செவ்வாய், 30 ஜூன், 2026

செம்மணியில் இன்னும் 2 புதைகுழிகள் -மரணதண்டனை கைதி!!

தேசிய மக்கள் சக்தி (JVP/NPP) அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தலைமையிலான குழு செம்மனி மனித புதைகுழியை பார்வையிட்ட விடயம் தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. கடந்த ஜூன் 19 அன்று, இடம்பெற்ற இந்த விஜயத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி கூட்டு மனித புதைகுழியை குழு பார்வையிட்டது.

இந்தப் புதைகுழியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான போரின்போது இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்களின் எச்சங்கள் உள்ளன என சர்வதேச அமைப்பொன்று அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து நீதியமைச்சரின் கருத்துக்களை மேற்கோள்காட்டியுள்ள அந்த அமைப்பு , அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெறுவதாகக் கூறினாலும், “இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க” நீதி மற்றும் உண்மை விசாரணைகளை நடத்த விரும்புவதாகத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளதாக அடிகோடிட்டுள்ளது.

எனினும், இந்த வருகை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என அந்த அறிக்கை விளக்கியுள்ளது. மேலும் அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “பல பத்தாண்டுகளாக அரசு மூடிமறைத்து வந்த கொடூரங்களால் தமிழ் மக்களிடையே பெருகும் கோபத்தைத் தணிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. 

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏப்ரல் மாதம் தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், ஜூன் 17 வரை 412 எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 409 எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பல எச்சங்கள் ஒழுங்கற்ற முறையில் கூட்டமாகப் புதைக்கப்பட்டிருந்தன. 


இதுவரை 18 குழந்தைகளின் எச்சங்கள், அதில் ஆறு பச்சிளங்குழந்தைகளும் அடங்கும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி இப்போது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பெருங்கொல்லப் புதைகுழியாக மாறியுள்ளது மன்னார் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 380 எச்சங்களை விஞ்சியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks