பேலியகொட, களனி பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்துள்ளதால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேலை நேரத்தின் போது இந்த லொறி பழுதடைந்ததன் காரணமாக, கொழும்பிற்குள் நுழையும் பிரதான வீதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.
போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், பழுதடைந்த லொறியை வீதியிலிருந்து அகற்றுவதற்கும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருடைய சட்ட ஆலோசகரின் அறிவுரை மற்றும் கோரிக்கைகளை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
வண்ணாத்திவில்லு மங்களபுர பகுதியில் குளத்தில் பூப்பறிக்கச் சென்ற 16 வயதான 04 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒரு மாணவர் மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் அனைவரும் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த மூன்று மாணவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு உயிரிழந்துள்ளதாகப் பொலிசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.
இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற எல்லையைத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 ஆகும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
அத்துடன், நாளொன்றுக்கு பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 950 க்கும் 1,000 க்கும் இடைப்பட்டதாகக் காணப்படுவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், அடுத்த மூன்று நாட்களிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, டெங்கு நோயாளர்கள் அதிகளவில் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 11,163 ஆகும்.
அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் 10,662 பேரும், மாத்தறையில் 3,921 பேரும், களுத்துறையில் 3,600 பேரும், இரத்தினபுரியில் 3,279 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 124 வலயங்கள் அதிக அவதானமிக்க வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
மேலும், இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவாகியுள்ளது என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலுள்ள ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக ஸ்டேட் நகரக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், ஆறாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர். உயிரிழந்த அனைவரும் பெரியவர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்கியிருந்தவர்கள் அல்ல, மாறாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் என்று ஜெர்மன் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 45 வயதான துருக்கியைச் சேர்ந்த ஆண் என்று காவல்துறையினர் திங்கள்கிழமை மாலை தெரிவித்தனர்.
அவர் ஜெர்மனியில் பிறந்தவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சந்தேக நபரின் நோக்கம் அவரது குடும்பம் சார்ந்ததாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
"தனது மூன்று மாதக் கைக்குழந்தையின் காவலுரிமை (custody) தொடர்பாக, அந்த இளைஞர் நல மையத்தில் உள்ள பல்வேறு ஊழியர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அவருக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது," என்று காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (JVP/NPP) அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தலைமையிலான குழு செம்மனி மனித புதைகுழியை பார்வையிட்ட விடயம் தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 19 அன்று, இடம்பெற்ற இந்த விஜயத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி கூட்டு மனித புதைகுழியை குழு பார்வையிட்டது.
இந்தப் புதைகுழியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான போரின்போது இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்களின் எச்சங்கள் உள்ளன என சர்வதேச அமைப்பொன்று அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து நீதியமைச்சரின் கருத்துக்களை மேற்கோள்காட்டியுள்ள அந்த அமைப்பு , அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெறுவதாகக் கூறினாலும், “இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க” நீதி மற்றும் உண்மை விசாரணைகளை நடத்த விரும்புவதாகத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளதாக அடிகோடிட்டுள்ளது.
எனினும், இந்த வருகை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என அந்த அறிக்கை விளக்கியுள்ளது.
மேலும் அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“பல பத்தாண்டுகளாக அரசு மூடிமறைத்து வந்த கொடூரங்களால் தமிழ் மக்களிடையே பெருகும் கோபத்தைத் தணிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏப்ரல் மாதம் தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், ஜூன் 17 வரை 412 எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் 409 எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பல எச்சங்கள் ஒழுங்கற்ற முறையில் கூட்டமாகப் புதைக்கப்பட்டிருந்தன.
இதுவரை 18 குழந்தைகளின் எச்சங்கள், அதில் ஆறு பச்சிளங்குழந்தைகளும் அடங்கும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செம்மணி இப்போது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பெருங்கொல்லப் புதைகுழியாக மாறியுள்ளது மன்னார் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 380 எச்சங்களை விஞ்சியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்றைய (30) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.
இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் அதிரடி கைது மற்றும் நீதிமன்ற வருகை குறித்த முழுமையான பின்னணித் தகவல்கள் இந்த வீடியோவில்! PTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான், இன்று (ஜூன் 30) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஆட்கடத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட 6 பிரதான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. பிள்ளையானின் TMVP கட்சி கிழக்கில் செய்த சட்டவிரோத செயல்கள், கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணையின் போது ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் உடைத்த உண்மைகள் மற்றும் ஈஸ்டர் தொடர்பாக ஆசாத் மௌலானா வெளியிட்ட அதிரடி வாக்குமூலங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரகசியப் புகைப்படம் எனப் பல அதிர்ச்சி தரும் அரசியல் பின்னணிகளை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.