தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு , மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல்கள் சட்டங்களுக்கு முரணான வகையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
சனல் 4 தொலைகாட்சி குறித்த காணொளிக்கு ‘ஸ்ரீ லங்கா ஈஸ்டர்ஸ் பொம்பிங் டிஸ்பெஜர்ஸ்’ எனப் பெயரிட்டிருந்தது.
2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ராஜபக்ஸக்களின் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்துத் துணை இராணுவ கொலை குழுவின் அங்கத்தவர்களை பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணைத்துக் கொண்டதாக சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருந்தது.
இந்த காணொளியில் அடங்கும் சர்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பிலான சமர்ப்பணங்களை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்துள்ள நிலையில், பிள்ளையான் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக