சிறு கதை


எல்லாரும் அட்டுகுட்டியை மண் குடத்துக்குள்ளாலை எடுக்க ட்ரை பண்ணியும் எடுக்கேலாமல் போய் சின்னதம்பியரிட்டை போய் ஐடியா கேட்டினம். சின்னத்தம்பியர் எப்பவும் யானையிலை நேரை ஸ்பொட்டுக்கு போய் தான் ஐடியாக்களை குடுக்கிறது வழக்கம் . சின்னதம்பியரும் யானையிலை பிரச்னை நடந்த இடத்துக்கு போனார் . அவற்ரை கெட்டகாலம் அவர் வந்த யானை வீட்டு மதிலுக்குள்ளாலை போகேலாமல் போச்சுது .

உடனை சின்னதம்பியர் கீழை இருந்த ஆக்களை பாத்து மதிலை உடைக்க சொல்லி சொன்னார் . இப்ப அவற்றை யானை வலு கிளீனாய் ஆட்டுக்குட்டி பிரச்னை பட்ட இடத்துக்கு போச்சுது. அங்கை ஆட்டுக்குட்டி மண் குடத்துக்கை தலையை குடுத்த வேதனையிலை கத்திது . சனம் சினதம்பியரை என்ன செய்யலாம் எண்டு ஐடியா கேட்டுதுகள் . அப்ப வலு விலாசமாய் சினதம்பியர் சொன்னார் , " ஆட்டுக்குடியின்ரை தலையை வெட்டுங்கோ " எண்டு . சனமும் வெட்ட மண் குடமும் அட்டுகுட்டியின்ரை தலையும் தரையிலை விழுந்திது .

 ஐடியா கேட்ட சனம் குழம்பீட்டுதுகள்.  " இப்ப மண்குடத்தை எப்பிடி சின்னத்தம்பியர் குட்டியின்ரை தலையிலை இருந்து எடுக்கிறது "?? எண்டு சனம் கேக்க சின்னதம்பியர் பேந்தும் எடுப்புசாய்ப்பாய் சொன்னார் , " மண் குடத்தை உடைச்சு விடுங்கோடாப்பா " எண்டு . இது எப்பிடி இருக்கு
நான் படிச்சு கொண்டிருக்கிற சோபா சக்தியின் " பஞ்சத்துக்கு புலி " எண்ட கதையிலை வந்த ஒரு பகுதி . அதை என்ரை வசன நடயிலை மாத்தியிருக்கிறன் .

 கோமகன்

பாரதியாரின் கடைசி நாள்கள்.


மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன்.

பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூலை வெளியிட்டார்.

1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:

1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒரு பெரிய யானை இருந்தது. அதைக் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருப்பார்கள். பாரதி அந்த யானையை சகோதரனாக பாவிப்பார். கையில் எடுத்துச் செல்லும் பழம், தேங்காயை யானையிடம் தாமே நீட்டி, அது உண்பதைக் கண்டு மகிழ்வார்.


அந்த யானைக்கு ஜூன் மாதம் திடீரென மதம் பிடித்துவிட்டது. அதை சங்கிலியால் பிணைத்து கோவில் முன்பாகக் கட்டிப்போட்டிருந்தார்கள். வழக்கம்போல தேங்காய், பழத்துடன் யானையைத் தேடிக்கொண்டு வந்தார் பாரதி. "சகோதரா இந்தா பழம், தேங்காய்" என்று அன்புடன் நெருங்கி கையை நீட்டினார். யானை அதை வாங்கத்தான் வந்ததோ, மதத் திமிரில் தட்டிவிடத்தான் செய்ததோ தெரியவில்லை. தும்பிக் கையை வீசியது. அடுத்த கணம் பாரதி யானையின் காலடியில் மூர்ச்சித்துக் கிடந்தார்.மக்கள் இன்னது செய்வதென்று தெரியாமல் தவித்தனர். 'யானை காலடியில் பாரதி கிடக்கிறார்' என்ற செய்தி திருவல்லிக்கேணி முழுவதும் தீப்போல பரவியது. எங்கோ இருந்த குவளைக் கண்ணன் காதிலும் விழுந்தது. ஓடோடி வந்த குவளைக் கண்ணன், யானை இருந்த இரும்புக் கிராதிக் கோட்டத்திற்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். ரத்தப் பிரவாகத்தில் கிடந்த பாரதியை எடுத்து நிமிர்த்தி, தோளில் சார்த்திக்கொண்டு வெளியே கொண்டுவந்து சேர்த்தார்..


பாரதியை மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் மற்றும் சிலரும் ஒரு வண்டியில் வைத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பாரதிக்கு உடம்பெல்லாம் காயம். ஏற்கனவே பூஞ்சையான உடலில் மரண வேதனையை உண்டாக்கின. பாரதி சில நாட்கள் வலியால் அவதிப்பட்டார். ஆனால், விரைவில் குணமாகிவிட்டார்.

யானை சம்பவம் நடந்தது ஜூன் மாதத்தில். அதன் பின் பாரதி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுதேசமித்திரனில் வேலைக்குப் போய்வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை நடத்தியிருக்கிறார். பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர்ப் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் பேசிவிட்டுத் திரும்பிவந்து, தமது ஈரோடு விஜயம் குறித்து 'மித்திரனு'க்கு தாமே எழுதித்தந்துள்ளார்.

ஆகவே, பாரதியார் யானை அடித்து மரணமடையவில்லை.


(பாரதியை அடித்த அந்த கோவில் யானையின் பெயர் அர்ஜுனன். வயது 40. இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1923 ஆகஸ்ட்டில் அந்த யானை இறந்துபோனது.)

திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் கடைசியாக வாழ்ந்து உயிர்நீத்த வீடு. டாக்டர் நஞ்சுண்ட ராவ் கட்டியது.

1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. விரைவில் அது ரத்தக் கடுப்பாக மாறியது. பாரதியின் உடல் நலமின்மை பல நண்பர்களுக்கு தாமதமாகவே தெரிந்தது.

தேசபக்தி நாளிதழில் வெளியான, தாம் எழுதாத தலையங்கத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறைக்குப் போய்க்கொண்டிருந்த வ.வே.சு. ஐயர், காவலர்கள் துணையுடன் செப்டம்பர் 11ஆம் தேதியன்று, பாரதியைப் பார்க்க வந்தார்.

பரிவுடன் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லிச் சென்றார். அதன் பின் பரலி சு. நெல்லையப்பர், நீலகண்ட பிரம்மச்சாரி, லக்ஷ்மண ஐயர் என்ற உறவினர் ஆகியோர் பாரதி வீட்டில் கவலையுடன் இருந்தனர். ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் தம்பி ஒரு ஹோமியோபதி வைத்தியரை அழைத்துவந்தார்.

அப்போது நடந்ததை நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்: "மருத்துவர், பாரதியை நெருங்கி என்ன செய்கிறது என்று கேட்டார். பாரதிக்கு ஒரே கோபம் வந்துவிட்டது. "யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கொன்றும் உடம்பு அசௌகரியம் இல்லை. உங்களை யார் இங்கே அழைத்தது? என்னைச் சும்மாவிட்டுப் போங்கள்" என்று இரைந்தார். வேறு வழியின்றி மருத்துவர் போய்விட்டார்."

பாரதியின் உடல்நிலையை முன்னிட்டு நீலகண்டன், நெல்லையப்பர், லக்ஷ்மண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று தீர்மானித்தார்கள்.

செப்டம்பர் 11ஆம் தேதி இரவில் அங்கிருந்த நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்: "அன்றிரவு பாரதி தமது நண்பர்களிடம் 'அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்போது ஆப்கானிஸ்தானின் மன்னராக இருந்தவர்.

சென்னை மாநகராட்சி அளித்த பாரதியின் மரணச் சான்றிதழ்.

முன் இரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்".

"எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக்கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கிவிட்டது" என்கிறார் நெல்லையப்பர்.

பாரதி காலமானது சரியாக இரவு 1.30 மணி. இதனை நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதியின் தூரத்து உறவினர் வி. ஹரிஹர சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பாரதியின் மரணச் செய்தியை பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், வி. ஹரிஹர சர்மா, வி. சக்கரைச்செட்டி, கிறிஸ்தவப் பாதிரியாகப் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ். திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலானோர் வந்தனர்.

பாரதியார் குடும்பத்திற்கு எப்போதும் ஆதரவு புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவி புரிந்தார்.

"பாரதியாரின் உடலை காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணி மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும் லக்ஷ்மண ஐயரும் குவளை கிருஷ்ணமாச்சாரியார், வி. ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்துசெல்லும் பாக்கியம் பெற்றோம்.

பாரதியின் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவரது உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்கரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.

பாரதியாரின் பொன்னுடலை அக்னிதேவரிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்" என அந்த கடைசி நாளை நெல்லையப்பர் விவரித்திருக்கிறார்.

பாரதிக்கு ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்கு கொள்ளியிடுவது என்ற பேச்சுவந்தபோது, யாரோ நீலகண்ட பிரம்மச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள்.

உடனே அவர், "என்ன நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிகூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?" என்று மறுத்துவிட்டார்.

முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான வி. ஹரிஹர சர்மா இறுதி காரியங்களைச் செய்தார்.

தென் தமிழ்நாட்டில் சித்திரபாநு கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ஆம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று அதிகாலை 1.30 மணிக்கு புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன.

பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.

குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.

பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!

சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.

கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.

அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.

பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாகச் சொல்லப்படுகிறது.

அத்துயர நாளில் பாரதி யானைக்குத் தேங்காய் பழம் கொடுக்கச் சென்ற போது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்.

ஆனால் பாரதி நெருங்கிய போது யானை அமைதியாகவே இருந்தது.

ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது..

கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா, தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து, குனிந்து பாரதியை தன் தோளில் போட்டுக் கொண்டார்.

யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்.

ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப் பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை.

கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது.

ஆனால் கட்டாந்தரையில் விழுந்ததில் முகம், மூக்கு, தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்.

காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்.

பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா? இல்லவே இல்லை!

கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்,

''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது. என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான். இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா?''

அங்கங்களின் காயம் ஆறத் தொடங்கியது.

பாரதியும்

சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்.

காயம் ஆறியதே தவிர, அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது.

சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது.

மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி.

செப்டம்பர் 11, அதிகாலை இரண்டு மணி.

வெளியேறத் துடிக்கும் உயிரோ பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களில் அந்த 39 வருஷக்

கவிதைக்கு மரணம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஒரு யுக எரிமலை எப்படி அணைந்ததோ?

ஒரு ஞானக்கடல் எப்படித் தான் வற்றியதோ?

குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா, நெஞ்சு கனத்துப் போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன.

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று, சுமந்தவர்களையும் சேர்த்து.

மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ?

அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே.

இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ.

தூக்கிச் சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள். ஆனால் துயரத்தின் சுமையை?

எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்...

பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க, ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

ஓராயிரம் கவிதைகளை

உச்சரித்த உதடுகளை

ஞான வெளிச்சம் வீசிய

அந்த தீட்சண்ய விழிகளை

ரத்தம் வற்றினாலும்

கற்பனை வற்றாத

அந்த இதயத்தை...

தேடித்தேடித் தின்றன

தீயின்நாவுகள்.

மகா கவிஞனே!

எட்டையபுரத்து கொட்டு முரசே!

உன்னைப் பற்றி உள்ளூரே புரிந்து

கொள்ளாத போது,

இவ்வுலகதிற்குப் புரிவது ஏது?

உன் எழுத்துக்களை வாழ்க்கைப் படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது?

ஒவ்வொரு முறையும் சலிக்காம படிக்கிறேன், அழுகிறேன், பகிர்கிறேன்!!!

கோ. மாரிமுத்து.கீழப்பட்டு.




" பஞ்சத்துக்கு புலி " 


ஒரு ஊரிலை சின்னதம்பி எண்டு ஒரு பெரிய ஆள் இருந்தார் . அவரிட்டை இருக்கிற ஒரு குணம் என்னவெண்டால் தீராத பிரச்னை எல்லாத்தையும் தீர்க்கிறதிலை சின்னதம்பியர் தான் சிங்கன் . இப்பிடித்தான் ஒருநாள் ஒருதற்றை வீட்டு ஆட்டுக்குட்டி ஒண்டு விளையாட்டுதனமாய் தன்ரை தலையை ஒரு மண் குடத்துக்கை குடுத்துப்போட்டுது .




பாலியல் தொழில் 


ஹாய் கேர்ல்ஸ் அண்ட் போய்ஸ் ,காலங் காத்தாலை எழும்பி குளிரிலை நடுங்கின உடம்புக்கு சுடுதண்ணியாலை சுளுக்கெடுத்து திருனூத்தை அள்ளி பூசிக்கொண்டு ஒரு தேத்தண்ணியோடை பெட்டியை துறந்தன். ஐ மீன் கொம்பியூட்டரை . அட ஹப்பியாய் லீவு நாளிலை இருப்பமெண்டு பெட்டியை திறந்தால் அங்கை சனி நிண்டு தைய்யா தக்கா போடுது .  சுறுக்கருக்கு ஒரு கூட்டாளி பெடி ஒருத்தன் முகனூலிலை இருக்கிறான். 

பெடி கவிதையள் எழுதிறதிலை ஆள் விச்சுழியன் கண்டியளோ. அவன் ஒரு பதிவை போட்டிருந்தான். நானும் என்ன ஏது எண்டு ஒருக்கால் எட்டிப் பாத்தன். பெடிக்கு என்ன கிரகமாற்றமோ தெரியேலை அப்பிடியொரு பதிவு.அவன்ரை பதிவை பாத்து எனக்கு மண்டை விறைச்சுப்போச்சுது. பிரச்சனை என்னவெண்டால் டில்லியிலை இருந்து பாலியல் தொழிலாளியள் காசு செத்து குடுத்தது பெடிக்கு குடைச்சலாய் போச்சுது. அது துடக்கு காசு. அவை எப்பிடி குடுக்கேலும்? அதோடை அவை விபச்சாரியள் ( நாங்கள் ஊரிலை சொல்லுவம் சைவேயள் , டிமூக்கள் ) எண்டு பெடி கொதிக்குது.

அப்ப நான் சொன்னன் , மோனை ஒருக்காலும் செய்யற வேலையை கிலிசை கெடுத்தாதை. எல்லாருக்குமே செய்யிற வேலை கடவுள் மாதிரி. அதோடை பாலியல் தொழில் செய்யிற பெட்டையளுக்கு  அவையின்ரை உடம்பாலை தான் தூசி பிடிச்சதே ஒழிய மனசாலை இல்லை. அவை குடுத்த காசுக்கு புறட்டணியம் படியாதை. அவையள் தாற காசை உப்பிடி ஆம்பிளைத்தனமாய் பாக்காதை எண்டு சொன்னன்.

அதுக்கு பெடி சுறுக்கரை பாத்து என்ன சொல்லுறான் எண்டால், விபச்சாரியை விபச்சாரியெண்டு சொல்லாமல் வேறை என்னவெண்டு சொல்லுறது. விபச்சாரியை எங்கடை சனம் ஏத்து கொள்ளுறேலை. நீங்கள் என்ன விசர் கதை கதைக்கிறியள்?  எண்டு என்னைப் பாத்து கேக்கிறான். இதாலை இண்டைக்கு இவன் ஐயம்பிள்ளையோடை கொட்டில்லுக்கு போற புறோக்கிறாமை நிப்பாட்டிப் போட்டன். 

பெடியள் எனக்கு இப்ப ஒரு விசயம் தெரியவேணும். உலகம் இப்ப மாறி எங்கையோ போட்டுது.பெடி சொன்ன சொல்லுக்கு பதிலாய் பாலியல் தொழிலார்கள் எண்டு சொல்லு இப்ப வந்திருக்கு. அதோடை பாலியல் தொழிலை ஒரு தொழிலாய் சட்டமாக்கி அதுக்கு வரியும் கட்டிற நிலமை இபத்தையான் உலகத்திலை இருக்கு. 

ஒரு பால் ஆக்களையே கலியாணம் கட்டிற அளவுக்கு சட்டமும் சனங்களின்ரை யோசினையளும் முன்னேறின நேரத்திலை இந்தப் பெடி தான் பிடிச்ச லப்பனுக்கு ( முயலுக்கு)  திறீ லெக்ஸ் எண்டு நிக்கிறான் பாருங்கோ. அதோடை இந்த பெடியள் காதும் காதும் வைச்ச மாதிரி தங்கடை அமர் அடக்க  பெடிச்சியளிட்டை  போய் கொண்டு வெளியாலை தாங்கள் எதோ சுத்தம்வெள்ளை எண்ட மாதிரி விலாசம் காட்டிக்கொண்டு பெடிச்சியளை மட்டும் கிலிசை கெடுத்திறது எந்த ஊர் ஞாயம் எண்டு எனக்கு விளங்கேலை கண்டியளோ . 

அதோடை அவளவையள் உதவி ஒத்தாசை ஒண்டும் மற்ற சனத்துக்கு செய்யக்கூடாது எண்டு பெடி சொல்லுது. இது ஆம்பிளைத் தனமான செடில் கதை இல்லாமல் வேறை என்னெண்டு சொல்லுறுது ??

சுருக்கு சுறுக்கர் 


வாய்ப் போர்


ஓர் ஊரில் ஒரு பெண் இருந்தாள். அவளின் பெயர் முத்துலெட்சுமி. அவள் ஒரு வீட்டில் வசித்து வந்தாள். 
அவள் இரண்டு குழந்தைகளை வளர்த்து வந்தாள். 

முதாலாவது மகன். இரண்டாவது மகள். மகனின் பெயர் ராமு. மகளின் பெயர் பிரியா. 
முத்துலெட்சுமி தன் பிள்ளைகளை அடித்தும் திட்டிக் கொண்டும் தான் இருப்பாள். அவர்களும் பயங்கர சேட்டைக்காரர்கள். அந்த இரு குழந்தைகளும் முத்துலெட்சுமியின் தங்கை குழந்தைகள். தங்கை இறந்து விட்டதால் தங்கையின் குழந்தைகளை முத்து லெட்சுமி வளர்க்கிறாள். 

முத்துலெட்சுமிக்குக் குழந்தை இல்லை. கணவர் இறந்து விட்டார். காலையிலிருந்து இரவு தூங்கும் வரை முத்துலெட்சுமி அந்த இரு குழந்தைகளையும் அடித்தும், திட்டிக் கொண்டும் இருப்பார்.

அவர்களைத்தான் என்றில்லை, முத்துலெட்சுமி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட எப்போதும் சண்டையிட்டுக் கொண்டேதான் இருப்பார். தண்ணீர் பிடிக்கப்போகும்போது தான் கடுமையாகச் சண்டையிடுவார். 

அதனால் மற்ற வீட்டுக்காரர்களுக்கு முத்துலெட்சுமியைச் சுத்தமாகப் பிடிக்காது.
ஆனால் முத்துலெட்சுமி வாயைத் திறந்தாலே அந்தத் தெருவே அலறும். முத்துலெட்சுமியின் புகழும் இவ்வாறே பரவத் தொடங்கியது.
சில நாட்கள் கழிந்துவிட்டன.

அப்போது முத்துலெட்சுமி வசிக்கும் நாட்டுக்கும் பக்கத்து நாட்டுக்கும் சண்டை வந்தது. ஆனால் வழக்கமான முறையில் ஆயுதங்களால் போர் செய்து மனிதர்கள் செத்துப்போவதையும் இருநாட்டு அரசர்களும் விரும்பவில்லை.

எதையும் பேசித் தீர்த்துக் கொள்வது போல, இருநாட்டுப் பக்கமிருந்தும் மிக அதிகமாகப் பேசியே சண்டை போட்டுக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தனர்.
இரு நாட்டு அரசர்களும், தன் நாட்டில் யார் காது கிழியப் பேசிக் கொண்டே இருப்பாரோ அவர் அரண்மனைக்கு வருமாறு அறிவித்தனர்.

ஊர் முழுக்க முரசு அறைந்து இதனை அறிவித்தனர்.
இதைக் கேள்விப்பட்டுத் தன் தேசபக்தி மேலிட முத்துலெட்சுமி முதலில் போய் நின்றாள். கடும் போட்டி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டனர். 
அரசர் ஒவ்வொருவரையும் பேசவிட்டுத் தேர்ந்தெடுத்தார். 

இரு நாடுகளிலுமே பயங்கரமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர்.
பின் இருநாட்டு மன்னர்களும் தேர்ந்தெடுத்து முடித்தனர்.
முத்துலெட்சுமியின் பேச்சைக் கேட்டு அரசர் ஆச்சரியப்பட்டு, முத்துலெட்சுமியைப் படைத்தளபதி ஆக்கினார். அதாவது பேச்சுப் படைத்தளபதி.
போர் ஆரம்பித்தது.

எல்லோரும் வாய் கிழிய, காது கிழியப் பேசினர். என்றாலும் நம்ம முத்துலெட்சுமியை யாரும் மிஞ்ச முடியுமா? முத்து லெட்சுமியின் பேச்சைக் கேட்ட எதிரி நாட்டுக்காரர்கள் அலறி அடித்து ஓடினர்.
கடைசியில் முத்து லெட்சுமியின் நாடு வெற்றி பெற்றது.
பின் அரசன் முத்து லெட்சுமியைக் கூப்பிட்டுப் பாராட்டி ஆயிரம் பொற்காசுகளை வழங்கினார். 

இது அனைத்தும் ஒரு சிறுமி தன் அப்பாவிடம் கூறிக் கொண்டிருந்தாள். தினமும் பக்கத்து வீட்டில் சண்டை போடும் அந்தப் பெண்ணை என்ன பண்ணலாம் என்று அந்தச் சிறுமி ஒரு கதை சொன்னாள். அதுதான் இந்தக் கதை. அந்தச் சிறுமி வேறு யாரும் இல்லை நான் தான்.

கலைமதி, எட்டாம் வகுப்பு (தமிழ்வழி) 
ஓ.சி.பி.எம்.மேல் நிலைப் பள்ளி, மதுரை

மஞ்சள் வெயில் - யூமா.வாசுகிக்கு ஒரு கடிதம்


அன்புள்ள யூமா.வாசுகி 

நலமா? தயவுசெய்து இந்த நலம் விசாரிப்பை மிக மிக மிக எளிதான சம்பிரதாயமான நலம் விசாரிப்பாகக் கருதிவிட வேண்டாம். பொழுது சாய்ந்த கடற்கரையில் அவ்வப்போது நம் கால்களை வருடிச் செல்லும் அலைகளுக்கு மத்தியில் நீங்களும் நானும் நெடுநேரம் கதை பேசிக் கொண்டிருந்தோமே, அப்போது நிகழ்ந்த நட்பின்பால், பாசத்தால் ஆன நலம் விசாரிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். 

யூமா.வாசுகி என்ற உங்கள் பெயரைக் கேள்விப்பட்டபோது, சுஜாதாவை எப்படி ஒரு பெண்ணாக யூகித்திருந்தேனோ அப்படியே உங்களையும் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு ஆண்மகனின் படத்தைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சி. அந்த புகைப்படத்தில் உங்களை எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஒரு ஆணாக.

சென்னையின் வெயில் நிறைந்த ஒரு காலைப் பொழுதில் அரசனின் அறையில் இருந்து கிளம்பும் போதுதான் தற்செயலாக அது நிகழ்ந்தது. நான் தற்செயலை பெரிதும் நம்புபவன். சமயங்களில் தற்செயலினுள் இறைவன் ஒளிந்து கொண்டுள்ளாரோ என்றெல்லாம் கூட யோசிப்பேன். அன்றைக்கு அரசனின் அறைக்கு நான் வண்டியில் சென்றிருக்கவில்லை. 
அங்கிருந்து மேடவாக்கம் செல்ல எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நூற்றி இருபது நிமிடங்களையும் வெறுமனே சென்னை மாநகர நெரிசலை வேடிக்கைப் பார்த்தபடி கடப்பதில் உசிதம் இல்லை. அரசனின் அலமாரியில் எதாவாது புத்தகம் சிக்காதா என்று நெடுநேரம் தேடிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை அலசியிருப்பேன், என்னுடைய அப்போதைய மனநிலைக்குத் தகுந்த எந்தவொரு புத்தகத்தையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இங்கு தான் தற்செயல் உள்ளே நுழைகிறது. மஞ்சள் வெயில் என் கையில் சிக்கியது. அதுவரையிலும் பேசாமல் இருந்த அரசனும் கூட 'தலைவரே செம புக்கு, அவசியம் படிங்க' என்றார். 

மறந்தே போனேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வாங்கியபோது நான் உடன் இருந்தேன். அவர் கூறிய வார்த்தைகள் நன்றாக நினைவில் இருக்கின்றன 'இந்த புக்கு எப்படியோ என் கைக்கு வந்தது. படிச்சிட்டு குடுத்துட்டேன். இதெல்லாம் பாதுகாக்க வேண்டிய ரகம் தலைவரே' என்றபடி வாங்கினார். அப்போது கூட அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளவில்லை. அல்லது வேறொரு பொழுதில் அவரோ இல்லை யாரேனுமோ என்னிடம் திணித்திருந்தாலும் கூட வாங்கியிருக்க மாட்டேன். காரணம் எனக்கான இவ்வருட வாசிப்புப் பட்டியல் நிரம்பி வழிகிறது. அதில் புதிய புத்தகங்களுக்கு நிச்சயமாய் இடமில்லை. அதனால் என்னளவில் மஞ்சள் வெயில் தற்செயலே. அந்த தற்செயலுக்கு அநேக நமஸ்காரங்கள். 

பேருந்தில் நமக்காக ஒரு இடம் கிடைத்த போதுதான் மெல்ல என் தோள்களில் கைபோட்டபடி கதை சொல்லத் தொடங்கினீர்கள். சில இடங்களில் நீங்கள் கூறுவது கதையா இல்லை கவிதையா என புரியாமல் விழித்தேன். ஒருவேளை கவிதையைத்தான் கதை போல் மாற்றிவிட்டீர்களோ என்ற ஐயம் கூட எழுந்தது. கேட்கலாம் என்றால் நீங்கள் கதை சொல்வதில் மும்மரமாய் இருந்தீர்கள். நானும் கேட்கும் ஆர்வத்தில் எல்லாவற்றையும் மறந்தேன். உங்கள் அருகில் அமர்ந்தபடி உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியாய் என்னை பாவித்துக் கொண்டேன். பேருந்து நகர நகர கதையும் நகர்ந்தது.

உண்மையைச் சொல்வதென்றால் மஞ்சள் வெயிலின் ஆரம்பப் பக்கங்கள் எனக்கு பிடிக்கவில்லை. மிக முக்கியமாக உங்கள் கதையின் நாயகனான பிரபாகரை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குத் தெரிந்த சில பிரபாகர்கள் இருக்கிறார்கள். மனதுக்கு மிக நெருக்கமானவர்கள், அவர்களோடு ஒப்பிடும் போது இந்த பிரபா ஒரு கோழை. வாழத்தெரியாதவன். 
ஒரு பெண்ணிடம் பேசத் தெரியாதவன். தன் காதலை வெளிபடுத்த தைரியமில்லாதவன். எதற்கெடுத்தாலும் பயந்து சாகிறவன். அவனிடம் இருக்கும் அந்த அதீத கற்பனை என்னை மூச்சு முட்டச் செய்கிறது. எனக்கே இப்படியென்றால் பிரபாவுக்கு எப்படி இருக்கும். ஆனால் பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். பிரபாவின் வித்து நீங்கள் என்பதால் உங்களை சிலாகித்தால் என்ன பிரபாவைக் கொண்டாடினால் என்ன. 

பிரபா ஒரு தேர்ந்த எழுத்தாளன். இயல்பில் அவன் ஓவியன் என்றாலும் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு தேர்ந்த எழுத்தாளன். தனக்கு ஏற்படும் உணர்ச்சிகளை இம்மி பிசகாமல் என்னுள் கடத்தியவன். அந்த ஒரே காரணத்திற்காக மட்டுமே பிரபா கூறிய கதையை கேட்கத் தொடங்கியிருந்தேன். பிரபாவுக்கு இன்னொன்றும் தெரிந்திருக்கிறது. அது கடிதம் எழுதுவது. அதனால் தானோ என்னவோ ஜீவிதாவின் மீது தான் கொண்ட பெருங்காதலை முழுக்க முழுக்க கடிதமாகவே எழுதிவிட்டான். 

அந்தக் கடிதம் ஜீவிதா கைகளில் கிடைத்ததா இல்லையா என்பது இல்லை என் கவலை. இப்போது பிரபா எப்படி இருக்கிறான். தொடர்ந்து ஓவியம் வரைகிறானா. தன்னை மறந்து போன தன்னுடைய ஜீவிதாவை மறந்துவிட்டு அவளுக்கு எழுதிய கடிதத்தைத் எரித்துவிட்டு வேறு துணையைத் தேடிக் கொண்டானா. இல்லை வழக்கம் போல கடற்கரை மணலில் புகையை ஊதிக் கொண்டு கடலோடு பேசிக்கொண்டு தனிமையில் போதையில் உழல்கிறானா. 

சில சமயங்களில் பிரபாகர் மீது பொறாமை வருகிறது. அவன் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் அந்த வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அதி அற்புதமான உவமைகள் ஒவ்வொன்றும் என்னை பொறாமை கொள்ளச் செய்கின்றன. எங்கிருந்து பிடிக்கிறான் இந்த உவமைகளை. சில சமயங்களில் அந்த உவமைகள் குமட்டலை ஏற்படுத்தினாலும் பல தருணங்களில் அந்த அதீத கற்பனையின் புள்ளிகளில் நானும் பிரபாவாகிப் போகிறேன். நான் பிரபாவகிப் போவதால் ஜீவிதாவின் வெறுமையை, அவள் இல்லாததால் ஏற்படும் தனிமையை உணர்கிறேன். இப்பொது பிரபா மீதான கோபம் குறைந்து என்னுடைய வேகம் முழுவதும் ஜீவிதாவை நோக்கிச் செலுத்தப்படுகிறது. 

பிரபா ஜீவிதாவுக்கு தொலைபேசச் செல்லும் தருணங்கள் அத்தனையும் ஒரு தேர்ந்த துப்பறிவாளன் கொலையாளியை கண்டுபிடித்தானா இல்லையா என்ற கோணத்திலேயே யோசிக்கச் சொல்கின்றன. என்னையும் அறியாமல் என்னுள் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஜீவிதா தைரியசாலி. பிரபாவை எளிதாக எதிர்கொள்வாள். ஆனால் இந்த பிரபா. சுத்தக் கோழை. ஐயோ எப்படியாவது தைரியத்தை வரவழைத்து ஜீவிதாவோடு பேசிவிடுடா என்று நாலு அறை அறைய வேண்டும் போல் இருக்கிறது. 

அவன் கையில் இருக்கும் தொலைபேசி ரிசிவரைப் பிடுங்கி தலையிலேயே அடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனாலும் எப்போதும் நானும் பிரபாவின் பிரதிநியாகவே இருக்க விரும்புகிறேன். ஜீவிதாவோடு சேர்ந்துகொண்டு பிரபாவை காயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ஏனென்றால் பிரபா ஒரு அப்பாவி. சந்தர்ப்பங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளாத் தெரியாமல் எண்ணங்களின் மூலம் பகடையாடப்படுபவன். 

ஆம் பகடையாடப்படுபவன். என்ன தன்னையே பகடையாக்கிக் கொண்டு முன்னும் பின்னும் உருண்டு கொண்டிருக்கிறான். எல்லாம் ஜீவிதாவுக்காக. கருணையே இல்லாத,வேண்டாம் நான் ஜீவிதாவை திட்டவில்லை. அவளைத்  திட்டுவது பிரபாவுக்குப் பிடிக்காது. 

நல்லவேளை வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் பிரபாவுக்கு துணையாக இருக்கிறாரே என்ற ஆறுதல் பெறுத்த நிம்மதி தருகிறது. அவர் அவனோடு இல்லாவிட்டால் நான் இங்கு நிம்மதியாக இருக்க முடியாது. பிரபாவுக்கு உதவி செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறார்கள். டேனியல் மகேந்திரன் சந்திரன் என எல்லாருமே இந்த பிரபாவைத் தவிர. தன்னைப் பற்றி எதையுமே வாட்ச்மேனிடம் பிரபா பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும் கூட பிரபாவுக்காக ஓடி ஓடி உதவுகிறார். அந்த நல்ல மனிதன் எப்படி இருக்கிறார் யூமா. கேட்டதாகச் சொல்லுங்கள். அந்த எஸ்டிடி பூத் பெண், பிரவுசிங் செண்டர் சிறுவன் எல்லாரையும். உங்களிடம் நிறைய பேச வேண்டும் யூமா. இல்லை நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும். பிரபாவையும் ஜீவிதாவையும் வாட்ச்மேனையும் மறக்கமுடியாதபடி ஒரு கதை கூறினீர்களே. யாராலும் எழுத முடியாத கதை அது. அதைப் போல வேறொரு கதை நீங்கள் கூறி நான் கேட்க வேண்டும் யூமா. அதுவரைக்கும் மீண்டும் ஒருமுறை பிரபாவின் கடிதத்தைப் படித்துவிட்டு வருகிறேன். 

அன்புடன்
சீனு 

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்


இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கான மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது ஜெயமோகன் என்பதையும் கடந்து புத்தகத்தின் தலைப்பு தான். ஆன்மீகக் கதைகள், சாமிக் கதைகளை விடவும் பேய்க்கதைகளின் மீது இயல்பாகவே நமக்கொரு ஈர்ப்பு இருக்கிறது. ஒன்று 'பேய் இருக்கிறதோ' என்ற பயமாக இருக்கலாம். இல்லையேல் 'பேய் இருந்துவிடுமோ' என்ற அச்சமாகவும் இருக்கலாம். 

ஆனால் பேய் என்றால் உள்ளுக்குள் எங்கோ ஓர் மூலையில் நம்மையும் அறியாமல் ஏதோ ஒன்று எட்டி உதைக்கத் தான் செய்கிறது. அதுவும் பனி சூழ்ந்த நள்ளிரவுகளில் என்றால் கேட்கவே வேண்டாம். நம்முடைய முதுக்குப் பின்னால் யாரோ ஒருவர் அமர்ந்து கொண்டு நம்மையே வெறித்து நோக்குவது போல வெகு எளிதாக கற்பனை செய்ய முடிகிறது. அது பொய் என்பது பகுத்தறிவுக்குத் தெரிந்தாலும் ஆழ்மனம் நம்ப மறுக்கிறது. எதிர்பாராத ஒரு அச்சத்தை, புகை போன்ற உருவத்தை வெகு இயல்பாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 


அந்த திகிலை இன்னொருவரின் அனுபவங்களின் வாயிலாக, கதைகளின் மூலமாகப் படிக்கும் போது ஒன்று இவன் என் இனம் என்று தோன்ற வைக்கிறது. இல்லையேல் பேய் பயம் நமக்கு மட்டும் இல்லை அது ஒரு பொதுச்சொத்து என அகமகிழத் தோன்றுகிறது. 'பேய் இருக்கு இல்ல' என்ற தர்க்க ரீதியான ஆராய்ச்சிகளையும் தாண்டி பேய்க்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கவர்ச்சி அது. 

பேய்க்கதைகளைப் படித்து வெகுநாட்கள் ஆகிறது. சிறுவர்மலரிலும், தங்கமலரிலும் அம்புலி மாமாவிலும் படித்த கதைகள் வளர்ந்து பெரியவனானதும் எங்குமே படிக்கக் கிடைக்கவில்லை. அதையும் மீறி பேய்க்கதை போன்ற ஒன்றைப் படித்தேன் என்றால் அது கொலையுதிர்க் காலம். சிற்சில இடங்களில் சுஜாதா மிரட்டியிருப்பார். அவ்வளவுதான் பேய்க்கதைகளுக்கும் எனக்குமான தொடர்பு. 

ஆனால் பேய் குறித்த அனுபவக் கதைகள் இன்னும் அலாதியானது. பள்ளிகாலங்களில் தொடங்கி இன்று வரைக்கும் என்னோடு பயணிப்பது. மாதத்தில் ஒருவராவது பேயைப் பற்றி பேசிவிடுகிறார்கள். ஆட்டோவில் பேய், இரவுக் கட்சி முடிந்து வீடு திரும்பும் போது வழி கேட்கும் பேய், வெள்ளிகிழமை எ,.ஆர். கிணத்துப் பேய் என்று பேய் சார்ந்த அனுபவங்கள் கதைகளை விட மிக சுவாரசியமானவை. எங்கே இந்த வரியை என்னோடு சேர்ந்து கூடவே ஒரு பேயும் வாசித்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைத்துப் பார்த்தால் அது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு பேய்க்கதைகளின் பின்னணியிலும் ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் இருக்கும் என்கிறார் ஜெமோ. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் சிறுகதைத் தொகுதி கூட அப்படியாகப் பின்னப்பட்ட ஒன்று தான். இத்தொகுதியில் மொத்தம் பத்து கதைகளை இருக்கின்றன. அவற்றில் சில உயிர்மை இதழிலும் இன்னும் சில வேறு இதழ்களிலும் வெளிவந்தவை. நிழல்வெளிக் கதைகள் என்ற தலைப்பில் உயிரமைப் பதிப்பகம் மூலம் வெளிவந்த புத்தகம் தற்போது மறுபதிப்பாக 'பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்' என்ற தலைப்பில் கிழக்கு வெளியீடாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இமையோன் - விடுமுறை தினத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் களிக்கச் செல்லும் நாயகன், திடிரென அடித்துப் பெய்யும் பெரு மழையில் வழி தவறி ஒரு பாழடைந்த வீட்டினுள் தஞ்சம் புகுகிறான். அங்கு நடப்பது எல்லாமே இயல்பாக இருந்தாலும். 'என்ன இயல்பாகவே முடியப் போகிறது' என்று யோசிக்கும் நொடியில் கதையின் போக்கை மாற்றுகிறார் ஜெமோ. அகம் சார்ந்த வர்ணனைகள் ஜெமொவிடம் எப்போதும் இயல்பாகவும் ரசனை மிக்கதாகவும் வெளிப்படும். அவ்வகையில் இத்தொகுதியின் சிறந்த கதையாக இக்கதை முக்கியமானது. மலைகள், மலைகளில் நிகழும் கணங்கள் பற்றிய ஜெமோவின் விவரணை அழகானது.


பாதைகள் - பேய் நடமாட்டம் உள்ளதாக அஞ்சப்படும் வீட்டிற்கு ஒரு ஓவியர் குடி வருகிறார். அந்த வீடு முழுவதும் தன் ஓவியத் திறமையின் மூலமும் வெறும் கதவுகளையும் ஜன்னல்களையும் தத்ரூபமாக வரைகிறார். அவை மாயக்கதவுகள். எங்கு நுழைந்தால் எங்கு வெளிப்படுவோம் என்பதை அறியமுடியாத மாயச் சுழலை உருவாக்கக் கூடியவை. அந்தச் சுழலினுள் நாயகன் சிக்கிக் கொள்கிறான். அந்த வீட்டில் பேயாக நடமாடுபவர்களை அச்சுழலினுள் சந்திக்க நேர்கிறது. அங்கிருந்து அவன் வெளிப்பட்டானா இல்லையா என்பது தான் கதை. இந்தத் தொகுதியை நள்ளிரவில் படித்தேன் என்பதால் பேய்க் கதைகளின் அதீத்தை இக்கைதையின் மூலம் உணர முடிந்தது.  

அறைகள் - கொஞ்சம் வித்தியாசமான கதை. வஞ்சம் தீர்த்துக் கொள்ள அவசியம் இல்லாமல், அடங்கா பாசத்தினை வெளிபடுத்தக் கூடிய கதை. ஆனால் இதன் முடிவு பின்நவீனத்துவத்தின் பாணி என்பதால். முடிவு அவரவர் அவதானிப்பில். 

யட்சி, ஏழுநிலைப் பந்தல் சுவாரசியமான வாசுப்பனுபவத்தைத் தரக்கூடியவை. தம்பி, ஐந்தாவது நபர் வழக்கமான பழிவாங்கும் கதைகள் என்றாலும் சுவாரசியமானவை. இவையல்லாமல் குரல், ரூபி இந்த இரு கதைகளும் மனிதர்கள் விலங்குகளின் மூலம் வேட்டையாடப்படுதலாக அமைந்த கதைகள். 

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளுமே ஆசிரியர் கதை கூறுவது போல் அல்லாமல் கதையின் நாயகன் தன்னிலையில் இருந்து கதையை விவரிப்பது போல் கூறப்பட்டவை. அதுவே இந்தக் கதைகளுக்கு கூடதல் சுவராசியத்தை அளிப்பதாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு கதையிலும் ஒரு கடந்தகாலம் இருக்கிறது. கடந்தகாலம் நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்ளும் போது அந்த ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் என்ற புள்ளியில் வந்து தன்னை இணைத்துக் கொள்கிறது. அங்கு பேய்களும் தேவதைகளும் உயிர்பெற்று உச்சம் அடைகிறார்கள்.,

பெரியவர்களுக்கு சிறப்பான வாசிப்பனுவத்தையும் குழந்தைகளுக்கு அட்டகாசமான பேய்க்கதைகளை கூற உகந்த கதைகளையும் கொண்ட தொகுதியாக இத்தொகுப்பைப் பார்க்கிறேன். மேலும் வெறும் பேய்கதைத் தொகுதியாக அல்லாமல், ஒவ்வொரு சிறுகதையிலும் ஜெமோ முன்வைக்கும் நுணுக்கமான விளக்கங்கள் விவரணைகள் ஒரு சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்கூறுவதையும் உணர முடிகிறது.

நஷ்டம்!!

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால்50 கோடிகள்நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு
"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.
அதற்குஇவர் "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன்" என்றார்.
"எவ்வளவு ரூபாய் நஷ்டம்?" என்றால் அவர்.
"50 கோடி ரூபாய்" என்றார் இவர்.
"அப்படியா, நான் யார் தெரியுமா?" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.
அசந்து போனார் இவர்...
"சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா?" என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் "ஆமாம் எல்லாம் சரியாகி விடும்" என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி "இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன்" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். "நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம்500 கோடி ரூபாய் உள்ளது, ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது? எதனால் ஏதற்காக ஏற்பட்டது? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன . தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது.

சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் "எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர்?" என்றார்
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?" என்றார்
இவர் "இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள்?" என்றார்.
அந்த பெண்மணி "இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார்" என்றார்
ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.
நம்மால்எதையும் செய்ய முடியும் என்று முதலில் நாம் நம்பவேண்டும். அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.


குடும்பம் என்றால் கொஞ்சம்
அனுசரித்து வாழுங்கள். 

..... 
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...
கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி
அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!!
ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்?
"ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்....
நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....
வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....
இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !

பெண் என்றால் அடிமையா என்ன..?
கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?
எனக்கே அசதியா இருக்கு.....
இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.
சும்மா கடுப்பேத்திகிட்டு"....
முதியவள் சிறு புன்னகையோடு,
"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!
ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....
ரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!
காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...
ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....
பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....
எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...
நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...
என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...
தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!
இப்ப அவங்க இல்லை,....!
நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...
என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!!
அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....!
அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது....!
அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,...!
Latter போட்டா படிக்க மாட்டாங்க...!
முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...!
இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... !
சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், !
வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.!..
கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...!
விழியோரம் நீர் தேங்க..,
அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,!
அதிகமாக போற்றணும்....!!!
கணவனின் வெற்றியோ தோல்வியோ,!
பெருமையோ அவமானமோ...!!!.
லாபமோ...
நட்டமோ...
மனைவிக்கு அனைத்திலும்..
சம பங்கு உண்டு...!
தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....
வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்....!
மிகவு‌ம் வேதனை படுத்தும்.!
எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..
பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....
இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!
பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...!.
அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.! 
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது.....
பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...
பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....!
இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்.....!
எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"
இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!
சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !.
என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!!
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...
நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.!
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, 
hi sir how r u? Nice to meet u என்கிறோம்...!
இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்...!
பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம் ..!
அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...
அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது....
ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"
வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை.... மனைவி மதிக்கிறாளா...? 
மனைவியை கணவன் மதிக்கிறானா...???
இல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்...
கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,
ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு
மனைவியும் சொல்றதில்லை...
மனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்.. 
இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மேல்
இதெல்லாம் சொல்லணும்...!!
அப்படி ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்.....
வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.!!!.
அகம் முகம் மலர்ந்த நட்பே..!! குழுவிற்க்கு
வந்த தகவல் பறிமாற்றப்பதிவு...
கணவனோ.... மணைவியோ...
மருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ... இருந்தால்...
கூட இருந்து கவனிப்பவர்... கணவனோ... &
மணைவியோ தான்...
சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்....
முதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்..
பின்னர் படிப்படியாக குறைந்து விடும்..
பின்னர் மகளோ... மகனோ.... நெருங்கியவர்கள் மட்டுமே...
வந்து போவார்கள்......
இறுதியில் கணவன் மனைவி மட்டுமே...
ஒருவருக்கொருவர்....
துணையாக இருப்பர்..
இறுதியாக ஒன்றுங்க...
நம்முடைய. 
உறவு..... நட்பு... குலம்.... சாதி... பங்காளி... பகையாளி... இனம்...சனம்.... பணம்... முதலாளி.... தொழிலாளி..... கட்சிக்காரன்.... எல்லாமே.....
ஞாபகமிருக்கட்டும்..!!!
கூடிக்கலையும் காக்கா கூட்டமே....
ஆக மனைவி... மகள்...மகன்... & இரத்த உறவுகளே...
நம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பார்...


ஆசிரியர் : ஜெயமோகன்

 வாழ்க்கையின் உண்மை



ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
 



இரண்டு தேவதை

அலுவலகம் முடித்து படுக்கைக்குள் நுழைந்தபோது இருந்த உறக்கம் எங்கே போனதெனத் தெரியவில்லை. எவ்வளவோ முயன்றும் தூக்கம் வரவில்லை. கண்களை மூட நினைக்கும் போதெல்லாம் மேலிருந்து கீழாக இடமிருந்து வலமாக ஓடத் தொடங்கும் எண்களின் ஓட்டம் மிரட்சியாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் முழித்துக் கொண்டே இருப்பது. மணி ஒன்றைக் கடந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். இருள் கண்களுக்குப் பழகியிருக்க, விட்டதையே வெறித்துக் கொண்டிருந்தேன். 

அப்போதுதான் அந்த அதிசியம் நிகழ்ந்தது. திடிரென அறையினுள் நுழைந்த தேவதை என்னோடு பேசத் தொடங்கியது. 'உன்ன பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. என்ன வேணும் கேளு' என்றது அந்தத் தேவதை. சோ இது வரம் கொடுக்க வந்த தேவதை. வெள்ளை உடை, முதுகுக்குப் பின்னால் வளர்ந்த சிறகுகள் எல்லாம் இல்லை. திடிரென அறையினுள் நுழைந்து உனக்கென்ன பிரச்சனை எனக்கேட்டால் யாரால் தான் நம்பாமல் இருக்க முடியும். ஆக வந்திருப்பது தேவதையே தான். நம்பி என் கதையைக் கூறலாம். கூறினேன். 

'உன் பிரச்சன பெரிய பிரச்சனையா இருக்கு. உனக்கு என்னால மட்டும் உதவ முடியாது. என்னோட பிரண்டு தேவதை ஒண்ணு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அசால்ட்டு பண்ணுவோம் கொஞ்சம் பொறு' என்று கூறி மறைந்துவிட்டது. மறைந்த சிறிது நேரத்தில் இரண்டு பேருமாக அறைக்குள் நுழைய 'சரி இப்ப சொல்லு உன் பிரச்சனை என்ன' என்று கேட்க, 'அதான் சொன்னனேன. நீங்க என்ன என் கிளையன்ட் மாதிரி கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப கேட்கிறீங்க' என்றேன் கடுப்பில். 'ஓ இது தான் உன் பிரச்சனையா, சரி உனக்கு ரெண்டு நாள் லீவ் கிடைக்குமா என்றது இரண்டாவதாக வந்த தேவதை'. '

கிடைக்கும், ஆனா நான் வொர்க் பண்றது சப்போர்ட் ப்ராஜாக்ட். இப்படி திடிர்ன்னு கேட்டா கிடைக்காது. முன்னாடியே சொல்லணும். இல்ல பாஸ் கோச்சுப்பார்' என்றேன். 'சரி ரெண்டு நாள் லீவ் அப்ளை பண்ணு நான் பார்த்துகிறேன். ஆனா இதேமாதிரி அவதிக்குள்ளான வேறு சில நண்பர்களும் உன்கூட வருவாங்க பரவாயில்லையா' என்றது முதல் தேவதை. 'நண்பர்கள்ன்னா ஓகே, எதிரிகள் நாட் அலவுட். எனக்கு அவங்களை சமாளிக்கத் தெரியாது' என்றேன் சிரித்துக்கொண்டே. 'ஷட்' என்றது அந்த தேவதை. ஷட்டினேன் என்று எழுதிய என்னை சுஜாதா மன்னிப்பாராக!

வாழும் விதி! (சிறுகதை)

மரக்கிளையின் உச்சியில் இருந்த அந்தச் சின்னஞ்சிறு பறவையின் கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. தாய்ப்பறவை எங்கோ சென்று இறைதேடிக்கொண்டு தன் குஞ்சுகளுக்குப் புகட்ட திரும்பிவந்தபோது திடுக்கிட்டு அலறியது.ஒரு பாம்பு மெதுவாக ஊர்ந்தபடி அந்தக் கூட்டை நெருங்கியது. அந்தப் பறவைக் குஞ்சுகளை உண்பது அதன் நோக்கம்.
தாய்ப்பறவையால் அந்தப்பாம்பை என்னசெய்ய முடியும்? பாம்பண்ணா! பாம்பண்ணா!
என்று அலறியது.பாம்பு சட்டை செய்யவில்லை.

பாம்பண்ணா! பாம்பண்ணா! ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளண்ணா! மீண்டும் மீண்டும் தாய்ப்பறவை அலறியது. திரும்பிப்பார்த்த பாம்பு,
ஏன் எதற்காகக் கத்துகிறாய்? என்றது
அண்ணா! நீங்க எவ்வளவு பெரியவங்க! உங்களக் கண்டு பயந்துட்டு இருக்கிற எங்கமேலெ நீங்க இரக்கப்படக் கூடாதா?
அப்படியா?
ஆமாங்க அண்ணா உட்டுடுங்க! நாங்க பொழைச்சுப் போறோம்
நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லுவியா?
சொல்லுங்க அண்ணா!
உன் வாயிலெ என்ன வெச்சிருக்கே?

என் குஞ்சுகளுக்கு கொஞ்சமா இரை கொண்டுவெந்தேன் அண்ணா! என்னது?
சின்னப் புழுக்கள் அண்ணா!
இப்பச் சொல்லு! நீ ஏன் அந்தப் புழுக்களுக்கு இரக்கங் காட்டலே?
அந்தப்பறவையால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.


இதுதான் நமது வாழ்க்கை விதி! உன்னைவிட பலங் குறைந்தது உனக்குத் தீனி! என்னைவிட பலங்குறைந்தது எனக்குத் தீனி! அப்படி இல்லாம வாழ வழி இருக்கிற மனுஷங்களே அப்படி வாழ்றது இல்லே! நம்மாலெ எப்படி வாழமுடியும்? 

இருந்தாலும் என்னை அண்ணான்னு அன்போடு பலமுறை கூப்பிட்டெ இல்லே, அதனால உனக்கு என்னாலெ எந்த ஆபத்தும் இல்லெ. என் பசிக்கு நான் வேறெ வழி பாத்துக்கிறேன்!
பாம்பு போய்விட்டது. அந்தத் திசையையே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றது தாய்ப்பறவை!
- சுபாஷ் கிருஷ்ணசாமி



நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு !
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர்

சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .


சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .


சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.





வரதட்சணை

நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின்
கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை
முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்
கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி
வேண்டினான். 

இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ
நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான் இறைவன்.
இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன் வேண்டுதலை இறைவனிடம் கூறினான். எந்த வேண்டுதல் என்னவென்றால் " என் மனைவிக்கு
ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை வேண்டாம் " என்று வேண்டிக்கொண்டான்.
இறைவனும் அவனின் வேண்டுகோளை நிறைவேற்றினான். உங்களது வேண்டுகோள்
என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம் வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன்.

சுமார் இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து அவனின்
கனவில் இறைவன் தோன்றி தன் வேண்டுகோளை வைத்தான். 
அவன் மகன் திருமணத்தின் பொழுது பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை
கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள வேண்டும் என்றான் இறைவன். 

இதை கேட்டு அதிர்ந்து போனான் அவன்.
பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே
என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என்
தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று கதறினான்.
" நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும் நீ திருமணம் செய்துகொள்ள ஒரு பெண் வேண்டும் உன்னை அரவணைக்க ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண் வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்
வேண்டும் " உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை
பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால்
ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி
பாரமானது ?
நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை
பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ?
"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாகதெரியாது ".
யாரை இழக்க வேண்டும் !!
ஒரு உயர் நிலை பள்ளியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு போடுல உனக்கு பிடித்த உறவுமுறைகளை 30பேரை எழுது என்றார் ,,,
மாணவன் ,,, அப்பா, அம்மா , தாத்தா , பாட்டி ,மனைவி , மகன் ,மகள், அக்கா ,தங்கை, அண்ணன் ,தம்பி, சித்தப்பா , சித்தி ,மாமா , அத்தை , காதலி, நண்பன், ,இப்படியாக 30 பேர் எழுதினான்,,,
டீச்சர் ,,,கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க ,வேண்டும் ,,,,யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி என்றார் ,,.
மாணவன் ...காதலி, நண்பன் , பக்கத்து வீட்டுகாரர்,,,இவர்களை பெயரை அழித்தான்,,,
டீச்சர் ,,,மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார்,,,
மாணவன் ,,., இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான்,..கடைசியாக அப்பா, அம்மா, மனைவி ,மகன்,மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சர் ,,,இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும் ,,,யார் நீக்குவாய் என்றார்,,,
மாணவர்கள் அனைவருக்கும் கோபம் ,,,,
மாணவன்,,,வருத்தத்துடன் அப்பா , அம்மா பெயரை அழித்தான்,,,
டீச்சர் ,,மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார் ,..
மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ,,,யார் பெயரை அழிப்பான் என்று,,.
மாணவன் ,,, மிகுந்த சோகத்துடன் மகன், மகள் பெயரை அழித்தான்,..கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது ,,,
டீச்சரும்,,,மாணவர்களும் ,..ஆச்சரியமாக கேட்டார்கள் ,.மகன், மகள் பெயரை அழித்து விட்டு ,..எதற்காக மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை,..
அதற்கு மாணவன் ,,,, மகள் எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாள்,,,மகன் அவன் மனைவி குழந்தை என வாழ்வான்,,,
கடைசி காலம் வரை என்னோடு வாழ கூடியவள் மனைவிதான்,,,என்றான்,,,,
வாழ்க்கைத் துணை மனைவி மட்டும்தான் நாம் இறக்கும் வரை நம்முடன் வாழ கூடிய ஒரே உறவு,,,,,
இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்,,,

ஓர் இளைஞன் B.E பட்டதாரி!

எங்கெங்கோ வேலை தேடினான் அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.எங்கும் வேலை கிடைக்க வில்லை.ஒரு நாள்அந்த ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது.
அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா? என்று அந்த சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான்.அவனும் வேலை காலி இல்லை என்றான்.பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
BA - MA பட்டதாரிகளுக்கு இந்த கதை சமர்ப்பணம் !
என்று கெஞ்சினான்.அந்த முதலாளி சொன்னான்.தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்சேர்ந்தான்.
குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான்.ஒரு நாள் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது.பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. 

அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில் இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.அடி அவ்வளவாக படவில்லை. ஆனால்இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாகஇருந்தது.நம்மாள் நடு நடுங்கிப் போனான். 

வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.பேச நா கூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.
சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி சிங்கம் மெல்ல வாயைத் திறந்து பேசியது “ஏ! B.A! பயப்படாதே நான் M.A, ”
என்றது.


கரடி வித்தைக் காரன்

 

ஒரு ஊர்ல்ல ஒரு கரடி வித்தைக் காரன் இருந்தான். அவன் கரடியை குட்டிக் கரணம் போட விட்டு காசு கேட்பான்.

காசு அவ்வளவாக வசூலாகாத நிலையில் அவனது அசிஸ்டண்ட் வேறு ஏதாவது ட்ரை செய்யலாம் என்றான்.

வித்தைக்காரனோ, பார்ப்பவர்களை சவாலுக்கு கூப்பிட்டு பெட் கட்ட வைக்கலாம் என்று முடிவு செய்து, "யாரேனும் என் கரடியை சிரிக்க வைத்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் பரிசு பெறுவீர்கள். தோற்றால் நீங்கள் எனக்கு பத்து ரூபாய் கொடுத்தால் போதும்" என்றான்.

பலரும் முயன்று தோற்று பத்து பத்து ரூபாய் இழந்தனர். கரடிக் காரனிடம் பணம் குவிந்தது.

இறுமாப்பில் இருந்தான். அவனை யாரும் ஜெயிக்க முடியவில்லை.

ஒரு நாள் அந்தக் கூட்டத்தில் ஒருவன் வந்தான். "நான் உன் கரடியை சிரிக்க வைப்பேன்" என்றான்.

அவனை ஏளனமாகப் பார்த்த கரடிக்காரன், "செய்! பார்க்கலாம்!" என்றான்.

பார்வையாளன் மதுரைக் காரன். கரடியின் காதில் கிசுகிசுவென்று என்னவோ சொன்னான்.

கரடியும் பகபகவென்று சிரித்தது.

அதிர்ச்சி அடைந்த கரடிக்காரன் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வந்தது.

ஆனாலும் தோல்வியை ஏற்க விரும்பாமலும் விட்ட ஆயிரம் ரூபாயை மீண்டும் பிடிக்கவும் தந்திரமாய் " சரி! மீண்டும் சவால்! இந்தக் கரடியை அழ வைத்தால் உனக்கு பத்தாயிரம் ரூபாய். தோற்றால் நீ ஜெயித்த ஆயிரம் ரூபாய் தந்தால் போதும்" என்றான்.

மதுரைக்காரனும் சம்மதித்தான்! மீண்டும் அதே போல கரடியின் காதில் கிசு கிசுவென்று சொன்னான். கரடியும் என்று அழுதது.

கிட்டத்தட்ட மயக்கமே வந்து விட்டது கரடிக் காரனுக்கு!

பத்தாயிரம் ரூபாய் கைவிட்டுப் போனது! தோல்வி சகிக்காத கரடிக்காரன் எப்படியாவது கஷ்டமான ஒன்றைச் சொல்லி, இழந்த பத்தாயிரத்தை மீட்க வேண்டும் என்று உறுதி பூண்டான்.

"சவால்டா மதுரைக்காரா! என்னிடம் உள்ள மொத்த சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய். அதை முழுவதும் இந்த சவாலுக்காகக் கொடுக்கிறேன். நீ தோற்றால் எனக்கு பத்தாயிரம் கொடு போதும்" என்றான்.

மதுரை "சவாலுக்கு நான் ரெடி. என்ன செய்யணும்?"

"இந்தக் கரடியை எந்த துன்புறுத்தலும் இன்றி இங்கேயிருந்து திரும்பிப் பார்க்காமல் ஓட வைக்க வேண்டும்! முடியுமா?"

"இதென்ன பிரமாதம்? இதோ பார்" என்று வழக்கம் போல கரடியின் காதில் என்னவோ சொன்னான். கேட்ட மாத்திரத்தில் கரடி துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியது!

அதிர்ந்த கரடிக்காரன் " இந்தா பணம். முடியலை. எப்படிடா இதைச் செய்தே?" என்று கெஞ்சினான்.

மதுரைக் காரனோ அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்.

"அதுவா? முதல் கேள்வி, சிரிக்க வைக்க வேண்டும். அதன் காதில் சென்று 'தெரியுமா உனக்கு டேம் தண்ணீர் வீணாகாமல் இருக்க எங்க ஊர்ல்லே தெர்மகோல் போட்டு மூடினாங்க' என்றேன். கரடி கபகபவென்று சிரித்தது."

"சரி ... எப்படி அழ வைத்தாய்?"

"அதுவா! கரடிகிட்டே சொன்னேன், ' தெர்மகோல் போட்டதற்காக ஒரு PWD இஞ்சினியரை சஸ்பெண்ட் பண்ணாங்க' என்றேன். கரடி அழுது விட்டது"

"அதெல்லாம் கூட சரி! கரடியை எப்படி இவ்வளவு வேகமாக ஓட வெச்சே?"

"அதுவா? அது கொண்டே 'உன்னைப் பார்த்து ஆலோசனை கேட்க அந்த மந்திரி நாளைக்கு வரப் போறார்ன்னு சும்மா சொன்னேன்!"

அருன்குமார்


மனிதத்தை கொல்லும் கர்வம்!

சண்டையிட்டு சென்ற மனைவி அவளாக வருவாள் என காத்திருந்தான் நாகராஜ்.
வரவில்லை, போனில் அழைத்தும் தவிர்க்கப்பட்டான். வேற எண்ணில் இருந்து அழைத்தால் குரல் கேட்டதும் அணைக்கப்பட்டான். இறுதியாக நேரில் சென்றான்.
இப்பல்லாம் நான் குடிப்பதில்லை. இனியும் குடிக்கமாட்டேன். நீயும் சண்டையிடாதே. வா சேர்ந்து வாழலாம்.என்றான்.
நீயும் சண்டையிடாதே என்பதில் ஆரம்பித்தது சண்டை. நான் சண்டைகாரியா, நீ என்ன சொன்னாலும் பொத்திட்டு போகனுமா என பெரிதான சண்டை இறுதியில் வெளியே போடாவில் முடிந்தது.
வெளியே வந்தவன் நேராக போனது ஒயின்ஷாப். காலை வீட்டில் தூக்கில் இருந்து இறக்கப்பட்டான். அவன் மனைவி கத்தினாலும் கதறினாலும் இனி வருவானா?
அப்ப தானே மக்கா பார்த்துட்டு போனன்னு நாகராஜ் அம்மா அழும்பொழுது நம் ஈரக்கொலை அறுக்குது. சரியாக 2014 இதே நாள் அவனை பார்த்தேன்.
என்னை எப்போ பார்த்தாலும் பயங்கர மகிழ்வடைவான். சுறுசுறுப்பானவன். கடினமான வேலையா அது எப்படி இருக்கும் என்பான்.என் ஒரே மகவும் போயிருச்சே மக்கான்னு அம்மா அழும் பொழுது நானும் மகன் தான்மான்னு ஆறுதல் சொல்ல முடியுமே தவிர உடன் பயணிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். இம்மாதிரி வரும்பொழுது எதாவது மானிட்டரி ஹெல்ப் பண்ணலாம். அவ்ளோ தான்
என்னை குடைவதெல்லாம் அவனை கொன்றது எது?
அவன் குடிப்பழக்கமா அல்லது
அந்த பெண்ணின் ஈகோவா?
மாற்றிக்கொள்ளக்கூடியது எது?
யாரும் பிறக்கையில் குடிகாரன் இல்லை. அதே போல் கோவமும் எல்லாரிடமும் வராது. நமக்கு யார் உரிமை கொடுத்துள்ளாரோ அவர்கள் மீது கோவப்படலாம்.
என்னுடள் பயணிப்பவள். என்னில் பாதி, என் சுகதுக்கங்களில் பங்கெடுப்பவள், உடன் மகிழ்வது போலே சகிப்பதும் உறவில் ஒரு கடமை தானே, உரிமை கொடுப்பது உயிரை பறிக்கவா?
நட்பின் கதாபாத்திரங்கள் ஆயிரம் நம்மை கடந்துபோகும். நம்முடன் அவர்கள் ஒன்றும் ஒன்றும் ரெண்டு. நட்பிடன் காட்டும் அன்பை போல் ஆயிரம் மடங்கு பரிமாறிக்கொள்ளும் காதல் இணைவது ஒன்றும் ஒன்றும் பதினொன்று.
பரவாயில்ல நீ எடுத்துக்கோ என விட்டு கொடுத்து மகிழ்வது. நீ சந்தோசமா இருந்தியா என துணையின் மகிழ்வு கண்டு இன்பம் காண்பது வாழ்வை அர்த்தப்படுத்தும்.
கோவம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துகொள்ளும் தண்டனை என புத்தர் கூறினார்.
நாகராஜின் அன்பு கோட்டையை கோபகல் எறிந்து தகர்த்த நாகராஜ் மனைவி ரெண்டு கைகுழந்தைகளுடன் இருக்கிறார். அது அவருக்கு தண்டனையா வரமா என்பதை காலம் அவருக்கு புரியவைக்கட்டும்.
இன்று அவள் அன்புக்காக ஏங்கலாம். அது போல் எத்தனையோ ஜீவன் பூமியில் வாழ்கிறது.
அதீத அன்பினால் வெறுத்து போகிறேன் என்பவர்களுக்கு, நீங்கள் அவர்கள் மனதில் நஞ்சை விதைத்து செல்கிறீர்கள். ஒன்று அது அவரை கொல்லும் அல்லது என்றேனும் ஒரு நாள் யாரோ ஒருவர் அந்த நஞ்சுக்கு பழியாவார்
உங்கள் ஈகோவினால் எதை வென்றீர்க்ள், யாரை வென்றீர்கள் என யோசித்துப்பாருங்கள். ஊரில் இன்னும் பல நாகராஜுக்கள் நடைபிணமாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அன்பால் எதையும் வெல்லலாம் என்ற உலக கூற்றை மகாபொய்யாக்கிக் கொண்டுயிருக்கிறது உங்கள் ஈகோ.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்.
நன்றி தமிழ் மனம்
குரங்குப்பிடி

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
🌼பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.


“எப்படி மைலார்ட்?” 

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.
நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை.
இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்!
நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார்.
வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார்,
“அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.!!!!


அன்பு 

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.
மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..
அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.
ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.
அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.
அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..
அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.
அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.
இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.
இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.
அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.
அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.
இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.

நீதி : பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
 பூனை குத்துச்சண்டை


உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!
அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!
இந்தியா பூனை பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை
இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!
அமெரிக்கா பூனையல்லவா பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது!
கடைசி இறுதி சுற்று....
இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!
பார்வையாளர்களுக்கு வியப்பு! சோமாலியா நாட்டு பூனை
நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி
முக்கி முணங்கி மேடையேறியது!
இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!
பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!
போட்டித்துவங்கியது! அமெரிக்கா பூனை அலட்சியமாக
சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!
சோமாலியா பூனை முன்னங்காலை
சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி! அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள்
ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!
கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.பார்வையாளர்கள் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றார்கள்!
சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு
ஒன்றுமே புரியவில்லை!
சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!
போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!
மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின்அருகில் சென்று
இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி? என்று கேட்டது அமெரிக்க பூனை!
அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!நான் பூனையே இல்லை.!
புலி...டா...! என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!
பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!
பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!. 


வினை விதைத்தார்கள், அறுத்தார்கள்..!!

அவன் ராஜேஷ்.. கைநிறைய சம்பாதிப்பவன் வீடு கார் என்று நல்ல வாழ்க்கை.. 

மனைவி கோகிலவாணி. இரண்டு  குழந்தைகள். மதுரையில் நல்ல வேலை.மனைவி பிள்ளைகளை நல்ல முறையில் தான் வைத்திருந்தான் ராஜேஷ்.
தண்ணீர் கேன் பையன் மூலம் வந்தது பிரச்னை.சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் போட்டுவிட்டு  போன அந்த பையனுக்கு ஏன் அப்படி புத்தி போச்சு என்று தெரியவில்லை. அவன் பார்வை மாற ஆரம்பித்தது.
வாணியும் குறும்பாக பேசக்கூடியவர். களங்கமின்றி  பழகினாள் .அனால் அந்த தண்ணீர் பையன் கொஞ்சம் கொஞ்சமாக வாணியின் ஆசைகளைத் தூண்டி ஒரு நாள் தனிமையில் வசப்படுத்தி விட்டான்.
சொக்கிப் போனாள் வாணி. இதுவரை உடல் உறவு எனும் பெயரில் தான் எமாற்றப்பட்டுள்ளோம் என்று அறிந்து நொந்து போனாள்.
அந்த பையன் மேல் பைத்தியமாகிப் போனாள்.நினைத்த நேரம் எல்லாம் அவனை வரவைத்து சந்தோஷமாக இருந்தாள். ஒருநாள் கணவனுக்கு அக்கம் பக்கத்தினர் சொல்லி விட வீட்டில்பெரும் ரகளை.
அதன் பின் கணவனை முடித்துவிட தீர்மானித்தாள். அந்த பையன் பாம்பு வாங்கி வந்து கணவன் பெட் ரூமில் போட்டு விட யோசனை சொல்லி ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு நாகம் ஒன்றை வாங்கி வந்து கூடையோடு கொடுத்தான்.
இரவு கணவனின் பெட் ரூமில் விட்டார்கள். ஆனால் அந்த பாம்பு காணாமல் போய் விட்டது. ஏமாந்து போனாள் மனைவி. வேறு ஐடியா என்ன என்று யோசித்தாள்.
ஒருவாரம் கடந்த நிலையில் ,கணவன் இன்று முழுவதும் வர மாட்டான் என்பதை  அறிந்து கொண்டு அந்த தண்ணீர் கேன் பையனை  வரவைத்தாள் வாணி.
இருவரும் ஸ்டோர் ரூம் பக்கம் ஒதுங்கினர். சந்தோசமா இருந்த நேரத்தில் அந்த ஸ்டோர் ரூமில் பதுங்கி கிடந்த அந்த நாகம் இருவரையும் கொத்தியது.
துடிதுடித்து நிர்வாண கோலத்திலேயே இறந்து கிடந்தனர்…!
வினை விதைத்தார்கள், அறுத்தார்கள்..!!

 மூளை வளர்ச்சி கம்மி முருகேசு

முருகேசுவை அவரது மனைவி கீதா, ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கூட்டிச் சென்றார்.
கீதா : “டாக்டர். இவுருதான் என் புருசன். பேரு முருகேசு. இவருக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மியா இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு டாக்டர்.
டாக்டர் : அப்படியா? உங்க புருசனைப்பற்றிய விபரங்களை சொல்லுங்க.....அவர் காலையில எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாரு?
கீதா :ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திடுவார் டாக்டர்
டாக்டர் : எழுந்திரிச்சதும் என்ன பண்ணுவார்?
கீதா :முதல்ல, குளிச்சிட்டு சாமி கும்பிடுவாரு
டாக்டர் : அப்புறம்?
கீதா :அப்புறம் காபி போட்டு வைச்சிட்டு என்னை வந்து எழுப்புவாரு…..
டாக்டர் : அப்புறம்?
கீதா :அப்புறம்…. அழுக்குத் துணியையெல்லாம் எடுத்து வாஷிங் மெஷின்ல போடுவாரு….
டாக்டர் : அப்புறம் அப்புறம்?
கீதா :அப்புறம் என்ன? அப்புறமா, தோசை சுடுவாரு, சட்னி அரைப்பாரு, எனக்கும் பிள்ளைகளுக்கும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணுவாரு…..
டாக்டர் : சரி… அப்புறமா என்ன பண்ணுவாரு?
கீதா : அப்புறமா என்னை ஆபீசுல ட்ராப் பண்ணிட்டு அவரோட ஆபீசுக்கு போவாரு
டாக்டர் : ஏம்மா? அவுரு எல்லாம் ஒழுங்கா பொறுப்பாத்தானே நடந்துகிட்டு இருக்கிறமாதிரி இருக்கு? அப்புறம் என்ன? ஏன் அவருக்கு மூளை வளர்ச்சி கம்மின்னு நெனைக்கிறீங்க?
கீதா : ஐயோ டாக்டர். அவர் பண்ணுற அட்டகாசத்தைப் பத்தி நான் இன்னும் சொல்லலை........
காலையில் நியூஸ் பேப்பர படிச்சிட்டு அத சோபாவுலேயே போட்டுடுவாரு. ஒழுங்கா மடிச்சி கப்போர்டுல வைக்கிறதில்லை.
என் புடவைகளை காயப்போடும்போது, அப்பப்ப கிளிப் மாட்டாம உட்டுடுவாரு. அது பறந்துபோய் கீழ் ஃப்ளாட்டுல விழுந்து அவங்களுக்கும் எனக்கும் சண்டை வருது.
அப்புறம் எப்ப பாத்தாலும், தோசை, இட்லி இல்லேன்னா உப்புமாதான்பண்ணுறாரு.
ஒரு இடியாப்பம், பிரியாணின்னு எதுவும் பண்ணத் தெரியலே…. அதிலயும் நாலு தோசை சுட்டா ஒண்ணை கருக்கிடுராரு.
இவர வச்சிக்கிட்டு எப்படி நான் குடும்பம் நடத்துறது? நீங்களே சொல்லுங்க
😃😃

மனவியல் ரீதியிலான தீர்வு.


வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
மேசை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை.
ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும்.
ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும்.
அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

நம்ம எல்லாருக்குமே இது தான் மனவியல் ரீதியிலான தீர்வு.
குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.


பதிமூன்று வயதில் படிப்பு போச்சு! வீட்டில் ஏழ்மை! தொடர்ந்து பல நாட்களாக பசி! வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு! ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன்.
ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
பையனிடம்,””டேய்! இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

'ஆஹா…இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன்.
சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம், மகிழ்ந்தான்.
மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.
அதோடு விட்டானா! நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.
மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம்.

கல்ப்பாக்கம் ஜெகன் 

பறக்கும் கம்பளம்

சில வாரங்களுக்கு முன், எனக்கு நன்கு அறிமுகமாகிய ஒரு தம்பதியினருடன் அவர்களது மகளைக் காணக்கிடைத்தது. 2 வயதானஅவளுக்கு மாயா என்று அற்புதப் பெயர். முத்துப்போன்ற பற்கள். நிறைந்த சொக்கு, தீர்க்கமான கண்கள், நெளி நெளியான மினுங்கும் வாசனையான பட்டுப்போன்ற தலைமுடி.
ஒரு தேனீர்க்கடையினுள்தான் அவளைக் கண்டேன். குழந்தைகளின் அருகில் செல்லும்போது கிடைக்கும் பரிசுத்தமான அலைவரிசையை மனது உணர்ந்துகொண்டிருக்க அவளருகே இருந்து அவளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். முன்னே உட்கார்ந்திருந்த அவளின் தாய் தந்தையர் மறைந்துபோனார்கள். அதன்பின் உலகமும் மறைந்துபோனது. எமக்கான ஒரு அற்புத உலகம் திறந்துகொண்டது. அப் புதிய உலகில் ஏறத்தாள 50 வயது வித்தியாசமுடைய அவளும் நானும் மட்டுமே இருந்தோம்.
இப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்திருக்கவில்லை. அதனை அனுபவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது குழந்தைகள் இருவரும் பெண்குழந்தைகளே. அவர்களுக்கிடையில் 4 வயது இடைவெளியுண்டு. மூத்தவளுக்கு 20 வயதாகிறது இப்போது.
எனது பால்யத்துக்காலம் தொடக்கம் குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் தந்தையானபின்பே குழந்தைகளுடனான எனது உறவு முற்றிலும் வேறுபடத் தொடங்கியது. குழந்தைகளைப் பார்ப்பது, ரசிப்பது, அவர்களுடன் பழகுவது, அவர்களுடன் விளையாடுவது, அவர்களை தூக்குவது என்று அனைத்திலும் மனதினை அமைதிப்படுத்தும ஒரு மென்மையான குதூகலப்படுத்தும் ஒரு உணர்வு உண்டு என்பதை கண்டுகொண்டிருக்கிறேன். நான் என்னை முற்றிலும் மறந்துபோகும் நிலை அது.
எனது குழந்தைகளில் மட்டும இவற்றை நான் உணர்ந்ததில்லை. நான் பழகும் அனைத்துக் குழந்தைகளிலும் இந்த பரிசுத்தமான உணர்வினை அனுபவித்திருக்கிறேன். குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவது என்பது இலகு அல்ல. முதல் முறை அவர்களைக் காணும்போது நாம் எவ்வாறு அவர்களைக் கையாள்கிறோம் என்பதில் தங்கியிருக்கிறது எதிர்காலத்து உறவு. இதை நான் உணர்ந்தபோது ஒரு குழந்தை என்னைக் கண்டால் பயந்து ஓடத்தொடங்கியிருந்தது.
வடக்கு நோர்வேயில் கல்விகற்றுக்கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் சிலரின் வீடுகளுக்கு அருகில் ஒரு வருடம் தங்கியிருந்தேன். அங்கிருந்த ஒரு ஆசிரியருக்கு ஒரு பெண் குழந்தை. அவளுக்கு 2 வயதிருக்கும் அப்போது. முதல் நாள் அவளைக்கண்டபோது அவளுக்கு பின்புறமாக நின்று “பாஆஆஆ” என்று சத்தமிட்டேன். பயந்து அழுதபடி வீரிட்டுக் கத்தியபடியே திரும்பிப்பார்த்தாள். அதன் பின் என்னைக் கண்டாலே அழத்தொடங்கினாள். அந்த ஒரு வருடமும் என்னைக் கண்டதும் அழுதாள். அங்கிருந்த ஏனைய ஆசிரியர்களுக்கும் சிறிய குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் நான் நட்பாயிருந்தேன். ஆனால் அந்த பெண்குழந்தை மட்டும் என்னுடன் நட்பாகவே இல்லை. அதன்பின் நான் குழந்தைகளை பயமுறுத்துவதை விட்டுவிட்டேன்.
இப்போது என்னுடன் நட்பாகாத குழந்தைகளே இல்லை. குழந்தைகளுடனான நட்பு வாழ்வின் மிகவும் வலிமிகுந்த காலத்தை கடந்துகொள்ள உதவியது. உதவிக்கொண்டிருக்கிறது. வளர்ந்தோருடனான எனது நட்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. விரல்விட்டு எண்ணலாம் எனது நண்பர்களை. ஆனால் எனக்கு பல குழந்தைகள் நட்பாக இருக்கிறார்கள்.
அவர்களில் பலர் என்மீது காட்டும் நம்பிக்கை வாழ்வின் மீதான பிடிப்பினை தக்கவைத்துக்கொள்ள உதவியிருக்கிறது. எங்கு என்னைக் கண்டாலும் எதுவித முன் கற்பிதங்களும் இன்றி தூய்மையான அன்புகலந்த புன்னகையுடன் ஓடிவந்து “சஞ்சயன் மாமா” என்னும் அவர்களது அன்பின் கரைந்துபோகும் நேரங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தந்திருக்கின்றன.
குழந்தைகளுடனான உரையாடல்கள் எப்போதும் அழகானவை. கருப்பொருள்களும் அப்படியே. ஆண் குழந்தைகளின் கருப்பொருள்களும் பெண் குழந்தைகளின் கருப்பொருள்களும் வெவ்வேறானவையாகவே இருக்கும். ஆண் குழந்தைகள் விளையாட்டு, திரைப்படங்கள், கணிணி என்று உரையாட விரும்புவார்கள். இவர்களை மென்மையான மனித உறவு, இயற்கை, சூழல் என்று பேசவைப்பதற்கு முயற்சிப்பேன். ஆனால் பெண் குழந்தைகள் பொம்மைகள், நிறங்கள், சித்திரம், உணவு, நட்பு, புத்தகங்கள் என்று பேசினாலும் இயற்கை, சூழல் என்பவற்றில் அதிக கவனமாய் இருப்பார்கள்.
குழந்தைகளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அதிகம். பெரியவர்களிடம் இல்லாத மனிதநேயத்தை, உதவும் மனப்பான்மையை, மிருங்களிடம் அவர்கள் காட்டும் நட்பை, இயற்கையின் மீதான அவர்களது கவனம், விருப்பம் என்பவை என்னை சிந்திக்கவைத்திருக்கின்றன. வாழ்க்கை மீதான அயர்ச்சி வளர்ந்த மனிதர்களான எம்மை வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை அனுபவிப்பதை தடுக்கிறதோ என்று நான் எண்ணுவதுண்டு. அப்படியும் இருக்கலாம்.
குழந்தைகளிடம் நான் கண்டுகொண்டு இன்னுமொரு அழகிய பழக்கம் “சிரிப்பு”. ஒரு சம்பாசனையின்போது எத்தனை முறை அவர்கள் சிரிக்கிறார்கள், புன்னகைக்கிறார்கள் என்பதை அவதானியுங்கள். அதோபோல் வளர்ந்தவர்களுடனான உரையாடலில் அவர்கள் எத்தனை முறை சிரிக்கிறார்கள் என்று பாருங்கள். குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறையும் வளர்ந்தோர் 25 முறையும் சிரிக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். சிரிக்கும்போது எமது மனமும் இலகுவாகின்றது. சுற்றாடலையும் நாம் மகிழ்வாக்குகிறோம். இங்கும் குழந்தைகள் எமக்கு கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பின் ஒலிகூட மனதுக்கு அற்புதமானதொரு மருந்து. அந் நேரங்களில் அவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வானவில்லைப்போன்று அழகாயிருக்கும்.
மனம் வருந்தியிருக்கும் குழந்தையை, அழும் குழந்தையை, ஏதோ ஒன்றிற்காகப் அச்சபபடும், ஏங்கித் தவிக்கும் குழந்தையை ஆறுதல்படுத்தியிருக்கிறீர்களா? குழந்தையின் மனதோடு ஒன்றிப்போய் அதன்வலியை உணாந்து அணைத்து, அறுதல்படுத்தி, நம்பிக்கையூட்டி அவர்களை அமைதிப்படுத்தும்போது அவர்களின் மனதில் ஏற்படும் ஆறுதலான அமைதியின் ஓசையை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு மனிதனை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பான அற்புதமான உணர்வு அது. விக்கி விக்கி அழும் குழந்தை மூச்சை ஒவ்வொரு முறையும் விக்கி விக்கி உள்ளே இழுக்கும்போது உங்களின் மூச்சும் திணருகிறது எனில் நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். குழந்தைகளை தேற்றுவது என்பது ஒரு கலை. தாய்மார்களுக்கு அது இயற்கையாக அமைந்திருக்கிறது. சில அப்பாக்களுக்கும்தான்.
குழந்தைகளின் முன்னால் எப்போதாவது முட்டாளாக நடித்திருக்கிறீர்களா? அது ஒரு பெரும் கலை. இந்தப் பெரிய மனிதனுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று அவர்களை நினைக்கவைக்கவேண்டும். உங்களுக்குத் தெரியாததை கற்பிக்க முனையும் அவர்களுடைய மனது மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். தம்மை ஒரு பெரிய மனிதாக நினைத்தபடி எமக்கு கற்பிக்கும் அவர்களது சொல்லாடல்கள், செய்கைகள், முகபாவனைகள் என்று அந்த உலகம் பெரியது.
ஒரு முறை 5 வயதான ஒருத்தியிடம் ஒரு சிவப்புப் பூ ஒன்று இருந்தது. நான் அவளிடம் “ஏன் பச்சை நிறமான பூ” வைத்திருக்கிறீர்கள் என்றேன். தலையில் கையை வைத்தபடியே “உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.” அதன்பின்னான அந்த மாலைப்பொழுதில் நான் நிறங்களை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அந்த மாலைப்பொழுது அழகானதாய் மாறிப்போனது. கடந்துபோன காற்றும் சற்று நிதானித்து எங்களை பார்த்தபடியே கடந்துபோயிருக்கும்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது எனக்குப்பிடிக்கும். பெண்குழந்தைகளுக்கு ஒருவித கதைகளும், ஆண் குழந்தைகளுக்கு இன்னொருவித கதைகளுமே பிடிக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள், அமைதியான மிருகங்கள், நிறங்கள், இயற்கை, அமைதியான நீரோட்டம் போன்ற சம்பவங்கள் உள்ளடங்கிய கதைகளை பெண்குழந்தைகளக்கு பிடிக்கும். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு விறுவிறுப்பான கதைகள், அரக்கர்கள், மூர்க்கமான மிருகங்கள், ஓடுதல், பாய்தல், வேகம் என்ற கதைகளை; பிடிக்கும். என்னிடம் பெண்குழந்தைகளுக்கான கதைகள் அதிகம் உண்டு. அதில் பல என்னால் உருவாக்கப்பட்டவை. என் குழந்தைகளை அரக்கர்களிடம் இருந்தும் பூதகணங்களிடம் இருந்து பறக்கும் கம்பளத்தில் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறேன். வாய்பிளந்திருந்து கதை கேட்டிருப்பாள்கள் என்னவள்கள்.
குழந்தைகளை உறங்கவைப்பது எனக்குப் பிடிக்கும். எந்தக் குழந்தையும் மனம் அமைதியில்லாதபோது அல்லது நம்பிக்கையில்லாதவர்களின் கையில் உறங்காது. உங்கள் கையில் ஒரு குழுந்தை உறங்கிப்போகிறது என்றால் நீங்கள் அதிஸ்டசாலி. மெதுவாய் தாலாட்டுப்பாடி அல்லது ஒரு ஆறுதலான ஒலியெழுப்பி குழந்தைகளை தூங்கவைக்கும்போது என் மனமும் ஒருநிலைப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன். தூக்கத்தின் மயக்கத்தில் பாரமாகிப்போகும் இமைகளையும், தூங்கிப்போனபின் முகத்தில் வந்தமரும் பேரமைதியும், சீராக மூச்சும்… அப்பப்பா அது ஒரு அற்புதமான அனுபவம்.
குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுளையும் தகுதி எமக்கு உண்டா இல்லையா என்பதை குழந்தைகள் அறிவார்கள். நாம் அவர்களின் உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டால் அதைவிட பேரதிஸ்டம் வேறெதுவும் இல்லை. இந்த விடயத்தில் நான் பெரும்பேறு பெற்றவன்.
பேரின்ப முக்தியடைய விரும்புபவரா நீங்கள். அப்படியாயின் நீங்கள் தேடும் முக்தி உங்கள் வழிபாட்டுத்தலங்களில் இல்லை.

சஞ்சயன்
50 ரூபாய் நோட்டு - கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் மொழிபெயர்ப்பு !
போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கைலாவது கிடைத்தால் தயவுது செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு"
அங்கே ஓர் சிறிய கீத்து .கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை.எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவொருவரிடமும் கூறி கொண்டுதான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.
மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?
Arun Kumar

செவிட்டு மனைவி என்று நினைத்த கனவனுக்கு விழுந்த அறை ; ஒரு குட்டி கதை....!
ஒருத்தன் தன் மனைவி மேல்
அதீத அன்பு வைத்திருந்தான்...
ஆனால் அவனுக்கு சிறு கவலை...
கொஞ்சநாளகவே மனைவிக்கு காது சரிவர
கேட்க்கவில்லை....அவளுக்கே தெரியாமல்
அவளது குறையை போக்க நினைத்தான்....
ஒரு காது டாக்டரை அணுகி.... டாக்டர் சார்...
என்மனைவிக்கு காது கேட்கவில்லை..
எனவே அவளுக்கே தெரியாமல் அந்த குறையை.நீங்கள்தான் போக்கவேண்டும்...
டாக்டரும்..ஓகே...ஆனால்...உங்கள் மனைவிக்கு எவ்வளவு தூரத்தில் நின்று கூப்பிட்டால் காது கேட்க்க வில்லை என்பது தெரிஞ்சாதானே வைத்தியம் பாக்க வசதியா இருக்கும்....
சுத்தமா கேக்கலையா...?
100அடி தூரத்துல இருந்து கூப்பிட்டா கேட்கலையா...?
10அடி தூரத்திலிருந்தா....இப்படி....?
அதை முதலில் தெரிந்து கொண்டு வா என்றார்...
அவனும்.... சரி என்று
வீட்டுக்கு போனான்....
அவன் மனைவி..கிச்சனில் ஏதோ சமையல்
செய்து கொண்டிருந்தாள்....
இவன் வாசலுக்கு வெளியே நின்று கொண்டு
தன் சோதனையை ஆரம்பித்தான்...
ஹே...ய்....மரகதம்...இன்னைக்கு என்ன டிபன்
காலையில.....
பதில் இல்லை....
சரி கொஞ்சம் பக்கத்துல போய் கேட்ப்போம்ணு...நெனைச்சிக்கிட்டு...
கிச்சனுக்கு வெளியில நின்னுக்கிட்டு...
அடியேய் மரகதம்...இன்னைக்கு என்ன காலை டிபன்.....?
அப்பவும் wife ta இருந்து....
No responce....!
..
என்னடா இதுன்னு நெனைச்சுக்கிட்டு...
மனைவி பக்கத்துல போய்...
நேருக்கு நேர் நின்னுக்கிட்டு....
ஏன் டார்லிங்... நான் கேட்டது உன் காதுல விழலையா...இன்னைக்கு என்ன டிபன் செல்லம்...னு...?
கேட்டு முடிக்கும் முன்பு....அவன் கன்னத்தில்
பளார்னு...ஒரு அறை விழுந்தது....
யோவ்....நன்னாரிப்பயலே....
நீ மொதோவாட்டி கேட்டப்பயே.....இன்னைக்கு. உப்புமா.....உப்புமா...னு...நாயா..கத்தறேன்...
உன்காதுல..விழாம....ஏன்யா ஏன் உயிர எடுக்குற..ன்னு....
ஹாஹாஹாஹா........
நீதி.... மற்றவர் குறை காணும் முன்
உன்னை சரி செய்..

தாய் பாசத்தை பார்த்த  மனைவி


ஒரு வாலிபன் ஒரு பெண்ணை வெகு நாட்களாக பின் தொடர்ந்து வந்தான்.
"இவன் எதற்காக என் பின்னால் வரவேண்டும்! யாரு இவன். என்னை காதலிக்கிறானா..என யோசித்தாள் அந்த பெண்.
தன் தந்தையிடம் அவனை பற்றி கூற, அவன் என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் உன்னைப் பார்க்க வருகிறான். நீ பயப்படாதே, அவன் உன்னை எந்த தொந்தரவும் செய்யமாட்டான். என்று தந்தை சொல்கிறார். என்னப்பா இது!
ஏன் இப்படி??? என்று அவள் கேட்க.
உனக்கு இருதய புற்றுநோய் இருந்ததே ஞாபகம் இருக்கிறதா! அவன் தாயார் தான் இறந்த பிறகு அவர் இதயத்தை உனக்கு  தானமாக கொடுத்தார் என்று தந்தை சொல்ல, இதை கேட்டவள் அதிர்ந்து போய் விடுகிறாள். அவர்களுள் நட்பு ஏற்பட்டு 1 வருடத்தில் காதலாக மாறிவிட்டது.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது... அந்த குழந்தைக்கு தன் தாயாருடைய பெயரை வைத்து "வாங்கம்மா"! "சாப்பிடுங்கம்மா"! என்று செல்லமாகவும், மரியாதையாகவும் கொஞ்சுவான். தன் தாயாரின் நினைவு தினம் அன்று இரவு அம்மாவின் கல்லறைக்கு சென்றுவிட்டு வீடு வருகிறான்.
அப்போது அந்த 2 வயது குழந்தை தூக்கத்தில் தேன் சிந்தும் குரலில் "எங்கப்பா போய்ட்டு வர" விஷப்பனி பெய்கிறதல்லவா!" சீக்கிரம் வீடு வரக்கூடாதா"! என்று சொல்கிறது. அந்த குழந்தையின் குரல் தன் தாயாரின் குரல் போல் இருப்பதை உணர்ந்தான். 2 வயது குழந்தை எப்படி பேசமுடியும் என்று உறைந்து பார்க்கிறான். அந்த குழந்தை மறுபடியும் தூக்கத்தில் உளறியது..
"சாப்டியாப்பா"! நான் வேணா ஊட்டி விடவா"!!!
இதை கேட்டவன் "அம்மா" என்று அலறி தன் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு "என்ன பெத்த ஆத்தா! அம்மா" அம்மா" அம்மா!!! கதறி அழுகிறான். கணவனின் தாய் பாசத்தை பார்த்த அவன் மனைவியும் அழுகிறாள்.
((நாம் எப்படி இருந்தாலும் நம்மை நேசிக்கும் ஒரே ஜீவன் நம் தாயார் மட்டும் தான் நண்பர்களே. பெற்ற தாயை தவிர வேற யாரிடமும் அதிக அன்பு வைத்து விடாதீர்கள், அதை போல ஒரு சுயநலமற்ற அன்பு வேறு எதுவும் இல்லை உலகில்.

Jagan G Kalpakkam
😴💤


ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
"இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய வைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''
"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?
கல்ப்பாக்கம் ஜெகன் 



                                                     பத்தாயிரம் பொற்க்காசு
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான்.
மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.
மகாராணி கொதித்துவிட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார்.
'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள்.
ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.
எப்படியும்அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.
மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.
அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.
'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம்.
அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! 
அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது'.
இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள்.
தத்துவம்: பெண்கள் வாயைமூடி கொண்டு இருந்தாலே பாதி செலவு குறைந்துவிடும்...!

மிகுந்த வயிற்று பசி

நபிகள் நாயகத்தின்(sal) மிக நெருங்கிய நண்பர் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கு மிகுந்த வயிற்று பசி ஏதாவது உணவு இருக்கிறதா என மனைவியிடம் கேட்கிறார்கள் தண்ணீரை தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி... சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்...
பாதி வழியில் உமர் ரலி எதிரே வருகிறார்கள்... என்னவென்று கேட்கிறார் அபு பக்கர் சித்தீக் ரலி... வீட்டில் தண்ணீரை தவிர உண்பதற்கு எதுவும் இல்லை எனவேதான் உங்களை பார்க்க வருகிறேன் என்கிறார்கள் உமர் ரலி.... சரி என் வீட்டிலும் இதே நிலைதான் அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் நபிகளை சென்று பார்க்கலாம் என நபிகளாரின் வீட்டிற்கு செல்கின்றனர்...
எதிரில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வருகிறார்கள்... அருமைத்தோழர்களின் நிலை அறிந்து வேதனையுடன் தனது வீட்டின் நிலையும் இதுதான் என்று சொல்லி என்ன செய்வது எங்கே செல்லலாம் என யோசித்து கொண்டிருக்கும்போது அபூ அய்யூப் அல் அன்ஸாரியின் வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்து மூவரும் செல்கின்றனர்
இவர்கள் மூவரும் வருவதை பார்த்த நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்ஸாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தனது இல்லத்தில் அமரவைத்து அவர்களுக்கு பேரீச்சம் பழங்களை கொடுத்து பரிமாறுகிறார்கள்...
கொஞ்சம் பேரீச்சம்பழங்களை உண்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரியிடம் அபூ அய்யூப் அவர்களே நான் இவற்றில் இருந்து கொஞ்சம் பேரீச்சம் பழங்களை எடுத்து கொள்ளலாமா என கேட்கிறார்கள்...
அதை கேட்ட நபித்தோழர் அபூ அய்யூப் ரலி அவர்கள் என்ன யா ரசூல் அல்லாஹ் இப்படி கேட்கிறீர்கள் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள் என்கிறார்... அதை கேட்ட நபிகள் நாயகம் ஸல் அவர்கள்... இல்லை எனக்கு சிறிதளவு போதும், என் அருமை மகள் பாத்திமா கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவே இல்லை என கூறுகிறார்கள்...
இதை கேட்ட உடனே தனது பணியாளர் ஒருவரிடம் அண்ணல் நபிகளின் வீட்டிற்கு பேரீத்தம்பழங்களை கொடுத்து அனுப்புகிறார்கள் அபூ அய்யூப் அல் அன்ஸாரி...
உலகம் போற்றும் உன்னத நபிகள் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு ஏழ்மையாக இருந்தது... அவர்கள் தங்கள் மகள் பாத்திமா ரலி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டு...
# இறைவா எங்கள் வாழ்வில் எங்கள் பிள்ளைகளுக்கு உணவையும் மற்ற மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற அளவிற்கு எங்களுக்கு போதுமான செல்வத்தையும் ஆற்றலையும் தந்தருள்புரிவாயாக ரப்பில் ஆலமீனே.... குண்டு வைக்கவும் கொலை செய்யவும் பணம் குவிக்கவும் இறைவன் கற்றுக்கொடுக்கவில்லை

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுட்டுக்காரரை அழைத்து...
ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர்  அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.
அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்
சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.
அவரின் இறுதி ஊர்வலம் அந்த வீட்டு வழியே வந்தது.
அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...
ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.
அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..
ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..
ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...
(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை)

படைப்பு...
ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறான், "நேரம் நெருங்கிவிட்டது! பிரசவ வலி நாளை அல்லது நாளை மறுநாள் கூட வரலாம்!
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர், இதை கேட்ட அவள் கணவனுக்கு நெஞ்சில் ஆனந்தம் பொங்கி இருக் கண்களை மறைக்கிறது,
அன்று இரவே கணவன் தன் மனைவியின் வைற்றில் காதை வைத்துப் பார்க்கிறான், "என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி கேட்க நாளை இன்நேரம் என் மகனோ, மகளோ என் கையில்... என்கிறான்,
அதை கேட்க மனைவி எனக்கு ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல, இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான் வேண்டும் என்று கணவன் சொல்ல ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்,
படுக்கையில் தன் கணவன் அருகில் நெருங்கி வந்து அவன் கை விரலை இருக்கமாக பிடித்துக்கொள்கிறாள், தூக்கத்தில் இருந்த கணவன் விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.
"என்னவென்று தெரியவில்லை இதயம் படபடவென துடிக்கிறது, எனக்கு தூக்கமே வரவில்லை பயமாக இருக்கிறது", என்று சொல்லி கண்கசிகிறாள்
அவன்மனைவி, உடனே இழுத்து தன் மார்போடு மனைவியை அனைத்தவன் அவள் கண்ணீரை துடைத்து அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்
, அவள் நினைத்தால் போல் திடீரென பிரசவ வலி வந்தது. பயத்திலும் கடுமையான இடுப்பு வலியிலும் கட்டிலேயே துடித்து அழ ஆரம்பித்தாள்,
என்ன செய்வது என தெரியாது முழித்த கணவன் அவள் துடிப்பதை காண இயலாமல் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு Carல் சிட்டுக் குருவியை போல் பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்,
இரவு நேரம் என்பதால் உடனே தன் மனைவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தான், ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும் பயங்கரமாக கேட்டது, இரு கைகளையும் பிசைந்துகொண்டு பிரசவ வார்டின் வெளியில் இங்கே அங்கே என சுற்றுகிறான்
, "அம்மா! அம்மா இடுப்பு ..!" என்று அவன் மனைவி வலியில் துடிக்க அழத் தெரியாத அவள் கணவனுக்கும் அழுகை வந்தது.
ஆண்டவா "என் மனைவியின் முதல் பிரசவம் இது! தாய்கும் பிள்ளைக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது!" என்று உலகின் உள்ள எல்லா கடவுளிடம் வேண்டினான்
, நேரம் ஆக ஆக அவனுக்கு முகமெல்லாம் வேர்த்து கொட்டியது, பிரசவ வலியில் தன் மனைவி துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
சற்று நேரத்தில் திடீரென மனைவியின் குரல் அமைதியானது. கணவன் என்னாசோ! ஏதாச்சோ! என மிகவும் பயந்துபோனான், மீண்டும் ஒரு அலரல்...
அதை கேட்ட கணவன் ஆண்டவா என் மனைவிக்கு இவ்வளவு சித்திரவதையா! என தலையில் கை வைத்தவான் இருக்கையில் அமர்ந்து மனைவியை நினைத்து கூணி கூறுகிப்போனான், அப்போது
ஒரு செவிலியர் மட்டும் வெளியே வந்து உங்கள் மனைவிக்கு சுயபிரசவம் பயப்படும்படி ஒன்றில்லை... தாராளமாக உள்ளே சென்று பாருங்கள் என்றார்
, காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன் முதலில் தன் மனைவியை பார்க்கிறான், அவள் இன்னும் கண் திறக்காமல் மயக்கத்தில் படுத்திருக்க அடுத்து எங்கே என் குழந்தை என அவன் கண்கள் ஒரு வழியாக தேடி தாயின் அருகில் குழந்தை இருப்பதை கண்டு மெதுவாக நகர்ந்து பூமியின் பாதம் படாத சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு முத்தமிட்டு அதன் தலையை மெதுவாக கோதிவிடுகிறான்.
தந்தையின் கை விரல் பட்டவுடன் சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.
யாரு சொன்னது பெண்கள் மட்டும்தான் உயிரை சுமக்கின்றனர் என்று...
காதலிக்கும் ஒவ்வொரு ஆணின் "இதயத்தை" தொட்டுப் பாருங்கள் அவன் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணின் நினைவுகளை சுமந்தே மடிகிறான்.


அமுதமாய்' கிடைக்கும் தாயின் அன்பு


என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்
ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்
"இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்
சரி... சரி... விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது.
மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க,
அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க.
அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது. படித்த அவன் அதிர்ந்து போனான் .
அதில்
அன்பு மகனுக்கு,
உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை.
இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.
உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை.
நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை.
இந்த நிலையில் என்னால் என்ன செய்யமுடியும் ?
ஆனாலும் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்பட்டது. அதனால் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.
கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...! நான் போகிறேன்...? அன்பு அம்மா ...!
அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை
'மனதிற்குள் சொல்லி'... சொல்லி... 'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...!
நண்பா...! இது ஒரு "கதையல்ல நிஜம்"...!
நீதி: 'அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும். '
"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!
அகிலன்
செல்லாத காசிலும் செப்பு
ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.
தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.
அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,
கால் தடுக்கிக் கீழே விழ ,
கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்
சாக்கடையில் விழுந்தன.
என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்
ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.
அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.
அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,
" இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து
கொடுக்க முடியுமா......??
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!
அதற்கு வழிப்போக்கன்
"இதுதான் உங்கள் பிரச்னையா......?
அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது.....!
மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி
இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார்
செய்து கொள்ளுங்கள்.....!
வண்டியை ஓட்டிச் சென்று,
அருகில் உள்ள மெக்கானிக் கடையில்,
4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்
விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது....!
நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்,
இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே......!
இவரைப்போய் ,
குறைத்து மதிப்பிட்டு விட்டோமே ........
என்று
தலை குனிந்தார் விஞ்ஞானி....!
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.....!
உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு....!
நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.....!
* யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்.....!
படித்ததில் பிடித்தது...👍




விவாகரத்து 
 நீதிபதி : நீங்கள் இருவரும் காதல் திருமணம் தானே செய்து கொண்டீர்கள். உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?

மனைவி : ஆமா பெரிய காதல், நான் ஏமாந்துட்டேன் ஐயா. இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய் தான்.. ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை......!

கணவன் : இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐயா. எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்கிறாள், சந்தேகப்படுகிறா

ள், தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்க.

நீதிபதி : சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்து விட்டால் உங்கள் குழந்தையை யார் வைத்துக் கொள்வது!?

கணவன் : என் குழந்தை என்னிடம் தான் வளர வேண்டும், அது தான் நியாயமும் கூட......!

மனைவி : அது எப்படி? பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்தது நான்....! உடனே இவங்களுக்கு தூக்கி கொடுத்திடனுமா.....!

நீதிபதி : இதற்கு என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர்?

கணவன் : ஐயா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?
நீதிபதி : ம்ம்ம்… கேளுங்க......!
கணவன் : ஐயா, ATM மெஷின்ல கார்டு செருகி பணம் எடுத்தப் பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா? இல்ல பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா?
மனைவி : அடப்பாவி!!!
நீதிபதி : ஒரே கேள்வியில சாச்சுபுட்டானய்யா.
தலை கிறுகிறுவென சுற்றி டேபிளில் சாய்ந்து விழுகிறார்… டமால்......!
கோர்ட் இத்துடன் கலைகிறது.
பாக்கியநாதன் சசிக்குமார்

Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல்.

இன்றுகாலை வீட்டில் இருந்த புறப்பட்டபோது எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. நீல வானம். 16 பாகை வெய்யில். சுகமான மெதுகாற்று. வீதியில் அழகிகள். எக்சேட்ரா எக்சேட்ரா.
போயிருந்த இடத்தில் அனிச்சையாக காற்சட்டைப் பையினுள் கையைவிட்டேன். மனது திடுக்கிட்டது. வீட்டுத்திறப்பைக் காணவில்லை. திறப்புடன் 64gb usb pendriveம் அதில் எனக்கு அவசியமான ஆவணங்களின் backupஉம் இருக்கிறது. அதுவும் மாயமாக மறைந்துவிட்டிருந்தது.
வாகனத்தில், நண்பரின் வீட்டில், கடையில், நடந்துபோன வழியில் என்று எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சுந்தரமூர்த்தி நாயனாரும் உயிரோடு இல்லை.
வீட்டு ஜன்னலை திறந்துவிட்டு வந்தேனோ என்பதும் நினைவில்லை. அப்படியென்றால் ஜன்னலால் உள்ளே பாயலாம்.
வாகனத்தை வீட்டிருகில் நிறுத்திவிட்டு ஜன்னல் திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஜன்னல் மூடியிருந்தது.
எப்படியோ கதவினை உடைக்கவேண்டும். வானத்தினுள் இருந்தபடியே வீட்டு உரிமையாளருக்கு அறிவித்தேன். புதிய கதவின் செலவு உன்னுடையது என்றார் அன்பாக. மறுக்க முடியுமா?
திறப்பு செய்யும் கடைக்கும் தொலைபேசினேன். கையை விரித்தார்கள்.
கதவு உடைப்பதா... ”பொறு வருகிறேன் அது சின்ன வேலை” என்றபடியே வருவதாக அறிவித்தான் ஒரு சுத்தத் தமிழன்.
நான் தமிழன் வரும் வரையில் தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தேன்.
தமிழன் வந்ததும் வீட்டுக்குச் சென்றோம்.
திறப்பு கதவில் தொங்கிக்கொண்டிருந்தது.
கதவு உடைக்க வந்த தமிழன் வீட்டுக்குள் இருந்த சந்தோச நீர் போத்தல் ஒன்றையும், நேற்று இராப்பிச்சையாக கிடைத்த 5 ரோல்ஸ்இல் 3ஐயும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்.
ஒரு சிறு துரும்பையேனும் அசைக்காமல் ஒரு புதிய கொன்யாக் போத்தலை துாக்குவது அதர்மம்..
என்ட Oslo முருகா .. இது நல்லா இல்ல ஆமா



தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!*
*தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...*
*ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...*
*ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...*
*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...*
*மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...*
*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...*
*அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...*
*இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...*
*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!*
*ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...*
*எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*
*அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.*

பேரா பா ஆனந்த்
அன்பு
*******
ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.
இவ்வாறிருக்க
ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாட்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.
அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து
"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.
அதற்கு அவன்
நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.
அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்"
எனப் பதிலளித்தான்.
💕பிறரின் குறைகள் எங்கள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...

Thanu Zaan



நஞ்சு மனதில்

பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்
சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு
அவளுக்கும் அவள் மாமியாருக்கும் எந்த
விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை,
சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
அவள் கணவனோ இருதலைக் கொள்ளி
எறும்பு போல திண்டாடினான்.
ஒரு நாள் அவள் தகப்பனாரின்
நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.
அவரிடம் அவள் தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்
கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக்
கொல்லும் நஞ்சு,இதைத் தினம் உன்
மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக
கலந்து கொடு,ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -
என்று கூறினார்.மேலும், - மிகவும் கவனமாக
செயல் படவேண்டும்; முக்கியமாக உன்
மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து
கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு
சில மாதங்கள் தானே - என்று கூறி அனுப்பி
வைத்தார்.
அதன்படி மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள்.
மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும்
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில்
திக்குமுக்காடிய அவள் மருத்துவரிடம் ஓடினாள் .- ஐயா,இந்த மருந்துக்கு மாற்று 
மருந்து கொடுங்கள் - என கெஞ்ச,-
ஏன் இப்படி ?- என அவர் கேட்க,- என்
மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை
என அழுதாள். 
அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு
மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது
வெறும் சத்துப்பொடி தான்.அப்போது நஞ்சு
உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய்
நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த
நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து
இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார்.
கணேசன். மதுரை
பண நோட்டுக்கள் எங்கே!!

நான் எனது ரத்த அழுத்தத்திற்கு வழக்கமாக மாத்திரை வாங்கும் அந்த மருந்துக் கடை வாசலில் நின்று கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒரு சிறு கூட்டம் ஆண்களும் பெண்களுமாக - அவரவர்களுக்கான மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லி வாங்கியபடி.

என் பின்னால் ஒரு பையன் நின்று கொண்டு ஒரு மாத்திரையின் பெயரைச் சொல்லி அதில் ஒரு மாத்திரை தருமாறு கோரினான்.


ஆனால் அவனது கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. கடையின் பணிப்பெண் நான் சொன்ன ஐந்து மாத்திரைகளில் நான்கை எடுத்து என் முன் வைத்துவிட்டு ஐந்தாவது மாத்திரையைத் தேடுவதில் முனைந்திருந்தாள். கடை உரிமையாளரும் அவரது மனைவியும் மற்ற வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

நான் சொன்ன மாத்திரைகளில் ஐந்தாவதைப் பணிப்பெண் தேட அதிக நேரம் எடுத்துக்கொண்டாள். 

அதற்கிடையில் எனது சட்டைப் பையில் இருந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் கைவிரல்களுக்கிடையில் கவனக் குறைவாக வைத்துக் கொண்டு நான் அவள் தாமதமாகத் தேடுவதைப் பார்த்துக்கொண்டும், எங்கோ பார்த்துக் கொண்டும், இடையில் எனது பேன்ட் பையிலிருந்த மருத்துவர் சீட்டை எடுத்து அதை அவளுக்குக் காட்ட வேண்டுமென்றும் நினைத்துக்கொண்டும் அதை எடுக்கும் நேரத்தில் எனது கையில் கவனக்குறைவாகப் பிடித்திருந்த இரண்டு நூறு ரூபாய நோட்டுக்களை முற்றிலும் மறந்திருந்தேன்.

கடையின் பணிப்பெண் ஐந்தாவது மாத்திரையைத் தேட கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளவே, நான் பரவாயில்லை, இவ்வளவும் போதும் என்று கூறி, இருந்த மாத்திரைகளுக்கான விலையைக் கொடுக்க கையில் வைத்திருந்த ரூபாய் 200-ஐப் பார்த்தபோது கைகளில் நோட்டுக்கள் ஒன்றுமில்லை.

நோட்டுக்கள் எங்கே போயின, எங்கே போயின என்று தேடினேன். கடையில் கொடுக்க வில்லை என்பது தெளிவாக நினைவில் இருந்தது. கீழே பார்த்தேன். எங்கும் விழுந்து கிடக்க வில்லை. பின் எங்கே போயின நோட்டுக்கள்?

என் பின்னே நின்ற பையன் மாத்திரையை வாங்கினானா என்று நினைவு படுத்திப் பார்த்தேன்...அவன் வாங்கவில்லை என்பது தெரிந்தது. பணிப்பெண்ணோ, கடை உரிமையாளரோ, அவரது மனைவியோ அவனுக்குரிய மாத்திரையைக் கொடுக்கவில்லை. 

அப்படியெனில் அவன் எங்கே என்று அப்போதுதான் திரும்பிப் பார்த்தேன்.
அவனைக் காணவில்லை.
ஓ....அவனோடு கவனக்குறைவாக என் கையில் பிடித்திருந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களையும் காணவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.


நல்லவேளை.....சட்டைப்பையில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் இருந்தன. அவற்றை எடுத்துக் கையில் வைக்காமல் இருந்தேனே.........!

மகிழ்ச்சியுடன் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திரும்பினேன்
.
-நிலவரசு கண்ணன்

கண்கள் அவர் கால்கள் அவள்

தமிழ் இலக்கிய வரலாற்றில் இரட்டைப் புலவர்கள் என்று குறிப்பிடப்படுவோர் பற்றியும்  சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர்  பார்வையற்றவர், மற்றவர்  முடவர். கண் பார்வையற்றவர் முடவரைச் சுமந்து செல்வார். முடவர் போகும் வழி பற்றியும் அந்தந்த ஊர்களின் சிறப்புப் பற்றியும் சொல்லிக்கொண்டே போவார். இச் சமயங்களில் இருவர்களில் ஒருவர் ஒரு கவிதையின் இருவரிகளைச் சொல்ல மற்றவர் மிகுதி இரண்டு வரிகளையும் பாடுவார்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்| மதுரைக்குச் சென்ற சமயம் வைகை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது பார்வையற்றவரின் சால்வையை வெள்ளம் இழுத்துக்கொண்டு போனது. அப்போது முடவர் பதறிக்கொண்டே கவிதையாகச் சொன்னார் ‘‘ஐயோ! உங்கள் கலிங்கம் போகிறதே கலிங்கம் போகிறதே’’ என்று. கலிங்கம் என்பது சால்வையைக் குறிக்கும். உடனே பார்வையற்றவர் கவிதையால் பதில் சொல்லி முடித்தார்.

‘‘இக் கலிங்கம் போனால் என் - ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை” என்று.மீனாட்சியின் துணைவர் சொக்கநாதர் என்றும் சொக்கலிங்கம்  என்றும் அழைக்கப்படுவார். இந்தக்கலிங் கம் போனாலும் சொக்கலிங்கம் எங்களுக்குத் துணை யாக இருப்பார் என்பதே அவரது தேறுதல் வார்த்தை.

இந்த இரட்டைப் புலவர்கள் போன்றே வவுனியா - மாவட்டத்திலுள்ள குறிசுட்டகுளம் எனும் பகுதியில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் முன்னாள் போராளிகள்.கணவர் பெயர் அருட்பிரகாசம் (அன்புச் செல்வன்), மனைவி பெயர் ராதிகா (மதியழகி)ஆனையிறவின் வீழ்ச்சிக்குப் பின் இறுதியாக ஒருமுறை முயற்சித்துப் பார்ப்போமே என்று சந்திரிகா மேற் கொண்ட இராணுவ நடவடிக்கைதான் தீச்சுவாலை. இந்த நடவடிக்கையை முறியடித்ததில் கணிசமான பங்கு கண்ணிவெடிப் பிரிவினருக்கு உண்டு. 

அங்கங்களை இழக்கும் படையினரை அகற்றவேண்டிய பொறுப்பு களத்தில் முன்னேறி வருபவர்களிடமே இருந்தது. இதனைக் காணும் ஏனையோர் அடுத்தடுத்த அடிகளை வைக்க முடியாது. அந்த வெற்றிகரமான எதிர்த்தாக்குதல் முடிவடையும் வேளை நடைபெற்ற தவறுதலான சம்பவத்தில் தன் இரு கண்களின் பார்வையையும் இழந்தார் மதியழகி. எனினும்,
அகங்களை இழந்த ஏனைய போராளிகளைப் போலவே தானும் இயக்கப் பணியைத் தொடர்ந்து செய்கிறேன் என்ற மன நிறைவு { ஆறுதல் அவருக்கு இருந்தது. அத்துடன், எங்களது தலைவர் இருக்கிறார்தானே என்ற மனத் தைரியமும் வாழ்வு பற்றிய நம்பிக்கையைக் கொடுத்தது.

யுத்தம் முடிந்ததும் இவரைப் பற்றிய விவரம் குடும் பத்தினருக்குத் தெரியவில்லை. திசை மாறிய பறவை களாய் தமிழர் அந்தரிக்கையில் குடும்பத்தினர் பற்றிய விவரம் மதியழகிக்கும் கிடைக்கவில்லை. வவுனியாவில் உள்ள CAROD நிறுவனம் தனது பொறுப்பில் இவரை எடுத்துக்கொண்டது. தொடர்ந்து குடும்பத்தினர் பற்றிய தகவலைப் பெற்று இவரை அவர்களிடம் சேர்ப்பித்தது.

சரணடைந்த அன்புச்செல்வன் விசாரணைக்காகக் கூட்டிச் செல்லப்பட்டார். மேலதிகத் தகவல் பெற கொழும்பு நாலாம் மாடி மற்றும் பூஸாவுக்குக் கொண்டு செல்லப்படுவது நடைமுறை. இவர் அதற்கும் மேலால் சில இடங்களுக்குப் போய் வர வேண்டிவரவேண்டியிருந்தது. எப்படியோ புனர்வாழ்வு போன்றவற்றை முடித்து வெளியில் வந்தார். அவருக்கு ஓர் இலட்சியம் இருந்தது. விடுதலைப் போரில் பார்வையிழந்த ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. அந்த வகையில் மதியழகி  பற்றி அறிந்தார். எப்படியோ திருமணமும் நடைபெற்றது. இதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது விபத்து ஏற்பட்டது { ஏற்படுத்தப்பட்டது. காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிறிது காலம் கோமா நிலையில் இருந்தார்.

பின்னர் பிறர் தயவிலேயே நடமாட வேண்டிய மோசமான வாழ்வுக்குத் தள்ளப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெறாவிட்டால் வாழ முடியாத நிலை. அடிக்கடி வவுனியா பம்பை மடுவிலுள்ள CAROD நிறுவனத்துக்குச் சென்று சில அப்பியாசங்களைச் செய்ய

வேண்டும். இயல்பாக நடக்க முடியாது. கையிலும் காலிலும் காயம். தொண்டையிலும் துவாரம் ஏற்படுத்தி சில வைத்திய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் இவரால் பேச முடியாது. தம்மைச் சந்திக்க வருபவர்களிடம் தன்னால் பேசமுடியாது என்பதை திக்குத் திணறி சொல்லிவிடுவார். தொடர்ந்து மதியழகியே எல்லா விபரத்தையும் வழங்குவார்.

தான் பார்வையிழந்த சம்பவம் பற்றி மதியழகி விவரித்ததும் அவர் திக்கித் திக்கி “இவவின்ர கண்ணா நான்தான் இருக்கிறன்” என்று தனது பொறுப்பை உணர்த்துவார். அதைக் கேட்கும் எவருக்கும் கண்கள் கலங்கும். மதியழகி தன்னைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாலும் போக வேண்டிய பாதை, தடங்கல்கள் பற்றி இவரே சொல்லவேண்டியுள்ளது. அழைத்துச் செல்பவர் முன்னால்| வழி சொல்பவர் பின்னால். வரலாற்றில் குறிப்பிடப்படும் இரட்டைப் புலவர்களை நினைவுபடுத்துகின்றவர் இவர்கள்.

தற்போது வாழ்க்கையை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர் இவர்கள். கிடைக்கும் சிற்சில உதவிகள் இவர்களின் தேவைக்கும், வாழ்வுக்கும் போதாமலுள்ளன. இவர்களுக்குக் கிடைக்கவிருந்த வீட்டுத் திட்டம் ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு வேறொரு குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. பொதுவாக வீட்டுத் திட்டத்துக்கு வழங்கப்படும் நிதியில் அதனைப் பூரணப்படுத்த முடியாது. வேறெவரினதும் நிதியுதவி, கடன் அல்லது கையிருப்பை வைத்தே அதனைச் செயற்படுத்த முடியும். 

இதில், எதுவும் இவர்களுக்குச் சாத்தியமாகப்போவதில்லை என்பதை உணர்ந்ததாலோ என்னவோ அதிகாரிகள் வேறொரு குடும்பத்தினருக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கினர். ஒரு விடயத்தை எப்படிச் சாத்தியமாக்குவது என்று சிந்திப்பதை விட, நிராகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிவது அரச இயந்திரத்துக்கு மிக எளிது என்பதற்கு உதாரணம்.

இந்த வீட்டுத் திட்ட நிராகரிப்பு. கிராம அபிவிருத்திச் சங்கத்துடனோ அல்லது அக்கறையுள்ள உதவி நிறுவனம் ஒன்றுடனோ தொடர்புகொண்டு இதனைச் சாத்தியமாக்கியிருக்கலாம்.

இப்போதுள்ள நிர்வாகிகள்{அதிகாரிகள் புலிகளின் காலத்தில் கடமையாற்றியவர்கள் இல்லையே. இருந்திருந்தால் விரும்பியோ விரும்பாமலோ தாமும் சமூக அக்கறையுள்ளவர்கள் என்று நிறுவ முற்பட்டிருப்பார்கள்.

வாழ்வாதார உதவிகள் விடயமும் இத்தகையதே. மூன்றாம் நபரின் ஒத்துழைப்பின்றி இவர்களால் எதுவும் செய்ய முடியாது. கோழி வளர்ப்புக்கு உதவி கிடைத்தால் தனது தாயாரின் ஒத்துழைப்புடன் அதனைச் செயற்படுத்த முடியும் என்பது மதியழகியின் நம்பிக்கை. எவ்வாறாயினும், அக்கறையுள்ள தரப்புக்கள் ஏதாவது இவர்களின் வீட்டுத் திட்டம் மற்றும் சுயதொழிலுக்கு ஏற்றவகையில் ஏதாவது செய்ய முயல வேண்டும்.மாதத்தில் சில தடவைகள் அன்புச் செல்வன் பம்பை மடுவுக்கு சிகிச்சைக்காகச் செல்ல வேண்டியுள்ளது. 

குறிசுட்ட குளத்திலிருந்து பயணம் செய்ய தனி வாகனம்தான் தேவை. சொந்தமாக ஒரு முச்சக்கரவண்டி இருந்தால் நல்லது என்பது மதியழகியின் எதிர்பார்ப்பு. எனினும், இவர்கள் இருவரில் எவரும் வாகனத்தைச் செலுத்த முடியாது. இந்த நிலமையில் பொருத்தமான ஏற்பாடுகள் பற்றி அக்கறையுள்ள தரப்புகள் ஆராயவேண்டும். எவராவது முயல்வார்களா?

ராதிகா (மதியழகி) 


ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்
''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியார்
வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள் 
மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார் , வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த தக்காளி பையை எப்போதும் உனக் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார். ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் .

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில்... ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர். 
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்'' என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.
நாம் ஒவொருவரும் இப்படி தன பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு 

பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி |

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.
ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.
பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். 
அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.
உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.
டாக்டர் வாயே பேசவில்லை.
குழந்தைகள் என்றும் குழந்தைகளே!


சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று பேசினால் மட்டும் போதுமா? 

அது செயலிலும் இருக்க வேண்டும் என்பதை, சுவாமி விவேகானந்தர் ஒரு கதை மூலம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நாம் இப்போது பார்க்கலாமா? அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய அரசவையில் அதிகாரிகள் பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், நான்தான் அரசனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன். நான் அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம், இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது என்று கூறினான். துறவி புன்சிரிப்புடன், நீ சொல்வதை நான் நம்பவில்லை என்றார். அரசன், நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்கொள்ளலாம் என்றான். 

சிறிய ஒரு சோதனை வைத்தார் துறவி – அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா சோதனை? என்று இகழ்ச்சியாகக் கேட்டான்.

பின்னர் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். 

அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என்பது தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அதிகாரிகள் செய்தது போலவே, நாமும் நம் பங்குக்கு உரிய வேலையைச் செய்து வருகிறோம். 

உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை யாருக்குத் தெரியப் போகிறது? என்கிறார் ஒருவர். இப்படித்தான் பணக்காரர்களும் கொடுங்கோலர்களும் சொல்கிறார்கள். எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்வோம்.


ஐம்பது, அறுபதுகளில் பிறந்த எங்களைப் போன்றோர்,இப்போது அறுபது, எழுபதைத் தொட்டிருப்பார்கள். எங்களது இளமைக் காலங்களில் பெரிய செல்வ நிலையில் இல்லை என்றபோதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக ஞாபகம். மின் விசிறி, குளிர் பதனப்பெட்டி, கார், தொலைபேசி போன்ற மிக அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்ற போதிலும் பனை ஓலை, வெட்டிவேர் விசிறி, மண் பானை, சைக்கிள், தபால் போன்ற சிலவற்றை வைத்துக் கொண்டே சந்தோஷமாக இருந்தோம். உஷ்ணத்திலும், கொசுக்கடியிலும் கூட நிம்மதியாக உறங்குவோம்.

வீட்டில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்போம். 'உடம்புக்கு வரும்' என்ற அம்மாவின் அதட்டலையும் பொருட்படுத்தாமல், மழை வந்தால் நனைவோம். அம்மாவின் கஷாய வைத்தியத்தின் துணையோடு பல நோய்களிலிருந்து மீண்டு வருவோம். மாலை வேளைகளில் வீட்டுக்குள் இருப்பது என்பதை மிகப் பெரிய பாவமாகக் கருதுவோம். வெயில் மழை வித்தியாசமில்லாமல் தெருவில் விளையாடுவோம். 'ஊர்ப்பட்ட வெயில் எல்லாம் உன் தலையில்தான், என்ன நிலாவா காயிது, இப்படி உச்சியிலே ஆடுவதற்குஎன திட்டிக்கொண்டே அம்மா ஞாயிற்றுக் கிழமைகளில் தலையில் அடித்து எண்ணெய் தேய்க்கும்போது வருத்தப்படவே மாட்டோம். அன்று அம்மா செய்யும் கறிக்குழம்பை சாப்பிட்டுவிட்டு மத்தியானம் வரும் சுகமான தூக்கத்தை அனுபவிக்கும்போது, 'எண்ணெய் குளியல் ஆனால் தூங்கக்கூடாது; உடல் உஷ்ணம் கண் வழியேதான் வெளியே போகணும்' என்ற அம்மாவின் விஞ்ஞானத்தைப் பொருட்படுத்தாமல் மாலை ஐந்து வரை உறங்கி எழுவோம்!

ஓவ்வொரு பருவத்தில் கிடைக்கும் ஈச்சம்பழம், வெள்ளரி, இலந்தை, நாவல் பழங்கள், சீத்தாப்பழம், கொடுக்காப்புளி, நுங்கு போன்ற மலிவான பண்டங்களில் மனதைப் பறிகொடுப்போம். புளியம்பழங்களை, நாக்கு எரிந்தாலும் பரவாயில்லை என்று ஆசை ஆசையாய்த் தின்று தீர்ப்போம். கருப்பட்டி காபீயை சந்தோஷமாக அருந்துவோம். கடலை மிட்டாய், கமர்கட், ஜவ்வு மிட்டாய், பஞ்சுமிட்டாய் போன்ற மலிவான திண் பண்டங்களிலேயே, மன நிறைவு கொள்வோம். வற்றல் போடுவதற்காக அம்மா செய்யும் களி நடுவில் குழி செய்து, நாட்டு சர்க்கரை நிரப்பி உண்பதில் பரவசம் அடைவோம். மார்கழி மாதத்தில் பெருமாள் கோவிலில் கிடைக்கும் ருசியான பொங்கலுக்காக, கஷ்டப்பட்டு, அதிகாலையில் எழுந்து செல்வோம். நவராத்திரி சமயத்தில் மாமிகள் வீடுகளுக்குத் தவறாது விஜயம் செய்து விதவிதமான சுண்டல் வகைகளை ருசி பார்ப்போம்.

தெரு கிரிக்கெட் தொடங்கி பம்பரம், கோலி, கில்லி போன்ற எந்த ஒரு விளையாட்டையும் விட்டு வைக்காமல் ஆடுவோம். அடுத்த தெரு டீமுடன் போட்டியாக ஆடுவதை, ஒரு மானப் பிரச்சினை போல் எண்ணிக் கொண்டு வெறியுடன் விளையாடுவோம். வெற்றி பெற்றால் கொண்டாடுவோம். தோற்றால் எரிவோம். ஆனால் அதே டீமுடன் சேர்ந்து கொண்டு அடுத்த பேட்டை நபர்களுடன்,எங்கள் பேட்டை மனத்தைக் காக்க விளையாடுவோம்.

பள்ளிக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஆறு கி.மீ நடந்து செல்கையில் உலக அறிவை விருத்தி செய்வோம். வீட்டில் விருந்தினர் வந்தால் பன்னீர் சோடா வாங்கி வர கடைக்கு ஓடுவோம். உறவினர் பையன் விலையுயர்ந்த சட்டை போட்டு வந்தால், பொறாமையுடன் பார்த்து அடுத்த மூன்று நாட்களுக்கு உள்ளுக்குள் வெந்து புழுங்கி, நான்காம் நாள் அதை சுத்தமாக மறந்து இயல்புக்குத் திரும்புவோம். தபால் தலை, தீப்பெட்டி லேபிள் சேகரிக்கும் பொழுதுபோக்கில், நண்பர்களுடன் வர்த்தக பேரம் பேசி, பண்டம் மாற்றிக் கொள்வோம். எங்கள் பள்ளி உங்களுடையதை விட எவ்வகையில் உயர்ந்தது என்று வாதிடுவோம். சண்டை முற்றி, சிறிது நாட்கள் பேசாமல் இருந்து பிறகு ஒரு நடுநிலை நண்பன் மூலம் சமரசம் ஆகி மீண்டும் உயிர்த் தோழர்களாக மாறுவோம். பரீட்சையில் தோற்ற நண்பனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி, நட்பு மாறாமல் தொடர்ந்து செயல்படுவோம்.

எப்போதாவது ஒரு வார இறுதியில், சினிமா அல்லது சர்க்கஸ் போகப் போகிறோம் என்று வீட்டில் சொன்னால் இரண்டு நாட்கள் முன்னமே தயாராகி நிற்போம். பார்த்து வந்த சினிமா பற்றி அந்த வாரம் முழுதும் நண்பர்களுடன் பேசுவோம். வீட்டில் உள்ள பெரிய வானொலிப் பெட்டி அருகே காதை வைத்து கிரிக்கெட் வர்ணனையை, புரிந்தும் புரியாமலும் ஆங்கிலத்தில் கேட்டு ஆர்ப்பரிப்போம். சினிமா செய்திச்சுருளில் காட்டப்படும் நாற்பது நொடி கிரிக்கெட் ஒளிபரப்பைப் பரவசமாகப் பார்ப்போம். 'பட்டோடி என்னமாய் பௌண்டரி அடித்தான் பார்' என்று சிலாகிப்போம். அண்ணன்மார்கள் உபயோகித்த சட்டை, செருப்பு, புத்தகங்கள்தான் எங்களுக்குக் கிடைத்தாலும் (வேறு வழியில்லாமல்) சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம். வருடத்திற்கு ஒருமுறைதான் கிடைக்கும் புது ஆடைகளுக்காக ஆவலுடன் காத்திருப்போம்.

‘Pocket money’ என்றால் என்னவென்றே தெரியாதிருந்தோம். தீபாவளிப் பண்டிகைக்காக இரு வாரங்களுக்கு முன்னமே தயாராவோம். பட்டாசு மத்தாப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொளுத்தி மகிழ்வோம். பண்டிகை நாட்களில் அம்மா செய்து வைத்திருக்கும் பலகாரங்களை, நண்பர்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று பட்டுவாடா செய்வோம் . ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்கப் போட்டி போடுவோம். தப்பு செய்யும் மாணவர்களைப் பற்றி ஆசிரியரிடம்போட்டுக் கொடுத்து' அதனால் அவர்களிடமிருந்து 'எட்டப்பன் பரம்பரை' என்று திட்டு வாங்குவோம் ஆசிரியர்களிடம் உண்மையான மரியாதையுடன் நடந்து கொள்வோம். பெற்றோர் பேச்சைக் கேட்காதவர் கூட ஆசிரியர் பேச்சைக் கேட்போம்.

காலாண்டு,அரையாண்டு மற்றும் முழுத் தேர்வுகளுக்குக் கூட்டாக நண்பர்களுடன் பழத் தோட்டத்துக்கு சென்று மாமரங்களில் அமர்ந்து, மாம்பழங்களை ருசித்தவாறே படித்து, வெற்றி பெறுவோம். விடுமுறை இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று துக்கம் அனுஷ்டிப்போம். விடுமுறை நாட்களில் வெளியூர் சென்று வந்த விவரங்களை ஏதோ 'கங்கை கொண்ட சோழன்' பெற்ற வெற்றியைப் போல் பேசி, ஊருக்குப் போகாத நண்பர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வோம். புதுப் புத்தகங்களுக்கு சொந்தமாக அட்டை போட்டு, பெயர்த்தாள் ஓட்டுவதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு மார் தட்டுவோம். பள்ளி விழாக்கள் அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு எங்கள் பங்களிப்பை வழங்குவோம்.

மொத்தத்தில் சிக்கனம் பொருளாதாரம் போன்ற நெருக்கடிகள் இருந்தாலும், இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து, கிடைத்த இளமைப் பருவத்தை வீணாக்காமல் அனைவரிடமும் நட்பாக இருந்து நிறைவாகவே வாழ்ந்ததாக எண்ணுகிறோம். வீட்டுப் பெரியவர்கள் கொடுத்த 'கட்டுப்பாடான சுதந்திரம்' என்ற வட்டத்துக்குள் வாழ்ந்தோம். இன்றைக்கு உள்ள வசதிகளின் மூலம் கிடைக்கப் பெறும் அறிவாற்றல் அன்றைக்கு எங்களுக்கு இல்லை என்றாலும், இப்போது இருக்கும் புற அழுத்தங்களும் அப்போது எங்களுக்கு இல்லை என்பது உண்மை. எனினும், அன்றைய சூழலில் அருமையான, வாழ்க்கை நடைமுறை, அனுபவ அறிவைப் பெற்றோம் என்ற திருப்தி என்றும் எங்களுக்குண்டு.

 



தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார்.

அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை.

அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.

அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான்.

அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.

“நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன்.

“அப்படியா?” என்ற ராஜராஜசோழன் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார்.

ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது.

பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறுநாள் பேரரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது. 

அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது.

இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது. 

பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான்.


அன்பினால் மட்டுமே இரண்டு இதயங்கள் சேரும்
.ஒரு குரு தன்னுடைய மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்......

"நாம் ஏன் கோபமாக இருக்கும் போது கத்திப் பேசுகிறோம்? "
மாணவர்கள் சிறிது யோசித்துப் பார்த்தனர். அதில் ஒருவர்,
"நாம் நமது அமைதியை இழந்து விடுகிறோம். அதனால்தான் கத்துகிறோம்"
அதற்கு அந்த குரு,
"ஆனால் நமது அருகிலேயே நாம் கோபப்படும் நபர் இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்? நாம் மிகச் சாதரணமாக நமது அருகில் இருப்பவரிடம் பேசலாமே......... கத்த வேண்டிய அவசியம் இல்லையே……நாம் கோபமாக இருக்கும் போது ஏன் கத்த வேண்டும்?"
மாணவர்கள் பல விடைகளைக் கூறினர். ஆனால் எதுவும் குருவுக்கு திருப்தியாக அமையவில்லை. அதற்கு மேலும் மாணவர்களை சோதிக்க விரும்பாமல் அவரே பதிலைக் கூறத் தொடங்கினார்.
"இரண்டு நபர்கள் ஒருவர் மேல் மற்றவர் கோபமாக இருக்கும் போது, அவர்களுடைய இதயங்களுக்கான இடைவெளி மிகவும் அதிகம். அப்பொழுது அந்த இரண்டு இதயங்களுக்கும் கேட்கும் விதத்தில் அவர்கள் கத்திப் பேசுகின்றனர்.
எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் கோபமாக இருக்கின்றனரோ அந்த அளவுக்கு அவர்கள் இதயங்களின் தூரம் அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் இதயங்களுக்கு கேட்கும் விதமாக கத்துகின்றனர்."
பிறகு, குரு தனது மாணவர்களைப் பார்த்து,
"இரண்டு நபர்கள் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? அவர்களுக்குள் மிகவும் மெதுவாக பேசிக் கொள்வார்கள். ஏன்? அவர்களின் இதயம் நெருக்கமாக உள்ளது. அவைகளுக்கிடையேயான தூரம் மிகவும் குறைவு.........

அவர்களின் காதல் அதிகமாக ஆகும் போது என்ன நடக்கும்? அவர்கள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். வெறும் முணு முணுப்புதான் இருக்கும். இன்னும் அவர்களின் காதல் அதிகரிக்கும் போது அந்த முணு முணுப்பு கூட இருக்காது. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டுமே இருக்கும்.
அன்பினால் மட்டுமே இரண்டு இதயங்கள் சேரும். இது காதலுக்கு மட்டும் அல்ல.........நட்பிற்கும் தான்......."
அன்பே சிவமும் அன்பே சக்தியும்
அன்பே ஹரியும் அன்பே பிரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்......--
ஐடா ஸ்கடர் - வாழ்க்கை குறிப்பு

நெரிசலிலும், வெப்பத்திலும் சிக்கித் தவிக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுவதே நல்வாழ்வின் தொடக்காமென கருதினார் ஐடா ஸ்கடர். ஐடாவிடம் நல்வாழ்க்கையின் உதாரணம் கேட்போருக்கு அவரது மாறாத பதில், "அமெரிக்காவும், கோடீஸ்வரருடன் திருமணமும்" என்பது தான். இந்தியாவில் நிலவிய பஞ்சமும், தெருவோரம் கிடக்கும் பிணங்களும் தான் இந்தியாவை குறித்து ஐடாவின் நினைவில் நின்ற பின்பங்கள்.‘இந்தியா’ ஒருபோதும் தனக்கு ஏற்ற நாடல்ல என்பது ஐடாவின் கணிப்பு. அவளது கணிப்புகள் எல்லாம் பரமனின் அழைப்பில் மங்கி பின் மறைந்தது.

அப்போது அவள் இந்தியாவில் தொண்டாற்றி வரும் தன் தந்தையோடு விடுமுறையை கழிக்க வந்திருந்தாள். அகல்கள் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் அறையில் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த ஐடாவின் காதுகளில் சிலரது காலடியோசை வெளித் திண்ணையில் இருந்து வந்தெட்டியது. புத்தக பார்வையை கலைத்துவிட்டு கதவருகே வந்து எட்டிப் பார்த்தாள். அங்கு பிராமணர் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் 14 வயது மனைவியை காப்பாற்ற வரும்படி வேண்டினார். 

“அம்மா! மருத்துவச்சிகள் கை விரித்து விட்டனர். எப்படியாவது என் மனைவியையும், பிள்ளையையும் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். ஐடா மகப்பேறுவில் அகரம் கூடா அரியாதவள், எனவே “என் தந்தை ஒரு சிறந்த மருத்துவர். அவர் வீட்டிற்கு வந்ததும் அவரை அழைத்து வருகிறேன்” என்றாள். “ஒரு அந்நியஆண் என் இல்லத்திற்குள் நுழைவதைக் காட்டிலும், அவள் இறப்பதே மேல்” என்று மறுத்து வெளியேறினார் பிராமணர். அந்த ஏழைப்பெண்ணுக்காக வருந்தினார் ஐடா. அவளால் வேறு என்ன செய்ய முடியும். கனத்த மனதுடன் புத்தகத்திற்குத் திரும்பினாள் ஐடா.

சிறிது நேரத்தில் ஐடாவின் தந்தை வீடு திரும்பினார். நடந்ததை சொல்லி வருத்தமடைந்தாள் ஐடா. மீண்டும் காலடியோசை கேட்டது. பிராமணர் மறுபடியும் வந்திருப்பார் என்று நினைத்த ஐடா வாசலருகே ஓடோடி வந்தாள். ஆனால் அங்கோ ஒரு இஸ்லாமியர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு உதவி செய்ய வருமாறு ஐடாவை அழைத்தார். 

ஐடா ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரல்லாததால் ஐடாவின் தந்தை வந்து உதவுவதாக கூறினார். இதை கேட்ட இஸ்லாமியர் “என் மனைவியின் முகத்தை எனது குடும்பத்தாரைத் தவிர வேறு எந்த ஆணும் கண்டதில்லை. அப்படி இருக்க அயல்நாட்டவரான உங்களை என்னால் அனுமதிக்க முடியாது” சொல்லி மறுத்துவிட்டார். அவரது மனதை மாற்ற முயன்ற ஐடாவிற்கும் அவள் தந்தைக்கும் தோல்வியே மிஞ்சியது.

வேறுவழியின்றி மறுபடியும் புத்தகத்தை தொடர்ந்த ஐடாவிற்கு மீண்டும் காலடியோசை கேட்கவே, திகிலோடும் குழப்பத்தோடும் சென்று பார்த்தாள். மூன்றாவதாக ஒரு உயர் குல இந்து மனிதர் தன் மனைவியின் பிரசவத்திற்கு ஐடாவை அழைத்தார். ஐடாவுக்கு அனுபவம் இல்லாததால் அவரது தந்தை வருவதாக தெரிவித்தார். “வேண்டாம்; என் மனைவி சாகட்டும்” என்ற அதே பதில் தான் இந்த முறையும் வந்தது.

“அந்த இரவு என்னால் தூங்க முடியவில்லை... அது ஒரு பயங்கரமான இரவு. ஒரு பெண் உதவிக்கு இல்லாததால் இங்கே மூன்று பெண்களின் உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனது அமெரிக்க தோழிகள் உல்லாச வாழ்விற்கு தொடர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். என்னால் அவர்களின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை.

 அந்த இரவு வேண்டுதலிலும் வேதனையிலும் மட்டுமே நகர்ந்தது. அடுத்த நாள் காலை எனது எதிர்காலம் குறித்து தேவனுடைய விருப்பதை அறிந்து கொள்ள ஜெபத்தில் அமர்ந்தேன். என் வாழ்வில் முதல் முறையாக தேவனின் சத்தத்தை தெளிவாக உணர்ந்தேன். அந்த நேரமெல்லாம் தேவன் தமது ஊழியத்திற்கு என்னை அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்

ஜெபத்தை முடித்து எழுந்த போது, தாரை தப்பட்டை சத்தம் கேட்க தொடங்கியது. உடனே எனது உள்ளத்தை திகில் தொற்றிக் கொண்டது. அது நிச்சயமாக யாரோ ஒருவருடைய மரண செய்தி என்பது எனக்கு தெரியும். வேலைக்காரர்களில் ஒருவனை கிராமத்திற்குள் அனுப்பி அந்த மூன்று பெண்களின் நிலையை விசாரித்து வருமாறு அனுப்பினேன்.

 மூவருமே இறந்துவிட்டதாக விசாரித்து வந்தவன் கூறினான். எனது அறையை மறுமடியும் மூடிவிட்டு அழுதேன், இந்திய பெண்களின் நிலையை குறித்த பாரம் என் உள்ளத்தை ஆக்கிரமித்தது. நீண்ட நேர ஜெபத்திற்கு பின்னர் “நான் அமெரிக்கா செல்லவே தீர்மானித்தேன். ஆம்! அமெரிக்கா சென்று மருத்துவம் படித்து மீண்டும் இந்தியாவுக்கே வந்து அவல நிலையில் இருக்கும் பெண்களுக்கு தொண்டாற்றுவதே இறைவனின் நோக்கம் என்பதை புரிந்துகொண்டேன்..

ஐடா உயர்ந்த கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை பெற்றார். நன்கு பயிற்சிபெற்ற மருத்துவராக ஐடா இந்தியா திரும்பினார். பெண்களுக்கான மருத்துவமனை ஒன்றை வேலூரில் நிறுவ வேண்டுமென விரும்பினார். எதிர்பாராத விதமாக ஐடாவிற்கு மருத்துவர் லூயிசா ஹர்ட்டிடமிருந்து கடிதம் வந்தது. அதில் வேலூரில் மருத்துவமனை அமைக்கப் பணம் தேவைப்படுகிறதா? பதில் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐடாவிற்கு அந்த மூன்று பெண்களின் நினைவு வந்தது, இந்தியாவில் சுவர்களுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அவலத்தை நினைத்தார். ஆம் பெண்களுக்கான மருத்துவமனை இங்கு உடனடி தேவை, நல்ல மருத்துவமனை கட்டுவதற்கு $50,000 தேவைப்படும் என்று பதில் எழுதினார்.

$50,000மா!! என்று பலரும் வாயைப் பிளந்தனர். அத்தொகையின் தற்போதைய மதிப்பு $500,000. $8000 திரட்டுவது சாத்தியமானது. ஆனால் உங்களால் அதில் பாதி பணத்தை கூட திரட்ட முடியுமா என்பது சந்தேகம் தான் இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் என்றனர். பலரும் தன்னை தாழ்வாக நினைப்பதை புரிந்து கொண்டார் ஐடா. அவர்களது எண்ணம் தவறு என்றும் பணம் தேவைப்பட்டால் அதைத் தர தேவனால் இயலும் என்றும் பதில் எழுதினார்.

ஐடா தானே நிதி திரட்ட முற்பட்டார். "யானை பசிக்கு சோழ பொறி" என்பதைப்போன்று சிறு துளியாய் டாலர்கள் வந்து சேர்ந்தன. இந்தியாவின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது. 10,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் தான் நிலவியது. பாரம்பரிய மருத்துவர்களிடம் சிறந்த மருந்துகள் இருந்தாலும் அதில் பெரும்பாலானவை பக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவை.

 இந்தியாவில் மருத்துவத்திற்கான அவசர தேவையை உணர்ந்தார். ஆனால மருத்துவமனை கட்டி முடிக்க குறைந்தது இரண்டாண்டுகள் பிடிக்கும். ஆகவே ஒரு சிறு அறையை தற்காலிக மருத்துவனை ஆக்கினார். திண்ணை காத்திருக்கும் அறையாக பயன்பட்டது. அவள் நோயாளிகளை நன்றாக கவனித்த போதிலும் சந்தேகம் தமிழ் இந்தியர்களை ஐடாவிடம் சிகிச்சை பெறுவதற்கு தடை செய்தது. அவளது முதல் சிகிச்சை தோல்வி அடைந்தது. ஐடாவிடம் சென்ற நோயாளி இறந்திவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவியது. பலரது சந்தேகம் வலுத்தது.

இறுதியாக ஒரு உயர்ந்த ஜாதி இந்துப்பெண் கண் சிகிச்சைக்காக வந்திருந்தார். இம்முறை ஐடா வெற்றிகரமாக சிகிச்சை செய்து குணமாக்கினார். அதன்பின் அவளது சேவையின் தேவை அதிகரித்தது. சலொமி என்ற அவளது வீட்டு சமையல் பணிப்பெண் தான் ஐடா பயிற்சியளித்த முதல் செவிலியர். நாளொன்றுக்கு 100, 200, 300, 400, 500 என்று ஐடாவிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் உள்ள மொத்த மருத்துவர்களையும் கொண்டு வந்து சேவை செய்தாலும் “சமுத்திரத்தை காயத்தால் உரசியது” போலதான் இருந்தது அன்றைய தேவை. இந்தியப் பெண்களுக்கு சேவை செய்ய இந்திய பெண்களுக்கே பயிற்சி அளிக்கவேண்டுமென்று தீர்மானித்த ஐடா வேலூர் செவிலியர் பாடசாலையை உருவாக்கினார். செவிலியருக்கு பயிற்சியளிக்கத் தன்னால் கூடுமானால் மருத்துவருக்கும் பயிற்சி அளிக்கக் கூடுமென்று நம்பினார் ஐடா. மீண்டும் நம்பிக்கை ஜெயித்தது. வேலூர் மருத்துவக் கல்லூரி உருவானது. 
அது சுலபமாக நடக்கவில்லை. காலம் செல்லச் செல்ல நெருக்கடியின் விளிம்பிற்கு வந்தார் ஐடா. ஆனால் கடவுள் எப்பொழுதும் போலக் காப்பாற்றினார். இக்கட்டான நிலை ஒன்றில் ஐடா எழுதினார் “முதலில் நன்கு சிந்தனை செய்; பின்பு துணிந்து செய்; உண்மைகளை தெரிந்துகொள்; செலவை மதிப்பிடு; பணம் முக்கியம் அல்ல; நீ கட்டிக்கொண்டிருப்பது மருத்துவக் கல்லூரியல்ல; அது கடவுளின் ராஜாங்கம்” இது கடவுளின் விருப்பமென்றால் கடவுளே கல்லூரியைத் திறந்து வைப்பார் என்ற நம்பிக்கையின் பலனாய் கல்லூரி தொடங்கியது.

தன் பாதத்தில் படிந்த இந்தியாவின் தூசியை தட்ட விரும்பிய அந்த பெண் பின்னாளில் இந்தியர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்தார். பிரிட்டிஷ் மற்றும் இந்திய அரசாங்கம் அவருக்கு உயர்ந்த விருதுகளை வழங்கியது. காந்தியடிகள் அவரை தேடி சந்தித்தார். ஐடா சர்வதேச புகழ் பெற்றார். ஐடாவின் கடவுள் நம்பிக்கை அழிவில்லாதது. அதுவே அந்த மருத்துவச்சியின் மதிப்பிற்குரிய சான்றாக இன்றளவும் காலங்களை கடந்து நிலைநிற்கிறது, அவளது இறை நம்பிக்கையே அவளை விசித்திர மருத்துவச்சியாக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.




"என்னுடைய வெற்றிக்கான காரணம் !

“சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்… `கண்ணு… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்… `மகனே நினைவில்வைத்துக்கொள்… உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்… “மகனே… உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்… `மகனே… எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்… `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்… `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.
அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்… மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’
 
அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்…’’
பல ஜாதி பல மதத்தை சேர்ந்த நாற்பது பேர்களை ஆளுக்கு பத்து பேராக தனி தனி அறைகளில் அடைத்து வைத்து ஒருநாள் வசிக்க சொன்னார் ஒருவர்.மறுநாள் காலை யில் சென்று ஒவ்வொரு அறையாக பார்த் தார்.
அந்த இடமே ரத்தகழனியாக கிடந்தது. பதறிய அவர் என்ன ஆச்சு என குற்றுயிராக கிடந்த ஒருவரிடம் விசாரித்தார்.
அதற்கு உயிருக்கு போராடியவர்சொன்னது, ஐயா எங்களை உள்ளே அனுப்பிய உடனே பூணூல் போட்டு அங்கே அமர்ந்திருக்க கூடியவர் ஒரு முஸ்லீமிடம் சொன்னார்,பாய் பாய் அதோ அந்த டேவிட்டை பாத்தீங்களா உங்களுக்கு சிலநூறு ஆண்டுகளுக்கு பின் வந்தவன் இன்று உங்களை விட ஜனத்தொ கையை பெருக்கி பெரிய ஆள் ஆகிவிட்டான். பாத்தீங்களா முஸ்லீம்னா அவனுக்கு சுத்தமா பிடிக்காதாம் அல்லாவை விட இயேசுதான் பெரியவராம் அவர்தான் உண்மையான கடவுளாம் நாமெல்லாம் போலியாம்.
என்னது என் அல்லாவையே குறை சொன் னானா இதோ அவனை ஓரே நொடியில் கொன்று காட்டுகிறேன் பாருங்கள், பாய் அடித்த ஒரே அடியில் டேவிட் காலி அந்த நிமிடத்தில் பாயை கைதட்டி ஊக்கப்படுத்திய பூணூல் ...
சிறிது நேரம் சென்று மற்ற எட்டு பேரிடமும் மெதுவாக பேச்சு கொடுத்தது பார்த்தீங்களா சகோதர்களே நாம் எட்டுபேர் இந்துக்கள் இங்கே இருக்கும்போதே ஒரு பாய் ரவுடித்த னம் செய்யுறதை அப்புறம் நமக்கென்ன மரி யாதை இவனை இப்படியே விட்டால் நம்மில் அடுத்து யாரை கொல்ல போகிறானோ நீங் கள் யார் சாக போகிறீர்களோ நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.
யாருடா இவன் நம்மை கொல்லுவதற்க்கு வாங்கடா கொல்லுங்கடா பாயை (பாய் கதை முடிந்தது) இருப்பது இந்துக்கள் மட்டும்.
அனைவரையும் பாராட்டி தள்ளிய பூணூல் பத்து நிமிடம் சென்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தது தேவரே அங்க பாத்தீங்களா கொடுமையை பிரம்மனின் தொளில் இருந்து பிறந்த நீங்களே சும்மா இருக்கிறீர்கள் காலில் இருந்து பிறந்த அந்த ஆதிதிராவிடன் ரொம்ப நக்கலாக கால் மேல கால் போட்டிருக் கான் இதை இப்படியே விட்டால் உங்கள் தலையில் அமர்ந்து கால் மேல கால் போடு வான் பறவாயில்லையா,அடுத்த நொடியே இரு ஜாதியினருக்கும் கடுமையான சண்டை மூண்டது இது நடக்க ஆரம்பித்ததுமே வன்னி யர் பெருசா யாதவர்,பெருசா நாடார் பெருசா, செட்டியார் பெருசா என அனைவரையும் தூண்டி விட்டார் அறிவற்று அடித்து கொண்டு அனைவரும் உயிரற்று உள்ளனர். நானும் பிழைப்பது கடினம் இதுதான் நடந்தது.
பார்ப்பணியம் விஷமாக மத,ஜாதிய வெறிகளை தூண்டுகிறது.எச்சரிக்கை!
இரவிக்குமார் 


ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்.
ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."
கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.
அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.
பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல.யாரிடமும் சிரிக்க முடியவில்ல். என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.
கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.
நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை சந்தோஷிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.
இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."
இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.
வாழ்க்கையின் அழகு என்பது
நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு...
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி...
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!
" மகிழ வைத்து மகிழுங்கள்..

உலகமும் இறையும் உன்னை கண்டு மகிழும்".


பாக்கியநாதன் சசிக்குமார்


பிறரின் கண்ணீரைத் துடைப்போம்.
படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.
பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.
அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு மதிப்பு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.
" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை, சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விஷயம் புரியவில்லை. நடந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டையைப் பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விஷயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விஷயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்.

                                                                             யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(3)
கடந்த வாரம் பதிவுசெய்யப்பட்ட ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி. பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான புதிய தகவல்களைக் கொண்ட நுண்ணாய்வு.
இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென ‘சாதிகள், வழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தமிழ் இலக்கியம்’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சாதிக் குழுக்கள் பெரும் சாதிக் குழுமத் தோற்றத்தோடு (Formation of Mega Caste Groups) எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றது (Sivathamby, 2005). டேவிட் (1974அ, 1974ஆ) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோரது கற்கைகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருபது, பெரும் சாதிக் குழுக்கள் இருப்பதாக அடையாளம் காண்கின்றன.
வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், பண்டாரி, சிப்பாச்சாரி, கோவியர், தட்டார், கரையார், தச்சர், கொல்லர், நட்டுவர், கைக்குழார், சாண்டார், குயவர், முக்குவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோரே இவ்விருபது சாதிக்குழுக்களுமாகும். இச்சாதிக் குழுக்களின் மரபுரீதியான தொழில்கள் மற்றும் அவர்களது அடிமை, குடிமை அந்தஸ்து ஆகியன அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வேறுபல பகுதிகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் ஒவ்வொரு சாதிகளும் கொண்டுள்ள சனத்தொகை தொடர்பான மிகச் சரியான தகவல்கள் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருவேறு மானிடவியலாளர்களால் (கெனத் டேவிட் மற்றும் மைக்கல் பாங்ஸ்) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத்தொகையில் 50 வீதமானோர் ‘உயர் சாதி’ வெள்ளாளராய் இருந்தனர் எனக் கணிப்பிடப்பட்டது. அத்தோடு கரையார் 10% மாகவும், கோவியர் 7% மாகவும், பள்ளர் 9% மாகவும், நளவர் 9% மாகவும் கணிப்பிடப்பட்டனர். யாழ். குடாநாட்டின் சனத்தொகையில் ஏனைய பெயர்குறிப்பிடப்பட்ட பதின்மூன்று சாதிகளில் எதுவும் 3% துக்கும் மேலான இடத்தினைப் பெறவில்லை.
யாழ்ப்பாணச் சமூகத்தைப்பற்றி எழுதிய டேவிட் (1973அ, 1973ஆ, 1974அ, 1974ஆ), ஃபாபன்பேகர் (1982, 1990), பாங்ஸ் (1960), அருமை நாயகம் (1979, 2000) மற்றும் சிவத்தம்பி (2005) போன்ற புலமையாளர்கள் சாதிகளை வெவ்வேறு முறைகளில் பாகுபடுத்தினர். உதாரணமாக, டேவிட் (1973:36) யாழ்ப்பாணச் சாதிகளை ‘உயர் சாதி’, ‘நல்ல சாதி’, மற்றும் ‘கீழ்ச் சாதி’ எனப் பாகுபடுத்துகின்றார். சிவத்தம்பி (2000:10) ‘உயர் சாதியினர்’, ‘உயர் சாதி அல்லாதோர்’ மற்றும் ‘குடிமக்கள்’ என வேறுபடுத்துகின்றார். வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், கோவியர் மற்றும் சைவச் செட்டி ஆகிய சாதிக் குழுக்களை டேவிட் உயர் சாதியாகக் கருத, சிவத்தம்பி வெள்ளாளர் மற்றும் பிராமணர்களை உயர் சாதி எனக் கருதுகின்றார். யாழ்ப்பாணச் சாதி அடுக்கமைவிலிருந்த குடிமக்கள் மற்றும் அடிமைகள் என்ற பாகுபாடுகளும் முக்கிய விடயங்களாகும். வேறுபட்ட அளவீடுகளைப் பயன்படுத்தி பல்வேறு புலமையாளர்களும் சில சாதிக் குழுக்களை அடிமைகள் என்ற வகைக்குள்ளும் உட்படுத்துகின்றனர். உதாரணமாக, ஒல்லாந்தரின் கணிப்பீட்டின்படி கோவியர், நளவர், பள்ளர், சாண்டார் மற்றும் சிவியார் ஆகியோர் ‘குடிமைகள்’ என்ற குழுவினுள் உள்ளடங்குவர் எனச் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இன்னொரு பக்கத்தில், டேவிட் (1974) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோர் கோவியர், பள்ளர் மற்றும் நளவர் ஆகிய சாதிக் குழுக்களை ‘அடிமைகள்’ என்ற வகுப்பினுள்ளும் தட்டார், தச்சர், கொல்லர், குயவர், வண்ணார், அம்பட்டர் மற்றும் பறையர் ஆகிய சாதிக் குழுக்களை குடிமைகள் என்ற வகுப்பினுள்ளும் உள்ளடக்குகின்றனர். அதேபோன்று ‘தீண்டத்தக்கவர்’ (Touchables), தீண்டத்தகாதோர் (Untouchables) ஆகிய சாதிக்குழுக்களும் யாழ்ப்பாணச் சாதியமைப்பில் முக்கியமானதொன்றாக இருந்தன.
அட்டவணை-1 இன் அடிப்படையில், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ‘தீண்டத்தகாதவர்கள்’ எனக் கருதப்பட்டனர். வண்ணார் சாதியினைச் சேர்ந்தோர் மரபுரீதியாக கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமையால் (வெள்ளை கட்டும் நோக்கத்திற்காக) அச்சாதியினைச் சேர்ந்தோர் ‘தீண்டத்தக்கவராகக்’ கருதப்பட்டனர். இவ்விடயத்தினை பாங்ஸ் (1960:65) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘வண்ணார் கோயில்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டமையால், அவர்கள் தீண்டத்தக்கவராயும் அம்பட்டருக்கு கோயில்களின் உட்புறம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனால், அவர்கள் தீண்டத்தகாதவராயும் கணிக்கப்பட்டனர்.
இவ்விடயம் தென்னிந்திய சாதி அமைப்புமுறையின் சில பண்புகள் யாழ்ப்பாணச் சாதியிலும் காணப்படுவதை தெளிவுபடுத்துகின்றது. தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘தீண்டாமை’ என்ற விடயம் வழக்கத்திலில்லை என்பது பொதுவாக விவாதிக்கப்படும் விடயமாகும். தற்காலச் சமூகத்தில் வெளிப்படையானதாகவோ அல்லது வலிமை மிக்கதாகவோ ‘தீண்டாமை’ என்ற விடயம் இல்லை என்ற கருத்துடன் நாமும் உடன்படுகின்றோம். சாதி நடைமுறைகள், சாதி தொடர்பான திறந்த கலந்துரையாடல் என்பவற்றின் மீது LTTE யினால் ஏற்படுத்தப்பட்ட தடைகள், பாரியளவிலான சனத் தொகை இடப்பெயர்வு மற்றும் யுத்தம் போன்ற விடயங்களால் கடந்த பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் சாதி பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி வருகின்ற அதேநேரம், மக்களின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார வாழ்க்கையின் சில விடயங்களில் சாதி தொடர்ச்சியான புழக்கத்திலிருந்து வருகின்றது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்கப்போகும் கடைசி தருணம். தலைநகர் பெர்லினுக்குள் நேச நாடுகளின் படைகள் புகுந்துவிட்டன. ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார்.

கடைசி முயற்சியாக அமெரிக்க, ரஷ்ய படைகளை எதிர்கொள்ள ஒரு ஜெர்மன் படையணி அனுப்பப்படுகிறது. அதில் ஆயுதமேந்தி நடை போட்டவர்கள், 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள்...!

ஜப்பானின் விமானப்படை, முத்துத் துறைமுகத்தில் இருந்த அமெரிக்க கப்பற்படையின்மீது தாக்குதல் நடத்தி, 2400 அமெரிக்கர்களைக் கொன்றபோது, அமெரிக்க அதிபர் ஐஷனோவர் ஒரு சபதம் செய்தார். "நூறு மடங்காக திருப்பிக் கொடுப்போம்...!" என்று.

ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. மன்னர் சரணடைந்தார். இன்றைக்கும் ஜப்பானுக்கு பெரிய ராணுவம் இல்லை. அந்த நாடு, முழுக்க முழுக்க அமெரிக்க பாதுகாப்பில் இருக்கிறது.

மன்னராட்சி மேட்டிமை, இனத் தூய்மைவாதம் பேசும் தலைவர்கள் முதலில் ஆயுதங்களை நம்புவார்கள். ஆயுதங்கள் தோற்றபின்னர், யுத்தத்தின் கடைசி நாட்களில் பலியாடுகளைப்போல தங்கள் குழந்தைப் போராளிகளை அனுப்புவார்கள்...!


உயர்ந்தவள்.

ஜானகி வீட்டு வாசலில் இருந்தாள்.

அப்போது அஸ்வினி வந்தாள்.

"என்ன அத்தை உக்காந்துட்டீங்க?..."

"ஒண்ணுமில்லம்மா...

கால்ல லேசா சுளுக்கு மாதி இருக்கு..."

"இருங்க அத்தை...

நான் புடிச்சி விடுறேன்..."

"உனக்கு எதுக்கும்மா இதெல்லாம்?...

உனக்கு நெறைய வேலை இருக்கும்...

அஞ்சு நிமிசம் உக்காந்தா சரி ஆயுரும்மா..."

"பரவால்ல அத்தை..."

சொல்லிக்கொண்டே ஜானகியின்

காலை அஸ்வினி பிடித்து விட்டாள்.

அதை பார்த்த

ஜானகியின் கண்கள் கலங்கியது.

"முருகா...

எப்பேர்ப்பட்ட ஒருத்திய

எனக்கு மருமகளாவும்,

என் பையனுக்கு

பொண்டாட்டியாவும் கொடுத்துருக்கே..."

சொல்லிக்கொண்டே

அஸ்வினியை பார்த்தாள் ஜானகி.

"அஸ்வினி..."

"சொல்லுங்க அத்தை..."

"நீ ஏற்கனவே என் தம்பி

பொண்ணுன்னு எனக்கு தெரியும்மா...

இருந்தாலும், நான் அந்த உரிமையோட

என் தம்பிகிட்ட உன் பொண்ண

என் பையனுக்கு தாடான்னு

சொன்னா மறுக்காம தந்துருவான்.

ஆனா,

என் தம்பி மட்டுமா சரின்னு சொல்லணும்?...

தம்பி பொண்டாட்டி வசந்தா சம்மதிக்கணும்...

இதுக்கு எல்லாத்துக்கும் மேல

கட்டிக்கப்போற நீ சரின்னு சொல்லணும்.

இதெல்லாம் சரின்னு வந்தாலும்,

நீ ரொம்பவும் படிச்ச பொண்ணு.

அதுவும் வேலைக்கி போற பொண்ணு.

எப்படி என் பையனுக்கு சரிப்பட்டு

வரும்னு குழம்பி கிட்டு இருந்தேன்மா.

ஆனா,

நம்ம அஸ்வினி உங்க வீட்டு மருமகளா

வர உங்களுக்கு சம்மதமா அண்ணின்னு

உன் அம்மா தான் இதுக்கு

முதல்ல பிள்ளையார் சுழி போட்டா.

இது எனக்கு சந்தோஷமா இருந்தாலும்,

அப்போவும் எனக்கு சரின்னு சொல்ல முடியல.

நம்ம ஜெகன் கிட்ட ஒரு வார்த்தை

சம்மதம் கேக்கணும்னு சொல்லி வச்சேன்.

ஒருநாள் ராத்திரி ஜெகன் தூங்கும்போது,

அசு அசுன்னு தூக்கத்துல உளறுனான்.

எனக்கு ஒண்ணும் புரியல.

அடுத்த நாளும் அதே மாதிரி,

அசு அசுன்னு விடாம உளறுனான்.

எனக்கு அவன் கிட்ட கேக்கவும் முடியல.

அடுத்த நாள் உன் அம்மா வசந்தா

போன் பண்ணி என்ன முடிவு

பண்ணுனீங்க அண்ணின்னு கேட்டா.

நானும் டக்னு நம்ம ஜெகன்

அசு அசுன்னு உளறுறான் வசந்தா.

அது என்னன்னு தெரிஞ்சி கிட்டு

அஸ்வினி பத்தி கேக்கணும்னு சொன்னேன்.

உடனே அதுக்கு உன் அம்மா

ஹாஹாஹானு மூச்சு விடாம சிரிச்சா.

எனக்கு அவா சிரிப்புக்கு அர்த்தம் புரியல.

அய்யோ அண்ணி...

அசு அசுன்னா நம்ம அஸ்வினிய தான்

என் மாப்பிள்ளை சொல்றாருன்னா பாரு.

எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சும்மா.

உடனே நம்ம அஸ்வினிய

கட்டிக்கிறியான்னு ஜெகன் கிட்ட கேட்டேன்.

மறுவார்த்தை சொல்லாம

உடனே சரின்னு சொல்லிட்டான்.

அவன் சரின்னு சொன்னாலும்,

உன் மனைவி அஸ்வினி,

வேலைக்கி போவேன்னு சொன்னா

என்னப்பா பண்ணுவேன்னு சொன்னேன்.

அட அதெல்லாம்

நம்ம அசுக்கு

எல்லாம் தெரியும்மான்னாம் பாரு.

நான் வாய் அடைச்சி போயிட்டேன்.

முருகா...

நல்லவேளை

நீயே வசந்தா வாயில வந்து

எல்லாம் தொடங்கி

வச்சிட்டேன்னு கும்பிட்டேன்.

உடனே மளமளன்னு நினைச்சபடி

கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சுது.

ஆனா நீ இனி நான்

வேலைக்கி போவலன்னு

முடிவு பண்ணுனே பாரும்மா...

அந்த முடிவுல தான்

நீ ரொம்ப உசந்துட்டேம்மா..."

ஜானகி இப்படி சொல்லியதும்,

மீதியை அஸ்வினி தொடர்ந்தாள்.

"அத்தை...

வேலைக்கி போனா சம்பளம் வரும் தான்...

ஆனா,

புருசன் வீட்டுக்கு வரும்போது,

அவனோட பொண்டாட்டி

அவனை அன்போட வாங்கன்னு சொல்ல

அவா வாசல்ல ரெடியா இருக்கணும் அத்தை...

அதைத்தான் நான் ஒரு நல்ல மனைவியா

இப்போவரை செஞ்சுகிட்டு இருக்கேன்...

உங்க பையனை உங்களுக்கு

ஒரு மகனா வயித்துல சுமந்ததுல

இருந்து பல வருசமா பாத்து இருப்பீங்க.

ஆனா,

எனக்கு ஒரு புருசனா கிட்டத்தட்ட

ஒரு வருசமாத்தான் தெரியும்.

அவரோட மறுபக்கம்

உங்களுக்கு தெரியாது அத்தை.

என்கிட்ட எந்த ஈகோவும் இல்லாதவரு.

என்னை ஒரு மகாராணி மாதிரி வச்சிருக்காரு...

அவர் தினமும் என் கிட்ட அடிக்கடி

சொல்ற வார்த்தை என்ன தெரியுமா?...

நான் கடைசி வரைக்கும்

உன் முகத்துல

சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்டி...

அந்த சிரிப்புக்கு நான் மட்டும் தான்

சொந்தக்காரனா காரணமா இருக்கணும்டி...

உன்னோட சந்தோஷத்துக்காக

நான் எந்த எல்லைக்கும் போவேன்டி...

நீ என்னை சுமக்கும்போது என் மனைவி...

நான் உன்னை சுமக்கும்போது

நான் உனக்கு ஒரு தாய்னு சொல்வாரு...

வெக்கத்தை விட்டு சொல்றேன் அத்தை.

என்னை சந்தோஷமா பாத்துக்க

உங்க பையனால

மட்டும் தான் முடியும் அத்தை.

இதுக்கு மேலயும் ஒரு பெண்ணுக்கு

என்ன வேணும் அத்தை?...

என்னை உங்க பையன் கிட்ட நல்லபடியா

ஒப்படைச்சது அந்த முருகன்.

இப்போ உங்க காலை பிடிச்சி விடுறதுகூட

ஒரு மாமியாருக்கு மருமகள் செய்ற

சாதாரணமான கடமை தான்.

ஆனா,

இதை விட முக்கியமா ஒண்ணு இருக்கு.

என் புருசனை சுமந்தது

உங்க வயிறா இருந்தாலும்,

உங்களையும்,

என் புருசனையும் மொத்தமா சுமந்தது

நான் பிடிச்சி விடுற இந்த கால் தானே?..."

வார்த்தை வர வில்லை ஜானகிக்கு.

"அம்மாடி...

நீ வயசுல மட்டும் தாம்மா

என்னை விட குறைஞ்சவா...

உன் குணத்துலயும்,

உன் சிந்தனையிலயும்

நீ ரொம்ப ரொம்ப உயர்ந்துட்டேம்மா..."

மளமளவென்று எழுந்தாள் ஜானகி.

ஜானகி எழுந்ததும் அஸ்வினி எழுந்தாள்.

தன் மருமகளை அணைத்துக்கொண்டாள்.

இருவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.

"அஸ்வினி..."

"சொல்லுங்க அத்தை..."

"ஜெகன் இனி

என் பையன் மட்டும் இல்லம்மா.

உன் புருசனுக்கு பிறகு தான்,

அவன் என் மகன்.

நிறைய வீட்டுல

மாமியார்,மருமகளுக்குள்ள

சண்டை வர்றதே

என் மகன்னு மாமியார் நினைக்கிறதும்,

என் புருசன்னு மருமகள் நினைக்கிறதும்

தாம்மா இதுக்கெல்லாம் காரணம்.

நல்லவேளையா உனக்கும்,

எனக்கும் அந்த சோதனையை

முருகன் நமக்கு கொடுக்கல.

என்னை விட என் பையனை

நீ தாம்மா என்னைக்கும் நல்லா பாத்துப்பே.

இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.

எனக்கு கல்யாணம் ஆனதும்,

உன் மாமாவோட

முருகன் கோவிலுக்கு போய்,

நான் முருகன் கிட்ட

எனக்கு ஒரு ஆண் குழந்தை

வேணும்னு வேண்டிக்கிட்டதால தான்

உன் புருசன் எனக்கு பிறந்தான்மா.

இன்னைக்கு மாசி மகம்.

நம்ம ஊரு முருகன் கோவிலுக்கு

நீயும், ஜெகனும் போய்

நல்லா முருகனை வேண்டிக்குங்கம்மா..."

"சரி அத்தை.

அவர் ரெடியானதும்

நாங்க கோவிலுக்கு போயிட்டு வரோம்..."

என்று சொல்லிக்கொண்டே

தன் கணவன் ஜெகனை

கோவிலுக்கு கிளம்ப சொல்ல

வீட்டுக்குள் நுழைந்தாள் அஸ்வினி.

வைத்த கண் வாங்காமல்,

தன் மருமகள் அஸ்வினியை,

பெருமிதத்தோடு பார்த்தாள் ஜானகி.

(சுபம்)

ஆக்கம்:

Jeyamurugan Natesan



 பிருந்தாவனம்

· மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார்.

அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை. சாலையின் வேலை செய்யும் ஒரு தொழிலாளி போல் இருந்தது, சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டு சுத்தமாக வைத்திருந்தாள்.

அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. ஹோட்டலின் முழு அழகையும் அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம். மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.

குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.

பணியாளர் இரண்டு பெரிய கண்ணாடி குளிர்ந்த நீரை அவர்களுக்கு முன்னால் வைத்தார்.

அவர் தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார். அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் தெளிவாகியது.

உங்களுக்கு என்ன வேண்டும்? என்று பணியாளர் கேட்டார்.

எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலளித்தார்.

சற்று நேரத்தில், சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது,

சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார்.

பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது. இது பழைய மாடல். மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது.

இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் அவர் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார்.

பள்ளியில் முதல் இடத்தை வென்றால், பிறந்தநாளன்று ஹோட்டலில் இருந்து தனது மசாலா தோசை வாங்கி தருவதாக முன்பு உறுதியளித்ததாகவும், அவர் முதல் இடத்தை வென்றதால் இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

(அவர் பேசியது தெளிவாக கேட்டது)… இல்லை, நாங்கள் இருவரும் எப்படி சாப்பிட முடியும்? எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? சில நாட்களாக எனக்கு எந்த குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை, வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு உள்ளன. எனக்கது போதும்.

இதற்கு முன் காட்சியையும் உரையாடலையும் கேட்ட நான், எனது தேனீரை என் உதடுகளுக்கு கொண்டு வந்த சூடான தேநீர் நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து கண் அகற்றப்பட்டது.

யார் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ... தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் என்பதை நான் உணர்ந்தேன்.

நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்தைத் தவிர இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தை ஒப்படைத்தேன்.

அவர் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவாக கடைக்காரரிடம் கூறினார்

'அந்த மனிதனுக்கு இன்னொரு தோசை கொடுங்கள், அவர் பணம் கேட்டால்,' இன்று உங்கள் மகளின் பிறந்த நாள், அவள் பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே இது ஹோட்டலில் இருந்து உங்கள் மகளுக்கு கிடைத்த பரிசு. இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கான ஊக்கமாக இதை நாம் கருத வேண்டும். அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், அது அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். "

ஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, "இந்த பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இந்த பணத்தை வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற தேவைக்கும் பயன்படுத்தலாம்."

பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார், நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறுமியின் தந்தை திடீரென்று அதிர்ச்சியில் அவரிடம், "நான் ஒரு தோசை சொன்னேன், எனக்கு இது தேவையில்லை" என்று கூறினார்.

பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் முதலில் வருவதற்கு இது எங்கள் பரிசு,

நீங்கள் ஒவ்வொருவருக்கும், மசாலா தோசை இன்று ஹோட்டலின் வகை. '

தந்தையின் கண்கள் விரிந்தன, அவர் தனது மகளை நோக்கி, "பார், மகளே, நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற பல பரிசுகளைப் பெறலாம் என்று பாருங்கள்."

அவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார். அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதை சாப்பிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறினார்.

"இல்லை, நீங்கள் அதை இங்கே சாப்பிடலாம். வீட்டிற்கு நான் இன்னும் 3 தோசையும் ஒரு இனிப்பு பொதி யும் பேக்செய்கிறேன்."

இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள், அவளுடைய நண்பர்களை அழைக்கவும், அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். '

இதையெல்லாம் கேட்டபோது, ​​என் கண்களில், மகிழ்ச்சியால் கண்ணீர்.

ஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறிய படி எடுப்பதில் எங்களுடன் சேர பல மனிதாபிமான மக்கள் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன்.

Mohan Krishnasamy


புதிய தண்டனை

திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் ..

எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி..

ஜட்ஜூக்கு சுருக்கென்றது..

பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ்.

.

ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,.

இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு.

பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்..

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்..

பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாதுஎன்றார்..

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்..

முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்..

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!.

எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்..

சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்..

ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராதுஎன்றான் பக்கிரி..

பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்..

ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்..

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.

 



ஆறாம் வகுப்பு சேர செல்கிறான் ஓர் மாணவன் , அவனுக்கு அந்த உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் (ஓர் அய்யர்) மேற்படி அந்த மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கிறார்!!!

காரணம் அந்த மாணவன் பொட்டுகட்டும் தேவதாசி ( தற்போது இசை வேளாளர் என்று அழைக்கப்படுகிறது) சமூகத்தை சார்ந்தவன் என்பதால் வேண்டுமென்றே அனுமதி மறுக்கிறார்!!

ஆனால் அந்த மாணவன் படிப்பில் உள்ள பற்றால், படித்தால் தான் நம் மீது சுமத்தப்பட்ட இழிவை நீக்க முடியும் என முடிவெடுத்து என்னை பள்ளியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் நான் பள்ளிக்கு எதிரே உள்ள இந்த தெப்பக்குளத்தில் குத்தித்து விடுவேன் என மிரட்டுகிறார்!!

தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார்!!.

ஆசிரியரோ எங்கே இந்த மாணவன் குதிக்க போகிறான் என்று பள்ளியின் உள்ளே சென்றுவிட்டார்!!

ஆனால் சொன்ன மாதிரியே அந்த குளத்தில் குதித்து விட்டான் இறுதியாக வேறு வழி இன்றி அந்த மாணவனை பள்ளியில் சேர்த்துக்கொண்டார் அந்த ஆசிரியர்.

கல்விக்கான தனது உரிமை போராட்டத்தில் போராடி வென்று தனது சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட ஜாதிய இழிவை மாற்றியமைத்த மாபெரும் வெற்றியாளர் தான் அந்த மாணவர்!!

அவர் தான் பின்னாளில் இப்படி கேட்டார்

ஏர் ஓட்டும் உழவனுக்கு

கானி நிலம் இல்லை

தேர் ஓட்டும் தியாகராசா

உனக்கு கோடி நிலமா என கேட்டார்

அந்த மாணவர் பெயர் தான் கலைஞர் கருணாநிதி.

இறந்தும் வாழ்கிறது உன் வரலாறு.

பாதி பேர் மட்டுமல்ல உன் மீது வன்சொல்களால் வாள் வீசும் பலர்

தன்னை விட மிக சிறுபான்மை சமூகத்தில் பிறந்தவர்,

நம்மால்

ஒரு வார்டு மெம்பர் கூட ஆக முடியவில்லை ஆனால் இவரோ

தமிழகத்தின்

முதல்வராக ஒரு முறை அல்ல - ஐந்து முறை ஆண்டுவிட்டாரே என்ற காழ்ப்புனர்வு - வன்மம், வெறுப்பு அவர்கள் பேச்சில் அம்பலப்படுகிறது.

ஆம் நீ விளிம்பு நிலை மனிதர்களின் கிரியா ஊக்கி !!

ஊமை சனங்கள் ஏற்றம் பெற்றிட ஏனியாக

இருந்து ஏற்றிவிட்ட ஆண் தாய்.

ஒரு குக்கிராமத்தில் , வறுமை வசதியாக வாழ்ந்த வறிய குடும்பத்தில் பிறந்து அயராத உழைப்பால் பூமி பந்தில் அறியப்பட்ட பேராற்றல் கொண்டோன்.

வரலாறு ஒன்று வாழ்த்தி பேசும் இல்லை தூற்றி பேசும்!!

வசவாளர்களின் தூற்றலில் வாழ்ந்தாய் நீ ஓர் நூற்றாண்டு!!

96 வயது வரை வாழ்ந்த

உன்னை கடந்து ,மறந்து, மறுத்து தமிழ் நாட்டு வரலாறு இல்லை.

ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடும் எவரும் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு தன்னுடைய முதல்வர் காரிலிருந்த இந்திய தேசிய கொடியை அகற்றி அப்படியே பரப்பன அக்ரகார சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயலலிதாவை ஊழல் வாதி என்று எங்கும் செல்வதில்லை!!!

இப்படித்தான் இருக்கின்றார்கள் நியாயவான்கள் .

வாழ்ந்த காலத்திலும், வாழ்ந்து முடிந்த காலத்திலும் உன்னை சுற்றி இயங்குகிறது தமிழ்நாடு

 


பெண் சித்தர்கள் பற்றிய 15 வார ஆன்மிக தொடர், என்னை இந்த கொரோனா காலத்தில் வீட்டில் முடங்காமல் தீவிரமாய் எழுத வைத்தது . பல விஷயங்களை தேடவைத்தது.மீண்டும் திருமந்திரம் தேவாரம் படிக்க வைத்தது.பல அன்பர்களுக்கு இது விஷயதானமாய் இருந்ததுஇது இதன் - பயன்.

வெகுஜன இலக்கிய உலகில் குறிப்பா ஆன்மிக வெளியில் புதுசா நிறைய நண்பர்களை பெற்று தந்தது . இன்னும் எழுத வாய்ப்பு வந்தது அமிர்தம் சூர்யா நவீன இலக்கியத்தில் கவிதை ,உரைநடை,பேச்சு என்று மட்டுமில்லாமல் மக்களை நோக்கியும் எழுதுவார் என்ற நம்ப வைத்தது இதெல்லாம் இந்த தொடரின் - பலன்.

(பயன் என்பது யூஸ்- பலன் என்பது ரிசல்ட் என்றார் ஹன்சாஹன்சா ஒரு பதிவில்)

இப்படியான ஒரு தொடர் எழுத உத்வேகமாய் இருந்தது கோவை தோழி எழுத்தாளர் விஜி முருகநாதன் தான். அவருக்கு என் முதல் நன்றியும் வணக்கமும்.

ஆன்லைனில் போவதுக்கு முன் சுடசுட வாட்சப்பில் வாசித்து நிறைய கேள்விகளை கேட்டு என்னை உற்சாகப்படுத்தும் தோழி டிடெக்டிவ் யாஸ்மின்( இன்னும் திருச்சி துளுக்க நாச்சியார் பற்றி ஆச்சரியம் போகல உண்மையா சூர்யா உண்மையா சூர்யா என்று கேட்கிறார்)

அடுத்து நான் இதை நூலாக போட்டால் தஞ்சை தவசியிடம் தான் முன்னுரை வாங்கவேண்டும் என என்னை தீர்மானிக்க வைக்கும்படி என் கட்டுரையை அலசிய நண்பர் கவிஞர் தஞ்சை தவசி.

பதிவு போட்டவுடன் ஏதோ எனக்கு கடன்பட்டவர்கள் போல் நட்பின் பொருட்டு அதை தொடர்ந்து பகிர்ந்த .தோழி .தஞ்சை குந்தவை நாச்சியார், தோழி சிவகாசி பிரபா முருகேஷ், , கவிஞர் ஆரா. குரல்அழகன் ஸ்ரீகாந்த் ,மாலதி மோகன் மிக முக்கியமானவர்கள். குறிப்பாக நாவலாசிரியர் சீனியர் முத்து நாகு அண்ணாச்சி .

எல்லா சித்தர் பகுதியையும் சேமிக்கும் திருமந்திர ரசிகை அமெரிக்காவில் வசிக்கும் தோழி ப்ரியா பாஸ்கரன்

இது முழுக்க முழுக்க இந்து மத ஆன்மிக சமாச்சாரம் ஆனால் பாருங்கள் இஸ்லாமிய நட்புகள் .எங்கள் சீனியர் எழுத்தாளர்.கடையநல்லூர் பென்ஸி, முகமது பாட்சா, சுவடு மன்சூர் இந்த தொடருக்கு தொடர்ந்து கமெண்ட்ஸ் போட்டு கெளரவ படுத்தினார்கள்

15 தொடரையும் தமது மனைவிக்கு படித்து காட்டும் என் உற்றநண்பன் துரை நந்த குமார்

ஈகோ இல்லாமல் என்னை கொண்டாடும் கவிஞர் ஜெயதேவன், எப்போதும் என் உடன் பயணிக்கும் அன்பு நண்பர் முனைவர் தமிழ் மணவாளன்

புதுமை பெண் கவிஞர் ரேகா,

கேரளா தோழி கவிதா ஹரிஹரன்,

என்னை போல் சிவதாசன் அமெரிக்க தம்பி அமுதா சங்கர்,

பொதுவெளியில் மாமா என்று அழைத்து பதிவு போடும் சிவ பைத்தியம் மானஸ்வி உமா.

என் ஜோதிட வழிகாட்டி மண்ணச்ச நல்லூர் பாலசந்தர்

முன்னாள் மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் அனுராதா சேகர்.

அன்பு கண்ணம்மா ..நாவலாசிரியர் இன்பா சுபரமணியன் ,

மிக சிறந்த சிறுகதையாளர் திருச்சி ரிஷபன் ,

ஆன்மிக தொடரில் சீனியரரான ஜி .பிரபா,

கல்கி செய்தியாளர்கள் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு மற்றும் தோழி ப்ரித்தி ராஜகோபால்

அயல் தேச எழுத்தாளர் மங்களா கெளரி,

பக்கம்பக்கமாய் அபிப்ராயம் எழுதிம் பாராட்டும் தோழி டாக்டர் ஜீவரேகா,

சில குறைகளை சுட்டிகாட்டி செதுக்கிய அண்ணன் எழுத்தாளர் வே.எழிலரசு

திராவிட சிந்தனையாளராக இருந்தாலும் இத்தொடரின் தமிழ் அழகை ரசித்த சிறுகதையாளர் சேகர் நாகரத்தினம்

போன் செய்து சிலாகித்த மொழிபெயர்பாளர் பத்மஜா நாராயணன்

பக்தி இலக்கியத்தை கரைத்து குடித்த கவிஞன் வீரமணி

சித்தர் மீது பித்து கொண்ட தானப்பன்

இலக்கிய மேற்கோளுடன் இத்தொடரை வாழ்த்திய சுசிலா மூர்த்தி

எல்லாம் தெரிந்தும் ஏதும் தெரியாது போல காட்டிக்கொள்ளும் அனுராதா குலசேகர்.

வடசென்னையின் தேர்ச்சியான கவிஞராக வலம் வரும் கனகாபாலன், மற்றும் முனைவர் கிருஷ்ணதிலகா

தொடர்ந்து என் எழுத்தை பாராட்டும் கலைசெல்வி ஸ்ரீனிவாசன்

சோழ மண்டல பிரஜை சிவகாசி முருகேஷ்

ஆகசிறந்த போட்டோகிராபரை மகனாக பெற்ற ரமணி ரமா

ஜெர்மனி நாட்டு தோழிகள் நிம்மிசிவா, மற்றும் மதிவதனி

இன்னும் இனிய தோழமைகள் சிற்றிதழாளர் சொர்ணபாரதி, சிங்கப்பூர் தோழி இன்பா, .கன்னியகுமார், தேவிகா, லலிதா முரளிதரன், முனைவர் மதிப்ரியா, மங்கள் தி. கெளரே .கணேசன்,சேரன் மாதேவி சுரேஷ்,கவிஞரும் டீச்சருமான அனுசுயா ,எம்.செந்தில் குமார், ஆனந்தி கண்ணன், மகாலட்சுமி சுப்ரமணியன்,அன்பு செல்வி சுப்புராஜி,தேவிகா நந்தா,சு.ஹரி ஹரன்,ஐஸ்வர்யா,விஜய ராணி மீனாட்ஷி, கல்லூரி தோழி ஸ்வேதா, நந்த குமார், சோமசுந்தரம்..சாந்தா தேவி, கவிஞர் மதுரா ,ரத்னா வெங்கட்., அம்மு ராகவ் மற்றும்...

என் அன்புக்குரிய லஷ்மி காந்தன் ,எழுத்தாளர் அன்பாதவன், விரிவுரையாளர் வனிதா ,,பெண்ணியம் செல்வகுமாரி பத்திரிக்கையாளர் தாய் பிரபு ,முனைவர் திராவிட மணி ,கவி சுடர் கல்யாண சுந்தரம், எழுத்தாளர் கவி வளநாடன், ,விஜயகுமார், டிவி ராதாகிரிஷ்ணன், சுந்தரி விஸ்வநாதன் ,சுகந்தி தாஸ், சரோஜா நாகைகவின், என பெரும்பட்டியல் நீள்கிறது .

இந்த பெயருக்குரிய பக்தர்கள் வாசகர்கள் எழுத்தாளர்கள் நண்பர்கள் பெரும்பாலோர் கல்கி ஆன் லைனில் தங்கள் பெயரை மெயிலை பதிவு செய்து கருத்திட்டவர்கள் என்பது தான் விஷேசம். சிலர் முகநூலில் கருத்திட்டவர்கள் .

சுமார் 78 நண்பர்கள் என் பார்வையில் பட்டவர்கள் சிலர் விடுப்பட்டு இருக்கலாம்.மன்னிக்க. இவர்களின் அந்த மெனக்கெடல் அந்த நேரம் ஒதுக்கலுக்கு தான் நான் இப்போது எழுதும் இந்த நன்றி மடல்.

உங்களால் தான் இந்த தொடர் வெற்றியும் நற்பெயரையும் தேடி தந்தது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். சாதகமான சூழல் அமைந்தால் அச்சில் கொண்டுவர முயலும் தேநீர் பதிப்பக தம்பி நா.கோகிலனுக்கும் நன்றி

----- அமிர்தம் சூர்யா


காவல் துறையில  மறக்க முடியாத நாள்.

அடுத்த நாள் காலையில முதலமைச்சர் அம்மையார் செயலலிதா திருச்சிக்கு வரப்போறதா தகவல்இரவே சொல்லிட்டாங்க . கான்வாய் எந்த வழியா போகுதுங்குற தகவல்படிகாவலர்கள அங்கங்க டூட்டி நிர்ணயிக்கிறாங்கநான் டூட்டி பார்க்க போற இடம்திருச்சி ஏர்போட் ரோடுஇப்பல்லாம் நிறைய கடைங்க இருக்கு ,அப்ப அந்த ரோடே விரிச்சோடி கிடக்கும்.


என் மகள் நாலு மாச கை குழந்த . ராத்திரில தூங்கவே தூங்காதுநம்மளையும் தூங்க விடாதுஎதுக்கு அழுவுதுன்னே தெரியாது அழும்ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சிட்டுபகல்ல டூட்டி பார்க்கறது இருக்கே அது அத விட கொடுமஇப்ப தான் பேறுகால விடுப்பு 12 மாசம்ஆனா அப்ப வெறும் 3 மாசம் தான்.

ராத்திரி ஒரு மணி வரைக்கும் தொட்டில போட்டு ஆட்டிக்கிட்டே இருக்கேன்பாட்டு பாடுறேன் , "ஆராரோ அரிராரோ

என் கண்ணே

நீ ஆராரோ ஆரிராரோ

காலையில காவல் பணி

உன் அம்மா கலைப்புடனே போகனுமாகண்ணே உறங்கிடடி காலையில எழுந்திரடின்னுபாடிகிட்டே தொட்டில ஆட்டுறேன்.

பாட்ட கேட்டுக்கிட்டே கொட்ட கொட்ட முழிச்சி பார்க்குதுஅது குழந்த அதுக்கு என்ன தெரியும்இருந்தாலும் அதுகிட்ட பேசுறேன்அம்மு தயவு செஞ்சி தூங்கு அம்முகாலையில அம்மா டூட்டிக்கி போகனும் அம்முன்னு சொல்லிகிட்டே தொட்டில ஆட்டுறேன்ஒரு சில நேரத்துல அழுதுருக்கேன்அது என் முகத்த பார்த்து பார்த்து சிரிக்கும்என் வலி அந்த பிஞ்சுக்கு எப்படி தெரியும்பாவம்.

நாலு மணி இருக்கும்என் மாமியார் எழுந்து வந்து இன்னும் உன் மவ தூங்கலயாம்மான்னுகேட்டாங்கஇல்லம்மா எங்க தூங்குது?? என்னால முடியிலம்மாவயித்துல ஆப்ரேசன் பண்ணுன இடம் வேற வலிக்குதும்மாஎன்னால ரொம்ப நேரம் நிக்க கூட முடியிலசெத்துடலாம் போல இருக்குன்னு சொல்லிட்டு அழ ஆரம்பிச்சிட்டேன்இந்த வலியெல்லாம் சொன்னா புரியாதுங்க.

வயித்த கிழிச்சி குழந்த பெத்துக்கறது இருக்கே.. அது ரணமான ரணம்ரொம்ப நேரம் நிக்க முடியாது ,முதுகு வலிக்கும்மயக்க ஊசிய போடுறதுக்கு முன்னாடிபுருசன் கிட்ட கையெழுத்து வாங்குவாங்க பாருங்கஅத படிச்சி பார்த்தாலே மரண பயம் வரும்மயக்க ஊசிய போடுட்டுட்டு ,நமக்கு ஆக்சிஜன் குடுத்துவயித்துல அளவு எடுத்துவயித்த கிழிச்சிகுழந்தைய வெளியில எடுக்குற வரைக்கும்எந்த உணர்வுமே இல்லாம ஜடம் மாதிரியே கிடந்துஅதுக்கப்புறம் நம்ம புள்ளைய நம்ம ஆசையா தூக்கி கொஞ்ச முடியாம ,யாரவது தூக்கி கையில குடுத்துஅந்த குழந்த முகத்த பார்த்ததும் ,நம்ம வயித்துல கிழிச்ச வலிய மறந்துபெட்ல இருந்து எழும்போது கூடதானா எழுந்திரிக்க முடியாமயாரையாவது புடிச்சிக்கிட்டு எழுந்து நடக்கறது இருக்கே அது பிரசவ வலிய விட மோசமான வலிங்க.

கால் கையெல்லாம் நடுங்கமெதுவா எழுந்துநடக்கும் போதுதையல்ல ஒரு வலி வலிக்கும் பாருங்க ,அய்யோஅது ஒரு மரண வலிங்கஎங்க பரம்பரையிலயே யாருக்குமே ஆப்ரேசன் பண்ணி குழந்தைய எடுத்ததே இல்லடவுன்ல இருந்தாலே இப்புடிதான் வயித்த கிழிச்சிடுவாங்க போல இருக்குநம்ம உடம்பு எக்சசைஸ் பாடி நமக்கெல்லாம் ஆப்ரேசன் பண்ண வேண்டியதில்லன்னு நினைச்சேன்ஆனா எனக்கும் கிழிச்சிதான் ஆகனும் வேற வழியே இல்லன்னு சொல்லிட்டாங்கஅதவிட கொடும உடனே ஆப்ரேசன் பண்ணலன்னா ரெண்டு உசுருல ஒரு உசுர தான் காப்பாத்த முடியுமுன்னு வேற சொல்றாங்கஅந்த நேரத்துல டாக்டர்ங்க பேசறத கேட்டாலே பயம் அதிகமாகிடுங்க.

பாப்பா பொறந்தப்ப என் கணவர் என் பக்கத்துல இல்லவெளிநாட்டுல இருந்தார்என் அம்மாஅப்பா ,என்னோட நாத்தனார்மாமியார்கொழுந்தனார் தான் கூட இருந்தாங்கஎத்தன பேர் இருந்தாலும்கணவர் கூட இருக்குறப்ப ஒரு தைரியம் இருக்கும் பாருங்க அந்த தைரியம் ஆயிரம் பேர் இருந்தாலும் வராதுஅது ஏனோ தெரில ஆப்ரேசன் தியேட்டர்க்கு கொண்டு போறதுக்கு முன்னாடி டாக்டர் நிர்மலா சபாரத்தினத்துக்கிட்ட டாக்டர் ....ஒரு அஞ்சு நிமிசம் என் கணவர் கிட்ட பேசிட்டு வரட்டுமான்னு கேட்டேன்பேசுப்பா பேசு பயப்புடாத தைரியமா இரு ,போலீஸ்கார புள்ள நீயே பயப்புடலாமான்னுகேட்டாங்கபிரசவ பயம் எல்லாருக்கும் ஒன்னு தானேபோலீஸ்வக்கில்ன்னு பார்த்தா வலி வருது?

கணவர் கிட்ட இருந்து போன் வருதுஎடுத்து தங்கம் ...எனக்கு பயமா இருக்குன்னு சொல்லிட்டு அழுவுறேன்அவரும் அழுதுகிட்டே அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பாஎன் உடம்பு தான் இங்க கிடக்குஎன் உசுரெல்லாம் அங்க தான் இருக்குநீ தைரியமானவ... நீயே அழுதாநான் என்ன பண்ணுவேன் சொல்லுஅழாத தங்கம்அழுதா காய்ச்சல் வரும்பணமெல்லாம் கட்டியாச்சாஅம்மா ஊர்ல இருந்து வந்துட்டாங்களாஎங்க அண்ணன கையெழுத்து போட சொல்லி இருக்கேன்அவரு போடுவாரு ,நீ எந்த கவலையும் படாதஉனக்கு ஒன்னும் ஆகாதுடா , டைம் ஆச்சிடாநான் செல் போன பார்த்து கிட்டே தான் உட்காந்திருப்பேன்கண்டிப்பா பாப்பா தான் பொறக்கும்ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்கன்னு அந்த சேதிய கேட்குற வரைக்கும்பச்சத்தண்ணிக்கூட குடிக்க மாட்டேன்என் மனசு வலிக்கிற வலிய சொல்லி அழக்கூட இங்க யாரும் இல்லஎன் புள்ள பிறந்தவுடனே என் கையில ஆசையா புள்ளய வாங்கிப்பாக்க கூட எனக்கு குடுத்து வைக்கிலநீ அழுவுறப்ப உன் பக்கத்துல இருந்து ஆறுதலா ஒரு வார்த்த பேசமுடியாம நான் எப்புடி துடிக்கிறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்தைரியமா இருப்பாபோன வைக்கிறேன்னு சொல்லும் போதே ..கண்ணுல இருந்து தாரை ,தாரையா கண்ணுதண்ணி ஓடுதுஅந்த கடைசி நேர உரையாடலும்,அந்த நேரத்துல பேசுற வலி நிறைஞ்ச வார்த்தையும்மரண படுக்கையிலும் மறக்காது.

ஒரு வேள நான் செத்துட்டா பிள்ளைங்கள பத்தரமா பார்த்துக்கங்கன்னு சொன்னேன்அய்யோ...என்னப்பா இப்படி பேசுறஉனக்கு ஒன்னுமே ஆகாது தைரியமா போடாநீ செத்துட்டா நான் மட்டும் வாழ போறேனாஅட போப்பா ஏன் தங்கம் இப்படியெல்லாம் பேசுறன்னுசொல்லிட்டு போன வச்சிட்டார்போன வச்சதுக்கப்புறம் அவர் நிம்மதியாவே இருந்துருக்க மாட்டாருன்னு எனக்கு தெரியும்.

தொட்டில ஆட்டிக்கிட்டே மாமியார் கிட்ட என்னால முடியிலம்மான்னு அழுதுட்டேன்.அய்யோநீ போயி படும்மா நான் பார்த்துக்குறேன்னு தொட்டில ஆட்ட ஆரம்பிச்சிட்டாங்கஉண்மையிலே என் மாமியார் மாதிரி ஒரு தங்கமான குணம் யாருக்குமே வராதுஎன்ன அவுங்க பெத்த புள்ள மாதிரிதான் பார்த்துக்குவாங்கநானும் அம்மான்னு தான் கூப்பிடுவேன்என் மருமக போலீஸ்ன்னு பெருமை பட்டுக்குவாங்கநான் தான் அவுங்களுக்கு உசுருநான் டூட்டி முடிஞ்சி வந்தவுடனே சாப்பாடு கொண்டு வந்து கையில குடுப்பாங்கஆனா கடைசியில ஒரு கை ஒரு கால் வராம பத்தாண்டு காலம் ஒரு குழந்தைய பார்த்துக்குறா மாதிரியே அவுங்கள நான் பார்த்துக்கிட்டேன்அவுங்களோட இழப்பு என் வாழ்க்கையில மிகப்பெரிய இழப்பு.

அடுத்த நாள் காலையில 6 மணிக்கே குழந்தைக்கு பால் குடுத்து நாத்தனார் கிட்ட பாப்பாவ குடுத்துட்டு டூட்டிக்கி கிளம்பி போய்ட்டேன். 11.30 க்கு முதல்வர் வருகைஆனா 4 மணி நேரத்துக்கு முன்னாடியே டூட்டி இடத்துக்கு போயாச்சிபத்து மணிக்கு வீட்டுல இருந்து போன் வருதுஎடுத்தா.. குழந்த கத்துற சத்தம்என்னம்மா ஏன் பாப்பா அழுவுதுன்னு கேட்குறேன்புள்ள பசியில அழுவுது ,பசும் பால் சங்குல குடுத்தோம்குடிக்க மாட்டேங்குது துப்புதுதண்ணி கூட குடிக்க மாட்டேங்குதும்மா கத்தி ,கத்தி புள்ள தொண்ட காஞ்சி போச்சிஒரு எட்டு வந்து புள்ளைக்கு பால குடுத்துட்டு போய்டுமான்னு நாத்தனார் கெஞ்சிறாங்க.

புள்ள பசியில கத்திக்கிட்டு கிடக்கும் போதுடூட்டியில நிக்கறது இருக்கே அது மாதிரி ஒரு கொடும வேற எதுவுமே இருக்க முடியாதுகண்ணெல்லாம் கலங்குதுபுள்ளையோட அழுவுற சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்குஅதவிட ஒரு பெரிய கொடும குழந்தையோட அழுகை சத்தம் கேட்கும் போதே என் சட்டையெல்லாம் நனைஞ்சி போச்சிஎங்க அம்மா சொல்லுவாங்க புள்ளக்கி பசி எடுத்தா நமக்கே நல்லா தெரியும்னுஆமாம் அதுவும் ஒரு உணவு கலயம் தானேரொம்புனா வழியதானே செய்யும்.

டூட்டியில இருக்குற அதிகாரி கிட்ட போயி கொஞ்ச நேரம் பர்மிசன் கேட்கவே வெட்கமா இருக்குசட்டை நனைஞ்சி இருக்கே அத பார்க்குறவங்க என்ன நினைப்பாங்கசும்மாவே ஆணுக்கோ பெண்ணுக்கோ கண்ணு அங்க தான் போவும்நனைஞ்சி வேற இருக்கு இத பார்த்தா சொல்லவே வேண்டாம்கூனி குறுகி போய் நிக்கிறேன்.

என் தோழி ஓடிவந்து என்னடி ஆச்சுன்னுகேட்டுக்கிட்டே கைக்குட்டைய எடுத்து குடுத்தாஅத வச்சா மட்டும் நின்னுடுமா என்னவேண்டாம்பா கொஞ்சம் தண்ணி மட்டும் வேணுன்னு கேட்டேன்ஓடி போயி தண்ணி பாட்டுல எடுத்துட்டு வந்து குடுத்தாமுன்னால சட்டையில ஊத்தி நெஞ்சு பூராவும் நனைச்சேன் . யாராவது கேட்டா தண்ணி குடிச்சப்ப தவறி தண்ணி ஊத்திடுச்சின்னு சொல்லிக்கலாம்ன்னு தான் அப்படி நனைச்சிட்டுஅந்த அதிகாரி கிட்ட போயி பர்மிசன் கேட்டேன்.

நான் போயி அந்த அதிகாரிகிட்ட நின்னவுடனேஅவர் கேட்ட முதல் கேள்வியே என்னம்மா சட்டை நனைஞ்சிருக்குன்னுதான் கேட்டார்தண்ணி குடிச்சப்ப தவறிடுச்சிங்க சார்ன்னு சொன்னேன்என்ன அசால்ட்டு? VVIP வரும்போது இப்புடிதான் நனைச்சிகிட்டு நிப்பீங்களாசின்ன புள்ள மாதிரின்னுகேட்டார்ஆமால்லஇந்த ஈரம் பத்தி அவருக்கு எங்க புரிய போவுது?

சார் நாலு மாசம் கை குழந்த சார்புள்ள ரொம்ப கத்திக்கிட்டு இருக்குன்னு போன் வந்துச்சிங்க சார் ,வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேங்கன்னு கேட்டேன். VVIP பந்தோபஸ்த்துமா ஆப்சென்ட் ஆயிட்டா ஒன்னுமே பண்ண முடியாது .பேசாம புள்ளைய தூக்கிட்டு வர சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு அவர் ரவுன்ஸ் கிளம்பிட்டார்.அவுரு மேலயும் குறை சொல்ல முடிதுயாது . நான் இங்கேர்ந்து போறப்ப எங்கயாவது அடிப்பட்டுட்டேன்னா அவர தான் கேட்பாங்கயார கேட்டுட்டு அனுப்புனீங்கன்னுஅவர் வேள போயிடும் அதனால அவுருக்கு பயம்என்ன தான் அதிகாரம் இருந்தாலும் சில நேரத்துல அந்த அதிகாரத்த பயன் படுத்த முடியாது காவல் துறையில.

உடனே வீட்டுக்கு போன் பண்ணிஆட்டோவுல புள்ளைய தூக்கிட்டு வாங்கன்னு சொன்னேன்கொஞ்ச நேரத்துல வந்துட்டாங்ககாக்கி சட்டை போட்டுருக்கறதையும் மறந்து ஓடி போயி குழந்தைய தூக்கினேன்என் கை பட்டவுடனே அழுகை நின்னு போச்சிஅந்த ஆட்டோகாரர் ஆட்டோவ ஓரமா நிப்பாட்டிட்டுரெண்டு பக்கமும் மறைவ எடுத்து விட்டுட்டுஅக்கா ஆட்டோவுலயே உட்காந்து புள்ளைய அமத்துங்கக்கான்னு சொன்னார்தெய்வங்கள் கோவில்ல இல்லங்கஇவுங்கள மாதிரியான மனிதர்கள் தான் தெய்வம்.

அதனால தான் தற்போதய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் பெண்காவலர்கள் VVIP வரும்போது சாலையில் பந்தோபஸ்த்து பணியில் நிற்க வேண்டாம்ன்னு அறிவிச்சவுடனே எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்துச்சி.அந்த மகிழ்ச்சில தான் என் எழுத்தையும்பேச்சையும்சில சம பவத்தையும்சேமிச்சி வச்சி முதல்வருக்கு ஒரு வாழ்த்து மடல் எழுதினேன் .

(என் கூட படத்துல இருக்க என் பொண்ணுதான் அந்த நாலு மாச கை குழந்த)

நன்றி.

கவி செல்வ ராணி திருச்சி

அன்று திருச்சி காவல்கட்டுப்பாட்டு அறையில இரவு பணியில இருக்கேன்என்னோட தோழிகிட்ட இருந்து போன் வருதுஅந்த தோழி யாருன்னா எனக்கு சுடிதார் ஜாக்கெட் அவுங்க தான் தச்சிக் குடுப்பாங்கரொம்ப எளிமையானவங்கஎனக்கு ரொம்ப புடிச்சவங்கஎன்ன கஸ்ட்டம்ன்னாலும் என்கிட்ட தான் சொல்லுவாங்க.சொல்லுங்கப்பா என்ன இந்த நேரத்துல போன்ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு ?என்ன ஆச்சுன்னு கேட்டேன்அக்காவுக்கு பிரசவ வலி ,மயக்கத்துல கிடக்குரெட்டைப்புள்ள வேற , ஆஸ்பத்திரிக்கு கொண்டுகிட்டு போறேன் செல்வாநீங்க கொஞ்சம் வந்தா நல்லாருக்கும்வாங்க செல்வான்னு ஒரே அழுகை.

அழாதீங்கப்பாதைரியமா இருங்க அதெல்லாம் ஒன்னுமே ஆகாதுஎனக்கு டூட்டி முடிய போவுது கொஞ்ச நேரம் பார்த்துக்கங்க நான் வந்துடுவேன்பணம் ஏதாவது தேவைன்னா சொல்லுப்பா குடுத்து அனுப்புறேன்நீங்க தைரியமா இருங்கன்னுதைரியம் சொல்லிட்டு என்னோட வேலைய அவசர அவசரமா முடிச்சிட்டு கிளம்புறேன்.

என் தோழியோட அக்கா பத்தி சொல்றேன்

அவுங்க மனநலம் பாதிக்கப்பட்டவங்கஅவுங்களுக்கு கல்லூரி படிக்கிற வயசுல பொண்ணு இருக்காஅவுங்க வீட்டுல இருக்க மாட்டாங்க ,ரோட்டுலமரத்தடியில வேலியோர நிழல்ல தான் படுத்திருப்பாங்கபார்க்க அழகா இருப்பாங்கதானா பேசுவாங்ககுடும்பத்துல யாரையும் அவுங்களுக்கு நினைவுல இல்லஎன்னோட தோழி தான் வீதி வீதியா தேடி போய் சாப்பாடு குடுத்துட்டு வருவாஅந்த அக்காவோட பொண்ண என் தோழிதான் பார்த்துக்குறாபடிக்க வைக்கிறா.

அந்த அக்கா ரோட்டுல யாருக்கும் தொல்ல குடுத்ததே இல்லதானா பேசுவாங்க சிரிப்பாங்கசாப்பாடு குடுத்தா வாங்கி சாப்புடுவாங்க.

என்ன தான் தொல்லை குடுக்கலன்னாலும்கூட பொறந்த அக்கா ரோட்டுல கிடக்கறத பார்க்கும் போது எப்படி இருக்கும்தன்னோட அம்மா ரோட்டுல பைத்தியமா அலையுறத பார்த்து அந்த மகளுக்கு எப்படி துடிச்சிருக்கும்!

முடிஞ்ச அளவு துணிமணி தச்சி அதுல வர காசுல அவுங்க அக்காவ குணப்படுத்த என் தோழி எவ்வளவோ போராடுனா ஆனா முடியல.

ரோட்டுல போற வார ஒருசில ஆம்பளைங்களுக்கு பைத்தியத்து மேலயும் காமம் வருமுன்னு அவுங்க மாசமா இருக்கும் போதுதான் தெரிஞ்சிதுஅஞ்சி நிமிச சுகம் தூ...அதுக்காக போயும் போயும் அப்பாவியான அந்த பைத்தியக்கார பொண்ணுக்கிட்ட படுக்க எப்படி மனசு வந்திருக்கும்அப்படி என்னடா அடக்க முடியாத காம வெறிபைத்தியக்கார புள்ளைகிட்ட படுக்குற பைத்தியக்கார நாய்களை நினைச்சா ச்சீ...இவனுங்கள எப்படிங்க மனித பிறவியில சேர்க்கறது?

காமத்த அடக்க ஆயிரம் வழி இருக்கு


ஓட்டை இருக்குற இடமெல்லாம் அதுக்காக தான் இருக்குன்னு நினைக்கிற ஒரு சில அயோக்கியர்கள் இருக்க தான் செய்றாங்க.

ஒரு பைத்தியக்கார பொண்ணு தன்னோட வாழ்கைய சவாலாதான் வாழ வேண்டி இருக்குல்ல?

அவ தனியா வாழ்றதே பெரிய போராட்டம் . 

அதோட வயித்துல புள்ளஅதுவும் ரெண்டு புள்ளநல்லா இருக்குற நம்மளாலையே மாசமா இருந்தா வாந்தி ,மயக்கம் தாங்க முடியாதுபாவம் மனநலம் பாதிக்கப்பட்ட அவள நினைச்சி பாருங்கதன்னை கெடுக்குறாங்கன்னு கூட தெரியாம படுத்துக்கிடந்துருப்பாவலிக்குது விட்டுடுன்னு கூட கத்தியிருக்க மாட்டாமாசமானது கூட தெரியாமஎதுக்காக வாந்தி எடுக்குறோம்எதுக்காக மயக்கம் வருதுன்னு கூட தெரியாமதன்னோட வயித்துல புள்ளை இருக்கறது கூட தெரியாமவாழ்றது இருக்கே இதை விட கொடுமையான வலி வேற இருக்காசொல்லுங்க.

கல்லூரியில படிக்கிற மக தன் தாய் மாசமா இருக்குறத பார்த்து எப்படி துடிச்சி போயிருப்பா ? கூட பொறந்த அக்கா திடீர்ன்னு மாசமா இருக்கறது பார்த்து அவ தங்கச்சி எப்படியெல்லாம் துடிச்சிருப்பாயோசிங்க.

அன்பையோ அரவணைப்பையோ ஆறுதலையோ பற்றி எதுவுமே தெரியாத ஒரு பைத்தியக்கார பொண்ணுக்கிட்ட தான் உன் ஆண்மையை நிரூபிக்கனுன்னா அந்த ஆணுறுப்பை அறுத்துப் போடலாமேவிபச்சாரியேயானாலும் அவள் விருப்பமில்லாமல் அவளைத்தொடுவது அவமானம்நாய் கூட கண்ட இடத்தில் கால் தூக்காதுஅதைவிட கேவலமா நடந்துக்கிற கேவலமான பிறவிங்க.

பாதி தூரம் போறப்பவே தோழிகிட்ட இருந்து போன் வருது சொல்லுப்பா என்னாச்சின்னு கேட்குறேன் அக்கா செத்துப்போச்சின்னு அழுவுறாஅய்யோ குழந்தைங்க என்ன ஆச்சுன்னு கேட்டேன் அதுவும் செத்துப் போச்சின்னு சொல்றாஅந்த குழந்தைங்கள தத்து எடுத்து நானே வளர்க்குறேன்னு சொல்லி இருந்தேன் எதுவுமே நடக்கல.

சரி ஆம்புலன்ஸ்ல ஏத்துங்கநான் மயானத்துக்கு வேண்டிய ஏற்பாடு பண்றேன்.


 தைரியமா இருபணம் செலவு பத்தி கவலைப்படாதநான் இருக்கேன்னு சொல்லிட்டு மயானத்துக்கு போனேன்எனக்கு தெரிஞ்ச நண்பர்களுங்கு போன் பண்ணி இறுதி சடங்குக்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்கிக்கிட்டு அண்ணா நகர் பக்கத்துல இருக்குற மயானத்துக்கு வர சொல்லிட்டு காத்திருந்தேன்.

அந்த அக்காவையும் குழந்தைகளையும் வண்டியில இருந்து இறக்கும் போது மனசெல்லாம் வலிகோடித்துணி நான் தான் வாங்கிப் போட்டேன்எல்லாரும் கத்தி கதறி துடிக்கிறாங்க.

என்ன தான் தன் தாய் பைத்தியமா இருந்தாலும் தன் தாயையும் தன் தாய் வயித்துல கிடந்த அந்த ரெண்டு குழந்தைகளையும் தொட்டு தொட்டு அந்த பொண்ணு அழுதா பாருங்க அத பார்த்து நானும் கத்தி அழுதுட்டேன்எல்லா சடங்குகளும் நடந்து முடிஞ்சிது.

அந்த பொண்ணுஅம்மா உன் ஞாபகமா என் கிட்ட எதுவுமே இல்லையேம்மா என்னை அனாதையா விட்டுட்டுப் போறீயேம்மா.. என்ன எதுக்கும்மா பெத்தஎன்னையும் கூட்டிக்கிட்டு போய்டுமான்னு அழும்போது கட்டிப்புடிச்சி நான் இருக்கேன்ப்பா உனக்கு சித்தி இருங்காங்க நீ அழாத ,அம்மா இங்க இருந்து எவ்வளவு கஸ்ட்டப்பட்டாங்க . இனிமேலாவது அம்மா நிம்மதியா

தூங்கட்டும்ன்னு ஆறுதல் படுத்துனேன்

ஆறுதல் படுத்திக்கிட்டே அழறது இருக்கே அது ஆயிரம் மரணத்துக்கு சமம்.

குழியில போடுறதுக்கு முன்னாடிஅவுங்க மூக்குல ஒரு மூக்குத்தி போட்டுருந்தாங்கஅதை கழட்டறக்கு எவ்வளவோ முயற்சி பண்ணுனாங்கஅம்மாவ கஸ்ட்டப்படுத்தாதீங்க அத கழட்ட வேண்டாம் விட்டுடுங்கன்னு அந்த பொண்ணு ஒரே அழுகை.

ஒருவழியா மூக்குத்திய அந்த மயானத்துல இருக்குறவர் கழட்டி அந்த பொண்ணு கையில குடுத்தார்அத ரெண்டு கையையும் நீட்டி வாங்கிஅந்த மூக்குத்திய பார்த்து அம்மான்னு கூப்பிட்டு அழுதா பாருங்கஅதுதாங்க அந்த தாய்க்கும் புள்ளைக்குமான உறவு.

மூணு உடம்பையும் ஒன்னா போட்டு மண்ணு அள்ளிப் போட்டுட்டு வந்துட்டோம்.

பெண்கள் உண்மையிலே பாவம்ங்க அதுலயும் பைத்தியக்கார பொண்ணுங்க பாவத்துலயும் பாவம்அவள பார்த்து பாவப்படலன்னாலும் பரவால்ல அவகிட்ட படுக்காதீங்க 🙏

கவி செல்வ ராணி திருச்சி.

பூர்வ ஜென்மம்

------------ ---------------

ஆண்டவனில் ஆக்க்கூடிய யாரும் தப்ப முடியாது.

ஒருதலைவருக்குப் புற்றுநோய் வந்தபோதுநாத்திகம் பேசியதால் வந்ததுஎன்றார்கள்.

ஆத்திகம் பேசிய ரமணருக்கு ஏன் வந்தது?

சிலருக்கு பொடி போட்டதால் வந்தது என்றார்கள்.

பொடி போடாதவர்களுக்கு ஏன் வந்தது?

புகையிலை உபயோகிப்பதால் வருகிறதுஎன்கிறார்கள் மருத்துவர்கள்.

அதை உபயோகிக்காதவர்களுக்கு ஏன் வருகிறது?

ஆத்திகராக இருந்ததால், ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்ததாக்க கூறுகிறார்கள்.

நாத்திகர்களும் நீண்ட நாட்கள் வாழ என்ன காரணம்?

அளவோடு சாப்பிடுகிறவர்கள் அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.

அளவின்றிச்சாப்பிடுவோரும் வாழ்வதற்கு என்ன காரணம்?

இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?

எந்தக கணக்கைக்கொண்டு தெய்வம் வழங்குகிறது?

ஒவ்வொரு பிறவியின் கணக்கைக்கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.

நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

நாம்பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப்பிறப்பில்பாதியையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து

என்றான் வள்ளுவன்.

ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின் படியே விளைய இறைவன் அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திரும்பிச்செலுத்த விரும்புகிறேன்.

அர்த்தமுள்ள இந்து மதம்... பூர்வ ஜென்மம்,.

கவிஞர் கண்ணதாசன்


தேவிகுளம்-பீர்மேடு தட்டிப் பறிக்கப்பட்ட கொடுங்கதை...

காலையில் எதேச்சையாக தான் ஆரம்பித்தேன்...இந்த ஓய்வு நேரத்தில் நம்முடைய முகநூல் சொந்தங்களுக்கும், விவசாய சங்க உறவினர்களுக்கும் ஒரு வரலாறை சொல்லிவிட வேண்டும் என்று மனசு துடித்தது...

ஆனால் எனது சிந்தனையில் போன்சாய் மரங்களாக இருந்த நினைவுகள், தம்பிமார்களின் கேள்வியில்... ஆல மரமாய் எழுந்து நிற்கிறது.

தேசிய, திராவிட அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகளில் ஏதோ அருகருகே இருப்பது போல வந்து விழும் தேவிகுளமும், பீர்மேடு ஒன்றும் அருகருகே இல்லை.

பீர்மேட்டிலிருந்து தேவிகுளத்திற்கு செல்வதற்கு நீங்கள் வண்டிப் பெரியாறு,குமுளி, நெடுங்கண்டம், பூப்பாறை வழியாக 117 கிலோமீட்டரை கடக்க வேண்டும்.

அதோடு பழைய தமிழக எல்கை முடியவில்லை. தேவிகுளத்திலிருந்து மூணாறு நகருக்கு 8 கிலோமீட்டர். அங்கிருந்து சட்டமூணாறு வழியாக மறையூருக்கு 42 கிலோமீட்டர் பயணித்து அங்கிருந்து 13 கிலோ மீட்டர் பயணித்து சின்னாறு வனத்துறை சோதனைச் சாவடியை அடைந்தால்தான் பழைய தேவிகுளம் பீர்மேடு எல்கை முடிவடையும்.

அதாவது பீர்மேட்டில் ஆரம்பித்து தேவிகுளம் எல்லை வரையிலான பயண தூரம் மட்டும் 180 கிலோ மீட்டர்கள்.

நேர் வழியான இந்த 180 கிலோமீட்டர்கள் போக... மூணாறில் இருந்து டாப்ஸ்டேஷன் வழியாக வட்டவடை,கோவிலூருக்கு ஒரு ஐம்பத்தாறு கிமீ என நீளுகிறது பழைய தமிழகம்.

தென்மலை சோத்துப்பாறை குண்டுமலை என மூணாறு- உடுமலை சாலையிலிருந்து சற்று பிரிந்து வலது புறம் மேலே ஏறினால் அது ஒரு 22 கிலோமீட்டர்.

மூணாறில் இருந்து அடிமாலி செல்லும் சாலையில் உள்ள பள்ளிவாசல் வரை பழைய தமிழகம் தான்.

வளத்திற்கு சற்றும் பஞ்சமில்லாத வளம் கொழிக்கும் பூமி.

டாடா,ஏவிடி,

கனமாரா,

ப்ஸ்,ஹாரிசன் மலையாளம் லிமிடெட்,

என ஆளையே முழங்கும் பெரிய தேயிலை தோட்ட கம்பெனிகளும், துண்டு துக்கடா கம்பெனிகளும் நிறைந்து கிடக்கிறது தேவிகுளம் பீர்மேடு தாலுகாவில்.

இந்த கம்பெனிகளில் பண்ணையார் ரத்தன் டாடா.KDHP (kannan Devan hills plantation) என அழைக்கப்படும் டாட்டா கம்பெனியினுடைய மொத்த பரப்பு மட்டும் 48,000 ஹெக்டேர்கள்.

இதற்கு அடுத்த இடத்தில் வி டியும், அதற்கு அடுத்த இடத்தில் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட்டும் வருகிறார்கள்.

எத்தனை கம்பெனிகள் வந்தாலும் தேயிலையை கொழுந்தாக எடுப்பதிலிருந்து, தேயிலையை பொட்டலமாக அனுப்புவது வரை அத்தனையையும் அச்சுப்பிசகாமல் செய்வது பச்சை தமிழர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வருடத்தில் 6 மாதங்கள் மைனஸ் டிகிரி குளிரில் இருந்த மூணாறு மலையகத்தில் பணிசெய்ய... தமிழனைத் தவிர வேறு எவனுக்கும் ஆண்மையும், நெஞ்சுரமும் இருந்ததாக தெரியவில்லை.

இத்தனை பெரிய பரப்பை, எப்படி போகிறபோக்கில் கே.எம். பணிக்கரின் காலடியில் காமராஜராலும், தந்தை பெரியாராலும் தள்ளிவிட முடிந்தது என்பது எனக்கு தெரியவில்லை.

குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவில்தானே இருக்கிறது என்று உதறித் தள்ளிவிட, தேவிகுளமும் பீர்மேடும், கொடுங்கையூர் குப்பை மேடு அல்ல.

அந்த மண்ணினுடைய வளத்தை மலையாளிகள் கண்ணுற்ற அளவிற்கு, நம்மவர்கள் கண்ணுறாததின் விளைவு, தேவிகுளம், பீர்மேட்டை தமிழகம் இழந்தது.

இன்றைக்கு மொத்த மலையாள நாடும் குடியேறும் இடமாக தேவிகுளமும், பீர்மேடும் மாறிவிட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே மறையூர் பகுதியில் தமிழர்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

காந்தலூர், கீழாத்தூர், காரையூர், மறையூர், கொட்டகுடி என்கிற ஐந்து தமிழர் கிராமங்களும், இன்றளவும் மறையூர் அஞ்சுநாடு என்று பெருமையோடு அழைக்கப்படுகிறது..

அங்கு உற்பத்தியாகும் வெல்லம் கேரளா முழுக்க ஏற்றுமதியாகும் அளவிற்கு விவசாய வளம் செறிந்த பூமி. ஆனால் அந்த காந்தலூரிலிருந்து எங்கேயோ இருக்கும் ஆலுவா விற்கு கோட்டயம் வழியாக தனியார் பேருந்துகள் இயங்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

பி பி கே

பி எம் எஸ் எனும் தனியார் பேருந்துகள் இன்றளவும் இயங்கி வருகிறது. அதனுடைய நோக்கம் வெறும் போக்குவரத்து மட்டுமல்ல.

எப்படியாவது மலையாளிகளை மறையூர் பகுதிகளில் குடியேற்ற வேண்டும் என்கிற வெறி தான் அதற்கு காரணம்...

அதுபோல கேரளாவின் வர்த்தகத் தலைநகராக அறியப்படும் எர்ணாகுளத்தில் இருந்து...எங்கேயோ இருக்கும் டாப் ஸ்டேஷனுக்கு அருகாமையில் உள்ள கோயிலூருக்கு கேரள அரசு பேருந்து வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

தமிழர்கள் ஆதிக்கம் பெற்று விடக்கூடாது,,, மறையூரும் வட்டவடையும், கோவிலூரும் முழுமையாக தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் போய்விடக்கூடாது என்பதற்காகவே, இந்தப் பேருந்துகள் மலையாளிகளை பத்திரமாக தமிழர் பூமியில் கொண்டு வந்து இறக்கியது.

அவர்களும் இன்றைக்கு நமக்கு சரிசமமாக வாழத் தலைப்பட்டு விட்டார்கள்.தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த மறையூர் பஞ்சாயத்து இன்றைக்கு மலையாளிகளுடைய கைகளுக்கு போய்விட்டது...

தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த கேரளாவின் மிகப்பெரிய பஞ்சாயத்தான வண்டிப்பெரியாறு, தமிழர் கைகளிலிருந்து மலையாளிகளுடைய கைகளுக்கு மாறி ஆண்டு 15 கடந்துவிட்டது.

இடுக்கி மாவட்டத்தின் மிகப் பெரிய ஏலக்காய் நகரமான வண்டன்மேடு, முன்னொரு காலத்தில் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் கட்சி கொடி கட்டி பறந்த ஊர்.மார்ஷல் நேசமணியும் அப்துல் ரசாக்கும் நடைபயின்ற இடுக்கி மாவட்டத்து ஊர்களில் வண்டன்மேடும் ஒன்றாக இருந்தது...

இன்று நிலைமை மாறிவிட்டது.

வண்டன்மேட்டின் முதலாளிகள் மலையாளிகள்...

முதலாளிகளாக இருந்த தமிழர்கள் கூலிகள்...

பட்டம் தாணுபிள்ளை,கே.எம். பணிக்கர்,காமராஜர்,.வெ. ரா

தேவிகுளத்தின் முதல் தமிழ் சட்டமன்ற உறுப்பினரான கணபதி,

ரோசம்மாள் புன்னூஸ்,பிரிட்டிஷ் நயவஞ்சகர்கள்,கேரள காங்கிரஸ் துரோகிகள்...

மொழிவழி பிரிவினை குழுவின் அறிக்கையை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்ட வடநாட்டு மார்வாடிகள்...

என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது விவாதிப்பதற்கு...

விவாதிப்போம்...

தேவிகுளம் பீர்மேடு மட்டுமல்ல... கிட்டத்தட்ட 1400 சதுர கிலோமீட்டர் பரப்பை தமிழகம் கேரளாவிடம் அனாதியாய் இழந்திருக்கிறது...

வரலாறு நீளும்...

பகிர்வு: ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

 இதே போல் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி கையில் வைத்துள்ள பல ஹெக்டேர் மலைகாடுகள் தேயிலை தோட்டங்கள் பாபநாசம் மலைமேல் மாஞ்சோலை குதிரைவெட்டி போன்றவை உள்ளன.

 


விரும்பாத உறவு ...

"என்னடி சொல்ற!" அதிர்ச்சியோடு கத்தினான் முத்து.

லட்சுமி முழுங்கி முழுங்கி " குடும்ப கட்டுப்பாடுதான் பண்ணிட்டோமேன்னு மெத்தனமாக இருந்ததில நாள் தள்ளிப் போனதை கவனிக்கல, நேத்திக்கு சந்தேகத்தில மருத்துவமனைக்கு போய் காட்டிட்டு வந்தேங்க... முழுசா நாலு மாசம் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க!" என்றாள் பயந்தபடியே.

"என்ன எழவுடி பண்றாங்க? எவ்வளவு பணம் செலவழிச்சு அறுவை சிகிச்சை எல்லாம் பண்ணிட்டு வந்த... இப்ப கர்ப்பம்ங்கற.... மூணு பொட்ட புள்ளைங்க பெத்துட்டு... இனி ஒன்னு தாங்குமாடி... சும்மா விடமாட்டேன் இந்த மருத்துவமனைய.. உண்டு இல்லை என்று பண்ணிடுவேன்" என்று கத்தினான் முத்து.

சொன்னபடியே முத்து செய்யவும் செய்தான். அந்த தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவரையும்... லெட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர் வசுந்தரா தேவியையும்... கண்ணில் விரலை விட்டு ஆட்டினான். நீதிமன்றம் போவேன் என்று மிரட்டினான். தலைமை மருத்துவரும், வசுந்தரா தேவியும் தொழிலில் மிகுந்த அக்கறை உள்ள மருத்துவர்கள். அவர்கள் முத்துவின் மிரட்டலுக்கு பயப்படவில்லை.

லட்சுமியை மருத்துவமனையில் சேரச் சொல்லி, எல்லா பரிசோதனைகளையும் பண்ணி பார்த்த போது தான் காரணம் பிடிபட்டது. பின் முத்து ,லட்சுமி இருவரையும் அழைத்து "இதோ பாருங்க... உங்க மனைவிக்கு நடந்த அறுவை சிகிச்சையில் எந்த தவறும் நடக்கல. சினைக்குழாய்யை கவனமாக வெட்டி மூட்டினோம். இயற்கையின் வினோதமாக புதிய சினைக்குழாய் வளர்ந்து அதன் காரணமாகத்தான் சினை முட்டை, சினைப் பையை அடைந்திருக்கு. இது இயற்கையோட விளையாட்டு. எங்கள் தவறு எதுவுமில்லை" என்று வசுந்தரா தேவி விளக்கிக்கூற...

முத்து ஆவேசம் குறையாமல்," எது எப்படியோ போகட்டும், இப்ப வந்திருக்கிற சனியன அழிச்சிடுங்க" என்று கத்தினான்.

" புரிஞ்சுக்கோங்க! இப்ப கருவை கலைச்சா இவங்க உயிருக்கே ஆபத்து".

"செத்து ஒழியட்டும்! அத்தோடு சேர்ந்து இவளும் ஒழியட்டும்! இன்னொரு பொட்ட புள்ள பெத்துட்டு இவ என் வீட்டுக்குள்ள நுழையக்கூடாது"என்று கத்தி விட்டு போய்விட்டான். அழுது கொண்டிருந்த லஷ்மியை பார்க்க பாவமாக இருந்தது.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை வசுந்தரா தேவிக்கு. லட்சுமியின் கண்ணீர் முகம் கண்ணுக்குள்ளேயே நின்றது. சோதனை செய்தபோது இதுவும் பெண் குழந்தை என்பது தனக்கு மட்டுமே தெரிந்த செய்தியாய் அவள் மனதை உறுத்தியது. தனக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் ஒரு குழந்தை இல்லாத போது, வேண்டாம் என்று சொல்லும் லட்சுமிக்கு குழந்தைகளாக பிறப்பது என்ன கணக்கோ என்று எண்ணிக்கொண்டாள். மனம் கனத்தது.

காலையில் அவளைப் பார்க்க வந்த லட்சுமியை அமரச் சொன்னாள்.' லட்சுமி நான் சொல்றத கவனமா கேளு! நீ இப்ப இருக்கிற நிலையில முழுசா நாலு மாசம் முடிஞ்சு போச்சு! கருவை கலைத்தால் உன் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதனால இதை சுமந்து பெத்துக்கோ! பையனா இருந்தா உன் விருப்பப்படி முடிவெடு. பொண்ணா பிறந்தா அந்த குழந்தையை நான் வளர்க்குறேன். உன் பிரசவ செலவையும் நானே ஏத்துக்குறேன். இதனால நம்ம ரெண்டு பேர் பிரச்சனையும் தீரும். யோசிச்சு பதில் சொல்லு!" என்று கூறினாள் வசுந்தராதேவி.

"அம்மா! தெய்வம்மா நீங்க! வயித்தில வந்ததை அழிக்க மனசு வரல. என்ன இருந்தாலும் அதுவும் ஒரு உசுரு. என் உசுரையும் என் புள்ள உசுரையும் காப்பாத்திட்டீங்க" அழுதாள் லஷ்மி.

அதன் பிறகு, வசுந்தராதேவி லட்சமியை கவனமாக பார்த்துக் கொண்டாள். அவளுக்கு மட்டுமில்லாமல் அவள் குடும்பத்திற்கும் செலவு செய்தாள். பிள்ளைகள் படிப்பிற்காக ஒரு தொகையை வைப்பு நிதியாக போட்டு கொடுத்தாள். லட்சுமிக்கு ஐந்து மாதம் கழித்து பெண் குழந்தை பிறக்க, அந்த குழந்தையை தூக்கி வசுந்தராதேவி கையில் கண்ணீரோடு கொடுத்ததோடு சரி, அதன் பின் அவள் வாழ்க்கையிலிருந்து அந்த குழந்தையின் நினைவுகளை கூட அழித்துவிட்டாள்.

காலம் உருண்டோடியது. லட்சுமியின் பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். முத்துவும் குடித்துக் குடித்து நுரையீரலில் பிரச்சனை வந்து ஒரு ஆண்டிற்கு முன்பு போய் சேர்ந்துவிட்டான். பெரிய பெண்ணை பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு, சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தாள். சின்னவளுக்கு பழைய சாமான் வாங்கி விற்கும் மாப்பிள்ளைதான் அமைந்தது. மூன்றாவது பெண் மட்டும்தான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாள். வருமானம் கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை ஓடியது.

லட்சுமியால் முன்பு மாதிரி உழைக்க முடியவில்லை. வேலை அதிகம் செய்தால் மூச்சு வாங்கியது. பேரன், பேத்தி இருவரும் பிடித்த பண்டங்களை வாங்கி கொண்டு மகளை பார்க்க கோவில்பட்டி கிளம்பினாள். மகளும்,மருமகனும் வீட்டிலேயே சின்னதாக ஒரு உணவகம் நடத்திக் கொண்டிருந்தனர். லட்சுமி அங்கு இருக்கும் வரை, தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுப்பாள்.

அன்றும் இட்லிக்கு மாவு அரைத்து வைத்து விட்டு, தண்ணீர் பிடித்து வைத்தாள். காய்கறி நறுக்கிவிட்டு நிமிர்ந்தவளுக்கு நெஞ்சுவலிக்க ஆரம்பித்தது. விறுவிறுவென இடது கை, தோள்பட்டை, முதுகு என வலி பரவியது. சளசளவென வேர்த்து கொட்டியது. அப்படியே சரிந்து உட்கார்ந்துவிட்டாள். அடுத்த அரைமணி நேரத்தில், அவள் மகளும், மருமகனும் அவளை ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மாரடைப்பு என்றார்கள். தூக்கமும்,விழிப்புமாக இருந்தவள், இரண்டாம் நாள்தான் நன்றாக கண்விழித்தாள். அருகிலிருந்த நர்ஸ்," அம்மா நீங்க செத்து பிழச்சிருக்கீங்க! நல்ல நேரத்துல மருத்துவமனையில சேர்த்திட்டாங்க!" என்றாள்.

"என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றிமா! நான் இன்னும் கொஞ்ச நாளாவது உயிரோட இருக்கணும். என் கடமை இன்னும் முடியல. இன்னும் ஒரு பெண்ணை கரையேத்தணும்!" என்று நெகிழ்ச்சியாக கூறினாள் லட்சுமி.

"உங்கள காப்பாத்தினது எங்க சின்ன டாக்டரம்மா தான். சின்ன வயசுனாலும், அவங்க சரியான நேரத்துல போட்ட ஊசியும், தந்த சிகிச்சையும் தான் உங்க உயிரை காப்பாற்றியது. அதனாலதான் நீங்க இப்ப உயிரோட இருக்கீங்க. நீங்க நன்றி சொல்லணும்னா அவங்களுக்குத் தான் சொல்லணும் .அவங்க இருதய சிகிச்சையில மேல் படிப்பு முடிச்சிருக்காங்க" என்றாள் நர்ஸ்.

அன்று மாலை அவசர சிகிச்சை பிரிவில் முதன்மை மருத்துவர் வசுந்தராதேவி, லட்சுமியை பார்த்ததும் திகைத்துப் போனாள். லட்சுமிக்கும் அதே உணர்வு...பார்க்க மாட்டோம் என்று எண்ணியிருந்த இருவரும் எதிர்பாராமல் பார்த்து கொண்டதில் இருவருக்குமே அதிர்ச்சி. வசுந்தராதேவி சுதாகரித்துக் கொண்டாள்.

"லட்சுமி! நீயா? உடம்பு இப்போ எப்படி இருக்கு? இது என் மருத்துவமனை தான். நான் ரெண்டு நாளா ஊர்ல இல்ல... அதுதான் உன்னை பார்க்கல. இன்னைக்கு நோயாளிகள் பெயர் அட்டவணையில உன் பேரும் பார்த்தேன். ஆனா நீயா இருக்கும்ன்னு நினைக்கல. உன் புருஷன், பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க?"

"அம்மா! நீங்க நல்லா இருக்கீங்களா? அம்மா உங்கள பார்ப்பேன்னு கனவிலயும் நினைக்கல. உங்க குழந்தை..." என்றவள் டக்கென பேச்சை நிறுத்தினாள் லட்சுமி.

"இப்படி ஒரு சூழ்நிலையில் நீயும், நானும் இந்த ஊர்ல இந்த இடத்தில் சந்திப்போம்ன்னு நினைக்கல.காலம் செய்யும் வேடிக்கையை பாரு. உன் உயிரை காப்பாற்றியது யார்ன்னு நினைக்கிறே. நீ அன்னைக்கு வேண்டாம்ன்னு தூக்கி கொடுத்துட்டுப் போன உன் பொண்ணுதான். நாளைக்கு நான் அவளை கூட்டிட்டு வந்து உன்னை அறிமுகப்படுத்துகிறேன்" என்றாள் வசுந்தராதேவி.

"அம்மா நீங்க தெய்வம்! சொன்னபடி என் மகளை நல்லா வளர்த்து, பெரிய மருத்துவர் ஆக்கிட்டீங்க. அவள் என்னைக்குமே உங்க மகளாவே இருக்கட்டும்மா. புதுசா ஒரு உறவா அம்மான்னு அவ வாழ்க்கைக்குள்ளே நுழைய நான் விரும்பல. அது பல குழப்பங்கள் உண்டாகும் .அவ என் மகளா இருந்தா, இந்த வாழ்க்கை அவளுக்கு கிடைச்சிருக்காது. நீங்கதான் அவளுக்கு என்னைக்குமே அம்மா. இந்த உண்மை அவளுக்கு தெரியவே வேண்டாம்மா" என்று கைகூப்பினாள்.

மறுநாள் "என்ன லஷ்மிம்மா! எப்படி இருக்கீங்க? என்று புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்தாள் சின்ன டாக்டரம்மா வைஷ்ணவி. அவளை பாசமாக பார்த்து, மகிழ்ச்சியாக, "நல்லா இருக்கம்மா!" என்று தலையாட்டினாள் லஷ்மி... மனம் முழுக்க வாஞ்சையோடும்.. ஒரு சின்ன நெகழ்வோடும்.

தி. வள்ளி


எங்கடா போனீங்க.. ஆஸ்பத்திரிக்கு சார்..

எதுக்குடா.. சிரங்கு சார்..

கைய காட்றா.. எத்தனை நாளா??

3 நாளாக.. டாக்டர் என்னடா சொன்னார்.. நல்லா சாப்பிடனுமாம் சார்..

ஒரு வாரத்துக்கு ஆஸ்டல்ல தங்க வேணாம்னு சொன்னார் சார்..

இப்படி நல்ல சோற்றுக்கும் விடுமுறைக்கும் அடிபோட்டு பேசுவார்கள்.. உதவிக்கு வந்தது அந்த தொற்றுநோய்.

அரசு சீர்மரபினர் பள்ளி மற்றும் விடுதியில் படிப்பு.. புத்தகம் பையிலே புத்தியோ கிணற்றிலே..!!

அணில் வேட்டை.. இளநீர் களவாடல்.. கண்மாய் நீஞ்சு.. கிணற்றுத்தாவல்.. கபடி.. கரண்ட் ஷாக்.. ஒளிஞ்சு புடிச்சு.. என்று முடிவில்லாமல் ஓடிய அந்த கால்களை எப்படியோ அந்த வெள்ளிக்கிழமை மாலை மேட்டின் இறக்கத்தில் கண்டு கொள்வாள்.. அவள்..

டவுசரிலிருந்து பேன்ட் சட்டைக்கு உரிமை கிடைக்காத எட்டாம் வகுப்பு.. டூரிங் டாக்கீஸில் இறுதிப்பாட்டு கேட்கும்.. "திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்... ம்ம்.. "" உடனே நடை வேகமாகும்..

அவளின் தரைக்கடையில் கூட்டம் அலைமோதும்.. அமர்ந்து விற்பவள் அந்த கால்களின் நெடிசல்களூடே அவனது கால்களை கண்டு கொள்வாள்..

அவள் கடைசித்தம்பி இவனை மேடிறங்க விடமாட்டான்.. வாயில் வண்டியை கிளப்புவான்.. உர்ர்ர்ர்... சிட்டாய் பறந்து வருவான்..

மாமா அக்கா காசு கொடுத்துச்சு.. கையில் 3 ரூபாயை திணிப்பான்..

3 புரோட்டா ₹2.25 பைசா. 75 பைசா டிக்கெட்.. வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தளிப்பதவள் அன்பு.

தியேட்டர் வாசலில் இருக்கும் அந்த கடையில் நிற்பான். எதையாவது வாங்கிக் கொண்டு அவள் அம்மாவிடம் வலிந்து பேசிவிட்டு அவளை கண்களால் கொஞ்சுவான்.. கன்னக்குழிவிழுக சிரித்து விடைபெறுவான்.. அவள் கண்களால் விசிலடிப்பாள்.. வெள்ளி வானம் வெள்ளிவெள்ளியாய் பரிக்கும்.

இப்படி வெள்ளிததும்பும் வெள்ளிக்கிழமைகளால் நிறைந்ததந்த காலம்..

ஒருநாள் காலை வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் பிள்ளைகள் மத்தியில் ஒரே கசகசா. சில பொறாமைக்காரிகள் பெரிய பிரச்சனை ஒன்று நடந்துவிட்டதாக பிரலயம் செய்தார்கள்..

டேய் உனக்கு அவ லவ் லெட்டர் எழுதி இருக்கா. டீச்சர் கிட்ட குடு என்று தூபம் போட்டாள்கள்.

அவளோ.. இல்ல நான் சும்மா தான் எழுதினேன் என்று அழுது அரற்றினாள்.. பிடுங்கி வைத்து இருந்தவள் இவனிடம் கடிதத்தை நீட்டும் போது அவள் தாவி பிடுங்கி கிழித்து விட்டாள். பிரச்சினை அத்தோடு முடிந்தது. டீச்சர் வரை போகவில்லை. தலை தப்பித்தது.

ஒன்பதாம் வகுப்பு வரை அவளின் நுணர்கொம்பின் எல்லைக்குள் அவனை வைத்திருந்தாள்.. எந்தத் தொடுதலும் இல்லை.. காம்பஸ் கண்களால் அவனை திருகிக்கொண்டே இருப்பாள். அந்த வகுப்பறையில் ஒற்றை மல்லிகையாய் மலர்ந்து பூரித்து அவன் கண்களுக்கு மட்டும் காட்சி தந்து கொண்டே திரிந்தாள்..

கால் சட்டை போட உரிமை கிடைத்த ஒன்பதாம்வகுப்பு.. திடீரென அவளது அம்மா பத்திரிகையுடன் வந்தாள். ஆசிரியருக்கு அழைப்பிதழ் கொடுத்தாள்..

எங்கோ தூரத்தில் மாப்பிள்ளை ஊரில் கல்யாணம் முடிந்தது.. கணவனோடு ஆந்திரா புகுந்தாள்.. அதன்பிறகு அந்த வகுப்புக்குள் பூப்பெய்தும் அதிசயம் நிகழ்வதில்லை. வெள்ளிக்கிழமை மாலைகளில் மேடு இறங்கும் கால் தனியனானது.

காரோட்டி மாப்பிள்ளை கடையில் உட்கார்ந்து கொண்டு ஒரு கவளம் சிரிப்பான். அக்கா எப்போதும் போல் விசாரிப்பாள்..

டூரிங் டாக்கீஸின் கடைசிப் பாடல் ஒலிக்கத் தொடங்கும்.. திருச்செந்தூரின் கடலோரத்தில்..

நண்பர்களின் கேலி கிண்டலில் அவள் நினைவுகளை கடந்து போனான்.. எந்தச் சோகத்தையும் உருவாக்கி சிந்திக்கத் தெரியாத வயதும் மனதுமாய் கரைந்துவிட்டான் அவன்..

12 ஆண்டுகளுக்குப் பிறகு தான் படித்த ஊரையும் நண்பர்களையும் நினைவில் தங்கிய இடங்களையும் சுற்றிப்பார்க்க நடந்து சென்றபோது வழியில் அவளது வீட்டில் அக்காவை பார்க்க நினைத்தார்கள். பார்த்துச் செல்வோம் என்று இரு நண்பர்களுடன் வீட்டிற்குச் சென்றான் அவளைப் பார்க்க வாய்ப்பில்லை என்ற முடிவோடு.

சரவெடித் திருப்பம்தான். ஆந்திர மேகத்திற்குள் மறைந்து போன வெள்ளி வந்திருந்தது. நண்பர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிக் கேவியவள் அவனது பெயரை சொல்லிக்கொண்டே வெடித்து அழுதாள்.. 15 வயதில் பார்த்தது. 28 வயதில் வெள்ளப்பெருக்கெடுத்து சந்திகூடிப் பொங்கியது.

பின்னால் அவள் கணவனும் அவளது பையன்களும் அவளது அழுகை கண்டு உறைந்தார்கள். இவன் சமாளிக்க திணறிப் போனான். ஆறுதலாய் பேர் சொல்லி விசாரிப்பில் இறங்கினான்..

குடும்பம் கணவர் அறிமுகம் வாழ்க்கை பழைய நண்பர்கள் வேடிக்கைகள் என்று பேசி முடித்து விடைபெற்றான்..

13 ஆண்டுகளாக நினைவைச் செலுத்தாத அவன் அந்த அழுகையில் குலைந்து போனான்.

இப்போது அவள் நினைவு வரும் போதெல்லாம் அவன் கண்களில் துளிர்க்கிறது வகுப்பில் பூரித்துத் திரிந்த அந்த ஒற்றை மல்லிகை.

வாழ்த்து அட்டைகளும் ரோஜாபூக்களுமாக பரிமாற்றம் வந்து விட்ட காலத்தில் விடுதியில் படித்தவனின் வயிற்றுப் பசியை நேசித்தவள். ருசிக்க வைத்து அழகு பார்த்தவள் அவள்..

அந்த வகுப்பிலும் வயதிலும் ஒரு வயது மூத்தவள்.. முதிர்ந்தவள்.. ஆசைப்படவும் அன்பாய் சிரிக்கவும் மட்டுமே தெரிந்த அவனை காதலிக்க தெரிந்து வைத்திருந்தாள் அவள்.

அவனால் நினைவுகளால் மட்டுமே அவள் காதலை உணரமுடிகிறது.. அது காலத்தின் உறைபனியில் அவள் விழிகள் அவன் கால்களை அழைப்பதாய் விரிகிறது..

அவள் முடிவில்லாமல் அந்த மூன்று ரூபாயை தன் வியர்வை கைகளுக்குள் இன்றும் இறுக வைத்திருக்கிறாள்..

---------++--------.

90' ஸ் ஆட்டோகிராப்

யாருக்கு!?? யாருக்கோ???


 படைப்பு-

சுமார் 30 வருடம் முன்புஎன் அப்பா பொதுப்பணித்துறையில் பணி புரிந்த காலம்அப்போது பழனிக்கு அருகில் இருந்தோம்ஒரு விசேசத்தில் கலந்து கொள்வதற்காக திருவில்லிபுத்தூர் அருகே இருந்த எங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தோம்.

பழனிக்கு திரும்ப வேண்டிய நாளில் என் நன்னிமாவை (அம்மாவைப் பெற்றவர்ஊருக்கு வந்து எங்க கூட ஒரு பத்து நாள் இருந்துட்டு வாங்களேன் என்று அழைத்தார் என் அம்மாநன்னிமாநான்அப்பாஅம்மா அனைவரும் கிளம்பி திருவில்லிபுத்தூரில் இருந்து ஜெயராம் பஸ் சர்வீசில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்தடைந்தோம்.

சரியான வெயில் கொளுத்தியதுபழனிக்கு செல்ல முதலாவதாக நின்றிருந்த சோலைமலை பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தோம்அப்போது ஒரு சிறுவன் பஸ்சுக்குள் ஏறி "ஒண்ணு கால் ரூபா அசல் நன்னாரி சர்பத்என்று விற்று வந்தான்.

எனக்கு தாகம் எடுத்தது. "அப்பா சர்பத் வாங்கித் தாங்கப்பாஎன்றேன்சர்பத் விற்ற பையனிடம் அப்பா கேட்டார்... "சர்பத் எவ்ளோ தம்பி? "

"ஒண்ணு கால் ரூபா சார்என்றான்.

"சரி நாலு குடுஎன்றார் அப்பா.

நான்கு சர்பத் குடுத்து விட்டு, "ஒண்ணு கால் ரூபா நன்னாரி சர்பத் அசல் சர்பத்என்று கூவியபடியே பஸ்சுக்குள் சுற்றிக் கொண்டிருந்தான்எங்களைத் தவிர யாருமே வாங்கவில்லைநாங்கள் அதை சில்லிப்புக்காக குடித்து முடித்தோம்திருவிழாக்களில் விற்கப்படும் சாக்ரீம் சர்பத்தான் அது.

டம்ளர்களை வாங்கிக் கொண்ட சிறுவனிடம் அப்பா ஒரு ரூபாயை நீட்டினார்.

"என்ன ஒத்த ரூபா குடுக்கீங்க ... இன்னும் நாலு ரூபா வேணுமே " என்றான்.

"எதுக்கு ... ஒரு சர்பத் நாலணா னா நாலு சர்பத் ஒரு ரூபாதானே தம்பிஎன்றார் அப்பா.

"சார் இந்தக் காலத்துல யாராவது கால் ரூவாய்க்கு சர்பத் தருவாங்களா சார் ... ஒண்ணேகால் ரூபா சார் ஒரு சர்பத்என்று ஒரே போடாய் போட்டான். "ஏன்டா ... பத்துப் பைசா பெறாத சாக்ரீமை கலந்து சர்பத்துனு வித்துட்டு பொய் வேறயா பேசுற?" என்று அடிக்கப் போய் விட்டார் அப்பா.

அவரைத் தடுத்த நன்னிமா, "ஏண்டா முண்டப்பயலே ... இந்த வயசுலயே உனக்கு இவ்ளோ பொய்யாடாஎன்று அவனுக்குக் கொடுத்த ஒத்த ரூபாயையும் பிடுங்கிக் கொண்டார். "உனக்கு ஒத்தப் பைசா கூட குடுக்க முடியாதுயார்ட்ட சொல்லணுமோ போய் சொல்லு " என்று விரட்டி விட்டார்.

"இருங்க இருங்க எங்க முதலாளிய கூட்டியாரேன்என்று சொல்லி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினான் அவன்.

சற்று நேரத்தில் மடித்துக் கட்டிய லுங்கியோடும் முறுக்கிய மீசையும் கலைந்த கேசமுமாய் முதலாளி என்று ஒருத்தனை கூட்டி வந்தான். "யாருங்க இங்க சர்பத் வாங்கி குடிச்சிட்டு காசு தர தகராறு பண்ணதுஎன்றான் அவன்.

"நாங்கதான் இந்த பஸ்ல அந்த வெசத்த வாங்கிக் குடிச்சவுகஎன்றார் நன்னிமா.

"ஏன் பாட்டி ... குடிச்சதுக்கு காசு குடுக்காம ஏன் தகராறு பண்றீங்க?"

"என் மருமகன்தேன் பத்து ரூவா குடுத்தாக.... வாங்கிக்கிட்டு அங்கிட்டுப் போய் இங்கிட்டு வந்து திரும்பவும் காசு கேக்குறான்மிச்ச அஞ்சு ரூவாய குடுடானாநீங்க ஒத்த ரூவா கூட தரலேனு பொய் பேசுறான்"

"நீங்க குடுத்திருந்தா அவன் ஜேப்புல இருக்கணும்லஒண்ணுமே இல்லையே "

"இவ்ளோ பொய் பேசுற கெட்டசாதிப்பய திருட்டுத்தனம் பண்ண மட்டும் யோசிக்கவா போறான் ... ஒன்னைக் கூப்புட வந்தப்போ எங்குட்டாச்சும் ஒளிச்சு வச்சிருப்பான் "

முதலாளி இப்போது அந்தச் சிறுவனை சந்தேகமாய்ப் பார்த்தான். "நெசமாவாடா"

"அய்யோ இல்லைங்க முதலாளி. .. அவங்க எல்லாரும் பொய் சொல்றாங்க.

சட்டென்று பின்னாலிருந்து ஒரு பாட்டி, "ஆமா நானும் பார்த்தேன்அந்தத் தம்பி பத்து ரூவா குடுத்தாகஎன்றார்எல்லோரும் ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் அந்தப் பாட்டியைப் பார்த்தோம்.

என் நன்னிமா மீண்டும் ஆரம்பித்தார். "இப்போ மிச்ச அஞ்சு ரூவா தரலேனா உன்னையும் அவனையும் திடீர்நகர் போலீசு டேசன்ல போய் சொல்லிருவேன்என்று மிரட்ட ஆரம்பித்தார். "இன்னும் இந்தப் பயல வேலைக்கு வச்சிருந்தீனா உன் கடையவே திருடிருவான் பாத்துக்க " என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

அவன் வேறு வழியின்றி அஞ்சு ரூபாயை எடுத்து நன்னிமாவிடம் கொடுத்துவிட்டு இறங்கினான்.

அவர்கள் போனதும் அந்தப் பாட்டி எங்களிடம் , "இந்த எடுவட்ட பயல்களுக்கு இதேதான் பொழப்புஎன்கிட்ட கூட இப்படித்தான் போனதடவ காசப் புடுங்கிட்டானுகஅதான் நானும் உங்ககூட சேர்ந்துக்கிட்டேன்என்றார். "... அப்படியா சங்கதிஎன்னடா எலி அம்மணத்தோட ஓடுதேனு நினைச்சேன்என்று சிரித்தார் நன்னிமா.

நான் நன்னிமாவிடம் கேட்டேன்.

"ஊமையா அமைதியா இருப்பீங்கஇவ்ளோ பேசுறீங்க நன்னிமா ... ஆச்சரியமா இருக்கு"

உண்மையானவங்ககிட்டதான் ஊமையா இருப்பேன்எல்லார்ட்டயும் இல்ல"

நீங்களும் ரொம்பப் பொய் பேசுனீங்க ... தப்பில்லையா நன்னிமா?"

"விசத்த விசத்தாலதான் முறிக்கணும்முள்ள முள்ளாலதான் எடுக்கணும் கலிபு"

எப்படியோ இன்னைக்கு நமக்கு சர்பத்தும் அஞ்சு ரூவாயும் உங்க புண்ணியத்துல கிடைச்சிருச்சு நன்னிமா"

அது நமக்கு நல்ல வழில கிடைச்சது இல்லப்பாஅதுனால அது நமக்கு சேராதுஎன்றபடியே ஜன்னல் வழியே கையேந்திய ஒரு யாசகப் பாட்டிக்கு ஆறு ரூபாயையும் கொடுத்தார் நன்னிமா.

"அஞ்சுதானே குடுக்கணும்ஏன் ஆறு ரூபாயை குடுத்தீங்க நன்னிமா? "

"நாம குடிச்ச சர்பத் நமக்கு "ஹலால்ஆகணும்ல அதுக்குதான்என்ற நன்னிமாவையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறேன்பெருமையாய் இருக்கிறது.

"திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்குபயந்து விடாதே

திறமை இருக்கு மறந்து விடாதே"

என்ற பாடலை உச்ச ஸ்தாயியில் அலற விட்டபடி பேருந்து நிலையத்தை விட்டு மெல்ல நகரத் தொடங்குகிறது அந்தப் பேருந்து !!

கலிபூ *

ஆத்திரத்தில் அருவா எடுத்தவன் ..

ஆயுள் தண்டனை கைதியாய் சிறையில்..

கம்பிகளுக்கு வெளியில் மனைவி ..

எப்படி இருக்கீங்க எல்லோரும்...?

நலம் என்றவள் இதயம் சொன்னது...நாதி அற்று கிடைகிறோம் என்று ...

வேளாவேளைக்கு சாப்பிடுங்கள் என்றவனிடம்

சரி என்றவளின் இதயம் சொன்னது...

ஒரு வேளை கூட பசியாற வழி இல்லையே என்று...

பிள்ளைகள் பள்ளிக்கூடம் போறாங்களா..?

என்று கேட்ட நேரம் ஆம் என்றவளின் இதயம் சொன்னது...

படிப்பை நிறுத்தி பலநாள் ஆகிவிட்டது என்று...!

உறவினர்கள் உதவுகிறார்களா

என்றவனிடன்...

ஆம் என்று சொன்னவளின் இதயம் சொன்னது..

அண்ணன் உறவு முறையில் உள்ளவன் கூட அத்துமீறுகிறான் என்று....!

வீட்டு வாடகை குடுத்தீயா என்றவனிடம்...குடுத்தேன் என்றவளின் இதயம் சொன்னது...இப்பொழுது நான்காவது வீடு மாறி விட்டோம் என்று...!

பெண் பிள்ளை எப்படி இருக்கிறாள் என்றவனிடம் ...நலம் என்றவளின் இதயம் சொன்னது...வீட்டில் வைத்து பூட்டிட்டு வீட்டு வேலைக்கு போகிறேன் என்று...!

பையன் நல்லா படிகிறானா என்றவனிடம்...ஆம் என்றவள் இதயம் சொன்னது..கடற்கரையில் சுண்டல் விற்கிறான் என்று...!

என்னை பற்றி கவலைபடாதே என்றவனிடம்...சரி என்றவளின் இதயம் சொன்னது...

எங்களை பற்றி கவலைப்பட்டு இருந்தால் ஆத்திர பட்டு இருப்பாயா என்று...!

நான் சிறையில் இருப்பதால் உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை என்றவனிடம் .பரவாயில்லை என்றவளின் இதயம் சொன்னது...

செய்யாத தவறுக்கு எங்களுக்கு தான் சிறைவாசம் என்று...

 



தோற்று போகலாம்.

தஞ்சையில் இருந்துசென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்த போது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பாஎன்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பி விடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும் போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒரு முறை மணிஆர்டர் வந்த போது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன்

(my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின்

( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால்பாவம்என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும்சின்என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலை பேசியில் பேசினார்.

ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சுஎன்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பாஅது சரிதானேன்னு தோணுச்சுஅதான்என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டு கொண்டேன்.

அப்படியே போனை வைத்து விட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறு நாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.

உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜாநீதான என் சொத்துஅந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்என்றார் அப்பா.

முட்டிக் கொண்டு வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என் போன்றோர், பெற்றவர்களுக்குசின்என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

தாயிடம் நிரூபியுங்கள். கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

தந்தையிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

மனைவியிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

சகோதரனிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

சகோதரியிடம் நிரூபியுங்கள்.கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று மகனிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

மகளிடம் நிரூபியுங்கள். கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் .

அது கடலில் கொட்டிய பெருங்காயமே.

தோற்று போனால்

வெற்றி கிடைக்குமா ?

அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..

அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..

நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

ஆகவே தோற்று போ,

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

அன்புடன் வாழுங்கள்!

எழுத்தாளர் சுஜாதா...

 


மைதிலி 

சமர்ப்பணம்.

அன்று புறநகர் பகுதி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திவாகரன் தனது செல்போனில் பேசி கொண்டு இருந்தார்.பேசி முடித்ததும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை அழைத்து "குமார் நான் கிளம்புறேன் .பண்டிகை காலம் நைட் ரவுண்ட்ஸ் போங்க.எதாவது பிரச்சினைனா எனக்கு கூப்பிடுங்க"என்றதும் குமார் தலையசைத்தார்.ஸ்டேஷனில் அனைவரும் அவரை வழியனுப்பும் போது ஒரு தம்பதியினர் பரபரப்பாக உள்ளே வந்தனர்.

நேராக திவாகரிடம் வந்து "சார் என் குழந்தைய காணோம் சார்."என்று கதறி அழ தொடங்கினர் .திவாகர் அவர்களை அமர வைத்து பொறுமையாக விசாரிக்க தொடங்கினார்.

அப்போது குழந்தையின் தந்தை"சார் என் குழந்தை பேரு அபர்ணா.இரண்டு வயசு தான் ஆகுது.அவளுக்கு துணி எடுக்க தான் கடைக்கு வந்தோம் .கடை தெரு முழுக்க கூட்டம் .அப்போ ஒரு வயசானவர் மயங்கி விழுந்தார் நானும் என் மனைவியும் அவருக்கு உதவி செஞ்சுட்டு இருந்தோம் .அபர்ணா பக்கத்தில் தான் நின்னுட்டு இருந்தா.அவர ஆட்டோல ஏத்தி விட்டுட்டு திரும்புனா அபர்ணாவ காணோம் .கடைத்தெரு பூரா தேடிட்டோம் கிடைக்கல சார்"என்று அவரும் அழத்தொடங்கினார்.

அப்போது குமார் "சார் நீங்க கிளம்புங்க.நாங்க தேடி கண்டு புடிக்கிறோம்.நாங்க பாத்துக்குறோம்"என்றதும் பெற்றவர்கள் திவாகர் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர் .அவர்களிடம் வழக்கு பதிவு செய்ய சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றவர்.சிறிது நேரத்திற்கு பிறகு குமாரை அழைத்து "குமார் கிளம்புங்க இந்த கேஸ வேகமா புடிக்கணும்.ஒரு வேளை குழந்தை கடத்தபட்டு இருந்தா நம்ம தாமதம் ஆபத்துல முடிஞ்சிரும்.எனக்கு இது மாதிரி நிறைய கேஸ் பாத்திருக்கேன் எனக்கு அனுபவம் இருக்கு. நானும் வர்றேன்"என்று வேகமாய் கிளம்பி கடைத்தெருவில் விசாரணையை துவக்கினார்.

மொத்த காவல் அதிகாரிகளும் திசைக்கு ஒருவராக மிக துரித நிலையில் விசாரணை நடத்தி கொண்டு இருந்தனர் .சிறிது நேரத்தில் திவாகர் ஒரு தகவலை சேகரித்தார் போன மாதமும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததை கண்டு பிடித்தார்.

இரவு 12 மணியை தாண்டியது குழந்தையின் பெற்றோர் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து கொண்டு இருந்தனர் .

அப்போது திவாகருக்கு போன் வர அவர் தனியாக விலகி சென்று பேசி கொண்டு இருந்தார்.பேசிய பின்பு தன் நிலை மறந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்தித்து கொண்டு இருந்தார்.

அவரை பார்த்த குழந்தையின் பெற்றோர் மிகவும் பயத்துடன் "சார் என் குழந்தைக்கு என்னாச்சு?"என்று கதறினர்.உடனே திவாகர்"பயபடாதீங்க.இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை கிடைச்சுரும்"என்று தன்னை வேகப்படுத்தி கொண்டு கிளம்பினார்.

அவரது விசாரணையில் இது கடத்தல் என்பதும் முதியவர் மயங்கியது நாடகம் என்பதும் தெரிய வர காவல் துறை வேகமானது திவாகரன் தலைமையில்.குற்றவாளிகள் சென்னையை தாண்டியிருக்க முடியாது இது பண்டிகை சமயம் அதனால் போலிஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும் .அதனால் நமது வேகம் இன்னும் அதிகரித்தால் அவர்களை பிடித்துவிடலாம் என்பதால் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அபர்ணாவின் அம்மா கடைத்தெருவில் மயங்கியபடி நடித்த முதியவரை பார்த்து திவாகரிடம் காட்ட முதியவரை காவல் துறையினர் பின் தொடர்ந்தனர்.

சென்னைக்கு அருகில் ஒரு பழைய மண்டபத்திற்குள் இருப்பதை கண்டு பிடித்தனர்.நள்ளிரவு 3 மணிக்கு மேல் திவாகரன் தனது அணியுடன் மண்டபத்தை சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்தார்.

அவர்களின் பிடியில் அபர்ணா உட்பட எட்டு குழந்தைகள் கடத்தப்பட்டு இருந்தனர் .அபர்ணாவை அவர்களின் பெற்றோர் வசம் ஒப்படைத்தார். அடுத்த நிமிடம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அவர் சென்றதும் அபர்ணாவின் பெற்றோர் குமாரிடம் "இவருக்கு என்ன சார் பிரச்சினை?"என்றதும் குமார் அவர்களிடம் "சாருக்கு உங்க அபர்ணா மாதிரி கயல்ன்னு ஒரு பொண்ணு இருக்கா.சரியான அப்பா செல்லம்.ரோம்ப அழகான குழந்தை .ஆனா அந்த சந்தோசம் ரோம்ப நாள் நீடிக்கல.

கயலுக்கு மூளை புற்றுநோய் அதுவும் கடைசி ஸ்டேஜ்.நீங்க ஸ்டேஷன் வர்றதுக்கு முன்னாடி தான் கயலுக்கு உடல்நிலை மோசமா இருக்குனு அவரு மனைவி போன் பண்ணியிருந் தாங்க.

அவரு தன் குழந்தைய பத்தி நினைக்காம உங்க குழந்தைய கண்டு புடிக்க வந்தாரு."பேசி முடிப்பதற்குள் குமாரின் கண்கள்கலங்கின.

திவாகர் ஆஸ்பத்திரி செல்வதற்கும் கயலின் உடல் வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது .மகளின் உடல் அருகே சிலையாய் நின்றார் .

அப்போது திவாகரின் மனைவி காவ்யா திவாகரை கட்டி அணைத்து"ஏங்க வரல?அவ கடைசி மூச்சு வரை அப்பா அப்பா தான்ங்க சொன்னா.நம்ம செல்லத்த கடைசி நிமிஷம் வரை தவிக்க விட்டுட்டீங்களே?"என்று அழுது அவரின் காக்கி சட்டையை தனது கண்ணீரால் ஈரம் ஆக்கினார்.

திவாகர் தனது மனைவியின் முகம் உயர்த்தி"என் கயல வழியனுப்பி வைக்குறத விட ஒரு குழந்தைய உயிரோட மீட்டு கொடுக்க போயிட்டேன்.என் பொண்ணுக்கு நான் ஒரு நல்ல அப்பாவான்னு தெரியலம்மா ஆனா நான் ஒரு நல்ல போலிஸ் .என் பொண்ணும் அத தான் விரும்புவா எனக்கு தெரியும்.

இந்த காக்கிக்கு இன்னோரு பெருமை இருக்குடா அது தியாகம் "என்றதும் காவ்யா தன் கணவனின் காக்கி உடையை மெதுவாக தடவி பார்த்தாள்.

இந்த உடைக்கு பின்னால் உடைந்துபோன இதயம் இருப்பது அவளுக்கு மட்டுமே தெரியும் . [நம் பார்வையில் நமக்கு காட்டும் காவல் துறைக்கு இன்னோர் முகம் உண்டு அதில் தியாகத்தின் ஈரம் அதிகம்.






 1984, மருத்துவக் கல்லூரியில் நுழைந்து சில மாதங்களே இருக்கும். இடி போல் வந்தது அந்த GO.

எல்லா வெளி நாட்டு மாணவர்களின் கட்டணம் மாதம் 2000 ரூபாயாக கட்ட வேண்டும்.

மருத்துவ கனவு நொறுங்கிய உணர்வு.


சோத்துக்கே வழியில்லை இதில...

DME அலுவலகம் போல பல இடங்கள் ஏறி இறங்கியும் எந்த பயனும் இல்லை.

சரி மூட்டையைக் கட்டிக்கிட்டு வேற ஏதாவது படிக்கலாம் என்று நாயர் கடைல சிங்கிள் டீ கிளாசோட யோசனை.

அப்போ ஒரு சீனியர் வேடிக்கையா ஒன்று சொன்னார்.

கோட்டையில போய் CM கிட்ட ஒரு மனு குடுத்து பாருங்களேன்.

சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

இருந்தாலும் கடைசி அஸ்திரமாக கோட்டைக்கு போனா என்ன காசா பணமா.

வந்தா மலை போனா மயி...

ஒரு ஆறு ஏழு பேர் சேர்ந்து சென்னைல இருந்த ஒரு இலங்கைப் பெரியவரை சந்தித்தோம். அவரும் அழகா ஒரு மனு டைப் பண்ணி கொடுத்தார்.

அடுத்த நாள் காலையில் கோட்டை. CM மனு வாங்கும் இடம். கூட்டத்தோடு நாமும்.

CM வரவில்லை ஆனால் யாரோ உதவியாளர் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

கொண்டு வந்த மனுவை கொடுத்து விட்டு அந்த வளாகத்தின் உள்ள டீக்கடையில் ஆளுக்கொரு டீ சொல்லி விட்டு சும்மா பேசிக் கொண்டிருந்தோம்.

ஒரு மணிநேரம் ஓடியிருக்கும். ஒரு போலீஸ்காரரும் இன்னொருவரும் யாரையோ தேடி வந்து கொண்டிருந்தார்கள்.

இங்க மெடிக்கல் காலேஜ் சிலோன் பசங்க யாருப்பா. ஆகா நம்மைத்தான் தேடுகிறார்கள். டீ கிளாசை வைத்து விட்டு அவர்கள் பின்னால் ஒரே ஓட்டம். முதலில் ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று எல்லோருடைய பெயர்களையும் எழுதி வாங்கிக் கொண்டார்கள். அப்புறம் இன்னொரு அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

ஒன்றும் புரியவில்லை.

சில நிமிடங்களில் அந்த அறையிலிருந்து கரை வேட்டி கட்டிய சிலர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போ ஒருவர் தம்பிகளா உள்ள வாங்க என்று அழைத்து பின்னால் கதவை சாத்தினார்.

அங்கு நாம் கண்டது,

ஒரு தடவை என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

ஆமாம். பல திரைகளில் பார்த்து, சிறு வயது முதலு நம் மனதில் ஒரு பிரம்மாண்டமாக குடிகொண்ட நாயகன் மக்கள் திலகம் MGR அங்கே அமர்ந்திருந்தார்.

சுற்றியிருந்த அதிகாரிகள் ஏதோ உரையாட அவர் தலை அசைத்துக் கொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்தவுடன்

அவரின் அந்த அக் மார்க் புன் சிரிப்பு. சாப்பிட்டார்களா என்று சைகையாலே கேள்வி.

அதன் பின்னால் நல்ல படியாக போய் வாருங்கள் என்ற தொனியில் இன்னொரு சைகை. எல்லாமே மொத்தம் ஒரு ஐந்து நிமிடங்கள் இருக்கும்.

வெளியே வந்த நமக்கோ கனவுலகில் இருந்து மீண்ட நிலை.

எண்ணி ஒரு மாதம்.

GO வருகிறது.

இலங்கை மாணவர்கள் செமஸ்டருக்கு முந்நூறு ருபா செலுத்தினால் போதும்.

அந்த உன்னதமான பெரிய மனிதரை நினைப்பதா அல்லது வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தை நினைப்பதா ?

நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு

பகை வந்த போது துணை ஒன்று உண்டு

இருள் வந்த போது விளக்கொன்று உண்டு

எதிர்காலம் ஒன்று எல்லோருக்கும் உண்டு 



ஒண்ணரை பக்க நாளேடு

94 வயது முதியவர் ஒருவர் வாடகை வீட்டில் இருந்து வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளரால் வெளியேற்றப்பட்டார். பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், ஒரு பிளாஸ்டிக் வாளி மற்றும் ஒரு குவளை போன்றவற்றைத் தவிர வேறு எந்தப் பொருட்களும் அந்த முதியவரிடம் இல்லை. வாடகையைச் செலுத்த சிறிது நேரம் தருமாறு உரிமையாளரிடம் முதியவர் கோரினார். அக்கம்பக்கத்தினரும் அந்த முதியவரைப் பார்த்து இரக்கப்பட்டு, வீட்டு உரிமையாளரை சமாதானப்படுத்தி, வாடகை செலுத்துவதற்கு அவருக்கு சிறிது கால அவகாசம் வழங்கினர். வீட்டு உரிமையாளர் தயக்கத்துடன் வாடகை செலுத்த சிறிது கால அவகாசம் கொடுத்தார்.

முதியவர் தனது பொருட்களை உள்ளே எடுத்தார்.

அவ்வழியாகச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் நின்று முழுக்காட்சியையும் பார்த்தார். இந்த விஷயத்தை தன் நாளிதழில் வெளியிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தார். "பணத்திற்காக வாடகை வீட்டிலிருந்து முதியவரை வெளியேற்றிய கொடூரமான வீட்டு உரிமையாளர்" என்ற தலைப்பைக்கூட அவர் நினைத்தார். அப்போது பழைய குத்தகைதாரரின் சில படங்களை எடுத்ததுடன், வாடகை வீட்டின் சில படங்களையும் எடுத்தார்.

பத்திரிகையாளர் சென்று தனது பத்திரிகை உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அச்சக உரிமையாளர் படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த முதியவரைத் தெரியுமா என்று பத்திரிகையாளரிடம் கேட்டார். பத்திரிகையாளர் இல்லை என்றார்.

மறுநாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் பெரிய செய்தி வந்தது. "இந்தியாவின் முன்னாள் பிரதமர் குல்சாரிலால் நந்தா, துன்பகரமான வாழ்க்கையை நடத்துகிறார்" என்பதுதான் தலைப்பு. முன்னாள் பிரதமர் எப்படி வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் போனார், எப்படி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்று அந்த செய்தியில் மேலும் எழுதப்பட்டிருந்தது. அதேசமயம், இரண்டு முறை முன்னாள் பிரதமராக இருந்து, நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்தவருக்கு, சொந்த வீடு கூட இல்லை.

உண்மையில் குல்சாரிலால் நந்தாவுக்கு ரூ. 500/- மாத உதவித்தொகை கிடைத்தது. ஆனால், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உதவித் தொகைக்காக தாம் போராடவில்லை என்று கூறி இந்தப் பணத்தை நிராகரித்திருந்தார். பின்னர் நண்பர்கள் அவருக்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். இந்த பணத்தை வைத்து வாடகைக்கு பணம் கொடுத்து வாழ்ந்து வந்தார்.

மறுநாள் தற்போதைய பிரதமர் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் வாகனங்களுடன் அவர்களது வீடுகளுக்கு அனுப்பினார். பல விஐபி வாகனங்களின் கூட்டத்தைக் கண்டு வீட்டு உரிமையாளர் திகைத்துப் போனார். அப்போதுதான் அவருடைய வீட்டில் குடியிருப்பவர் திரு.குல்சாரிலால் நந்தா இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்பது அவருக்குத் தெரியவந்தது. குல்சாரிலால் நந்தாவிடம் தன் தவறான நடத்தைக்காக வீட்டுக்காரர் உடனடியாக அவரது காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.

அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் குல்சாரிலால் நந்தாவிடம் அரசு தங்குமிடம் மற்றும் இதர வசதிகளை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த முதுமையில் இப்படிப்பட்ட வசதிகளால் என்ன பயன் என்று திரு.குல்சாரிலால் நந்தா கூறியதை ஏற்கவில்லை. கடைசி மூச்சு வரை ஒரு சாதாரண குடிமகனைப் போல உண்மையான காந்தியவாதியாக வாழ்ந்தார். 1997 ஆம் ஆண்டு, அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

இப்படிப்பட்ட உன்னதமனவர்களின தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது.

துப்பறியும் சாம்பு 

நீங்கள் சிறுவயதில் துப்பறியும் சாம்பு படித்திருக்கிறீர்களா? குழந்தைப் பருவத்தில் துப்பறியும் சாம்பு படிக்காதவர்கள் உண்டா?

ஹாலிவுட்டில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்றால், நமக்கு உடனேசார்லி சாப்ளின்தான் நினைவுக்கு வருவார். அதே மாதிரி, தமிழில்நகைச்சுவைஎன்றதுமே சட்டென்று நம் நினைவுக்கு வரும் கதாபாத்திரம்துப்பறியும் சாம்பு’.

தமிழர் நெஞ்சங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்தச் சிரஞ்சீவிக் கதாபாத்திரத்தை உருவாக்கிய பிரம்மா, ‘தேவன்என்கிற ஆர்.மகாதேவன்.

அந்த துப்பறியும் சாம்பு எழுதியவர் தேவன் அல்லது ஆர். மகாதேவன் ( செப்டம்பர் 8 , 1913 – மே 5 , 1957 ) என்ற பிரபல எழுத்தாளர்.

பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.. பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார்.

23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார்.

துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு; இது சின்னத் திரையில் தொடராக வந்திருக்கிறது.

கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன.

மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் சின்னத்திரையிலும் வழங்கப் பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ஜஸ்டிஸ் ஜகந்நாதன். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

50 களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.

துப்பறியும் சாம்பு உட்பட தேவன் எழுதிய அத்தனைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் நகைச்சுவை தெறிக்கும். ‘ராஜத்தின் மனோரதம்’ ‘மல்லாரி ராவ் கதைகள்போன்ற நகைச்சுவைக் கதைகளையும், ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘லக்ஷ்மி கடாக்ஷம்போன்ற அற்புதமான குடும்ப நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

பொதுவாகவே, துயரமான, துக்கமான நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு வாசகர்களுக்குப் படைப்பது தேவனின் பாணி. ‘ஸ்ரீமான் சுதர்சனம்நாவல் ஓர் உதாரணம்.

எழுத்தில் பல உத்திகளைப் புகுத்தியவர் தேவன். தொடர்கதை அத்தியாயங்கள் விகடனில் ஏழெட்டுப் பக்கங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நறுக்கென்று ஒரே பக்கத்தில்மாலதிஎனும் சஸ்பென்ஸ் தொடர்கதையை எழுதினார் தேவன்.

தேவன், எழுத்துலகில் மட்டும் ஜாம்பவான் அல்ல; பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர், பயணக் கட்டுரையாளர், நாடக வசனகர்த்தா எனப் பல முகங்கள் கொண்டவர்.

தமிழ் எழுத்துலகத்துக்குப் பெரிய பங்களிப்பைச் செய்து, பெருமை சேர்த்தவர். தேவன் எழுதிய இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றிய கட்டுரைகள் அனைவரும் படிக்க வேண்டியவை.

தமிழில் பயண இலக்கியம் பற்றி ஆய்வு செய்ய நினைக்கும் எம். அல்லது எம்.பில் மானவர்கள் தேவனின் பயண நூலை ஆய்வு செய்யலாம்.

1930களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியெல்லாம் நேரடியாகக் கண்டு, அங்குள்ள தமிழ்ச் சங்கங்களைப் பார்வையிட்டு, தமிழறிஞர்களைப் பார்த்துப் பேசி, தமிழர்களின் நிலையை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியவர் தேவன்.

ஆனந்த விகடனில் தேவனின் முக்கியப் பங்களிப்புதென்னாட்டுக் கோவில்கள் பற்றி அவர் எழுதியதுதான். தென்னாட்டுச் செல்வங்கள்என்ற பெயரில் இதனை அவர் எழுதினார் என்பது பலருக்குத் தெரியாது.

1948ஆம் ஆண்டில், விகடனில் முழு நேர ஓவியராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன் என்னும்சில்பியைக் கொண்டு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் தெய்வத் திருவுருவங்களையும் அப்படியே சித்திரமாக வரையச் செய்து, வெளியிட்டார்.

தஞ்சை, தாராசுரம், திரிபுவனம், ஸ்ரீரங்கம், பேரூர் என ஏறத்தாழ, தமிழ்நாட்டில் சிற்ப எழில் கொஞ்சும் எல்லாக் கோயில்களையுமேதென்னாட்டுச் செல்வங்களில் காணலாம். ஓவியர் சில்பியின் திறமை பெரிதும் பேசப்பட்டது. 1957 மே 5-ம் தேதி, தமது 44-வது வயதில் தேவன் மறைந்தார்.

 




 

சங்கிலி முருகன்

மதுரையிலேருந்து நாடகம் போடணும், சினிமாவில் நடிக்கணும் என்று சென்னைக்கு வந்துவிட்டேன். பாலமுருகன் குழுவில் நடித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பெல்லாம் வரவில்லை. அப்போது என் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், உனக்கு 40 வயசுக்குப் பிறகுதான் யோகம் இருக்கு. அப்பதான் நடிகரா வெளியே தெரிவே'ன்னு சொன்னார். அப்போ எனக்கு 19 வயது. அப்பல்லாம், நாடகம் போடுவதற்கென்றால், கொஞ்சமாவது பிரபலமான நடிகர் நடிக்க வேண்டும்.

நான் ..கே.தேவரிடம் சென்று நடித்து உதவும்படி கேட்டேன்


அவரும் சரியென்று சம்மதித்தார். திருச்சி பொருட்காட்சியில் இரண்டு நாடகங்கள் போடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி, அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அறைக்கு வந்து உட்காரக்கூட இல்லை. அப்போது இரண்டு பேர் வந்தார்கள்.

அவர்களை பார்க்கும் பொழுது வித்தியாசமான தோற்றம் மட்டும் அல்ல. கலை தாகம் கொண்டு ஏதோ வாய்ப்பு கேட்க போகிறார்கள், என்று நினைத்தேன், அது இசை சார்ந்த வாய்ப்பு என்று பிறகு தான் தெரிந்தது. யாருப்பா என்று கேட்டேன். பாவலர் வரதராஜன் இருக்கார்ல, என்றார்கள். ஆமாம், வரதராஜன், நமக்கு நல்லாத் தெரியுமே, என்றேன்.

அவரோட தம்பிங்க நாங்க. நான் பாஸ்கரன். இவன் ராஜா என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். என்ன விஷயம், என்றேன். நாடகத்துக்கு மியூஸிக் போடணும்ங்கறதுதான் ஆசை என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இப்பதான் அட்வான்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம். சரியான நேரத்துக்கு வந்திருக்காங்களேன்னு யோசிச்சேன். அட்வான்ஸ் வாங்கினதுக்கு முதல் நாளோ, மறுநாளோ வந்திருந்தாக் கூட தெரியாது. வாங்கின கையோட, இவங்களும் வந்திருக்காங்களேனு பிரமிப்பா இருந்துச்சு. கடவுள் இப்படித்தான் நல்லவங்களை நமக்கு அனுப்பி வைச்சிருக்கார் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆர்மோனியமும் தபேலாவும் வைச்சிருந்தாங்க

நான் உடனே, கமலா என்பவரிடம் இந்தப் பசங்க எப்படி வாசிக்கிறாங்கன்னு கேட்டு சொல்லுங்கன்னு அனுப்பிவைச்சேன். அவங்களும் போய் வாசிச்சாங்க. அப்புறம் கமலா, நல்லா வாசிக்கிறாங்க. பிரமாதமா வருவாங்கன்னு தோணுது. தங்குறதுக்கு கூட இடமில்லையாம். நம்ம வீடு ஒண்ணு சும்மாதானே இருக்கு. அங்கே தங்கிக்கச் சொல்லிருக்கேன்' என்று கமலா தெரிவித்தார்.

அப்புறம் வரிசையா நிறைய நாடகங்கள். ராஜாவோட இசை. விருதுநகர் பொருட்காட்சியில் நாடகம் போடும் போது, அண்ணே, புதுசா ஒண்ணு முயற்சி செஞ்சிருக்கோம். கேளுங்கண்ணே என்றார்கள். ..கே.தேவர், நான், இன்னும் எல்லாரும் உக்கார்ந்து கேட்டோம். கேட்டு முடிச்சதும் இதான்யா இப்போ லேட்டஸ்ட். பசங்க பின்றாங்கய்யா என்று ..கே.தேவர் சொன்னாரு.

பின்னாடி இளையராஜா பத்ரகாளி மாதிரி படங்களுக்கு பாட்டு போட்டப்ப, தம்பி, நம்ம நாடகத்துக்கு அப்பவே இதைப் போட்டுருக்கீங்க, என்று சொல்லுவேன். ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி. அப்புறம் பல வருஷங்கள் கழிச்சு, சொந்தமா படம் எடுக்க முடிவு செய்து, தட்டு நிறைய கல்கண்டும் பணமுமா எடுத்துக்கிட்டுப் போனேன்

என்னண்ணே. படம் தயாரிக்கிறேன்னு இறங்கியிருக்கீங்க. எனக்கு பயமா இருக்குண்ணே என்றார் இளையராஜா. ஜெயிச்சிருவேன் தம்பி, நம்பிக்கை இருக்கு என்று சொன்னேன். சரிண்ணே, என்று சொன்ன இளையராஜா, தட்டில் இருந்த கல்கண்டை மட்டும் எடுத்துக்கொண்டார். பணத்தைத் தொடவே இல்லை. தம்பி, சம்பளத்தை எடுத்துக்கோங்க என்றேன்.

சம்பளம்லாம் வேணாம்ணே. நீங்க நல்லா இருக்கணும். நல்லா வரணும். நான் பண்ணித்தரேன். ஆனா சம்பளம் எல்லாம் வேணாம்ணே என்று திரும்ப திரும்ப சொல்விட்டு, பணம் வாங்க மறுத்துவிட்டார். நான் நெகிழ்ந்து போனேன். என்னுடைய முதல் இரண்டு படங்களுக்கும் இளையராஜா சம்பளமே வாங்காமல் தான் இசையமைத்துக் கொடுத்தார். இதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது, என்று கூறியிருக்கிறார் சங்கில் முருகன்.

இப்போ தான் புரியுது, இளையராஜா எப்படி இசை ஞானி ஆனாருனு. நல்லதை செய்தல் நல்லதே நடக்கும். நடந்தே தீரும் என்பதுக்கு இளையராஜா ஒரு எடுத்துக்காட்டு. விடா முயற்சி மட்டுமே விஸ்வரூப வெற்றியை தரும் என்பதுக்கு இத்தகைய பதிவுகள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு பெரிதும் உதவும்.

 

தகுதிக்கான பதக்கம்

***

எங்கள் வீட்டில் ஒரு பெரிய மரப்பெட்டி இருந்தது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அதனுள்ளிருந்த காக்கி சீருடையை எடுத்து அடிக்கடி அணிந்து பார்ப்பேன். அதனோடு தொப்பி விசில் எல்லாம் இருந்ததனால் அதை போலீஸ் சீருடை என்று நினைத்திருந்தேன். அப்பாவிடம் கேட்டபோது அது அவரின் சாரணர் சீருடை என்று தெரிந்தது. அப்பா சாரண ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். நாமும் இதுபோல் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சீருடை அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.


பள்ளிப் பருவத்தில் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. கடலூர் பேராயர் பேதுரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1988 ஆம் ஆண்டு அடிப்படை சாரணாசிரியர் பயிற்சியினை வழங்கியபோது தான் எனது எண்ணம் ஈடேறியது. ஆசிரியராக பணியில் சேர்ந்தது ஒரு தொடக்கப்பள்ளி என்பதனால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலவில்லை. 1999 ஆம் ஆண்டு கார்குடல் நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றதும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து ஆளுனரால் வழங்கப்படும் ராஜ்யபுரஸ்கார் விருது பெறச் செய்தேன். அங்கு பணியாற்றிய போதுதான் முன்னோடி சாரணாசிரியர் பயிற்சியும் பெற்றேன்.

தற்போது பணியாற்றும் மன்னம்பாடி பள்ளியில் மாணவர்களிடையே இயக்க ஈடுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு சேவைகளைச் செய்தோம். கடந்த ஆண்டில்தான் மத்தியப் பிரதேச மாநிலம் பச்மாரியில் அமைந்துள்ள தேசிய பயிற்சி மையத்தில் இமய வனக்கலை பயிற்சி பெற்றேன்

இந்த நெடிய பயணத்திற்கான ஒரு அங்கீகாரமாக நேற்று தகுதிக்கான பதக்கம் கிடைத்தது. மெடல் ஆஃப் மெரிட் எனும் சான்றிதழையும் பதக்கத்தையும் சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவரும் கல்வி அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் வழங்கினார். அவரும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் அனைவரும் சீருடையில் வந்து அசத்தினார்கள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் தன் சீருடையை தானே சலவை செய்து அணிந்து வந்ததாகக் கூறினார்.


எங்களோடு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களும் விருது பெற்றனர். அவர்களிலும் ஒரு சிலர் சீருடையில் வந்திருந்தனர். வீட்டுக்கு ஒரு சாரணர் வேண்டும் என்று விரும்பினார் மகாத்மா அந்த விருப்பத்தை மூன்று தலைமுறையாக நிறைவேற்றியுள்ளோம். என் மகன் இளவேனிலும் ராஜ்ய புரஸ்கார் சாரணர். அப்பா இருந்திருந்தால் அப்படி மகிழ்ந்திருப்பார்.



காகம் விழுந்து கரைந்தது!

     யாராவது கதை சொல்ல வேண்டும்நான் ஐம்புலன்களையும் ஒன்றுகூட்டி,  ஏழுலகங்களையும் மறந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்அதிலும் நம்பமுடியாத உண்மைக்கதைகளை சம்பந்தப்பட்டவர்களது வாயாலேயே கேட்பதென்றால் அது தரும் பேரின்பம் விபரிக்கமுடியாததுஅது ஒரு போதை நிலை!   

     எழுபதுகளின் ஆரம்பகாலம்அது!  எந்நேரமும் சின்னச் சின்னக் கனவுகளில் மிதந்தபடியே திரியும் பதின்ம வயதைத் தொடுகிற பருவம்.  எல்லாப் புதினங்களையும் அறிந்து விட வேண்டுமென்கிற அங்கலாய்ப்புடன் அலைந்தபடியேயிருக்கும் மனசுஎல்லாவற்றையும் இருத்தி வைத்துப் போதிக்கும் காலம்;!

      கதை கேட்;பதற்காகவே நான்பெத்தம்மா,  பாட்டா வீட்டிற்கு எப்பவும் ஓடியோடிப்போவேன்அடைமழை என்றாலும்,  அம்மா தடுத்தாலும் ஏதாவதொரு அலுவலை சாட்டிக்கொண்டு மழைவெள்ளத்திற்குள்ளால் சட்டையை தூக்கிப்பிடித்தபடி,  கால்களால் நீரை எத்தியெத்தி அளைந்தபடி,  அவர்களின் வீட்டிற்கு எப்படியோ போய்ச்சேர்ந்து விடுவேன்.

      பெத்தம்மாவும் பாட்டாவும் வசிக்கும் வீட்டிற்கு வெள்ளவாய்க்கால் வழியாகத்தான் போகவேண்டும்மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் ஊராவீட்டுக் குப்பைகள்,  பிசுங்கான்கள்,  கற்கள்,  உடைந்த மரத்துண்டுகள் எல்லாவற்றையும் உருட்டியெடுத்துக்கொண்டு வருவது வழமைவெறும்காலோடு வெள்ளவாய்க்கால் வழியாக நடக்கும் போது அவை காலைப் பதம் பார்த்து,  மாதக்கணக்காக,  பின் வருடக்கணக்காக காலுக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு திரிவது வேறு கதை.

       அவர்கள் தமக்காக கல்வீடொன்றைக் கட்டி வைத்துவிட்டு,  அங்கு சில கட்டுவேலைகள் முற்றுப்பெறாததால் அந்த வீட்டிலிருந்து சில யார்கள் தள்ளியிருக்கும் அவர்களது சற்சதுரமான ஒரு சிறிய காணிக்குள் ஒரு அழகான குடிசைவீடு கட்டி,  அங்கு தான் அப்போது வசித்து வந்தார்கள்.  அந்தக் குடிசை வீட்டைச்சுற்றி பாட்டா அழகாக,  கச்சிதமாக,  கதியால்கள் நாட்டி,  பனம் மட்டைகளால் வரிச்சுக்கட்டிஅரைவாசி உயரத்திற்குக் கிடுகு கட்டி எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பார்எப்பவும் தன் கையாலேயே விதம் விதமாக படலை செய்து முற்றத்து வாசலுக்கு பொருத்தி விட்டிருப்பார்வீட்டு முற்றத்திலிருந்து ஒழுங்கைத் தெருவிற்குள் இறங்குவதற்கு ஒரு நீளமான பளிங்குக் கல்லும் சில கொங்கிறீற் கற்களும் சேர்த்து படிகளாக பதித்து வைத்திருந்தார்.

      நான் பாட்டா வீட்டிற்குப் போனால் முதலில் முற்றமெல்லாம் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து வேவு பார்த்துவிட்டுத்தான் உள்ளுக்குள் நுழைவேன்வீட்டைச் சுற்றி வகைவகையான முருங்கை மரங்கள்,  செவ்வரத்தம்பூ மரங்கள்,  பொன்னலரி மரம்,  வேலி நீளத்திற்கும் கள்ளி மரங்கள்,  சண்டி மரம் என முற்றம் பசுமையில் நிறைந்திருக்கும்.

      முருங்கை மரங்கள் ஒவ்வொன்றும் குலைகுலையாகக் காய்க்கும்.  ஒவ்வொரு மரத்தின் காய்களும் ஒவ்வொரு விதமான சுவைபெத்தம்மா அவற்றில் சமைக்கும் கறிகளை நினைத்தால் இப்பவும் எனக்கு வாய் ஊறும்

      ஒரு மரத்தின் காய்கள் நல்ல கழிப்பிடிப்பாகசதைப்பிடிப்பாக குட்டையான காய்களாக இருக்கும்இன்னொரு மரத்தின் காய்களை நறுக்கும் போது அவற்றின் சாறு சீறிப்பாயும்இன்னொரு மரத்தின் காய்களில் விதைகளே இருக்காது சதை மட்டும் தான்இன்னொன்று தோல் மெலிதாக இருக்கும்இன்னொன்று தோல் தடிப்பாகவும்,  மெல்லிய நீளமான காய்களாகவுமிருக்கும்.

      பெத்தம்மா ஒவ்வொரு வகைக் காய்களுக்குமேற்ப அவற்றை சுவைபடச் சமைப்பாசதைப்பிடிப்பான காய்களில்  சதையை வழித்தெடுத்துசின்ன றாள்,  வெங்காயம்பச்சைமிளகாய்மஞ்சள் யாவும் சேர்த்து ஒரு வறை செய்வாஅதன் மணமும் சுவையும் ஒரு மாதத்திற்கு உதடுகளில் ஒட்டிக்கிடக்கும்அவ முருங்கைக் காய்களில் சமைக்கும்அரைத்த சரக்குக்கறி உலகத்தில் எங்குமே எப்போதும் கிடைக்காதது.  பெத்தம்மா செய்யும் சிவப்புப் பச்சையரிசிப் பாற்சோற்றுடன் அந்தக் கறியை சேர்த்துச் சாப்பிட்டவர்கள்  காலமெல்லாம் அவவின் காலடியில் விழுந்து கிடக்க ஆசைப்படுவார்கள்.

      அவ எங்கள் வீட்டுக்கு வந்துஅம்மிக்கல்லில்  கொண்டுவந்த  சரக்குப்பொருட்களை சேர்த்து அரைக்கும் போதே எனக்கு விளங்கிவிடும்,  அன்றைக்கு பெத்தம்மாவின் வீட்டில் மீன் அல்லது முருங்கைக்காய் சரக்குக்கறி தான் என்று

      அம்மியில் அவற்றை அரைத்துக்கொண்டிருக்கும் போதே வாசனை ஊரெல்லாம் பரவத்தொடங்கிவிடும்அரைத்த கூட்டை அம்மியிலிருந்து வழித்தள்ளியெடுத்து ஒரு வெள்ளிக் கிண்ணத்திற்குள் போட்டு எடுத்துக்கொண்டு போகும் போது நானும் அவவின் பின்னால் இழுபட்டுக்கொண்டு போய்விடுவேன்.

       அப்படியொரு நாள் போன பொழுது தான் பெத்தம்மா அவித்த சிவப்பரிசி மா இடியப்பமும்அம்மியில் அரைத்து வைத்த மீன் குழம்பும்,  தக்காளிச் சொதியும்நல்லெண்ணெய்யில் வறுத்த முட்டைப்பொரியலும் சேர்த்துக் குழைத்து,  பாட்டா எனக்கு கவளம் கவளமாக ஊட்டி விட்டுக்கொண்டிருந்தார்பெத்தம்மா சமைத்த உணவை,  பாட்டா பக்குவமாகப் பிசைந்து,  குழைத்துஉருட்டியுருட்டி ஊட்டி விடும் போது கிடைக்கும் சுவை இருக்கிறதே,  அது வார்த்தைகளில் அடங்காததுஜென்மத்திற்கும் என்னோடு ஒட்டிக்கிடப்பது!

       வயிறு நிறையச் சாப்பிட்ட பின்னர் கறுத்தக்கொழும்பு மாம்பழமொன்றை எடுத்து,  நிதானமாக தோல் சீவி,  ஒரு துண்டை பாட்டா என் கையில் வைப்பார்அடுத்த துண்டை தன் வாயில் வைப்பார்மறு துண்டை பெத்தம்மாவின் கையில் வைப்பார்அந்தத் தித்திப்புடனேயே விறாந்தாவிலிருக்கும் நீளமான வாங்கில் தனது சால்வையை விரித்துவிட்டு ஒரு தலையணையைப் போட்டுஅப்படியே சரிந்துவிடுவார்பெத்தம்மா வெறும்சீமெந்துத் தரையில் ஒரு சீலையைப் போட்டுவிட்டு அதன் மேல் சரிந்து விடுவா.

       இருவரும் நித்திரை கொள்ள மாட்டார்கள் சரிந்து கிடந்தபடி ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள்அந்தச் சின்னஞ்சிறு அழகான குடிசை வீட்டிற்கு முன்னாலிருக்கும் ஒழுங்கையின் மறுபுறம் நேரெதிரே,  நெடுநெடுவென உயர்ந்து நிற்கும் பனைமரங்கள்அதனால் பனங்காற்று எப்பவும் வேலிக்கு மேலால்  வந்துஅவர்களின் வீட்டிற்குள் உலாவியபடியே இருக்கும்பனம்பூக்களும் அவ்வப்போது அவர்களின் வீட்டுமுற்றத்தில் பறந்துவந்து விழுவதுண்டுபனைமரங்கள் வீட்டிற்கு எதிரே இருப்பதால் பெத்தம்மா அடிக்கடி பனங்காய் பணியாரம் சுடுவதும்,  பாணிப்பனாட்டு போடுவதும்,  அவற்றை சுவைப்பதற்காக நான் தவம் கிடப்பதும் இன்னுமொரு கதை.

       அப்படியொரு நாள் மதிய உணவு அருந்திவிட்டு பாட்டாவும் பெத்தம்மாவும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது தான்,  காகம் ஒன்று வந்து அவர்களது முருங்கை மரத்தில் குந்தியிருந்து அடித்தொண்டையால் கரைந்து கொண்டிருந்தது.

      "தம்பி குமாரசாமி கொழும்பிலையிருந்து வரப்போறான் போலையிருக்குஎன்று பெத்தம்மா சொன்னா.

      "எப்பிடித் தெரியும்?" என்று கேட்டேன்.

       காகம் கரைவதால் நிகழும் சம்பவங்களும்,  அதனால் வாழ்வில் அவ தரிசித்த சில உண்மைச் சம்பவங்களுமென பல கதைகளை அப்போது தான்,  பெத்தம்மா எனக்குச் சொல்லத் தொடங்கினாகாகங்கள் திடீரென்று வீட்டு முற்றத்தில் விழுந்து புரண்டு சண்டைபிடிப்பது,  அலறலுடன் கரைவது,  ஒருவர் வீட்டைவிட்டுப் புறப்படும் போது அவரின் பின்னால் சென்று கூட்டிப்பெருக்கித் தள்ளுவது என செய்யக்கூடாத,  நிகழக்கூடாத,  பலவிடயங்கள் பற்றி அதன் காரணகாரியங்களுடனும் அனுபவங்களுடனும் கதைகதையாகச் சொல்லிக்கொண்டிருந்தா

      வழமையாகவே இப்படியான கதைகளை அவ சொல்லும் போது நான் வாயைப் பிளந்தபடி அவற்றை ரசித்துக் கேட்டுக்கொண்டே ஒரு தருணத்தில் தூங்கிவிடுவேன்அன்றைக்கும் அது போலவே தான்.  ஆனால் அவ சொல்லும் அத்தனை கதைகளும் என் நெஞ்சுக்கூட்டிற்குள் அச்சடித்தது போல் அப்படியே பதிந்து போய்விடும்.

      'காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக இவை இருக்குமோஎன்றும் நான் எனக்குள் யோசிப்பதுண்டுஆனால் நினைவுகளுக்கும்உணர்வலைகளுக்கும்சம்பவங்களிற்கும்,  இந்த பிரபஞ்சத்திற்கும் இருக்கும் தொடர்புகள் போல் அந்த மாயவலைக்குள் இருக்கும் பிரித்தறிய முடியாத ஒரு பாகம் இதுவாக இருக்கலாம் என எண்ணத் தோன்றிய ஒரு சம்பவம் பின்னாளில் நடந்தேறியது!

       இதே காலத்தில் தான் சண்முகக்குஞ்சையா எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார்அவர் என் அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பிஎன் இளைய அப்பாச்சியின் மகன்அவர் எங்கள் மேல் சொரியும் அன்பும் பாசமும் அளவில்லாததுஅவர் அப்போது பருத்தித்துறை மின்சாரசபையில் ஊழியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

      எப்போதும் நல்லெண்ணெய் தேய்த்து தலைமுடியை படிய வாரி மினுங்க மினுங்க வைத்திருப்பார்அருகில் நின்றால் நல்லெண்ணெய் வாசம் வீசும்வாரிய சீப்பின் ஒழுங்கான கீறல்கள் வரிவரியாகத் தெரியும்நெற்றியில் எப்போதும் ஒரு திருநீற்றுக் குறி இருக்கும்மீசையை எப்போதும் மூக்கிற்குக் கீழ் சிறிய தூரிகை போல் நறுக்கி ஒரேயளவாக வைத்திருப்பார்அவர் நீளக்காற்சட்டை அணிந்ததை நான் வாழ்நாளில் கண்டதில்லைஎப்போதும் தோய்த்து அயர்ன் செய்த அரைக்காற்சட்டை தான் அணிந்திருப்பார்அவர் அதிர்ந்து பேசி ஒருபோதும் நானறியேன்முகம் எப்போதும் ஆழ்ந்த சாந்தத்தில் மூழ்கிக்கிடக்கும்.

       அவர்களின் வீட்டுக்குப் போனால் எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருக்கும் அவரைத்தான் முதலில் முற்றத்தில் காண்பேன்வீட்டைச்சுற்றி அழகாக வேலிகட்டி,  வேலி நீளத்திற்கும் சதுரக்கள்ளிச்செடிகள்,  செவ்வரத்தை மரங்கள்,  விதம்விதமான குறோட்டன் மரங்கள்எல்லாம் வைத்து அவற்றைப் பராமரித்துக் கொண்டிருப்பது அவர் தான்பின்வளவில் மாதுளைஅகத்திமுருங்கை,  விலாட் மா,  தென்னைவிளாத்தி என்று பல்வகை மரங்கள் மதாளித்துச் செழித்துக் கிடப்பதற்கு அவரின் பராமரிப்புத்தான் காரணம்வீட்டில் நிற்கும் நேரங்களில் மரங்களிற்கு பத்தியம் பார்ப்பது அல்லது வேலியை சீர்ப்படுத்துவது அல்லது கதியால்கள் வெட்டி நாட்டுவது அல்லது கிணற்றடியை தேய்த்துக் கழுவுவது அல்லது பெரிய முற்றத்தை கூட்டித் துப்பரவு செய்வது என ஏதாவதொன்றை செய்து கொண்டேயிருக்கும் சண்முகக் குஞ்சையாவைத் தான் நான் எப்போதும் கண்டிருக்கிறேன்.

      அம்மாவுக்கு ஏதாவது வெளியில் செல்ல வேண்டிய வேலையிருந்தால் என்னைத்தான் அநேகமாக அவரின் வீட்டுக்கு அனுப்பி அவரை வரச்சொல்லிவிடுவாஅவர் தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குளித்து,  உடைகள் மாற்றி ‘டாண்’ என்று அம்மாவின் முன்னால் வந்து நிற்பார்.

      எங்கள் வீட்டிற்கு அவர் வந்தால் அநேகமாக எங்கள் எல்லோருக்கும் குளிக்கவார்த்து,  துடைத்து,  உடைகள் மாற்றி,  தலை சீவி அலங்கரித்து விடுவார்.

       வேலி அடைக்க வேண்டிய காலங்களில் நான் உட்புறம் நின்று குத்தூசியில் கயிறு கோர்க்க அவர் வெளிப்புறம் நின்று பாட்டுப் பாடியவாறே கயிறிழுத்து கிடுகுகளைக் கட்டுவார்கட்டும் போது நொடிக்கேள்விகள் கேட்டு பதில் தெரியாமல் என்னை திக்குமுக்காட வைப்பார்பின்னர் சந்தைக்குப் போய்,  அம்மா கொடுத்தனுப்பும் பட்டியலில் இருக்கும் அத்தனை பொருட்களையும் கொள்வனவு செய்து வந்து தருவார்தென்னைகளுக்கு பாத்திகட்டிமண்வாரி நீரோடச் செய்வார்தொட்டியில் நீரிறைத்து நிரப்பி விடுவார்எங்களின் தோய்த்துலர்ந்த உடைகளை அயர்ன் செய்து தருவார்என்ன வேலை செய்யும் போதும் அவரின் முகத்திலிருக்கும் அமைதியும் மெல்லிய புன்னகையும் எப்போதும் கலைந்து போனதை நான் கண்டதில்லை.

       வேலையில் நிதானம்செய்நேர்த்திசெய்வதை மனதார விரும்பி பொறுமையுடன் செய்து முடித்தல்,  எப்போதும் முகமலர்ச்சியுடனேயே இருத்தல்நேர்மைஒழுக்கம்,  பண்பு,  நல்ல பழக்கவழக்கம் என அவரிடம் இருந்த அரிய குணங்கள் அப்போது பெரிதாக எனக்குத் தெரியவில்லைஇப்போது நினைத்தால் புல்லரிக்கிறது.

     அன்றைக்கு நான் வழமை போல் எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தாவை தும்புத்தடியால் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தேன்சீமென்ற் தரைகளில் சிறுதுகள் மண் இருப்பதும் எனக்குப் பிடிக்காதுஅப்படியிருந்தால் நேரகாலம் பார்க்காமல் முதல் வேலையாக அவற்றைக் கூட்டித்தள்ளி விடுவது என் வழக்கம்சில சமயம் மாலைப்பொழுதில் அதனை செய்யும் போது அப்பாச்சி அலறுவதுண்டு.

      'மம்மலுக்குள் தும்புத்தடி தூக்காதேஎன்று கூச்சலிடுவாநானோ எதற்கும் செவிசாய்க்காமல் துள்ளியோடிப்போய் கூட்டித்தள்ளி விடுவேன்.

     ஆனால் அன்றைக்கு நான் கூட்டிப் பெருக்கும் போது அது ஒரு மதிய நேரம்சண்முகக்குஞ்சையா பலசரக்குச் சாமான்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார்போகும் போது "போட்டுவாறன்.." என்று சத்தமாக அவர் சொல்வது எல்லோருக்கும் கேட்டது.

      அவர் பெரியவிறாந்தாவைக் கடந்து,  நடசாலை வாசலைக் கடக்க முனையும் போது பிச்சிமரத்தில் குந்தியிருந்த இரண்டு காகங்கள் திடீரென்று அலறியடித்துக் கொண்டு வந்துபொத்தென்று அவரின் பின்னால் விறாந்தாவின் நடுவில் விழுந்து இறக்கைகளை அடித்துஅலகுகளினால் ஒன்றையொன்று பிராண்டி அடிவயிற்றால் கரைந்து அலறிவிட்டு சடசடவெனப் பறந்து போயின!

   சண்முகக் குஞ்சையா நடந்து சென்றவாறே திரும்பிப் பார்த்துவிட்டு தெருவில் இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்படுவது தெரிந்தது.

    நான் தும்புத்தடியைப் பிடித்தபடி வெலவெலத்துவெருண்டு போய் நின்றிருந்தேன்காகங்கள் விழுந்து புரண்ட இடத்தில் விறாந்தாவில் மண்துகள்கள் பறந்து கிடந்தனமெதுவாகப் போய் அவற்றைக் கூட்டி முற்றத்தில்தள்ளி விட்டேன்.

   அவை விழுந்து புரண்டதும் அலறியதும் என் கண்களையும் செவியையும் விட்டுப் போகாமலிருந்தன.  ஏனோ எனக்கு பெத்தம்மா சொன்ன கதைகள் அச்சமயம் ஞாபகத்தில் வந்து போயின.

   'ஏதோ துர்ச்சம்பவம் நடக்கப் போகிறதோ?' என உள்ளுக்குள் மனம் துணுக்குற்றதுஆனால் நான் யாரிடமும் அதனை சொல்லவில்லைஅந்தக் காட்சியைக் கண்டது இருவர்தான்ஒன்று நான்மற்றது சண்முகக்குஞ்சையாஆனால் காகங்களின் அலறல் ஓசை சமையலறைக்குள் நின்ற அம்மாவுக்கும் கேட்டதாக பின்னர் அம்மா ஒருவித பதைப்போடு கூறினா.

   அதுபற்றி யோசித்தவாறே இருந்த நான் சில மணிநேரங்களின் பின்னர் அவற்றை மறந்து வேறு வேலைகளில் இறங்கி விட்டேன்அன்றைக்கு பின்னேரம் ரியூசன் வகுப்பிற்காக வெளியில் சென்றிருந்த என் மூத்த அண்ணன் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது பதகளித்தவாறே உள்நுழைந்தார்அவரின் முகம் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது.

     "அம்மா...அம்மா.." என்று விறாந்தாவில் நின்றவாறே பதறிப்பதறி அழைத்தார்நான் எதுவும் புரியாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தேன்.

      அம்மா அவரின் குரலில் இருந்த பதற்றம் கண்டு யோசித்தவாறே விறாந்தாவுக்கு அவசரமாக ஓடிவந்தா.

     "சண்முகக்குஞ்சையா லைற் போஸ்ற்றிலை ஏறி வேலை செய்யேக்கை கரண்ட் அடிச்சு... கீழை விழுந்து அப்பிடியே போயிட்டார்..." அண்ணனின் குரல் நடுங்கியது.

     அம்மா "ஐயோ..." என்று அலறிய ஓசை பல வீடுகளிற்குக் கேட்டிருக்கும்அடுத்த கணமே வீட்டு வாசலில் ஊரவர்கள் கூடிவிட்டார்கள்.

      நான் அப்படியே விழி பிதுங்கியவளாய் நின்றிருந்தேன்எனக்கு உதடுகள் நடுங்கியபடியே இருந்தனஇதயம் உள்ளுக்குள் டமார் டமாரென அடிப்பது எனக்கே கேட்பது போலிருந்தது.

     "உலகநாயகிப்பாட்டி வீட்டுச் சந்தியிலை இருக்கிற லைற் போஸ்ற்றிலை ஏறி திருத்த வேலை செய்யேக்கை தான் இது நடந்ததாம்இப்ப எல்லாம் முடிஞ்சுது.." அண்ணன் இப்போது அழத்தொடங்கிவிட்டார்.

      எனக்கு மண்டையெல்லாம் விறைத்துக்கொண்டு வருவது போலிருந்ததுநெஞ்சுக்கூடு நொருங்கிவிடுவது போலிருந்ததுஅழுகை வராமல் கண்களெல்லாம் காய்ந்து போனது போல் இழுத்துக்கொண்டு கிடந்தனஎதையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத பதற்றம் என்னை ஆட்கொண்டு கிடந்தது!

     பிறகென்ன?

     மறுநாள் அவரது வீட்டில் நடந்த மரணச்சடங்கில் அமைதியாக தூங்குவது போலிருந்த அவரின் வலது கையை மெதுவாகப் பற்றித் தூக்கினேன்அது இரும்புக்கனமாக இருந்ததுபெருவிரலின் மேற்புறம் சிறிய வட்டமாக தோலும் சதையும் கருகிச் சுருண்டு போயிருந்தது.

     "அதிலை தான் கரண்ட் அடிச்சதுஅருகில் நின்றிருந்த அவரின் தங்கைஎன் மாமி அழுதவாறே தலையில் அடித்துக் கதறினா.

     அம்மாவும் அப்பாச்சியும் கதறியழும் ஓசை தொடர்ந்து அங்கு கேட்டுக்கொண்டேயிருந்தது.

       காலம் எத்தனையோ சம்பவங்களை தூக்கியெறிந்தபடியும்,  சேர்த்து வைத்தபடியும் தன் கதியில் நகர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறது!  நாங்கள் தான் அடிக்கடி நின்று அதனை திரும்பிப் பார்க்கிறோம்!

      வாழும் காலம்வரை எங்கள் மீது அன்பும் பாசமும் பொழிந்த சண்முகக் குஞ்சையாவை இன்றுவரை  எப்படி என்னால் மறந்து விட முடியாதோ,  அது போல் காகம் விழுந்து கரைந்ததையும்,  கண்டம் வந்து சேர்ந்ததையும்கூட என்னால் என்றைக்கும் மறந்து விட முடிவதில்லை!

    

                                                                                        - சந்திரா இரவீந்திரன்


அலிகான்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வடபழனியில் இவர் எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரராக வந்தபோது, அவ்வளவாக இவரைப் பற்றித் தெரியாது. காலையில் வேலைக்குப் போகும் வேளையில் சந்திக்க நேர்ந்தால் - பரஸ்பரம் ஸலாம் சொல்வோம். புன்னகையித்துக்கொள்வோம். அவ்வளவுதான். கொஞ்ச காலம் சென்ற பிறகு அவர்கள் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர்.

நான் ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறேன் என்று தெரிந்துகொண்ட பிறகு அங்கிருக்கும் சில நண்பர்களைப் பற்றி விசாரிப்பார். ”தெரியுமா அவர்களை?” என்று கேட்டால், ”ஜெயா டிவி காலை மலர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறேன்.” என்பார். அதன் பிறகுதான் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து ஆச்சரியப்பட்டேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கவிஞர் வைரமுத்து, இலங்கை வானொலி புகழ் பி.ஹெச். அப்துல் ஹமீது, நடிகர் சிவகுமார் போன்ற பிரபலங்களெல்லாம் இவரது விசிறிகள்.

இவர் சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷம் தமிழ்த் திரையுலகின் விலைமதிப்பில்லா வைரங்கள்... ஆனால், அவையனைத்தையும் பாதுகாக்க, பொருளாதார வசதியில்லாமல் இருந்த நிலையால், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் அவையனைத்தையும் அரசு ஆவணக் காப்பகத்தில் சேர்க்கக் கோரினார். அவரும் உதவுவதாக அறிவித்திருந்தார். ஆனால், எதிர்பாராதநிலையில் ஜெயலலிதா நோயுற்று மரணமடைந்தார்.

கடந்த ஆண்டு இவரது உடல்நிலையிலும் சரிவு ஏற்பட, சொந்த ஊரான முத்துப்பேட்டைக்குச் சென்றுவிட்டார்.

இன்று அவர் முத்துப்பேட்டையையும் விட்டு முதலோன்பேட்டைக்குள் சென்றுவிட்டார் எனும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.

(இறைவனிடமிருந்தே வந்தோம். இன்னும் அவனிடமே மீளவிருக்கிறோம்.)

அவர் - மெஹ்பூப் அலிகான். இணைத்திருக்கும் வீடியோவில் அவர் குரலில் அவரது சாதனைகள்.

தமிழ்த் திரையுலகில், பாடல்கள் என்று உருவான முதல் பாடல் தொட்டு, தற்காலப் பாடல்கள் வரையிலான லட்சக்கணக்கான பாடல்களை, வெளியான அதே இசைத்தட்டு, காஸெட்டு, சிடி, டிவிடி என அனைத்தையும் அலைந்து திரிந்து சேகரித்து வைத்துள்ளார் அலிகான்.

அவரது பொக்கிஷங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் ஆசை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அரசு ஆவண செய்யவேண்டு மென்பது அவரது மகன்களின் கோரிக்கை.

-ரஃபீக் சுலைமான்.

 

 

1

கவிஞர் மாயவநாதன்......

பெயரைக் கேட்டதும் இந்தப் பெயரில் கவிஞர் ஒருவரா? தெரியாதே, யாரவர்? என்று கூடப் பலருக்கும் கேட்கத் தோன்றும்.

அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் விழிகள் வியப்பினால் விரியக் கூடும் !

1936 ஆம் ஆண்டு இன்றைய தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் மாயவநாதன்.

சினிமாவில் நடிகர், அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர், மேதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததுண்டு.

அப்பட்டியலில் மாயவநாதன் என்ற இந்த ஏழை அப்பாவிக் கவிஞனும் ஒருவன் என்பதுதான் வேதனையான உண்மை.

சிறுவயதிலேயே ஏராளமான திறமைகளைச் சுமந்துகொண்டு சென்னை நோக்கிப் பயணம் செய்த மாயவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தது சந்திரகாந்தா நாடகக் கம்பெனி.

மாயவநாதன் மிகச்சிறந்த காளி பக்தர். மகாகவி காளிதாசன் போல, அன்னை காளிக்கு மட்டுமே தன்னை அடிமைப்படுத்திக் கொண்டவர்.

கரம்பைச் சித்தர், கரூர் சித்தர் போன்ற உயர்ந்தோர் நட்பு இவருக்கு உண்டு.

மருதமலைக் கோவிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.சாண்டோ சின்னப்பா தேவர்,

மருதமலைக் கோவில் மலையில் முருகன் புகழைப் பாடல் வடிவத்தில் கல்வெட்டுகளாக எழுதி வடித்து வைக்க ஆசைப்பட்டார்.

அந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்தான்.

என்றென்றும் மாயவநாதனின் புகழை நிலைத்து நிற்கச் செய்யும் அக்கல்வெட்டுகளை முருகன் துதிப் பாடல்களாக நிலைத்து நிற்பதை இன்றும் மருதமலையில் காணலாம்.

பணம் எவ்வளவு தந்தாலும் அது பெரிதல்ல தன் மானமும் கவிதையும் பெரிது என்று முழக்கமிட்ட கவிஞர் இவர்.

படித்தால் மட்டும் போதுமா, என்ற திரைப்படத்தில் இடம்பெறும்,

🌹தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள். இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்என்ற பாடல் எவ்வளவு இதமான இனிமையான பாடல்.

விண்ணளந்த மனம் இருக்க. மண்ணளந்த நடை எடுக்க பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்…. ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்

பந்த பாசம் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய,

🌹நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ? கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?. என்ற பாடல்

ஆகா அருமை அருமை என்ன உணர்ச்சி என்ன ஆழமான கருத்து..

பூமாலை எனும் திரைப்படத்தில் கயவன் ஒருவனால் தன் கற்பிழந்த பெண் பாடுவதாக அமைந்த பாடல்..

🌹கற்பூர காட்டினிலே கனல் விழுந்துவிட்டதம்மா

உவமை.. பாருங்கள்.. அவள் நிலை.. கற்பூரத்தால் அமைந்த ஒரு காட்டில் ஒரு சிறு கனல் விழுந்தால் என்னவாகும்? கண்மூடித் திறக்குமுன் யாரும் அணைக்க முடியாமல் முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்து காணாமல் தானே போகும்.

பந்தபாசம் படத்தில்

🌹கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு . என்ற இவரது

பாடலைக் கேட்டால் எந்தக் கவலையும் படாமல்.. காரியம் நடக்கட்டும் என்று குறைந்தபட்சம் ஒருநாள் நம்மால் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும் ஒரு பாடல்.

பாலும் பழமும் படத்தில்

🌹பழுத்துவிட்ட பழம் அல்லஉதிர்வதற்கு…. என்னும் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அந்த இளம் மனைவி திடீரென இறந்து போன செய்தியைக் கேட்ட கணவனின் நிலையை நாம் உணரக்கூடும். இதயத்தில் ஒரு கனம் ஏற்பட்டு எல்லோ கண்களும் கலங்குவது நிச்சயம்.

என்னதான் முடிவு?” என்று ஒரு திரைப்படம். அதில் இடம்பெறும் ஒரு பாடல்,

🌹'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே. செய்த பாவம் தீரும் முன்னே இறக்க வைக்காதே'.

இந்தப் பாடல் என்ன முயற்சி செய்தாலும் வேறு எவரும் எழுதியிருக்க முடியாது என்றுதான் இன்றும் தோன்றுகிறது.

இப்படி எழுதுவதற்கு அசாதாரணமான தைரியமும் வேண்டும்.

இதயத்தில் நீ படத்தில் இடம்பெற்ற சுசீலா,ஈஸ்வரி பாடிய

🌹சித்திரை பூவிழி வந்து யார் நின்றவரோஎன்ற பாடல் அவரது கவிதை சந்தத்தின் அழகை சொல்லும் பாடல்

இவரது கவிதைத் திறமையை கண்டு மகிழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி, அதனால் தான் அதிக பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்புகளை வழங்கினார் மாயவநாதனுக்கு.

பூமாலை என்ற படம் ,கலைஞரின் வசனத்தில் உருவான படம், அதில் இடம்பெற்ற

🌹பெண்ணே உன் கதி இது தான என்று மனதை உருக்கும் வகையில்

இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் ஒலிக்கும் பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் இவரே.

இதன் வரிகளை கவனித்தவர்கள் இதன் வலிமையை உணர்வார்கள்.

இதே படத்தில்

🌹"உலகமே எதிர்த்தாலும்என்ற பாடலையும் மறக்க முடியாத ஒன்று.

கலைஞர் பூம்புகார் படத்தில் மாயவநாதனுக்கு 6 பாடல்களை எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.

🌹காவிரி பெண்ணே வாழ்க,

🌹தமிழ் எங்கள் உயிரானது,

🌹தப்பித்து வந்ததம்மா,

🌹துன்பமெல்லாம் என இவரது கவி ஆளுமை சொல்லும்

பாடல்கள்

இன்றும் நம் சிந்தயை மயக்கும் பாடல்கள்

மாயவநாதன் யாருக்கும் அஞ்சாதவர். முகத்திற்கு நேரே பேசிவிடுபவர்.

ஒரு முறை கலைஞரின் மறக்கமுடியுமா

படத்திற்கு பாடல் எழுத வந்த இவர் என்ன மெட்டு என்று ராமமூர்த்தியை கேட்க அதற்கு அவர்

மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்என்று சொல்ல கோபம் கொண்ட இவர்

பாடல் எழுதாமல் சென்று விட்டார் .

பின் கலைஞர் அந்த பாடலை எழுத அது தான்

🌹காகித ஓடம் கடலலை மீதுஎன்ற பாடல்

இவர் முழுக்க முழுக்க பாடல்கள் எழுதிய ஒரே படம் பீம்சிங்கின்

பந்த பாசம்”.திரைப்படம்

எப்பொழுதும் கண்ணதாசனே எழுதும்

பீம்சிங் -மெல்லிசை மன்னர்களின் கூட்டணியில் இந்த படத்தில் மட்டும் பெரும்பாலான பாடல்களையும் எழுதியது மாயவநாதனே..

இதில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் அருமை

🌹இதழ் மொட்டு விரித்திட -

காதல் கனிரசம் சொட்டும் வரிகள்

🌹கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - தத்துவம்

முத்தாய்ப்பாய் சீர்காழியாரின் குரலில் ஒலித்த

என்னதான் முடிவு திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

🌹"பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம்

தீருமுன்னே இறக்க வைக்காதே''

என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடலல் ஒன்றை எழுதினார்.

தொழிலாளி திரைப்படத்தில் இடம்பெற்ற

🌹என்ன கொடுப்பாய் என்ற பாடல் வித்தியாசமான வார்த்தைகளால் அமைத்திருப்பார்.

தென்றல் வீசும் திரையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் அழகான

🌹மலரே அறிவான பொருளே என்ற அழகான பாடலை எழுதியதும் இவரே.

1971’ல் வெளிவந்த

ஜெய் - ஸ்ரீவித்யா நடித்தடெல்லி டூ மெட்ராஸ்படத்தில் ஒலித்த

🌹புன்னகையோ பூமழையோ

என்ற பாடல் இவர் எழுதியது தான். இது தான் கடைசி பாடலும் கூட.

1971 ஆம் ஆண்டு சென்னையில் திடீரென மறைந்தவர். 35 வயது மட்டுமே பூவுலகில் வாழும் பேறு பெற்று தன் பாடல்களால் நம்மை மயக்கி விட்டு,மறைந்து மாயமாகி போனவர் மாயவநாதன் .

வறுமையில் வாடிய இந்த தமிழ் கவிஞர் நடு வீதியில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

பணத்தை பெரிதாக நினைக்கவில்லை, வறுமையில் வெருமையாக இருந்தாலும் யாருக்கும்

பணிவதில்லை என்ற கொள்கையை கைப்பிடித்தவர்.

கடவுள் எப்பொழுதும்

இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது,

சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்

இவர்களது தமிழை இன்னும் கொஞ்சம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம்

அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவி மக்கள் ஓலைக்குடிசை ஒன்றில் வாழும் அளவிற்குத்தான் வசதி இருந்தது.

இன்னும் அவருடைய பிள்ளைகள் பேரக் குழந்தைகள் மிகச் சாதாரணமான வேலை செய்து, விவசாயக் கூலிகளாகக் குடும்பம் நடத்துகிறார்கள்.

சொந்த ஊரில் அவருடைய உடல் எரியூட்டம் நடந்த இடம் கூட கேட்பாரற்றுக் கிடக்கிறது.

திரை உலகை மிரள வைத்த சிவாஜி

இன்றுவரை சிவாஜியின் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. ஏன் ஏன்றால் அவருடைய நடிப்பை யாராலும் ஈடு கொடுக்க முடியாது. இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'தங்கப்பதக்கம்'. 1974 ஆம் ஆண்டு P. மாதவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருந்தனர். |π|

இப்படத்தில் கண்டிப்பான, உறுதியான போலீஸ் அதிகாரியாக எஸ் பி சௌத்ரி கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்து இருந்தார். ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நடந்து கொள்ள வேண்டு ம், எப்படி வாழ வேண்டும், என்பதை தனது அற்புதமான நடிப்பின் மூலம் சிவாஜிகணேசன் காட்டியிருந்தார். |π|

இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்து இருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற 'சோதனை மேல் சோதனை', 'நல்ல தொரு குடும்பம்' பாடல்கள் வரவேற்பு பெற்று வந்தது. 1974 ம் ஆண்டு வெளியான படங்களில் தங்கப்பதக்க ம் படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது.

அதுமட்டுமல்லாமல் அந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் தங்கப் பதக்கம் படத்திற்கு கிடைத்தது. இப்படத்திற்கு முந்தைய ஆண்டான 1973 வரை வந்த எல்லா படங்களின் வசூலையும் தங்கப்பதக்கம் முறியடித் துள்ளது. தங்கப்பதக்கம் படம் சாந்தி தியேட்டரில் மட்டும் 103 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடியது.

சாந்தி தியேட்டரில் உள்ள 1200 இருக்கைகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் திரளாக வந்து இப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். மகேந்திரன் எழுதிய தங்கபதக்கம் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தங்கப்பதக்கம். நாடகமும் மக்கள் மத்தியில் சாதனை படைத்த பெருமை தங்கப்பதக்கம் படத்திற்கு உண்டு. |π|

தங்கப்பதக்கம் படம் பங்காரு பதக்கம் என 1976 இல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அதன்பிறகு இப்படம் கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியா னது. ஓரு படம் இவ்வள வு சாதனை படைக்க முடியும் என்றால் அது சிவாஜி படமாக மட்டுமே இருக்க முடியும்.

"கே. பாலசந்தர்"

கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன்! (யப்பா மூச்சு வாங்குது)

இவர் தூக்கி விட்ட திரைப்பட நட்சத்திரங்கள்.

கே.பி.யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்! சென்னை .ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்மிகப் பிரபலமான நாடகம். ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘விநோத ஒப்பந்தம்போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!

கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், ‘நீர்க்குமிழி’. ‘பொய்வரை பட்டியல் நீள்கிறது!

தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு! மனைவியின் பெயர் ராஜம். கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். பி.எஸ்சி., முடித்துவிட்டு முத்துப்பேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். ‘தென்றல் தாலாட்டிய காலம்என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்! தோட்டக் கலையில் ஆர்வம். யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்புவார்!

ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்! எம்.ஜி.ஆரின்தெய்வத்தாய்படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்துஎதிரொலிஎன ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு! மலையருவியும், கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். ‘அச்சமில்லை அச்சமில்லைபடத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் மலையருவியின் பெயரையும் சேர்த்தவர்! விநாயகர்தான் இஷ்ட தெய்வம். பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர்கூடவிநாயகா’!

பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து, இவரை கல்லூரி வரை படிக்கவைத்தார். கலெக்டர் ஆக்க வேண்டும் என்பது அவரது அப்பாவின் கனவு. 1972 மார்ச் 10ஆம் தேதி வரை செயின் ஸ்மோக்கர். மார்ச் 11ஆம் தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்! கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணிவிடலாம்! தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார்.

ஏக் துஜே கேலியேமூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடியதேரே மேரே பீச் மேஇன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்! பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்! பேரறிஞர் அண்ணாவை பாலசந்தருக்குப் பிடிக்கும். ‘இரு கோடுகள்படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலை வைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது! சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின்ரெட்டச் சுழியில்நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்தார்!

இன்னமும் சினிமாதான் உலகம். சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும்தான் விரும்புவார். படங்கள் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால், உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார்.

’16 வயதினிலேபார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறிவிட்டார் பாரதிராஜா! படப்பிடிப்பு இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார். இல்லாவிட்டால் ஆறு மணி. ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு! தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரதுரயில் சிநேகம்இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும்.

 


லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது.

அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அந்த உடல் கிடைக்கவே இல்லை.

பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சிலபோது பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார்.

ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவு தான்..! கடைசி வரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர்.

பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார். மரணிக்கு முன் விரலைக் காயப்படுத்தி சுவரில் எழுதினார் இப்படி: "உலகிலேயே பெரும் பணக்காரர் பசியாலும் தாகத்தாலும் இறக்கிறார்".

சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பணம் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி..

ஒருநாள் உலகைப் பிரிந்தே ஆகவேண்டும். ஆயினும், எங்கே..? எப்போது..? எப்படி..? என்பது மட்டும் புரியவே இல்லை. புரியவும் முடியாது.

உல்லாசப் பயணம் சென்றால் திரும்பலாம்.. உலகைப் பிரிந்தால் திரும்ப முடியுமா..?

எனவே, யாரையும் வெறுக்காமல், யாரையும் ஒடுக்காமல், யாரையும் காயப்படுத்தாமல், யாரையும் கேவலப்படுத்தாமல், நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கருதாமல் வாழ்பவருக்கு வாழ்த்துக்கள்....!

பால சுகந்தன்


ஒரு துறவி காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருமனிதன், அங்கிருந்த மரம் ஒன்றில் கயிறு ஒன்றை மாட்டி, சுருக்கு போட்டுக் கொண்டிருந்தான். ஒரு சில வினாடி களில், அவன் கழுத்தை அதனுள்ளே நுழைத்து துாக்கில் தொங்க தயாரான போது, “நில்!” என்று கம்பீரமாக உத்தரவிட்டார் துறவி!

அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருங்கெடுத்து ஓடியது.

என்ன காரணத்தால் இந்த மாதிரித் தவறான முயற்சியில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார் துறவி.

சுவாமி, என் வாழ்க்கை முழுவதும் கண்ணீர். பிறந்ததிலிருந்து துன்பம், துயரம், வறுமை. எனக்கு இவ்வுலகில் வாழ தெரியவில்லை. நான் நேர்மையானவன்; உண்மையானவன்.

எனக்கு பணம் சம்பாதிக்க தெரியவில்லை. எனவே, அவ்வப்போது பட்டினி. வேலை செய்யும் இடங்களில் என் உழைப்புச் சுரண்டப்படுகிறது. என் கூலி குறைக்கப்படுகிறது.

எனக்குரிய கூலியை காலம் தாழ்த்தி தருகின்றனர் அல்லது அலைய விட்டுத் தருகின்றனர். கூலி வாங்க நான் அலையும் போது செலவுக்கு வேண்டிய தொகை, என் குடும்பத்தின் மூன்று நாட்கள் சாப்பாட்டுச் செலவு... இப்படி எத்தனை எத்தனையோ சொல்லலாம்.

நான் ஏழையாகவே உள்ளேன். ஏழையாக இருப்பதைக் குற்றமாக எண்ணவில்லை. வாழ்நாள் முழுவதும் இந்த துன்பங்களையும், துயரங்களையும் என் கடின உழைப்பால் போக்க முடியவில்லை. எனவே தான் சாக முயற்சித்தேன்; நீங்கள் தடுத்து விட்டீர்கள்,” என்று கதறினான்.

மகனே நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொல்... உலோகங்களிலேயே துாய்மையான ஒரு பொருள் என்று பாமர மக்களால் மதிக்கப்படுகிறது... ஆனால், அது விலை அதிகம். அதை ஆபரணமாக்க மனிதர்கள் முயலும் போது என்ன செய்கின்றனர்...

நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியால் தட்டி, நீட்டி, வளைத்து, பின் சிறு உளியனால் செதுக்குகின்றனர். மீண்டும் நெருப்பில் இட்டுக் காய்ச்சுகின்றனர்!

சாதாரண உலோகமான தங்கம், மற்ற உலோகங்களை எல்லாம் விட விலை உயர்ந்தது. துாய்மையானது என தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறெல்லாம் பாடுபடுத்துகின்றனர்.

பயிர்களில் இனிமையானது கரும்பு என்பது உண்மைதான்! அதைத்தான் நசுக்கி, கசக்கி, பிழிந்து, சாறு எடுத்து, பின், வடிகட்டுகின்றனர். ஆகவே, நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடிய படிப்பினை என்ன...

நல்லவற்றுக்கு இப்படிப்பட்ட துக்கமான, கவலை தரக்கூடிய அனுபவங்கள் எல்லாம் உண்டாவது சகஜமான விஷயமே. இதனால் விளைவது நன்மையே தவிர... வேறு எதுவுமில்லை.

சாதாரணமாகப் பசுவின் பாலில் இருந்து பெறப்படுவது என்ன... “தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவை. இது எப்படி கிடைக்கிறது. பசுவிலிருந்து பாலைக் கறந்தவுடன், அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு அடுப்பின் மேல் ஏற்றப்பட்டு எவ்வளவு சூடாக்க முடியுமோ அவ்வளவு சூடாகும் வரை காய்ச்சப்படுகிறது.

''அதன்பின், அதில் ஒரு துளி எலுமிச்சைச் சாறு விடப்பட்டு புரையிடப்படுகிறது. அது திரிந்து தயிராக மாறுகிறது. அந்தத் தயிரையும் ஒரு மத்துப் போட்டுக் கடை கடை என்று கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுக்கப்படுகிறது.

மேலே திரண்டு வரும் வெண்ணெய் எடுக்கப்பட்டவுடன், சிறிதளவு நீர் ஊற்றி, அது மோர் ஆக்கப்படுகிறது. வெண்ணெய் அதன் பின் மீண்டும் அக்னிப் பரீட்சைக்கு உள்ளாகிறது. இப்போது அதிலிருந்து நெய் பெறப்படுகிறது. இவ்வளவு ஏன்... அது பாலாக இருப்பதால்தான்!

ஆக, நல்லவர்கள், நாணயம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள், உண்மையை பேசுபவர்களுக்கெல்லாம் இவ்வாறு சோதனைகள் நேரிடுவது சகஜம். “அறிவாளிகள் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஆகவே, இந்த சோதனைகளை தாங்கு. முடிவில் நன்மையே கிடைக்கும்! வீட்டுக்குப் போ. உன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே. அந்தப் பலன் வித்தியாசமான வடிவத்துடன், நீ எதிர்பாராத நாளில், எதிர்பாராத மனிதர் வடிவத்தில் வந்து உன்னைக் காக்கும்,” என்று அவனை ஆசிர்வதித்து அனுப்பினார்.

தெளிந்த மனதுடன் வீடு திரும்பினான் மனிதன்.

கஷ்டம் என்பது கழுதையின் மீது பின் பக்கமாக உட்கார்ந்து கொண்டு சென்றால் நீ கிழே விழுந்து விடுவது உறுதி..

நீ. முன் பக்கமாக உட்கார்ந்து சென்றால் கழுதையை உன்னால் சமாளிக்க முடியும்...


இது நான் 6 வது படிக்கும் போது நடந்த சம்பவம் (1998)

எங்க வீட்டுல இரண்டு பெண் பிள்ளைகளுக்கு பின்னால் தவம் இருந்து பெற்றெடுக்கப்பட்ட தவப்புதல்வன் நான் , எங்கம்மாவுக்கு பொம்பள பிள்ளைகளத்தான் படிக்க வைக்க முடியல இவனையாச்சும் படிக்க வைக்கனுமுன்னு ரொம்ப ஆசை

நம்ம வீட்டுல இருந்தா இந்த பையனையும் மற்ற இரண்டு பிள்ளைகளை 10 வயசுல வேலைக்கு அனுப்பன மாதிரி அனுப்பிடுவாங்களோன்னு. ஜாதகம் , நேரம், காலமுன்னு சப்ப கட்டு கட்டி எங்க குடும்பத்திலயே கல்லூரி படிப்பு படித்த ஒரே நபரான எங்க மாமா வீட்டுல இருந்து படிக்கட்டுமுன்னு அங்க அனுப்பி வச்சாங்க.

கோக்கலை (நாமக்கல் மாவட்டம்) அரசினர் நடுநிலைப்பள்ளியில் சேர்த்து விட்டாங்க , பள்ளிக்கூடம் சேர்ந்து முதல் ஞாயிறு எங்க அம்மா என்னை பார்க்க மாமா வீட்டுக்கு வராங்க , நானும் பயங்கர ஜாலியா இருக்கேன் அம்மா எப்ப வருவாங்க எப்ப வருவாங்கன்னு பார்த்தபடியே இருக்கேன்

அப்ப எங்க மாமா என்ன கூப்பிட்டு டேய் உங்க அம்மா வரப்ப நீ இந்த இங்கிலீஷ் poem படிச்சு காட்டு ரொம்ப சந்தோஷபடுவான்னு எனக்கு poem சொல்லிகொடுக்க ஆரம்பிச்சாப்புல ( மாமா english literature படிச்சவரு) அவரும் 100 முறை எனக்கு சொல்லி கொடுத்திருப்பாரு என்னால படிக்கவே முடியல, எனக்கு சொல்லிகொடுத்து அவருக்கு அந்த poem மனப்பாடமே ஆகிடுச்சு மனுஷன் கடைசியா அடிச்சு பார்த்தாப்புல திட்டி பார்த்தாப்புல அப்படியும் நான் ஒரு வார்த்தை கூட அதை படிக்கவே முடியல, அவங்க அக்கா முன்னாடி உன் பையன எப்படி படிக்க வச்சிருக்கேன் பாருன்னு காட்ட முயற்சி செஞ்சவருக்கு டென்ஷன் மட்டுந்தான் மிச்சமாச்சு , இதுல இன்னொரு கொடுமை என்னான்னா 5 வது படிக்கிற சித்தி பையன் அந்த poem மாமா சொல்ல சொல்ல அழகா படிக்குறான் , இத பார்த்துட்டு வீட்டுல இருக்குற எல்லாரும் தத்தி, தண்டமுன்னு திட்டுறாங்க நேரம் ஆக ஆக அழுதுக்கிட்டே இருக்கேன்

ஒருவழியா அம்மாவும் வந்தாங்க எங்க அம்மாவிடம் எல்லாரும் உன் பையனுக்கு எதுவும் தெரியல படிக்க சொன்னா படிக்க மாட்டேங்குறான் எதாச்சும் சொன்னா உடனே அழுகிறான்னு கம்ளைன்ட் வேற சொல்லுறாங்க, அம்மா அதையெல்லாம் கவனிக்கவே இல்ல வாங்கிட்டு வந்த தின்பன்டங்களை எடுத்தாங்க எனக்கு ஊட்ட ஆரம்பிச்சுட்டாங்க, சும்மாவா மடியிலயே வச்சு பார்த்துகிட்ட மகனை முதல் முறையா அதிக நாள் பிரிஞ்சிருந்தாங்கில்ல, அழுதுவடிஞ்சிருந்த மூஞ்ச கழுவி விட்டாங்க 3 மணி நேரந்தான் அம்மா என் கூட இருக்கமுடியும், திரும்ப வீட்டுக்கு வர ஒரு பஸ்தான் அதவிட்டா அடுத்தநாள் தான் பஸ் அதனால கிளம்பிட்டாங்க

அம்மா இருந்த அந்த 3 மணி நேரம் படிக்கனுங்கிற தொந்தரவும் இல்லை , யாரும் என்னை மிரட்டவும் இல்லை, அம்மா கிளம்பினதும் இவங்க திரும்பவும் ஆரம்பிச்சிடுவாங்களோன்னு பயந்தேன் ஆனா எங்க மாமா சாப்பிட்டு விளையாட போன்னு சொல்லிட்டாரு ( அவராலயும் எவ்வளவுதான் முடியும் ) இது தான்டா பிரபாகரா வாய்ப்பு ஒடிடூன்னு கிளம்பிட்டேன் , அந்த நாள் எப்படியோ முடிஞ்சிருச்சு

அடுத்த நாள் திங்கட்கிழமை பள்ளிக்கூடத்துக்கு போனா வாத்தியார் தமிழ் புக் எடுத்து வச்சு படிக்கசொன்னார் திருதிருன்னு முழிச்சிட்டே நின்னேன் , மனுஷன் ஒரு நிமிஷம் அமைதியா இருந்துட்டு பக்கத்துல வரச்சொன்னாரு அடிப்பாறோன்னு பயந்துட்டே போனேன் உனக்கு ABCD தெரியுமான்னு கேட்டாரு என்கிட்ட பதில் இல்லை ''கஙச'' தெரியுமான்னு கேட்டாரு அதுக்கும் நான் திருதிருன்னு முழிச்சிட்டேதான் இருந்தேன் , வாத்தியார் கோவமா '' '' யாச்சும் தெரியுமாடான்னு கேட்டாரு அதை மட்டும் எப்படியோ தட்டு தடுமாறி சொல்லிட்டேன் , மனுஷன் சிரிச்சுக்கிட்டே பக்கத்துல புடிச்சு இழுத்து எதிர்ல இருந்த வகுப்பறைய காமிச்சு அதுதான் இரண்டாவது அங்க போய் சிவக்குமார் வாத்தியார் சொன்னாருன்னு '' ABCD கஙச '' தமிழ் படிக்கிறதுக்கு கத்துக்கிட்டு வான்னு அனுப்பி வச்சிட்டாரு, 3 மாதம் இரண்டாவதுலயேத்தான் இருந்தேன் அந்த கிளாஸ் டீச்சர் தமிழ்செல்வி அவங்க என்ன ஒரு நாளும் திட்டவோ அடிக்கவோ கிடையாது தினமும் 10, 20 முறை கஙச எழுத வைப்பாங்க, சிவக்குமார் வாத்தியாரும் அப்ப அப்ப வந்து எட்டி பார்த்துட்டு டீச்சர்கிட்ட தேறிடுவானா டீச்சர்ன்னு கேட்பாரு, 3 மாதம் கழித்து 6 ஆம் வகுப்புக்கே வந்து சேர்ந்தேன்.

இப்ப என்னால தமிழ் எழுத்து கூட்டி படிக்க முடிஞ்சது , எல்லார் முன்னாலயும் திருக்குறள் படிக்க வச்சாரு நானும் தட்டு தடுமாறி படிச்சேன் எல்லாரையும் கை தட்ட வச்சு பராட்டுனாப்புல , அவ்வளவு தான்டா படிக்குறது ரொம்ப சுலபம்டா நல்லா படிக்கனும் சரியான்டு அவருக்கு பத்துலயே உட்கார வச்சுக்கிட்டாரு, எல்லாரும் ஒரு விஷயத்தை படிச்சுக்கிட்டு இருந்தா எனக்கு மட்டும் நான் 1 வதிலிருந்து 5 வதுவரை படிக்காம விட்டதை சொல்லி கொடுத்தாப்புல , அவர் கணித வாத்தியார் அதனால எனக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் எல்லாம் நல்லா புரிய வச்சாப்புல மனுஷன் , ஆனாலும் இந்த இங்கிலீஷ் மட்டும் எனக்கு கடைசிவரை வரவேயில்லை அது வேற கதை

அந்த சிவக்குமார் வாத்தியார் இல்லைன்னா என்னோட நிலைமைய என்னால நினைச்சுகூட பார்க்கமுடியல , அவரோட சின்ன முன்னேடுப்புதான் நான் இன்றைக்கு கௌரவமா வாழ காரணம் , அப்ப அவ்வளவு மக்கா இருந்த நான் தான் 10 வதுல 403 (2002) மார்க்கும் 12 வதுல 903 (2004) மார்க்கும் வாங்கினேன், என்னோட 10 வது மார்க் பார்த்துட்டு மொத்த குடும்பத்துக்கும் ஆச்சர்யம் இவனாடா அந்த மார்க் வாங்கினதுன்னு.

எங்க மாமாவுக்கு ஒருவழியா சந்தோஷம் அக்கா பையன எப்படியோ தேத்திட்டோமுன்னு ( 10 வதுக்கு question bank புக்கெல்லாம் வாங்கி கொடுத்தாப்புல ) ஆனா அத படிக்குற கேப்பாசிட்டி நம்ம மாப்பிள்ளைக்கு இருக்கான்னு சோதிச்சு பார்க்குல மனுஷன், மாமாவையும் குத்தம் சொல்லமுடியாது அவரு வாத்தியார் கிடையாதே, பல வாத்தியாருங்களே எங்க மாமா மாதிரிதான் இருக்காங்க

இதன் மூலமா நான் சொல்ல வருவது என்னான்னா இங்க பிறவி அறிவாளி, பிறவி முட்டாள்ன்னு எவனும் கிடையாது பயிற்சி கொடுத்தா எல்லாருக்கும் எல்லாமே வரும் அவ்வளவுதான்.

பிரபாகரன் வெ 


காதலிக்க நேரமில்லை நாயகி!

விமான பணிப்பெண்ணாக இருந்த என்னை இயக்குனர் ஸ்ரீதர் அவர் இயக்கிய 'காதலிக்க நேரமில்லை' படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். என்னை தற்போது வரை பலருக்கும் காஞ்சனா என்று தான் தெரியும். ஆனால் என்னுடைய உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜெந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என ஸ்ரீதர் மாற்றினார்.

1964-ல் அந்த படம் வெளியான பிறது, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படவாய்ப்புகள் குவிந்தது. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கி போட்டு இருந்தேன். அந்த சொத்துகளை எனது உறவினர்கள் என்னை எம்மாற்றி அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என்று பெற்றோருடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பது வெங்கடாஜலபதுக்கு எழுதி வைப்பதாக வேண்டி கொண்டிருந்தேன்.

ஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்கள் மீண்டும் என்னுடைய கையுக்கு வந்தது. இதனால் நான் வேண்டிக்கொண்ட படி, 80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன். நான் திரைப்படத்தில் ஓய்வு இல்லாமல் நடித்து கொண்டிருந்ததால், எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதையே என் பெற்றோர் மறந்து விட்டனர். நானும் திருமணம் செய்து கொள்ளமல்லேயே இருந்து விட்டேன்.

இப்போது என்னுடைய தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை . எனது தங்கை என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்.

மத்தபடி, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனாலும் பிரச்னைதான், ஆகலைனாலும் பிரச்னைதான். என் கர்மாபடி எனக்குக் கல்யாணம் நடக்கல... தட்ஸ் ஆல்

தற்போது என்னுடைய கவனம் முழுவதையும் ஆன்மீக ஈடுபாடுகளில் காட்டி வருகிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையான் தரிசனம், யோகா என என்னை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறேன். கடவுளிடம் இன்னொரு பிறவி மட்டும் வேண்டாம் என வேண்டி கொள்கிறேன் என காஞ்சனா தன்னை பற்றி தெரிவித்துள்ளார்.

காஞ்சனா


வே சு அய்யர், திருக்குர் ஆன். மதச்சார்பின்மை: ஒரு முக்கிய குறிப்பு.

<><><><><><> 

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி குறித்துச் சரியாக அறிந்துகொள்ள இக்கட்டுரையை அவசியம் படியுங்கள்.

<><><><><><> 

படத்திலுள்ள இக்குறு நூலை எனக்குக் கையொப்பம் இட்டு அன்பளித்துள்ளது .வே.சு அய்யரின் மகன் மருத்துவர் .வே.சு இராதா கிருஷ்ணன். என்னுடன் கூட இருந்தவர்கள் அப்போது தஞ்சை சரபோஜி கல்லூரியில் உடன் பணியாற்றிய பேராசிரியர்களான கே.என் ராமச்சந்திரன் (அறிவியல் நூல்கள் பல எழுதி விருதுகள் பெற்றவர். எனக்கு ஆசிரியராக இருந்து பின் என்னுடன் நெருங்கிய நண்பராகப் பணியாற்றியவர்.) மற்றும் பேரா. முஸ்தபா (ஒரு மிகச் சிறந்த ஆசிரியர். விரிவாகப் படிக்கக் கூடியவர்). அப்போது நாங்கள் திருச்சி ரீஜனல் எஞ்சினீயரிங் கல்லூரியில் பகுதி நேர M.Phil படித்துக் கொண்டிருந்தோம். இது சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

.வே.சு அய்யர் சேரன்மாதேவியில் தொடங்கியிருந்த குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் தனியாக அமர்த்தி உணவு பரிமாரப்பட்ட நிகழ்வு சென்ற நூற்றாண்டுத் தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஒன்று. பார்ப்பன மாணவர்கள் எல்லோரையும் அப்படித் தனியாக அமர்த்தி உணவு பரிமாறவில்லை எனவும் புகழ்பெற்ற வாவிலா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தெலுங்குப் பார்ப்பனர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும்தான், அப்படி அவர்கள் வீட்டில் நிபந்தனை விதித்திருந்ததால், தனியாக உணவு பரிமாறப்பட்டது என்பதும் .வே.சு தரப்பில் சொல்லப்பட்ட சமாதானம்.

அடுத்த சில ஆண்டுகளில் .வே.சு இறந்து போனார். அவரது மகன் திருச்சி திருவானைக்கோவிலில் மருத்துவராக இருந்தார். அந்த நிகழ்ச்சி குறித்த விவரங்களை அறியத்தான் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். அந்த ஒரு குடும்பத்துக் குழந்தைகள் தவிர தாங்கள் உட்பட எலோரும் ஒன்றாக அமர்ந்துதான் உணவு அருந்தியதாக .வெ.சு அவர்களின் மகன் இராதாகிருஷ்ணன் கூறினார். நாங்கள் புறப்படும்போது அவர் இந்த நூலைக் கையொப்பமிட்டு எனக்கு அன்பளித்தார்,

நேற்று வேறு ஒரு நூலைத் தேடிக் கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. இது ஔரங்கசீப்பிற்கு எதிராகப் போராடிய குரு கோவிந்தசிங் குறித்து .வே.சு அய்யர் எழுதிய ஒரு குறு நூல். 1925ல் இதன் முதற்பதிப்பு வந்துள்ளது. பின் 1934ல்சுதந்திரச் சங்குசர்பாக ஒரு பதிப்பு வந்துள்ளது. இது அதற்குப் பின் வந்த ஒரு பதிப்பு. .வே.சு அவர்களின் 80வது பிறந்த நாளில் (02.04.1961) இது வெளியிடப்பட்டுள்ளது. குரு கோவிந்த சிங். ஔரங்கசீப்பிற்கு எதிராகப் போராடியவர். தனை எதிர்த்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தாலும் குரு கோவிந்தரின் வீரத்தை மெச்சி மொகலாயர்கள் சார்பாக அவர் நட்பு பேண அழைக்கப் பட்டததாகவும், ஆனால் இஸ்லாமாக மாறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதை கோவிந்தரின் மகன்கள் ஏற்காது போராடி மாண்டதாகவும் இந்நூலில் .வே.சு குறிப்பிடுகிறார்.

அதன் பிறகும் ஒளரங்கசீப் கோவிந்தரை சமாதானத்திற்கு அழைத்ததாகவும் மொகலாயர்களுடனான போர்களில் நான்கு மகந்களை இழந்திருந்த அவர் ஒளரங்கசீப்பின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் .வே.சு எழுதுகிறார். ஔரங்கசீப் இறந்த பின்னர் அவரது மகன் தேஜ்பகதூரும் கோவிந்தரை மதித்து அவருடன் நட்பு பாராட்ட அழைக்கிறார். போரில் பல இழப்புகளைச் சந்தித்திருந்த குரு கோவிந்தசிங் இப்போது சமாதானத்துக்குத் தயாராகி தேஜ்பகதூர் வேண்டிக் கொண்டபடி கோதாவரிக் கரையிலிருந்த கலகக்காரர்களை அடக்கச் சென்றார். ஆனால் அங்கு விதி வேறு வகையில் விளையாடியது.

இங்கு ஒன்றைக் குறிப்பிடுவது அவசியம். மொகலாயப் படை எடுப்புகளுக்கும் பின் வந்த ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. ஆங்கிலேயர்களைப் போல இங்கு வணிகத்தின் மூலமாகவும், பிற வழிகளிலும் கொள்ளை அடித்தும் அவற்றைத் தம் நாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கம் முகலாயர்களுக்கு இல்லை. அக்பர் அல்லது ஔரங்கசீப் போன்ற மொகலாயர்கள் இங்குள்ள செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவர்கள் அல்ல. எனவே அவர்கள் கூடியவரை இங்கு அமைதியான ஒரு ஆட்சியை நிலை நிறுத்தவே முனைந்தனர். இங்குள்ள சமூகங்களுடன் சமாதானமாக வாழ்வதே அவர்களுக்குத் தேவையாக இருந்தது. பெரிய அளவில் இந்துக்கள் இவர்களின் அவைகளில் முக்கிய பொறுப்புக்களிலும் பதவிகளிலும் இருந்தனர். இங்குள்ள இந்து ஆலயங்கள் முதலியவற்றை இடிப்பதும் அவர்களின் நோக்கமல்ல. கூடியவரை அமைதியாக ஆட்சியை நடத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

மதமாற்றம் செய்வதும் அவர்களின் நோக்கங்களாக இல்லை. ரிச்சர்ட் ஈட்டன் போன்ற முகலாய கால வரலாற்று அறிஞர்கள் இதை விரிவாக விளக்குகின்றனர். இன்றளவும் இந்தியத் துணைக் கண்டத்தில் அதிக அளவில் முஸ்லிம் மதமாற்றங்கள் நடந்து இன்று முஸ்லிம் நாடுகளாகவே உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் எந்நாளும் வலிமையான முஸ்லிம் அரசுகள் இருந்ததில்லை என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது. பின் எப்படி அங்கு மிகப் பெரிய அளவு மதமாற்றங்கள் நடந்தன? சுஃபி ஞாநிகளின் பங்கு இதில் முதன்மையாக இருந்தது என ஈட்டன் சொல்கிறார். பெரும் நதிகள் இல்லாத இப்பகுதிகளில் கிணற்றுப் பாசனம் முதலானவற்றை பாரசீகம் முதலான நாடுகளில் பயிலப்படும் நீர்ப்பாசன முறை (Persian Wheel) கொண்டு இங்கெல்லாம் விவசாயப் பாசன முறைகளை இவர்கள் உள்ளூர் மக்களுக்கு கற்பித்ததை அவர் விளக்குகிறார். அந்த வகையில் சுஃபிகளின் பங்கு இதில் முக்கிய பங்கு வகித்தது என்கிறார் அவர்.

அப்படியானால் சில இந்து ஆலயங்கள் முகலாயர்களால் இடிக்கப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள்ளனவே, சில கட்டாய மதமாற்றங்களும் நிகழ்ந்தனவே என்கிற கேள்விகளுக்குச் சில சமீப கால ஆய்வாளர்களான ஆந்த்ரே ட்றூசெக் போன்றோர் விளக்கங்கள் அளிக்கின்றனர்.

இப்படியான சம்பவங்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. சில குறிப்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனையாக அவர்கள் வசம் இருந்த ஆலயங்கள் அவ்வாறு தகர்க்கப்பட்டன என அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவுகின்றனர். ஔரங்கசீப்பின் ஆட்சியில் அவ்வாறு இடிக்கப்பட்ட இந்துக் கோவில்கள் மிக மிகச் சில. அதே ஔரங்கசீப் காலத்தில்தான் நமது குமரகுருபரர் காசியில் மடம் கட்டுவதற்கும் நன்கொடை அளித்தார். இன்றும் காசியில் அந்த மடம் உள்ளதை நாம் அறிவோம்.

இந்த அளவிற்கு விரிவான ஆய்வுகள் எல்லாம் அப்போது இல்லாவிட்டாலும், கட்டாய மதமாற்றம், இந்து மத அழிப்பு, பசுவதை முதலான சொல்லாடல்கள் மேலோங்கி வந்த ஒரு கால கட்டத்தில் .வே.சு அய்யரின் அணுகல்முறை அவ்வழியில் இல்லை என்பது

இங்கே கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

குருகோவிந்தசிங் படையில் இருந்த இரு பட்டாணியர்கள்தான் அவரது கோதாவரிப் படைஎடுப்பின்போது அங்கு அவரைக் கொன்றனர் என .வேசு எழுதுகிறார். அது ஏன்? ஒரு சமயத்தில் தன்னை அவமதித்த ஒரு பட்டாணியக் குதிரை வியாபாரியை கோவிந்தர் கொன்று விடுகிறார். ஆனால் அந்த வியாபாரிக்கு இரு மகன்கள் இருந்ததை அறிந்து அவர்களைத் தன் மகன்கள் போலவே அவர் வளர்க்கிறார். எனினும் பின்னாளில் உண்மை அறிந்த அவர்களே அந்தப் போரின்போது அவரைக் கொன்றதாகவும் இந்நூலில் ,வே.சு அவர்கள் குறிப்பிடுகிறார். தன்னால் வளர்க்கப்பட்டவர்கள் ஏன் தன்னைக் கொன்றார்கள் என மரணத் தறுவாயில் கோவிந்தர் கேட்டபோது தந்தையைக் கொன்றதற்குப் பழி வாங்கவே தாங்கள் அவரைக் கொன்றதாகவும், எனினும் சொந்தத் தந்தையைப்போல் தன்னை இதுகாறும் வளர்த்த அவரை இப்படித் தாக்கியதற்காகத் தங்களைக் கொல்லுமாறும் அவர்கள் வேண்டிக் கொண்டதாகவும், குரு கோவிந்தர் அவர்களை மன்னித்து இறந்ததாகவும் .வே.சு கோவிந்தரின் வரலாற்றை முடிக்கிறார்.

.வே.சு அவர்கள் தன் கதைப் போக்கில் ஔரங்கசீப்பை இந்துத்துவவாதிகள் வழக்கமாகச் சித்திரிப்பதுபோலச் சித்திரிக்கவும் இல்லை. வளர்ந்து கொண்டிருந்த ஒரு பெரும் பேரரசுக்கும் எதிர்த்து நின்ற ஒரு குழுமத்திற்கும் இடையிலான போராகவே அதைக் காட்டுகிறார். மொகலாயர்கள் அவரை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்த ஒரு கட்டத்தில் நேர்ந்தாலும் தொடர்ந்து அப்படியான மதமாற்ற நிபந்தனையின்றி அக்குழுமத்தைத் தன் படை பலத்தால் தங்களின் ஆளுகைக்குள் கொண்டுவந்ததாகவுமே குறிப்பிடும் .வே.சு அவர்களின் இந்தச் சித்திரிப்பில் மதவெறுப்பு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

அது மட்டுமல்ல அவர் இஸ்லாமியத்தை அவதூறு செய்யவும் இல்லை. மிக்க மரியாதையுடனும், அம் மதத்தினரின் நெறிகளுக்கு உட்பட்டும் அதை அறிமுகம் செய்கிறார். மொகலாய ஆட்சியை ஒரு விரிவாக்க 'ஏகாதிபத்தியம்' என்று மட்டுமே குறிப்பிடுகிறார். ‘ஏகாதிபத்தியம்என்கிற கருத்தாக்கம் இங்கே மார்க்சீயப் பொருளிலும் சொல்லப்படவில்லை. அந்நிய விரிவாக்கம் என்கிற பொருளிலேயே சொல்லப்படுகிறது. குருவின் இரு மகன்கள் ஒளரங்கசீப்புடனான போரில் கொல்லப்பட்டதைச் சொல்ல வரும்போது, “(அவர்கள்) குருவின் கண்ணெதிரிலேயே ஷஹீதாயினர்எனக் குறிப்பிட்டுப் பின்ஷஹீதுதர்மத்துக்காகப் பிராணனைக் கொடுக்கிறவன்’’ என அடிக்குறிப்பில் அதற்கு விளக்கமும் தருகிறார் ,வேசு அவர்கள்.

ஒரு கட்டத்தில் ஒளரங்கசீப்பிடமிருத்து தப்பி வந்த குரு கோவிந்தசிங் பட்டாணியர்கள் கையில் சிக்குகிறார். ஆனால் அந்தப் பட்டாணியர்கள் அவரது வீரத்தை மெச்சிஉபசாரங்கள் செய்துபோலால்பூர் எனும் ஊரில் கொண்டு சென்று விட்டதாகவும், அங்கேயும் குருகோவிந்தரும் அவரோடு தப்பி வந்த படைகளும், “பீர்முகம்மது என்ற ஒர் முஸ்லிமினாலேயே ரஷிக்கப்பட்டார்கள்எனவும் .வே.சு அய்யர் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல. “குரு கோவிந்தன் குரான் படிக்கும் காலத்தில் இந்தப் பீர்முகம்மது அவனுக்குச் சகபாடியாக இருந்தான். அவன் சிறந்த முஸ்லிமாயும் இருந்தான்என்கிறார். குரு கோவிந்தர்முஸ்லிம்கள் சமைத்த அன்னத்தைஉண்டதையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்.

இறுதியாக முடிக்கும்போது, “..இவ்வாறு தனது ஆத்ம சக்தியனைத்தையும் தன் சிஷ்யரிடத்தில் வியாபிக்கும்படி செய்த வன்மை சரித்திரத்தில் முகம்மது நபிஸல்லாஹூ அலைஹிவஸ்ஸல்லம்- ஒருவருக்குத்தான் நமக்குத் தெரிந்த மட்டில் உண்டு….” என முடிப்பதை வாசித்தபோது நான் மெய்சிலிர்த்தேன்.

இறுதியில்ஸத் ஸ்ரீ அகால்!” – எனச் சீக்கியர்களின் வழியில் வணக்கம் சொல்லி முடிக்கிறார் .வே.சு அய்யரவர்கள்.

.வே.சு (1881- 1925) அவர்களின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்டது இந்நூல். ஒருவேளை இதுவே அவரது இறுதி நூலாகவும் இருக்கக் கூடும். அவர் இறந்த ஆண்டில்தான் இந்நூலும் வெளிவந்துள்ளது. அது காந்தி சகாப்தம் தொடங்கிய காலம். பாரதி, .வேசு, ..சி, சாவர்கர் ஆகியோரெல்லாம் காந்தி சகாப்தம் தொடங்குவதற்கு முன் தமிழகத்தில் பிரிட்டிஷ் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்கள்.

1905 வங்கப் பிரிவினையை ஒட்டி எழுந்த அரசியல் எழுச்சியில் வெளிப்போந்த முதல் கட்டத்தினர். வெள்ளை அதிகாரிகளைக் கொன்று கையில் பகவத் கீதையுடன் தூக்கு மேடை ஏறிய மேற்சாதி இளைஞர்களின் காலத்தவர்கள். அரவிந்தர், திலகர் முதலானோரைத் தலைவர்களாக ஏற்றுத் தம் அரசியலைத் துவங்கியவர்கள். .வேசு சாவர்கரின் நெருங்கிய நண்பரும் கூட. ஆனால் 1916க்குப் பின் காந்தி சகாப்தம் இங்கு தொடங்குகிறது. அப்போது இந்த எழுச்சி வெகு மக்களை உள்ளடக்கியதாக உருப்பெறுகிறது. காந்தி கிலாஃபத் இயக்கத்தோடு இந்திய அரசியலில் நுழைகிறார்.

பாரதியும் .வே.சுவும் முந்தைய வழியிலிருந்து விலகி காந்தியத் தலைமையை ஏற்ற தருணத்தில் மறைய நேரிட்டவர்கள் என நான் முன்னொரு முறை எழுதியது நினைவிருக்கலாம்.

திருக்குர் ஆன் முதல் தமிழ் மொழியாக்கம் வந்தபோது அதைப் படித்து வியந்த .வே.சு அவர்கள் அதை வியந்து எழுதியதோடு, “ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல்என அதைப் பாராட்டி எழுதியது குறித்து மீனா எழுதியுள்ள கட்டுரை ஒன்றும் இங்கே நினைவுக்குரியது.

 



கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல்
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. 

கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.கி.பி. 980வாக்கில் சோழ சாம்ராஜ்யம் குமரி முனையிலிருந்து வடபெண்ணைக் கரை வரை பரவியிருந்தது. சுந்தர சோழர் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகச் சோழன் அந்த நாட்டை ஆண்டு வந்தார். 

கும்பகோணத்திற்கு அருகில் இருந்த பழையாறை பல ஆண்டுகளாக சோழ நாட்டின் தலைநகராக இருந்த நிலையில், சுந்தரசோழரின் காலத்தில் தஞ்சாவூர் தலைநகரமாக மாற்றப்பட்டிருந்தது. சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இரண்டாவதாக குந்தவையும் கடைசியாக அருள்மொழி வர்மனும் பிறந்திருந்தனர். இந்த அருள்மொழி வர்மனே வரலாற்றில் ராஜராஜசோழன் எனப் புகழ்பெற்றிருந்த மன்னன். 

 சுந்தரசோழ சக்கரவர்த்தி சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு, நடக்க முடியாமலும் பிரயாணம் செய்ய முடியாத நிலையிலும் இருந்தார். அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையரும் சிறிய பழுவேட்டரையர் காலாந்தக கண்டரும் அப்போது பெரும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள்.

சோழநாட்டின் பொக்கிஷம், வரி விதிக்கும் அதிகாரம் ஆகியவை பெரிய பழுவேட்டரையரிடம் இருந்தன. தஞ்சைக் கோட்டையின் காவல், சிறிய பழுவேட்டரையர் வசம் இருந்தது. மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டிருந்தது. அவர் வடதிசைப் படையின் அதிபதியாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். 

தென்திசைப் படையின் மாதண்ட நாயகராக அருள்மொழி வர்மன் இலங்கைக்குச் சென்று போர் புரிந்துகொண்டிருந்தார். அருள்மொழி வர்மன் குழந்தையாக இருந்தபோது, பெற்றோருடன் காவிரியில் படகில் சென்றுகொண்டிருந்தபோது, தவறி ஆற்றில் விழுந்துவிட்டான். 

அவனை ஒரு பெண் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றிவிட்டு மறைந்துபோனாள். அவள் யார் என்பது தெரியவில்லை. காவிரி அம்மனே அவனைக் காப்பாற்றியதாகக் கருதி, அருள்மொழி வர்மனை பொன்னியின் செல்வன் என மக்கள் அழைத்து வந்தனர். சோழர்களின் தலைநகரம் தஞ்சைக்கு மாறிவிட்டாலும், குந்தவையும் வேறு பல சோழ அரச குடும்பப் பெண்மணிகளும் பழையாறை நகரிலேயே தங்கியிருந்தனர். 

 இதற்கிடையில், சுந்தர சோழருக்கும் அவருடைய மகன்களுக்கும் எதிராக மிகப் பெரிய சதி நடப்பதாக நாடு முழுவதும் செய்திகள் பரவின. இந்த சதியின் மையமாக இருந்தவர் மதுராந்தகச் சோழன் சுந்தரசோழரின் பெரிய தந்தையான கண்டாராதித்த சோழனின் மகன்தான் இந்த மதுராந்தகன். சில காலம் முன்புவரை சிவபக்தியில் திளைத்திருந்த அவர், சின்னப் பழுவேட்டரையரின் மகளைத் திருமணம் செய்துகொண்டதிலிருந்து மன மாற்றம் அடைந்திருந்தார். சுந்தர சோழருக்குப் பிறகு மதுராந்தகரை சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டுமென்பது மேலே குறிப்பிட்ட சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது. 

 காஞ்சிபுரத்தில் இருந்த பட்டத்து இளவரசனுக்கு இந்தச் செய்திகள் அரசல்புரசலாகத் தெரிந்ததும் தனது தந்தையை பழுவேட்டரையர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு, காஞ்சிபுரத்திற்குக் கொண்டுவர விரும்பினார். தான் புதிதாகக் கட்டியிருக்கும் பொன் மாளிகைக்கு வந்து சில காலம் சுந்தரசோழர் தங்கியிருக்க வேண்டும் என ஓலை ஒன்றை எழுதி, தனது நம்பிக்கைக்கு உரிய வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற வீரனிடம் கொடுத்தனுப்பினார்.

ஆதித்த கரிகாலன் தனது இளம் வயதில் நந்தினி என்ற அர்ச்சகர் வீட்டுப் பெண்ணைக் காதலித்தார். ஆனால் அது தகாத காதல் என கண்டாராதித்தரின் மனைவியும் ஆதித்தனின் பாட்டியுமான செம்பியன் மாதேவி அவனிடம் சொன்னார். ஆனால், ஆதித்தனால் நந்தினியை மறக்க முடியவில்லை. இந்த நிலையில், 60 வயதைக் கடந்த பெரிய பழுவேட்டரையர் நந்தினியைத் திருமணம் செய்துகொண்டார்.

 இதையடுத்து, நந்தினி பழுவூர் அரண்மனையின் சர்வாதிகாரியானார். யாரையும் தன் வழிக்குக் கொண்டுவரும் வசீகர சக்தி அவளிடம் இருந்தது. ஒரு முறை, ஆதித்த கரிகாலனிடம் பேசும்போது, சுந்தர சோழரை சிறையில் அடைத்துவிட்டு, பெரிய பழுவேட்டரையரைக் கொன்றுவிட்டு தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டாள் நந்தினி. இதற்கு ஆதித்தன் மறுத்துவிட்டாலும், அதற்குப் பிறகு அவனுக்கு தஞ்சாவூருக்குச் செல்வதென்றாலே பயமாக இருந்தது. 

 ஆதித்த கரிகாலனின் ஓலையை எடுத்துக்கொண்டுவந்த வந்தியத்தேவன், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியிருந்தபோது பழுவேட்டரையர் உள்ளிட்ட சோழ நாட்டுப் பிரமுகர்களின் சதியைப் பற்றித் தெரிந்துகொண்டான். அதன் பிறகு, தஞ்சாவூர் சென்று நந்தினியைச் சந்தித்து முத்திரை மோதிரத்தைப் பெற்றான். 


அதைப் பயன்படுத்தி சுந்தரசோழரைச் சந்தித்து ஓலையை அளித்தான். இதற்குப் பிறகு, பழுவேட்டரையர்கள் அவனைக் கைதுசெய்ய முயற்சித்தபோதிலும் அதிலிருந்து தப்பிய வந்தியத்தேவன், பழையாறையைச் சென்றடைந்தான். 

குந்தவையைச் சந்தித்து ஆதித்த கரிகாலன் கொடுத்த ஒலையைக் கொடுத்தான். அந்த சந்திப்பிலேயே குந்தவையிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தான். பிறகு குந்தவை கேட்டுக்கொண்டபடி, அருள்மொழி வர்மனைச் சந்திக்க இலங்கைக்குச் சென்றான். "ராஜ்யத்திற்குப் பேரபாயம் வந்திருக்கிறது. உடனே புறப்பட்டு வா" என ஒரு ஒலையை எழுதி அவனிடம் கொடுத்து அனுப்பினாள் குந்தவை. அதை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் இலங்கைக்குப் புறப்பட்டான். 

 வந்தியத்தேவன் தன்னுடைய பயணத்தின்போது, ஆழ்வார்க்கடியான் என்ற வீர வைணவனைச் சந்தித்தான். அவன் நாடெங்கும் சென்று தகவல் சேகரிப்பது தெரிந்தாலும், யாருடைய சார்பில் பணியாற்றுகிறான் என்பது தெரியவில்லை. இதனால், அவனிடம் ஜாக்கிரதையாக இருந்தான் வந்தியத்தேவன். இதற்கிடையில் ஆதித்த கரிகாலனின் உள்ளம் குழம்பிப் போயிருந்தது. வந்தியத்தேவன் என்னவானான் என்ற தகவலும் தெரியவில்லை. தன்னுடைய தம்பிக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று போர் தொடுத்து வெற்றிகளை ஈட்ட விரும்பினான் ஆதித்த கரிகாலன். 

இதனால், அருள்மொழி வர்மனை வரவழைக்க தன்னுடைய நண்பனான பல்லவ குல பார்த்திபேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான் ஆதித்த கரிகாலன். கோடிக்கரை சென்ற வந்தியத்தேவன், அங்கிருந்த பூங்குழலி என்ற பெண்ணின் உதவியால் இலங்கையை அடைந்து, அருமொழி வர்மனைச் சந்தித்து குந்தவை கொடுத்த ஓலையைக் கொடுத்தான். அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் நெருக்கமான நண்பர்களாயினர்.

 அப்போது இலங்கையில் தான் கண்டறிந்த சில அதிசயமான விவரங்களை அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனுக்குச் சொன்னார். அதாவது, சுந்தரசோழர் பட்டத்து இளவரசராவதற்கு முன்பாக இலங்கையை அடுத்த பூதத் தீவில் சில காலம் தங்க நேர்ந்தது. அங்கே அவரைத் தாக்கவந்த கரடியிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். வாய்பேசவோ, கேட்கவோ இயலாத அந்தப் பெண்ணைக் காதலிக்கும் சுந்தர சோழர், சில காலம் அவளுடன் வாழ்கிறார். பிறகு அவளைப் பிரிந்து நாடு திரும்புகிறார். அந்த வாய்பேச முடியாத பெண்தான், பொன்னி நதியிலிருந்து அருள்மொழி வர்மனைக் காப்பாற்றியவள். 

இலங்கையிலும்கூட மேலும் பல அபாயங்களில் இருந்து அருள்மொழி வர்மனைக் காப்பாற்றுகிறாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறித்தும் அந்தக் குழந்தைகள் யார் என்பது குறித்தும் அருள்மொழி வர்மனுக்கு சில யூகங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தன் தந்தையைச் சந்தித்து சொல்ல விரும்புகிறார் அருள்மொழிவர்மன். இதற்கிடையில், ஆதித்த கரிகாலன் அனுப்பிய பார்த்திபேந்திரனும் இலங்கையை வந்தடைந்து அருள்மொழிவர்மனைச் சந்திக்கிறான்.

தஞ்சாவூருக்கோ, பழையாறைக்கோ செல்லாமல் காஞ்சிபுரத்திற்கு வரும்படி சொல்கிறான் பார்த்திபேந்திரன். இதற்கிடையில், அருள்மொழிவர்மனைக் கைதுசெய்து அழைத்துப் போவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு கப்பல்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி சொல்கிறாள். இதையடுத்து தானே அவர்களிடம் சென்று சரணடையப் போவதாகச் சொல்லிச் செல்கிறார் அருள்மொழி வர்மன். ஆனால், அந்தக் கப்பல்களில் ஒன்று மூழ்கிவிடுகிறது. இன்னொரு கப்பலை அரேபியர்கள் சிலர் கைப்பற்றுகின்றனர். 

அரேபியர்கள் கைப்பற்றிய கப்பலில்தான் இளவரசர் அருள்மொழிவர்மன் இருப்பதாகக் கருதிய வந்தியத்தேவன் அந்தக் கப்பலில் ஏறுகிறான். ஆனால், அதே கப்பலில் ஏறும் பாண்டியநாட்டு ஆபத்துதவி ரவிதாஸனும் அவனுடைய தோழனும் அரேபியர்களைக் கொன்றுவிட்டு, வந்தியத்தேவனை கப்பலிலேயே கட்டிப்போட்டுவிட்டு, படகில் தப்பிச் செல்கிறார்கள். வந்தியத்தேவனை மீட்பதற்காக பார்த்திபேந்திரனுடன் அந்தக் கப்பலை பின் தொடர்ந்து செல்கிறார் அருள்மொழி வர்மன். 

 இதற்கிடையில் வந்தியத்தேவன் இருக்கும் கப்பலை இடி தாக்கி, தீப்பிடிக்கிறது. இதையடுத்து, அவனை ஒரு படகில் சென்று காப்பாற்றுகிறார் அருள்மொழிவர்மன். ஆனால், இருவருமே கடல்கொந்தளிப்பில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை அடுத்த நாள் காலையில் பூங்குழலி காப்பாற்றுகிறாள். இலங்கையிலிருந்து அருள்மொழிவர்மனை அழைத்துவர பழுவேட்டரையர் அனுப்பிய கப்பல்களில் ஒன்று கரைதட்டிவிட, மற்றொன்று புயலில் சிக்குகிறது. அந்தக் கப்பலில் இருந்து ஒரு படகில் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் தப்புகிறார்கள். 

கடலில் தத்தளித்த அவர்களை பூங்குழலி காப்பாற்றுகிறாள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம். தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். துறைமுகப்பட்டினமான நாகப்பட்டனத்திற்கு இளவரசன் அருள்மொழிவர்மன் வந்துசேர்ந்தால், அவரை வரவேற்று அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குச் செல்லலாம் என நினைத்து பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருந்தனர். ஆனால், புயல் வீசியதால் தான் அனுப்பிய கப்பல்கள் என்ன ஆனதோ எனத் திகைத்து நின்றுகொண்டிருந்தார். 

 அப்போது வேறொரு கப்பலில் வந்த பார்த்திபேந்திரன் ஒரு படகு மூலம் கரைக்கு வந்து இறங்கி, பழுவேட்டரையரை சந்தித்து கப்பல்களுக்கு நேர்ந்த கதியை விவரித்தான். இளவரசனின் கதியும் வந்தியத்தேவனின் கதியும் தெரியவில்லை என்றான் பார்த்திபேந்திரன். இதைக் கேட்ட பழுவேட்டரையர் மனம் கலங்கிப்போனார்.இந்த நேரத்தில், நந்தினியை சந்தித்த பார்த்திபேந்திரன் அவள் அழகில் சொக்கிப் போனான்.

 பார்த்திபேந்திரனிடம் பேசிய நந்தினி, ஆதித்த கரிகாலனை எப்படியாவது கடம்பூருக்கு வரவழைக்க வேண்டுமென்றாள். அவனை அங்கே வரவழைத்து, சம்புவரையர் மகளை அவனுக்குத் திருமனம் செய்துகொடுத்துவிடலாம் என்றும் சோழப் பேரரசை அதற்குப் பிறகு, இரண்டாகப் பிரித்து ஆதித்த கரிகாலனுக்கும் மதுராந்தகனுக்கும் கொடுத்துவிடலாம் என்றும் சொன்னாள். அதற்கு பார்த்திபேந்திரன் ஒப்புக்கொண்டான். 

 இதற்கிடையில் பூங்குழலியின் படகில் வந்தியத்தேவனும் அருள்மொழி வர்மனும் வேறு பாதையில் கோடிக்கரை வந்தனா். இளவரசருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், குந்தவை சொல்லி அனுப்பியபடி நாகப்பட்டனம் சூடாமணி விகாரைக்கு கொண்டு சென்றனர். இளவரசருக்கு நாகப்பட்டனம் சூடாமணி விகாரையின் தலைமை பிக்குவே சிகிச்சை அளித்தார். இதற்குப் பிறகு வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்காக பழையாறையை நோக்கிச் சென்றான். 

அப்படிப் போகும் வழியில் சிலர் அவனை மடக்கி நந்தினியின் முன்பாக நிறுத்தினார்கள். நந்தினி அவனிடம் கொடுத்த முத்திரை மோதிரத்தை திரும்பக் கேட்டாள். அதனை இலங்கையில் தளபதி பறித்துக்கொண்டுவிட்டதாகச் சொன்னான் வந்தியத்தேவன். இதையடுத்து, இலங்கையில் வந்தியத்தேவன் சந்தித்த வாய்பேச முடியாத பெண்மணியான மந்தாகினியை மீண்டும் எங்காவது பார்த்தால் தன்னிடம் கூட்டிவர வேண்டுமென வந்தியத்தேவனிடம் சொன்னாள் நந்தினி. 

மேலும், கந்தமாறனை முதுகில் குத்த உத்தரவிட்டது பழுவேட்டரையர் என்பதையும் சொன்னாள். இதற்குப் பிறகு, வந்தியத்தேவன் தன்னிடம்தான் முத்திரை மோதிரம் இருப்பதாகச் சொன்னான். ஆனால், அந்த மோதிரத்தை அவனையே வைத்துக்கொள்ளச் சொன்ன நந்தினி, மீண்டும் அவனை கடத்தப்பட்ட இடத்திலேயே இறக்கிவிடும்படி வீரர்களிடம் சொன்னாள்.அங்கிருந்து பழையாறையை வந்தடைந்த வந்தியத்தேவன், எப்படி கோட்டைக்குள் புகுவது என்று யோசித்தான். 

அப்போது மதுராந்தகர் ரதத்தில் வந்துகொண்டிருந்தார். அவரிடம் தன்னை ஒரு ஜோசியக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட வந்தியத்தேவன், அவர் மூலமாகவே கோட்டைக்குள் புகுந்தான். பிறகு ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து குந்தவையை சந்தித்த வந்தியத்தேவன், சூடாமணி விகாரையில் அருள்மொழிவர்மன் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரை பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தான்.

 இதற்கிடையில் மக்கள் அரண்மனை முன்பாகக் கூடி அருள்மொழி வர்மன் இறந்திருக்கலாம் எனக் கூச்சலிட்டார்கள். ஆனால், செம்பியன் மாதேவியும் குந்தவையும் அவர் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதைத் தெரிவித்தார்கள். கூட்டத்திலிருந்த வந்தியத்தேவனை கண்ட வைத்தியரின் மகன், 'ஒற்றன்' என்று குற்றம்சாட்டவும் இருவரும் சண்டைபோட ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட அநிருத்தர், இருவரையும் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

 இதற்கிடையில் மதுராந்தகரைச் சந்தித்த அவரது தாய் செம்பியன் மாதேவி, அவனை சிவபக்தராக வளர்க்கவே தானும் அவருடைய தந்தையும் ஆசைப்பட்டதாகவும் பழுவேட்டரையர் அவருடைய மனதை மாற்றிவிட்டதாகவும் கூறினார். ஆனால், இதை மதுராந்தகர் கேட்கவிரும்பவில்லை. தாயையே தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு வெளியேறினார்.குந்தவையும் அநிருத்தரும் சந்தித்துப் பேசிய பிறகு, வந்தியத்தேவனை ஆதித்த கரிகாலனிடம் அனுப்பி, அவன் கடம்பூருக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று சொன்னார் அநிருத்தர். சிறையிலிருந்த வந்தியத்தேவனை சந்தித்த குந்தவை, அவனைக் காதலிப்பதாகத் தெரிவித்தாள். 

பிறகு ஆதித்த கரிகாலனை சந்தித்து, அவனுடனேயே இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள். அடுத்த நாள் அநிருத்தர் கொடுத்த ஓலையை எடுத்துக்கொண்டு, ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டான் வந்தியத்தேவன். போகும் வழியில் குடந்தை ஜோதிடர் வீட்டில் வானதியைச் சந்தித்தான் வந்தியத்தேவன். அவள் தனது தாத்தாவைப் பார்க்கப்போவதாக குந்தவையிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான்.

 வந்தியத்தேவனைப் பார்த்த அவள், தான் பௌத்த மதத்திற்கு மாற விரும்புவதாகவும் தன்னை நாகப்பட்டனம் சூடாமணி விஹாரையில் சேர்ப்பிக்கும்படியும் கோரினாள் வானதி. ஆனால், தான் முக்கியமான வேலையாகச் சொல்லி அதை மறுத்துவிட்டான் வந்தியத்தேவன். இதற்குப் பிறகு அநிருத்தரின் ஆட்கள் அவளது பயணத்தைத் தடுத்து, மீண்டும் அவளைக் குந்தவையிடம் சேர்ப்பித்தனர். 

இந்தக் களேபரத்தில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பிரிந்துவிட, அமாவாசை இருட்டில் ஒரு மண்டபத்தைச் சென்றடைந்தான் வந்தியத்தேவன். அந்த மண்டபத்திற்குள் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையோடு அவன் பேசிக்கொண்டிருந்தபோது ரவிதாசன் உள்ளிட்ட சதிகாரர்கள் அங்கே வந்துவிட்டனர்.

 அவர்கள் வந்தியத்தேவனைப் பிடித்து கட்டிப்போட்டார்கள். சிறிது நேரத்தில் நந்தினியும் அங்கே வந்து சேர்ந்தாள். அந்தச் சிறுவனுக்கு பாண்டிய இளவரசனாக பட்டாபிஷேகம் நடந்தது. இவையெல்லாம் முடிந்த பிறகு, வந்தியத்தேவனை கொல்லாமல் விட்டுவிடலாம் என்று சொன்னாள் நந்தினி.இதற்கிடையில் வானதியும் குந்தவையும் நாகப்பட்டனம் சென்று இளவரசனைச் சந்தித்தனர். 

இலங்கையில் உள்ள வாய்பேச முடியாத பெண்ணை தஞ்சைக்கு எப்படியாவது அழைத்துவர வேண்டுமென இளவரசனிடம் கூறினாள் குந்தவை. நந்தினியை வைத்து சுந்தரசோழரை எப்படி பயமுறுத்திவருகிறார்கள் என்பதையும் விவரித்தாள். பழுவேட்டரையர்களும் சில சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டு செய்துவரும் சதி பற்றியும் கூறினாள். 

 காஞ்சிபுரத்திலிருந்து கந்தமாறன், பார்த்திபேந்திரனுடன் ஆதித்த கரிகாலன் கடம்பூரை நோக்கிப் புறப்பட்டான். ஆதித்த கரிகாலன் புறப்பட்டது தெரியாமல் காஞ்சிபுரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் கடம்பூர் பக்கமிருந்த ஐய்யனார் கோவிலில் தங்கினார்கள். அங்கிருந்த மண் யானைக்குக் கீழிருந்த சுரங்கத்தின் வழியாக கடம்பூர் அரண்மனைக்குள் சென்ற வந்தியத்தேவன், கந்தமாறனின் சகோதரி மணிமேகலையின் உதவியால், அரண்மனையின் மேல்மாடத்தைச் சென்றடைந்தான். 

 அன்று இரவு ஆதித்த கரிகாலனும் கந்தமாறனும் அங்கே வருவதாக மணிமேகலை சொன்னாள். விரைவிலேயே வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியான் வந்து இணைந்துகொண்டான். பிறகு, அரண்மனைக்கு வெளியில் சென்று, ஆதித்த கரிகாலனைச் சந்தித்து அவனுடன் சேர்ந்துகொண்டான் வந்தியத்தேவன். பிறகு அரண்மனைக்கு வந்த ஆதித்த கரிகாலன், அங்கிருந்த அனைவரிடமும் குத்தலாகவே பேசினான். கந்தமாறனை தன் நண்பன் வந்தியத்தேவன் கத்தியால் குத்தவில்லை என்றும் சொன்னான். இதற்கிடையில், நந்தினியைச் சந்தித்த மணிமேகலை, தனக்கு வந்தியத்தேவன் மேல்தான் விருப்பம் என்றும் ஆனால், தன்னை ஆதித்த கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள் என்றும் கூறினாள்.

கோடிக்கரையில் சேந்தன் அமுதனும் பூங்குழலியும் பேசிக்கொண்டிருந்தார்கள். பூங்குழலியைக் காதலிப்பதாக சேந்தன் அமுதன் சொன்னான். அதை அவள் ஏற்கவில்லை. அந்தத் தருணத்தில் மந்தாகினி அங்கு வந்தாள். ஆனால் இவர்கள் அவளை அழைத்ததும் ஓடத் துவங்கினாள். சிறிது நேரத்தில் அவளை வேறு யாரோ சிலர் மடக்கிப் பிடித்து, பல்லாக்கில் வைத்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லத் துவங்கினர்.இந்த விவகாரம் குறித்து சக்கரவர்த்தியிடம் முறையிடலாம் என்று முடிவுசெய்த பூங்குழலியும் சேந்தன் அமுதனும் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டனர். 

வழியில் மழையின் காரணமாக பல்லாக்கு நின்றபோது, அந்த வழியாக வந்த பூங்குழலி சேந்தன் அமுதனும் வந்தனர். மந்தாகினிக்குப் பதிலாக பூங்குழலி பல்லக்கில் ஏறிக்கொண்டாள். மந்தாகினியை சேந்தன் அமுதன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். தஞ்சை அரண்மனையில் பல்லக்கில் வந்தது பூங்குழலி என்பதை அறிந்த அநிருத்த பிரம்மராயர் ஆச்சரியமடைந்தார். 

மந்தாகினி தனக்கு அத்தை என்பதை விளக்கினாள் பூங்குழலி. பிறகு, மந்தாகினியைக் காட்டுவதாகக் கூறி ஆழ்வார்க்கடியானை சேந்தன் அமுதன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் பூங்குழலி. அவர்கள் சென்ற பிறகு, அங்கிருந்த குந்தவையிடம், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார் அநிருத்த பிரம்மராயர்.

 "தன் மகன்களுக்கு ஆபத்துவரும் என்பதால்தான் மதுராந்தகருக்கு பட்டம் கட்ட விரும்புகிறா் சக்ரவர்த்தி. அவரிடம் ஒருமுறை அருள்மொழி வர்மனைக் காட்டிவிட்டாள் அவருடைய அச்சம் தீர்ந்துவிடும்" என்றாள் குந்தவை. அதேபோல, "தானும் மந்தாகினி உயிரோடு இருப்பதை சக்ரவர்த்தியிடம் தெரிவித்துவிட்டால் அவருடைய பயம் தீர்ந்துவிடும் என நினைத்ததாகவும் ஆனால், அதனை பூங்குழலி கெடுத்துவிட்டதாகவும்" குற்றம் சுமத்தினார் அநிருத்த பிரம்மராயர்.அப்போது அங்கு வந்த பூங்குழலியும் ஆழ்வார்க்கடியனும், மந்தாகினியை கோட்டைக்கு அழைத்துவந்தபோது, கூட்டத்தோடு கலந்து காணாமல்போய்விட்டதாகத் தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்ட மந்தாகினி அவனால் ஏதாவது தீய காரியம் நடக்கக்கூடும் என்பதால் அவனைப் பின்தொடர்ந்தாள். 

 அவனும் ரவிதாஸனும் ஒரு நிலவறை மூலமாக சுந்தர சோழரின் படுக்கை அறையை சென்றடைந்தார்கள். மூன்று நாட்கள் அந்த நிலவரையிலேயே காத்திருந்து, பிறகு வேல் எறிந்து சுந்தரசோழரைக் கொல்ல வேண்டுமென்றான் ரவிதாஸன். பிறகு சோமன் சாம்பவனை அங்கே விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான்.இதையெல்லாம் கவனித்த மந்தாகினி, இருள் சூழ்ந்ததும் சோமன் சாம்பவனை பயமுறுத்தி விரட்டிவிட்டு, அவர்கள் சென்ற நிலவறை வழியாகவே சுந்தர சோழரின் படுக்கை அறையைச் சென்றடைந்தாள். அப்போது அங்கே பூங்குழலி, அநிருத்தர் ஆகியோர் இருந்தனர்.

 அநிருத்தர் சக்கரவர்த்தியிடம் எல்லா உண்மையையும் சொன்னார். அருள்மொழிவர்மன் பத்திரமாக இருப்பதை பூங்குழலி தெரிவித்தாள். பிறகு எல்லோரும் அங்கிருந்து சென்ற பிறகு, மந்தாகினி அங்கே வந்தாள். அவளைப் பார்த்ததும் அருகில் இருந்த உலோகப் பொருள் ஒன்றை அவள் மீது எறிந்தார். அவள் கத்திய சத்தம் கேட்டதும் அனைவரும் ஓடிவந்தார்கள். அப்போது குந்தவை, அவள்தான் மந்தாகினி என்றும் அவள் சாகவில்லையென்றும் கூறினாள். இதற்கிடையில், நந்தினி சில மந்திரவாதிகளைச் சந்திப்பதைப் பற்றியும் ஒரு சிறுவனை பாண்டிய இளவரசனாக மகுடாபிஷேகம் செய்ததைப் பற்றியும் அநிருத்தர் சொன்னார். 

நந்தினி மன்னருடைய மகளாகக்கூட இருக்கலாம் என்றும் சொன்னார். மந்தாகினி உயிருடன் இருந்தது மன்னருக்கு நிம்மதியை அளித்தது. ஆனால், மந்தாகினி தூங்கவில்லை. அன்று இரவு, பூங்குழலியும் மந்தாகியினியும் புறப்பட்டு சுரங்கத்தை அடைந்தனர். காலையில், அவர்களைக் காணாமல் மற்றவர்கள் தேடினர். இதற்கிடையில் கடம்பூரில் ஆதித்த கரிகாலன் தொடர்ந்து குதர்க்கமாகவே பேசிவந்தான். பிறகு ராஜ்யத்தை மதுராந்தகனுக்கே கொடுத்துவிடுவதாகவும் தான் படையெடுத்துச் செல்ல பொருளுதவி செய்தால் போதுமென்றும் சொன்னான். அதற்கு மன்னரைக் கேட்க வேண்டும் என பழுவேட்டரையர் சொன்னதும், அவரைக் கேட்டா அருள்மொழிவர்மனை சிறைப்பிடித்து வர ஆள் அனுப்பினீர்கள் என்று கேட்டான். 

 இதற்குப் பிறகு தான் தஞ்சைக்குத் திரும்புவதாகச் சொன்னார் பழுவேட்டரையர். ஆனால், பழுவேட்டரையரை இழிவாகப் பேசியதற்காக தான் கடம்பூரிலேயே தங்கியிருந்து ஆதித்த கரிகாலனை பழிவாங்க விரும்புவதாகச் சொன்னாள் நந்தினி. பிறகு பழுவேட்டரையர் தஞ்சைக்குப் புறப்பட்டார். 

இதற்கிடையில் நாகப்பட்டனம் சூடாமணி விஹாரையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அருள்மொழி வர்மனும் தலைமை பிக்குவும் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தார்கள். தனக்கு உடல் நலம் சரியாகிவிட்டதால், தான் தஞ்சாவூருக்குப் போய் தனது தந்தை சுந்தரசோழரைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார் அருள்மொழி வர்மர்.

ஆனால், அவர் அங்கு தங்கியிருக்கும் விஷயம் வெளியில் பரவியதால், மக்கள் விஹாரைக்கு முன்பாக வெளியில் குவிந்துவிட்டார்கள்.

 இளவரசரைப் பார்க்க வேண்டுமனக் கூச்சலிட்டார்கள். ஆகவே அருள்மொழி வர்மர் அங்கிருந்து சென்றுவிடுவதென்றும், அவர் சென்ற பிறகு யாராவது ஒருவரை உள்ளே அழைத்து வந்து காண்பிக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டது. அந்தத் திட்டப்படி, கூட்டத்தில் இருந்த பூங்குழலியின் அண்ணன் முருகய்யன் உள்ளே அழைத்துவரப்பட்டான்.

அவன் இளவரசரை அங்கிருந்து, சிறிது தூரத்தில் இருந்த ஆனைமங்கலத்துக்கு விஹாரையின் பின்பக்கத்தில் இருந்த படகுத் துறை வழியாக, படகில் அழைத்துச் சென்றான். சிறிது தூரம் சென்றவுடன், கடுமையான புயல் வீசியதில் சூடாமணி விகாரை நீரில் மூழ்குவதைப் பார்த்த அருள்மொழிவர்மர், திரும்பவும் அங்கே சென்று தலைமை பிக்குவை படகில் மீட்டுக்கொண்டு ஆனைமங்கலம் அரண்மனைக்கு வந்தார்.

அங்கே மழைக்காக பெரிய அளவில் மக்கள் கூட்டமும் ஒதுங்கியிருந்தது. மழை நின்ற பிறகு, ஒரு வியாபாரியின் வேடத்தில் இளவரசரும் முருகய்யனும் வெளியில்புறப்பட்டார்கள். அவர்களை வழியில் பார்த்த முருகய்யனின் மனைவி ராக்கம்மாள், இளவரசரை அடையாளம் கண்டுகொண்டு, கத்தினாள். இதையடுத்து அவர் நாகப்பட்டனம் மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு ஒரு நாள் கழித்தார். பிறகு தனது வேஷத்தை கலைத்துவிட்டு யானை மேல் ஏறி தஞ்சாவூருக்குச் சென்றார்.

புயல் அடித்துக்கொண்டிருந்த நாளில்தான் கடம்பூரிலிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டார் பழுவேட்டரையர். தஞ்சாவூருக்குச் சென்று மதுராந்தகனை அழைத்துவரும்படி, நந்தினிதான் அவரை அனுப்பியிருந்தாள்.

 அந்த சமயத்தில் கந்தமாறன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன் என மூன்று இளைஞர்களுக்கு மத்தியில் நந்தினியை விட்டுவந்தது அவருக்கு ஏற்புடையதாக இல்லை. நந்தினி தொடர்பாக பல சந்தேகங்கள் அவருக்கு தோன்றியபடி இருந்தன. இவையெல்லாம் யோசித்தபடி கொள்ளிடத்தைக் கடப்பதற்கு படகில் பயணித்தார் பழுவேட்டரையர்.

படகு கரையை நெருங்கும் சமயம் அதனருகில் ஒரு மரம் விழுந்ததால், சட்டெனக் கவிழ்ந்தது. படகில் இருந்த மற்ற வீரர்கள் உஷார் நிலையில் இருந்ததால், நீந்திக் கரையேறினர். ஆனால், பழுவேட்டரையர் எதையோ யோசித்தபடி இருந்ததால் உடனடியாக கரையேற முடியவில்லை. ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு மிதந்த அவர், இரவுக்குப் பிறகு ஏதோ ஓர் இடத்தில் கரையேறி, அருகில் இருந்த துர்க்கை கோவிலை அடைந்து அங்கிருந்த பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு களைப்பில் தூங்கிப் போனார்.

நந்தினியை நம்ப வேண்டாமென துர்க்கை சொல்வதைப் போல அவருக்குக் கனவு வந்தது. அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தபோதும் கோவிலைச் சுற்றி வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடம் திருப்புறம்பியம் என்பது அவருக்குப் புரிந்தது. அன்று இரவில் அந்த மண்டபத்தைவிட்டு அவர் வெளியேற நினைத்த போது, யாரோ 'ரவிதாஸா' என்று அழைக்கும் குரல் கேட்டது.

 பழுவேட்டரையருக்கு நந்தினியைத் தேடிவரும் மந்திரவாதியின் நினைவுவந்தது. உடனே, அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள மண்டபத்தின் முன்பு மயங்கிக் கிடப்பதைப் போல படுத்துக்கொண்டார். வந்தவன் தேவராளன் என்பது பழுவேட்டரையருக்குத் தெரிந்தது. கோவிலுக்குள் வந்த தேவராளன், பழுவேட்டரையர் அங்கு கிடப்பதைப் பார்த்து பயந்துபோய், அங்கிருந்து ஓடிவிட்டான்.

பழுவேட்டரையரும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினார். முடிவில் பிருதிவீபதியின் பள்ளிப்படை கோவிலை சென்றடைந்தார். அங்கே தேவராளனும் ரவிதாஸனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் சுந்தர சோழனின் இரண்டு மகன்களும் செத்துப் போவார்கள் என்று தேவராளனிடம் சொன்னான் ரவிதாஸன்.

தேவராளனாக இருந்தவன், சில காலத்திற்கு முன்பாக அரண்மனையில் வேலை பார்த்து தன்னால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பரமேஸ்வரன் என்பது பழுவேட்டரையருக்குத் தெரிந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதிலிருந்து பல விஷயங்கள் அவருக்குப் புரியவந்தன. 

அதாவது, தஞ்சாவூருக்கு இளவரசர் யானை மீது வந்துகொண்டிருப்பதாகவும் வரும் வழியில் பாகனை மாற்றிவிட்டு, அருள்மொழி வர்மனைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். சுந்தர சோழர் உள்ள அரண்மனையின் நிலவறையில் காத்திருக்கும் சோமன் சாம்பவன் வேலை எறிந்து சுந்தர சோழரை கொல்வான் என்றும் கூறினார்கள்.

மேலும், வீரபாண்டியன் இறப்பதற்கு முன்பாக பழுவூர் ராணியைத் தனது பட்ட மகிஷியாக்கிக் கொண்டதையும் பாண்டிய குமாரன் கையிலிருந்து வீரவாளைப் பெற்றுக்கொண்டதையும் ரவிதாஸன் நினைவுகூர்ந்தான்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டு, பழியை வந்தியத்தேவன் மீது போடுவதற்கு நந்தினி திட்டமிட்டிருப்பதையும் விளக்கினான். இவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட பழுவேட்டரையர், ரவிதாஸனையும் தேவராளனையும் பிடித்து தனது கைகளாலேயே இறுக்கிக் கொல்ல முயன்றார். ஆனால், அவர்கள் அவர் மீது பாழடைந்த மண்டபத்தை தள்ளிவிட்டுவிட்டு, தப்பிச் சென்றார்கள்.

நினைவிழந்து கிடந்த பழுவேட்டரையர் கண்விழித்துப் பார்த்தபோது வானத்தில் தூமகேது, மறைவதைப் பார்த்தார். அன்று திட்டமிடப்பட்டிருக்கும் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கருதினார். ஆகவே தட்டுத்தடுமாறி நடந்து சென்று குடந்தை ஜோதிடர் வீட்டை அடைந்தார். 

ஜோதிடரின் வீட்டில் குந்தவையும் வானதியும் இருந்தனர்.தஞ்சைக்கு வரும் அருள்மொழி வர்மனை பழையாறையிலேயே தடுத்து நிறுத்துவதற்காகப் புறப்பட்ட குந்தவையும் வானதியும், ஜோதிடரைச் சந்தித்து ஆலோசனை கேட்க அங்கு வந்திருந்தனர். அவர்களிடம், அன்று நடக்கவிருந்த சதித் திட்டங்களையெல்லாம் விளக்கிவிட்டு, குந்தவை வந்த ரதத்தை எடுத்துக்கொண்டு தான் கடம்பூருக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னார் பழுவேட்டரையர். அங்கே சென்று நந்தினியைக் கொல்லப்போவதாகவும் சொன்னார்.

ஆனால், நந்தினி தங்கள் சகோதரி என்றும் அவளைக் கொல்ல வேண்டாமென்றும் குந்தவை கேட்டுக்கொண்டாள். பிறகு, தான் தஞ்சைக்கே திரும்பி காரியங்களைக் கவனிப்பதாகச் சொன்னாள் குந்தவை. பழுவேட்டரையர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு ஆழ்வார்க்கடியான் ஜோதிடர் வீட்டிற்குள் நுழைந்தான்.

வானதியை அருள்மொழி வர்மனுக்கு திருமணம் செய்துவைப்பதோடு, அவனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென வலியுறுத்தியும் பழுவேட்டரையர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரியும் தென்திசைத் தளபதி பூதி விக்கிரமகேசரி தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட வந்துகொண்டிருப்பதாக ஆழ்வார்க்கடியான் சொன்னான். மேலும் திருக்கோவலூர் மலையமானும் படையுடன் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான்.

அந்த நேரத்தில் பூங்குழலியும் அங்கே வந்தாள். தனது அத்தை சுரங்க நிலவறையில் சக்கரவர்த்தியை பாதுகாப்பதற்காக ஒளிந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தாள். அந்த நேரத்தில் அருகில் இருந்த ஆற்றின் வெள்ளம் குடந்தை ஜோதிடரின் குடிசையை நெருங்கவே, எல்லோரும் அருகில் உள்ள கோவில் மண்டபத்தில் ஏறிக்கொண்டார்கள். வானதி மட்டும் கீழே சீக்கிக் கொண்டாள். பிறகு, அந்தப் பக்கம் மிதந்துவந்த குடந்தை ஜோதிடரின் கூரை மீது வானதி ஏறிக் கொண்டாள். அவளைக் காப்பாற்ற பூங்குழலி படகில் சென்றாள்.

இதற்கிடையில் இளவரசர் அருள்மொழி வர்மனைக் கொல்ல யானைப் பாகன் மூலம் திட்டமிடப்பட்டிருந்தது அவருக்குத் தெரிந்துவிட்டது. அந்தப் பாகனை விரட்டிவிட்டு அவரே பாகனைப் போல யானையைச் செலுத்த ஆரம்பித்தார். செல்லும் வழியில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருந்த பூங்குழலியையும் வானதியையும் காப்பாற்றி, நடந்த விஷயங்களையெல்லாம் கேட்டறிந்தார் அருள்மொழி வர்மர்.

அந்த நேரத்தில் கொடும்பாளூர்த் தலைமைக்கு உட்பட்ட பராந்தகச் சோழப் பெரும் படையும், தென்பாண்டிய நாட்டிலிருந்த தெரிஞ்ச கைக்கோளர் பெரும் படையும், ஈழத்துப்போரில் ஈடுபட்டிருந்த அரிஞ்சய சோழப் பெரும் படையும் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தன. 

இதையடுத்து தஞ்சைக் கோட்டையின் கதவுகளை மூட சின்னப் பழுவேட்டரையர் உத்தரவிட்டார். அடுத்ததாக என்னசெய்வதென்று கோட்டைக்கு பூதி விக்கிரமகேசரி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, யானை மீது வானதியும் பூங்குழலியும் வந்தனர். யானைப் பாகனாக வந்த அருள்மொழிவர்மனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

தான் சக்ரவர்த்திக்கு குந்தவையிடமிருந்து செய்தி கொண்டுவந்திருப்பதாக வானதி சொன்னாள். அருள்மொழி வர்மனுக்கு என்ன ஆனது என்பது பற்றி தனக்குத் தெரியும் என்றாலும் அதைப் பற்றி தான் சொல்ல முடியாது என்றும் கூறினாள். சக்கரவர்த்தியை சந்திக்க தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டுமென்றும் தெரிவித்தாள். இதையடுத்து "நாளை பகல் பொழுதுக்குள் தாங்கள் சக்கரவர்த்தியைத் தரிசிக்க முடியவில்லையென்றால், கோட்டையைத் தகர்ப்போம்" என சின்ன பழுவேட்டரையரிடம் சொல்லுமாறுகூறி வானதியை அனுப்பிவைத்தார் விக்கிரமகேசரி.

வானதி வந்திருக்கும் செய்தி தெரிந்ததும், கோட்டைக் கதவுகளைத் திறந்து யானையை உள்ளே அனுமதிக்கச் சொன்னார் சின்னப் பழுவேட்டரையர். பிறகு வானதி, பெரிய பழுவேட்டரையர் குடந்தை ஜோதிடர் வீட்டில் தங்களிடம் சொன்ன தகவல்களை அவரிடம் தெரிவித்தாள். சிறிது நேரத்தில், யானைப் பாகன் வேடத்தில் வந்தது அருள்மொழிவர்மன்தான் என்பதும் சின்னப் பழுவேட்டரையரான காலாந்தக கண்டருக்குப் புரிந்தது. பிறகு சக்கரவர்த்தியைப் பார்க்க அவர்கள் சென்றனர்.

சக்கரவர்த்தியைப் பார்க்கப் போகாமல், வெளியிலேயே நின்றுவிட்ட பூங்குழலி சின்னப் பழுவேட்டரையரிடம், பொக்கிஷ நிலவறையில் யாராவது ஒளிந்துகொண்டிருக்கலாம் என்று கூறினாள். அப்படி யாராவது இருந்தால் தேடிப் பார்க்கலாம் என்று சின்னப் பழுவேட்டரையரும் பூங்குழலியும் சென்றார். அந்த நேரத்தில் சுந்தர சோழர் இருந்த அந்தப்புர அறையில், ஒரு பெண் கத்தும் விபரீதமான சத்தம் கேட்டது. பூங்குழலி அந்தப்புரத்திற்குள் ஓடிப் போய் பார்த்தபோது, சுந்தரசோழர் அருள்மொழி வர்மனின் கையைப் பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மந்தாகினி தேவி திடீரென அவர்களுக்கு முன்வந்து நின்றாள். சுந்தரசோழரை கொல்ல வீசப்பட்ட வேல், அவள் மீது பாய்ந்தது. சுந்தரசோழரின் மடியில் படுத்தபடி உயிர்நீத்தாள் மந்தாகினி.

கடம்பூர் அரண்மனையில் இருந்த நந்தினி மிகுந்த பரபரப்புடன் இருந்தாள். பெரிய பழுவேட்டரையரின் படகு மூழ்கிய செய்தி தெரிந்தபோதும் கலக்கமடையாமல் இருந்தாள். ஆதித்த கரிகாலன் உன்மத்தம் பிடித்த நிலையில் இருந்தான். நண்பர்கள் யாரையும் நம்பவில்லை. வந்தியத்தேவனை அன்று முழுவதும் தன் முகத்திலேயே விழிக்காதே என்று கூறிவிட்டான்.

இதற்குப் பிறகு வந்தியத்தேவனை சந்தித்த கந்தமாறனின் சகோதரி மணிமேகலை, வந்தியத்தேவன் கடம்பூரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் இல்லாவிட்டால் ஆபத்து ஏற்படுமென்றும் சொன்னாள். ஆனால், அதை அவன் ஏற்கவில்லை. பிறகு, கடம்பூர் மாளிகையின் வேட்டை மண்டபத்திற்குள் யாரோ இருப்பதாகத் தெரிவதாகவும் உள்ளே சென்று பார்க்கலாம் என்றும்கூறி மணிமேகலையும் வந்தியத்தேவனும் உள்ளே சென்றனர்.

அந்த மண்டபத்திற்குள் வந்த ரவிதாஸனும் வேறு சிலரும் சேர்ந்து வந்தியத்தேவனையும் மணிமேகலையையும் கட்டிப்போட்டனர். ஆனால், அவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டனர். அப்போது அங்கு வந்த நந்தினி, விரைவில் ஆதித்த கரிகாலன் இங்கே வரவிருப்பதாகவும் அதற்குள் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடும்படியும் கூறினாள். வந்தியத்தேவன் நந்தினியிடம், ஆதித்த கரிகாலன் நந்தினியின் சகோதரன் என்று சொன்னான்.

இதற்குள் கந்தமாறனும் ஆதித்த கரிகாலனும் வரும் ஓசை கேட்டது. அவர்கள் வந்ததும் வந்தியத்தேவன் திரைச்சீலைக்குப் பின் ஒளிந்துகொண்டான். மணிமேகலையும் கந்தமாறனும் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். தன்னைக் கொன்றுவிடும்படி கரிகாலன் நந்தினியிடம் சொன்னான். இதையெல்லாம் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு காளாமுக உருவம் கழுத்தை நெறித்தது. அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.

அந்தக் காளாமுகன் கத்தியைத் தூக்கி எறியவும் ஆதித்த கரிகாலன் மாண்டு கீழே விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனின் உடலை எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சம்புவரையரும் கந்தமாறனும் வந்தியத்தேவன்தான் கொலைகாரன் எனக் குற்றம்சாட்டினர். கந்தமாறன் அவனைக் கொல்லப்போனபோது, அதனைத் தடுத்த சம்புவரையர் வந்தியத்தேவனை ஒரு கட்டிலின் காலில் கட்டிவைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

எப்படியோ அதிலிருந்து வந்தியத்தேவன் விடுவித்துக்கொண்டபோது, அந்த அறையில் தீ பரவியது. இதையடுத்து ஆதித்த கரிகாலனின் உடலை அங்கிருந்து மீட்ட வந்தியத்தேவன், கோட்டையைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்த மலையமானிடம் அந்த உடலை ஒப்படைத்தான். உடல் தஞ்சைக்குக் கொண்டுபோகப்பட்டது. வந்தியத்தேவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

உண்மையான கொலைகாரர்களைத் தேடிவந்த ஆழ்வார்க்கடியான், நந்தினியும் அவளது கூட்டாளிகளும் பச்சை மலை அடிவாரத்திற்குப் போகும் செய்தி அறிந்து அங்கு புறப்பட்டான். மந்தாகினியின் மரணத்திற்குப் பழிவாங்க ஆழ்வார்க்கடியானுடன் பூங்குழலியும் சேர்ந்துகொண்டாள். அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது ஒரு குகையில் காளமுகன் தோற்றத்தில் பெரிய பழுவேட்டரையர் இருப்பதைப் பார்த்தார்கள்.

அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. அதாவது, காளாமுகன் தோற்றத்தில் சம்புவரையர் அரண்மனைக்கு வந்த பழுவேட்டரையர், வேட்டை அறையில் ஒளிந்திருந்தபடி நந்தினியைக் கொல்ல விரும்பினார். அவளை நோக்கிக் கத்தியை எறிந்தார். அது ஆதித்த கரிகாலனைக் கொன்றுவிட்டது. இதைத் தெரிந்துகொண்ட ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து புறப்பட்டான்.

அந்த நேரத்தில், சின்னப்பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் அங்கே வந்தனர். நந்தினி அங்கிருந்து தப்பிச் சென்றாள்.

தஞ்சாவூரில் ஆதித்த கரிகாலனின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது, மதுராந்தகன் குறித்த உண்மைத் தகவலை செம்பியன் மாதேவி அவனிடம் தெரிவித்தாள். அதைக் கேட்டு அதிர்ந்துபோனான்.

இதற்கிடையில், குழப்பத்தில் இருந்த குந்தவையை வந்து சந்தித்த மணிமேகலை, தான்தான் ஆதித்த கரிகாலனைக் கொன்றவள் என்றாள். ஆதித்த கரிகாலன் குந்தவைக்கு எழுதிய ஒலை ஒன்றையும் கொடுத்தாள். அதில், ஆதித்த கரிகாலன் "வந்தியத்தேவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நன்றாகப் பாதுகாத்தான். கடம்பூரில் தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அது என் விதிதான்" என்று எழுதியிருந்தான்.

அங்கு வந்த அருள்மொழி வர்மன் குந்தவையுடன் பேசியபோது, நந்தினியும் மதுராந்தகனும் மந்தாகினியின் பிள்ளைகள் என்று தெரிந்தாலும் அவர்கள் சுந்தரசோழனின் குழந்தைகள் இல்லை என்றும் தெரிந்தது. இதனால், மதுராந்தகனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கக்கூடாது என்றாள் குந்தவை. இதற்கிடையில், பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை விடுவிக்க புறப்பட்ட அருள்மொழி வர்மனைத் தடுத்து நிறுத்தினார்கள் மலையமானும் பெரிய வேளாரும். இதற்கிடையில், சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைத் தளபதி பதவி பறிக்கப்பட்டது. பெரிய வேளாரிடம் அந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டது.

பிறகு எல்லோரும் பாதாளச் சிறையில் போய் வந்தியத்தேவனைச் சந்தித்து, ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என நினைத்தார்கள். ஆனால், அங்கே போனபோது வந்தியத்தேவனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பைத்தியக்காரன் ஒருவனும் தப்பித்துப் போயிருந்தார்கள். அவர்களுக்குப் பதிலாக வைத்தியர் மகன் பினாகபாணி அங்கே கட்டப்பட்டிருந்தான். அவனை விடுவித்தார்கள்.

சிறையிலிருந்து தப்பிய வந்தியத்தேவனும் பைத்தியக்காரனும் சேந்தன் அமுதனின் வீட்டிற்குப் போனார்கள். அதற்குள் அங்கு வந்து சேர்ந்திருந்த பினாகபாணி, சேந்தன் அமுதனை கொல்ல நினைத்து அவன் மீது வேலை எறிய முயன்றான். ஆனால், அதை வந்தியத்தேவன் தடுக்கவே, அவனைக் குத்திவிட்டு ஓடிவிட்டான் பினாகபாணி. பூங்குழலியும் சேந்தன் அமுதனும் வந்தியத்தேவனை குடிசைக்குள் தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தார்கள்.

தப்பிச்சென்ற வந்தியத்தேவனைப் பிடிக்க கந்தமாறனும் பினாகபாணியும் சில வீரர்களும் சென்றார்கள். அவர்கள் ஒரு ஆற்றை மூங்கில் பாலத்தின் மூலம் கடக்க முயன்றபோது, கயிற்றை அவிழ்த்துவிட்டான் ஒளிந்திருந்த பைத்தியக்காரன். அனைவரும் ஆற்றில் விழுந்தார்கள். ஆற்றில் விழுந்த பினாகபாணியை கருத்திருமன் கத்தியால் குத்தக்கொன்றான்.

பூங்குழலியின் குடிசைக்குச் சென்ற ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன் மதுராந்தகனின் உடைகளை அணிந்துகொண்டு அவனைப்போல நடிக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படுமென்றும் தெரிவித்தான். முதலில் மறுத்த சேந்தன் அமுதன், பிறகு அதற்கு ஒப்புக்கொண்டான். யானை மீது அமர்ந்து சேந்தன் அமுதனும் சிவிகைக்குள் வந்தியத்தேவனும் இருந்தபடி, அநிருத்தரின் மாளிகையை சென்று அடைந்தார்கள்.

இதற்கிடையில் சுந்தர சோழர் சின்னப் பழுவேட்டரையருக்கு மீண்டும் கோட்டைத் தளபதி பதவியைத் தர உத்தரவிட்டார்.

இதற்குப் பிறகு சேந்தன் அமுதன்தான் செம்பியன் மாதேவியின் உண்மையான மகன் என்றுகூறி சக்கரவர்த்தி முன்பு நிறுத்தினார்கள். தான் வளர்த்த மகன் உண்மையில் அரச குடும்பத்தவன் இல்லை என்பதால்தான் அவனுக்கு பட்டம் கட்டுவதை எதிர்த்ததாக செம்பியன் மாதேவி தெரிவித்தார்.அரண்மனையில் சிகிச்சையில் இருந்த வந்தியத்தேவனை அருள்மொழி வர்மன் சந்தித்தார். அவரிடம் நடந்ததையெல்லாம் கூறிய வந்தியத்தேவன், காளாமுகர் உருவத்தில் வந்தது பெரிய பழுவேட்டரையர்தான் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகக் கூறினான்.

இதற்குப் பிறகு சுந்தரசோழர் மந்திராலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதில் கலந்துகொண்ட பெரிய பழுவேட்டரையர் பல விஷயங்களை விளக்கினார். காளாமுக வேஷம் போட்டு நந்தினியின் அறைக்குச் சென்றதாகவும் நந்தினி மீது வீசிய கத்தி ஆதித்தன் மேல் பட்டு அவன் இறந்துவிட்டதாகவும் அதனால் ஆதித்தன் கொலைக்கு தானே காரணம் என்று சொல்லிவிட்டு தன்னை மாய்த்துக்கொள்ளப்போவதாகச் சொன்னார். அதை அருள்மொழிவர்மன் தடுத்தார்.

அப்போது ஆதித்தனைக் கொன்ற கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டார் பெரிய பழுவேட்டரையர். சாவதற்கு முன்பாக, அருள்மொழிவர்மருக்கு முடிசூட்ட வேண்டுமெனக் கூறிவிட்டு இறந்தார் பழுவேட்டரையர்.

இதற்கு சில நாட்களுக்குப் பிறகு வந்தியத்தேவன், கந்தமாறன், பார்த்திபேந்திரன் ஆகியோர் நண்பர்களானார்கள். பார்த்திபேந்திரனுக்கு வடதிசை மாதண்ட நாயகர் பதவி அளிக்கப்பட்டது. தைமாதம் பிறந்ததும் அருள்மொழி வர்மனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடாகியிருந்தது. புதிய மதுராந்தகனான சேந்தன் அமுதனுக்கும் பூங்குழலிக்கும் எளிய முறையில் திருமணமும் நடந்து முடிந்தது.

முடிசூட்டும் தினத்தன்று, தன் தலையில் சூட்டவிருந்த மகுடத்தை மதுராந்தகன் தலையில் சூட்டினார் அருள்மொழிவர்மர். இதையடுத்து உத்தமசோழன் என்ற பெயரில் மன்னனானான் சேந்தன் அமுதன்.
செம்பியன் மாதேவி வளர்த்த பழைய மதுராந்தகன், "அமரபுஜங்கள் நெடுஞ்செழியன்" என்ற பெயரில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளோடு சேர்ந்து செயல்பட்டான். அருள்மொழி வர்மனுக்கும் வானதிக்கும் திருமணம் நடைபெற்றது.
இதற்குப் பிறகு, உடல்நலம் குன்றியிருந்த மணிமேகலையை சென்று வந்தியத்தேவன் பார்த்தான். அவனுடைய மடியிலேயே உயிர் துறந்தாள் மணிமேகலை.
பொன்னியின் செல்வன்  இதோடு நிறைவடைந்தது.

பழுவேட்டரையர் என்ற சிற்றரச வம்சத்தினர், நீண்ட காலமாகவே சோழ வம்சத்தினருக்கு யுத்தங்களில் துணையாக இருந்ததாக கல்கி தனது நாவலில் குறிப்பிடுகிறார்.

 

பிற்காலச் சோழ வம்சத்தைத் துவக்கிவைத்த விஜயாலயச் சோழன் திருப்புறம்பியத்தில் போரிட்டபோது, அவருக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவராக ஒரு பழுவேட்டரையர் கல்கியால் குறிப்பிடப்படுகிறார். 

 

விஜயாலயச் சோழனுக்கு அடுத்த வந்த ஆதித்த சோழன், முடிசூட்டும்போது தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.

அந்த ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ மன்னனான அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர் என்கிறார் கல்கி. 

 

இவர்கள் சோழ வம்சத்தோடு நெருங்கிய திருமண உறவும் கொண்டிருந்தனர். பழுவேட்டரையர் ஒருவரின் மகளை பராந்தகச் சோழன் திருமணம் செய்திருக்கிறார். அதேபோல, ராஜராஜ சோழனுக்கு முன்பிருந்த உத்தம சோழனும் பழுவேட்டரையர் ஒருவரின் மகளை மணந்திருக்கிறார். 

 

பொன்னியின் செல்வனில் சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்தில் இரு பழுவேட்டரையர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஒருவர் பெரிய பழுவேட்டரையர் எனப்படும் கண்டன் அமுதனார்.  

இவர் சோழ நாட்டுத் தனாதிகாரியாகவும் சுங்க வரி விதிக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இருந்தார். வயது முதிர்ந்த காலத்தில் நந்தினி தேவியை திருமணம் செய்து கொண்டு தனது இளைய ராணியாக்கியதாக நாவல் கூறுகிறது.

 

அடுத்தவர், காலாந்தகக் கண்டர் எனப்படும் சின்ன பழுவேட்டரையர். இவர் தஞ்சாவூர் கோட்டையின் தளபதியாக இருந்தார். தஞ்சை அரண்மனை பொக்கிஷமும், தானிய அறையும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. பாதாளச் சிறை ஒன்றையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் அவர் நிர்வகித்து வந்தார் என்கிறது நாவல். 

 

ஆனால், உண்மையில் பழுவேட்டரையர்கள் எனப்படும் சிற்றரசர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்?

 

பழுவேட்டரையர்களைப் பற்றி அறிய அன்பில் செப்பேடுகளும் பழுவூரில் உள்ள கோவில்களில் இருந்து கிடைக்கும் ஆதித்த சோழன் காலத்து கல்வெட்டுகளும் உதவுகின்றன.

 

இந்தக் கல்வெட்டுகள் பெருமளவு பழுவூரிலும் வேறு சில லால்குடி, திருப்பழனம், திருவையாறு பகுதிகளிலும் காணப்படுகின்றன.

 

இந்தப் பழுவேட்டரையர்கள் முதலாம் ஆதித்த சோழனின் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரையில் தற்போதைய அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியினை பழுவூர் நாடு என்ற பெயரில் சிற்றரசர்களாக இருந்து ஆட்சி செய்து வந்திருக்கின்றனர்.  

தற்போது இந்தப் பழுவூர் நாடு, அரியலூரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் தெற்கிலும் திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் சுமார் 54 கி.மீ. தூரத்திலும் மேலப் பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என மூன்று சிறு பகுதிகளாக அமைந்திருக்கிறது.

 

சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேல் சோழப் பேரரசில் செல்வாக்குடன் விளங்கிய பழுவேட்டரையர்களின் அரண்மனை, மாளிகை எனக் குறிப்படக்கூடிய எதுவும் இந்தப் பகுதியில் தற்போது இல்லை.

 

 

ஆனால், பழுவேட்டரையர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இங்கு காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்கள் காலத்து கோவில் கட்டடக் கலைக்கு இந்தக் கோவில்கள் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றன.

கீழப்பழுவூரின் பிரதானமான பகுதியில் ஆலந்துறையார் கோயில் அமைந்திருக்கிறது. 

 இந்தக் கோவிலின் சுவர்களில் இருந்து இருபத்து மூன்று சோழர் கால கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு நாழி அரிசிக்கு இரண்டு மா நிலம் தரப்பட்டது, திருமஞ்சனத்திற்கு 50 காசு தானம் தரப்பட்டது, நிலக்கிரயம், விளக்குதானம், நித்திய படிதானம், செப்புப் பத்திர தானம், விளக்குக்காக இரண்டு கழஞ்சு தானம் ஆகிய செய்திகளை இந்தக் கல்வெட்டுகள் தருகின்றன. 

 

இந்தக் கோவில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகக் கருதப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் இந்தக் கோவில் பாடப்பட்டிருக்கிறது. ஆனால், அவருடைய காலத்தில் செங்கலால் கட்டப்பட்டிருந்த இந்தக் கோவில் மறவன் கண்டன் பழுவேட்டரையரால் 9ஆம் நூற்றாண்டில் கற்கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது. 

 

கருவறையைச் சுற்றிலும் உள்ள தேவகோட்டத்தில் அமைந்திருக்கும் சிற்பங்கள் பிற்காலச் சோழர் கால கோவில் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகின்றன.

இதற்கு அருகிலேயே வலதுபுறத்தில் சிதிலமடைந்த நிலையில், மறவனீஸ்வரர் கோவில் காணப்படுகிறது. இதுவும் 9 - 10ஆம் நூற்றாண்டுக் கோவில் கட்டுமானத்தைச் சேர்ந்தது. அந்தக் கோவிலுக்குள் ஒரு லிங்கத் திருமேனி இருக்கிறது. கோவிலின் சுற்றுச் சுவர்களில் பல சிற்பங்களைப் பார்க்க முடிகிறது. 

முற்காலச் சோழர் காலத்து கல்வெட்டுகளும் இங்கே கிடைக்கின்றன. இதுவும் பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட கோவில்தான்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருக்கிறது கீழையூர். இங்குள்ள இரட்டைக் கோவில்கள் பழுவூர் அரசர்கள் காலத்து கட்டடக் கலைக்கு துல்லியமான சாட்சியாக விளங்குகின்றன. அவனி கந்தர்வ ஈஸ்வர க்ருஹம் என அழைக்கப்படும் இந்த இரட்டைக் கோவில்கள், ஆதித்த சோழன் காலத்தில் அவனி கர்ந்தர்பன் என்ற பட்டம் சூட்டப்பட்ட பழுவேட்டரையர்களால் கட்டப்பட்டிருக்கிறது. 

 

இவருக்கு கங்க மார்த்தாண்டன், கலியுக நிர்மூலன், மறவன் மாளதளன், அரையகள் அரைவுளி போன்ற பட்டங்களும் இவருக்கு இருந்தன. ஆதித்த சோழனின் காலத்தில் இருந்த குமரன் மறவன்தான் இந்தப் பழுவேட்டரையர் எனக் கருதப்படுகிறது.

இந்த வளாகத்திற்குள் உள்ள இரண்டு கோவில்களில் தென்புறம் உள்ள கோவில் தென் வாயில் ஸ்ரீ கோவில் என்றும் வடபுறம் உள்ள கோவில் வடவாயில் ஸ்ரீ கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன.

 

1.மகரிஷி வம்சத்து க்ஷத்ரியன் பொதுகன் பெருமான் டரையன் குமரன் மறவன்,

2. பொய்கை குறுவிடத்து வெட்டக்குடி வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன்,

3. அடிகள் பழுவேட்டரையன் கண்டன் மறவன்,

4. அடிகள் பழவேட்டரையன் மறவன் கண்டன்,

5. அடிகள் பழவேட்டரையன் கண்டன் சுந்தரசோழன்,

6. அடிகள் பழவேட்டரையன் கைக்கோள மாதேவன் ரணமுகராமன் ஆகியோரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

 

இதில் மறவன் கண்டனுக்கு சத்ரு பயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் இருவர்தான் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கண்டன் அமுதன் மற்றும் காலாந்தக கண்டன் பழுவேட்டரையர்களாக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர். 

ஆதித்த சோழன் காலத்திலிருந்து ராஜராஜ சோழனின் காலம் வரை சோழப் பேரரசில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த பழுவேட்டரையர்கள் திடீரென காணாமல் போயினர். ராஜராஜசோழரின் காந்தளூர்ச் சாலை யுத்தம், ராஜேந்திர சோழனின் கேரள படையெடுப்பு ஆகியவற்றுக்குப் பிறகு இவர்களின் பெயர்கள் எந்தக் கல்வெட்டிலும் காணப்படவில்லை. 

சுமார் 150 ஆண்டு காலம் சோழப் பேரரசில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய பழுவேட்டரையர் வம்சம் பிறகு என்ன ஆனது என்று தெரியாவிட்டாலும் தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பாகவே இவர்கள் கட்டிய கோவில்கள் இப்போதும் அவர்களது கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

 



முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோதுபெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.

ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர் ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு குரோதம் !)

மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே,மாதிரி செய்திருக்கலாம்.

 

ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லைமாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள்ரொட்டிகள்பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.

மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் .ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்.

(“EACH GIVES WHAT HE HAS"),,,,எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்உங்களுக்கு 'உள்ளேஎன்ன இருக்கிறது ?

அன்பா - பகையா ?

அமைதியா - வன்முறையா ?

வாழ்வா - சாவா ?

உங்கள் திறமைபலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?

இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன ?

ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்,,,,

அன்பை_விதைப்போம்...

விதைத்ததையே ...அறுவடை_செய்வோம்.

கோபத்தின் கதை !

ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.

இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.

ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.

இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.

இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.

45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய், சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?

உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா ?

 



மாமி சொன் கதைகள் - சந்திரா இரவீந்திரன்:

ஆசிரியர் குறிப்பு:

வடமராட்சி, பருத்தித்துறை, மேலைப்புலோலி, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது இலண்டனில் வசிக்கிறார். ஏற்கனவே இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. இது அனுபவப் பகிர்வுகளின் தொகுப்பு.

மாமியார்- மருமகள் உறவு என்பது love-hate relationship. Hate எத்தனை சதவீதம் என்பதைப் பொறுத்தே அவர்கள் பேசுவது இருக்கும். மேலைநாடுகளில் கூட இந்த உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் கிடையாது. முதன்முறையாக, சந்திரா, தனது மாமியார் கூறிய கதைகளை நினைவுறுத்திப் புத்தகமாக்கியதன் மூலம் அந்த உறவின் நெருக்கத்தைச் சொல்கிறார்.

நாற்பதுகளுக்கு முந்தைய இருபாலை கிராமம். நம்மிடத்தில் இருந்து கொண்டு விநாயகர் சிலையை பிரதிஷ்டம் செய்யக்கூடாது, இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி கட்ட வேண்டும் என்று சட்டமிடுகிறார்கள் ஆங்கிலேயர். குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் கூப்பன் இருந்தால் உணவுப்பொருட்கள் சங்கத்தில் வழங்கும் நடைமுறை (ஏன் இப்படி? யாருக்கேனும் தெரியுமா?) . சென்னையில் பயந்தது போலவே இருபாலையிலும் ஜப்பான்காரன் குண்டு போடுவான் என்று பயப்படுகிறார்கள்.

கிராமத்தின் உணவுகள், பழங்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம். இலுப்பை நெய்யில் பொரித்த மீன், வேப்பம்பூ வடகம், பனங்காய் பணியாரம், பனங்கழி+கோதுமை+சீனி கலந்த உருண்டை, ஈச்சங்குருத்தின் இனிப்பு,

பயற்றங் கொழுக்கட்டை, ஆடிக்கூழ் என்று நாம் சாப்பிட்டுப் பார்க்காமல் எத்தனை உணவுகள்!

கிராமத்தில் பெண்களுக்கு ஏராளமான சட்டதிட்டங்கள். தெரிந்தவர்களுடன் கூட வெளியில் அனுப்பாத கட்டுப்பாடு, வெளியூரில் படிக்கப் போனால் கெட்டுப் போவாள் என்ற கருத்து, பெண் என்பதற்காகவே சமையல் தெரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெண்கள் அதிகம் படிக்க வேண்டாம் என்ற மனநிலை என்று தளைகள் நிறைந்த உலகம். 1956லேயே சிங்களம் எழுதப்பேசத் தெரிந்தால் மட்டுமே அரசுவேலையில் தொடர முடியும் என்று சட்டம் வருகிறது.

ஒரு பெண் கதை சொல்கின்ற போது, அவள் சார்ந்த உலகம் கண்முன் விரிகிறது. முப்பத்தைந்து வயதில், ஒன்பது குழந்தைகளுடன் கணவனை இழந்து நிர்கதியாக நின்ற பெண். வைராக்கியமாக குழந்தைகள் எல்லோரையும் வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, பேரன் பேத்திகள் என்று நிறைவானதொரு வாழ்வு.

காது கேட்காததால் அதிகம் பேசமுடியவில்லை, கடைசி காலத்தில் எழுதித் தரக் கேட்கும்போது, ஞாபகமறதியும் வந்து சேர்கிறது. இது போல் எத்தனை வாழ்க்கைகள் சொல்லப்படாமலேயே, வெளியுலகுக்குத் தெரியாமலேயே மறைந்து போயிருக்கின்றன. தெரிவதற்கு, எல்லோருக்கும் சந்திரா போல் ஒரு மருமகள் கிடைக்க வேண்டுமே.

பிரதிக்கு:

காலச்சுவடு 4652-278525

முதல்பதிப்பு டிசம்பர் 2022

விலை ரூ. 150.

 


 
"அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்..... தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ....ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார்.

பிரபலமான பூக்கடை அது ,..."

எவ்வளவு விலை சார் இது"

" 250 டாலர்"!!.

" இதைவிட அருமையான 'பூ 'காண்பிக்க முடியுமா?

"வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது....

" இது "ஆர்கிட்"வகைப் பூ...மிகஅருமையா இருக்கும்.... ஒரு வாரம் வரை வாடாது"

"500 டாலர்"!!

சரி, இதையே , 'பேக் செய்யுங்க...

"உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா?

கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் ...அதற்கு ஒரு 100 டாலராகும்.

"வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்' பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்....

ஒன்று செய்யுங்க.....' ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து ...இந்த பூங்கொத்தை,இன்றே என் தாயிடம் ,இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க.

"ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்.... அதற்கும் சேர்த்து 500 டாலர்.

" நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின்,வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல் ,பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக.....

ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்....." குழந்தை ஏன் அழறே?

" அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ?

ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?

'நோ அங்கிள் " எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று ...

நான் வருடா,வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்...என்னிடம்

பணம் இல்லை......நீங்க ஒரு டாலர்

கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன்.

அம்மா எனக்காக வெயிட் டிங்'.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?

" பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ...

"வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி.

ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.

.ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார்.

மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி' பூ வை எடுத்தபடி ஓட ....அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார்.

சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்..

பல வளைவுகளை,தெருக்களை கடந்து,ஓடும் அவள்......போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் முத்தமிட ,....பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது .

"சார் , 'மீட்டிங்கிற்கு, நேரமாச்சு... டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை,வீட்டிற்கு போக சொன்னார்.

"பெரிய கார் ,தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த .....92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது ?என பார்க்க ....

"அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என

காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்......

" உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!!

" அம்மா ,"அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்.

" உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்.....நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?...அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன்

"உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து,பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?...மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.

" தாய், தந்தை இருப்பவர்கள்.....அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்....அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.

உங்களின்,உங்கள் பண்பின்,அன்பை நினைத்து,மகிழ்ந்து.... ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்.....உங்கள் வாழ்க்கை சிறக்கும்.....

எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி,உயர்வு என்றும் சந்தோஷம்

"சந்தோஷத்தில்,...மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்......

 ல்ப்பனா

 


மாணவிசார்தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?

ஆசிரியர்எதற்காக கேட்கிறாய்?

மாணவிதமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லைஅதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.

ஆசிரியர்அதனால் என்ன?

மாணவிஇப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?

ஆசிரியர்கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்.

இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாடுகிறார்கள்அதைப் போலத்தான் இதுவும்.

மாணவிதமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?!

அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறதுஅது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.

ஆசிரியர்

மாணவிசரிகிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள்மிலாடி நபி

முகமதுநபி பிறந்தநாள்தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?

ஆசிரியர்தீபாவளி - நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்.

மாணவிமற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?

ஆசிரியர்நரகாசுரன் என்கிற கருப்பான பயங்கரமான அசுரன்பார்ப்பனர்கள் யாகம் செய்யவிடாமல் தடுத்தான்அதனால் பார்ப்பனர்களும் தேவர்களும்பகவானிடம் சென்று முறையிடவே கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றாராம்.

மாணவிஇந்தக்கதையில் பார்ப்பனர்கள் என்பது யாரென்று புரிகிறது சார்பார்ப்பனர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள்அப்படியானால் அந்த அசுரர்கள் யார்எங்கு இருக்கிறார்கள்?

ஆசிரியர்புராணங்களில் வரும் வருணனைகளை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான அசுரர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்.

மாணவிஅப்படியானால் தீபாவளி பார்ப்பனர்களின் வெற்றி விழாதமிழர்களை வீழ்த்திய நாள் 😾😾

ஆசிரியர்

மாணவிபார்ப்பனர்களுக்கு ஆதரவாக தமிழர்களை அழித்தக் கடவுள் எப்படி தமிழர்களுக்கு கடவுளாவார்?

பிராமணர்கள் தங்களைக் காத்த அந்தப் பிராமணக் கடவுளை நினைத்து பெருமையுடன் தீபாவளி கொண்டாடலாம்.

ஆனால் தமிழர்களான நாம் நம் தன்மானத்தை இழந்து எப்படி தீபாவளியை கொண்டாட முடியும்இது நமக்கு அவமானம் இல்லையா!

ஆசிரியர்

மாணவிநரகாசுரனின் பிறந்த நாளை அல்லவா தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடவேண்டும்.

ஆசிரியர்நரகாசுரனின் பிறந்த நாள் தான் தெரியாதே?!

மாணவிநரகாசுரன் இறந்த நாளைக் கண்டுபிடித்த ஆரியப் வைதீக மதத்திற்கு அவரின் பிறந்த நாள் தெரியாதாஇது அயோக்கியத்தனமில்லையா?

தமிழ் அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் ஏன் இதுபற்றி ஒருபோதும் பேசியதில்லைஏன் சார் ?

ஆசிரியர்உனக்கு ஏம்மா இவ்ளோ கோவம்?

மாணவிஇனிவரும் தலைமுறைக்காவது சரியான விளக்கத்தைச் சொல்லி இனமானமிக்க தமிழர்களை உருவாக்க வேண்டும் சார்!

ஆசிரியர்நீ சொல்வது சரி தான் மா.

தீபாவளிக்கு ஏன் திராவிட தலைவர்கள் வாழ்த்து சொல்லுவதில்லை என்பதற்கான விளக்கம் தான் இந்த பதிவு.



அறியப்படாத யாழ்ப்பாணம்

ஒரு பெயர் தெரியாத யாழ்ப்பாண முதியவரின் நாட்குறிப்பில் 1841 ஆண்டிலிருந்து 1933 ஆண்டு வரை நடந்த முக்கியமான சம்பவங்களை பதிவு செய்து இருந்தார்.

1841 'உதயதாரகை" (Morning S அமெரிக்கன் மிஷனாரால் வெளியிடப்பட்டது

. 1842. யாழ்ப்பாண வாசிகசாலை திறக்கப்பட்டது.

1847. மானிப்பாய் 'கிறீன்' வைத்தியசாலை ஆரம்பம்.

1850. யாழ்ப்பாணத்தில் F.N.S. வைத்தியசாவை ஆரம்பம்

1853.(]) திரு. வைமன் கதிரவேற்பிள்ளை அவர்கள் "Literary wirror" என்னும் பத்திரிகை வெளியிடபட்டது.

இப்பத்திரிகை பின்னர் "இலங்கைத் தேசா டானி" (The Ceylon Patriot) யாக மாற்றப்பட்டது.

(2) யாழ்ப்பாணத்தில் நிழலுருவப்படம் பிடிக்கும் அமெரிக்கன் மிஷனாராற் காட்டப்பட்டது.

1858. பேதிப் பிரளயம்

1868, இலங்கைத் தேசாபிமானி' (The Ceylon Patriot)

வெளியிடப்பட்டது.

1866. யாழ்ப்பாணத்தில் பொலிஸ்தானம் ஸ்தாபிக்கப்பட்டது.

1876. "சத்தியவேதபாது காவலன்"(The Catholic Guardian) என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது.

1879. ஆறுமுகநாவலரின் பிரிவு

1880. (1) நாயன்மார்சட்டு ஆயுள்வேதவைத்தியசாலை ஆரம்பம் (

2) யாழ்ப்பாணம் சுப்பிறீங் கோட்டில் மாகாணத்தலைவர் சேர். வில்லியம் துவைனம் அவர்களின் பரிபாலனத்தை தூஷித்து "Ceylon Examiner" என்னும் பத்திரிகையில் எழுதியதற்காக திரு. லூடோவிக்கி என்னும் பத்திராசிரியருக்கு ரூபா. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

1884. (1) கிறீஸ்த வாலிப சங்கம் (Y.M.C.A.) வட்டுக் கோட்டையில் நிறுவப்பட்டது.

(2) யாழ்ப்பாணத்தில் புயல்காற்றால் பெருஞ் சேதம்.

1889. சைவபரிபாலன சபையாரால் "இந்துசாதனம்" (The Hindu Organ) பத்திரிகை வெளியிடப்பட்டது.

1894 (மாசிமீ 3) யாழ்ப்பாணத்தில் பூகம்பம். ல்

1895. "இந்து சாதன" (Hindu Organ) பத்திராசிரியர் சத்திய தவேதபாதுகாவலன்' (Catholic Guardian) பத்திரா சிரியர்மீது வைத்த மானநஷ்டத்தாட்சி சுப்பிறீங்கோட்

டில் விசாரணை செய்யப்பட்டு விடுதலையடைந்தது.

1898, இணுவில் பெண் வைத்தியசாலை ஆரம்பம்.

1902. (1) யாழ்ப்பாண புகையிரத வீதி சேர்.றிச்வே தேசாதிபதி யவர்களால் திறக்கப்பட்டது.

(2) சுன்னாகத்தில் சுண்ணாம்பால் செய்யப்பட்ட புத்தரின் உருவம் Dr. போல் பீரிஸ் அவர்களால் புதைக்கப்பட்ட விடத்திலிருந்து கிளறி எடுக்கப்பட்டது,

1903. இந்துவாலிபர் சங்கம் வண்ணார்பண்ணையில்

பட்டது.

1906. "யாழ்ப்பாணச் சங்கம்" நிறுவப்பட்டது.

1907. 'யாழ்ப்பாண F.N. S. வைத்தியசாலை அரசின

சிவில் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது.

1912. திரு. அலன் எபிரகாம் என்னும் யாழ்ப்பாண தமிழ் கணிதவிற்பன்னர் லண்டனில் F. R. A. S. ஆக தெரியப்பட்டது.

1916. புதைக்கப்பட்டிருந்த திரவியமெடுப்பதற்காக வண்ணாபண்ணையில் மனித பலி

(1917.சுன்னாகத்தில் பாழாயிருந்த புத்தகோயிலின் அடிக்கட்டிடம் Dr.போல் .பீரிஸ் அவர்களால்கண்டுபிடிக்கப்பட்டது.

1918. யாழ்ப்பாணத்தில் புயல்காற்றும் பெருவெள்ளமும்.

1922.(1) ஸ்ரீமதி. சரோஜினி தேவியின் யாழ்ப்பாண விஜயம்

(2) சுன்னாகம் . குமாரசாமிப்புலவரின் பிரிவு.

1925. மாணவ மகாநாடு (பின்னர் வாலிபமகாநாடு) நிறுவப்பட் டது.

1920: மதுப்பானக்கடைகள் மூடப்பட்டன.

1931. (1) 'வலிகாமம் வடக்கு வாலிபர் சங்கம்' நிறுவப்பட்டது

(2) கமலாதேவியின் யாழ்ப்பாண விஜயம்.

(3) வாலிபமகாநாட்டாரால் அரசாங்கசபை பகிஸ்கரிக்கப்பட்டது

(4) பண்டிதர் ஜவகர்லால்நேரு, கமலா நேரு,இந்திரா நேரு

யாழ்ப்பாண விஜயம்.

1932 யாழ்ப்பாணத்துக்கு மின்சார வெளிச்சம்.

1933. (1) வடமாகாணத்துக்கு முதன் முறை இலங்கை (திரு. எட்மன்ட் றோட்றிக்கோ) மாகாணத் தலை

வரலாற்றில் முதன் முதலாக அச்சில் வந்த முதல் தமிழ் பத்திரிகையின் பெயர் உதயதாரகை

அது வெளிவந்தது யாழ்ப்பாணத்தில் இருந்துதான் வெளி வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விசயமாகும்

அச்சு யந்திரத்தை அமெரிக்க மிசனரிகள் அச்சு கூடத்தை 1820 ஆண்டளவில் இங்கு இறக்குமதி செய்து இருந்தாலும் ஆங்கிலேய காலனித்துவ அரசாங்கம் அதை பாவனை செய்ய அனுமதிக்கவில்லை

1834 ஆண்டளவில் தான் அனுமதித்தார்கள்

1841 ஆண்டு உலகின் முதல் தமிழ் பத்திரிகை இந்த அச்சு யந்திரத்தில் அச்சடிக்கப்பட்டு தெல்லிப்பளை யூனியன் (கல்லூரி)வளாகத்தி்ல் இருந்து வெளி வந்தது

புகைப்படம் -உலகின் முதல் தமிழ் பத்திரிகை உதயதாரகை அச்சடிக்கப்பட்ட அச்சு யந்திரம்

(2) “பிப் பிரஸ் ' பத்திரிகை வெளியிடப்பட்டது.

(3) யாழ்ப்பாணப் பெரிய கோட்டு நீதிபதியாக முதல் முறையாக யாழ்ப்பாணத் தமிழர் திரு.சி. குமாரசாமி நியமிக்கப்பட்டார்.



நேர்மையை விதையுங்கள்

 

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் ஒனர்க்கு வயதான காரணத்தால் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை CEO அந்த கம்பெனியிலேயே வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார். So அந்த Company-ல் வேலை செய்யும் Workers தன்னுடைய ரூம்க்கு வருமாறு கட்டளையிட்டார். உங்களில் ஒருவர் தான் நம் கம்பெனியின் CEO-வாக ஏற்றுக் கொண்டு நிர்வாகிக்க போகிறீர்கள் என்று சொன்னார். So, உங்கள் எல்லோருக்கும் ஒரு Competition ஒன்று நடத்தப் போகிறேன் என்றார். 

அதில் யார் வெற்றி அடைகிறார்களோ?. அவர் தான் நம் கம்பெனியின் அடுத்த CEO என்று கூறினார். Workers எல்லோரும் அந்த Competition என்னவென்று தெரிந்துக் கொள்ள மிக ஆர்வமாக இருந்தார்கள். அதற்கு அந்த Company Owner அனைவரையும் பார்த்து சொன்னார். என் கையில் கொஞ்சம் விதைகள் (Seeds) இருக்கிறது. இதை ஆளுக்கொன்று நான் தரப்போகிறேன். இந்த விதையை (Seeds) நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள மண்தொட்டியில் வைத்து நடுங்கள். தண்ணீர் ஊற்றி உரமிட்டு நன்றாக வளர்த்து எடுக்க வேண்டும்.

 

யார் செடியை Plant மிக நன்றாக வளர்த்து உள்ளீர்கள். Next Year கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க Show வேண்டும் என்று சொன்னார். யார் செடியை நல்ல வளர்த்து உள்ளீர்களோ அவர் தான் இந்த நிறுவனத்தின் CEO என்று சொன்னார். ஒரு வழியாக 6 மாதம் கடந்து விட்டது. Still அவன் தொட்டியில் செடி முளைக்கவே இல்லை. ஒருவேளை நான் விதையை வீணாக்கிவிட்டேனோ? என்று சொல்லி புலம்பிக் கொண்டியிருந்தான். But டெய்லியும் அந்த செடிக்கு வாட்டர் ஊற்றுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை. அவனுடைய மண் தொட்டியில் செடி வளரவே இல்லை என்ற விஷயத்தை Matter அவன் யாரிடமும் சொல்லவில்லை. 

இப்படியே ஒரு வருடம் சென்று விட்டது. All Workers செடிகளை ஓனரிடம் காட்டுவதற்காக கொண்டு வந்தார்கள். ராமு செடியே இல்லாத Empty தொட்டியை எடுத்துக் கொண்டு போக மாட்டேன் என்று கூறினான். அதற்கு இராமுவின் Wife அவரை சமாதானப்படுத்தினார். நீங்கள் One Year முழுவதும் ஓனர் சொன்ன மாதிரியே செய்து உள்ளீர்கள். But தொட்டியில் செடி தான் முளைக்கவே இல்லை. 

இந்த விஷயத்திற்கு நீங்கள் என்ன தான் செய்ய முடியும். எனவே நீங்கள் Always நேர்மையாகவே நடந்துக் கொள்ளுங்கள். மண்தொட்டியை எடுத்துக் கொண்டு போங்கள். உங்கள் முதலாளியிடம் காட்டுங்கள் என்று கூறினாள். இராமுவும் செடி இல்லாத Empty தொட்டியை எடுத்துக் கொண்டு ஆபீஸ்க்கு சென்றான். எல்லோருடைய தொட்டியையும் பார்த்தான். விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் நல்ல உயரத்தில் இருந்தது. இவன் தொட்டியை பார்த்த எல்லாரும் சிரித்தார்கள். 

அந்த Company Owner அனைவரையும் தன் ரூம்க்கு செடிகளை எடுத்து வருமாறு கூறினார். எல்லாத்தையும் பார்த்து விட்டு சொன்னார். All Workers செம்மையாக செடியை வளர்த்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களில் இருந்து ஒருவர் தான் Today நம் Company CEO பொறுப்பினை ஏற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்று சொன்னார். எல்லோருடைய செடியையும் பார்த்துக் கொண்டே சென்றார். Ramu தன் கொண்டு வந்த Empty மண்தொட்டியை வைத்துக் கொண்டு Last வரிசையில் நின்று கொண்டியிருந்தான். 

இராமுவை பக்கத்தில் வருமாறு கூறுகிறார். ராமுவும் பயந்துக் கொண்டே சென்றான். அவன் மனதில் நினைத்துக் கொண்டே சென்றான். நான் வேற ஒழுங்காக Plant வளர்க்கவில்லை. So, நம்மை ஒர்க்கிலிருந்து நில் என்று சொல்ல போகிறார் என்று அவனே Think பண்ணிக் கொண்டே அங்கேச் சென்றான். முதலாளி கேட்டார் உன் செடி எங்கே? என்று கேட்டார். Past One Year அந்த விதையை நட்டு, இயற்கை உரமிட்டு வாட்டர் விட்டு வந்தார். இது போன்ற All விஷயத்தையும் தெளிவாக எடுத்து சொன்னான். ஓனர், இராமுவை தவிர எல்லாரும் உட்கார சொன்னார். 

இராமுவின் தோளில் ஓனர் கையை போட்டு இவர் தான் நம் Company CEO என்று சொன்னார். நிர்வாகத்தை ஏற்று நடத்த போகின்றார் என்று சொன்னார். இதை கேட்ட Ramu-க்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. Ramu கொண்டு வந்த ஜாடியில் தான் செடியே வளரவே இல்லை. எதற்கு அப்புறம் Company CEO பொறுப்பை என்னிடம் கொடுக்கிறார் என்று சற்று Mesh பார்த்தான். அதற்கான பதிலையும் முதலாளி சொன்னார். Last Year நான் உங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு Seeds கொடுத்தேன். அந்த விதைகள் அனைத்தும் சுடு தண்ணீரில் அவிக்கப்பட்ட விதைகள். அது ஒருநாளும் முளைக்கவே முளைக்காது. 

உங்கள் அனைவர்க்கும் நான் கொடுத்த விதை முளைக்காமல் இருந்திருக்கும். அந்த காரணத்தினால் Instead of வேற ஒரு விதையை வளர்த்துள்ளீர்கள். அதை இங்கேச் செடியாக கொண்டு வந்து உள்ளீர்கள். But இராமு மட்டுமே Honest நடந்து இருக்கின்றான். அதனால் தான் இராமுக்கு மட்டும் தான் நம் Companyயை நிர்வாகிக்கும் CEO இருக்கின்றது என்று சொன்னார். இதனை கேட்ட Ramu-க்கு ரொம்பவே பெருமையாக இருந்தது. 

ஓனர் இராமுவின் நேர்மையினைப் பாராட்டி அந்த கம்பெனி CEO பொறுப்பை கொடுத்தார். நாம் சொல்கின்ற சொல்லும், பயணிக்கின்ற வழி நேர்மையாக இருந்தால் Success நம்மைத் தேடி வரும். வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வது ஒரு போராட்டம் தான். உண்மையும், நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும். நேர்மை ஒருபோதும் வீண் போகாது. நம் வாழ்வில் நேர்மை தவறாமல் கடைபிடித்து வாழுகின்ற போது Money, பதவியும் நம்மைத் தேடி வரும்.


கதை போல தோணும் இது கதையும் அல்ல.

ஆமாம் இது கதை இல்லை தான்.

என் மனம் ஆனது மார்க்கெட்டில் அந்த காளான் டப்பாவை வாங்கும் சில வருடங்களுக்கு முன்பு நான் வாழ்ந்த கிராம வாழ்க்கைக்கு என் மனமானது இழுத்து சென்றதுஇன்னைக்கு காசு கொடுத்து வாங்கிற இந்த காளான் மழை காலத்தில எல்லாம் எங்க கிராமத்து பக்கம் செம் மண் மேடுகரையான் கட்டி வச்சு இருக்கிற பாம்பு புத்துமக்கி போன உடைஞ்ச மர துண்டுகுப்பை மேடுதென்னமர அடின்னு முளைச்சு கிடக்கும்.

பள்ளி கூட லீவுன்னா தாத்தா கூட ஆடுமாடு மேய்க்க தூக்குவாலில கஞ்சியை ஊத்திக்கிட்டு கிளம்பிட வேண்டியது தான்அப்ப எல்லாம் மழைன்னா உடனே குடை பிடிக்கிறதுவெயில்ன்னா ஓட்டமும்நடையும்மா வீட்டுக்குள்ள வந்து காத்தாடிய போட்டுக்கிட்டு உட்காரது எல்லாம் இல்லங்க.

அப்படின்னா என்னான்னு தெரிஞ்சாலும் அதை பத்தி கவலைப்படுறது இல்லைஆடு மாடை கொண்டு போய் காட்லை புல்லு இருக்கிற இடமா கட்டி வச்சிட்டு தாத்தா கூட ஒரே விளையாட்டு தான் நான் ஏன் கூட்டாளிக எல்லாமேஅதுவும் அந்த இடத்திலை கொன்னை மரம் இதுக இருந்திட்டா அதை விட்டு வாரதே இல்லை பொன்னு வண்டு பிடிச்சு அதை மஞ்ச பையில போட்டு வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே பல தடை முட்டை போட்டுருச்சான்னு பாக்கிறதுன்னு ஒரே சந்தோஷமா இருக்கும்.

அதுவும் மழை காலத்திலை கேட்கவே வேணாம்எங்கடா அந்த பக்கம் காளான் முளைச்சு கிடக்கும்முன்னு தாத்தா கூட சேர்ந்து தேடி பறிப்போம்.

காளான் பறிக்க போய் அந்த இடத்திலை பாம்பு கிடந்து அலறி வந்த கதை இருக்கே அது எல்லாம் இன்னைக்கு நினைச்சாலும் சந்தோஷமாகவும்அதே சமயம் பயமாகவும் இருக்கும்.

அதே சமயம் அடுத்த காட்டுல வாய்க்க வரப்புல காளான் இருந்து அதை பறிக்க போய் அவங்க விரட்ட ஓடி வந்து விழுந்து கை எலும்பு முறிஞ்சு கட்டு போட்டது எல்லாம்

ஒரு பெரிய கதை தான் போங்க.

அந்த செம் மண் மேட்டுலை முளைச்சு கிடக்கிற காளான் பாக்கவே அவ்வளவு அழகா இருக்கும்.

அதை பறிச்சிட்டு வந்து பக்கத்திலை ஓடிக்கிட்டு இருக்கிற பம்பு செட்டு தண்ணியில கழுவி,

உப்பு,மிளாகய் தூள்,போட்டு.

அங்க கிடக்கிற குச்சி எல்லாம் பொறுக்கிதாத்தா மலபார் பீடி குடிக்க வச்சு இருக்கிற தீப்பட்டியை வாங்கி பத்த வச்சு,

போகும் போதே கொண்டு போன எண்ணெய்யை சட்டியில ஊத்தி வதக்கி கொண்டு போன கஞ்சசியோட சேர்த்து சாப்பிட்டா அமிர்தம் என்னங்க அமிர்தம் அவ்வளவு சுவையா சாப்பிடும் போதே நாக்கில எச்சில் ஊறும்.

ஆனா இன்னைக்கு அந்த காளானை நகரத்திலை குடியேறி டப்பாவில வாங்கிட்டு போய் வித விதமா சமைச்சு சாப்பிடுறோம்.

ஆனா நான் கிராமத்தில சாப்பிட்ட அந்த சுவைக்கு ஈடா அது இல்லைங்கிறது எனக்கு மட்டும் இல்லைநம்ம எல்லோருக்கும் தெரிஞ்சது தான்.

என்ன தான் காலத்தின் போக்கில் நாம எல்லாம் நகரவாசீகளா கட்டாய சூழ்நிலையில் வாழ்ந்தாலும்.

அந்த சொர்க்கமான கிராமத்து வாழ்க்கை தொலைச்சிட்டோம்ங்கிறது

உண்மை தானே...!

சுபா கிட்டு


90 களின் இறுதியில் நான் லண்டனுக்கு இடம் பெயர்ந்து வந்த பொழுது தமிழ் இளைஞர்களிடையே கோஸ்டி சண்டை லண்டன் தெருக்களி்ல் அதிகமாக நடைபெற்ற காலம்

இவர்களால் தமிழ் பொது சனங்கள் பாதிக்கப்பட்டு கையறந்து நின்ற

காலம்

அப்பொழுது எனது பார்வையில் எழுதிய பதிவு வலைபதிவில்( blog)எழுதிய காலம் ஆண்டு 2010

---------------------------------------------------------------------------------------------------------------

''''மதிப்புக்குரிய திருவாளர்களை சந்தித்த பொழுது''''

-----------------------------------------------------------------------

சூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்

.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும்றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம்அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர்.

இந்த நாட்டு சூழ்நிலைக்கு உடனடியாக மாற முடியாமால் திண்டாடி கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் , வெளியில் உலாவ சென்றேன் உடல் ஆரோக்கியத்துக்கு மன்றி மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறிக்கொண்டு .ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல இந்த திருவாளர்களை எங்கையாவது சந்தித்தால் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்பம் என்று,

பொழுது போகாமால் இருந்த படியால் பொழுது போக்க அன்று முதல் நாள் இரவு ஒரு வீடியோ கசட்டை போட்டு பார்த்ததிலிருந்து அவர்களை பார்க்க வேணும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டு இருந்தது ,அது ஏன் ஏற்ப்பட்டது என்று நினைத்து எனக்கே சங்கடமாயிருந்ததுலண்டனில் பார்க்க எவ்வளவு விசயங்கள் இருக்கும் போது அதை விட்டுட்டு இதை என்று.

சரத்குமார் ராதிகா விவேக் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சி அந்த வீடியோவில் .அந்த நிகழ்ச்சி லண்டனில் உள்ள பிரபலமான வெம்பிளி ஸ்டேடியத்திலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் இடையிடையே வந்து விவேக் விதூசகனாக வந்து சிரிப்பூட்ட முயற்சி செய்து விட்டு போவார் . சிரிக்க தெரியாத இளைஞர்களோ அல்லது மற்றவர்களை எப்பவும் குழப்பத்தில் ஆழ்த்துவதில் சந்தோசமடையும் சில இளைஞர்களோ தெரியவில்லை

கூக்குரல் போட்டு குழ்ப்பி கொண்டே இருந்தார்கள்ஆனால் இந்த நடிகர் விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பே இவர்களை பற்றி விபரம் சேகரித்து விட்டார் போலும்வெம்பிளி ஓகேயா , ஹரோ ஓகேயா ஈஸ்ட்ஹாம் ஓகேயாமற்றும் வேறும் சிலவற்றைக் கூறி அவர்களை குளிர்ச்சீயூட்டி மகிழ்வூட்டி சாந்தப் படுத்தி கொண்டிருந்தார்

.விவேக் இந்த நாட்டிற்க்கு வந்து இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மதித்து போற்றியது யாரை என்று நினைக்கிறீர்கள் ? அவர்கள் தான் லண்டன் வாழ் திருவாளர் தமிழ் இளைஞர் கோஸ்டியினர்.

விவேக் கூறிய ஓகேயா ஓகேயா என்றது லண்டனிலுள்ள இடங்களின் பெயர்கள் என்றாலும் அவை அந்த இளைஞர்கள் கோஸ்டியினர்களுக்கு உரித்தான பெயர்கள்இந்த நாட்டில் முடியாட்சி முறை முற்றும் இல்லாமால் போகவில்லை உணர்த்துவதுக்காவோ என்னவோ தெரியவில்லை.

அவர்கள் லண்டனிலுள்ள மேற்கூறிய ஊர்களில் எல்லைகளை வகுத்து சேர சோழ பாண்டியர்களாக அரசோட்சி கொண்டிருந்தார்கள்.அவ்வளவுக்கு அவர்களின் ஆதிக்கம் நிலவி வந்தது .அரசோட்சுபோது படைகள் வேண்டாமா ? ஒவ்வொரு குழுவும் எவ்வளவுத்துக்கு தங்கள் குழுக்கு ஆட்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு இளைஞர்கள் இளைஞிகளை சேர்த்தார்கள் .படைகள் இருந்தால் மட்டும் போதுமா ஆயுதங்கள் வேண்டாமா ?வைத்திருந்தார்கள்

அவர்களுக்கு இந்த நவீன ஆயுதங்களில் நம்பிக்கையுமில்லை விரும்பமில்லையும் போலும் .கத்தி அரிவாள் கோடாரி போன்ற பாரம்பரிய ஆயுதங்களை அதிகம் கைவசம் வைத்திருந்தார்கள்

அரசர்கள் மாதிரி இருந்தால் போதுமாஅதை மாதிரியான அல்லது ஒத்த தன்மையான அணிகலன்கள் அணிய வேண்டாமா?..அணிந்திருந்தார்கள் காதிலை மூக்கிலை வாயிலை உடையிலை எல்லாத்திலையும் வித்தியாசம் காட்டி கொண்டிருந்தார்கள்ஒவ்வொரு குழுவுக்கு இடையில் இந்த விசயத்தில் கூட குறைய என போட்டி இருப்பதால் காலத்து காலம் வித்தியாசமாக தோற்றமளித்து கொண்டிருந்தார்கள்

இளைஞர் கோஸ்டியினரின் அங்கம் வகிக்கும் தனி உறுப்பினர் எதோ விசயத்துக்காக எல்லையை தாண்டி வந்து மற்றவர்களிடம் மாட்டுப் பட்டால் ஒற்றனோ என ஜயப்பட்டு படுமோசமாக நையபுடையப் படுவார்கள்

.இவர்களின் குழுவில் சேருவதுக்காகவே நன்கு படித்த இளைஞர்கள் கூட படிப்பை நிற்ப்பாட்டிய சம்பவம் கூட நடந்து இருக்கிறது .பெரியவர்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லா வகைப்பட்டவரும் இவர்களைக் கண்டால் மூக்கை பொத்தி வாயை மூடி பவ்வியமாக நடக்க வேண்டி இருந்தார்கள்காளை அடக்குபவன் தான் வீரன் அவனில் தான் பெண்கள் விருப்ப படுவார்கள் என தமிழ் சமூகத்தில் ஒரு காலம் இருந்ததாம்.

லண்டன் வாழ் டீன் ஏஜ் பெண்களும் எந்த இளைஞர் கோஸ்டியினர் மிகவும் வலுவாக இருக்குதோ அதில் மயங்குபவர்களாக இருந்திருக்கிறார்கள் .இதன் மூலம் கல்வி செல்வம் வீரம் எது சிறந்தது என்றதுக்கு லண்டன் வாழ் இளைஞிகள் சிலர் வீரம் என்ற விடையை செலுத்தி கொண்டிருந்தார்கள்.

இந்த திருவாளர்களின் மகோன்மியத்தை காதுவெளி செவ்வியாக கேள்விபட்டதுவே நான் மேற்கூறியவை ,,அந்த சூப்பர் மார்க்கட்டுக்கு செல்ல அந்த நகரத்திலுள்ள உள்ளூராட்சி சபையால் பேணப்படும் அந்த பார்க்கை பாவிப்பது வழக்கம் .அந்த சன வாகன நெருக்கடி மிகுந்த நகரத்தில் அந்த பார்க்கில் மட்டும் இருக்கும் அந்த தனிமை அந்த ஏகாந்தம் எனக்கு ரம்மியமாக இருக்கும்

அந்த பார்க்கோடு சேர்த்து தான் சவக்காலையை வைத்திருக்கிறார்கள் ஏனோ தெரியவில்லை .தூரத்தில் சிறுவர்கள் கோடைக்கால சந்தோசத்தை அனுபவித்து கால் பந்து விளையாடி கொண்டிருக்கிறார்கள்

.பார்க்கில் ஒரு சில வயோதிப தம்பதிகள் இருக்கும் சில காலங்களை ஒவ்வொரு கணமாக உலகை ரசித்து கொண்டு இருந்தனர்.பார்க்கை கடந்து அந்த மூலைக்கடையில் பியரை வேண்டிக்கொண்டு அதே பார்க் இட பரப்பூடாக திருப்பி கொண்டிருந்தேன் ,இப்பொழுது பார்க்கின் காட்சியோட்டமே மாறி இருந்தது .அநேகர் இப்ப அங்கங்கே குழுமி இருந்தனர் .

புலம் பெயர்ந்த பின்னர் விஸ்கி பிராண்டி வோட்கா எல்லா வகைகளையும் ஒரு அளவுக்கு மேல் பதம் பார்த்திருக்கிறேன் இப்ப உடலும் வீட்டு சூழ்நிலையும் இடம் கொடுக்காதாதால் கொஞ்சம் காலமாக பியரில் இறங்கி வந்த நிலமை . நாங்கள் விஸ்கி பிராண்டி முழுசாக குடிப்பதை பார்த்து ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரனே ஒரு தரம் கூறியது ஞாபகம் .இந்த சிறிலங்காகாரனைப் போல இப்படி முழுசா விஸ்கி குடிக்கிறவனை உலகத்திலை ஒருதரையும் பார்க்கவில்லையென்றுபியர் மட்டுமே குடிக்கிற ஆள் என்று என்னை சீப்பாக நீங்கள் நினைக்க கூடாது என்றதுக்கு தான் மேல் கூறிய எனது மகோன்மியம் .

ரம்மியமாக வீசும் இந்த காற்றை அனுபவித்துக்கொண்டு இந்த பியரையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து குடிப்பம் என்று ஒரு மரத்துக்கு கீழுள்ள ஒரு தனி இருக்கையில் அமர்ந்து இருந்தேன்,இருக்கையோடு அண்மித்து மூன்று பக்கம் மூடி ஒரு பக்கம் திறந்த இருக்கைகள் அமைந்த கட்டிடம் இருந்தது,

நான் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அங்கால் பக்கத்தில் நடப்பது தெரியாது .ஆனால் சில தமிழும் ஆங்கிலமும் கலந்த குரல்கள் கேட்க தொடங்கினஅந்த குரல்களின் வகைகள் அதிகாரம்குழைவுநமுட்டு சிரிப்புநளினம்நக்கல் எல்லாம் கலந்தனவையாக இருந்தன.அந்த குரல்கள் ஆண்களினதும் பெண்களினதும் உடையதாகவும் இருந்ததுநான் பார்க்கவேண்டும் ஆவலோடு இருந்த மதிப்புக்குரிய திருவாளர்களோ என்ற ஜயமும் சந்தோசமும் ஏற்பட்டது.

ஜெர்மன் ஊடகவியளார் ஒருவர் ஜெர்மனில் வாழும் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை முறையை அறிவதற்க்கு தன்னை கறுப்பு இனத்தவன் மாதிரி உருமாற்றி அவர்களோடு இணந்து தகவல்களை அறிந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் . நானும் சிலவேளை இந்த இளைஞர் கோஸ்டியில் சேர்ந்து இவர்களின் மகோன்மியத்தை அறிய வேணுமெண்டும் ஆசைப்பட்டதுண்டு,

இந்த எனது மனசு இருக்கே நடைமுறைக்கு உதவாத விசயத்தையும் சில வேளை கற்பனை செய்வதுண்டு .இளைஞனை கடந்து இப்ப் இருக்கும் எனது நடுத்தரவயது தோற்றம் பொருத்தமாயிருக்காது என்று எனது மனசுக்கு சொல்லி சமாதானம் சொல்லிய காலங்களுமுண்டு.

இப்படி எனது மதிப்புக்குரிய திருவாளர்களுக்கு மிகவும் அண்மையில் நிற்கிறேன் என்று உணரும் போது புளகாங்கிதமாக இருந்தது.இருக்கும் இடத்தில் இருந்து அவர்களை பார்க்க முடியாமால் இருந்தாலும் அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று அறிய எனது காதை நீட்டினேன் .அவர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து பேசும் தமிழ் வார்த்தைகள் சாதாரணமாக மக்கள் பாவிக்காதவை .ஆனால் நடிகர் வடிவேலு அறிமுக படுத்தும் வசனங்கள் மாதிரி அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்கள் ரசிக்க கூடியதாகவும் இருந்தது.

இப்படி புதிய தமிழ் சொற்களை எல்லாம் அறிமுகபடுத்தி இந்த தமிழ் மொழியை செழுமை படுத்தும் இந்த திருவாளர்களை தரிசித்து செல்வதென்றே முடிவு கட்டி விட்டேன்எழுந்து பார்ப்போம் என்று ஒரு கணம் யோசிப்பேன் மறுகணம் இருந்து விடுவேன் அது நாகரிகமில்லை என.

தீடிரென பேசி கொண்டிருந்தவர்களிடையே தீடிரென ஒரு அமைதி

பின் ஓர் இரு வார்த்தைகள் அதில் மாமா நிற்கிறார் . தமிழ் மூன்று எழுத்து ஒன்று அங்காலை நிற்குது போலை என்று வார்த்தைகள் அடிபட்டன.

இன்னொரு குரல் ஒன்று கேட்டது இப்ப இங்கத்தை பொலிசிலை-தமிழ் ஆக்களும் இருக்கினம் எங்களை பலோ பண்ண ,அவனோ தெரியாது அங்காலை இருக்கிறது என

ஒரு அதிகார குரல் விம்பி வெடித்தது யாரது பார்ப்பம் தூக்கத்தான் இருக்கு; .தூக்கிறது எல்லாம் இயக்க காலத்திலை உருவான சொற்கள் எனக்கு பழக்கமான சொற்களும் கூட. .ஆனால் என்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என இந்த ரூயூப் லைட்டுக்கு ஒரு கணம் பிந்தி தான் விளங்கியது

.அந்த கணம் முடிவதற்க்குள் திருவாளர் கோஸ்டி தலைவர் தீடிரென்று என் முன்னே காட்சியளித்தார்.நான் கேள்விபட்டு மனம் கண்ணால் உருவகபடுத்தி வைத்திருந்ததிலும் பார்க்க மிகவும் கம்பீரமாகத் தான் இருந்தார் .குரலில் மிகவும் கடுமை இருந்தது ,பியர் அடிக்கிற சாட்டிலை எங்களை பலோ பண்ணிறீரோ ,நீர் மாமாவோ மூன்று எழுத்தோ யாராக இருந்தாலும் பரவாயில்லை .எங்களை ஒன்றும் செய்ய இயலாது

ஏன் என்றால் இந்த நாட்டில் பிறந்தவர்கள் .வேணுமெண்டால் மாமி வீட்டுக்கொண்டு போய் மூன்று நாள் அல்லது மூன்று மாதம் வைத்திருந்தீர்களில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்..

அட பாவி உங்களை தரிசிக்க இவ்வளவு நாள் துடித்த என்னை மூன்று எழுத்து என்று சந்தேகிக்கலாமோ எனது மனது துடித்தது.இப்பொழுது அந்த மற்ற இளைஞர் இளைஞிகள் முற்றும் முழுதுமோ சூழ்ந்து கொண்டார்கள் .மாறி மாறி கேள்விகள் அதற்க்கு எனது அப்பாவித்தனமான பதில்கள் ..இடை இடையே டெலிபோன் அழைப்புகளை மேற் கொள்ளுகிறார்கள் டெலிபோன் அழைப்பை ஏற்று கொள்ளுகிறார்கள்

என்னை என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு கட்ட மத்திய குழுவோடையோ தலமைபீடத்துடனோ கதைக்கிறார்களோ என ஜயம் ஏற்பட்டது.என்னை அசைய வேண்டாம் உதிலை இரும் என்று கூறி மூன்று பேரை என்னை சுற்றி காக்க வைத்து விட்டு தூரத்தில் நீண்ட விவாதம் செய்து கொண்டிருந்தனர் .

முடிவெடுத்திட்டினம் போலை ஒருத்தி எனது அருகில் வந்து ஜயா உங்களை பார்த்தால் அப்பாவி மாதிரி தான் இருக்குஉங்களுக்கு ஒன்று செய்யவில்லை உங்களை விடுறம் என்றுசொல்லிப்போட்டு ஒரு கண்டிசன் என்றாள் ..நாங்கள் இப்ப இந்த இடத்தை விட்டு போறம் அரை மணித்தியாலத்துக்கு நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது கை தொலைபேசி பாவிக்க கூடாது..நீங்கள் இந்த கண்டிசனை மீறுகீர்களோ என ஒரு ஆள் உங்களை தூரத்திலே இருந்து பார்த்து கொண்டிருப்பார் என்று.

எனக்கு அடித்த பியரால் ஏற்படும் உற்சாகம் தீடிரென இறங்கி விட்டது .அந்த அரைமணித்தியாலத்தில் அங்கேயே இருந்து மீண்டும் ஒரு பியர் குடிக்க சந்தர்ப்பம் தந்த திருவாளர்களுக்கு நன்றி சொல்லி கொண்டேன்

இவர்களின் தரிசனம் அருள் கிடைத்த பிறகு இவர்களை பற்றிய பயம் அவ்வளவு இல்லை..

ஆனால் இவர்களின் வீர பிரதாபங்கள் அட்டாகசங்கள் அயோக்கியதனங்கள் பற்றி தமிழ் வட்டாரங்களை தாண்டி ஆங்கில ஊடகங்களும் பேச தொடங்கி இருந்தன

லண்டன் பொலிஸ் குற்ற தடுப்பு ஆணையாளர் ஒரு அறிக்கை விட்டார் இந்த இளைஞர் கோஸ்டி பற்றி இந்த நாட்டில் பிறந்தவர்களாயும் இருந்தாலும் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து இந்த சமூக சீரழிவை செய்வார்களாயிருந்தால் இவர்களை சிறிலங்காவுக்கு எவ்வித தயக்கமின்றி நாங்கள் நாடு கடத்துவோம்

இந்த ஒற்றை அறிக்கை இவ்வளவு பவுர் புல் ஆக இருக்கும் என்று நான் அப்பொழுது நினைக்கவில்லை .இந்த அறிக்கைக்கு பின்னர் இந்த திருவாளர்கள் முடி துறந்து நாடு துறந்து வனவாசம் போவார்கள் என்று

இந்த திருவாளர்கள் இப்ப கூட்டமாக காண கிடைப்பதில்லை ...இவர்களின் அட்டாகசமும் குறைந்த சந்தோசம் லண்டன் வாழ் மக்களிடையே..

அன்றைக்கு ஒரு நாள் என்னை விசாரித்த குழு தலைவர் சிங்களாய் சென்று கொண்டிருந்தார்

,சிங்கமாய் இல்லை .என்னை கண்டவுடன்

கூனி குறுகிக் கொண்டு

சின்னக்குடி மிது.



கபாடபுரம்

30-40 களிலேயே-magical realism முறையில் சிறுகதையின் பிரம்மகர்த்தா புதுமைபித்தனால் எழுதப்பட்ட கதைகளில் ஒன்று கபாடபுரம்

இந்த கதை அழிந்த குமரிகண்டத்தையும் சித்தலோகத்தையும் மனதில் வைத்து கொண்டு எழுதிய கதை போல் தோன்றுகிறது

இந்த கதையில் கடலுக்கு அடியிலுள்ள உலகத்துக்கு செல்லுகிறார்

அங்கே ஒரு குரல் வழிகாட்டுகிறது

அந்த குரல் யாழ்ப்பாணத்தவரின் குரல் போல் இருக்கிறது என்கிறார்

அந்த குரல் சித்தர் உலகம் இது என்கிறது

அந்த கதையில் புதுமைபித்தன் வர்ணிக்கும் சில வரிகளுக்குரிய

படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் கொண்டு வர முயற்சித்து இருக்கிறேன் பார்க்க

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன். ஆணோ பெண்ணோ எனச் சந்தேகப்படும்படியாக இருந்தது.

வாக்கு தமிழ்தான் என்றாலும் தொனிப்பு

யாழ்ப்பாணத்துக்காரர் ரீதியில் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் தென்படவில்லை.

படிக்கட்டுகள் கடைசியாக ஒரு நிலவறையில் சென்று முடிவடைந்தன. நிலவறை அறுகோண யந்திரம் போல அமைக்கப்பட்டிருந்தது. படிக்கட்டுகளுக்கு எதிர் பாரிசத்தில் உள்ள சுவரில் உள்ள பிறையில் தலையற்ற முண்டம் ஒன்று வளர்த்தியிருந்தது;

நிலவறையின் இரு பாரிசத்திலும் இரண்டு வழிகள் தென்பட்டன. நான் பிலத்தின் மையத்தில் வந்து நின்று எந்தத் திசை நோக்கிச் செல்லலாம் என்று எண்ணமிட்டேன்.

இதுதான் ஸித்தலோகம்.

மாடர்கள் அல்லது நந்திக் கணங்கள் என எங்களைச் சொல்லுவார்கள். பயப்படாமல் வாரும்" என்று சொல்லிக் கொண்டு எனது வருகையை எதிர்பார்க்காமலேயே நடக்க ஆரம்பித்தன. நானும் தொடர்ந்து நடந்தேன்.

விசித்திர விசித்திரமான தாவர வர்க்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. பூமியின் சிசுப் பருவத்திலே தோன்றிய தாவர வர்க்கங்கள் என்று சொல்லுவார்களே சயன்ஸ்காரர்கள் அவை போன்றவை. பிரமாண்டமான நாய்க்குடைகள், தாழைகள், கொடிகள் விசித்திர விசித்திரமாக முளைத்திருந்தன. ஆனால் அவை யாவும் பொன் போலும் வெள்ளி போலும் மின்னின.

இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஏழு வர்ணங்களிலும் தண்டு முதல் இலை வர பளபளவென சாயம் பூசி வைத்த மாதிரி நிற்கும் விருக்ஷங்களைக் கண்டேன். அதிலே நீல நிறமான கருநாகங்கள் சோம்பிச் சுற்றிக் கிடந்தன. வழியிலே தங்கத் தகடு போல மின்னிய தவளை கத்திச் சென்றது.

மரச்செறிவுகளுக்கிடையே நந்திக் கணங்கள் மறைந்து விட்டனர். அவர்கள் எந்த வழியில் சென்றார்கள் என்பதைக் கவனிக்கவில்லை. கால்கொண்டு போன வழியே நடந்தேன். மரங்களுக்கிடையே திறந்த வெளி வந்தது..

மண்சுமந்த மேனியர்

 

மண்சுமந்த மேனியர் எண்பதுகளில் முனைப்புப்பெற்ற சமூக, அரசியல் நிலமைகளை மிக ஆழமாகப் பேசிச் சென்றிருக்கிறது. தமிழ் சமூகத்தின் இரண்டாயிரம் ஆண்டு பழஞ்சுமை களையும் எள்ளல் சுவையோடு தந்திருக்கிறது. இந்த நாடகம் செய்து காட்டல் பாணியைக் கொண் டது. அது ஜேர்மனிய நாடகமேதை பேட்டோல் பிரெட் குறிப்பிடும், அந்நியமாதல் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது

. பார்வையாளர்கள் பாரத்திரத்தோடு ஒன்றித்துவிடாது, அதிலிருந்து விடுபட்டு சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கும் பண்பு கொண்டது.

நாடகத்தில் உரைஞர்கள் நாடகத்தை நகர்த்திச் செல்கிறார்கள். அவர்களே முரணை உருவாக்கு பவர்களாகவும், முரண் தீர்ப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள். அதேவேளை அபத்த பாணியில் எதிர்காலத்தோடும் இறந்த காலத்தோ டும் தொடர்புபடுத்தி நிகழ்காலத்தை நகர்த்துகிறார்கள்

எனலாம். பார்வையாளரை விளிப்பாகவும் செயற்றிறனுடனும் வைத்துக் கொள்ளும் பணியும் எழுத்துரைஞர்களையே சாரும். நாடக மாந்தரை யும் கதையையும் பார்வையாளருக்கு இணைக்கின்ற பணியும், நாடகத்தை நகர்த்தும் பணியும் எடுத்துரைஞர்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகளின் கல்வியை நம்பி தமது வாழ்நாள் முழுமையையும் செலவு செய்யும் வழக்கத்தைக் கொண்டதாக யாழ்ப்பாணச் சமூகம் காணப்படுவதும், பிள்ளை படித்தால் ஓர் அரச உத் தியோகம் கிடைக்கும், அதன் வழி குடும்பம் சிறக்கும் என்ற மனப்பாங்குடைய சமூக உளவியலை நாடகாசிரியர் நன்கு வெளிப்படுத்துகிறார். நிலத்

தைக் கிண்டுதல்,

பிள்ளைகளில் முதலிடுதல், பின்னர் பிள்ளை பின்னடிக்கு, அந்தப் பிள்ளையே வீட்டின் குமருகளை கரை சேர்ப்பான், அவனே உதவியென்று வாழ்கிற நடுத்தர வர்க்க மனப்பாங்கு நன்கு வெளிப்படுகிறது. இந்தக் குடும்பம் ஆயுதப் போராட்டத்தால் மாற்றம் அடைந்து வரு கிறது என்பதையும் நாடகம் காட்டுகிறது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்ச்சி தமிழ்ச் சமூகத் தையே மாற்றத்துக்கு உட்படுத்துகிறது என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாண நடுத்தரக் குடும்பங்களின் மானப் பாரங்களை இறக்கிவைக்கிற இடம் கோவில் அதனை கிராமிய பண்பாட்டு பலத்துடன் உள்ள சன்னதி கோவிலை வைத்து ஆசிரியர் நன்கு வெளிப்படுத்தி யுள்ளார் எனலாம்.

இதில் உள்ள உணர்ச்சிப்பெருக்கு நாடகத்தில் அற்புதமாகக் காட்டப்படுகின்றது.

'சன்னதிக் கந்தா, சரணம் அப்பு!

என்ர இளையவன் சோதினை எடுக்கிறான் மூத்தவனை நம்பி மோசம் போனன்

ஊருக்கு உழைக்கிறன் எண்டு அலையிறான் இளையவனைப் பாசுபண்ண வையப்பு மூட்டை அரிசி அவிச்சுப் போடுவன்'

என்ற அன்னை பாத்திரத்தின் வேண்டுகோள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு எனலாம்.

"மண் சுமந்த மேனியர் பயிற்சிகள், மக்களுடன் பழகுதல் ஊடாக யாழ்ப்பாண சமூகக் கட்ட மைப்பை ஊடறுத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தபேறு என்கிறார் செல்லையா ஞான சேகரன். இவர் மண் சுமந்த மேனியரில்: கிழவன் பாத்திரம் ஏற்றுநடித்தவர். தற்போது அமெரிக்கவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

மண்சுமந்தமேனியர் தமிழ்ச்சமூகத்தை ஒரு சமூ கவியல் பார்வையில் பார்ப்பதற்கு மேலாக அந்தக் காலத்தில் காணப்பட்ட பிராந்திய அரசியல் நிலமை கள் பற்றியும் பேசுகிறது.

குறிப்பாக இந்தியாவை நம்பிய சீவியம் பற்றி அதிகமாகப் பேசுகிறது. அகில இந்திய வானொலியின்

மாநிலச் செய்தி மூலம் அந்த ஆட்சி இஞ்ச வந்திடுமெண்டு.

வாயைப் பிளந்து வடக்கை பாக்கிற கூட்டம்:

எடேய், வடக்கை வானம் வெளுக்குமெண்டு புடுக்கைச் சொறிஞ்சு பாத்துக் கொண்டு

நில்லுங்கோ பேப்ப்... எனக்குவரற ஆத்திரத்துக்கு....! என்று கிழவரின் கோபம் நாடகத் தில் நீள்கிறது.

மண்சுமந்த மேனியர் நாடகம் 1985ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் பின்னர் இந் திய வானூர்திகள் யாழ்ப்பாணத்தில் பறந்துசாப்பாடுபோடுது. 1987ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகுது.

இந்திய இராணுவம் வருகுது. புலிகளுடன் சண்டை, பொதுமக்கள் சாகிறார்கள். ராஜீவ்காந்தி கொலை, பிராந்திய அரசியல் மாற்றம் இவையெல்லாம் நடந்து, மண்சுமந்த மேனியர் கிழவன் பாத்திரம் சொன்னதை நிரூபித்திருக்கிறது.

வடக்கிலிருந்து வானம் வெளுக்காது, தமிழருக்கு நன்மை வராது என்பது முள்ளிவாய்க்காலுடன் நிரூபணமாகிறது எனலாம்.

இவற்றை அன்றே எதிர்வு கூறியவர்களை மனப்பிறள்வானவர்களாகச் சித்தரித்தார்கள் என்ப தையும் நாடகம் குறிப்பிடுகிறது. நாடகம் அன்றிருந்த நிலமைகளைப் பேசி எதிர்காலம் தொடர்பான எச்சரிக்கையைத் தந்திருக்கிறது. ஆனால் அதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு எமது அரசியலோ, ஆயதப் போராட்டமோ நகர வில்லை என்பதுதான் எம்முன்னே உள்ள சோகம்

ஒவ்வொரு நாளும் பலியிடப் படுகின்ற

ஆட்டுக் கடாக்களாய்

கணிக்கப்படுவதை வெறுக்கிறோம்

ஒவ்வொரு நாளும் பலியடப்படுகின்ற ஆட்டுக் கடாக்க ளாய் தமிழ்ச் சமூகம் இருப்பதுதான் அவலம். இந்தக் காலத்தில் வானூர்தித் தாக்குதல், ஊரடங்குச் சட்டம், குண்டுவெடிப்பு என்று பல சம்பவங்களையும் நாடகம் பதிவு செய்திருக்கிறது. இந்தியச் செய்தி கேட்டலும் தமிழர்கள் இந்தியா சார்பு நிலையில் நிற்பதும், சுட்டிக்காட்டப்படுகிறது

. கிரிக்கெட் விளையாட்டில் கூட இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் மனோநிலையில் தான் ஈழத்தமிழர்கள் உள்ளார்கள் என்பது அற்புத மாகக் காட்டப்படுகிறது. காலத் தேவையான வானொலிப் பெட்டி யின் முக்கியத்து வம் மிக அற்புதமாக மேடையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அதேவேளை வானொலிப் பெட்டியைப் பார்த்து கிழவன் சொல்வது மிகத்தெளிவாக வானொலிப் பெட்டியின் முக்கியத்தை விளக்குகிறது.

ஒசை ஒலியெல்லாம் நின்றாய் நீயே

உலகுக் கொரவனாய் நின்றாய் நீயே

வாசமலரெலாம் ஆனாய் நீயே

மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப் பெரிதும் இனியாய் நீயே

பிரானாய் அடியென் மேல் வைத்தாய் நீயே

தமிழர் போராட்டம் இந்தியாவின் கையில் இருப்பதை நாடகம் கடுமையாக விமர்சித்துச் செல்வதைக் காணலாம். ஆற்றையும் கையிலை குடுமியைக் குடுத்திட்டுத் தலையைக் குனிஞ்சுகொண்டு நிக்கிற சனியன்கள்

 

நன்றி- தேவநாயகம் தேவானந்:



ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்.....

மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்......உரிமையாளர் சொன்னார்...மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்....

கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்துகசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்துஉரிமையாளரை நோக்கி நீட்டினான்....

இதுவே என் கையில் உள்ளது.....இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க....

பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை...மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை

என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள். தொண்டையோ நடுங்குகிறது.... *

ஹோட்டல் உரிமையாளர் மீன் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார்.

அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்....அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன...ஏன் அழுகிறாய்...?

அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார்...

எனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்....

எனக்கு மூன்று குழந்தைகள்இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்.....

மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்....

நான் குவித்த ஒவ்வொரு பைசாவையும் அவர்களின் உயர்வுக்காக செலவழித்தேன்அதற்காக என் இளமையையும் 28 ஆண்டுகால பௌதிக வாழ்க்கையையும் இழந்து புலம்பெயர்ந்தேன்...

புலம்பெயர்ந்தே எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவி என்னைத் முதுமையில் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டாள்....

சொத்து பிரிவினை செய்ய ஆரம்பித்ததில் இருந்து என் மகன்கள்மகள்கள் என்னைத் தள்ளி ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்.

நான் அவர்களுக்குச் சுமையானதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தேன்.

மெல்ல மெல்ல என்னைத் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள்....

எனக்கு வயதாகிவிட்டதா....?குறைந்தபட்சம் என் வயதிற்காகவாவது மதிக்க கூடாதா ?

அவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகுதான் இரவு உணவிற்கு செல்வேன்அப்படியும்அப்போதும் திட்டுவதும்கூச்சலிடுவதும் தவற வில்லைசாப்பாடு கண்ணீரும் உப்பும் கலந்திருந்தது.

பேரக்குழந்தைகள் என்னிடம் பேசுவதே இல்லைபார்த்தால் அம்மா அப்பா அடித்து விடுவார்களோ என்ற பயத்தில்...

அதே வேதனை அடுப்பில் எங்கும் வாழ முடியும் போதுஅந்த...

இரவும் பகலும் வியர்வை சிந்தி தொடர்ந்து தூங்காமல் உழைத்துவயிற்றுக்கு சாப்பிடாமல்அவளும் நானும் சேர்த்த பணத்தில் வாங்கிய செங்கல்லால் கட்டப்பட்ட இந்த வீடு....

ஆனால் நான் என்ன செய்வதுமருமகளின் தங்கத்தை திருடிவிட்ட தாக - சாக்குப்போக்கில்திருடனாக முத்திரை குத்தப்பட்டேன்... மகன் கோபமடைந்தான்நல்லவேலை கை நீட்ட வில்லைஅந்த பாவத்தை அவன் செய்யவில்லை.

அது என் அதிர்ஷ்டம்அங்கேயே நான் இருந்து இருந்தால் நிகழ்ந்து இருந்தாலும் இருக்கலாம்.

சாப்பாட்டின் நடுவில் எழுந்தார். உரிமையாளர் முன் 10 ரூபாயை நீட்டினார்..

ஓனர் வேண்டாம்பையில் வையுங்கள்இருக்கட்டும்....நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்...

நீங்கள் எப்போதும் மதிய உணவு சாப்பிடலாம்..அப்படியே அந்த மனிதர் 10 ரூபாயை அங்கேயே வைத்துவிட்டு....

உங்கள் உதவிக்கு மிக்க மகிழ்ச்சி....என்ன நினைக்கிறாய்...

சுயமரியாதை என்னை விட்டு விலகாதேவருகிறேன் என்று சொன்னதும் ஒரு சிறு மூட்டையை எடுத்துக்கொண்டு தெரியாத இடம் நோக்கி மெல்ல கிளம்பினானர்...

அந்த மனிதர் என் மனதில் ஏற்படுத்திய காயம் இன்று வரை ஆறவில்லை.

அதனால்தான் ஒவ்வொரு துளிருமே கட்டாயம் ஒரு நாள் பழுத்து சருகாகும் என்று கூறப்படுகிறது.

பழுத்த சருகுபோன்ற பெரியவர்களை பூவில் வைத்து கண் போல் காக்க வேண்டும்.

நமக்கு இப்படி ஒரு நாள்..???

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்தையும் பகிர விரும்புபவர்களும் பகிருங்கள்..

யாரேனும் மனம் மாறினால்..... "போதும்"

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்


 


 

 மனோரமா

வைரம் நாடக சபாவில் மனோரமாவை ஒரு நடிகர் துரத்தி துரத்திக் காதலித்தார் .விரட்டி விரட்டி அடித்தார் மனோரமா. அவர் விடவே இல்லை. அம்மா ராமாமிர்தம் எச்சரித்தார்.

அவன் நல்லவனில்லை. உன் நிம்மதி போய்விடும். வளரும் வயதில் காதல், திருமணம் வேண்டாம் என்று கெஞ்சிப் பார்த்தார். காதல் போதை கட்டுப்பாட்டை மீறி இருந்தது.

1954-ல் திருச்செந்தூரில் அந்த நடிகருக்கும் மனோரமாவுக்கும் திருமணம் -எளிமையாக அம்மாவுக்குத் தெரியாமல் நடந்தது. அதன் பிறகு அம்மாவுடன் பேச்சுவார்த்தை இல்லை. ‘வாழ்விலும் தாழ்விலும் உன்னை விட்டுப் பிரியேன்என்று சத்தியம் செய்து, கபடநாடகம் ஆடியவனின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தது.

திருமணமாகி 2 மாதங்களில் கருவுற்று விரைவில் கருச்சிதைவும் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு கொட்டாம்பட்டி மருத்துவமனையில் மனைவியைச் சேர்த்த கணவன், மயக்கம் தெளிந்து பார்த்தபோது காணவில்லை. அம்மா மட்டும் எதிரில் காவல் தெய்வமாக நின்று கொண்டிருந்தார்.

வேறு ஊரில் நாடகம் போட கணவன் போய்விட்டார். மீண்டும் சமரசமாகித் தொடர்ந்து நாடகங்களில் அவரோடு நடித்தார். மீண்டும் சில மாதங்களில் வயிற்றில் அடுத்த குழந்தை. 9 மாதம் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டே ஓய்வில்லாமல் நாடகங்கள். உடம்புக்கு முடியவில்லை என்றாலும் வற்புறுத்தி நடிக்கச் சொல்வார். வருமானம் குறையக்

கூடாது அவருக்கு.

6 மாதமாக நாடகங்களில் நடித்ததற்கு காசு வரவில்லை. ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதே!’ என்றார். பிரசவத்திற்கு பள்ளத்தூர் தாய் வீடு வந்துவிட்டார். 9-வது மாதம் ஆஸ்பத்திரியில்பிரசவத்திற்குப் பணம் வேண்டும்!’ என்று கேட்டால், ‘நான் வரும்போது கொண்டு வருகிறேன்என்றார் கணவன் வரவில்லை. பிரசவம் ஒரு கொடுமை. பணமில்லாத அவதி இன்னும் கொடுமை.

குழந்தை பிறந்தபோதும் ஆசையோடு மனைவி, குழந்தையைப் பார்க்க வரவில்லை. 15 நாள் கழித்து வந்தார். பணம் எதுவும் கொண்டு வரவில்லை. மனைவியைக் கொஞ்சவில்லை- மகனை அள்ளி எடுத்து முத்தம் கொடுக்கவில்லை. ‘சீக்கிரம் ரெடியாயிரு. நாடகங்கள் நடத்த தேதி கொடுத்துவிட்டேன்!’ என்றார். மனோரமா மூலம் பணம் சம்பாதிப்பது ஒன்றே அவரது நோக்கம்.

அம்மாவால் தாங்க முடியவில்லை. ‘பச்சை உடம்பு. ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த நிலைமையில் ஊர் ஊராக நாடகம் நடிக்க உடம்பு தாங்குமா? என்னய்யா மனுஷன் நீங்க?’ பொங்கிவிட்டார்.

இப்போது மனோரமா -தீர்மானமாகஇப்ப நான் வரமுடியாதுஎன்றார்- முறுக்கிக் கொண்டு போய்விட்டார் கணவர்.

பின்னர் சென்னையில் குடியேறினார்கள். நாடகங்களிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் வந்தன. திடீரென்று கணவரிடமிருந்து விவாகரத்து கடிதம்? 1956-ல் விவகாரத்து - அவரது 19 வயதில் கணவனைப் பிரிந்தாயிற்று.

ஏன் விவகாரத்து? பிறந்த மகன் பூபதி ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்திருக்கிறார் கணவன். தகப்பனை விழுங்கி அம்மாவை உயர்த்தும் ஜாதகம் என்றார் ஜோதிடர். அதாவது நாம் செத்துப் போவோம்! அதிர்ந்தார். விவகாரத்து வாங்கி உயிர் பிழைக்க ஓடிவிட்டார்.

சக நடிகரின் தங்கையை இரண்டாந்தாரமாக மணந்தார். 24 ஆண்டுகள் ஓடின. வேண்டா வெறுப்பாக வாழ்ந்த வாழ்க்கையில் மனோரமா மூலம் ஒரு ஆண் வாரிசு பிறந்தது. உருகி உருகி காதலித்து, கட்டிப்பிடித்து, வாழ்ந்தும் இரண்டாவது மனைவிக்குக் குழந்தை பிறக்கவில்லை.

இறைவன் ஒருவனை எப்படி தண்டிக்கிறான் பாருங்கள்.

1990- டிசம்பர் 18-ம் தேதி மாஜி கணவர் இறந்த செய்தி மனோரமாவுக்கு தெரிவிக்கப்படுகிறது. துக்கம் விசாரிக்க மனோரமா வீட்டுக்குப் போனேன். ‘கணவன் இறந்ததற்கு அழுவதா? அறியாத வயதில் தன்னை ஏமாற்றி ஒரு குழந்தை கொடுத்து விட்டு, தலைமுழுகி விட்டுப் போனவனை நினைத்து சந்தோஷப்படுவதா தெரியவில்லை!’ என்றார்.

பூபதியை, தகப்பனாருக்கு கொள்ளி போட அனுப்பச் சொன்னேன். ‘பூபதியோ அவர் யாரென்றே எனக்குத் தெரியாதே!’ என்றான். ‘அவர்தான் உன் தகப்பன் என்று நான் சொல்கிறேன். தகப்பனுக்கு கொள்ளி போடுவது புண்ணியம் வா!’ என்று அழைத்துப் போய் இறுதி மரியாதை செய்து வந்தார்.

‘‘சிவா! யுத்தம் முடிந்துவிட்டது. இனி

நான் எதற்கு இருக்க வேண்டும்? என் வாழ்க்கை எப்படிப் போனால் என்ன என்று, ஈவிரக்கமில்லாமல் என்னை உதறிவிட்டுப் போனவன் முன்னால் வாளெடுத்து சுழற்றி இத்தனை காலம் போராடி, நான் யார் என்று நிரூபிக்க உடல், பொருள், ஆவியை எல்லாம் செலவழித்தேன். எதிராளி வீழ்ந்துவிட்டான். வெறுங்கத்தியைச் சுழற்றிக் கொண்டு எப்படி வாழ்வது? போதும். போய் விடுகிறேன்!’’ என்றார்.

ராமாமிர்தம் அம்மா, இந்த மனிதனை நம்பி உங்களைப் பெற்றெடுக்கவில்லை. கலையுலகில் இமயத்தின் உச்சியைத் தொடப் பிறந்தவர் நீங்கள். இன்னும் கடமை பாக்கி இருக்கிறது தொடருங்கள்!’ என்றேன்.

பூபதியை டாக்டராக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். அது நிறைவேறவில்லை. பூபதியின் மகன் ராஜ ராஜனை டாக்டராக்கிவிட்டார். இரண்டு பேத்திகளும் இப்போது திருமணமாகி நன்றாக வாழ்கிறார்கள்.

பனாட்டு

பனாட்டு என்ற தின்பண்டம் தொல்காப்பியத்தில் பேசுகிறாதாம் அதை பற்றி அவர் கூறுவதை கீழே பார்க்கலாம்

பல்கலைக்கழக நிகழ்வுகள் தவிர மீதமிருந்த நாட்களையும் நேரத்தையும் இலக்கிய நண்பர்களைச் சந்திக்கவும் யாழ்ப்பாணப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கவும் பயன்படுத்திக்கொண்டோம்.

யாழ்ப்பாணப் பகுதிகளின் வீடுகள் கேரளத்தை நினைவுபடுத்தின. சுற்றிலும் வேலியும் மரங்கள் நிறைந்த தோட்டமும் கொண்ட தனிவீடுகள். பனையோலை, தென்னங்கீற்றுகளால் ஆன வேலிகளுடன் தற்போதைய தகர அட்டைகள் கட்டியவையும் கணிசமாக இருந்தன.

நெரிசலற்ற சாலைகள். வாகனங்கள் குறைவு. மக்கள்தொகையும் குறைவு.

கடற்கரைப் பகுதிகள் மிக அழகானவை. அங்குள்ள கிராமங்களில் பனைத் தொகுதிகள் நிறைந்திருந்தன. பனை சார்ந்த பண்பாடும் மிகுதி.

தமிழ் இலக்கணத்தில் 'பனாட்டு' என்னும் சொல்லைப் பற்றித் தனி நூற்பாவே உண்டு. அப்பகுதியை நடத்தும்போது 'பனை வெல்லம் என்னும் கருப்பட்டிதான் அது என்று ஆசிரியர்கள் சொல்வது வழக்கம்.

பனம்பழச் சாறு பிழிந்து செய்யும் இனிப்புப் பண்டம் என்பதையும் அது இலங்கையில் இப்போதும் இருக்கிறது என்பதையும் சில ஆண்டுகளுக்கு முன் அறிந்தேன். அந்தப் 'பனாட்டு' எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆவல் யாழ்ப்பாணச் சந்தையில் தீர்ந்தது

. உண்டு பார்த்துக் கொஞ்சம் விலைக்கும் வாங்கிக்கொண்டோம்.

பனம்பழத்தைச் சுரண்டிப் பழக்கூழ் போன்ற அதன் சாறெடுத்து ஓலைத் தடுக்கில் ஊற்றிக் காயவைத்தால் அடை போல ஆகிறது. துண்டுகளாக நறுக்கி அதைப் பொட்டலம் கட்டி விற்பனை செய்கிறார்கள். அதைச் செய்வதில் அங்கங்கே சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன. பனைகள் மிகுந்த எங்கள் ஊரிலோ தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ இல்லாத இந்தப் பதார்த்தம் இலங்கையில் இப்போதும் பரவலாக இருப்பது வியப்பான செய்தி.

தொல்காப்பியம் இந்தச் சொல்லைப் பதிவு செய்திருக்கிறது என்றால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட உணவு இது எனத்தெரிகிறது.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் இது வழக்கில் இருந்து பின்னர் மறைந்து போய்விட்டதா? பனைகள் இப்போதும்

நிறைந்திருக்கும் நாட்டில் எப்படி ஓர் பண்டம் மறைந்து போகும்? இலங்கை வழக்கைக் கருத்தில் கொண்டே இந்நூற்பாவைத்

தொல்காப்பியம் இந்தச் சொல்லைப் பதிவு செய்திருக்கிறது என்றால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட உணவு இது எனத் தெரிகிறது.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் இது வழக்கில் இருந்து பின்னர் மறைந்து போய்விட்டதா? பனைகள் இப்போதும் நிறைந்திருக்கும் நாட்டில் எப்படி ஓர் பண்டம் மறைந்து போகும்?

இலங்கை வழக்கைக் கருத்தில் கொண்டே இந்நூற்பாவைத் தொல்காப்பியர் எழுதியிருக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் தொன்மைக்கு இச்சொல்லும் ஒரு சான்றாகக் கூடும் எனத் தோன்றியது.

கேரளத்தைப் போல வீடுகள் மட்டுமல்ல, சில உணவு வகைகளும் அங்குள்ளன. குறிப்பாகப் புட்டு, புட்டு அவிப்பதற்கான தனிவகைப் பாத்திரங்களையும் கண்டோம். அரிசியிலும் கேரளத்துச் சாயல், செந்நிறத்தில் கொட்டை அரிசிச் சோற்றின் சுவை அருமை.

வெறுஞ்சோற்றை அள்ளி உண்டாலே வாய் மணக்கிறது. தேங்காய் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. மீன் குழம்பும் பொரித்த மீனும் நன்றாகக் கிடைக்கின்றன. நல்ல தேநீரைத்தான் எங்குமே குடிக்க இயலவில்லை. எத்தனை சொன்னாலும் பால் வண்ணத்திலேயே தேநீர் தருகிறார்கள்

யாழ்ப்பாணத்தை சுற்றி செல்கையில் வல்வெட்டித்துறையில் பிரபாகரனது ஊர்

கரவெட்டியில் இது கா.சிவத்தம்பியின் ஊர் என்று காட்டினார்கள்


 

கருநாடக இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது அதுதான் சுருதி சேர்க்கிறது லயமாகவும் பின் தொடர்கிறது.

தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?கேள்வி - பாடல்களில் மொழியை விட இசையே சிறப்பு. இசை தான் வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். அதைத்தான் பார்ப்பனர்களும் சொல்கிறார்கள்.

கர்நாடக சங்கீதத்தைத் தமிழில் பாடுஎன்றால், “இசைக்கு மொழியில்லை. மொழிகளைக் கடந்தது இசைஎன்கிறார்கள்.

உங்களின் இசை பற்றிய கருத்து தமிழ் விரோதமும் பார்ப்பன தன்மையும் உள்ளதாக இருக்கிறது. அவர்களுக்கும், இசை பற்றிய உங்களின் புரிதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை? -வீரபாண்டியன்.


வார்த்தைகளால் பாடுவதைவிட வாத்தியக் கருவிகளால் இசைக்கப்படுகிற இசையே உன்னதம். அது தருகிற உணர்வுகளை ஒரு போதும் மொழியால் முடியவே முடியாது, என்பதை இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்கிறேன்.

பாடலில் கூடசந்தம்தான் உங்களை முதலில் ஈர்க்கிறது. மொழி இரண்டாம் பட்சம்தான்.

இதை நீங்கள் திரை இசை, கருநாடக சங்கீதம், மேற்கத்திய இசை இவற்றோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல, தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்த பறை, தவில், நாதஸ்வரம் இவையே அதற்குச் சாட்சி.

இவற்றில் குரலிசை என்பதே இல்லை. இசை மட்டும்தான்.

பறையும் நாதஸ்வரமும் தவிலும்; துக்கம், மகிழ்ச்சி, எழுச்சி இன்னும் பல உணர்வுகளை நம் உள்ளமெங்கும் அள்ளித் தெளிக்கும்.

பறை இசைக் கலைஞர், நாதஸ்வரம்-தவில் கலைஞர்கள் சொல்லலாம், “இசைக்கு மொழியில்லை. மொழிகளைக் கடந்தது இசைஎன்று.

ஆனால், கருநாடக சங்கீத வித்துவான்கள் அப்படிச் சொல்வதற்குத் தகுதியற்றவர்கள், அருகதையற்றவர்கள். கருநாடக சங்கீதத்தில் பிரதானமே குரல் தான். அங்கு வாத்தியங்களுக்குப் பெயரே பக்க வாத்தியம்.

கருநாடக சங்கீதத்தில் உள்ள பிரச்சினை, மொழியல்ல; அதில் ஜாதிய கண்ணோட்டம் நிறைந்த அரசியல் இருக்கிறது.

தமிழை விடச் சமஸ்கிருதம் உயர்ந்ததுஎன்பது போலவேகருநாடக இசைக்குத் தெலுங்குதான் பொருத்தமானதுஎன்கிற எண்ணமும்.

அதற்குக் காரணம் அவர்களுக்குத் தெலுங்கு மேல் உள்ள ஈடுபாடல்ல;

தியாகராஜர் ஒரு தெலுங்கு பார்ப்பனர். அவர் கீர்த்தனைகளைத் தெலுங்கில்தான் பாடியிருக்கிறார். தியாகராஜர் மீது உள்ள ஈடுபாடுதான் தெலுங்கின் மீது உள்ள ஈடுபாடு போல் பிரதிபலிக்கிறது.

தியாகராஜர் தெலுங்கு பேசிய நாயுடுவாகவோ, இன்னும் குறிப்பாக சக்கிலியராகவோ இருந்திருந்தால்…? ‘அப்படி ஒருத்தர் இருந்தாரா?’ என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

தியாகராஜர் நம்பூதிரியாக இருந்து மலையாளத்தில் பாடியிருந்தால் இவர்களுக்கும் மலையாள உணர்வு பொங்கி வழிந்திருக்கும்.

அதனால்தான் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு முன்பே தமிழில் கீர்த்தனைகள் பாடிய அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை

இவர்களை விட தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் இவர்களின் தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகள்அவர்களுக்குபிடிக்கிறது என்பது மட்டுமல்ல உயர்வாகவும் தெரிகிறது.

காரணம்அவர்கள் தமிழில் பாடினார்கள்என்பதினால் அல்ல, அவர்கள் பெயருக்குப் பின் ஐயர், சாஸ்திரிகள், தீட்சிதர் என்ற பெயர் இல்லாததினால்தான்.

இருந்திருந்தால், தெலுங்கு கீர்த்தனைகளை மட்டும் விரும்பி பாடுகிறதமிழர்களான இவர்களுக்குதமிழ் உணர்வும் நிறைந்திருக்கும்.

தியாகராஜருக்கு முன்பே கீர்த்தனைகளைப் பாடியவர்கள் இவர்கள்தான்என்று அவர்களுக்குரிய மரியாதையும் முறையாகக் கிடைத்திருக்கும்.

இன்னும் நெருக்கிப் பார்த்தோமானால், அதை நிரூபிப்பது போல் இன்றைய சாட்சியாகவும், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களின் கீர்த்தனைகளை, தமிழ்ப் பாடல்கள் பாடும்போது கூடஅவர்கள்பாடுவதில்லை.

மாறாக, கோபால கிருஷ்ண பாரதியார், பாவநாசம் சிவன், சுப்பிரமணிய பாரதியார் பாடல்களைத் தான் உணர்ந்து, உருகி தமிழ் உணர்வாக வெளிப்படுத்துகிறார்கள்.

காரணம்இவர்கள்பெயருக்குப் பின்னால்அதுஇல்லாவிட்டாலும் பெயருக்குள்அதுதானே இருக்கிறது.

நாதஸ்வர-தவில்இசை மிக துல்லியமான செவ்வியல் இசை வடிவம். அது தியாகராஜர் காலத்துக்கு முன்பிருந்தே அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது.

இவர்கள்பாடுகிற எல்லா கீர்த்தனைகளையும் நாதஸ்வர இசையில் வாசிக்கிறார்கள்.

இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலையோடு வளர்ந்தவர்கள்.

அவர்களிடம் இருந்து இசைப் பாடலையும் நாட்டியத்தையும் தங்களின் கண்டுபிடிப்பாக, தகுதி திறமையாக அடையாளப்படுத்திக் கொண்டஇவர்கள்’,

ஏன்நாதஸ்வர-தவில்வாசிப்பில் இன்றுவரை ஒருவர்கூட பங்கெடுக்கவில்லை?

தோளில் வைத்து வாசிக்க வேண்டிய மேற்கத்திய வாத்தியக் கருவியான, வெள்ளைக்காரனின் violin – னை குழந்தையைப் போல் மடியில் வைத்து கர்நாடக சங்கீதத்திற்குப் பயன்படுத்துகிற இவர்கள் ஏன் நாதஸ்வரம்-தவில் வாசிப்பதில்லை?

இந்தக் கேள்வியோடு தமிழ் இசை-கருநாடக சங்கீதம் இவற்றுக்குள்ள அரசியல் பிரச்சினையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கருநாடக சங்கீதத்தைத் தமிழில் பாடுஎன்றால், ‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளைக் கடந்தது இசைஎன்கிறார்கள்,

பல நேரங்களில் அவர்களாகவும் சில நேரங்களில் இவர்களாகவும் திடீரென்று சிவலிங்கத்தைப் போல்அரூபமாகவும் காட்சி தருகிறஅவர்கள்-இவர்கள்’.

அதையே நான் இப்படிக் கேட்கிறேன்,

இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளைக் கடந்தது இசை. அப்போ தெலுங்கில் மட்டும் எதற்கு பாடனும்? -வே. மதிமாறன்- 2013. ஆகஸ்ட் 17 அன்று எழுதியது.



10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4


5

6


7


8

9





10



11



 
12


13





1

2

3

4


5

6


7


8

9





10







 
12


13


1

2

3

4







 
12


13


1

2

3

4


5

6
5


 







8

9





10



11



 
12


13







 
12


13


1

2

3

4



6


7


8

9





10



11



 
12


13





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக