செவ்வாய், 30 ஜூன், 2026

கொலை வழக்குகள் தொடர்பில் பிள்ளையானுக்கு மீண்டும் சிறை!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை இன்றைய (30) தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 

 அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மனிதக் கொலைச் சம்பவங்களினதும் மூன்றாவது சந்தேகநபராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் பெயரிடப்பட்டுள்ளார். 

இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் அதிரடி கைது மற்றும் நீதிமன்ற வருகை குறித்த முழுமையான பின்னணித் தகவல்கள் இந்த வீடியோவில்! PTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான், இன்று (ஜூன் 30) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 ஆட்கடத்தல், கப்பம் கோருதல் உள்ளிட்ட 6 பிரதான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. பிள்ளையானின் TMVP கட்சி கிழக்கில் செய்த சட்டவிரோத செயல்கள், கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான விசாரணையின் போது ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் உடைத்த உண்மைகள் மற்றும் ஈஸ்டர் தொடர்பாக ஆசாத் மௌலானா வெளியிட்ட அதிரடி வாக்குமூலங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரகசியப் புகைப்படம் எனப் பல அதிர்ச்சி தரும் அரசியல் பின்னணிகளை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks