மனிதர்களின் உணர்வுகளோடு மிகுந்த நெருக்கம்கொண்டவை. அதனால்தான் மனிதர்கள் மகிழ்ச்சியோடு வாழ விரும்பும் அவர்களது வீடுகளில், எந்தெந்த அறைகளில் எந்தெந்த நிற பெயிண்ட்களை பூசவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்கிறோம்.
தேவகணம் - மனித கணம் - ராட்சச கணம் அசுவினி - பரணி - கார்த்திகை மிருகசீரிஷம் - ரோகிணி - ஆயில்யம் புனர்பூசம் - திருவாதிரை - மகம் பூசம் - பூரம் - சித்திரை ஹஸ்தம் - உத்திரம் - விசாகம் சுவாதி பூராடம் - கேட்டை அனுஷம் - உத்திராடம் - மூலம் திருவோணம் - பூரட்டாதி - அவிட்டம் ரேவதி - உத்திரட்டாதி - சதயம் வரன்கள் ஜாதகத்தில், 'தசாபுத்தி சந்திப்பு' இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
ஏதேனும் தோஷங்கள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.செவ்வாய் தோஷம், சனி தோஷம் சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும்.
முன்னேற்றம் கிடைக்கும். பத்துப்பொருத்தங்கள் எவை எவை?
1. தினம்,
2. கணம்,
3. மகேந்திரம்,
4. ஸ்தீரி தீர்க்கம்,
5. யோனி,
6. ராசி,
7. ராசி அதிபதி,
8. வசியம்,
9. ரஜ்ஜூ,
10. வேதை பெண்ணின் நட்சத்திரம் கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷப ராசி) வ. ஆணின் நட்சத்திரம், - ராசி அமையும் - மொத்தப் பொருத்தங்கள் பொருத்தம் .
1. அஸ்வினி (மேஷம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
2. பரணி (மேஷம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
3. கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) பொருத்தம் உண்டு - 7
4. கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) பொருத்தம் உண்டு - 7
5. ரோஹிணி (ரிஷபம்) 1, 5, 6, 7, 9, 10 - 6
6. மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம் (ரிஷபம்) 5, 6, 7, 9, 10 - 5
7. மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம் (மிதுனம்) 5, 7, 9, 10 - 4
8. திருவாதிரை (மிதுனம்) 1, 3, 5, 7, 9, 10 - 6
9. புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் (மிதுனம்) ரஜ்ஜூ தட்டும்.
10. புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) ரஜ்ஜு தட்டும்
11. பூசம் (கடகம்) 1, 5, 8, 9, 10 - 5
12. ஆயில்யம் (கடகம்) 2, 3, 5, 8, 9, 10 - 6
13. மகம் (சிம்மம்) 1, 2, 4, 5, 9, 10 - 6
14. பூரம் (சிம்மம்) 1, 4, 5, 9, 10 - 5
15. உத்திரம் 1-ம் பாதம் (சிம்மம்) ரஜ்ஜு தட்டும் - 16. உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி) ரஜ்ஜூ தட்டும் -
17. ஹஸ்தம் (கன்னி) 1, 4, 5, 7, 9, 10 - 6
18. சித்திரை 1, 2-ம் பாதம் (கன்னி) 2, 4, 5, 7, 9, 10 - 6
19. சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்) 2, 4, 5, 6, 7, 8, 9,10 - 8
20. சுவாதி (துலாம்) 1, 3, 4, 5, 6, 7, 9, 10 - 8
21. விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்) ரஜ்ஜூ தட்டும்.
22. விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) ரஜ்ஜூ தட்டும் .
23. அனுஷம் (விருச்சிகம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
24. கேட்டை (விருச்சிகம்) 2, 3, 4, 5, 6, 7, 9,10 - 8
25. மூலம் (தனுசு) 1, 2, 4, 5, 7, 9, 10 - 7
26. பூராடம் (தனுசு) 1, 4, 7, 9, 10 - 5
27. உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு) ரஜ்ஜூ தட்டும்.
28. உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்) ரஜ்ஜூ தட்டும் .
29. திருவோணம் (மகரம்) 1, 4, 6, 7, 9, 10 - 6
30. அவிட்டம் 1, 2-ம் பாதம் (மகரம்) 2, 4, 5, 6, 7, 9, 10 - 7
31. அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்) 2, 4, 5, 6, 7, 9, 10 - 7
32. சதயம் (கும்பம்) 1, 2, 3, 4, 5, 7, 9, 10 - 9
33. பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம் (கும்பம்) ரஜ்ஜூ தட்டும்
34. பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்) ரஜ்ஜூ தட்டும்
35. உத்திரட்டாதி (மீனம்) 1, 4, 5, 6, 7, 9, 10 - 7
36 ரேவதி (மீனம்) 3, 4, 5, 6, 7, 9, 10 - 7
ஜோதிடம்
1,10,19,28 A,I,J,Q,Y
* மனதில் ஆன்மிக எண்ணம் மேலோங்கும்.
* எதிர்பார்த்த கடனுதவி தாமதமாக கிடைக்கும்.
* ஆடை, ஆபரணத்தில் ஆர்வம் கொள்வீர்கள்.
* எதிர்பாலினத்தவரால் நன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
* எதிர்பாராத விதமாக நண்பர்களைச் சந்திப்பீர்கள்
* வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.
2,11,20,29 - B,K,R
* திட்டமிட்ட செயல்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* தாய் வழியில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
* உறவினர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர்.
* ஆன்மிகப் பெரியோர்களை சந்திக்க வாய்ப்புண்டு.
* குடும்பத்தில் வீண் சண்டைகளைத் தவிர்க்கவும்.
* உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவு குறையும்.
3,12,21,30 - C,G,L,S
* நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறும்.
* பெரிய மனிதர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்.
* வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படும்.
* உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை.
* பள்ளிக்கூட நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
* விடாமுயற்சியால் தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
4,13,22,31 D,M,T
* நீங்கள் சார்ந்த துறையில் சாதனை புரிவீர்கள்.
* அறிமுகம் இல்லாதவரிடம் பேசிப் பழக வேண்டாம். .
* உறவினர்களின் விஷயத்தில் விட்டுக் கொடுப்பீர்கள்.
* பிள்ளைகள் விஷயத்தில் பொறுமை தேவைப்படும்.
* பழைய கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள்.
* பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
5,14,23- E,H,N,X
* குடும்ப வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும்.
* கலைத்துறையினர் அந்தஸ்து, புகழ் பெறுவர்.
* தொழிலில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.
* உடல்நலனில் அக்கறையும், ஆர்வமும் கூடும்.
* பிள்ளைகள் வகையில் திருமணம் நிச்சயமாகும்.
* அலுவலகத்தில் பணிச்சுமை நாளுக்குநாள் கூடும்.
6,15,24- U,V,W
* திட்டமிட்ட செயல்கள் உடனுக்குடன் நிறைவேறும்.
* உடல்நலனில் அக்கறை தேவை. மருத்துவச் செலவு ஏற்படலாம்.
* தாய் வழி உறவினர்களுடன் நெருங்கிப் பழகுவீர்கள்.
* நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும்.
* நேரகாலம் தெரியாமல் பணியில் மூழ்கி விடுவீர்கள்.
* வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.
7,16, 25
* வெளியூர் பயணம் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
* பெற்றோரின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
* மாமன், மைத்துனர் வகையில் திடீர் செலவு வரலாம்.
* பெண்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவர்.
* தொழிலில் சாதனை புரிந்து பாராட்டு காண்பீர்கள்.
* நற்செயலில் ஈடுபட்டு பிள்ளைகள் பெருமை தேடித் தருவர்.
8,17,26- F,P
* சேமிக்கும் விதத்தில் கையில் பணம் புழங்கும்.
* மனைவியின் உடல்நலனில் அக்கறை தேவை.
* வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.
* மேலதிகாரி பாராட்டும் விதத்தில் பணியாற்றுவீர்கள்.
* பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.
* புதிய நண்பரின் அறிமுகம் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
9,18,27
* புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
* நவீன இயந்திரம் மூலம் தொழிலை மேம்படுத்துவீர்கள்.
* பெற்றோர் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது
* வீடு, வாகன வகையில் நவீன மாற்றம் செய்வீர்கள்.
* வெளிநாட்டு உறவினர் மூலம் சுபசெய்தி கிடைக்கும்.
* இருந்த இடம் தெரியாமல் எதிரிகள் காணாமல் போவர்.
கையின் மேல் பகுதியை வைத்து, கை அமைப்பைப் பாகுபடுத்தி, பஞ்சாங்குலி சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட சில உண்மைகளைப் பார்த்தோம். இப்போது உள்ளங்கை அமைப்பைப் பற்றிப் பார்ப்போம்.
உங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா. ?
உலகில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. ஆனால், கை ரேகையில் ஒரு சில விஷயங்கள் பொதுவாக ஒரு சிலருக்கு மத்தியில் மட்டும் அமையலாம்.
இரண்டு உள்ளங்கை ரேகையிலும் X போன்ற குறி இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களுடைய சிறப்பு குணாதிசயங்கள் என்னென்ன என்று இனி காண்போம்..கிரேட் அலெக்சாண்டர்! பண்டைய காலத்தில் ராஜ ஜோதிடர்களே இதை பற்றி கூறியிருப்பதாகவும். கிரேட் அலெக்சாண்டர் மிகப்பெரிய அரசராக விளங்குவார் என்று அவரது இரண்டு கைகளில் இருந்த X குறியை வைத்து கூறி இருந்தார்களாம்.
ரஷ்ய பல்கலைக்கழகம்! இதுப்பற்றி ரஷ்ய எஸ்.டி.ஐ பல்கலைகழகம் கைரேகையில் X குறி இருப்பவர்கள் பற்றி ஒரு ஆய்வும் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் உலகில் இரண்டு கோடி மக்களுக்கு இந்த X விதி பொருந்தும் என ஆய்வறிக்கை அவர்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தனிதன்மை! இரண்டு உள்ளங்கை ரேகைகளிலும் இந்த X குறி உள்ளவர்கள் தனித்தன்மை வாய்ந்து இருப்பதாக அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆபிரகாம் லிங்கனுக்கும் பொருந்துகிறது என கூறுகிறார்கள்.
வலுமையான குணம்! கைரேகையில் இந்த X குறி உள்ளவர்கள் வலிமை பொருந்திய குணம் கொண்டிருப்பதாககும். அவர்கள் விதி சிறந்ததாகவே அமைந்திருப்பதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.
தந்திரம்! எந்நாளும் வெற்றி என்ற பாதையில் பயணிக்கும் இவர்கள் வெற்றிக்கு இதுதான் தந்திரம் என்று எதையும் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மனம் சொல்வதை கேட்டு பயணிப்பவர்களாக இருப்பார்கள்.
பொய், துரோகம்! X குறி ரேகை உள்ளவர்களிடம் பொய் கூறி தப்பிப்பதும், துரோகம் செய்வதும் மிகவும் கடினம். மேலும், அவர்களது விதி மிகவும் வலுவாக இருக்கும். மன ரீதியாக மட்டுமின்றி, உடல் ரீதியாகவும் இவர்கள் வலிமையாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.தீர்க்கதரிசன குணங்கள்! இந்த X குறி கொண்டுள்ளவர்கள் மத்தியில் காணப்படும் தீர்க்கதரிசன குணங்கள், பயன் மிகுந்தவர்கள்! அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள்! பெரிய தலைவர்கள்! இறந்த பிறகும் மக்களால் மறக்க முடியாத நிலை பெறும்.
1. அஸ்வினி - எட்டி,
2. பரணி - நெல்லி,
3. க்ருத்திகை - அத்தி,
4. ரோஹிணி - நாவல்,
5. ம்ருகசீர்ஷம் - கருங்காலி,
6. திருவாதிரை - செங்கரு,
7. புனர்பூசம் - மூங்கில்,
8. பூசம் - அரசு,
9. ஆயில்யம் - புன்னை,
10. மகம் - ஆலம்,
11. பூரம் - பலா,
12. உத்திரம் - அரளி,
13. ஹஸ்தம் - வேல்,
14. சித்திரை - வில்வம்,
15. ஸ்வாதி - மருதை,
16. விசாகம் - விளா,
17. அனுஷம் - மகிழம்,
18. கேட்டை - பிராய்,
19. மூலம் - மாமரம்,
20. பூராடம் - வஞ்சி,
21. உத்ராடம் - பலா,
22. திருவோணம் - எருக்கு,
23. அவிட்டம் - வன்னி,
24. சதயம் - கடம்பு,
25. பூரட்டாதி - தேமா,
26. உத்திரட்டாதி - வேம்பு,
27. ரேவதி - இலுப்பை.
உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் இருபத்தேழு நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள் பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை (பரிகார விருட்சங்கள்) வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்.
இந்த ஒவ்வொரு விருட்சமும் மனித வாழ்வில் என்னற்ற பலன்களை தருகின்றன. இதன் மருத்துவ குணங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை. இந்த விருட்சங்களின் ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அளப்பறியது.
இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பது இறைவனுடன் இணைந்து வாழ்வதாகும், இந்த விருட்சங்கள் வெளியிடும் காற்றை சுவாசித்தாலே உடலில் உள்ள நோய்கள் நீங்கும். இவ்விருட்சங்களின் கீழ் அமர்ந்து தியானித்தாலே மனம் ஒடுங்கி தியானம் கைக்கூடும். சர்வ சித்திகளும் அடையலாம். புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்பதும், அரச மரத்தினடியில் வினாயகர் அமர்ந்திருப்பதும் இவ்வுண்மையை விளக்குவதாகும்.
அவர்கள் அமர்ந்த அந்த ஒரு மரத்திற்கே (விருட்சம்) அற்புத சக்திகள் உண்டென்றால், இந்த இருபத்தேழு அற்புத விருட்சமும் ஓரிடத்தில் இருந்தால் அவ்விடம் மாபெரும் அற்புத சக்திகள் தரும் இறைபீடமாகும். இந்த இருபத்தேழு அற்புத விருட்சமும் ஓரிடத்தில் அமையப்பெற்ற ஒரு அற்புத பரிகார ஸ்தலம் தான் நமது "சர்வ சக்தி விருட்ச பீடம்"
நட்சத்திர தோஷ விருட்ச பரிகாரம் :
உங்கள் ஜெனன நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு நவதானியத்தை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஊறவைத்த தண்ணீரை விருட்சத்திற்கு ஊற்றி பரிகாரம் செய்து, பின் ஊறிய தானியத்தை வெல்லம் போட்டு அறைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்து பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்க தோஷங்கள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது, இவை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதேசமயம் இவர்களின் சில குணங்கள் வேடிக்கையானதாகவும் இருக்கும். வாழ்க்கை மீதான அவர்களின் அணுகுமுறை எப்பொழுதும் அன்பை அடிப்படையாக கொண்டிருக்கும். மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிப்பிட வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். மனிதனாக பிறந்த அனைவரிடமும் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கலந்துதான் இருக்கும். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். கடின உழைப்பாளியாக இருந்தாலும் திட்டமிடுவதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் திட்டமிட்டே இவர்கள் செய்வார்கள். இவர்கள் எதையும் சொன்ன நேரத்தில் செய்து முடிக்க கூடியவர்கள். அதனால் எப்பொழுதும் பாராட்டை பெறுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் இவர்கள் இருப்பார்கள். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிகப்படியான உணர்ச்சிகரமான அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறார்கள், இதை நாம் மனநிலை மாற்றங்கள் என்றும் அழைக்கலாம். இவர்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பவர்கள், நெருக்கமானவர்களுக்கு கூட தங்கள் மனதில் இருப்பதை இவர்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவர்களிடம் நெருங்குவதோ அல்லது இவர்களை புரிந்து கொள்வதோ மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதால் தான் செய்யும் அனைத்து வேலையும் நூறு சதவீதம் சரியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தான் செய்யும் அனைத்துமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்களின் குணம் சிலசமயம் ஆச்சரியத்தையும், சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தும். அனைத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய இவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை பற்றியும், தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும் எப்போதும் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கினாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பார்கள். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களாக இருப்பார்கள். அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலசமயம் இவர்களின் அதீத அக்கறை தவறானதாக தெரிந்தாலும் அது இவர்களின் நல்ல குணங்களில் ஒன்றுதான். இவர்களுடன் இருக்கும்போது இவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள் ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அனைவரையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணவர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவர்களின் குணம் இவர்களை அதிக இரக்கமுள்ளவர்களாக மாற்றும். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மட்டுமின்றி புதிய நபர்களின் உணர்வுகளை கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலும். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தனக்கானவர்கள் என்று வரும்போது அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்தையுமே இவர்கள் கொஞ்சம் தீவிரமாகவும், தனிப்பட்டரீதியாகவும் எடுத்துக்கொள்வார்கள். இதனால் இவர்களின் இதயம் எளிதில் நொறுங்கிவிடக்கூடும். மேலும் இவர்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள். ஜாதக கட்டம் - முதல் கட்டம்: இது முதலாம் வீடு. லக்னம் என்று அழைக்கப்படும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல லக்னத்தை வைத்து ஒரு நபரின் அனைத்து செயல்பாடுகளையும் நாம் அறிய முடியும். லக்னம் உயிர் ஸ்தானம் என்று அழைக்கபடும். இதன் மூலம் ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் அதாவது உடலின் நிறம், உலடலின் அமைப்பு, மற்றும் ஆளுமை திறன், செல்வாக்கு, ஆயுள், பலம், பலவீனம், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை மற்றும் அந்த நபரின் குணாதிசயங்களைப் பற்றி நாம் அறிய முடியும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு அவற்றின் நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – இரண்டாம் கட்டம்:
இது இரண்டாம் வீடு ஆகும். இந்த இடத்தை தனஸ்தானம் என்றும் வாக்கு ஸ்தானம் என்றும், குடும்ப ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த பெயர்களை வைத்தே இந்த இரண்டாம் கட்டத்தின் பலனை நாம் அறியலாம். அதாவது இதன் வாயிலாக ஒரு ஜாதகரின் பணம், பணம் வரும் வழி, குடும்பம், பேச்சு, வாக்கு வன்மை, ஆகியவற்றைப் பற்றி நாம் அறிய இயலும். மேலும் இந்த வீட்டின் மூலம் கல்வி, வாய், உண்ணும் உணவு, கோபம்,வலது கண் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – மூன்றாம் கட்டம் :
இது மூன்றாம் வீடு ஆகும், மூன்றாம் கட்டம் என்பது தைரிய வீரிய ஸ்தானம் என்றும், சகோதர ஸ்தானம் என்றும் கூறப்படும். இந்த கட்டத்தின் மூலம் உங்கள் இளைய உடன்பிறப்பு, உங்கள் வேலையாட்கள், வெற்றி, இசை, தைரியம், பூமி, கழுத்து, பாதம், சாமர்த்தியம், போர், அண்டை வீட்டார், பயணம், தகவல் தொடர்பு, இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை பற்றி அறிய இயலும். . இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – நான்காம் கட்டம் :
இது நான்காம் வீடு ஆகும். இந்த வீடு மாத்ரு ஸ்தானம் என்றும் சுக போக ஸ்தானம் என்றும் கூறப்படும். நான்காம் கட்டம் தாயாரை குறிக்கும். கல்வி, வீடு, வாகனம், சொத்துக்கள், பொது வாழ்க்கை போன்றவற்றை குறிக்கும். மேலும் இந்த கட்டம். வித்தை, தொழில் திறமை, வாகனம், வீடு, நிலம்,வியாபாரம், பசு, பால், மருந்து வகைகள், புதையல், வேடிக்கை, நீர், விரதங்கள் மற்றும் கனவு போன்றவற்றைக் குறிக்கும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – ஐந்தாம் கட்டம் :
இது ஐந்தாம் வீடு. ஐந்தாம் கட்டமானது புத்திர ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். குழந்தை பாக்கியம் பற்றியும் குழந்தை நல்லவரா? கெட்டவரா? என்பதைப் பற்றியும். முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களை பற்றியும் குறிக்கும். காதல் திருமணமா? என்பதை கூறிவிடும். கலைத்துறை மற்றும் ஆன்மீக நாட்டம் முதலியவற்றை குறிப்பது. பொழுதுபோக்கு, நிர்வாகத் திறமை,தந்தையின் தந்தை, புத்திக்கூர்மை, நீதி சாஸ்திரம், வேதங்கள் பற்றிய கல்வி, ஊக வணிகம் பொதுக் கூட்டப் பேச்சு, முதலியவற்றையும் பற்றி அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் - ஆறாம் கட்டம் :
இது ஆறாம் வீடு ஆகும். இது ருண ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். ருணம் என்றால் கடன், ரோக என்றால் நோய் சத்ரு என்றால் எதிரி. எனவே ஆறாம் கட்டம் மூலம் நோய், கடன், எதிரிகள் போன்றவற்றைப் பற்றி அறியலாம். தாய் மாமன், கவலைகள், தொழில், எதிரிகள் போன்றவற்றை பற்றியும், பொருள் இழப்பு, திருட்டு பயம், நீரினால் ஏற்படும் ஆபத்து, தீயவரின் நட்பு,, பிறரை நிந்தனை செய்தல், உயிர் ஆபத்து, சிறை வாசம், காயம் போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். குறிக்கும். மேலும் முக்கியமாக வேலை, வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றையும் இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – ஏழாம் கட்டம் :
இது ஏழாம் வீடு ஆகும். இந்த இடம் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஏழாம் கட்டமானது திருமணம், வியாபாரம், போன்றவற்றை குறிப்பன. திருமணக் காலம், வாழ்க்கைத்துணை, வெகுமதிகள், வியாபாரக் கூட்டாளிகள் கணவன் மனைவியின் போக சக்தி ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம்.
இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – எட்டாம் கட்டம் :
இது எட்டாம் வீடு ஆகும். இந்த கட்டத்தை அஷ்டம ஸ்தானம் என்றும், ஆயுள் ஸ்தானம் என்றும் கூறுவார்கள். ஆயுள், அவமானம், கண்டம் போன்றவற்றை குறிக்கும். நீதிமன்ற வழக்குகள், காரிய தடங்கல்கள், மாங்கல்ய பலம், செலவுகளால் துன்பம், வீண் அலைச்சல் திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பணம்,போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – ஒன்பதாம் கட்டம் :
இது ஒன்பதாம் வீடு. பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும். ஒன்பதாம் கட்டம் தந்தையை குறிக்கும். தருமம், திருப்பணி, குருவின் உபதேசம், சந்ததி விருத்தி, ஆலய தரிசனங்கள், அதிர்ஷ்டம் ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் - பத்தாம் கட்டம் :
இது பத்தாம் வீடு ஆகும். பத்தாம் கட்டம் கர்மஸ்தானம் ஆகும். கௌரவம், ஜீவனம், மரியாதை, கண்ணியம், புகழ், பதவி போன்றவற்றை குறிப்பது. ஒருவரின் தொழில் வலிமையை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். முன்னோருக்குச் செய்யும் கடமை, தெய்வ வழிபாடு, புகழ், மானம், வெளிநாட்டுச் செய்திகள், ஆட்சி, அதிகாரம், அதிகாரம் மிக்க பதிவிகள் போன்றவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் – பதினொன்றாம் கட்டம் :
இது பதினோராம் வீடு ஆகும். இந்த கட்டம் லாப ஸ்தானம் என்றும் மூத்த சகோதர ஸ்தானம் என்றும் கூறப்படும்.பொதுத் தொண்டு புரிவோர், தனது திறமை மூலம் லானம் பெறுதல், வாகன வசதி, கௌரவம், சாஸ்திர அதிகாரம், வெளிநாட்டுப் பிரயாணம் ஆகியவற்றை இந்த கட்டத்தின் மூலம் அறியலாம். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம். ஜாதக கட்டம் - பன்னிரண்டாம் கட்டம் :
இது பன்னிரண்டாம் வீடு ஆகும். இது விரய ஸ்தானம் என்றும் மோட்சஸ்தானம் என்றும் அழைக்கப்படும். இது அயன சயன போக ஸ்தானம் என்றும் கூறப்படும். விரயம், நஷ்டம், ஜெயில் தண்டனை, மறைமுக எதிரிகள் போன்றவற்றை குறிக்கும். இந்த வீட்டுக்கு உரிய கிரகம், அது அமர்ந்த இடம், இந்த வீட்டில் அமரும் கிரகம், அந்த கிரகத்திற்குரிய வீடு, இந்த வீட்டைப் பார்வையிடும் கிரகம், அவை இருக்கும் வீடு, நிலை, தன்மை மேலும் இந்த கிரகங்கள் அமர்ந்த நட்சத்திரங்கள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்குரிய பலனைக் கூறலாம்.
|
9 |
10 |
12 | |
13 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக