்தது. துவிச்சக்கரவண்டி மூலமாக பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்று ஒட்டினர் புலிகள். ஒதுங்கிய இராணுவம் புத்தூர் முகாமிலிருந்து புறப்பட்ட இந்திய இராணுவத்தினரை நாடகக் கலைஞர் செல்வம் மற்றும் பாலன் முதலானோர் வழி மறித்தனர். மாவீரர் நாள் தொடர்பான விடயங்கள் இருப்பதால் வெளியே வராமலிருக்குமாறு அவர்கள் இராணுவத்திடம் கூறினர். தாங்கள் எப்படியும் வெளியேற வேண்டியவர்கள் தானே என்ற நினைப்பிலோ என்னவோ மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து திரும்பிச் சென்றனர் இந்தியப் படையினர். புலிகளின் கட்டளைப் பணியகமான மணலாறு’ 14: முகாமில் தேவர் அண்ணாவோடு இணைந்து ஏற்பாடுகளை கவனிக்குமாறு தலைவர் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் பெண் போராளிகள் உட்பட அனைவரும் உணர்வுபூர்வமாக பணிகளில் ஈடுபட்டனர். புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை இயக்கமும் காட்டுக்குள் இருந்து ஒலிபெருக்கி மூலம் பாடல்களை இசைக்க விட்டு தமது தோழர்களை நினைவுகூர்ந்திருக்காது. இந்நிகழ்வுகள் நடைபெறும்போதும் இந்தியப் படை வந்தால் எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்ச்சி ஏதும் இருக்கவில்லை. நிகழ்வுகளை கார்த்திக் மாஸ்டர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு ஏற்கனவே காட்டுக்குள் வைத்தே புகைப்படக் கருவியைக் கையாள்வது, அதன் நுணுக்கங்கள் என்பவற்றைக் கிட்டு கற்பித்திருந்தார். தலைவரின் உரை முதலான விடயங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலை சங்கர் மற்றும் தேவர் அண்ணா திட்டமிட்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 12 மணி இரு நிமிடத்துக்கு சுடரேற்றுமாறு விடுத்த அழைப்புக்கு மதிப்பளித்திருந்தனர் மக்கள். ஆலயங்களில் மணிகள் ஒலிக்க வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்கள் சுடரேற்ற தலைவரின் உரை வானொலியில் ஒலிபரப்பானது. வீட்டு வாசலில் சுடரேற்றிய சமயம் மழை பெய்தது. அதனால் சுடர் அணைந்து விடாமலிருக்க குடை பிடித்தனர். இந்தக் காட்சி ஒரு ஓவியரின் மனதில் தைத்தது. அவர் இக்காட்சியைத் தத்ரூபமாக வரைந்திருந்தார். தீபமேற்றல், மணியோசை ஒலிக்கச் செய்தல் முதலான விடயங்க ளெல்லாம் கவிஞர் புதுவை அண்ணாவின் ஆலோசனையே. அதனைத் தலைவர் ஏற்றிருந்தார். மாவீரரின் பெயரை வீதிகளுக்கு சூட்டுவதும் நடைபெற்றது. மாவீரர் பெற்றோரைக் கெளரவித்தல் நிகழ்வும் இந்த ஆண்டிலேயே ஆரம்பமாகிவிட்டது. வலிகாமம் பகுதி மாவீரர்களது பெற்றோர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலும் வடமராட்சியைச் சேர்ந்தோர் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் தென்மராட்சியைச் சேர்ந்தோர் டிறிபேர்க் கல்லூரியிலும் தீவகத்தைச் சேர்ந்தோர் வேலணையிலும் கெளரவிக்கப்பட்டனர். புதிய உடைகள், அன்பளிப்புகள் வழங்கல், விருந்தோம்பல் முதலான விடயங்கள் பெற்றோரை நெகிழ வைத்தன. தாங்கள் இழந்த பிள்ளைகளை அங்கிருந்த போராளிகளின் வடிவில் கண்டனர். இந்திய இராணுவ காலத்தில் ஒரு போராளி வீரச்சாடைந்தார். அவரது உடல் ஓரிடத்தில் எரியூட்டப்பட்டது. ஏதோ அனாதைகள் போல எங்கள் சகாவை எரிப்பது ஒரு போராளியின் மனதைத் தைத்தது. விடுதலைக்காகப் புறப்பட்ட வர்கள் என்றாலும் அவர்களுக்கான நிகழ்வு கெளரவமாக நடத்தப்பட வேண்டும்– எங்கள் கட்டுப்பாட்டில் ஒரு நிலம் இருக்குமாயின் தனிப் போராளிகளுக்கென ஒரு சுடலை அமைக்க வேண்டும் என ராஜன் நினைத்தார். துயிமில்லங்களின் உருவாக்கம் நெருக்கடிகள் தானே புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும். எம்.ஜி.ஆர். இளமையில் வறுமை காரணமாக பட்டினி கிடக்க வேண்டியேற்பட்டது. அந்த வலி மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் தான், தாம் முதலமைச்சராக வந்தபோது சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தான் சாப்பிடக் கூடிய நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் கல்வியை இடைநிறுத்தியிருக்க மாட்டார். இந்த நிலை தனது ஆட்சியில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது . முதலில் உணவுக்காகவேனும் பாடசாலைகளுக்குப் பிள்ளைகள் வரட்டும் என நினைத்தார். அதுபோல் வாழைத்தோட்டத்தில் சேரி வாழ்க்கையை அனுபவித்ததால்தான் ஒவ்வொரு குடும்பத்துக்குத் தனித்தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென்று பிரேமதாஸ நினைத்தபடியால்தான் வீட்டுத் திட்டத்தில் அதீத அக்கறை காட்டினார். 10 லட்சம் வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றினார். அதைப் போன்றதே போராளிகளுக்கான தனிச் சுடலை என்ற சிந்தனையும். ராஜன் யாழ்.மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளரானதும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த முனைந்தார். முதலில் நிலம் வேண்டுமே? சிறைச்சாலைத் திணைக்க ளத்துக்கு சொந்தமான நிலம் கோப்பாய்– இராசபாதையில் உள்ளது என்ற தகவலை ஒரு போராளி தெரிவித்தார். அதனையே போராளிகளின் சுடலையாக்குவோம் என முடிவெடுத்தார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் ராஜன். காணியைத் துப்புரவாக்குதல் போன்ற பணிகளில் பொ.ஐங்கரநேசனின் ‘தேனீக்கள்’ அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டனர். அடுத்து சுட லையையும் வடிவமைக்க வேண்டும். யாழ்.நகரப் பொறுப்பாளராக இருந்த கமல் மாஸ்டர் (வீரச்சாவடைந்துவிட்டார்) தனது பணிமனைக்கு முன்னால் வெளிநாட்டிலிருந்து வந்த கட்டட வடிவமைப்பாளர் ஒரு வர் இருக்கிறார் என்று தெரிவித்தார். அவரையே வரவழைத்து சுடலைக்கான வடிவம் அமைக்கப்பட்டது. வடிவமைப்பாளர் கோரியபடி கந்தர்மடத்திலிருந்த பொறியியலாளர் பங்களிப்பும் கிடைத்தது. ஏற்கனவே அறிமுகம் இல்லாதபோதும் இருவரும் ஆர்வமுடன் இப்பணியில் ஈடுபட்டனர். பொற்பதி வீதியிலுள்ள கட்டடத் தொழிலாளிகளின் பங்களிப்பில் நடந்த பணிகளில் உடலை எரிப்பதற்கான மேடையும் அடங்கியிருந்தது. இதன்பின்னர் வீரச்செய்தியவர் ஒரு கிறிஸ்தவர். அவரை எப்படி எரிப்பது என்ற பிரச்சினை. அதுவும் தனிச் சுடலையில் ஏன் எரிப்பான் என்பது அடுத்த கேள்வி. விவகாரம் எழுந்ததும் ராஜன் அங்கு சென்றார். ‘‘பொதுச் சுடலையில் கண்ட காவாலி, கழிசறைகளையும் எரித்திருப்பார்கள். எங்கள் மகனோ புனிதமான மாவீரர். காவாலிகளை எரித்த இடத்தில் இவரையும் எரிப்பதை ஏற்கமாட்டார்கள் தானே?” எனக் கேட்டார். யதார்த்தத்தைப் புரிந்தனர் பெற்றோர். மேடையில் இவரது சடலம் எரிப்பதை ஒளிப்படமாக எடுத்து தலைவருக்குக் காண்பிக்கப்பட்டது. ‘‘தனி மயானம் நல்லதுதான்; நாங்கள் ஏன் எரிக்க வேண்டும்? புதைக்கலாமே?’’ இந்தக் கேள்வி தான் வித்துடல்களைப் புதைக்கும் வழக்குக்கு அத்திபாரம். அடுத்ததாக வீரச்சாவெய்துபவரின் வீட்டுக்கு சென்றபோது அங்கும் பிரச்சினை எழுந்தது. ஏன் எங்கள் பிள்ளையைச் சுடலையில் எரிக்காமல் புதைக்க வேண்டும்? என்று கேட்டனர். நீங்கள் மகனின் நினைவு எழும் போதெல்லாம் அந்த இடத்துக்குச் சென்று கும்பிடலாம். அழலாம். பூப்போடலாம் என்று விளக்கமளிக்கப்பட்டது. வரலாற்றில் துயிலுமில்லத்தில் முதன் முதலாக விதைக்கப்பட்டவர் என்ற வரலாறு சோலை என்ற மாவீரருக்குக் கிடைத்தது. மாவீரரை விதைக்குமுன் வாசிக்கப்படும் வாசகங்களையும் (மாவீரர் பெயர் தவிர்த்தது )புதுவை அண்ணாவே எழுதினார். மாவீரர் பதிவுகள் இந்தக்காலப் பகுதிகளிலே மாவீரர் பணிமனை முழு அளவில் செயற்பட ஆரம்பித்தது. இந்தியப் படையினரின் வருகைக்கு முன்னர் மாவீரர்களின் விபரம் பேணப்பட்டிருந்தது. எனினும் இந்தியப் படையினரின் காலத்தில் புதிதாக இணைந்து கொண்டோர் பற்றிய விவரம் தலைமைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்திலேயே இணைந்து அக்காலப் பகுதியிலேயே சிலர் மாவீரராகியும் இருந்தனர். எனவே இவ்வாறான விடயங்களைத் தெரிவிக்கும்படி பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பொன்.பூலோகசிங்கம் என்ற சட்டத்தரணியின் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது. அவர் நாள்தோறும் தினக்குறிப்பு (டயரி) எழுதும் பழக்கமுடையவர். பத்திரிகைகளில் வரும் மாவீரர் இழப்பு, பொதுமக்கள் இழப்பு (படையினர் மற்றும் இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்டவை) குறித்து அவர் எழுதிய குறிப்புகளே மாவீரர் பட்டியலை கணிசமான அளவு சரியாக்க உதவிற்று. தாவடியில் தும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சில் லூக்காஸ் என்பவர் மாவீரரானார். ஆனால் இந்த மாவீரர் பற்றிய விவரம் எவருக்கும் தெரியாது. நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்று மட்டுமே தெரியும். 1990 இல் ஈழநாதம் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டபோது வீரவணக்க விளம்பரங்கள் வெளிவந்தன. தங்கள் பிள்ளைகளை, உறவுகளை, நட்புகளை நினைவுகூர வசதியான சிலரால் மட்டுமே முடிந்தது. அதேசம்பவங்களில் வீரச்சாவெய்திய ஏனைய மாவீரர்களை எவரும் நினைவுகூரவில்லை. இதனைக் கண்ணுற்ற ஒரு போராளி அப்போதைய அரசியல் தலைமையை வகித்த மாத்தயாவிடம் இவ்விடயம் பற்றிக் குறிப்பிட்டார். நாளாந்தம் அதே நாளில் வீரச்சாவெய்தியோர் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தைத் தெரிவித்தார். வருடம் 365 நாளில் மட்டுமல்ல 4 வருடங்களுக்கு ஒருமுறைவரும் (லீப்வருடம் ) பெப்ரவரி 29 இல் கூட மாவீரர் விவரம் உண்டு என்பதும் தெரியவந்தது. இதற்கென இயங்கிவந்த பணிமனை இரண்டு மாவீரர்களின் தந்தையான பொன்.தியாகம் அப்பாவின் பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்டு மாவீரர் பணிமனையுடன் இணைக்கப்பட்டது. ( பின்னர் இவர் மூன்று மாவீரர்களின் தந்தையானார். பள்ளமடுவில் இவரது மகளும் வீரச்சாவடைந்தார்) பெயரில், திகதியில், முகவரியில் என பல்வேறு தவறுகளுடன் இருந்த பட்டியல்கள் தியாகம் அப்பாவின் முயற்சியால் திருத்தப்பட்டன. மாவீரர் நிகழ்வுகள் பற்றிய சுற்றுநிருபங்கள் இந்தப் பணிமனையினால் விடுக்கப்பட்டன. இந்தப்பணிமனை கோரும் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என பிராந்தியத் தளபதிகளுக்கும் தலைவரும் உத்தரவு பிறப்பித்திருந்தார். எந்தெந்தத் துயிலுமில்லங்களில் யார் ,யார் விதைக்கப்பட்டார்கள், வித்துடல் கிடைக்காத யார் யாருக்கு எங்கெங்கு நினைவுக்கல் உள்ளன போன்ற முழு விவரங்களும் இந்தப்பணிமனையில் இருந்தது.இதன் மூலம் மிகவும் காத்திரமான பணியை செய்துவந்தார் பொன் தியாகம் அப்பா. ‘‘தாயகக் கனவுடன்..” 1992 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது. அப்போது மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய ஜெயா ஒரு ஆலோசனையை முன்வைத்தார். மாவீரர் பெற்றோரும் போராளிகளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உருவாக்கப்பட வேண்டும் என்றார். உடனே தலைவர் புதுவை யண்ணா வைப் பார்க்க கையைப் பொத்தி பெருவிரலை உயர்த்திக் காட்டினார் புதுவையண்ணா. ஈழநாதம், விடுதலைப் புலிகள், சுதந்திரப் பறவை வெளிவந்த மாவீரர்கள் பற்றிய கட்டுரைகளை தனியான நூல்களாக வெளியிட வேண்டும் என்ற அறிவனின் யோசனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. துயிலு மில்லத்துக்கு வருவோர் தமது பிள்ளைகளின் நினைவாக வீடுகளில் நாட்டுவதற்கு அவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்களுக்கு முன்னால் தென்னை போன்ற பயன்தரு மரங்களை வைக்க வேண்டும் என்று பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் வைக்கப்பட்ட யோசனையும் ஏற்கப்பட்டது. இந்த யோசனை இன்று பல்வேறு வகையிலும் பின்பற்றப்படுவது ஆரோக்கியமான விடயம். ஜெயாவின் கருத்தை உடனடியாக செயலாக்கினார் புதுவையண்ணா. அதுதான் ‘‘தாயகக் கனவுடன்’’ என்று ஆரம்பிக்கும் மாவீரர் பாடல். மனதைப் பிழியும் இப்பாடல் இன்றுவரை மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள்மற்றும் தமிழ் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. கண்ணன் இசையமைக்க வர்ணராமேஸ்வரன் குரலில் ஒலித்த பாடல் இது. கோப்பாய் துயிலுமில்லத்தில் தனக்குப் பக்கத்தில் நின்று நேரில் அதனைப் பாடவேண்டும் என்று அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் வர்ணராமேஸ்வரனின் வேண்டிக் கொண்டார். ஒலிபெருக்கியிலும் இந்தப்பாடல் இசையுடன் ஒலித்தது. முதன்முதலாக இவ்வரிகளைக் கேட்ட மாவீரர் குடும்பத்தினர் கதறி அழுதனர். இப்பாடலின் ஒலிநாடாவை ஒரு போராளியிடம் (கரும்பறவை) வழங்கிய புதுவையண்ணை முதன் வரிகளைக் கேட்கும்போது உங்களுக்கு நினைவில் வரும் சம்பவங்களையும் கருத்துக்களையும் எழுதித் தாருங்கள் என்றார். அந்த விடயம் வெளிச்சம் இதழில் வெளிவந்தது. ஒரு மாவீரனின் தாயாரான மலரன்னையும் அன்றைய மாவீரர் நாள் குறித்து கட்டுரை எழுதியிருந்தார். மாறிய நேரம் 1992 மாவீரர் நாள் பொதுச்சுடரை தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.1991 இல் இதனை மாத்தயா ஏற்றியிருந்தார். மாவீரர் பாடலில் வரும் ‘‘நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்’’ என்ற வரி ‘‘வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்’’ எனப் பின்னாளில் மாற்றப்பட்டது. ஏனெனில் முன்னர் நள்ளிரவிலேயே மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது. பின்னரே தற்போதுள்ள மாலை 6.05 க்கு மாவீரர் சுடர் ஏற்றும் முறை வழக்கத்துக்கு வந்தது . தற்போதைய நேரமே முதல் மாவீரரான சங்கர் வீரச்சாவெய்திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயிரம் அளவில் மாவீரர்களின் விவரம் கிடைத்தன. இதன் பின்னர் தரவுகளைப் பேணவோ வழங்கவோ இயலக் கூடிய நிலையில் சூழல் அமையவில்லை.
|
யாழ்ப்பாண சுவாமிகள் தமிழ் சித்தர்கள் பற்றிய அறியும் ஆவல் எப்பொழுதுமே என்னுள் இருந்திருக்கிறது .அவர்கள் விட்டு சென்ற வர்ம கலைகள் ,மருத்துவம் போன்றவை எனக்கு ஆச்சரியமூட்டுவையாகவே இருந்திருக்கிறது அவர்களது தத்துவங்கள் இக்கால விஞ்ஞான அறிவியலுக்கு உட்படுத்தலாமா இல்லையா என்பவர்களின் கருத்துக்களை ஒரு பக்கம் தள்ளி விட்டு தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் போல இலங்கையிலும் இருந்திருக்கிறார்களா என்று தேடிய பொழுது பாரதியார் தனது குருவாக நினைத்து பாடிய யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வியாபாரி மூலையை சேர்ந்த யாழ்ப்பாண சுவாமிகள் என்று அழைக்கப்பட்டவர் ஒரு சித்தர் என்று கூறப்படுகிறது அவர் நடத்தி காட்டிய சித்து விளையாட்டுக்கள் இவை எனக்கூறப்படுகிறது (இவரது சித்தாடல் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை) யாழ்ப்பாணத்து சுவாமிகளின் அற்புதங்களும் சித்துக்களும் 1.சுவாமிகள் பொலிகண்டி கடல் நீர்ப்பரப்பில் பல்வேறு இடங்களிலும் நின்று காட்சி கொடுத்தார்கள். 2.நாகை நீலலோசனி அம்மன் ஆலய வாசலில் நிஷ்டையின் பின் 41 நாட்கள் வாயூறு தண்ணீரில் இருந்தார்கள். 3.தீயிற் காய்ச்சிய இரும்பினை இவரது பாதத்திற் சுட்டபோது சுவாமிகள் மௌனமாக இருந்தார்கள். பொலிசார் சுவாமிகளை அறையில் விட்டுப் பூட்டிவைத்தனர். சிறிது நேரத்தில்4. அவர் அறையில் இல்லாமல் கடற்கரையோரத்தில் நிஷ்டையில் இருந்தார்கள் _______________________________________________________________________ . சுவாமிகள் சித்தாடலை விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------ 1924 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “அருளம்பலம் சந்தேக நிவர்த்தி” எனும் தமது நூலினை புதுவை ஜெகநாதம் அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார். 1926 : இவர் “கற்புநிலை” என்ற தமது நூலை புதவை கலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார். 1927 : அடுத்து இவர் “அருவாச தேவ ஆரம்”, “சீவதரிசி” எனும் இரு நூல்களையும் புதுவை கலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார். இவற்றில் இருந்து 1914 ஆம் ஆண்டிலிருந்து 1927 ஆம் ஆண்டு வரையும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் இருந்தார்கள் என்பது தெளிவு. 1928 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நாகை நீலலோசனி அம்மன் பேரில் “தோத்திரம்”, “ஊஞ்சல்” எனும் இரு நூல்களையும் ஜனனோபகார அச்சுக்கூடம் - நாகபட்டணத்தில் பதிப்பித்துள்ளார். 1929 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “கற்புநிலைச் சுருக்கம்” எனும் நூலை ஜனனோபகார அச்சுக்கூடம் - நாகபட்டணத்தில் பதிப்பித்துள்ளார். 1929 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நாகபட்டணத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்து வியாபாரிமூலையிலும், வதிரியிலும் தங்கினார்கள். 1930 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் மீண்டும் நாகபட்டணம் சென்றார்கள். வியாபாரிமூலை செல்வந்தரான வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் நாகபட்டணத்தில் காணி வாங்கி மடம் கட்டி யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் தங்க வசதி செய்து கொடுத்தார்கள். 1931 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “பழை வேற்பாட்டுடன் படிக்கை” எனும் நூலினை ஜனனோபகார அச்சுக்கூடம் - நாகபட்டணத்தில் பதிப்பித்தார். 1935 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் “ஆதிபுராணம்” எனும் நூல் காமினி அச்சுக்கூடம் - கண்டியில் பதிப்பிக்கப்பட்டது. 1939 : யாழ்ப்பாணம் புலொலி மேற்கு திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை நாகபட்டணம் சென்று சந்தித்தார்கள். திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் உத்தம சிஷ்யனானார். 1940 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “ஆதி நீதி” எனும் நூலை ஜனனோபகார அச்சுக்கூடம் - நாகபட்டணத்தில் பதிப்பித்தார். 1942 : நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் முன்குறித்த வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்களுடன் கூடக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து அல்வாய் வடக்கு திருமகள் வாசம் எனும் அவரது இல்லத்தில் தங்கினார்கள். 1942 : மார்கழி மாதம் 3 ஆம் திகதி அத்த நட்சத்திரத்தில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அவரது முதல் சிஷ்யரான திரு.வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் இல்லத்தில் மகா சமாதி அடைந்தார். 1942 : மார்கழி 5 ஆம் திகதி வியாபாரிமூலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயத்தின் மூன்றாம் வீதியின் ஈசான மூலையில் சமாதி வைக்கப்பட்டு செப்பனிடப்பட்ட வைரக்கற்களால் திருமந்திரத்தின் படி கோவில் கட்டப்பட்டது. திரு.ச.கணபதிப்பிள்ளை ஆகிய வேற்சாமியார் 1942 இல் இருந்து நித்திய பூசைகளைப் பொறுப்பேற்று தமது இறுதிக்காலம் வரை செய்தார்கள். தொடர்ந்து நித்திய பூசைகளும், குரு பூசைகளும் நடைபெற்று வருகின்றன. 1943 : நாகபட்டணம் அக்கரைகுள ரோட்டில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் மடாலயத்தில் சித்திரபானு வருஷம் தை மீ.3உ (16.01.43) இல் நடந்தேறிய குருபூசையன்று ஸ்ரீலஸ்ரீ அருளம்பல சுவாமிகள் பேரில் ஆனந்தக்களிப்பு பாடி அளிக்கப்பட்டது. 1961 : திரு.அ.ந.கந்தசாமி என்பார் ஸ்ரீலங்கா ஆகஸ்ட் இதழில் “ஞானம் வளர்த்த புதவை” எனும் கட்டுரையில் பாரதி கூறும் யாழ்ப்பாணத்து சுவாமிகள் யார்? என்னும் வினாவினை எழுப்பினாரே தவிர யார் என எவரையும் இனங்காணவில்லை. 1962 : யாழ்ப்பாணத்து சுவாமிகளது அன்பரான திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் ஸ்ரீலங்கா 04.1962 இல் எழுதிய கட்டுரையில் யாழப்பாணத்து சுவாமிகளே அருளம்பல சுவாமிகள் எனக் கூறியிருந்தார்கள். 1963 : 07.05.1963 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் “அருளம்பல சுவாமிகளே பாரதியாராற் போற்றப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி” எனக் கொண்டு எடுக்கப்பட்ட விழாவில் சமாதி ஆலயத் தருகில்” பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நினைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவியது எனும் வாசகம் பொறித்த நடுகல் நாட்டினர். இவ் விழாவினை முன்னிட்டு அன்றைய தினகரன் பத்திரிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் கட்டுரைகளும், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் வெளியிட்ட “காற்றை நிறுத்தக் காணுவன் விடையை” எனும் துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டன. 09.05.1963 இல் ஈழநாடு தனது பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் “பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகளே” என செய்தி வெளியிட்டிருந்தது. 15.05.1963 இல் வெளியான ஆத்ம ஜோதி மாத சஞ்சிகையின் அட்டையில் அருளம்பல சுவாமிகளின் படம் பிரசுரிக்கப்பட்டு “பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்” என வெளிவந்தது. ஆதன் ஆசிரியரான க.இராமச்சந்திரன் அவர்கள் அருளம்பல சுவாமிகளே யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 1979 : திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் “புற்றளைக்கரசே” என்னும் அவரது நூலில் அருளம்பல சுவாமிகள் மீது பாடிய மூன்று பாடற் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மெய்கண்டார் ஆதீன முதல்வர் ஸ்ரீமத் ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆலயச் சூழல்களில் கவரப்பட்டு பஜனையும் வேதாந்த வகுப்புக்களும் தமது இறுதி பரியந்தம் வரை நடாத்தி வந்தார்கள். 1981 : திரு.சி.மு.தம்பிராசா அவர்கள் “பாரதி வர்ணித்த ஜகத்தினிலோர் உவமையில்லா யாழ்ப்பாணத்துச் சுவாமி அருளம்பல சுவாமிகளே” என 22.11.1981 இல் வீரகேசரியில் அருளம்பல சுவாமிகள் குருபூசையை முன்னிட்டு எழுதி வெளியிட்டுள்ளார். திரு.சி.நா.சொக்கநாத பிள்ளை அவர்கள் சிவஞானப்பிரகாச சபைக்கூடாக யாழ்ப்பாணம் மேலைப்புலொலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினார்கள். 1982 : திரு.ஆ.சபாரத்தினம் அவர்கள் 31.01.1982 இல் தினகரன் வாரமஞ்சரியில் ‘தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதிக்கு முன்னும் பின்னும்’ என்னும் கட்டுரையில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அருளம்பல சுவாமிகளே எனக் குறிப்பிட்டிருந்தார். 1982 : திரு.க.அம்பிகைபாகன் அவர்கள் 07.02.1982 இல் வீரகேசரியில் ‘பாரதி பாடிய யாழ்ப்பாணத்துச் சுவாமியே அருளம்பல சுவாமிகள்’ என யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நிஷ்டையில் இருந்து எழுந்தவுடன் எடுத்த படத்துடன் வெளியிட்டிருந்தார். 1990 : இந்து கலைக்களஞ்சியத்தில் திரு.பொ.பூலோகசிங்கம் அவர்கள் பாரதி போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் வியாபாரிமூலையைச் சேர்ந்த அருளம்பல சுவாமிகளே என ஆதாரங்கள் நிலைநாட்டியுள்ளார். 1992 : வியாபாரிமூலையில் டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை அமைக்கப்பட்டு கலாநிதி நா.ஞானகுமாரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியற்றுறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.) அவர்கள் ‘பாரதி போற்றிய யாழப்பாணத்துச் சுவாமிகள்’ வியாபாரிமூலை, அல்வாய் வடக்கு அருளம்பல சுவாமிகளே என தகுந்த ஆதாரங்களுடன் “பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்” எனும் ஆய்வு நூலினை வெளியிட்டுள்ளார்கள். 1998 : 06.09.1998 இல் ஸ்ரீ இராமகிருஷ்ணமிசன் இலங்கை கிளையின் தலைவர் சுவாமி ஆத்மகணானந்தா அவர்கள் தலைமையில் ஸ்ரீ இராமகிருஷ்ணமிசன் சுவாமிகளும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆலயத்திற்கு வருகைதந்தனர். 2000 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகளான சி.வே.அருளம்பலசுவாமிகள் அருளிச்செய்த “மண் விண் வினாவிடை” எனும் நூல் பேராசிரியர் நா.ஞானக்குமாரன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் இந்து சமயப்பேரவையால் வெளியிடப்பட்டது. 2001 : யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை (அல்வாய் வடக்கு, சி.வே.அருளம்பல சுவாமிகள், வதிரி, வியாபாரிமூலை) இலங்கை இந்து சமய, இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 18.12.2001 இல் HA/4/J/197 ஆம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. 2003 : திரு.C.S.முருகேசன் எழுதிய பாரதி கண்ட சித்தர்கள் என்னும் நூலிலும் புதுச்சேரிச் சித்தர்கள் என்னும் நூலிலும் ஸ்ரீ கதிரவேலுச் சுவாமிகளே பாரதியார் போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என நிறுவ போதிய சான்றுகள் காணப்படவில்லை. 2004 : வியாபாரிமூலை யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சமாதி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு சுவாமி அருளானந்தா அவர்கள் தலைமையில் 25.11.2004 இல் குடமுழுக்கு செய்யப்பட்டது. அன்று சுவாமி அருளானந்தா எமுதிய “யாழ்ப்பாணத்து மௌன குருவின் சரித சுருக்கம் - மீண்டும் அருள்தர வந்தேன்” என்னும் நூலும் வெளியிடப்பட்டது. திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் குலத்தோன்றல்களான டாக்டர் சதானந்தன், திருவாளர்கள் சி.முத்துக்கிருஷ்ணன், சா.நவரத்தினராசா போன்றவர்கள் சமாதி ஆலயப் புனருத்தாரணப் பணிக்கு பொருளுதவி புரிந்ததோடு நித்திய பூசைகளையும் பொறுப்பேற்றுள்ளனர். 2006 : கலாநிதி க.குணராசா அவர்கள் “பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து ஆறுமுக சுவாமி” என ஒரு நூலினை 2006 இல் வெளியிட்டார்கள். இந்நூலிற்கு ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப் படாமையினால் அது ஒரு புனைகதை எனக்கருதப்படுகிறது. 2006 - 2007 : திரு.க.சந்திர மௌலீஸ்வரன் தினக்குரல் நாளாந்தப் பத்திரிகையில் (17,24,31.12.2006 : 07.01.2007) “பாரதியார் போற்றும் யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?” என ஆராய்ந்துள்ளார். ஆனால் இவரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் முழுமையான தகவல்களையும் வழங்கவில்லை. 2007 : பேராசிரியர் நா.ஞானக்குமாரன் அவர்கள் “பாரதி போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?” எனும் கட்டுரை எழுதி அதில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சி.வே.அருளம்பல சுவாமிகளே என ஆதாரங்கள் காட்டி தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம வெளியீடான 2007 ஐப்பசி, கார்த்திகை ஞானச்சுடர் மலரில் வெளியிட்டுள்ளார்கள் நன்றி--தொகுப்பு : திரு.சி.மு.தம்பிராசா M.A யாழ்ப்பாணத்தின் படைத்தலைவன்: குணபூஷண சிங்கையாரியன் என்கிற செகராஜசேகரன் (கி.பி. 1348-1371) அடிப்படை தகவல்கள் விவரம் தகவல் முழுப் பெயர் குணபூஷண சிங்கையாரியன் பட்டப்பெயர் செகராஜசேகரன் IV ஆட்சிக் காலம் கி.பி. 1348 – 1371 (23 ஆண்டுகள்) வம்சம் ஆரியச் சக்கரவர்த்தி வம்சம் தந்தை மார்த்தாண்ட சிங்கையாரியன் மகன்/வாரிசு வீரோதய சிங்கையாரியன் இராணுவ சாதனைகள் கம்போலா படையெடுப்பு (கி.பி. 1353) குணபூஷண சிங்கையாரியனின் ஆட்சியின் முக்கிய வெற்றி, கம்போலா இராச்சியத்தின் மீதான படையெடுப்பு ஆகும். போர் விவரங்கள்: - கி.பி. 1353-ல், தனது ஏழாவது ஆட்சியாண்டில் படையெடுத்தார் - அப்போது கம்போலாவில் விக்கிரமபாகு III ஆட்சி செய்தார் - நான்கு கோரலேஸ் (Four Korales) பகுதி கைப்பற்றப்பட்டது - மாத்தளை மாவட்டம் யாழ்ப்பாணக் கட்டுப்பாட்டுக்கு வந்தது - மேற்குக் கரையோரம் புத்தளம் வரை விரிவடைந்தது வரலாற்று ஆதாரங்கள்: - கோட்டகம கல்வெட்டு: "சிங்கை நகரத்து ஆரியன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது - மடவால கல்வெட்டு (கி.பி. 1359): வரிவசூலிப்பாளர்கள் நியமனம் - லகுகல கல்வெட்டு: கம்போலா ஊடுருவலை உறுதிப்படுத்துகிறது முடிவு: - கம்போலா மன்னர் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினார் - கப்பம் செலுத்தும் உடன்படிக்கை செய்து கொண்டார் கடற்படை வலிமை - பனடுறை (Panadura) வரை கடற்படைகள் அனுப்பப்பட்டன - மேற்குக் கரையோர வரிவசூலிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன - கடல் வணிகப் பாதைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன - உடரட்ட (மலைநாடு) பகுதிகளிலிருந்து வரி வசூலித்ததாக ராஜாவளிய குறிப்பிடுகிறது அலகேஸ்வரரின் எதிர்ப்பு (கி.பி. 1371) எதிரி: - அலகேஸ்வரர் - நிச்சங்க அலகக்கோணாரின் வழித்தோன்றல் - விக்கிரமபாகு III-ன் அமைச்சர் போர் நடவடிக்கைகள்: - இருபது ஆண்டுகள் தயாரித்து கி.பி. 1371-ல் தாக்குதல் தொடங்கினார் - ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் (கோட்டை) கோட்டை கட்டி பாதுகாப்பு அமைத்தார் - யாழ்ப்பாண வரிவசூலிப்பாளர்களைக் கைது செய்து கொலை செய்தார் - தமிழ் இராணுவ முகாம்களைத் தாக்கினார் விளைவு: - இந்த முக்கியமான காலகட்டத்தில் கி.பி. 1371-ல் குணபூஷண சிங்கையாரியன் இறந்தார் - மகன் வீரோதய சிங்கையாரியன் ஆட்சிக்கு வந்தார் விஜயநகரப் பேரரசின் எழுச்சி (கி.பி. 1371) - தென்னிந்தியாவில் புதிய அச்சுறுத்தல் உருவானது - கி.பி. 1371-ல் விஜயநகரப் பேரரசு மதுரையைக் கைப்பற்றியது - யாழ்ப்பாண இராச்சியத்திற்கு புதிய இராணுவ அச்சுறுத்தலாக மாறியது ஆட்சிச் சிறப்புகள் கல்வி வளர்ச்சி: - கல்வி நிறுவனங்களை வளர்த்தார் - சைவ சமய இலக்கியங்களை பாதுகாத்தார் - சமஸ்கிருதம், தமிழ் இலக்கியங்களுக்கு அரச பரிசில்கள் பொருளாதார முன்னேற்றம்: - விவசாயத்தை ஊக்குவித்தார் - நெல் சாகுபடி விரிவுபடுத்தப்பட்டது - தென்னிந்தியாவுடன் வணிக உறவுகள் வலுப்படுத்தப்பட்டன நீதி ஆட்சி: - தந்தையின் கடுமையான ஆட்சிக்கு மாறாக மக்களிடம் நெருக்கமான உறவு - "உறுதியுடனும் நடுநிலைமையுடனும்" ஆட்சி - மக்களின் பேரன்பைப் பெற்ற மன்னர் மத பங்களிப்பு: - சைவ சமயத்தின் பெரும் பற்றாளர் - கோயில்கள் புனரமைக்கப்பட்டன - சைவ ஆச்சாரியர்களுக்கு நில வழங்கல்கள்
ஆண்டு நிகழ்வு 1348 ஆட்சிக்கு வருகை 1353 கம்போலா படையெடுப்பு - நான்கு கோரலேஸ் வெற்றி 1357-1371 மேற்குக் கரையோரக் கட்டுப்பாடு, பனடுறை வரை கடற்படை நடவடிக்கைகள் 1371 அலகேஸ்வரரின் எதிர்ப்பு, விஜயநகரப் பேரரசின் எழுச்சி 1371 மரணம், மகன் வீரோதய சிங்கையாரியனுக்கு அதிகார ஒப்படைப்பு வரலாற்று முக்கியத்துவம் வெற்றிகள்: - கம்போலாவின் மீது வெற்றிகரமான படையெடுப்பு -யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன - கடற்படை வலிமை நிரூபிக்கப்பட்டது - உச்ச காலம் (Peak Period) நிர்ணயிக்கப்பட்டது சவால்கள்: - அலகேஸ்வரரின் எதிர்ப்பு இயக்கம் -விஜயநகரப் பேரரசின் எழுச்சி -தெற்கில் நீண்ட கால ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாமை வரலாற்றாளர்களின் மதிப்பீடு "14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், யாழ்ப்பாண இராச்சியம் வடமேற்குக் கரையோரம் முழுவதும் புத்தளம் வரை பயங்கரமான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. 1353-ல் படையெடுப்புக்குப் பிறகு, நான்கு கோரலேஸின் ஒரு பகுதி தமிழ் ஆட்சியின் கீழ் வந்தது." — K.M. de Silva, "History of Sri Lanka" "ஒரு மன்னனின் மகத்துவம், அவனது படைகளின் பலத்தால் அல்ல; மக்களின் மனங்களில் அவன் பதித்த அன்பால் அளவிடப்படுகிறது." ஆதாரங்கள் 1. Yalpana Vaipava Kaumudi (யாழ்ப்பாண வைபவ கௌமுதி) 2. Kailayamalai (கைலாயமலை) 3. Kotagama Inscription (கோட்டகம கல்வெட்டு) 4. Medawala Inscription (மடவால கல்வெட்டு - கி.பி. 1359) 5. Lahugala Inscription (லகுகல கல்வெட்டு) 6. Rajavaliya (ராஜாவளிய) 7. University of Ceylon History of Ceylon 8. S. Pathmanathan's "The Kingdom of Jaffna" 9. K.M. de Silva's "History of Sri Lanka" மரபு குணபூஷண சிங்கையாரியனின் ஆட்சி, யாழ்ப்பாண இராச்சியத்தின் "பொற்காலம்" என்று வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படுகிறது. இவரது போர் சாதனைகளும், அமைதியான ஆட்சியும், தமிழ்-சைவ கலாச்சாரத்தின் செழிப்பும் இணைந்து, இவரை "மக்கள் மன்னன்" என்ற பெருமைக்குரியவராக்கியது. இவரது மரணத்திற்குப் பிறகு வந்த வீரோதய சிங்கையாரியன், கி.பி. 1380-ல் கம்போலாவில் தோல்வியடைந்தது, யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சியின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.குணபூஷணசிங்கையாரியன் செகராஜசேகரன்IV யாழ்ப்பாணஇராச்சியம் ஆரியச்சக்கரவர்த்தகம்போலாவெற்றி நான்குகோரலேஸ் இலங்கைவரலாறு தமிழரசர்கள் இந்தப் பதிவு வரலாற்றுத் துல்லியத்திற்காகத் தயாரிக்கப்பட்டது. கல்வெட்டுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நவீன வரலாற்றாய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. | |
கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரத்துக்கு அருகே பான்டிஸ்ரீ என்ற சிவாலயம் அமைந்துள்ளது. தற்பொழுது இது பந்தியாய் சிரே என அழைக்கப்படுகின்றது. அங்கோர்வாட் ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையாரின் புகழ் இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் பரவியுள்ளது என்பது பல ஆய்வுகளின் உண்மை. 9ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பேரரசர்கள், தங்களது இறைப்பணியை இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்து, அதாவது, சோழபேரரசு எங்கெல்லாம் ஆட்சி அமைத்ததோ அங்கெல்லாம் காரைக்கால் அம்மையாரின் சிந்தாந்த நெறிகளை பரப்பி, சிவவழிப்பாட்டு முறைகளை பிரபலப்படுத்தி, காரைக்கால் அம்மையாரின் புகழ் என்றும் அழியாதிருக்க, பாறைகளில் அம்மையாரின் சிற்பங்களை வடித்து அம்மையாரின் புகழை பரப்பியுள்ளனர். குறிப்பாக சொல்லப்போனால், தெற்கு கம்போடியாவின் டாக்கியோ என்ற இடத்தில் சிற்றரசர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் சிவபெருமான் வலது புறத்தில் பிரம்மன், இடது புறத்தில் காரைக்கால் அம்மையார் இசைக்கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது போல் சிலைகள் அமைந்துள்ளது. கம்போடியா பாட்டி என்ற பகுதியில் போனம் தீமாடோ என்ற மலைப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் காரைக்கால் அம்மையார் உருவச்சிலைகள், சிவபெருமானோடு இணைந்து காட்சியளிப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இளம்வயதினிலேயே காரைக்கால் அம்மையார் சிவபெருமான் மீது கொண்ட பற்றின் காரணமாக உலக வாழ்க்கையை துறந்து, உருவத்தை தொலைத்து, சிறப்பு மிகு தவத்தினால், காரைக்கால் அம்மையார் இறைவனின் நிழலில் நிலைத்து நிற்கிறார் என கம்போடியா மக்கள் பெருமையுடன் சொல்லி வணங்கி வருவதை இன்றும் வரலாற்று பதிவுகளில் உள்ளது. இதேபோல், தாய்லாந்திலும் அம்மையாரின் புகழ் கடல் கடந்து பரவியுள்ளது. அதாவது 11ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை உருவாக்கப்பட்ட தாய்லாந்து நாட்டின் நினைவு சின்னமாக உள்ள ஆலயங்களில் நாட்டிய கோலத்திலான சிவபெருமான் சிலை அருகே தோலுரித்த நிலையில் பெண் உருவம் காணப்படுவதாகவும், அது காரைக்கால் அம்மையாரே என அந்நாட்டின் துறவிகள் போற்றி வணங்கிவருகின்றனர். தாய்லாந்தில் உள்ள 2ம் சூரியவர்ம அரசன் அங்கூரில் அமைத்த ஆலயங்களின் நுழைவு வாயிலில், காரைக்கால் அம்மையார் சிவபெருமானை புகழ்ந்து பாடிய பாடல்கள் கல்வெட்டில் செதுக்கிவைத்துள்ளனர். கம்போடியா மற்றும் தாய்லாந்து மக்கள் இணைந்து உருவாக்கிய ஹேமர் கலையை மையமாகக்கொண்டு பல சிவாலயங்களும், நடராஜர், அருகில் காரைக்கால் அம்மையாரும் அமர்ந்திருப்பது போன்ற கல்வெட்டுகள் பல உள்ளது. இப்படி மலேசியா, இலங்கை, பர்மா தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளில் காரைக்கால் அம்மையார் புகழ் பரவியுள்ளது என வராலாற்று சிந்தனையாளர்கள், ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் பலர் தங்கள் கருத்துக்களை இன்றும் வெளியிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்திவருகின்றனர். வரலாற்று புகழ்மிக்க காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றையும், இறைபக்தி குறித்தும், சைவ சிந்தாந்த நெறிகள் குறித்தும், இன்றைய இளம் தலைமுறையினரும் அவசியம் தெரிந்துவைத்திருக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோயில் சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாதக்காலம் காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா நடத்தப்படுகிறது. இந்தவேளையில், ஸ்ரீ கயிலாசநாதர் கோயில் புதிய அறங்காவலர் குழு, காரைக்காலில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், சமூக அமைப்புகள், அரசியல் தலைவர்கள் காரைக்கால் அம்மையாரின் புகழை உலகறிய செய்ய அவரின் தமிழ் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும், உலகமெங்கும் உள்ள அவரது கலைபொக்கிஷங்களையும் ஒன்றிணைத்து, உலகறிய செய்யவேண்டும். குறிப்பாக சொல்லப் போனால், காரைக்கால் அம்மையார் கோவில் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்று பொக்கிஷங்களை உலக நாடுகள்தோறும் திரட்டி சிறப்பு மியூசியம் அமைக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். | |
சோழர், பல்லவர் காலத்திலேயே செயல்பட்ட நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்தின் வரலாறு!! தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது. தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு, இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறினார். "பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்கள் 2,500 ஆண்டுகளாக தமிழகத்தின் துறைமுகங்களில் நங்கூரம் இட்டன. தமிழகத்தின் வணிகர்கள், வணிகக் குழுக்களாக இணைந்து பல்வேறு நாடுகளோடு வர்த்தகம் செய்ததாகக் கூறும் சு.இராசவேலு, "அவ்வகையில் நாகப்பட்டினம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக நகராக விளங்கி வந்திருக்கிறது," என்றார். அவரது கூற்றுப்படி, நாகப்பட்டினம் அயல் நாட்டு ஆய்வாளர்களால் நிகமா என அழைக்கப்பட்டது. கிரேக்கப் பயணியான தாலமி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள நிகமா என்னும் துறைமுக நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "நிகமா என்று அவர் குறிப்பிடும் துறைமுக நகரம் நாகப்பட்டினம்தான் என ஸ்காட்லாந்தை சார்ந்த நிலவியல் அறிஞரும் கடலோடியுமான கர்னல் யூல் கி.பி.1873ஆம் ஆண்டு அடையாளம் கண்டார். சங்க காலத்தில் காவேரிப்பூம்பட்டினம் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கி வந்ததால், சங்க கால இலக்கியங்களில் நாகப்பட்டினம் துறைமுகம் தொடர்பான செய்திகள் அதிகம் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் நிகமா என்னும் பெயர் நாகப்பட்டினத்தைக் குறிக்கலாம் என்ற குறிப்பிலிருந்து இக்கடற்கரை நகரம் கடல் வாணிகம் செய்து வந்த பெருவணிகர்களைக் கொண்டு விளங்கி வந்துள்ளதை அறிய முடிவதாக" கூறுகிறார் பேராசிரியர் சு.இராசவேலு. நிகமா என்னும் சொல் தமிழிக் கல்வெட்டுகளிலும், மட்கல ஓடுகளிலும் குறிக்கப்பட்டுள்ள வணிகக் குழுவோடு தொடர்புடையது. நிகமம் என்றால் பெருவணிகர்கள் வாழ்கின்ற ஊர் எனப் பொருள்படும். எனவே நாகப்பட்டினம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த வணிக நகரமாக விளங்கியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் இராசவேலு. கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராப் பாடல்களில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மாட மாளிகைகளையும் மணிமண்டபங்களையும் நெடிய மாடங்களையும் நீண்ட வீதிகளையும் கொண்டு, அலை தழுவும் நகரமாகவும் கோட்டை மதிலுடன் கூடிய நகரமாகவும் இந்நகரைப் பற்றி தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. இந்நகரில் பல வணிகர்கள் வாழ்ந்ததையும் பல நாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதையும் குதிரைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதையும் தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. தொடக்க கால கல்வெட்டுகளிலும் தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகை எனும் பெயரில்தான் வழங்கப்பட்டுள்ளது. நாகையில் சீனக் காசுககளும் சீனர்கள் பயன்படுத்திய பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்துள்ளன. இதனால், சீனாவிலிருந்து கப்பல்கள் இத்துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பின்னர் இலங்கைத் தீவிற்கும் பிற நாடுகளுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நாகப்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் உள்ள தனிக்கல் ஒன்றில் "நாகைப் பெருந்தட்டான்" என்ற பெயர் காணப்படுகிறது. கிபி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கும் பழமையான கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பல்லவர் கால எழுத்து வடிவில் இருக்கிறது. எனவே பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக நாகை விளங்கியிருக்கலாம் எனக் கூறுகிறார் சு.இராசவேலு. "தட்டான் என்பது உலோக வேலைப்பாடுகள் செய்கின்ற மக்களைக் குறிக்கும். சோழர் காலத்தில் நாகையில் தயாரிக்கப்பட்ட பல பௌத்த படிமங்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் சென்றுள்ளன." சிற்பிகளும் வணிகர்களும் வாழ்ந்த பகுதியாக இந்நகரம் இருந்திருக்கிறது என்பதை வரலாற்று, இலக்கிய, மற்றும் தொல்லியல் தரவுகள் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்நகரம் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான குடவையாறு மற்றும் உப்பனாறு ஆகிய ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், தேவாரத்தில் இந்நகர் "கழி சூழ் கடல் நாகை" எனக் குறிப்பிடப்படுகிறது. அப்பரும், சம்பந்தரும் நாகை துறைமுகத்தில் பல்வகை கலங்கள் நின்றிருந்ததைக் குறிப்பிடுவதுடன் இத்துறைமுகத்தில் கற்பூரமும் யானைகளும் கப்பல்களில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததையும் துறைமுக கண்காணிப்பாளர்கள் இவற்றுக்குச் சுங்கவரி வசூலித்ததையும் குறிப்பிடுகின்றனர். ஆரம்பத்தில் நாகை எனக் குறிப்பிடப்பட்ட இந்நகரம், சோழர் காலத்தில்தான் பட்டினம் என்னும் வார்த்தையுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என்ற பெயருடன் அழைக்கப்படலாயிற்று. நாகை என்னும் பெயர் கடல் சங்கைக் குறிக்கும் நாகு என்னும் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார் சு.ராசவேலு. பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்கள் தொன்மைத் துறைமுகமான காவேரிப்பூம்பட்டினத்தைத் தவிர்த்து நாகப்பட்டினத் துறைமுகத்திற்குச் சிறப்பிடம் அளித்தனர். இவர்கள் காலத்தில் இந்நகரம் மிகச் சிறந்த வணிக நகரமாகவும் சோழர்களின் கப்பற்படை இருந்த நகரமாகவும் விளங்கியது. முதலாம் பராந்தக சோழர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஈழத்தைக் கைப்பற்றி 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்னும் பட்டத்தை வைத்துக் கொள்கின்றார். எனவே இந்த மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே சோழர்கள் சிறந்ததொரு கப்பற்படையை வைத்திருந்துள்ளனர் என அறியலாம். அதன்மூலம் இலங்கையைக் கைப்பற்றியதுடன் இலங்கை அரசர்களுடன் நட்புறவு பாராட்டிய பாண்டியர்களையும் முதலாம் பராந்தக சோழர் வெற்றி பெற்றார். தொடர்ந்து சோழ மன்னன் ராஜராஜன் காலத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் நாகப்பட்டினத்தை சோழர்களின் சிறந்த துறைமுக நகரமாக மாற்றியதோடு பல கப்பல்களை அங்கிருந்து செலுத்தும் வகையில் நாகை துறைமுகத்தை விரிவுபடுத்தினார். கேரளப் பகுதியிலிருந்து வந்த வணிகர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் செல்ல நாகைப்பட்டினத் துறைமுகத்தையே பயன்படுத்தியுள்ளனர். நாகை அருகேயுள்ள கீழையூர் சிவன் கோவிலில் யவனர்கள் குறித்த முதல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழையூர் கைலாசநாதர் கோவிலில் கி.பி.1287ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் "யவனர் திடர்" என்ற சொற்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் யவனர்கள் பற்றிய சொல் பயன்பாட்டுடன் கூடிய முதல் கல்வெட்டு இதுதான். 'யவனர் திடர்' என்பது 'யவனர் திடல்' எனப் பொருள்படும். இது, யவனர்கள், அதாவது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்த வணிகர்கள் குடியிருந்த பகுதியாகக் கருதப்படுகிறது. முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் 900 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் ஆத்தூர், இடது கரையில் முக்காணி அமைந்துள்ளது. ஆற்றின் இடதுகரையில் ஒரு அறையை மட்டும் கொண்ட சிறிய விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளியே தென்புறத்தில் 5 அடி உயர தூண் நடப்பட்டுள்ளது. இந்த துண்ணில் வெள்ளை அடித்தும், கூடவே பெயின்டும் ஆங்காங்கே பூசப்பட்டிருந்தது. இதில் பழங்கால எழுத்துகள் தென்பட்டன. இந்நிலையில் ஆத்தூரை சேர்ந்த ராகுல், தூத்துக்குடி எஸ்ஐ ராஜ்குமார் ஆகியோர் தூணை சுத்தம் செய்து நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 2ம் ஆண்டு தொல்லியல் பட்ட மேற்படிப்பு மாணவல் மல்ராஜ், எழுத்துகளை படி எடுத்தார். அப்போது கல்வெட்டில் தமிழ் மொழியில் 29 வரிகள் பொறிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை உதவி பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். அவர்கள், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளதை தற்போதைய தமிழ் எழுத்து வடிவத்திற்கு மாற்றினர். அதில் ….நான் கெல்லை….கிடந்த உனை….மொழி நின்ற வெ என்று 29 வரிகள் உள்ளது. இதன் முடிவில் எழுத்து என்ற வார்த்தையுடன் முடிகிறது. அவர்கள் கூறுகையில், இந்த கல்வெட்டு தகவல்கள் 2 தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. 2ம் தூணை தான் கல்வெட்டின் முடிவில் “எழுத்து” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த 2ம் தூண் ஒரு முற்றுப் பெற்ற கல்வெட்டு எனவும், விண்ணகர என்ற பெருமாள் கோயில் பள்ளிக்குத் தானம் கொடுக்கப்பட்டதையும், கல்வெட்டு சற்று சிதிலமடைந்து உள்ளதால் ராயன் என்பவரின் முழுப் பெயரைச் சரியாக வாசிக்க முடியவில்லை எனவும், தமிழ் வடிவத்தின் அடிப்படையில் இந்தக் கல்வெட்டு சுமார் 900முதல் 1000ஆண்டுகள் பழமையானது என்றும் கூறினர். இந்த கல்வெட்டின் மூலம் இப்பகுதியில் ஒரு பெரிய பெருமாள் கோயில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது எனவும் தெரிவித்தனர். இந்த ஆய்வில் பங்கு பெற்ற பேராசிரியர்கள், மாணவர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றின் வலது கரையில் இருந்த ஒரே அறையை கொண்ட பெருமாள் கோயில் முன்பும் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு வட்டெழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மக்கள் சிதறு தேங்காய் உடைக்க பயன்படுத்தி வந்தனர். இந்தக் கல்வெட்டும் பெருமாள் கோயிலைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.காலி கோட்டையின் கதை 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1505-ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் துறைமுகத்தில் வந்து நின்ற போர்ச்சுக்கீசிய கப்பல் ஒன்றிலிருந்து இறங்கினார் ராணுவத் தளபதியான லாரென்சோ தெ அல்மெய்தா. அது ஒரு திட்டமிட்ட வருகையல்ல, கடலில் அந்தத் தருணத்தில் வீசிய புயலால், அங்கு வந்து சேர்ந்தார் என்றும் சில பதிவுகள் உண்டு. அப்போது அந்தப் பகுதி கோட்டே ராஜ்ஜியமாக அறியப்பட்டது. அந்த நாட்டின் அப்போதைய மன்னராக இருந்தவர் ஒன்பதாம் பராக்கிரமபாஹு. லாரன்ஸோ விரைவிலேயே மன்னருக்கு நெருக்கமானார். காலி துறைமுகத்தின் முக்கியத்துவம் போர்ச்சுக்கீசியர்களுக்கு புரிய ஆரம்பித்திருந்தது. இதனால், மன்னரிடம் அனுமதி பெற்று, 1541-ஆம் ஆண்டு வாக்கில் காலி பகுதியில் ஒரு கோட்டையையும் தேவாலயம் ஒன்றையும் கட்ட ஆரம்பித்தனர் போர்ச்சுகீசியர்கள். 1543-ஆம் ஆண்டு வாக்கில் கோட்டைக்குள்ளேயே ஃபிரான்சிஸ்கன் தேவாலயம் ஒன்றும் கட்டப்பட்டது. அந்தக் கோட்டை அப்போது மண்ணாலும் கட்டைகளாலும்தான் உருவாக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கொழும்பு நகரத்திலிருந்து செயல்படுவது சிறப்பாக இருக்குமென போர்ச்சுக்கீசியர்கள் அங்கு நகர்ந்தனர். ஆனால், கொழும்பின் மீது சீதாவாக்கையை ஆண்ட மன்னனான ராஜசிங்கன், தாக்குதல் நடத்திவந்ததால் மீண்டும் காலி நகரத்திற்கே நகர்ந்தனர் போர்ச்சுக்கீசியர்கள் ஆனால், விரைவிலேயே டச்சுக்காரர்களின் பார்வை காலி மீது திரும்பியது. 1640ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி காலி வளைகுடாவில் டச்சுப் படைகள் நுழைந்தன. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் காலி கோட்டையின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. முடிவில் 1640ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கோட்டை வீழ்ந்தது. இந்தக் கோட்டையைப் பிடிப்பதில் டச்சுப் படைகளுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டாலும்கூட, இலங்கையின் நறுமணப் பொருள் வர்த்தகத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த இது வழிவகுத்தது. கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, மண்ணாலும் கட்டைகளாலும் கட்டப்பட்டிருந்த பகுதிகளை அகற்றிவிட்டு காலி தீபகற்பம் முழுவதையும் உள்ளடக்கி கல்லாலான ஒரு கோட்டையைக் கட்ட முடிவுசெய்தனர். சிங்களர்களின் உதவியுடன் விரைவிலேயே கோட்டை உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்டையின் பரப்பு மட்டும் சுமார் 52 ஹெக்டேர். இந்தக் கோட்டையைச் சுற்றி 18 கொத்தளங்களும் இருக்கின்றன. இந்தக் கோட்டையின் பெரும்பாலான சுவர் பகுதிகள் 1663வாக்கில் கட்டி முடிக்கப்பட்டன. கடலை ஒட்டிய பகுதியிலும் கோட்டைச் சுவர் கட்டி முடித்த பிறகு, 1729-ஆம் ஆண்டு வாக்கில் தற்போதைய நிலையை எட்டியது இந்தக் கோட்டை. 1775-ஆம் ஆண்டு வாக்கில் கோட்டைக்குள் ஒரு புரொட்டஸ்டண்ட் தேவாலயம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்ட பிறகு வெகுகாலம் கோட்டை டச்சுக்காரர்கள் வசம் இருக்கவில்லை. கொழும்பு பிரிட்டிஷாரிடம் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, 1796-ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி காலி கோட்டையும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்குப் பிறகு தென்னிலங்கையின் நிர்வாக மையமாகவே விளங்கியது காலி. இந்தக் கோட்டை பிரிட்டிஷாரின் வசம் வந்த பிறகு, கோட்டைக்குள் புதிதாக பல இடங்கள் கட்டப்பட்டன. உதாரணமாக, கோட்டையைச் சுற்றியிருந்த அகழி நிரப்பப்பட்டது. புதிதாக இரும்பாலும் பிறகு சுண்ணாம்பாலும் கலங்கரை விளக்கம் ஒன்று கட்டப்பட்டது.இந்தக் கோட்டைக்கு இரண்டு வாயில்கள் இருக்கின்றன. ஒன்று 1669-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. இதை ஒட்டி ஒரு அகழியும் கீழே இறக்கி - ஏற்றும் வகையில் ஒரு பாலமும் இருந்தன. இந்த வாயிலுக்கு மேலே VOC (Vereenigde Oostindische Compagnie - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி) என்ற எழுத்துகளுடன் கூடிய முத்திரையும் இருந்தது. பிரிட்டிஷார் கோட்டையைக் கைப்பற்றியவுடன், இந்த முத்திரை கோட்டையின் உட்பக்கமாக மாற்றப்பட்டு, மூன்றாவது ஜார்ஜ் மன்னரின் முத்திரை பதிக்கப்பட்டது. கோட்டை பிரிட்டிஷார் வசம் வந்த பிறகு 1873-ஆம் ஆண்டில் புதிதாக ஒரு வாயில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாயிலே பிரதானமானதாக இருக்கிறது. இந்தக் கோட்டைக்குள் உள்ள கழிவுநீர் அகற்றும் வழிமுறை இப்போதும் வியக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, கடல் மட்டம் உயரும் போது, கடல் நீர் கழிவுநீர் கால்வாய்களுக்குள் புகுந்து அவற்றை அகற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷார் கொழும்பு நகருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, நாட்டின் தலைநகராக மாற்ற ஆரம்பித்தனர். இதனால், விரைவிலேயே காலி கோட்டையின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிகச் சிறந்த கோட்டை நகரங்களில் காலியே சிறந்த உதாரணமாக இருக்கிறது" என யுனெஸ்கோ குறிப்பிடுகிறது. இந்தக் காரணம் உள்ளிட்ட மேலும் பல காரணங்களால், இந்தக் கோட்டை தற்போது யுனெஸ்கோ மரபுரிமைச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கோட்டை கட்டப்பட்ட காலத்தில், கோட்டைக்குள்தான் பிரதானமான நகரம் அமைந்திருந்தது. தற்போதும் கோட்டைக்குள் பள்ளி, கல்லூரி, நீதிமன்றம், கடை வீதிகள், நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால், கோட்டைக்கு வெளியிலும் மிகப் பெரிய நகரம் இருக்கிறது. "இலங்கையில் உள்ள மிகப் பெரிய, விசாலமான கோட்டை இந்த காலி கோட்டைதான். உள்ளுக்குள்ளேயே 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. தற்போது உள்ள காலி நகரம் பிற்காலத்தில் உருவானது. அந்தக் காலத்தில் இருந்த காலி நகரம் என்பது கோட்டைக்குள் உள்ளே இருந்த நகரம்தான். இப்போதும் அது மிக சிறப்பான ஒரு நகரம்தான். காலி கோட்டைக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ள மிகப் பெரிய கோட்டை, யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டைதான். ஆனால், அதன் பெரும் பகுதிகள் சிதைந்துவிட்டன. ஆனால், இந்தக் கோட்டை மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளரான என்.கே. திருச்செல்வம். இந்தக் கோட்டைக்குள் போர்ச்சுக்கீசியர் கால, டச்சுக்காரர் கால புதையல்கள் இருப்பதாக கதைகள் உண்டு. ஆனால், அப்படி எதுவும் இதுவரை கிடைத்ததில்லை. போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என பல காலனியாதிக்க நாடுகளால் ஆளப்பட்ட இலங்கை, இந்த காலி கோட்டை தவிர, யாழ்ப்பாணக் கோட்டை, திருகோணமலையில் உள்ள ஃபிரெட்ரிக் கோட்டை, மட்டக்களப்புக் கோட்டை, மன்னாரில் உள்ள அரிப்புக் கோட்டை என பல கோட்டைப் பிரதேசங்களைக் கொண்டிருக்கிறது.
முந்தைய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலல்லாமல், பிரித்தானியர்கள் இந்தியா தொடர்பான சிலோனின் மூலோபாய நிலைப்பாட்டில் அதிக அக்கறை கொண்டிருந்தனர், எனவே தீவின் மீது அவர்களின் முடிவெடுப்பதில் விருப்பமும் வரவு செலவுக் கட்டுப்பாடுகளும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. 1796 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை ஆக்கிரமித்த பிறகு, முன்னாள் காலனித்துவ சக்தியால் பணியமர்த்தப்பட்ட ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்களான டச்சு பர்கர்களை நிர்வாகத்தில் பதவிகளில் அமர்த்தினார்கள், அவர்களுக்கும் பூர்வீக மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்தனர். வரலாற்றாசிரியர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி கொல்வின் ஆர் டி சில்வா, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சி இலங்கையின் ஆரம்ப காலகட்டம் (பக்205-208) பற்றிய தனது நினைவுச்சின்ன ஆய்வில், ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி எந்திரங்களை, பெரும்பாலும் தென்னிந்திய பூர்வீகக் குடிமக்களைக் கொண்டு வந்தனர் என்று குறிப்பிட்டார். முட்லியார் மற்றும் ஆராச்சி வகுப்புகளின் சொந்த "தலைவர்களை" மாற்றவும். இது 1797 இல் ஒரு கிளர்ச்சிக்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து பிரித்தானியர்கள் சமூகத்தின் உயரமான இடங்களில் பர்கர்களுக்கு துணையாக சலுகை பெற்ற சிறுபான்மையினரான "பூர்வீக மக்களை" உருவாக்கினர். இந்த சலுகை பெற்ற உயரடுக்கு சமூகத்தின் மிகவும் படித்த உறுப்பினர்களிடமிருந்து வந்தது, அவர்களில் விகிதாசார எண்ணிக்கையில் தமிழர்கள், வரலாற்றின் ஒரு விசித்திரமான சூழ்நிலையின் காரணமாக. அமெரிக்க மிஷனரிகள் டி சில்வாவின் சிலோன் பிரித்தானிய ஆக்கிரமிப்பின் படி, வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக தீவின் கல்விக்கான செலவீனங்களை பிரித்தானிய அரசாங்கம் குறைத்தபோது, கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கிறிஸ்தவ மிஷனரிகளையே பெரிதும் நம்பியிருந்தது. இந்த முயற்சியின் கணிசமான பகுதியானது, அமெரிக்க ஆணையாளர் சபையின் சுவிசேஷ முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கே யாழ்ப்பாணத்தில், 1813 இல், ரெவ. சாமுவேல் நியூவெல் அவர்களால் நிறுவப்பட்ட அமெரிக்கன் சிலோன் மிஷன் (ACM) மூலம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பணிகளுக்காக. 1788 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கர்கள் தீவுக்கு மசாலா வியாபாரிகள் மற்றும் திமிங்கல வியாபாரிகளாக வருகை தந்தாலும், பிரான்சுடன் நடந்து வரும் போரைக் காரணம் காட்டி, ஆங்கிலேயர்கள் அமெரிக்கர்களை வேறு இடங்களில் மதமாற்றம் செய்ய அனுமதிக்க மறுத்தனர் - இது 1809-1814 போரை விட நீண்ட காலம் நீடித்தது. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட நெப்போலியன் போர்களின் இறுதிக் கட்டம். விக்கிபீடியா வழியாக அமெரிக்க சிலோன் மிஷன் படத்தை நிறுவிய ரெவ் சாமுவேல் நியூவெல் 1816 ஆம் ஆண்டில், தமிழ் ஆதிக்கம் நிறைந்த வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘தில்லிப்பள்ளி’யில் (தெல்லிப்பள்ளை நகரம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்), இன்றைய யூனியன் கல்லூரியில் ஒரு பள்ளியை ACM நிறுவினார். 1823 ஆம் ஆண்டில், இலங்கையின் முதல் நவீன பல்கலைக்கழக அளவிலான கல்வி நிறுவனமான மட்டக்கோட்டை செமினரியை (இது யாழ்ப்பாணக் கல்லூரியாக உருவானது) வடக்கிலும் வட்டுக்கோட்டையில் திறந்து வைத்தார். அடுத்த ஆண்டு, பிரபல ஏசிஎம் மிஷனரி ஹாரியட் வின்ஸ்லோ (பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் ஃபோஸ்டர் டல்லெஸ் மற்றும் சிஐஏ தலைவர் ஆலன் வெல்ஷ் டல்லஸ் ஆகியோரின் மூதாதையர்) உடுவில் பெண்கள் கல்லூரி, ஆசியாவின் முதல் பெண்கள் உறைவிடப் பள்ளியான வடக்கில், தமிழ் ஆதிக்கம் செலுத்தினார். 1848 ஆம் ஆண்டில், அமெரிக்க மருத்துவரும் மிஷனரியுமான டாக்டர் சாமுவேல் ஃபிஸ்கே கிரீன் சிலோனில், மானிப்பாய்வில் முதல் நவீன மருத்துவப் பள்ளி மற்றும் போதனா மருத்துவமனையை (தெற்காசியாவின் இரண்டாவது நவீன போதனா மருத்துவமனை, பின்னர் பசுமை நினைவு மருத்துவமனை என்று அறியப்பட்டது) - மீண்டும், தீவின் வடக்கு பகுதி. ACM 1820 இல் வடக்கில் முதல் அச்சகத்தை நிறுவியது மற்றும் 1841 இல் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாள், மார்னிங் ஸ்டார், அங்கும் தொடங்கியது. | |
ஊரும் அதன் முன் பெயர்களும் ஆறுக்காடு - ஆற்காடு ஏரிக்காடு - ஏற்காடு ஈரோடை - ஈரோடு ஒத்தைக்கால் மண்டபம் - உதகமண்டலம் - ஊட்டி கருவூர் - கரூர் குன்றூர் - குன்னூர் குடந்தை - கும்பகோணம் குளிர் தண்டலை - குளித்தலை கோவன்புத்தூர் - கோயம்பத்தூர் கோவை வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு பொழில் ஆச்சி - பொள்ளாச்சி புளியங்காடு - திண்டிவனம் தன்செய்யூர் - தஞ்சாவூர் - தஞ்சை சேரலம் - சேலம் தகடூர் - தர்மபுரி திண்டீஸ்வரம் - திண்டுக்கல் திருஆவினன்குடி - பழனி திருச்சீரலைவாய் - திருச்செந்தூர் தில்லை - சிதம்பரம் நாலுக்கோட்டை - சிவகங்கை மதிரை - மதுரை ஆரைக்கல் - நாமக்கல் புதுகை - புதுக்கோட்டை புதுவை - பாண்டிச்சேரி செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு தர்மபுரம் - தாம்பரம் செருந்தணிகை - திருத்தணி உகுநீர்க்கல் - புகைநற்கல் - ஒகேநக்கல் மதராசப்பட்டினம் - சென்னை பெரும்புலியூர் - பெரம்பலூர் | |
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு 04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி. 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம். 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. 08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. 09. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீரத் தேக்கம். 10. ஓடை - (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். 11 கட்டும் கிணக்கிணறு – (Built-in -well) சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு. 12. கடல் - (Sea) சமுத்திரம். 13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர். 14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன்னெ 9ச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு. 15. கால் – (Channel) நீரோடும் வழி. 16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி. 17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை. 18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை. 19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை. 20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம். 21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு. 22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று 23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை. 24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு. 25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம். 26. வாளி – (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை. 27. கேணி – ( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு. 28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை. 29. சுனை- (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை. 30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம். 31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்புறமும் கட்டப்பட்ட குளம். 32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை. 33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும். 34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும். 35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம். 36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம். 37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு. 38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும். 39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு. 40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு. 41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை. 42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம். 43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு. 44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது. 45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால். 46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம். 47 வாய்க்கால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள். | |
ஆடிப்பிறப்பு
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு
வறுத்துக்குத்திச் செந்நெல்பச்சை அரிசி இடித்துத் தள்ளி, வேண்டிய
தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, வில்லை
வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக்
கலவையை உள்ளே இட்டு பூவைத்
துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு குங்குமப்
பொட்டிட்டு பூமாலை சூடியே குத்து
விளக்குக் கொளுத்தி வைத்து வண்ணப்
பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு வாழைப்
பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை
அறுத்துத் தின்போம் ஆடிப்பிறப்புக்கு
நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே நவாலியூர் சோமசுந்தரப் புலவர் | |
ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வின் அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் "தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. அதைத்தொடர்ந்து 1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்கதேசத்து அறிஞர் பானர்ஜி சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என கூறினார். இதனால் உலகமே ஆதிச்சநல்லூரை வியந்து பார்த்தது. ஆனாலும் ஆதிச்சநல்லூர் தொடர்பான முறையான அகழாய்வு அறிக்கை வரவில்லை. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை மூலமாக 2004-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வை சத்திய மூர்த்தி தலைமையிலான தொல்லியல் துறையினர் செய்தனர். ஆனால் இந்த அகழாய்வின் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்நிலையில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வின் அறிக்கையை மத்திய தொல்லியல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அறிக்கையை முறைப்படி வெளியிடாமல் இணையவழியில் வெளியிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அதிகாரி சத்தியபாமா பத்ரிநாத் தயாரித்த 293 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் 2004-ல் ஆத்திச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்த முழுமையான விபரங்கள், அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பொருட்களின் பட்டியல் படங்களுடன் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா என்பதற்கான பதிலும் கிடைத்துள்ளது. முத்துகுளிக்கும் மக்களுக்கு ஒருவித நோய் வரும். அந்த நோயால் பாதிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களே இந்த நெற்றிகண் மனிதர்கள் என சத்தியபாமா தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. | |
நாவலன்தீவு""குமரிக்கண்டம்.
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் நாவலன்தீவு" என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்" ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில் "கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன்" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!! இந்திய அரசு வெளிக்கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம். தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே ! | |
(EPRLF)பத்மநாபா வரலாறு ![]() பத்மநாபா 1960 களின் பிற்பகுதியில் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டினார். தரநிலைப்படுத்தலின் பாரபட்சமான கொள்கையின் எதிர்வினையாக 1972 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் கூட்டமைப்பு / தமிழ் மாணவர் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருந்தார்.1974 தமிழ் மாநாட்டு சம்பவம் பத்மநாபத்தை மேலும் தீவிரப்படுத்தியது. ELO 1974/75 ஆம் ஆண்டில் பத்மநாபாவும் மற்றவர்களும் ஈழம் விடுதலை அமைப்பை (ஈழ விடுதலை இயக்கம்) (ELO) நிறுவினர். மே 10, 1976 அன்று, புலோலியில் உள்ள புலோலி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வங்கியை ELO அமைப்பு கொள்ளையடித்தது. பத்மநாபா தனிப்பட்ட முறையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருந்தார்.இந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களில் வரதராஜ பெருமாள் (பின்னர் வட கிழக்கு மாகாண முதலமைச்சர்) வி. பாலகுமாரன் (பின்னர் மாணவர்களின் ஈழம் புரட்சிகர அமைப்பின் தலைவர்) மற்றும் எஸ்.தவராஜா (பின்னர் ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.பி. மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்) வடக்கு மாகாண சபை).கொள்ளைக்குப் பிறகு பத்மநாபா இந்தியா ஓடிவந்தார். அதே நேரத்தில் பாதுகாப்பு ஒடுக்குமுறை காரணமாக ELO அமைப்பு சிதைந்தது. GUES / EROS கணக்கியல் படிப்பதற்காக பத்மநாபா 1976 இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.இங்கே அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மற்ற தமிழர்களை சந்தித்தார். அவர்கள் ஒன்றாக ஈழம் மாணவர்களின் பொது ஒன்றியம் (GUES) மற்றும் மாணவர்களின் ஈழம் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகியவற்றை உருவாக்கினர். லண்டனில் உள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதியான ஹம்மாமி உதவியுடன் பத்மநாபா உள்ளிட்ட ஒரு சிறிய குழு லெபனானில் இராணுவப் பயிற்சி பெற உதவினார். 1978 ஆம் ஆண்டில் அவர் GUES / EROS க்கான ஒரு தளத்தை நிறுவ இந்தியா சென்றார்.பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்பினார் ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரைத் தேடிக்கொண்டிருந்தனர் எனவே அவர் மாறுவேடத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா மற்றும் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் 1981 இல் ஈரோஸை விட்டு வெளியேறி தங்கள் சொந்த போராளிக்குழுவை உருவாக்கி ஈள மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) என்று அழைக்கப்படுவார்கள்.புதிய குழுவை நிறுவுவதற்காக பத்மநாபா 1981 ஆம் ஆண்டில் இந்தியாவின் மெட்ராஸில் உள்ள கோடம்பகம் சென்றார். 1982 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எஃப் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மக்கள் விடுதலை இராணுவத்தை உருவாக்கியது. பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியால் பி.எல்.ஏ இராணுவப் பயிற்சி ஆரம்பம்.அதனைத் தொடர்ந்து ஈழத்திலும் வடக்குக்கு கிழக்கில் தற்கொடைப் பயிற்சி மற்றும் இரானுவப் பயிற்சிகள் தொடர்ந்தன. 1986 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஈபிஆர்எல்எவ் தலைமைக்கு இடையிலான மோதல்கள் ஈபிஆர்எல்எஃப் (ரஞ்சன்) மற்றும் ஈபிஆர்எல்எஃப் (டக்ளஸ்) என இரு பிரிவுகளாகப் பிரிந்தன. டிசம்பர் 1986 இல், போட்டியாளர்களான தமிழீழ விடுதலை புலிகள் இலங்கையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மீது தாக்குதல் நடத்தியது, பெரும் இழப்பை ஏற்படுத்தியது மற்றும் சாவகச்சேரி நுனாவிலில் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவத் தளபதியான கபூரைக் கொன்றது.பல ஈபிஆர்எல்எவ் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் ஈபிஆர்எல்எஃப் முகாம்கள் மற்றும் ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. தோல்விக்கு தோழர் டக்லஸ் தேவானந்தா குற்றம் சாட்டப்பட்டார். 1987 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எவ் (டக்ளஸ்) பிரிவு முறையாக ஈபிஆர்எல்எப்பிலிருந்து பிரிந்தது. இது ஆரம்பத்தில் பரந்தன் ராஜன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் பிரிந்த பிரிவைக் கொண்டு ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை உருவாக்கியது, ஆனால் பின்னர் தன்னை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாக மாற்றியது. அரசியல் கட்சி இராணுவ தோல்வியின் பின்னர், ஈபிஆர்எல்எவ் தன்னை அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் (ஐ.பி.கே.எஃப்) தன்னை இணைத்துக் கொண்டது. ஈபிஆர்எல்எஃப் அரசியலில் முதன் முதலில் நுழைந்தது 1988 மாகாண சபை தேர்தல்களில் குறைபாடுடையது. ஐ.பி.கே.எஃப் உதவியுடன் ஈபிஆர்எல்எவ் வடகிழக்கு மாகாண சபையின் 71 இடங்களில் 41 இடங்களைப் பெற்றது. [4] டிசம்பர் 10, 1988 அன்று வரதராஜா பெருமாள் வடகிழக்கு மாகாண சபையின் முதல் முதல்வரானார். ஈபிஆர்எல்எஃப் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை அமைப்பு மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது. கூட்டணி 188,593 வாக்குகளை (3.40%) வென்றது, பாராளுமன்றத்தில் 225 இடங்களில் 10 இடங்களைப் பிடித்தது. 10 கூட்டணி எம்.பி.க்களில் 7 பேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அக்டோபர் 1987 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எஃப்) இடையே சண்டை வெடித்ததைத் தொடர்ந்து, இந்தியா சார்புடையதாகக் கருதப்பட்ட ஈபிஆர்எல்எவ்க்கு எதிரான புலிகளின் விரோதப் போக்கு அதிகரித்தது.எல்.ரீ.ரீ.ஈ 1998 வடகிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. போட்டியிடும் எவரும் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்கள்.ஆயினும்கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப் போட்டியிட்டது இந்திய இராணுவமான ஐ.பி.கே.எஃப் ஒத்துழைப்புடன் வடகிழக்கு மாகாண சபையின் 71 இடங்களில் 41 இடங்களைப் பெற்றது. தோழர் வரதராஜ பெருமாள் வடகிழக்கு மாகாணத்தின் முதல்வரானார். மார்ச் 1, 1990 அன்று ஐ.பி.கே.எஃப் இலங்கையிலிருந்து விலகத் தயாராகி கொண்டிருந்தபோது தோழர் வரதராஜப் பெருமாள் வட கிழக்கு மாகாண சபையில் ஒரு சுயாதீன ஈழம் என்று அறிவித்து ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். ஐ.பி.கே.எஃப் வெளியேறியவுடன் மீண்டும் புலிகளால் ஏற்படும் விளைவுகளுக்கு பயந்து, ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமை இந்தியாவுக்கு தப்பி ஓடியது.மார்ச் 11 1990 அன்று பத்மநாபா திருகோணமலையில் இருந்து புவனேஸ்வரிற்கு ஒரு இந்திய இராணுவ விமானத்தில் பறக்கவிடப்பட்டார்.ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மார்ச் 25, 1990 அன்று வடகிழக்கு மாகாணத்தில் நேரடி ஆட்சியை விதித்தார் ஜூன் 19, 1990 மாலை, ஈ.டி.ஆர்.எல்.எஃப் மத்திய குழு கோடம்பாக்கத்தில் உள்ள சாக்ரியா காலனியில் ஒரு பிளாட்டில் சந்தித்தது.இரவு 7 மணியளவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் பிளாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். தோழர் பத்மநாபா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.யோகசங்கரி, மாகாண அமைச்சர் பி.கிருபகரன் உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இலங்கை போராளிகள் இயக்க தலைவர் பத்மநாபா உள்பட 15 பேர் சுட்டுக்கொலை இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களில் "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி" (ஈ.பி.ஆர். எல்.எப்.) என்ற போராளிகள் இயக்கம் ஒன்று. இந்த அமைப்பின் பொதுச்செயலாளராக பத்மநாபா இருந்து வந்தார். இலங்கையில் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ் மாநிலத்தில் ஆளும் கட்சியாக ஈ.பி.ஆர்.எல்.எப். இருந்து வந்தது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜபெருமாள் முதல் அமைச்சரானார். பத்மநாபா போராளி இயக்கப் பணிகளை கவனித்து வந்தார். பத்மநாபாவின் "ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை கோடம்பாக்கம் ஜக்ரியா காலனியில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இலங்கையில் இருந்து அமைதிப்படை வாபஸ் ஆனதும், ஈ.பி.ஆர். எல்.எப். இயக்கத்தின் தலைவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். பத்மநாபாவும், அவருக்கு நெருக்கமானவர்களும் இந்தியாவுக்கு வந்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் பத்மநாபா டெல்லி சென்றுவிட்டு, சென்னைக்கு திரும்பினார். கோடம்பாக்கம் ஜக்ரியா காலனியில் உள்ள வீட்டில் தங்கினார். தாக்குதல் 19.61990 அன்று இரவு 7 மணி அளவில் ஜக்ரியா காலனிக்கு 2 அம்பாசிடர் கார்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் நவீன ரக துப்பாக்கிகளுடன் காரில் இருந்து இறங்கி, 2 வது மாடியில் பத்மநாபா தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது பத்மனாபாவுடன், இலங்கை தமிழ் மாநில நிதி மந்திரியாக இருந்த கிருபாகரன் உள்பட பலர் பேசிக்கொண்டிருந்தனர். மூடப்பட்டிருந்த கதவை மர்ம மனிதர்கள் தட்டினார்கள். கதவு திறக்கப்பட்டதும் அவர்களை நோக்கி மர்ம மனிதர்கள் இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இந்த சத்தத்தைக் கேட்டு, ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகத்தில் இருந்த போராளிகள் மாடிக்கு ஓடி வந்தனர். அவர்கள் மீதும் மர்ம மனிதர்கள் சரமாரியாக சுட்டனர். 10 நிமிட நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தி விட்டு அவர்கள் காரில் தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் பத்மநாபா உள்பட 13 பேர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார்கள். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 15 ஆனது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 13 பேர் போராளிகள். 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- 1. பத்மநாபா (வயது 40) ஈ.பி.ஆர். எல்.எப். தலைவர், யாழ்ப்பாணம். 2. கிருபாகரன் (36) இலங்கை தமிழ் மாநில நிதி அமைச்சர். காரைத்தீவு, மட்டக்களப்பு. 3. யோகசங்கரி (38) பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம். 4. கமலன் (25) அலுவலக பொறுப் பாளர், மருதமுனை, மட்டக்களப்பு. 5. ரவி (29) மாகாண சபை உறுப்பினர், மட்டக்களப்பு. 6. அன்பு முகுந்தன் (28) மாகாணசபை உறுப்பினர், அன்புவழிபுரம், திரி கோணமலை. 7. கோமளராஜா (39) மாகாணசபை உறுப்பினர், சூரியாலேன், மட்டக் களப்பு. 8. லிங்கன் (27) மெய்க்காப்பாளர், தம்பலகாமம், திருகோணமலை. 9. புவிநாதன் (19) ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், 10ம் வட்டாரம், திரி கோணமலை. 10. ஜெசிந்தா (28) ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், காரைத்தீவு, மட்டக்களப்பு. 11. கவிதா (24) ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், சேனைகுடியிருப்பு, கல்முனை, மட்டக்களப்பு. 12. தருமன் (25) ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், காரைத்தீவு, மட்டக்களப்பு. 13. ரமேஷ் (32) ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர். 14. ரமேஷ், சென்னையைச் சேர்ந்த வட்டிக்கடை அதிபர். 15. நீலகண்டன் (22) சென்னை வேளச்சேரி. டூரிஸ்ட் கார் டிரைவர். இவர் பத்மநாபாவுக்கு வாடகை கார் ஓட்டினார். பத்மநாபா தங்கி இருந்த மாடியில் இவரும் நின்று கொண்டிருந்தார். தாக்குதலில் குண்டு பாய்ந்து நீலகண்டனும் உயிர் இழந்தார். மேலும் 20 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் "டி 56" ரக நவீன துப்பாக்கியை பயன்படுத்தினார்கள். சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போர்க் களம் போல காட்சி அளித்தது. பத்மநாபா தங்கி இருந்த அறையில் அவரையும் சேர்த்து 7 பேர்களின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. மற்ற உடல்கள் மெயின் ரோட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. 400 துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் கிடந்தன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது முதல் அமைச்சர் கருணாநிதி டெல்லியில் இருந்தார். முதல் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த கருணாநிதிக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:- "எந்த சகோதர யுத்தம் தமிழ் ஈழத்தில் நடைபெற கூடாது என கடந்த ஆண்டு சுமார் 70 நாட்கள் போராளி குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேனோ அந்த சகோதர யுத்தத்தை தமிழ்நாட்டிலேயே அவர்கள் நடத்தி சென்னை நகரில் ரத்த ஆறு பெருக்கெடுக்க செய்து விட்டார்கள். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த இயக்கத்தை சேர்ந்த போராளியாக இருப்பினும் அவர்கள் தமிழ்நாட்டில் உலவிக் கொண்டு இருந்தால் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கிற நிலை, இதனை ஒட்டி உருவாகும் என்பதால் முன் எச்சரிக்கையாக அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கு மாறு காவல் துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது." இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராளிகளை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர். மொத்தம் 396 பேர் பிடிபட்டார்கள். பின்னர் அவர்களில் பெண்களும், குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டனர். மீதி இருந்த 181 போராளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். பத்மநாபாவை சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் தப்பியதாக கருதப்பட்டது. இதுபற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. போராளிகள் வரும் காரை மடக்கி பிடிக்க உத்தரவிடப்பட்டது. சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் அதாவது இரவு 8.45 மணி அளவில், தாம்பரத்தை அடுத்த கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) வேகமாக வந்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை போட்டனர். சிட்டிபாபு என்ற போலீஸ்காரர் காருக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது காரில் 4 பேர் துப்பாக்கியுடன் இருந்தனர். காரை மெதுவாக நகர்த்தி போலீஸ்காரர் சிட்டிபாபுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டிச்சென்று தப்பிவிட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சின்னமனை கிராமத்தில் ஒரு வெள்ளை நிற மாருதி வேன் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சுப்பையா பிள்ளை என்பவரின் தோட்டத்தில் வைக்கோலால் மூடி மறைக்கப்பட்ட நிலையில் வெள்ளை நிற மாருதி வேன் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். "ஏர் கண்டிஷன்" வசதி செய்யப்பட்டிருந்த அந்த வேனை போலீசார் கைப்பற்றினார்கள். சுப்பையா பிள்ளையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அதிகாலையில் அந்த காரில் இயந்திர துப்பாக்கி களுடன் 6 பேர் வந்ததாகவும், பகல் 2 மணி வரை தோட்டத்தில் தங்கி இருந்துவிட்டு, இலங்கையில் இருந்து7 பேருடன் வந்த விசைப்படகு ஒன்றில் தப்பி சென்றனர் என்றும் தெரியவந்தது. எனவே சென்னையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவர்களாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. டெல்லிக்கு சென்றிருந்த கருணாநிதி விமானம் மூலம் 20 ந்தேதி பிற்பகல் 3.40 மணிக்கு சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேராக ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வந்தார். துப்பாக்கி சூட்டில் பலியான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்ம நாபா, இலங்கை வடகிழக்கு மாநில கவுன்சில் மந்திரி கிருபாகரன் முதலியவர்களின் உடல்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன. அந்த உடல்கள் மீது கருணாநிதி மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர், கருணாநிதி கூறும்போது, "இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவிப்பணம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார். பத்மநாபா உள்பட 13 போராளிகளின் உடல்களும், 22 ந்தேதி காலை பெரிய ஆஸ்பத்திரியில் இருந்து வேன் மூலம் சென்னை அரசினர் தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. ராஜாஜி மண்டபத்துக்கு அருகே உள்ள பழைய கவர்னர் மாளிகை முகப்பில் 13 பேரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தன. பத்மநாபாவின் மனைவி ஆனந்தி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். கதறி அழுதபடியே சென்று கணவரின் காலைத்தொட்டு வணங்கினார். சுட்டுக் கொல்லப்பட்டபோது பத்மநாபாவுக்கு வயது 40. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் முதலில் ஈழம் போராளிகள் அமைப்பான "ஈராஸ்" இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை தொடங்கினார். இலங்கை தமிழ் பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டபோது போராளிகள் குழு தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தன. பத்மநாபாவும் சென்னை வந்தார். பிறகு அவர் இலங்கை திரும்பவில்லை. அப்போது சென்னையில் கல்லூரி மாணவியாக இருந்த ஆனந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ந்தேதி இவர்கள் திருமணம் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. பத்மநாபா கொல்லப்பட்ட போது ஆனந்தி வீட்டில் இல்லை. கடைக்குச் சென்றிருந்தார். இதனால் ஆனந்தி உயிர் தப்பினார். | |
ஸ்ரீ" ரெலோ சபாரத்னம் 28 ஆகஸ்ட் 1952 இல் பிறந்தார்.1972 மற்றும் 1975 க்கு இடையில் அரசாங்கக் காவலில் இருந்தபோது, அவரது சிறைச்சாலை அவரை "உயரமான ஸ்ரீ" என்று அழைத்தார், அவரை காவலில் உள்ள மற்றொரு ஸ்ரீயிலிருந்து வேறுபடுத்தினார்கள். மார்ச் 25, 1981 அன்று வடமராச்சியில் பணம் சேகரித்த பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய மக்கள் வங்கி வேன் நீர்லியில் உள்ள யாழ்ப்பாண பருத்தித்துறை சாலையில் 8 மில்லியன் பணம் கொள்ளையடுக்கப்பட்டது. என்.தங்கவேலு (மாற்று தங்கதுரை), எஸ்.யோகச்சந்திரன் (மாற்று குட்டிமானி), செல்வதுரை சிவசுப்பிரமணியம் (மாற்றுத் தேவன்), நவரத்னரா (நடராஜா) சிவபதம் (அல்லது சிவபாலன் மாஸ்டர்) மற்றும் வைதிலிங்கம் நடேசதன் ஆகியோருடன் கைது செய்யப்பட்டனர். சபாரத்னம் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டது.கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நவம்பர் 2, 1982 அன்று தொடங்கியது, 1983 பிப்ரவரி 24 அன்று ஆறு பிரதிவாதிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஜூலை 1983 இல் வெலிடை சிறை படுகொலையின் போது தங்கத்துரை மற்றும் குட்டிமானி கொல்லப்பட்ட பின்னர் ஸ்ரீ சபாரத்னம் டெலோவின் தலைவரானார். ஏப்ரல் 1986 இல், தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) டெலோவை தடைசெய்து அதன் தலைவர் ஸ்ரீ சபரத்தினத்தை கொலை செய்யத் தொடங்கினர்.கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் பிரதான தளத்திலிருந்து நீர்வெலி வழியாக பின்னர் கோபாய் மற்றும் இறுதியாக கொண்டவில் வரை தப்பி ஓடினார்.அவர் கொண்டவிலில் இருப்பதை எல்.ரீ.ரீ.ஈ கண்டுபிடித்தது. அவர்கள் கிட்டு தலைமையில் அந்த பகுதியை சுற்றி வளைத்து வீடு வீடாக தேடலைத் தொடங்கினர். உரத்த ஹெயிலர்களைப் பயன்படுத்தி உள்ளூர்வாசிகளுக்கு சபாரத்னத்தை பாதுகாப்பவர்களுக்கு மரண தன்டனை என எச்சரித்தனர்.மே 6, 1986 அன்று எல்.ரீ.ரீ.ஈ உரும்பராய் புகையிலைத் தோட்டத்தில் சபாரத்னத்தை கண்டு பிடித்து அவர் தப்பிப்பதைத் தடுக்க கிட்டு அவரை காலில் சுட்டார். சபாரத்னம் தனது வாழ்க்கைக்காக கிட்டுவிடம் மன்றாடினார் ஆனால் கிட்டு ஒரு இயந்திர துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரை சுட்டுக் கொன்றார்.சபாரத்னத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு கோண்டவில் பஸ் ஸ்டாண்டில் மக்கள் முன் காட்டப்பட்டது. தோழர்களே எமக்காய் எம் மக்களுக்காய் போராடிய நீங்கள் என்றும் உயர்வானவர்களாய் மரியாதை செலுத்துவோம்.தமிழரின் தாகம் தமிழீழத்தாகம். | |
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் ‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார். தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார். 1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 வைகாசித்
திங்கள் 18ம் நாள் சண்முகநாதன்
என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர்
இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி
அரசால் ‘தமிழின அழிப்பு” ஒன்று
இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி
முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள்
பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர்
கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார். 1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர். 1978 வைகாசி 19ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது. 1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் Nஐ.ஆர். nஐயவர்த்தனா அரசு ‘புதிய அரசியலமைப்பை” உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர். 1979 ஆடி
20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள்
தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை” அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின்
மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி
தனிமைச் சிறையில் வைக்கமுடியும். சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார். இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. 1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது. இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர். 1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது. 1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர். 1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர். 1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார். 1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர். 1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். விடுதலை புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இசுரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் (Roppitokkal) தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, புலனாய்வுத்துறை (ஐந்தாம்படை) 1990களுக்கு முன்னர் இதன் பெயர்: புலி இயக்கப் பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை [Tiger Organization Security Intelligence Service] - TOSIS புலனாய்வுத்துறை தாக்குதலணி பன்னாட்டுப் புலனாய்வு அணி தேசிய புலனாய்வுப்பிரிவு தகவல் சேகரிப்புப்பிரிவு ஆய்வு மற்றும் வெளியீட்டுப்பிரிவு பயிற்சி மற்றும் தொழில்நுட்பப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு விசேட செயற்பாட்டுப் பிரிவு படையப் புலனாய்வுப்பிரிவு தரைப்படை தகவல் சேகரிப்புப்பிரிவு கடற்படை தகவல் சேகரிப்புப்பிரிவு வான்படை தகவல் சேகரிப்புப்பிரிவு நிருவாகம் மற்றும் அறிக்கைப்பிரிவு உள்ளகப் புலனாய்வுப்பிரிவு வெளியகப் புலனாய்வுப்பிரிவு நிருவாகப் புலனாய்வுப்பிரிவு நிதிப் புலனாய்வுப்பிரிவு உளவியல் செயற்பாட்டுப்பிரிவு முகவர்கள் மறைமுக உறுப்பினர்கள் இரகசிய நடவடிக்கை அணிகள் கபிற்றல் ஹீரோஸ் - கொழும்பு (1990 களின் தொடக்கம்) ஈழப்படை - 1994 கொழும்பு எல்லாளன் படை - தென்னிலங்கை (ஈழப்போர் முடியும் மட்டும்) சங்கிலியன் படை - யாழ்ப்பாணம் (1996 - 2001) சீறும் படை - மட்டு-அம்பாறை (2008) பொங்கி எழும் மக்கள் படை - யாழ்ப்பாணம் & மட்டு - அம்பாறை (2005 - 2007) குளக்கோட்டன் படை - திருகோணமலை (2001) பண்டாரவன்னியன் படை - வவுனியா & மன்னார் (2000 & 2001) புதிய வன்னியன் படை - வவுனியா (சமாதான காலத்தில்) தேசிய மண் மீட்புப் படை - மட்டக்களப்பு (2006) ஊடுருவல் முறியடிப்புப்பிரிவு புலனாய்வு பயிற்சி மையம் கல்விக்குழு தமிழீழப் போக்குவரவுக் கண்காணிப்புப்பிரிவு
| |||||
1544 ஆம் ஆண்டு மன்னாரில் சங்கிலியனும் அவனின் குண்டர் படையும் 600 க்கு மேற்பட்ட தமிழ் கிறிஸ்தவர்களை சகோதர படுகொலை சம்பவம் போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பனியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது The massacre of about 600 to 700 Christians in Mannar in 1544 by Cankili போர்த்துகீசிய அரசி Queen Catherine இந்த படுபாதக செயலுக்கு காரணமான சங்கிலியனையும் அவன் பரிவாரங்களையும் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.1544 ஆம் ஆண்டு இலங்கையை ஆண்டது ஒரு போர்த்துகீசிய அரசி அல்ல. ஏழாம் புவனேகபாகு (King Bhuvanekabahu VII) கோட்டை இராச்சியத்தின் மன்னராக இருந்தார். அதே ஆண்டில், போர்த்துக்கேயரின் செல்வாக்கு மற்றும் ஆதரவுடன் மன்னாருக்கு (Mannar) அருகில் வாழ்ந்த டொனா கிளாரா (Dona Clara) என்பவர் அப்பகுதியில் ஒரு சிற்றரசியாக அறியப்பட்டார் இந்த பணியை நிறைவேற்றுவதற்கு போர்த்துகீசிய வைஸ்ரோய் Viceroy Dom Constantino de Bragança தலைமையில் from Goa to Jaffna with 20 galleys, 10 galiots, and 70 ships. The forces consisted of 1,200 soldiers; September 1560 கோவாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தனர் இவர்களை (யாழ்ப்பாணம் )கொழும்பு துறையில் எதிர்கொண்ட சங்கிலியன் படைகள் சண்டையில் தோற்று கோப்பாய் பற்றை காடுகளை நோக்கி ஓடி தப்பினார்கள். அங்கும் போர்த்துகீசிய படைகள் சென்று அவர்களின் இருப்பிடங்களை தீவைத்து கொளுத்தியது கோப்பாயிலும் பாதுகாப்பு கேள்வி குறியானதும் சங்கிலியன் படை வன்னி காட்டுக்கு தப்பி ஓடிச்சென்றது. பின்பு அங்கிருந்து கொண்டே போர்த்துகீசிய வைஸ்ரோய்க்கு ஒரு சமாதான தூது அனுப்பினான் கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவனின் குணம் இவனின் தூதை போர்துகீசிய அரசி ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் வைஸ்ரோய் வேறு விதமாக கணக்கு போட்டார் இவனை கொல்வதிலும் பார்க்க இவனை கொண்டு பல காரியங்களை செய்து கொள்ளலாம் என்று கருதினார். ஒரு போர்த்துகீசிய அரசு அதிகாரி என்பதைவிட இப்போது கிழக்கிந்திய வர்த்தக கம்பனி அதிகாரியாக சிந்தித்தார், இவன் மூலம் பெறக்கூடிய வரி கப்பம் போன்றவற்றை கூட்டி கழித்து பார்த்தார். சங்கிலியனின் சமாதான கோரிக்கையை ஏற்று கொண்டார் ஒரு இடத்தில சங்கிலியனை சந்தித்து இரு முதலியார்கள் மற்றும் உள்ளூர் பெரிய நாட்டாமை ஆகியோரின் முன்னிலையில் இருவரும் கைச்சாத்திட்டனர் அந்த ஒப்பந்தம் பின்வருமாறு : மன்னார் தீவு மற்றும் மேற்குக் கடற்கரையின் கட்டுப்பாடு போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்கப்படும். சங்கிலியன் மற்றும் அவனின் படைகளுக்குத் துப்பாக்கிகள் மற்றும் பிற வெடி ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி கிடையாது. சங்கிலியன் எந்த காரணம் கொண்டும் அயல் படைகளின் உதவிகளை பெறுவதற்கு அனுமதி கிடையாது போர்த்துகீசியப் படைகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும். அதற்கு சங்கிலியன் படை எந்த தொந்தரவையும் கொடுக்காது.. சங்கிலியனிடம் பாதுகாப்புக்காக கொடுக்க பட்டிருந்த கோட்டை அரசனின் தந்தையின் மறைக்கப்பட்ட கருவூலம் போர்த்துகீசியர்களிடம் ஒப்படைக்க சம்மதித்தான். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யானைகள் போர்த்துகீசியர்களுக்குக் காணிக்கையாக சங்கிலியனும் அவனின் பரிவாரங்களும் வழங்கவேண்டும்.. என்ன காரணம் கொண்டும் கத்தோலிக்க சமயப் பணிக்கு சங்கிலியன் தடையாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. ஒப்பந்தத்தின் விதிகளைப் பாதுகாப்பதற்காக, ஒரு இளவரசரும் இரண்டு முதலியார்களும் போர்த்துகீசியர்களால் நியமிக்கப்பட்டனர் | |||||
ஈழம்-புடொட் அமைப்பின் வரலாறு.!! எல்லோரும் தலைவர்கள் ஆக முடியாது என்பதற்கு அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் ஒர் உதாரணம் அவரிடம் இருந்த ஆளுமை, ஆற்றல், துணிவு, பணிவு, பண்பு, சாணக்கியம் இவை எல்லாம் இன்று உள்ள தலைவர்கள் பலரிடத்திலும் இல்லை என்பதுவே வெளிப்படை. தெல்லிப்பளை வறுத்தலைவிளானை பிறப்பிடமாக கொண்ட உமா அவர்கள் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் பழையமாணவனும், சிறந்த உதைபந்தாட்ட வீரரும் ஆவார். நில அளவையாளரான உமாமகேஸ்வரன், அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்ததுடன். இளைஞர் அணி தனது அரசியல் பணிகளையும் முன்னெடுத்து வந்ததுடன், தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் தமிழ் மக்களின் விடுதலையின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒர் உன்னத புருஸர். அரசின் கல்வி அடக்குமுறை, அரசியல் மறுப்புக்கு எதிராக போராடிய போராளிகளில் முதன்மையானவரும் ஆவார். வடபகுதியில் பல்வேறு குழுக்களாக செயற்பட்ட இளைஞர்களை ஒன்றுதிரட்டி விடுதலை புலிகள் என்ற விடுதலை இயக்கத்தை தோற்றுவித்து அந்த அமைப்புக்கு முதல் தலைவராகவும் இருந்து வழிநடாத்திய தீர்க்கமான தலைவரும் ஆவார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் பலஸ்தீன விடுதலை இயக்கங்களினால் பயிற்றப்பட்ட போராளியும் ஆவார். இராணுவ தந்திரங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தாயகம் திரும்பியிருந்த வேளையில் அவர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி உமா தலைமையிலான முதலில் “புதிய தமிழ் புலிகள்” (NTT), பின்னர் “தமிழீழ விடுதலைப் புலிகள்”என்ற அந்த உன்னதமான போராட்ட அமைப்பை சீர்குலைத்து தமிழ்மக்களின் ஒன்றுபட்ட விடுதலைக்கு எட்டப்பர்கள் சிலர் குந்தகம் செய்தனர். இந்த எட்டப்பர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ள தவறிய வே.பிரபாகரனும் அந்த கோடாலி காம்புகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து போனார். ஈற்றில் விடுதலைப் புலிகளின் பெயரையும் விட்டுதர வேண்டும் என்று பிரபாகரனும் அவருக்கு உசுப்பேத்திய கூட்டமும் முரண்டு பிடித்து கொண்ட நிலையில் தான் தமிழீழ விடுதலை புலிகள் என்ற பெயரை உமாமகேஸ்வரன் அவர்கள் விட்டு கொடுத்து விட்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) என்ற மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் கூடிய மக்கள் போராட்ட அமைப்பினை புதியபாதை சுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து கட்டியமைத்து அந்த அமைப்புக்கு செயலதிபராகவும் இருந்தவர். அவரது ஆளுமை மிக்க தலைமை திறனால் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கு பக்கதுணையாக பல்வேறு மாணவர், தொழிசங்க அமைப்புக்களையும் அமைத்து மிகப்பெரும் மக்கள் போராட்டத்திற்கான தயாரிப்பு வேலையில் ஈடுபட்ட போது அவர் மீது மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் என்று கூறி மற்றுமொரு உடைவுக்கு வழியேற்படுத்தினர் . ஜனநாயக விரும்பிகள் என்று கூறி கொள்ளும் சக்திகள். இன்றுவரை அந்த ஜனநாயக சக்திகள் பத்திரிகை வெளியிடுவதும், இணையத்தளங்களில்; அமரர் உமாமகேஸ்வரனை பற்றி எழுதி தூற்றுவதை விடுத்து தமிழ் மக்களின் விடியலுக்கு உரிய எந்தவொரு பணியையும் முன்னெடுக்கவும் இல்லை, முன்னெடுக்க போவதுமில்லை. பல ஆயிரக்கணக்கான போராளிகளை இணைத்து பலஸ்தீன விடுதலை அமைப்புக்களினால் இராணுவ பயிற்சிகள் பெறுவதற்கு வழியேற்படுத்திய முகுந்தன், பெரியய்யா, பெரிசு என்று பல்வேறு பெயர்களில் பாசத்துடனும் பரிவுடனும் அழைக்கப்பட்ட “உமா” அவர்கள் தமிழ் மக்களின் விடுதலை குறித்து தெளிவான தூரநோக்க பார்வையை கொண்டிருந்தார். வெறும் இராணுவ சாகசங்களால் மட்டும் தமிழ்மக்களின் உரிமையை வென்றிட முடியாது என்பதில் திடமாக இருந்ததுடன், தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளையும் அரவணைத்து அவ் இளைஞர்களிற்கும் இராணுவ பயிற்சி வழங்கி ஒட்டுமொத்த அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தை முன்நகர்த்தியவர். தற்காலிக இராணுவ வெற்றிகள் எமது மக்களை அழிவுக்கு உட்படுத்துமே தவிர வேறு எதனையும் பெற்று தராது என்பதில் உறுதியாக இருந்த செயலதிபர் உமா அவர்கள். ஓட்டு மொத்த மக்கள் போராட்டத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டு அவற்றுக்கு தேவையான தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்தார். அதன் ஒர் அங்கமாகவே விடுதலை போராட்ட வரலாற்றில் முதன் முறையாக வெளிநாடு ஒன்றில் இருந்து எமது விடுதலைக்கான ஆயுத இறக்குமதியை மேற்கொண்டவர்.இதனை சகித்து கொள்ளமுடியாத சக்திகள், அந்த ஆயுத இறக்குமதியை காட்டிக் கொடுத்து அதற்கு சாவுமணி அடித்தனர். இதனையும் மீறி மொறீசியஸ் நாட்டிற்க உத்தியோகபர்வ விஜயம் மேற்கொண்டு எமது விடுதலை போராட்டத்தை அவ்நாடு அங்கீகரிக்கவும் வழிகோலியவர். இவை மட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு சவாலாக இருந்த பல சதிவலைகளை முறியடித்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டதே மாலைதீவு மீதான இராணுவ புரட்சியாகும். இவ்வாறாக பல முனைகளில் தமிழ்மக்களின் போராட்ட பாதையை முன்னெடுக்க முனைந்த மக்கள் தலைவனை அழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ஏகாதிபத்திய சக்திகள் அவரை கொலை செய்து தமிழ் மக்களின் விடுதலைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதற்கு துணைபோன எட்டப்பர் கூட்டம் அன்று தாம் விட்ட தவறை எண்ணி இன்று ஏப்பம் விடுவதாக தெரிய வருகின்றது. எல்லோரும் தலைவர்கள் ஆக முடியாது என்பதற்கு அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் ஒர் உதாரணம் அவரிடம் இருந்த ஆளுமை, ஆற்றல், துணிவு, பணிவு, பண்பு, சாணக்கியம் இவை எல்லாம் இன்று உள்ள தலைவர்கள் பலரிடத்திலும் இல்லை என்பதுவே வெளிப்படை.. றோ தொடர்பு கொண்ட புளொட் தலைவர் யார்? றோ சாதாரமானவர்களை வைத்து உமாவை கொல்ல முடியாது. அடுத்த இயக்கங்களாலும் முடியாது. காரணம் உமாவை நன்கு தெரிந்தவர்களுக்கு அவரது திறன் தெரியும். ஒரு பார்வையில் சுற்றியுள்ள அனைவரையும் கணிக்கும் கண்கள் அவருடையது. எனவே வெளியாரால் உமாவை போடவே முடியாது. எனவே உமாவோடு இணைந்தே இருப்பவர்களை வைத்தே இக் காரியத்தை செய்ய வேண்டும். அவரோடு இணைந்திருக்கும் நபர்களை மன மாற்றம் செய்ய சாதாரமானவர்களால் முடியாது. அதற்கும் நம்பும் தலைமைத்துவ குணம் வேண்டும். தவிர கொலையாளிகளை உடனடியாக நாட்டை விட்டு விமானத்தில் சென்னைக்கு அனுப்புவதற்காக றோவோடு பேசி செயல்படக் கூடிய அந்த நபர் நம்பகமான மொழி ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். நம்பகமற்றவர்களோடு றோ டீல் பண்ணாது. றோ படுகொலை செய்ய சதி செய்தது என்கிறீர்கள். அந்த இடைப்பட்ட தரகர் யார்? இன்னும் வெள்ளை வேட்டியோடு திரிகிறார்களா? இல்லை இல்லையா? துரோகிகள் தூரத்தில் இல்லை... தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தோற்றம்! இணையத்தில் வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி வரலாற்றை மிகச் சரியாகவே மீள் பரிசீலனைக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தி உள்ளது. இன்று மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும் அன்றைய தவறுகளில் இருந்து இன்று போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வரலாற்றுப் பதிவுகள் இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான தேவையாக உள்ளது. மே 18 2009ல் முடிவுக்கு வந்துள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் சரி பிழைகளை நின்று நிதானித்து ஆராயாமல் மீண்டும் எழுந்தமானமான கோசங்களின் அடிப்படையில் அடுத்த நகர்விற்கு தயாராகி உள்ளனர். இன்றைய மோசமான முடிவுக்கு பொறுப்பான அதே அரசியலும் அரசியல் சக்திகளுமே மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டு உள்ளனர். கடந்தகால தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கவே வழிவகுத்தது. போராட்டத்தை முன்னெடுத்த நான் உட்பட தற்போது எமது தாயக மக்களில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வந்து பாதுகாப்புப் பெற்றுக் கொண்டோம். அன்று எம்மை நம்பிய மக்கள், எம்மால் கைவிடப்பட்டனர். அன்று அந்த மக்களுடன் நின்று போராட்டத்தை சரியாக முன்னெடுக்கத் தவறிய நாம் (அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்) இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்நியப்பட்டு, எமது குற்ற உணர்வின் காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுகிறோம் என்றே தோன்றுகிறது. அன்று பக்கதில் இருக்கும்போதே மக்களைப் புரிந்துகொள்ளத் தவறிய நாம், இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நின்று இணையத்தை வைத்துக் கொண்டு அவர்களுடைய உணர்வுகளைப் புரிவோம் என்ற, இணையக் காதலிலும் கீ போட் புரட்சியிலும் என்னால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. எமது நடவடிக்கைகளின் விளைவுகளை உணராமல் போராட்டத்தையும் புரட்சியையும் ஏற்றுமதி செய்ய எண்ணும் புதிய பிளாவில் பழைய கள்ளுண்ணும் முன்னாள்களின் சலசலப்புகள், இன்னுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி எமது மக்கள் நகர்த்தப்படுகிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் எமது கடந்தகால வரலாற்றை மிகத் துல்லியமாக ஆராய்ந்து வரலாற்றை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரையைப் பதிவு செய்கிறேன். எனது பதிவு ஒரு சிறு முயற்சியே என்பதால் ஏனையவர்களது ஒத்துழைப்பையும் நாடுகிறேன். இப்பதிவினை நான் தேசம்நெற் பின்னூட்ட களத்தில் பதிவிட்ட அதே பெயரிலேயே பதிவிடுகிறேன். தேசம்நெற் ஆசிரியர் குழு என்னை அறியும். தகுந்த நேரம் வரும்போது என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன்.தமிழ்பேசும் மக்களின் போராட்டம், அகிம்சைப் போராட்டமாகத் தொடங்கி, ஆயுதப் போராட்டமாக பரிணமித்து, இன்று முள்ளிவாய்க்கால் வரை வந்து மூழ்கடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுதப் போராட்டம் நடத்திய ஒவ்வொரு இயக்கமும் தங்களின் உருவாக்கங்களில் இருந்து அழிந்தது அல்லது அழிக்கப்படும் வரை, இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் நான் சார்ந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (கழகம்) சார்பாக எனது வரலாற்றுக் கடமையை நிலைநிறுத்தி எம் உயிருடன் இருக்கும் சாட்சிகளைக் கொண்டும், தெரிந்த தகவல்களைக் கொண்டும் இப்பதிவினை மேற்கொள்கிறேன். எமது போராட்டத்தில் 1972 – 73ற்கு பின் வன்முறையோடு நடந்த ஆயுதக் கலாச்சாரமே இயக்கங்களாக சராசரி மக்களால் ஆரவாரிப்பாக (பெடியங்கள் தமிழீழம் பெற்றுத் தருவார்கள்) பேசப்பட்டது. இவ்வாறான இயக்கங்களில் ஒன்றான கழகம், ஆரம்பத்தில் அடித்தள மக்கள் மத்தியில் நின்று கட்டமைக்கப்பட்டது. காந்தீயம் என்ற அமைப்பின் வட கிழக்கிற்கான நிர்வாக கட்டமைப்பு வேலைத் திட்டங்களின் ஊடாக மக்களை மையப்படுத்திய இந்நகர்வு உள்மட்டத்தில் கழகத்தை உருவாக்கியது என்றால் மிகையில்லை. கழக உறுப்பினராக இருந்த சிலர் ஆரம்பத்தில் ஆயுதத்தை கையிலெடுத்தாலும் – ஆரம்பகால உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மக்கள் மத்தியில் நின்று செயற்பட்டு உள்ளனர். பல சம்பவங்கள் – நகர்வுகள் – திட்டமிடல்கள் – செயற்பாடுகள் – தீர்வுகள் – முடிவுகள் என வரலாறு ஓடிகொண்டிருக்கும் போது, இதில் சேகரிக்கப்படும் அல்லது பதியப்படும் ஆதாரப்படுத்தப்படக் கூடிய உண்மைகளும் நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டு, சமூகத்தில் பொதுவில் வைக்கப்படும் போதுதான் ஒரு வரலாறு முழுமையடைகின்றது. வரும் சந்ததிக்கும் நாம் கையளிக்கும் ஆவணமாகின்றது. சமுதாயமானது ஆக்கத்தாலும் – அழிவாலும் வரலாற்றில் நகர்த்தப்படுவது கண்கூடு. மனிதனின் உருவாக்கத்தில் வரலாறு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. எனவே நாம் எமது அனுபவங்களை வரலாறாக்கி எமது அடுத்த சந்ததிக்கு கையளிப்பதுவே ஆரோக்கியமான அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச்செல்லும். எனவே எமது இன்றைய வரலாற்றுப் பதிவுகள் நாளைய தமிழ் மனிதனின் உருவாக்கத்தில் மிக முக்கியமானது. முளைவிட்ட எமது போராட்டம்: தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமானது 1948 ற்குப் பின்னால் குறுந்தேசியவாத தலைமைகளினால் அகிம்சை வழிகளால் வழிநடத்தப்பட்டமை நாம் அறிந்ததே. இத்தலைமைகள் பாராளுமன்ற ஆசனங்களை குறிக்கோளாக வைத்து வட கிழக்கில் வாக்கு வங்கிகளை நிரப்பி அமோகமான மக்கள் ஆதரவுடன் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றின. இவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலைவரை தங்கள் பாராளுமன்ற அரசியலை முன்னெடுத்தனர். இந்த பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றுகின்ற விடயமே விடுதலைப் போராட்டம் என்ற வரையறைக்குள்ளேளே தமிழ் குறும்தேசியவாதக் கட்சிகள் தங்களை வளர்த்துக்கொண்டன. இதனால் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்புகளில் சிலர்- பல மட்டத்திலும், பல மாவட்டத்திலும்- தன்னிச்சையாக செயற்படத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் இலங்கை பேரினவாத அரசு இனரீதியான தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியது. பின் அதனைப் பிரதேசரீதியான தரப்படுத்தலாக மாற்றியது. இதனால் யாழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே கட்டாய சிங்கள மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்பு தவிர்க்கப்படுதல், 1948லிருந்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழ் பிரதேச விகிதாசாரங்கள் மாற்றப்படல் போன்ற செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக பொருளாதார கல்வி நிலைமைகளில் சீர்குலைவுகள் ஏற்படுவது தொடர்ந்தது. போராட்டம் ஆயுதவடிவம் எடுத்தது: 1970 – 1971 காலகட்டத்தில் இலங்கையில் சிங்கள மாணவ – இடதுசாரிகளின் சேகுவோரா போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. நாட்டில் ஆயுத கிளர்ச்சியாக வெடித்தது. அன்றைய உலகச் சூழலும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் தலைமைகளை நம்பியிருந்த – தமிழரசுக் கட்சி இளைஞர் அமைப்புக்களில் தீவிரமாக செயற்பட்ட இளைஞர்கள் – தங்கள் தலைமைகளில் மெல்ல மெல்லமாக நம்பிக்கையிழந்தனர். அவர்கள் ஆயுதப் போராட்டங்களின் பக்கம் தங்கள் ஈடுபாடுகளை காட்டத் தொடங்கினர். இதில் தென்பகுதியின் ஆயுதப் போராட்டங்களின் சில தொடர்புகளின் – நிமித்தம் யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலனும் (தற்போது லண்டனில் வசிக்கின்றார்.) அவரைத் தொடர்ந்து உரும்பிராய் பொன்னுத்துரை சிவகுமாரனும் (இவர்தான் முதல் தற்கொலைப் போராளி. யூன் 05 1974ல் எதிரிப் படைகளிடம் மாட்டிக்கொள்ளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்) உட்பட சில இளைஞர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தனர். அரசியல் தலைவர்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பின: தமிழ் தலைமைகளில் இருந்து நம்பிக்கை இழந்த இளைஞர்கள் புரட்சிக் கருத்துக்களை – செயற்பாடுகளை தத்தமது குணாதிசயங்களுக்கேற்ப உருவகப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் வெவ்வேறு குழுக்களாக செயற்பட்டனர். இத்தீவிர இளைஞர்கள் ஆரம்பத்தில் அரசு சார்பான தமிழ் மந்திரிகள், எம்.பி க்களுக்கு குண்டெறிதல், சிறு ஆயுதங்கள் – காட்டுத் துவக்கு பாவித்து சுடுதல் எனச்செயற்பட்டனர். அடுத்து 1973ல் மந்திரி குமாரசூரியர் ஊர்காவற்துறையில் தபால் நிலையம் ஒன்றினைத் திறப்பதற்காகச் சென்று வரும் வழியில், பண்ணைப் பாலத்தைத் தகர்த்து கொலை செய்ய முயற்சித்தனர்.யூலை 27, 1975ல் அப்போதைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டார். இதுவே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாக அமைந்தது. இளைஞர்கள் கைது: இவ்வாறான ஆயுத நடவடிக்கைகளின் எதிர்விளைவாக இலங்கை அரசு இளைஞர்களை இச்சம்பவங்களிலோ அன்றி சந்தேகங்களிலோ கைதுசெய்து சிறைக்கும் சித்திரைவதைக்கும் உட்படுத்தினர். குமாரசூரியர் கொலை முயற்சி தொடர்பாக ராஜன் (ஞானசேகரன்) மற்றும் கரையூரைச் சேர்ந்த ஆசீர்வாதம் தாசன் ஆகியோர் கைது செயப்பட்டனர். 1973ஆம் ஆண்டு தை 16ம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் குறிப்பிடத்தக்கதாக துரையப்பா கொலைக்கு பிரபாகரன் பண உதவியை கேட்க, சந்ததியார் (இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலையில் படுகொலை செய்யப்பட்டார்.) தனது சகோதரியின் சங்கிலியை அடைவு வைத்து கொடுத்ததால் பிடிபட்டார். பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன் (தற்போது பிரான்ஸில் இருப்பவர்) பிடிபட்டு சிறையிருந்தனர். கொலையின் முக்கிய நபரான பிரபாகரன் தப்பிவிட்டார். இதுபோல் வெவ்வேறிடங்களிலும் சில சம்பவங்கள் – தீவிரவாதங்கள் – சந்தேகங்கள் என்று பரவலாக இளஞைர்கள் கைதாகியிருந்தனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை (மே 14, 1976) கூட்டணியினர் அகிம்சை போராட்டமாக முன்னெடுத்த நிலையிலும், அதை முன்னின்று நடத்திய கூட்டணி இளைஞர்களும் பேரவையினரும் கைதாகினார்கள். இதில் உமா மகேஸ்வரனும் (1976) கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் எந்த கைதின் போதும் பிரபாகரன் ஒருபோதும் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விடுதலை: 1976ல் இலங்கையில் நடைபெறவிருந்த அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை காரணம் காட்டி இதற்கு முன்பே சிறையிலிருக்கும் போராட்டம் சம்பந்தமான அனைத்து தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியால் இலங்கை அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டு பலவழிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் நிமித்தம் 1976 ஆவணியில் சகல தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். இதில் துரையப்பா கொலைவழக்கு மிக கடுமையாகப் பார்க்கப்பட்டு பலதடவை நீதிமன்றத்திற்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்ட வண்ணமே இருந்தது. அதுபோல் குமாரசூரியர் கொலைமுயற்சி 3 வருடம் 8 மாதம் விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே கிடப்பில் கிடந்தது. எனவே இந்த இளைஞர்களின் ஒட்டுமொத்த விடுதலை கூட ஒரு திருப்பு முனையாக இருந்திருக்கலாம். படித்த வாலிபர் திட்டம்: சிறையிலிருந்து வெளியே வந்த சந்ததியார், ராஜன், சிறிசபாரத்தினம் உட்பட்ட சில இளைஞர்கள் விசுவமடு ‘படித்த வாலிபர் திட்டம்’ அமைக்கப்பட்ட இடத்தில் முகாம் அமைத்து அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் மற்றும் அரசியல் பயிற்சிகள் வழங்கினர். இதில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதன்போது 17 வயதில் படித்துக் கொண்டிருந்த யாழ் நகரப் பகுதியை சேர்ந்த மாணிக்கம்தாசன் இணைந்து கொண்டார். பின் தாயார் தேடிவந்து கட்டாயப்படுத்தி திருப்பி அழைத்துச் சென்றுவிட்டார். மேலும் இவ் வேலைத்திட்டத்தில் ஒபராய்தேவனும் (பின்நாளில் டெலா இயக்கத் தலைவர்) ஒரு மாதம்வரை பங்காற்றினார். இக்காலப்பகுதியில் இவர்கள் யாரும் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்படவில்லை. ஒரு குழுவாகவே செயற்பட்டனர். அதற்கு பெயரோ தலைமைத்துவமோ இருக்கவில்லை. படித்த வாலிபர் திட்டம், 1966 – 1970ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில், டட்லி சேனநாயக்கா பிரதமராக இருக்கும் போது, அறிமுகப்படுத்திய திட்டம். இலங்கையில் எல்லா மாகாணங்களுக்குமான இளைஞரை மையப்படுத்தி “லாண்ட் ஆமி” தமிழில் “விவசாய படை” என்ற திட்டத்தின் அடிப்படையில் புதுகிராமங்கள் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. அதில் உபஉணவுப் பயிர்களை உருவாக்குவதென்று, காணிவெட்டி களனி அமைக்கப்பட்டது. அதனை செய்வதற்கு ரக்ரர் முதல் கொண்டு எல்லா பொருளாதார வசதிகளும் இளைஞர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அந்த இளைஞர்களுக்கான சீருடையாக ராணுவ உடையின் வடிவமைப்பில் அமைக்கப்பட்ட உடையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் மண்வெட்டியுடன் ஒரு கிராமத்து ராணுவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்கள். இதன் அடிப்படையில் தமிழ் பிரதேசத்தில் விசுவமடு, முத்தையன்கட்டு, மிருசுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். 1970ல் சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பிரதமராக வந்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த திட்டத்தை இலங்கை முழுதும் ரத்து செய்து, அதற்கு பதிலாக இந்த “படித்த வாலிபர் திட்டம்” என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ஒவ்வொரு இளைஞருக்கும் 2 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டு மற்றைய சலுகைகள் சீருடைகள் எல்லாம் நிறுத்தப்பட்டது. தமிழ் குடியேற்றத்திட்டங்களும் பண்ணைகளும்: இதே காலகட்டத்தில் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து 20 மைல் தொலைவிலுள்ள மதுரு ஓயா அருகிலுள்ள புனானை என்ற எல்லைக் கிராமமொன்றில் சிங்களக் குடியேற்றத்தை தடுக்க மரியசிங்கம் இஞ்சினியர் அவர்களால் தமிழ் குடியேற்ற வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பாதியில் கைவிடப்பட்டதும், அதிலும் சந்ததியார், ராஜன், சிறி முதலானோர் இணைந்து கொண்டனர். இங்கு பல இளைஞர்களும் தொண்டராகினர். இதில் சந்திவெளியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டார். (மே 18ற்கு முற்பட்ட புலிகளின் கட்டமைப்பில் நீதியரசர் பதவியை வகித்தவர் ஃபாதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரைதான்.) இந்தத் தமிழ் குடியேற்றத் திட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலரும் இணைந்தனர். இதில் பின்னாளில் கழகத்தின் உறுப்பினரான வாசுதேவாவும் இணைந்து செயற்பட்டார். இக்குடியேற்றத்திற்கு பட்டிருப்பு கணேசலிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர்) செங்கலடி, சம்பந்தமூர்த்தி என்போரும் நிறையவே ஒத்துழைப்புக் கொடுத்தனர். மேலும் குடத்தனையை சேர்ந்த அம்பன் என்ற மோகனசுந்தரம் என்பவரும் தொண்டராக வந்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது. இப்படியாக பரவலாக குடியேற்றங்களும் விவசாய பண்ணைகளுமாக இளைஞர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1977 இனக்கலவரம் உருவாகியது. இதன்போது கணிசமான மலையகத்து மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனை மையப்படுத்தி வவுனியாவை நோக்கி குடியேற்றங்கள் பரவலாக நடந்தன. 1960ம் ஆண்டு நீதிராஜா என்பவரின் தலைமையில் சில படித்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெரும் வேலைத்திட்டத்தில் இறங்கினர். அதாவது திருகோணமலையில் ஒரு மருத்துவபீட பல்கழைக்கழகமும், வவுனியாவில் விவசாய பீட பல்கலைக்கழகமும் உருவாக்குவதென உற்சாகமாக செயற்பட்டனர். இதன் முதற்கட்டமாக நெடுங்கேணியில் இருந்து 12 மைல் தொலைவில் “வெடிவைத்த கல்” என்ற கிராமத்தில் காணி வாங்கிவிடப்பட்டது. பின் அரசியல் தடைகள் ஏற்பட்டு அந்த முயற்சிகள் தடைப்பட்டது. | |
ஈழம்-புடொட் அமைப்பின் வரலாறு.2 கழகத்தை உருவாக்கிய அடிமட்டத் தோழர்களும், மத்திய குழு உறுப்பினர்கள் அதிகமானோரும் கைது செய்யப்பட சந்ததியாருடன் உமா முன்னணி அங்கமானார். இதில் உமாவின் கடந்தகால புலிகளின் தீவிர அரசியலும், உமா – பிரபா இணைவு – பிரிவு என்பது மட்டும்தான் சராசரி மக்களுக்கோ இலங்கை அரசுக்கோ பரவலாக தெரிந்து இருந்தது. உமாவின் தலைமைத்துவ ஆளுமைப் பண்புகளும், 1982ல் பாண்டி பஜார் உமா – பிரபா சூடுபாடும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதும் உமாமகேஸ்வரனுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தது. உமாமகேஸ்வரனை கழகத்தின் செயலதிபர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. கழகத்தை உருப்படுத்திய ராஜன் உள்ளேயும் சந்ததியாரின் அட்டகாசமில்லாத, அமைதியான, ஆழமான சுபாவமும் உமா மகேஸ்வரனை கழகத்தின் முதன்மையாக்கியதில் ஆச்சரியம் இல்லை. ஆரம்பத்தில் இருந்து காந்தீயத்தினூடாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் எனக் காலற நடந்து தேடிக்கண்டு பிடித்த எத்தனையோ செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து ராஜசுந்தரம், டேவிற் ஜயா அவர்களின் பெரிய பொருளாதார வெளிநாட்டு நிதிகளுடன் கூடிய சமூகஸ்தாபன நகர்வுகளும் கழகத்தின் மத்திய குழுவிலிருந்து அடிமட்டம் வரை பெரியளவில் எமது போராட்டப் பாதைக்கு உரமிட்டது. சந்ததியாரால் 1980, 1981, 1982 என்று ஒவ்வொரு கட்டமாக காந்தீய வேலைத்திட்டம் பண்ணைகளூடாக பிரதேச ரீதியாக பரவலாக உள்வாங்கப்பட்ட திருமலையில் ஜெயச்சந்திரன், ஜான், சலீம், கேசவன், மட்டக்களப்பு வாசுதேவா, ஈஸ்வரன், யோகன் கண்ணமுத்து, வவுனியா முரளி, ஆதவன், பொன்னுத்துரை, கந்தசாமி, சறோஜினி, பெரிய செந்தில் ஆகியோருமாக பின் மத்திய குழுவரை இவர்களின் பாத்திரம் நகர்ந்தது. கழக மத்திய குழு உறுப்பினர்கள்: 1. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் – செயலதிபர். யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். இயக்க உட்படுகொலையில் கொல்லப்பட்டவர். 2. வசந்தன் என்ற சந்ததியார் – அரசியல் துறைச் செயலாளர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டார். 3. ராஜன் என்ற ஞானசேகரன் – பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். புளொட் உள்முரண்பாட்டில் அதிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எப் அமைப்பை உருவாக்கியவர். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர். பிரபாகரனும், அன்ரனியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் அங்கு சென்றனர். அந்த உடல்களை மூன்றாவது நாள் கிணற்றில் எட்டிப் பார்த்ததில் இந்த உடல்களின் அகோரநிலையால் பிரபாகரன் மிகக் கிலேசமடைந்ததாகவும் இதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்ததில் மூன்று நாட்கள் பரந்தனில் 5ம் வாய்க்காலிலுள்ள வீடொன்றில் தங்கி இருந்ததாகவும் அந்த வீட்டினர் சொன்ன தகவலும் ஒன்று உண்டு. இதன் முக்கிய கட்டமாக வவுனியாவில் இன்பம், பாலேந்திரன் உட்பட 4 தமிழ் இளைஞர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். மேலும் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்ட அமுலும் பல தமிழ் இளைஞர்களை முக்கியமாக பண்ணைகளில் செயற்பட்டவர்களை தலைமறைவாக்கியது. இந்நிலையில் புலிகள் அமைப்பினரும் சிதறி இந்தியா வரையில் சென்று தப்பினர். இந்நிலையில்தான் இந்தியாவில் வைத்து புலிகளின் உடைவு இடம்பெற்றது. ‘உணர்வு’ குழுவாக ஒன்றும் ‘புதியபாதை’ குழுவாக ஒன்றுமாக பிரிந்தனர். காந்தீயப் பண்ணைகளில் இருந்தவர்கள் மிக கவனமாக குடியேற்றங்களிலும் வேலைத் திட்டங்களிலும் ஈடுபட்டதாலும் காந்தீயம் என்ற பெயர் ஒரு பாதுகாப்பை அளித்ததாலும் இவர்களுக்கு பெரிதாக அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை. ஊர்மிளாவின் மரணம்: முன் குறிப்பிட்டதுபோல் புலிகள் உடைந்து போனதில் இந்தியாவிலும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில்லாத நிலையில் அவர்களுக்கு உள்ளும் தலைமறைவுகள் தவிர்க்க முடியாததொன்றாகியது. இந்நிலையில் மஞ்சட் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளா வவுனியாவிற்கு திரும்பி காந்தீய செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியான சாந்தியின் “சாந்தி கிளினிக்”கில் வைத்தியம் பார்த்தார். ஊர்மிளா வருத்தம் மிக முற்றிய நிலையில் இங்கு வந்ததால் இவரை சுகப்படுத்த முடியாத நிலையில் மரணமானார். இவ் மரணத்தின்போது மண்டூர் மகேந்திரனும், டாக்டர் சாந்தியும் அருகில் இருந்தனர். இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழீழ விடுதலைக் கழகம் தோற்றம்: புலிகளின் உடைவில் உமாமகேஸ்வரன் புலிகளின் மரண தண்டனைக்கு தப்பி இந்தியாவில் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் சந்ததியும் ராஜனும் வவுனியாவில் பேசிமுடிவெடுத்து ராஜன் இந்தியாவிற்கு சென்று உமாவை சந்தித்து இங்கு அழைத்து வருவதாக இருந்தது. இந்த முடிவின்படி ராஜன் தலைமன்னாரினூடாக (ராஜன் தலைமன்னாரில் படகிற்காக காத்து நிற்கும் போது தான் ஊர்மிளா இறந்த செய்தி கிடைத்தது.) இந்தியா சென்று மற்றாஸ் மண்ணடி என்னும் இடத்தில் உமாவை சந்தித்து பல விடயங்கள் பேசி ஒரு புதுக்கட்டமைப்பில் செயற்படுவதற்கு உமாவும் உடன்பட்டார். இதன்பின் ராஜன் புறப்பட்டதும் உமா நாட்டிற்கு திரும்பிவரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு உமாவும் வந்து சேர்ந்தார். இதை அடுத்து 1980 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சங்கானை தொண்டர் கந்தசாமி என்பவரின் வீட்டில் “தமிழீழ விடுதலைக் கழகம்” என்ற பெயருடன் ஏற்கனவே 1979ல் தெரிவு செய்யப்பட்ட கொடி – நிறங்களுடன் முதலாவது கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வசந்தன் என்ற சந்ததியார், ராஜன் என்ற ஞானசேகரன், முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன், சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி, மாணிக்கம்தாசன், அவ்வீட்டு கந்தசாமியின் மகன் கண்ணன் (தற்போது ஜேர்மனில் இருப்பவர்) ஆகியோர் உறுப்பினர்களாயினர். இதற்குப் பின் சில வாரங்களில் இவ் உறுப்பினர்கள் சந்தித்து முதலாவது மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது. இதில் சந்ததியார், ராஜன், உமாமகேஸ்வரன், சுந்தரம், பாபுஜி தெரிவு செய்யப்பட்டனர். சுந்தரத்தால் மானிப்பாயைச் சேர்ந்த காத்தான் என்ற கிருஷ்ணகுமார் 1979ல் கழகத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.கழகத்தின் இராணுவ நடவடிக்கைகள்: இதன்பின் கழகத்தின் முதலாவது ராணுவ நடவடிக்கையாக 1980 செப்டம்பரில் ஒரு செயற்பாடு கழகத்தில் முடிவெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அந்த முடிவிற்கமையவே ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். வவுனியா, கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் ஐ.தே.கட்சி அலுவலகம் திறக்க ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக காமினி திசநாயக்கா இங்கு வந்தவேளையில் இக்கொலை நடைபெற்றது. அடுத்ததாக கிளிநொச்சி வங்கிக்கொள்ளை 1981ல் ஒக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இவ் வங்கிக் கொள்ளையில் 116 கிலோ தங்கம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. பணம் இருக்கவில்லை. இதில் ராஜன், சுந்தரம், நிரஞ்சன், உமா, பாருக் (பின் புலிகளால் கடத்தி இதுவரை இல்லாமல் போனவர்) அன்பழகன், (இவர் திருகோணமலை திரியாயை சேர்ந்தவர். வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டவர்.) றொபேட் (தெல்லிப்பளையைச் சேர்ந்த இவரும் வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டார்), பாபுஜி, சிவசுப்பிரமணியம் (பரந்தன்) உட்பட 12 பேர் பங்காற்றினர். சரியாக ஒருமாதத்தில் நவம்பர் 20ம் திகதி ராஜன் மடுப்பகுதி வீட்டில் தங்கியிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டில் ராணுவம் சுற்றிவளைத்ததில், மதில் சுவரால் குதித்து ஓட முற்பட்ட நிலையில் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததால், இறந்ததாக நினைத்து கொண்டு இராணுவம் சென்றுவிட்டது. ஆனால் ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார். தொடர்ந்து மாணிக்கம்தாசன், பாபுஜி, பாருக், றொபேட், அன்பழகன் ஆகியோர் ஓரு மாதத்தின் பின் அடுத்தடுத்து தமது கவனக் குறைவால் பிடிபட்டனர்.1982ல் புலிகளால் தேடப்பட்ட சுந்தரம் தை 2ம் திகதி யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த சுந்தரத்தின் கொலைக்கு இறைகுமாரனே (இவரின் பொறுப்பில் தான் புலிகளின் உணர்வு பத்திரிகை இருந்தது) காரணம் என்று சந்ததியாரால் முடிவெடுக்கப்பட்டு இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரும் பின்னால் கழகத்தில் இணைந்த வடலியடைப்பு கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். (இவர் 1984ல் கழக படைத்துறைச்செயலராக நியமிக்கப்பட்டார்.) கழகத்தில் கந்தசாமி அல்லது சங்கிலி என்பவர் 1981ல் பண்ணை வேலைத் திட்டத்திற்காக சந்ததியாரால் (வவுனியாவில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில்) கொண்டு வரப்பட்டவர். சங்கிலி 1984ல் புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். புளொட் அமைப்பில் இடம்பெற்ற உட்படுகொலைகளில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1988ல் வவுனியா முள்ளிக்குளம் புளொட் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினாலும் இணைந்து தாக்கப்பட்ட போது கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இருதரப்பிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். உமா மகேஸ்வரன் செயலதிபரானார்: கழகத்தை உருவாக்கிய அடிமட்டத் தோழர்களும், மத்திய குழு உறுப்பினர்கள் அதிகமானோரும் கைது செய்யப்பட சந்ததியாருடன் உமா முன்னணி அங்கமானார். இதில் உமாவின் கடந்தகால புலிகளின் தீவிர அரசியலும், உமா – பிரபா இணைவு – பிரிவு என்பது மட்டும்தான் சராசரி மக்களுக்கோ இலங்கை அரசுக்கோ பரவலாக தெரிந்து இருந்தது. உமாவின் தலைமைத்துவ ஆளுமைப் பண்புகளும், 1982ல் பாண்டி பஜார் உமா – பிரபா சூடுபாடும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதும் உமாமகேஸ்வரனுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தது. உமாமகேஸ்வரனை கழகத்தின் செயலதிபர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. கழகத்தை உருப்படுத்திய ராஜன் உள்ளேயும் சந்ததியாரின் அட்டகாசமில்லாத, அமைதியான, ஆழமான சுபாவமும் உமா மகேஸ்வரனை கழகத்தின் முதன்மையாக்கியதில் ஆச்சரியம் இல்லை. ஆரம்பத்தில் இருந்து காந்தீயத்தினூடாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் எனக் காலற நடந்து தேடிக்கண்டு பிடித்த எத்தனையோ செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து ராஜசுந்தரம், டேவிற் ஜயா அவர்களின் பெரிய பொருளாதார வெளிநாட்டு நிதிகளுடன் கூடிய சமூகஸ்தாபன நகர்வுகளும் கழகத்தின் மத்திய குழுவிலிருந்து அடிமட்டம் வரை பெரியளவில் எமது போராட்டப் பாதைக்கு உரமிட்டது. சந்ததியாரால் 1980, 1981, 1982 என்று ஒவ்வொரு கட்டமாக காந்தீய வேலைத்திட்டம் பண்ணைகளூடாக பிரதேச ரீதியாக பரவலாக உள்வாங்கப்பட்ட திருமலையில் ஜெயச்சந்திரன், ஜான், சலீம், கேசவன், மட்டக்களப்பு வாசுதேவா, ஈஸ்வரன், யோகன் கண்ணமுத்து, வவுனியா முரளி, ஆதவன், பொன்னுத்துரை, கந்தசாமி, சறோஜினி, பெரிய செந்தில் ஆகியோருமாக பின் மத்திய குழுவரை இவர்களின் பாத்திரம் நகர்ந்தது. கழக மத்திய குழு உறுப்பினர்கள்: 1. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் – செயலதிபர். யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். இயக்க உட்படுகொலையில் கொல்லப்பட்டவர். 2. வசந்தன் என்ற சந்ததியார் – அரசியல் துறைச் செயலாளர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டார். 3. ராஜன் என்ற ஞானசேகரன் – பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். புளொட் உள்முரண்பாட்டில் அதிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எப் அமைப்பை உருவாக்கியவர். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர். 4. வாசுதேவா – மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இவரும் இவருடன் சென்றவர்களும் தந்திரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். 5. கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் – படைத்துறைச் செயலராக இருந்தவர். யாழ்ப்பாணம் வடலி அடைப்பைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 6. சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி – புதியபாதை பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாகக் கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளி இவர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். 7. காத்தான் என்ற கிருஸ்ணகுமார் – யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவர். 8. ஜக்கடையா என்ற ஆதவன் – வவுனியாவைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டவர். 9. பெரியமுரளி – வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது மத்திய கிழக்கில் வாழ்கிறார். 10. ஈஸ்வரன் – மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஹொலண்ட்க்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். 11. அசோக் என்ற யோகன் கண்ணமுத்து – அம்பாறைப் பொறுப்பாளராக இருந்தவர். புளொட் உள்முரண்பாட்டில் ஈஎன்டிஎல்எப் அமைப்புடன் இணைந்து பின்னர் அதிலிருந்தும் வெளியேறியவர். பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த இவர் தொடர்ந்தும் அரசியல், கலை இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். 12. பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன் – தள இராணுவப் பொறுப்பாளர். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார். திருகோணமலையைச் சேர்ந்தவர். 13. காந்தன் என்ற ஜான் – பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். உள்முரண்பாட்டில் புளொட்டை விட்டு வெளியேறி தீப்பொறி குழு ஆகச் செயற்பட்டவர்களில் முக்கியமானவர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மே 18 இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியமானவர். திருகோணமலையைச் சேர்ந்தவர். 14. பாலன் என்ற சலீம் – தள நிர்வாகப் பொறுப்பாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர். தீப்பொறிக் குழு உடன் வெளியேறியவர். 15. கேசவன் – தீப்பொறிக் குழுவைச் சேர்ந்தவர். புதியதோர் உலகம் நாவலின் ஆசிரியராக இவரது பெயரே குறிப்பிடப்பட்டு உள்ளது. திருகோணமலையைச் சேர்ந்தவர். 16. பாபுஜி – அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் ஈஎன்டிஎல்எப் இல் இணைந்து கொண்டவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார். 17. செந்தில் – அனைத்து முகாம் பின்தள பொறுப்பாளராக இருந்தவர். வவுனியாவைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலை இயக்கத்தினால் கொல்லப்பட்டார். 18. மாணிக்கம் தாசன் – இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தவர். உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது போது இவர் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். ஆனால் பின்னர் உமா மகேஸ்வரனின் கொலையை நிறைவேற்றிய ராபினையும் அவரது மனைவியையும் ஹொலண்டில் வைத்துப் படுகொலை செய்ததில் மாணிக்கம்தாசன் சம்பந்தப்பட்டு இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இறுதியில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். 19. குமரன் என்ற பொன்னுத்துரை – தளப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார். 20. சங்கிலி என்ற கந்தசாமி – புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இயக்கத்தினுள்ளும் வெளியேயும் நடந்த பல படுகொலைகளுக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். 21. சறோஜினி – இவர் வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார். மத்திய குழுவில் இருந்த ஒரே பெண் உறுப்பினர் இவர்தான். 22. நிரஞ்சன் அல்லது காக்கா என்ற சிவனேஸ்வரன் – யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர். உட்படுகொலை செய்யப்பட்டவர்.23. சீசர் – இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். தொழிலாளர் பாதை அமைப்பைச் சேர்ந்தவர். 24. சேகர் – இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனால் அவரது பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைக் கழகம் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆனது: 1983ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வவுனியாவிலுள்ள காந்தீய தலைமை அலுவலகம் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. டாக்டர் ராஜந்தரமும் டேவிட் ஐயாவும் கைது செய்யப்பட்டு பதட்டமான சூழல் இருந்தது. இந்நிலையிலும் 1983ம் ஆண்டு மேதினம் திருகோணமலையில் சின்ன முற்றவெளியில் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) தலைமையில் தமிழீழ விடுதலை கழகம் என்ற பெயரிலேயே நடைபெற்றது. இதன்போது 3 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கழகக் கொடியின் கீழ் இம் மேதினம் நடைபெற்றது. இதற்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் கழக உறுப்பினர்கள் வந்திருந்தனர். இதில் மட்டக்களப்பு பொறுப்பாளர் வாசுதேவா தலைமையிலும் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் யோகன் கண்ணமுத்து தலைமையிலுமாக கிழக்கிலிருந்து உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டனர். யாழ் மாவட்ட பொறுப்பாளர் பொன்னுத்துரை தலைமையில் ஒரு பேரூந்து நிறையவே உறுப்பினர்களும் முல்லைத்தீவு பொறுப்பாளர் சுந்தரம் என்ற நவம் தலைமையில் ஒரு குழுவும் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் ஒரு குழுவுமாக கழக உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்களுமாக பலர் கலந்து கொண்டனர். இதில் விசேட பேச்சாளராக வாசுதேவா, யோகன் கண்ணமுத்து இன்னும் சிலரும் உரையாற்றியிருந்தனர். ஜான் மாஸ்ரர் மருத்துவபீட பல்கலைக்கழக நுழைவு கிடைத்த புதிதென்பதால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றும் திருமலை முன்னணி இளைஞர்களான ஜெயகாந்தன், ராதாகிருஸ்ணன் (இவர்கள் தற்சமயம் லண்டனில் வசிப்பவர்கள்.) ஆகியோரும் மத்திய குழு உறுப்பினர் சலீம் உட்பட பல கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைக் கழகம் என்ற பெயரும் 3 நட்சத்திரங்கள் அமைந்த கழக கொடியுடன் நடந்த கடைசி நிகழ்வும் ஆகும். இந்த மே தினக் கூட்டம் இலங்கை அரசின் உன்னிப்பான கண்காணிப்புக்கு உட்பட்டு புகைப்படங்களும் அவர்களால் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லா மாவட்ட காந்தியமும் அரசின் விசாரணைக்குட்பட்டு மூடப்பட்டு கழக – காந்தீய உறுப்பினர்கள் ராணுவ கெடுபிடிகளுக்கு உட்பட்டனர். இதனையடுத்துக் கூடிய மத்திய குழு தங்கள் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அறியப்பட்டதனால் தங்கள் அமைப்புக்கு பெயரையும் கொடியையும் மாற்ற முடிவெடுத்தனர் தமிழீழ விடுதலைக் கழகம், ‘மக்கள்’ ஜ உள்வாங்கி தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆனது. கழகக் கொடியில் இருந்த மூன்று நட்சத்திரங்களில் இருண்டு நட்சத்திரங்கள் நீக்கப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புதிய கொடியைப் பெற்றது. 1983 யூலை வெலிக்கடைப் படுகொலையில் எமது மக்கள் விடுதலைப் பாதையின் அச்சாக சுழன்று திரிந்த டாக்டரின் இழப்பு பேரிழப்பாகியது. அதனைத் தொடர்ந்த 1983 இனக்கலவரம். இழப்புக்களுடனும் ஒரு வெறித்தனமான உத்வேகத்துடனும் எமது விடுதலைப் போராட்டத்தை அசாதாரண வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதில் கழகத்தின் வளர்ச்சியானது வீங்கி முட்டி ஊதிப்பெருத்த நிலையில் 1983 பிற்பகுதியில் உள்முரண்பாடுகளுக்கு உட்பட்டது. இதில் சில தனி நபர்களின் பலம் – பலவீனம் தான் வரலாற்றுடன் நகர்ந்தது. உமா மகேஸ்வரன் தனது பாதுகாப்பிற்கென தனதருகில் வைத்திருக்கக் கூடியவர்கள் தன்னைச் சுற்றிய விசுவாசிகளாகவும் தனது சொல்பேச்சுக் கேட்பவர்களாக மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார். இந்தத் தகுதியின் அடிப்படையில் பதவிகள் நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டமையும் மூத்த உறுப்பினர்களை ஓரம்கட்டி அதுவும் சந்ததியார், ராஜன் ஆகியோரின் பாத்திரங்களையும் பதவிகளையும் முடக்கி அரசியலின் அரிச்சுவடு தெரியாத வாசுதேவாவை அரசியற் துறைச்செயலராகவும், எதற்கும் தலையாட்டும், ராணுவம் என்பது என்னவென தெரியாத கண்ணனை படைத்துறை செயலாளராகவும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை உமா தன் கைவசப்படுத்தியும் வைத்திருந்தார். அதற்காக தனிநபர் விசுவாசத்தை மட்டுமே தகுதியாக கொண்டோரை கொண்ட ஒரு புலனாய்விற்கே சம்பந்தம் இல்லாதோரை தனது கைக்குள் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் வரையறுக்கப்பட்ட அரசியலை ஒழுங்குபடுத்தி செய்து வந்த நிலையில் சந்ததியாரின் 1983ற்கு பின்பான நிகழ்வுகள் அவரை நெருக்கடிக்குள் தள்ளியது. கழகத்தின் இந்த அபரீத வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போனதும் நாட்டை விட்டு அந்நிய தேசத்தில் போராட்டம் திசை திரும்பிய நிலையுமாக பல எதிர்கால கேள்விகளையும் குழப்பத்தையும் இவருக்கும் இவரை சுற்றியிருந்த அல்லது இவரை மையப்படுத்தியவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. முடிவு தெரியாத – முடிவெடுக்க முடியாத சூழல் இவர்களை இறுகியது. இவரின் சூட்சுமமான பேச்சு, நிதானமான போக்கு இவரை இந்த வேகமான வளர்ச்சிக் கட்டத்தில் காலத்தின் கைதியாக்கியது. மேலும் இதற்கு பின்வந்த வரலாறு பின்னால் எல்லோருக்கும் தெரியப்பட்டதே. காந்தீயத்தினூடு கழகம் கட்டமைக்கப்பட்ட சம்பவங்களிற்கு முன்னால் காந்தீயத்திற்கான ஒவ்வொரு மாவட்டத்திற்கான செயற்பாடுகளும் அதில் டாக்டர் ராஜசுந்தரம், டேவிட் ஐயாவின் நகர்த்தல்களும் தனி ஒருபதிவிற்கானது. கழகத்தின் உட்படுகொலைகளில் உயிரிழந்த போராளிகளுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். நிலா(முன்னாள் கழகப் போராளி) | |
|
|






















.jpg)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக