செவ்வாய், 12 நவம்பர், 2024

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு!

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காகபொலிஸாராலும் இராணுவத்தினராலும் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸாரிடம் 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளது. 

கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக இலங்கை பொலிஸாராலும் மற்றும் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதை பாதுகாப்பு அமைச்சு அவதானித்துள்ளது. 

மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஆதரவை வழங்குமாறும், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் ஏற்கனவே துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் கையளித்திருந்தால், அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பொலிஸ் அதிகாரிகளுக்கு பெற்றுக்கொடுத்து ஆதரவு வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஊடகவியலாளர் சந்திப்பு தடை!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள...