சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், ஆறாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர். உயிரிழந்த அனைவரும் பெரியவர்கள் ஆவர்.
பாதிக்கப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்கியிருந்தவர்கள் அல்ல, மாறாக அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் என்று ஜெர்மன் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 45 வயதான துருக்கியைச் சேர்ந்த ஆண் என்று காவல்துறையினர் திங்கள்கிழமை மாலை தெரிவித்தனர்.
அவர் ஜெர்மனியில் பிறந்தவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சந்தேக நபரின் நோக்கம் அவரது குடும்பம் சார்ந்ததாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
"தனது மூன்று மாதக் கைக்குழந்தையின் காவலுரிமை (custody) தொடர்பாக, அந்த இளைஞர் நல மையத்தில் உள்ள பல்வேறு ஊழியர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அவருக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது," என்று காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக