தமிழர் வரலாறு

 

 

ஆடிப்பிறப்பு

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும்.ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும்,நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடலும் தான்..

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலியூர் சோமசுந்தரப் புலவர்-

ஈழத்தமிழர் போராட்டங்கள்!!

1948-02-04 இலங்கை  குடியுரிமைச்சட்டம்,பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது.தமிழ்நாட்டு மக்கள் குடியுரிமை இழந்தது.

1949 தமிழ்நாட்டு மக்கள் வாக்குரிமை இழந்தது.1956 தனிச் சிங்களச் சட்டம்.முழு தமிழர்களும் சட்டரீதியான பங்கை இழந்தது.எதிர்த்துப் போரடினர்.1948-1956 வரை ஐக்கிய தேசியக்கட்சி டி எஸ் சென நாயக்கா ஆட்சி.

1956 எஸ் டபிழ்யூ பண்டார நாயக்கா ஆட்ச்சி.1957 செல்வா உடன்படிக்கையும் அது கிழித்தெறிப்பட்டதும்.

1958 தனிச்சிங்களத்தை எதிர்த்த மக்கள் தாக்கப்பட்டனர்.1959-09-26 பண்டார நாயக்கா சிங்களவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1960 இல் சிறீமா ஆட்சி.1961 சா ஜே வே செல்வநாயம் சட்ட மறுப்பு ஒத்துளைமையாமை இயக்கம்,தமிழர் மண்ணில் சிங்கள ராணுவம்.

1965 நான்காம்  டட்லி செல்வா உடன்படிக்கை.டட்லி சென நாயக்கா யு என்பி ஆட்சி.1970 இல் சிறீமா ஆட்சி.மாணவர் தரப்படுத்தல் திட்டம்.தமிழ் மக்கள் பேரவை இயக்கம் ஆரம்பம்.1971 ஜெவிபி  சிங்கள அமைப்பு ஆரம்பம்.1972 புதிய முதலாம் யாப்பு  சிங்களவர்களால் அமுல்.

1973 தமிழர் பல்கலைக்கழகம் செல்ல கூடுதல் புள்ளிகள் தேவை என சிங்களம் கூறியது.1974 மாவட்ட ரீதியாக தமிழர் தரப்படுத்தல் செய்தது சிங்களம்.யாழ் உரும்பராய் தோழர் பொன் சிவகுமார் (மக்கள் பேரவை இயக்கம்)சயனட் அருந்தி வீரச்சாவு.

1974-10-03 அனைத்துலக தமிழராச்சி மகாநாடு யாழ் மாவட்டதில் நடைபெற்றது.1976 தமிழர் விடுதலைக்கூட்டனி தமிழீழமே தீர்ப்பு என முடிவு.வட்டுக்கோட்டை மாகாநாடும் தீர்மானமும்.

1977 ஜே ஆர் ஜெயவர்த்தனா ஆட்சி.தமிழர் கூட்டனி எதிர்க்கட்சியானது,இனக்கலவரம்.1978 இரண்டாவது யாப்பு.1979 தமிழருக்கு எதிரான பயங்கரவாதச் சட்டம் அமுல்.தமிழீழ விடுதலை இயக்கம் ஆரம்பம்.1979 தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பம்.1980 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆரம்பம்,ஈழமக்கள் புரச்சிகர முன்னனி இயக்கம் ஆரம்பம்.1882 ஆயுதப் பயிற்சி ஆரம்பம்.

1981 ஆம்ஆண்டு இனக்கலவரம்.1983 கொழும்பில் யூலைக்கலவரம்.1984 தமிழ் தாயக பகுதி எங்கும் (மலக்கழிவு பீப்பா)குண்டு வீச்சு.

1985 திம்பு பேச்சு வார்த்தை.1987-05-26 ஒப்பறேசன் லிபறேசன் இராணுவ நடவடிக்கை,இலங்கை இந்திய உடன்படிக்கை,போராளிகள் தடை செய்வதாக சிறீமா பிரகடனம்.இந்திய இராணுவம் வருகை.

1988–1990 இந்திய வம்சாவழி அண்னாமலை வரதராஜப்பெருமாள்        வடக்கு கிழக்கு மாகாணசபை ஆட்சி.தமிழர் பலர் இந்திய இராணுவத்தால் கற்பளிப்பு,படுகொலைகள் செய்யப்பட்டது.



நாவலன்தீவு""குமரிக்கண்டம்.


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்

 

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.

இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான் நாவலன்தீவு" என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!

  

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்"

 .

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! 

 

பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது!

 

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

 

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்

தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில் "கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் "ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

 

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன்" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

 

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

 

மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

 

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!

 

இந்திய அரசு வெளிக்கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

 

வரலாற்று தேடல் தொடரும்....!!

 

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

 


பண்டைய இந்துக் கலாச்சாரம்
------------------------------------------------
கணவன் பாண்டுவை மணம் செய்து கொள்வதற்கும் முன்பே குந்தி தேவியைப் புணர்ந்து குழந்தை பெற்ற கடவுள் சூரிய பகவான்.
கணவன் பாண்டு ரோகத்தின் காரணமாகவும், போகத்தின் காரணமாகவும் இறந்த பின் எம தர்மன், வாயு பகவான், இந்திரன் ஆகியோர் கணவனற்ற குந்தியை வனத்தில் புணர்ந்து குழந்தை பெற்றனர்.

கணவனை இழந்த மாதுரியை வனத்தில் புணர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் அஸ்வினி குமாரர்கள்.
கணவன் பாண்டுவை மணம் செய்து கொள்வதற்கு முன்பு பிறந்த கர்ணன் குந்தியின் புதல்வன்.
கணவன் பாண்டுவை மணம் செய்து, அவன் இறந்ததற்குப் பின்பு மற்றவர்களைப் புணர்ந்து பாண்டுவின் இரு மனைவியர்களான குந்தியும், மாதுரியும் பெற்ற புதல்வகள் பாண்டு குமாரர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள்தான் பாண்டவர்கள்.
அவர்கள் திருமணத்தின் காரணமாகப் பிரிந்து விடக்கூடாது என ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவே குந்தி, துருபதன் மகள் பாஞ்சாலியை ஐவருக்கும் பத்தினியாக்குகிறாள். ஐவரும் பாஞ்சாலியை முறை வைத்துப் புணர்ந்து வாழ்ந்து வந்தனர்.
அதனால்தான் பிறருக்குப் பிறந்த பாண்டவர்களுக்குச் சொத்தின் ஒரு துண்டைக்கூட அதாவது ஐவருக்கும் ஐந்து வீடுகள் கூட வசிப்பதற்குத் தரத் தயாராக இல்லாத இறுதி நிலைமையில் குருச்சேத்திர யுத்தம் நடந்தது.

அர்ச்சுனன் பாஞ்சாலி தவிர்த்துப் பலரோடும் புணர்வாழ்க்கை வாழ்ந்து வந்தான். பீமனும் அதுபோலவே இடும்பி போன்ற பழங்குடிச் சமூகத்தின் பெண்ணோடு உறவு வைத்து வாழ்ந்து வந்தான். இவ்வாறு பிறந்த பிள்ளைகளின் உறவினர்கள் பின்னர் குருச்சேத்திர யுத்தத்த்தில் பாண்டவர்களின் அணியில் இருந்து சொத்து மீட்புப் போராட்டத்தில் போரிட்டு மடிந்தனர்.
-ஸ்ரீலஸ்ரீரசானந்தர்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே  மூத்தக்குடி தமிழ் குடி என நம் இலக்கிய சான்றும், வரலாற்று சான்றும் மெய்பிக்கின்றன. கடல் கொண்ட குமரி கண்டத்தில் பல்வேறு திணை வாழ்வைக் கொண்டு, நாகரிகம் படைத்தது தமிழ் இனம். மொழியோடு, இசையும் சேர்ந்தே வளர்ந்தது தான் நமது நாகரிகம். ஐந்திணைகளின் பண்பாட்டின் இசையானது ஒருங்கே அமைந்ததுதான் பண்டைய தமிழ் இசையாகும்.


குமரி கண்டத்தில் மனித குலம் பேசிய மொழி தமிழ் மொழியாகும். தமிழன் குரலோசையுடன் அவன் பண்பாட்டு இசையும் சேர்ந்தே வளர்ந்தது. ஐவகை திணை வாழ்க்கையை கொண்டது தமிழ் இனம், ஐவகை பண் இசையின் தொகுப்பே தமிழ் இசையாகும். 
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் குறிஞ்சிபாணி பண்ணின் இன்றைய பெயர் மத்தியமாவதி, முல்லை பாணி பண்ணின் இன்றைய பெயர் மோகனம் மருத பாணி பண்ணின் இன்றைய பெயர் சுத்த தன்யாசி நெய்தல் பாணி பண்ணின் இன்றைய பெயர் இந்தோளம், பாலை பாணி பண்ணின் இன்றைய பெயர் சுத்த சாவேரி என்றும் நம் தமிழ் இசை ஆய்வாளர்கள் நிருவுகின்றனர்.

இசை ஆய்வாளர்களில் முன்னோடியானவர் தஞ்சை திரு.ஆபிரகாம் பண்டிதர் ஆவார். இசை நுணுக்கங்களை பற்றி அரிய ஆரம்ப வயதிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தவர். பழங்ககாலத்தின் பண் ஆளத்தி முறைதான், தற்போதைய இராக ஆலாபனை முறைக்கு ஆதாரம் என்பதை பல்வேறு ஆதாரங்களின் மூலம் நிருவியவர் திரு.ஆபிரகாம் பண்டிதர் ஆவார். 

அவர் எழுதிய கருணாமிருத சாகரம் என்ற நூலே, இன்றைய கர்நாடக இசை மரபுக்கு, மூலமே, தமிழ் இசைதான் என்பதை நிருவியிருக்கிறது.முதல் கழக நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை ஆயினும் ! நமக்கு கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இடை கழகத்தில் தொகுக்கபட்ட இலக்கண நூல் ஆயினும், அதில் இருந்தே முதல் கழக வாழ்வியல், பண்பாடு, இசை ஆதாரங்களை அறிய முடிகிறது. 

தொல்காப்பியத்தில் தேர், வாழ், வில், வேல் ஆகிய படைக் கலன் பற்றியும், யானை, குதிரை ஆகிய விலங்குகளை பயன்படுத்தியதை பற்றியும், யாழ், முழவு போன்ற இசைக் கருவிகளை பற்றியும் குறிப்புகள் அறியப்படுகிறது.

தமிழர்களின் இசைக் கலை, கூத்து பற்றிய செய்திகளையும் இசை பற்றிய நுணுக்கங்களையும் அறிந்து கொள்ளும் சிறந்த காப்பிய நூல் சிலப்பதிகாரமாகும். பழங்காலத்து இசை கருவிகளையும், இசை நுணுக்கத்தையும் அறிந்து கொள்ள உதவும் சிறந்த காப்பியம் ஆகும். தமிழனை நான் தமிழன் என நெஞ்சை நிமிர்த்த செய்யும் மூல காப்பியம் சிலப்பதிகாரமாகும். எனவேதான் ஈ.வெ.ரா. சிலப்பதிகாரத்தின் மீது இளிவான தாக்குதலை தொடுத்தார்.

இலக்கு + இயம் = இலக்கியம் அதாவது ஒரு சமுகத்தின் வாழ்வியல் இலக்கு எதை நோக்கியது என்பதை இயம்புதல் (சொல்லுதல்) இலக்கியம் எனப்படுகிறது. கழக காலத்தில் தமிழ் இசை சிறப்புற்று விழங்கியதை கழக இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது.

முதல் கழகம் கண்ட குமரிக்கண்டம் கடல் கொந்தளிப்பால் மூழ்கிய பின் கிழக்குக் கரையில் கபாடபுரத்தை தலைநகராக கொண்டு வென்தேர் செழியன் என்னும் பாண்டிய மன்னன் இடைத்தமிழ் கழகத்தை நிருவினான். அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் தொகுக்கப்பட்டன. கடல் கொந்தளிப்பால் குமரிக்கண்டம் மூழ்கியதையடுத்து இடம் பெயர்ந்த தமிழினம் புவியில் சிந்து வெளி, சுமேரிய, மாயன் மற்றும் எகிப்திய நாகரிகங்களை தோற்றுவித்தனர்.

கி.மு.2500-2000க்குள் மீண்டும் ஒரு கடல் கொந்தளிப்பு ஏற்பட கபாடபுரமும் அழிந்தது. ஈழம், நாவலந்தீவின் பெரும் நிலப்பரப்பில் இருந்து பிரிந்தது. அதன் பின் இன்றைய மதுரைக்கு கிழக்கே மணவூரில் பாண்டியர்கள் தலைநகரை நிருவி சில நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்து பின் இன்றைய மதுரைக்கு தலைநகரை மாற்றியதாக திரு.தேவநேய பாவாணர் இலக்கிய சான்று பகர்கிறார். 

அன்று அவர் பகர்ந்த இலக்கிய சான்று இன்று நிருபனம் ஆகி இருக்கிறது. மணவூர் என்பது மருவி இன்று மணலூர் ஆனது. இன்று மதுரையில் மணலூரை சேர்ந்த கீழடியில் தொல்லியல் துறை ஆய்வு செய்த போது சுமார் கி.மு.2500 ஆண்டுகளுக்கும் பழமையான பாண்டியனது தமிழர் நாகரீகம் கண்டறியப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

நம் இலக்கியங்களில் வரலாற்றின் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் கண்டறியப்படும் பொழுது நிருபனம் ஆகின்றன.
ஆரிய பிராமணர்கள் தமிழகத்துக்குள் புகுந்து வேள்வி முறை வழிபாட்டை ஊக்குவித்து தமிழ் மன்னர்களை மடைமாற்றம் செய்து அரசிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றனர். இதனால் மக்கள் நிலமற்றவர்களாகும் நிலை ஏற்பட்டது. இந் நிலையில் தமிழகத்தின் எல்லைபுறங்களில் இருந்து வேளிர்களும், குறுநில மன்னர்களும் ஒன்று சேர்ந்து களப்பாலன் என்பவன் தலைமையில் போரிட்டு மூவேந்தர்களையும் வீழ்த்தி களப்பிரர் ஆட்சியை நிறுவி, தமிழகம் பல்வேறு பகுதிகளாக பிரித்து ஆளப்பட்டு வந்தது. 

களப்பிரர் ஆட்சியில் மக்களின் அரசியல், வாழ்வாதாரம் குறித்து அதிகம் அக்கறை காட்டப்பட்டது. ஊன் உண்பது, மது அருந்துவது, பரத்தையரோடு இன்புற்று கழித்திருப்பது, களவொழுக்கத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு ஒழுக்கம் பேணப்பட்டது. நல்லொழுக்கம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

 நீதி நெறி, நன்னெறி நூல்கள் படைக்கப்பட்டன. ஆசிவகம் என்னும் சமணம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றது. களப்பிரர்கள் காலம் தமிழர்களின் அரசியல் வாழ்வியலுக்கு பொற்க்காலம். ஆனால் பிராமணர்களுக்கு இருண்ட காலம். இந் நிலையில் இசை முக்கியத்துவம் இழந்தது.

அதன் பின் களப்பிரர் காலம், மங்க துவங்கிய பின் கி.பி.5-ம் நூற்றாண்டில் இசையானது பக்தி இயக்கங்களின் வாயிலாக வளர துவங்கியது. ஏறக்குறைய 7-ம் நூற்றாண்டுக்குள் சைவமும், வைணவமும் போட்டிப்போட்டு தமிழர்களிடையே செல்வாக்கு பெற்றன. ஆசிவகம் என்னும் சமணம் வீழ்ச்சியுற்றது. நாயன்மார்களின் தேவாரங்கள், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் ஊடாக தமிழ் இசை வளர்ச்சி பெற்றது.

கி.பி.14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்த்தான் தமிழகத்தை ஆக்கிரமித்ததை தொடர்ந்து தமிழகத்தின் கோயில்கள் பல இடிக்கப்பட்டன. தமிழர்களின் கலைகள் நலிவுற்றன. இதுவும் தமிழ் இசைக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவு எனலாம்.

இந்நிலையில் வடுக விஜய நகர பேரரசு தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அது கோவில்களுக்கு ஆதரவு தந்தது, என்றாலும், தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. அதற்கு மாறாக, தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். தமிழ் புலவர்கள் நாயக்க மன்னர்களால் ஆதரிக்கபடாத காரணத்தால், தமிழ் புலவர்களால் வளமான காப்பியங்களையோ, தரமான இலக்கியங்களையோ படைக்க முடியவில்லை வாழ்வுக்கு வழியின்றி துன்புற்ற நிலையில், தங்களின் வறுமையை போக்க, தனி மனிதர்களை பாராட்டி பரிசு பெறும் இலக்கியங்களை படைத்தனர். இன்றும் கூட அது தொடர்வதை பார்க்கிறோம்.

இந்நிலையில் நாயக்கர் ஆட்சியில் ஆலயங்கள் மறுமலர்ச்சி பெற்றமையால், ஆலயத்தை ஒட்டி வாழ்ந்து வந்த தமிழ் பண்ணிசையானது அன்றைய நாட்டார் அம்சங்களையும் கலந்து கொண்டு புது வடிவம் பெற்றது. இந்த புது பண்ணிசை மரபு கர்நாடக இசைக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.கர்நாடக இசை என்பது பழந்தமிழ் பண்ணிசைக் கூறுகளின் நுணுக்கங்களை அடிப்படை வேர்களாக கொண்டு, இங்கிருந்த நாட்டார் இசைக் கூறுகளுடன் வட இந்திய இசைக் கூறுகளையும் கலந்து, உருவான இசை வடிவம் ஆகும். அதன் மொத்த அடிப்படையும் தமிழ் இசையே ஆகும். 

சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையின் மூல இலக்கணமாக இருப்பதை திரு.ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.இன்றைய இராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிருபித்து இருக்கிறார். இராகங்கள் உண்டுபண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றை பழந்தமிழ் இசை இலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து விளக்கிக் காட்டியுள்ளார். 

வடக்கே போற்றப்படும் இந்துஸ்தானி இசையும், தமிழ் இசையின் மூலத்தில் தோன்றிய தமிழ் இசையே என நிருபித்துக்காட்டியுள்ளார்.தமிழில் இசை பற்றி ஒன்றும் இல்லை என்றிருந்த காலத்தில் திரு.ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் உலகில் தோன்றிய இசைகளுக்கெல்லாம் முதலும், மூலமும் ஆனது தமிழ் இசை என நிருபித்துக் காட்டியுள்ளார். தற்கால இசை நூல்களிலேயே முதல் நூலாக பண்டிதர் இயற்றிய கர்ணாமிருத சாகரம் என்னும் நூலே போற்றபடுகிறது.

 தமிழ் இசையின் தொன்மையையும், அதன் மூலத்தையும் உலகிற்கு வெளிக் கொணர்ந்த திரு.ஆபிரகாம் பண்டிதரை போற்றுவோம் !கர்நாடக இசை என்பது தொன்மை இசை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது. இன்னும் விளக்கமாக சொல்வதானால் கரு என்றால் மறைந்த, அழிந்த, மங்கிய, இருண்ட என்ற பொருளில் கடலில் மூல்கிப் போன அல்லது மறைந்து போன நாடான குமரி நாட்டின் இசை எனலாம் அதாவது கடலில் மூழ்கி போன பாண்டிய நாட்டின் இசை என்ற பொருளில் பண்டைய நாட்டின் இசை, கருநாட்டின் இசையானது. 

அது சொல் வழக்கில் கருநாடக இசையானது. வட சொல்லில் கருநாடக சங்கீதமானது.தமிழர்களே ! கருநாட்டின் இசை நம் பாண்டிய நாட்டின் இசையான பண்டைய தமிழ் இசையே ! தமிழர்களாகிய நாம் இசையை கேட்டு ரசிக்கும் கூட்டமாக மட்டுமே இருந்து வருகிறோம். இசையின் அறிவியல் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய சொத்தாகும். அதை வரலாறு நெடுகிலும் ஏற்ப்பட்ட இயற்கை அழிவிலும், அயலான்களின் (குறிப்பாக வடுகர்களின்) ஆட்சி அதிகாரத்திலும் வந்தவர்களிடம் இழந்து விட்டு அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறோம்.

இனிமேல் ஆயினும் நம் வாரிசுகளையாவது, இசை நம் பாட்டன், முப்பாட்டன் சொத்து என உணரச் செய்து, இசை, பாடல், நடனம், நாட்டியம் என அனைத்தும் கற்றறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம். தமிழகத்தில் தமிழ் தேசிய உணர்வுள்ள தமிழனின் ஆட்சியை உருவாக்குவோம். குழந்தை பருவம் முதல் மேல்நிலை கல்வி வரை இசையை இலவசமாக ஒரு துணை பாடமாகக் கொண்டு படிக்கச் செய்து, இசை அறிவியல் உணர்ந்த மேம்பட்ட மனிதர்களாக்குவோம் ! மேதைகளாக்குவோம் !! இசையால் உலகை ஆள்வோம் !!!

தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை

ஈழத்திரு நாட்டில்!!
வட மாகாணம் என்றால் என்ன?
வட மாகாண ஆளுனர் பெயர் - சுரேன் ராகவன்.
வடக்கில் சிறிய மாவட்டம் – யாழ்ப்பாணம்.
வடக்கில் பெரிய மாவட்டம் – முல்லைத்தீவு.
வடக்கில் கடல்பரப்பில்லாத மாவட்டம் – வவுனியா.
வடக்கில் குளங்கள் அதிகமாக காணப்படும் மாவட்டம் – முல்லைத்தீவு.
வடக்கில் காணப்படும் பெரிய தீவு – நெடுந்தீவு.
வடக்கில் சிலிக்கன் மணல் காணப்படும் இடம் - நாகர்கோவில்.
வடக்கு மாகாணசபை அமைந்துள்ள இடம் – கைதடி.
வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி கூடிய மாவட்டம் - யாழ்ப்பாணம்.
வடமாகாணத்தில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் - முல்லைத்தீவு.
வடமாகாணத்தின் பரப்பளவு – 8884 சதுர கிலோமீட்டர்.
வடமாகாணத்தின் நிலப்பரப்பு 8290 சதுர கிலோமீட்டர்.
வடக்கில் எண்ணெய் வளம் உள்ள மாவட்டம் – மன்னார்.
வடக்கில் சிறுவர் நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – குருநகர், யாழ்ப்பாணம்.
வடக்கில் அல்லது இலங்கையில் நீளமான பாலம் – வேலணை – புங்குடுதீவு.
வடக்கில் காணப்படும் முனை – பருத்தித்துறை (பேதுறு).
வடக்கில் காணப்படும் நீரேரிகள் - கச்சாய் அல்லது கிளாலி, சுண்டிக்குளம், தொண்டமானாறு.
இலங்கையின் வடக்கின் புராதனபெயர் - நயினாதீவு (நாகதீவு).
வடக்கில் இருந்து பாராளுமன்றம் சென்ற முதலாவது பெண் - 15 February 1989 - 24 June 1994 – திருமதி புலேந்திரன் ராஜமனோகரி – வன்னி.
வடக்கில் ஓட்டு தொழிற்சாலை ஒட்டுசுட்டானிலும் உப்பளம் ஆனையிறவிலும் சீமேந்து தொழிற்சாலை காங்கேசன்துறையிலும் இரசாயன தொழிற்சாலை பரந்தனிலும் காணப்படுகிறது.
வட மாகாணத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் விலங்குகள் காப்பகம் என அறிவிக்கப்ட்ட இடம் - சுண்டிக்குளம் (கிளிநொச்சி மாவட்டம்).
வேலணை தீவு அல்லது லைடன் தீவுகள் எனப்படுவது வடக்கில் பெரிய கூட்டிணைக்கப்பட்ட தீவாகும்.
யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரே ஆறு – வழுக்கை ஆறு (பருவகால ஆறு).
இலங்கையில் காணப்படும் குளங்களில் மூன்றாவது பெரிய குளம் - இரணைமடுக் குளம்.
"செங்கையாழியன்" என அழைக்கப்படும் வடமாகாணத்தின் எழுத்தாளர் - கலாநிதி க.குணராசா.
அண்மையில் வடக்கில் தொடங்கப்பட்ட கைத்தொழில் பேட்டை - அச்சுவேலி.
வவுனிக்குளத்தை கட்டுவித்தவன் - எல்லாளன்.
பனைமரத்தின் விஞ்ஞான பெயர் - Borassus flabellifer.
வடக்கிற்கான ரயில் சேவை 1989.01.19 பின் 13.10.2014 உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு ரயில் பாதையை புனரமைத்த இந்திய நிறுவனம் – இர்கொன்.
இரணைமடு நீர் விநியோக திட்டத்திற்கு உதவி வழங்குவது - ஆசிய அபிவிருத்தி வங்கி.
இரணமடு நீர் விநியோக திட்டத்திற்கு மாற்றீடான மற்றுமொரு திட்டம் - ஆறுமுகம் திட்டம்.
யாழ்ப்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது - ஆகஸ்ட் 1, 1974
வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மரம் நடுகை தினம் நவம்பர் 01 – 30 வரை கொண்டாடப்படுகிறது.
மருத மரத்தின் விஞ்ஞான பெயர் – Terminalia elliptica.
வெண்டாமரை பூவின் விஞ்ஞான பெயர் – Nelumbo nucifera.
ஆண் மானின் விஞ்ஞான பெயர் – Axis axis.
சுன்னாகம் கழிவு ஒயில் தொடர்பான நிறுவனம் - நொதேர்ன் பவெர்.
யாழ்ப்பான நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஆண்டு - 31.05.1981.
யாழ்ப்பாண வரலாற்றை கூறும் நூல்கள் - வையாபாடல், யாழ் வைபவ மாலை.
யாழ்ப்பான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் – சேர் பொன் இராமநாதன்.
முறிந்த பனை என்ற நூலை எழுதியவர்கள் – ராஜினி திராணகம, ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம்.
மன்னருக்கான ரயில் சேவைகள் 1914ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது - 14.03.2015.
மன்னார் – நாவற்குழி பிரதான பாதை A32.
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை A35.
மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான பாதை A34.
முல்லைத்தீவோடு இணைக்கப்பட்ட பிரதேசம் – மணலாறு (வெலிஓயா).
நயினாதீவின் தற்போதைய பெயர் – நாகதீப.
யாழ் நூலகம் ஆரம்பிக்கப்பட்டது – 1933 ஆம் ஆண்டு.
இலங்கையில் வறுமை கூடிய மாவட்டம் -கிளிநொச்சி.
மதுபான விற்பனை மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படும் மாவட்டம் - யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 1984 பெப்ரவரியில் கிளிநொச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
யாழ் கோட்டை போர்த்துகேயரால் 1625ல் கட்டப்பட்டது.
தற்போது காணப்படும் யாழ் கோட்டை ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு 1658 யூன் 23 ற்கு பின் கட்டப்பட்டதாகும்.
யாழ்ப்பாண அரசின் நாணயம் – சேது நாணயம்.
யாழ்ப்பாண அரசின் பழைய சின்னமாக விளங்குவது – நந்தி.
வன்னி இராட்சியம் வீழ்ச்சியடைந்தது - 1803ம் ஆண்டு.
ஒல்லாந்தரால் சொத்துரிமை தொடர்பாக யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உரித்தான சட்டம் – தேசவழமைச் சட்டம்.
யாழ் நூலை எழுதியவர் – சுவாமி விபுலானந்தர் 1947.
சுவாமி விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன் 1892.
சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் - ஆறுமுகநாவலர் (1822 டிசம்பர் 18 ஆறுமுகம்பிள்ளை).
நாவலர் 1872 இல் முதல் உருவாகிய சைவ ஆங்கிலப் பாடசாலை - வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை.
மன்னாரில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்ட நிறுவனம் – கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா.
ஈழம்-புடொட் அமைப்பின் வரலாறு.!!

எல்லோரும் தலைவர்கள் ஆக முடியாது என்பதற்கு அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் ஒர் உதாரணம் அவரிடம் இருந்த ஆளுமை, ஆற்றல், துணிவு, பணிவு, பண்பு, சாணக்கியம் இவை எல்லாம் இன்று உள்ள தலைவர்கள் பலரிடத்திலும் இல்லை என்பதுவே வெளிப்படை.
தெல்லிப்பளை வறுத்தலைவிளானை பிறப்பிடமாக கொண்ட உமா அவர்கள் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் பழையமாணவனும், சிறந்த உதைபந்தாட்ட வீரரும் ஆவார். 
 நில அளவையாளரான உமாமகேஸ்வரன், அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்ததுடன். இளைஞர் அணி தனது அரசியல் பணிகளையும் முன்னெடுத்து வந்ததுடன், தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகளின் ஆதரவையும் தமிழ் மக்களின் விடுதலையின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஒர் உன்னத புருஸர்.


அரசின் கல்வி அடக்குமுறை, அரசியல் மறுப்புக்கு எதிராக போராடிய போராளிகளில் முதன்மையானவரும் ஆவார். வடபகுதியில் பல்வேறு குழுக்களாக செயற்பட்ட இளைஞர்களை ஒன்றுதிரட்டி விடுதலை புலிகள் என்ற விடுதலை இயக்கத்தை தோற்றுவித்து அந்த அமைப்புக்கு முதல் தலைவராகவும் இருந்து வழிநடாத்திய தீர்க்கமான தலைவரும் ஆவார்.


தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் பலஸ்தீன விடுதலை இயக்கங்களினால் பயிற்றப்பட்ட போராளியும் ஆவார்.

இராணுவ தந்திரங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தாயகம் திரும்பியிருந்த வேளையில் அவர் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி உமா தலைமையிலான முதலில்புதிய தமிழ் புலிகள்” (NTT), பின்னர்தமிழீழ விடுதலைப் புலிகள்என்ற அந்த உன்னதமான போராட்ட அமைப்பை சீர்குலைத்து தமிழ்மக்களின் ஒன்றுபட்ட விடுதலைக்கு எட்டப்பர்கள் சிலர் குந்தகம் செய்தனர்.

இந்த எட்டப்பர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ள தவறிய வே.பிரபாகரனும் அந்த கோடாலி காம்புகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து போனார்.


ஈற்றில் விடுதலைப் புலிகளின் பெயரையும் விட்டுதர வேண்டும் என்று பிரபாகரனும் அவருக்கு உசுப்பேத்திய கூட்டமும் முரண்டு பிடித்து கொண்ட நிலையில் தான் தமிழீழ விடுதலை புலிகள் என்ற பெயரை உமாமகேஸ்வரன் அவர்கள் விட்டு கொடுத்து விட்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) என்ற மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் கூடிய மக்கள் போராட்ட அமைப்பினை புதியபாதை சுந்தரம் போன்றவர்களுடன் இணைந்து கட்டியமைத்து அந்த அமைப்புக்கு செயலதிபராகவும் இருந்தவர்.


அவரது ஆளுமை மிக்க தலைமை திறனால் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்திற்கு பக்கதுணையாக பல்வேறு மாணவர், தொழிசங்க அமைப்புக்களையும் அமைத்து மிகப்பெரும் மக்கள் போராட்டத்திற்கான தயாரிப்பு வேலையில் ஈடுபட்ட போது அவர் மீது மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் என்று கூறி மற்றுமொரு உடைவுக்கு வழியேற்படுத்தினர் . 

ஜனநாயக விரும்பிகள் என்று கூறி கொள்ளும் சக்திகள். இன்றுவரை அந்த ஜனநாயக சக்திகள் பத்திரிகை வெளியிடுவதும், இணையத்தளங்களில்; அமரர் உமாமகேஸ்வரனை பற்றி எழுதி தூற்றுவதை விடுத்து தமிழ் மக்களின் விடியலுக்கு உரிய எந்தவொரு பணியையும் முன்னெடுக்கவும் இல்லை, முன்னெடுக்க போவதுமில்லை.


பல ஆயிரக்கணக்கான போராளிகளை இணைத்து பலஸ்தீன விடுதலை அமைப்புக்களினால் இராணுவ பயிற்சிகள் பெறுவதற்கு வழியேற்படுத்திய முகுந்தன், பெரியய்யா, பெரிசு என்று பல்வேறு பெயர்களில் பாசத்துடனும் பரிவுடனும் அழைக்கப்பட்டஉமாஅவர்கள் தமிழ் மக்களின் விடுதலை குறித்து தெளிவான தூரநோக்க பார்வையை கொண்டிருந்தார்.


வெறும் இராணுவ சாகசங்களால் மட்டும் தமிழ்மக்களின் உரிமையை வென்றிட முடியாது என்பதில் திடமாக இருந்ததுடன், தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளையும் அரவணைத்து அவ் இளைஞர்களிற்கும் இராணுவ பயிற்சி வழங்கி ஒட்டுமொத்த அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தை முன்நகர்த்தியவர்.

தற்காலிக இராணுவ வெற்றிகள் எமது மக்களை அழிவுக்கு உட்படுத்துமே தவிர வேறு எதனையும் பெற்று தராது என்பதில் உறுதியாக இருந்த செயலதிபர் உமா அவர்கள். ஓட்டு மொத்த மக்கள் போராட்டத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டு அவற்றுக்கு தேவையான தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்தார்.

 அதன் ஒர் அங்கமாகவே விடுதலை போராட்ட வரலாற்றில் முதன் முறையாக வெளிநாடு ஒன்றில் இருந்து எமது விடுதலைக்கான ஆயுத இறக்குமதியை மேற்கொண்டவர்.


இதனை சகித்து கொள்ளமுடியாத சக்திகள், அந்த ஆயுத இறக்குமதியை காட்டிக் கொடுத்து அதற்கு சாவுமணி அடித்தனர். இதனையும் மீறி மொறீசியஸ் நாட்டிற்க உத்தியோகபர்வ விஜயம் மேற்கொண்டு எமது விடுதலை போராட்டத்தை அவ்நாடு அங்கீகரிக்கவும் வழிகோலியவர்.

இவை மட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு சவாலாக இருந்த பல சதிவலைகளை முறியடித்து எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டதே மாலைதீவு மீதான இராணுவ புரட்சியாகும்.


இவ்வாறாக பல முனைகளில் தமிழ்மக்களின் போராட்ட பாதையை முன்னெடுக்க முனைந்த மக்கள் தலைவனை அழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ஏகாதிபத்திய சக்திகள் அவரை கொலை செய்து தமிழ் மக்களின் விடுதலைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதற்கு துணைபோன எட்டப்பர் கூட்டம் அன்று தாம் விட்ட தவறை எண்ணி இன்று ஏப்பம் விடுவதாக தெரிய வருகின்றது.


எல்லோரும் தலைவர்கள் ஆக முடியாது என்பதற்கு அமரர் உமாமகேஸ்வரன் அவர்கள் ஒர் உதாரணம் அவரிடம் இருந்த ஆளுமை, ஆற்றல், துணிவு, பணிவு, பண்பு, சாணக்கியம் இவை எல்லாம் இன்று உள்ள தலைவர்கள் பலரிடத்திலும் இல்லை என்பதுவே வெளிப்படை..

 

ஈழம்-புடொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலை!!

 

சிலர் இப்போதும் உள் பகை என்கிறார்கள். உள் பகையோடு அவரை நெருங்க முடியாது. அவரை நெருங்க நய வஞ்சகத்தால் மட்டுமே முடியும். அவரை நம்பியோரை மட்டுமே அருகே வைத்திருந்தார். அருமையான மூளைச் சலவை. கொலையின் பின் நாடு கடக்கிறார்கள்? அவரைக் கொன்றவர்கள் இந்தியாவுக்கு இலகுவாக செல்ல முடிகிறது? அங்கு தொடர்ந்து அவர்களால் எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்க முடிகிறது? ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு செல்ல முடிகிறது?

இதுவெல்லாம் எப்படி சாத்தியம்? உட்பகையென்றால் கொலையாளிகளை யாரும் காப்பாற்ற மாட்டார்கள்? உமா தவறிழைக்காதவரல்ல. அவரைக் கொலை செய்யும் அளவுக்கு உட் பூசல் இருக்கவில்லை. புத்தி சீவிகள் இருந்தால் சிலருக்கு பிரச்சனை. அதற்கு முடிவு கட்டி விட்டார்கள்! 

றோ தொடர்பு கொண்ட புளொட் தலைவர் யார்? றோ சாதாரமானவர்களை வைத்து உமாவை கொல்ல முடியாது. அடுத்த இயக்கங்களாலும் முடியாது. காரணம் உமாவை நன்கு தெரிந்தவர்களுக்கு அவரது திறன் தெரியும்.

ஒரு பார்வையில் சுற்றியுள்ள அனைவரையும் கணிக்கும் கண்கள் அவருடையது. எனவே வெளியாரால் உமாவை போடவே முடியாது. எனவே உமாவோடு இணைந்தே இருப்பவர்களை வைத்தே இக் காரியத்தை செய்ய வேண்டும். அவரோடு இணைந்திருக்கும் நபர்களை மன மாற்றம் செய்ய சாதாரமானவர்களால் முடியாது. 

அதற்கும் நம்பும் தலைமைத்துவ குணம் வேண்டும். தவிர கொலையாளிகளை உடனடியாக நாட்டை விட்டு விமானத்தில் சென்னைக்கு அனுப்புவதற்காக றோவோடு பேசி செயல்படக் கூடிய அந்த நபர் நம்பகமான மொழி ஆற்றல் உள்ளவராக இருக்க வேண்டும். நம்பகமற்றவர்களோடு றோ டீல் பண்ணாது 

றோ படுகொலை செய்ய சதி செய்தது என்கிறீர்கள். அந்த இடைப்பட்ட தரகர் யார்? இன்னும் வெள்ளை வேட்டியோடு திரிகிறார்களா? இல்லை இல்லையா? துரோகிகள் தூரத்தில் இல்லை... 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தோற்றம்!

இணையத்தில் வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தொடர்பான நூற்றுக்கணக்கான பின்னூட்டங்கள் எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதி வரலாற்றை மிகச் சரியாகவே மீள் பரிசீலனைக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தி உள்ளது.

இன்று மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட போதும் அன்றைய தவறுகளில் இருந்து இன்று போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதனால் இந்த வரலாற்றுப் பதிவுகள் இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான தேவையாக உள்ளது.

மே 18 2009ல் முடிவுக்கு வந்துள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் சரி பிழைகளை நின்று நிதானித்து ஆராயாமல் மீண்டும் எழுந்தமானமான கோசங்களின் அடிப்படையில் அடுத்த நகர்விற்கு தயாராகி உள்ளனர்

இன்றைய மோசமான முடிவுக்கு பொறுப்பான அதே அரசியலும் அரசியல் சக்திகளுமே மீண்டும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்பட்டு உள்ளனர். கடந்தகால தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கவே வழிவகுத்தது.

போராட்டத்தை முன்னெடுத்த நான் உட்பட தற்போது எமது தாயக மக்களில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வந்து பாதுகாப்புப் பெற்றுக் கொண்டோம். அன்று எம்மை நம்பிய மக்கள், எம்மால் கைவிடப்பட்டனர்.

 அன்று அந்த மக்களுடன் நின்று போராட்டத்தை சரியாக முன்னெடுக்கத் தவறிய நாம் (அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்) இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து அந்நியப்பட்டு, எமது குற்ற உணர்வின் காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படுகிறோம் என்றே தோன்றுகிறது.

அன்று பக்கதில் இருக்கும்போதே மக்களைப் புரிந்துகொள்ளத் தவறிய நாம், இன்று ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நின்று இணையத்தை வைத்துக் கொண்டு அவர்களுடைய உணர்வுகளைப் புரிவோம் என்ற, இணையக் காதலிலும் கீ போட் புரட்சியிலும் என்னால் நம்பிக்கை வைக்க முடியவில்லை. எமது நடவடிக்கைகளின் விளைவுகளை உணராமல் போராட்டத்தையும் புரட்சியையும் ஏற்றுமதி செய்ய எண்ணும் புதிய பிளாவில் பழைய கள்ளுண்ணும் முன்னாள்களின் சலசலப்புகள், இன்னுமொரு அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி எமது மக்கள் நகர்த்தப்படுகிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதனால் எமது கடந்தகால வரலாற்றை மிகத் துல்லியமாக ஆராய்ந்து வரலாற்றை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரையைப் பதிவு செய்கிறேன்

எனது பதிவு ஒரு சிறு முயற்சியே என்பதால் ஏனையவர்களது ஒத்துழைப்பையும் நாடுகிறேன். இப்பதிவினை நான் தேசம்நெற் பின்னூட்ட களத்தில் பதிவிட்ட அதே பெயரிலேயே பதிவிடுகிறேன். தேசம்நெற் ஆசிரியர் குழு என்னை அறியும். தகுந்த நேரம் வரும்போது என்னை அடையாளப்படுத்திக் கொள்வேன்.

முன்னுரை:
தமிழ்பேசும் மக்களின் போராட்டம், அகிம்சைப் போராட்டமாகத் தொடங்கி, ஆயுதப் போராட்டமாக பரிணமித்து, இன்று முள்ளிவாய்க்கால் வரை வந்து மூழ்கடிக்கப்பட்டது

இந்நிலையில் ஆயுதப் போராட்டம் நடத்திய ஒவ்வொரு இயக்கமும் தங்களின் உருவாக்கங்களில் இருந்து அழிந்தது அல்லது அழிக்கப்படும் வரை, இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டியுள்ளது

இந்நிலையில் நான் சார்ந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (கழகம்) சார்பாக எனது வரலாற்றுக் கடமையை நிலைநிறுத்தி எம் உயிருடன் இருக்கும் சாட்சிகளைக் கொண்டும், தெரிந்த தகவல்களைக் கொண்டும் இப்பதிவினை மேற்கொள்கிறேன்.

எமது போராட்டத்தில் 1972 – 73ற்கு பின் வன்முறையோடு நடந்த ஆயுதக் கலாச்சாரமே இயக்கங்களாக சராசரி மக்களால் ஆரவாரிப்பாக (பெடியங்கள் தமிழீழம் பெற்றுத் தருவார்கள்) பேசப்பட்டது. இவ்வாறான இயக்கங்களில் ஒன்றான கழகம், ஆரம்பத்தில் அடித்தள மக்கள் மத்தியில் நின்று கட்டமைக்கப்பட்டது

காந்தீயம் என்ற அமைப்பின் வட கிழக்கிற்கான நிர்வாக கட்டமைப்பு வேலைத் திட்டங்களின் ஊடாக மக்களை மையப்படுத்திய இந்நகர்வு உள்மட்டத்தில் கழகத்தை உருவாக்கியது என்றால் மிகையில்லை. கழக உறுப்பினராக இருந்த சிலர் ஆரம்பத்தில் ஆயுதத்தை கையிலெடுத்தாலும்ஆரம்பகால உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மக்கள் மத்தியில் நின்று செயற்பட்டு உள்ளனர்.

பல சம்பவங்கள்நகர்வுகள்திட்டமிடல்கள்செயற்பாடுகள்தீர்வுகள்முடிவுகள் என வரலாறு ஓடிகொண்டிருக்கும் போது, இதில் சேகரிக்கப்படும் அல்லது பதியப்படும் ஆதாரப்படுத்தப்படக் கூடிய உண்மைகளும் நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டு, சமூகத்தில் பொதுவில் வைக்கப்படும் போதுதான் ஒரு வரலாறு முழுமையடைகின்றது. வரும் சந்ததிக்கும் நாம் கையளிக்கும் ஆவணமாகின்றது.

சமுதாயமானது ஆக்கத்தாலும்அழிவாலும் வரலாற்றில் நகர்த்தப்படுவது கண்கூடு. மனிதனின் உருவாக்கத்தில் வரலாறு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. எனவே நாம் எமது அனுபவங்களை வரலாறாக்கி எமது அடுத்த சந்ததிக்கு கையளிப்பதுவே ஆரோக்கியமான அடுத்த கட்ட நகர்விற்கு இட்டுச்செல்லும். எனவே எமது இன்றைய வரலாற்றுப் பதிவுகள் நாளைய தமிழ் மனிதனின் உருவாக்கத்தில் மிக முக்கியமானது.

முளைவிட்ட எமது போராட்டம்:
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமானது 1948 ற்குப் பின்னால் குறுந்தேசியவாத தலைமைகளினால் அகிம்சை வழிகளால் வழிநடத்தப்பட்டமை நாம் அறிந்ததே. இத்தலைமைகள் பாராளுமன்ற ஆசனங்களை குறிக்கோளாக வைத்து வட கிழக்கில் வாக்கு வங்கிகளை நிரப்பி அமோகமான மக்கள் ஆதரவுடன் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றின

இவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலைவரை தங்கள் பாராளுமன்ற அரசியலை முன்னெடுத்தனர். இந்த பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றுகின்ற விடயமே விடுதலைப் போராட்டம் என்ற வரையறைக்குள்ளேளே தமிழ் குறும்தேசியவாதக் கட்சிகள் தங்களை வளர்த்துக்கொண்டன.

இதனால் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அமைப்புகளில் சிலர்- பல மட்டத்திலும், பல மாவட்டத்திலும்- தன்னிச்சையாக செயற்படத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் இலங்கை பேரினவாத அரசு இனரீதியான தரப்படுத்தலை அறிமுகப்படுத்தியது. பின் அதனைப் பிரதேசரீதியான தரப்படுத்தலாக மாற்றியது. இதனால் யாழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே கட்டாய சிங்கள மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்பு தவிர்க்கப்படுதல், 1948லிருந்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழ் பிரதேச விகிதாசாரங்கள் மாற்றப்படல் போன்ற செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சமூக பொருளாதார கல்வி நிலைமைகளில் சீர்குலைவுகள் ஏற்படுவது தொடர்ந்தது.

போராட்டம் ஆயுதவடிவம் எடுத்தது:
1970 – 1971 காலகட்டத்தில் இலங்கையில் சிங்கள மாணவஇடதுசாரிகளின் சேகுவோரா போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. நாட்டில் ஆயுத கிளர்ச்சியாக வெடித்தது. அன்றைய உலகச் சூழலும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் தலைமைகளை நம்பியிருந்ததமிழரசுக் கட்சி இளைஞர் அமைப்புக்களில் தீவிரமாக செயற்பட்ட இளைஞர்கள்தங்கள் தலைமைகளில் மெல்ல மெல்லமாக நம்பிக்கையிழந்தனர். அவர்கள் ஆயுதப் போராட்டங்களின் பக்கம் தங்கள் ஈடுபாடுகளை காட்டத் தொடங்கினர்.

இதில் தென்பகுதியின் ஆயுதப் போராட்டங்களின் சில தொடர்புகளின்நிமித்தம் யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலனும் (தற்போது லண்டனில் வசிக்கின்றார்.) அவரைத் தொடர்ந்து உரும்பிராய் பொன்னுத்துரை சிவகுமாரனும் (இவர்தான் முதல் தற்கொலைப் போராளி

யூன் 05 1974ல் எதிரிப் படைகளிடம் மாட்டிக்கொள்ளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்) உட்பட சில இளைஞர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்தனர்.

அரசியல் தலைவர்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பின:
தமிழ் தலைமைகளில் இருந்து நம்பிக்கை இழந்த இளைஞர்கள் புரட்சிக் கருத்துக்களைசெயற்பாடுகளை தத்தமது குணாதிசயங்களுக்கேற்ப உருவகப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் வெவ்வேறு குழுக்களாக செயற்பட்டனர். இத்தீவிர இளைஞர்கள் ஆரம்பத்தில் அரசு சார்பான தமிழ் மந்திரிகள், எம்.பி க்களுக்கு குண்டெறிதல், சிறு ஆயுதங்கள்காட்டுத் துவக்கு பாவித்து சுடுதல் எனச்செயற்பட்டனர்.

அடுத்து 1973ல் மந்திரி குமாரசூரியர் ஊர்காவற்துறையில் தபால் நிலையம் ஒன்றினைத் திறப்பதற்காகச் சென்று வரும் வழியில், பண்ணைப் பாலத்தைத் தகர்த்து கொலை செய்ய முயற்சித்தனர்.

யூலை 27, 1975ல் அப்போதைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டார். இதுவே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவ நடவடிக்கையாக அமைந்தது.

இளைஞர்கள் கைது:
இவ்வாறான ஆயுத நடவடிக்கைகளின் எதிர்விளைவாக இலங்கை அரசு இளைஞர்களை இச்சம்பவங்களிலோ அன்றி சந்தேகங்களிலோ கைதுசெய்து சிறைக்கும் சித்திரைவதைக்கும் உட்படுத்தினர்.

குமாரசூரியர் கொலை முயற்சி தொடர்பாக ராஜன் (ஞானசேகரன்) மற்றும் கரையூரைச் சேர்ந்த ஆசீர்வாதம் தாசன் ஆகியோர் கைது செயப்பட்டனர். 1973ஆம் ஆண்டு தை 16ம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதில் குறிப்பிடத்தக்கதாக துரையப்பா கொலைக்கு பிரபாகரன் பண உதவியை கேட்க, சந்ததியார் (இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலையில் படுகொலை செய்யப்பட்டார்.) தனது சகோதரியின் சங்கிலியை அடைவு வைத்து கொடுத்ததால் பிடிபட்டார். பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன் (தற்போது பிரான்ஸில் இருப்பவர்) பிடிபட்டு சிறையிருந்தனர். கொலையின் முக்கிய நபரான பிரபாகரன் தப்பிவிட்டார்.

இதுபோல் வெவ்வேறிடங்களிலும் சில சம்பவங்கள்தீவிரவாதங்கள்சந்தேகங்கள் என்று பரவலாக இளஞைர்கள் கைதாகியிருந்தனர்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை (மே 14, 1976) கூட்டணியினர் அகிம்சை போராட்டமாக முன்னெடுத்த நிலையிலும், அதை முன்னின்று நடத்திய கூட்டணி இளைஞர்களும் பேரவையினரும் கைதாகினார்கள். இதில் உமா மகேஸ்வரனும் (1976) கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் எந்த கைதின் போதும் பிரபாகரன் ஒருபோதும் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களின் விடுதலை:
1976ல் இலங்கையில் நடைபெறவிருந்த அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை காரணம் காட்டி இதற்கு முன்பே சிறையிலிருக்கும் போராட்டம் சம்பந்தமான அனைத்து தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழர் விடுதலை கூட்டணியால் இலங்கை அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டு பலவழிகளில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் நிமித்தம் 1976 ஆவணியில் சகல தமிழ் இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இதில் துரையப்பா கொலைவழக்கு மிக கடுமையாகப் பார்க்கப்பட்டு பலதடவை நீதிமன்றத்திற்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்ட வண்ணமே இருந்தது. அதுபோல் குமாரசூரியர் கொலைமுயற்சி 3 வருடம் 8 மாதம் விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே கிடப்பில் கிடந்தது. எனவே இந்த இளைஞர்களின் ஒட்டுமொத்த விடுதலை கூட ஒரு திருப்பு முனையாக இருந்திருக்கலாம்.

படித்த வாலிபர் திட்டம்:
சிறையிலிருந்து வெளியே வந்த சந்ததியார், ராஜன், சிறிசபாரத்தினம் உட்பட்ட சில இளைஞர்கள் விசுவமடுபடித்த வாலிபர் திட்டம்அமைக்கப்பட்ட இடத்தில் முகாம் அமைத்து அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் மற்றும் அரசியல் பயிற்சிகள் வழங்கினர். இதில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 17 வயதில் படித்துக் கொண்டிருந்த யாழ் நகரப் பகுதியை சேர்ந்த மாணிக்கம்தாசன் இணைந்து கொண்டார். பின் தாயார் தேடிவந்து கட்டாயப்படுத்தி திருப்பி அழைத்துச் சென்றுவிட்டார்

மேலும் இவ் வேலைத்திட்டத்தில் ஒபராய்தேவனும் (பின்நாளில் டெலா இயக்கத் தலைவர்) ஒரு மாதம்வரை பங்காற்றினார். இக்காலப்பகுதியில் இவர்கள் யாரும் ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்படவில்லை. ஒரு குழுவாகவே செயற்பட்டனர். அதற்கு பெயரோ தலைமைத்துவமோ இருக்கவில்லை.

படித்த வாலிபர் திட்டம், 1966 – 1970ல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில், டட்லி சேனநாயக்கா பிரதமராக இருக்கும் போது, அறிமுகப்படுத்திய திட்டம். இலங்கையில் எல்லா மாகாணங்களுக்குமான இளைஞரை மையப்படுத்திலாண்ட் ஆமிதமிழில்விவசாய படைஎன்ற திட்டத்தின் அடிப்படையில் புதுகிராமங்கள் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.

அதில் உபஉணவுப் பயிர்களை உருவாக்குவதென்று, காணிவெட்டி களனி அமைக்கப்பட்டது. அதனை செய்வதற்கு ரக்ரர் முதல் கொண்டு எல்லா பொருளாதார வசதிகளும் இளைஞர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அந்த இளைஞர்களுக்கான சீருடையாக ராணுவ உடையின் வடிவமைப்பில் அமைக்கப்பட்ட உடையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் மண்வெட்டியுடன் ஒரு கிராமத்து ராணுவ கட்டமைப்பு ஒன்றை உருவாக்கினர்கள்.

இதன் அடிப்படையில் தமிழ் பிரதேசத்தில் விசுவமடு, முத்தையன்கட்டு, மிருசுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.

1970ல் சிறிலங்கா சுதந்திரகட்சி ஆட்சிக்கு வந்து சிறிமாவோ பிரதமராக வந்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த திட்டத்தை இலங்கை முழுதும் ரத்து செய்து, அதற்கு பதிலாக இந்தபடித்த வாலிபர் திட்டம்என்ற ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு ஒவ்வொரு இளைஞருக்கும் 2 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டு மற்றைய சலுகைகள் சீருடைகள் எல்லாம் நிறுத்தப்பட்டது.

தமிழ் குடியேற்றத்திட்டங்களும் பண்ணைகளும்:
இதே காலகட்டத்தில் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து 20 மைல் தொலைவிலுள்ள மதுரு ஓயா அருகிலுள்ள புனானை என்ற எல்லைக் கிராமமொன்றில் சிங்களக் குடியேற்றத்தை தடுக்க மரியசிங்கம் இஞ்சினியர் அவர்களால் தமிழ் குடியேற்ற வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பாதியில் கைவிடப்பட்டதும், அதிலும் சந்ததியார், ராஜன், சிறி முதலானோர் இணைந்து கொண்டனர்

இங்கு பல இளைஞர்களும் தொண்டராகினர். இதில் சந்திவெளியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொண்டார். (மே 18ற்கு முற்பட்ட புலிகளின் கட்டமைப்பில் நீதியரசர் பதவியை வகித்தவர் ஃபாதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரைதான்.)

இந்தத் தமிழ் குடியேற்றத் திட்டத்தில் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலரும் இணைந்தனர். இதில் பின்னாளில் கழகத்தின் உறுப்பினரான வாசுதேவாவும் இணைந்து செயற்பட்டார். இக்குடியேற்றத்திற்கு பட்டிருப்பு கணேசலிங்கம் (பாராளுமன்ற உறுப்பினர்) செங்கலடி, சம்பந்தமூர்த்தி என்போரும் நிறையவே ஒத்துழைப்புக் கொடுத்தனர். மேலும் குடத்தனையை சேர்ந்த அம்பன் என்ற மோகனசுந்தரம் என்பவரும் தொண்டராக வந்து இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

இப்படியாக பரவலாக குடியேற்றங்களும் விவசாய பண்ணைகளுமாக இளைஞர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1977 இனக்கலவரம் உருவாகியது. இதன்போது கணிசமான மலையகத்து மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனை மையப்படுத்தி வவுனியாவை நோக்கி குடியேற்றங்கள் பரவலாக நடந்தன.

1960ம் ஆண்டு நீதிராஜா என்பவரின் தலைமையில் சில படித்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு பெரும் வேலைத்திட்டத்தில் இறங்கினர்

அதாவது திருகோணமலையில் ஒரு மருத்துவபீட பல்கழைக்கழகமும், வவுனியாவில் விவசாய பீட பல்கலைக்கழகமும் உருவாக்குவதென உற்சாகமாக செயற்பட்டனர். இதன் முதற்கட்டமாக நெடுங்கேணியில் இருந்து 12 மைல் தொலைவில்வெடிவைத்த கல்என்ற கிராமத்தில் காணி வாங்கிவிடப்பட்டது. பின் அரசியல் தடைகள் ஏற்பட்டு அந்த முயற்சிகள் தடைப்பட்டது.

எனவே வெற்றிடமான அந்தக் காணியை 1977ல் சந்ததியார், ராஜன், சிறிசபாரட்ணம் ஆகியோர் சேர்ந்து பொறுப்பெடுத்து இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்கான விவசாய குடியேற்ற திட்டமாக செயற்படுத்தினர். இந்தப் பண்ணை தான்நாவலர் பண்ணைஎனப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் வெளியே இருந்து வந்த இளைஞர்களுடன் வவுனியா இளைஞர்களும் இணைந்து தொண்டாற்றினர்

இதில் வவுனியா கணேஸ் எனப்படும் குகன், உருத்திரபுரம் குஞ்சன், யாழ் ஆரியகுளத்தை சேர்ந்த இளைஞர் லோகநாதன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நவ்வி, பாலமோட்டை, கல்மடு என பரவலான கிராமங்களில் சிறப்பாக இப்பணி தொடர்ந்தது. இவ்வாறு மக்களுடன் மக்களாக நின்று செயற்பட்ட இவர்கள் கூட்டுப் பண்ணைத் திட்டம், பாலர் பாடசாலைகள், பல கிராம அபிவிருத்திகள் என சிறப்பாக இயங்கினர்.

தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்:
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம்” (ரி.ஆர்.ஆர்.) என்ற அமைப்பு உருவானது. இதற்கு தலைவராக (ரி.ஆர்.ஆர்.) கே.சி. நித்தியானந்தன் இருந்தார். இவர் ஒரு தொழிற்சங்கவாதி. சிங்கள இடதுசாரிகளின் மத்தியில் பிரபலமானவர் என்றபடியால் தனது பெயரை நித்தியானந்தா என பின்நாளில் மாற்றிக் கொண்டார்

இவரின் தம்பியின் மகன் தான் டக்லஸ் தேவானந்தா என்ற தேவானந்தன். இவரும் அவ்வழியே தனது பெயரை மாற்றிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரி.ஆர்.ஆர். செயலாளர் கந்தசாமி

இவர் சிட்டிசென் கொமிட்டி மற்றும் இன்டனெஷனல் அம்னஸ்டி என்பவற்றின் உறுப்பினராக இருந்தவர். சர்வதேசத்தில் இருந்து அகதிகளுக்கான அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதிகளை பெறும் பெறுமதிமிக்க தொடர்பாளர். பின்நாளில் ஈரோஸ் இயக்கத்தால் 1988ற்கு பின் அநியாயமாக கொலை செய்யப்பட்டார்.

மற்றும் மேர்ஜ் எனப்படும் மேர்ஜ் கந்தசாமி 2007வரையில் கூட நாட்டில் சில அரசுசாரா நிறுவனங்கள் ஊடாக சேவையாற்றியவர். பின்னர் ரவீந்திரன், நவம் (இருவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.) என்பவருமாக இந்த நிறுவனத்தை நடத்தினர். இதில் முழுநேர பணியாளராக பேபி என்ற பரராஜசிங்கம் (கடந்த 30 வருடமாக பிரான்ஸில் இருப்பவர்) செயற்பட்டார். இவரால் நிர்வாகிக்கப்பட்டது தான் கென்ற்பாம், டொலர்பாம்.

1977 இனக்கலவரத்தின் பின்:
பண்ணை குடியேற்றத்திட்டங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் 1977 இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்து வந்த கணிசமான மலையக மக்களையும் இரு கரம்நீட்டி வரவேற்றனர். இதன்மூலம் மலையக மக்களும் எம் தமிழ்பேசும் மக்களின் அலகுக்குள் உட்பட்டவர்கள்தான் என்பதுவும் நிரூபிக்கப்படுகின்றது. விடுதலைக்காக எல்லைக் கிராமங்களில் தமது இளமையை வாழ்க்கையை துறந்தும், இடம்பெயர்ந்திருந்து வந்தும் பங்காற்றிய இந்த இளைஞர்கள் தான் எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பப் புள்ளிகள்.

இவர்களெல்லாம் தமிழ் தலைமைகளின் மேடைப் பேச்சுக்களில் மயங்கி புறப்பட்டு அன்றே சிறைக்கும் சித்திரவதைக்கும் தலைமறைவுக்கும் ஆளானவர்களே. ஆயினும் இந்தப் போராளிகளின் ஆரம்பங்கள் தியாகம் நிறைந்ததே. இப்படியாக இந்தப் பணியில் எட்டு மாதம் ஈடுபட்ட பின் சந்ததி, ராஜன் தமது வவுனியா வேலைத் திட்டங்களுக்கு திரும்பினர்.

1977 இனக்கலவரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு கிளை இளைஞர் பேரவையின் செயற்பாட்டாளார்கள் உமாமகேஸ்வரன், மண்டுர் மகேந்திரன், சிங்காரவேலன் உட்பட்ட இளைஞர்களும் மகளிர் பேரவையைச் சேர்ந்த ஊர்மிளா, மகேஸ்வரி வேலாயுதம் மற்றும் சில பெண்களுமாக கொழும்பிலிருந்து வந்து, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினருடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டனர். (மகேஸ்வரி வேலாயுதம் மூன்று வருடத்திற்கு முன் புலிகளால் கொலை செய்யப்பட்டவர். 1990 ற்குப் பின் .பி.டி.பின் முக்கியஸ்தராக இருந்தவர்.)

1977 இனக்கலவரத்திற்கு சில மாதங்களின் பின் உமாமகேஸ்வரன், ஊர்மிளா, மண்டுர் மகேந்திரன் போன்றோருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்புகள் ஏற்பட்டது. இவர்கள் ராணுவ விடயங்களில் தீவிரம் காட்டியதால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

இந்நிலையில் 1978 மட்டில் கே.சி நித்தியானந்தா அவர்களால் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரிடம் அது ஒப்படைக்கப்பட்டது. இதில் கென்பாம் இல் இருந்த 25 குடும்பங்களுடன் டொலர்பாம் வேலைத் திட்டங்களும் இவர்களிடம் கைமாறியது. இங்கு பணியாற்றிய பேபி அவர்கள் அருகேயுள்ள கன்னியாஸ்திரிகள் பொறுப்பில் இருந்த ஒரு பண்ணைக்கு தொண்டராக செயற்படச் சென்றார்.

இந்நேரத்தில் கிளிநொச்சி உருத்திரபுரம் 7ம் வாய்க்கால் பகுதியில் அப்பு என்ற (குடுமிவைத்த வயதானவர்) காந்தீயக் கொள்கையை கடைப்பிடிக்கும் ஒருவர்குருகுலம்என்ற அமைப்பை உருவாக்கி பொதுப் பணியாற்றினார். இவர் ஆதரவற்ற பிள்ளைகள், பெண்களை மையப்படுத்தி ஒரு ஆச்சிரமத்தை உருவாக்கி நடாத்தி வந்தார். இவருடன் டொக்டர் ராஜசுந்தரம் உம், டேவிட் ஐயா வும் சில வெளிநாட்டு உதவிகளைப் பெறக்கூடியவிதமாகத் தொடர்புகளை வைத்திருந்தனர். இதேநேரம் வவுனியா கே சி நித்தியானந்தன் உடனும் சில தொடர்புகளுடன் ரி.ஆர்.ஆர். இன் செயற்பாட்டாளராக இருந்தார்.

1978 சூறாவளி அனர்த்தமும் தமிழ் இளைஞர்களின் நிவாரணப் பணியும்:
1978 சூறாவளி அனர்த்தம் நிகழ்ந்த காலப்பகுதி. மட்டக்களப்புக்கு சூறாவளி நிவாரணப் பணிகளுக்கு பல தமிழ் இளைஞர்கள் வந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் ராம்ராஜ் சிறியவயதில் இணைந்து கொண்டு, பின்னாளில் ஒரு சம்பவத்தில் கைதானார். இவருடன் இன்னும் சிலரும் அரசியல் காரணத்தால் கைதாகியிருந்தனர். எனவே சூறாவளி மீட்புப் பணியில் இவர்கள் பங்குகொள்ள முடியவில்லை.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உடனடி நிவாரண வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு சந்ததியார், ராஜன் முதற்கொண்ட இளைஞர்கள் முடிவெடுத்தனர். இதன்படி யாழ்ப்பாணம் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு இவ்விருவரும் சென்று தம்முடன் அழைத்துச் செல்ல இளைஞர்களை திரட்டினர். உடனடியாக 160 இளைஞர்கள் ராஜன் தலைமையில் உணவுப் பொருட்களுடனும் நிவாரணப் பொருட்களுடனும் புறப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக புறப்பட்டு பின் இங்கிருந்து 14 படகுகளில் கடல்வழியாக மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை அடைந்தனர்.

வரும் வழியில் உடைக்கப்பட்டிருந்த பாலத்தை இவ்இளைஞர்கள் சாப்பாடு, தண்ணி, நித்திரை இல்லாமல் நின்று சரிசெய்து வாகனங்களில் நிவாரணப் பணிக்கான இடத்தை நோக்கிச் சென்றனர். அங்கு உடனடியாக இவ் இளைஞர்கள் தங்குவதற்காக, வனசிங்கா மாஸ்டர் தலைமை ஆசிரியராக இருந்த அரசடி மகாவித்தியாலத்தில் இவ் ஆசிரியரால் இந்த 160 பேருக்கும் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பின் வாழைச்சேனைக்கு சென்றனர்.

இங்கிருந்த நிலையில் இவர்களால் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தொடர்ந்து சந்ததியார் அவர்களுடன் மேலும் வடக்கில் இருந்து இளைஞர்கள் அழைத்து வரப்பட்டனர். மொத்தமாக இப்பணிகளில் 600 வடமாகாண இளைஞர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரான்ஸிலுள்ள கோவைந்தன் என்பவர் தானும் கலந்துகொண்டதாக சந்திப்பொன்றில் தெரிவித்தார். இவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற ஈபிடிபி இன் பத்திரிகையான தினமுரசு நாளிதளின் ஆசிரியராக இருக்கின்றார்.

இந்த நிவாரணப் பணிக்காக வந்த இளைஞர்கள் அனைவரும் பின் செல்வநாயகத்தின் மகன் ராஜன் (இவர் இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்) அவர்களின் ஏற்பாட்டில் இவரின் தந்தைக்காக கட்டப்பட்டசெல்வநாயகம் நினைவு மண்டபத்தில்தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசால் கொழும்பிலிருந்து 20 லொறிகளில் அமெரிக்கன் மா மட்டக்களப்பு மக்களுக்காக வந்தது. ஆனால் அதனை இறக்கி வைப்பதற்கு மட்டக்களப்புப் பகுதியில் கட்டடம் எதுவும் கூரையுடன் இருக்கவில்லை. அனைத்தும் சூறாவளியில் பறந்து விட்டது. அம்பாறைக்கும் வாகனங்கள் போகமுடியாத நிலை. அரசு உத்தரவுடன் மாவினைத் திருப்பி அனுப்ப இருந்தனர். ஆனால் உடனே இந்த இளைஞர்கள் 4 மணி நேரத்தில் செயின்ற் மைக்கல் கல்லூரியின் கூரை ஓடுகள் வேயப்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில் இந்த பொருட்கள் இறக்கப்பட்டன. அதாவது ஜி. . யின் ஏற்பாட்டில் புனித மைக்கல் பாடசாலையில் பாதுகாக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையிலும் ராஜதுரை எம்பி தலையிட்டு படுவான்கரை (தனது தேர்தல் பிரதேசம் ஆகையால்) பிரதேசத்திற்கு எல்லா லொறிகளையும் அனுப்பும்படி கேட்டார். ஆயினும் மட்டக்களப்பு இளைஞர்களும் தொண்டர்களாக பணியாற்றியவர்களும் தலையிட்டு படுவான்கரைக்கு 2 லொறிகளும் ஏனையவற்றை பரவலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவிசெய்தனர்.

மேலும் இந்த சூறாவளி அனர்த்தத்தில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை சீரழிந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள வைத்தியர்களோ தாதிகளோ இல்லாத நிலையில் இவ் வைத்தியசாலை இளைஞர்களின் கவனத்திற்கு வந்து 15 நாட்களாக பல இளைஞர்கள் நோயாளிகளை பராமரித்து பல உதவிகளும் செய்தனர்.

இந்த மறுசீரமைப்பு பணி ராஜன் உட்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களால் எட்டு மாதங்களாக செயற்படுத்தப்பட்ட விடயம் சாதாரணமானதல்ல. வடக்கு மாகாண இளைஞர்கள் அன்றே கிழக்கின் மக்களுக்காக தமது படிப்பு, வாழ்க்கை, வேலை, குடும்பம், ஏனைய பணிகள் என்பவற்றை விட்டுவிட்டு முழுநேரத் தொண்டர்களாக செயற்பட்டதை அந்த கிழக்கு மக்கள் மறக்கமாட்டார்கள்.

வடகிழக்கு முரண்பாடுகளுக்கு குறுந்தேசியவாத ஒரு சில தமிழ்த் தலைமைகள் (முழு வடக்குத் தலைமைகளும் அல்ல) காரணமாக இருக்கலாம். ஆனால் வட கிழக்கு இளைஞர்களோ, பெரும்பாலான வடகிழக்கு மக்களோ காரணம் என்றுகூறி தமது நலன்களுக்காக வடகிழக்கு பிரிவினைக்கு தூபம் போடுபவர்கள் வரலாறையும் புரட்டிப் பார்க்க வேண்டும்.

பிரபாகரனின் செயற்பாடுகள்:
இந்த மட்டக்களப்பு சூறாவளி நிவாரணத்தின் போது புலிகளோ, புதிய தமிழ் புலிகளோ பங்குபெறவில்லை. 1976ல் பிரபாகரனால் புலி உறுப்பினர் மட்டக்களப்பு மைக்கல் என்பவர் கொலை செய்யப்பட்டமை மட்டக்களப்பு மக்களிடையே பெரும் பதட்டத்தை உண்டுபண்ணி இருந்தது. அதனால் பிரபாகரன் ராஜனிடம் தங்கள் இயக்கத்திற்கு சில இளைஞர்களைக் கேட்டு இருந்தார். அதற்கிணங்க சில இளைஞர்கள் பிரபாகரனுடன் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

1)லோகநாதன் (தற்போது செக்-குடியரசில் இருப்பவர். அந்நாட்டு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.)
2)தாமரைக்கேணியைச் சேர்ந்த பாரூக் என்ற புனைபெயரைக்கொண்ட தமிழ் இளைஞர்.
3)மாணிக்கவாசகரின் மகன் (தற்போதும் கனடாவில் புலிகளின் முக்கிய உறுப்பினர்) உட்பட 5 பேர் ராஜனால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பின் பிரபாகரனால் பயிற்சிக்கான இடம் ஒன்று கேட்கப்பட்டது. ராஜனால் வவுனியா- இறம்பைக்குளம் அருகேபண்டிக்கெய்த குளம்என்ற இடத்தில் இடமும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.

அதேபோல் குட்டிமணி உட்பட 35 இளைஞர்கள் சிறிசபாரத்தினம் மூலம் ராஜன் அவர்களிடம் இடஉதவி கேட்டதற்கிணங்க அவர்களுக்கான பகுதி ஒன்று நாவலர் பண்ணையில் ஒதுக்கப்பட்டது. 1978 பிற்பகுதியில் சிறி, குட்டிமணி உடன் தனியாக இயங்கத் தொடங்கியிருந்தார். அப்படி அன்றே ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் அக்கம் பக்கம் இயங்கிய போதும் ஒருவரோடு ஒருவர் புரிந்துணர்வுடன்தான் இருந்தனர்.

காந்தீயம்:
இந்நிலையில் சந்ததியார், ராஜன் ஆகியோரின் வேலைத்திட்டங்களின் பொறுப்புணர்வை அறிந்த டாக்டர் இராஜசுந்தரம், அவர்களை தனது வீடான கொக்குவில் பொற்பதியில் வைத்து சந்தித்துகாந்தீயம்என்ற ஒரு அமைப்பு வேலைத்திட்டத்தில் ஒன்றிணைத்தார். இதன்படி பரவலாக சமூக, பொருளாதார குடியேற்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காந்தீயக் கொள்கையில் கிராம மட்டத்தினாலான வேலைத் திட்டங்களின் தோற்றப்பாட்டுடன் வேலைகள் நடந்தது.

ஆனால் உள்ளே டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், ராஜன், சிறி போன்ற இளைஞர்களை மையப்படுத்தி ஒரு அரசியல் செயற்பாடும் நகர்ந்தது. ஆனால் இவ்அரசியல் செயற்பாடுகளில் காந்தீயவாதியான டேவிட் ஐயாவிற்கு பெரிதாக உடன்பாடும் இல்லை. பலவிடயங்கள் தெரியப்படுத்தப்படவுமில்லை. எனினும் இந்நகர்வு பல இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

இப்படியாக ஒருபக்கம் காந்தீய வேலைத் திட்டங்களோடு கிராம முன்னேற்றங்களும், பண்ணைகளும் விஸ்தரிக்கப்பட்டது. வெளிவேலைத் திட்டமாகவும் ஒரு வரையறுக்கப்பட்ட அரசியல் வளர்ச்சியும் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தது.

மறுபக்கம் உமா மகேஸ்வரன், பிரபாகரன், ஊர்மிளா, நாகராஜா, நிர்மலன் ரவி, சித்தப்பா, யோன், ராகவன் ஆகியோரைக் கொண்ட புலிகள் அமைப்பு சில தீவிரவாத செயற்பாடுகளுடன் இயங்கியது.

மட்டக்களப்பில் இளைஞர் பேரவை:
1979ல் சந்ததியார்ராஜன் முயற்சியில் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இளைஞர் பேரவை என்ற பெயரில் அலுவலகம் திறக்கப்பட்டு முதன்முதல் கொடி ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதுதான் பின்நாளில் கழகக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. 1979ல் இக் கொடியுடன் இங்கு பெரும் மேதின ஊர்வலம் நடைபெற்றது வரலாற்று முக்கியத்துவமானது.

1978 சூறாவளியின் மீள்நிர்மாணப் பணிகளில் இந்த வட மாகாண இளைஞர்களின் ஈடுபாட்டால் கிழக்கு மாகாண இளைஞர் மட்டத்திலும் ஒரு வட கிழக்கிற்கான நல்லுறவை உருவாக்கியது. தமிழ்தேசிய தலைமைகளின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த பெரும்பான்மையோர் காசிவண்ணைசேனாதி போன்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் வட்டத்தை விட்டு பரவலாக வெளியே செயற்படத் தொடங்கினர். இதன் எதிரொலிப்பு இந்த மட்டக்களப்பு ஊர்வலத்தினதும் பொது கூட்டத்தினதும் பெரும் வெற்றியாக அமைந்தது.பஸ்தியாம்பிள்ளை கொலை உட்பட பல செயற்பாடுகளால் இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் பார்வை தமிழ் இளைஞர்கள் மீது திரும்பியது. பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட 4 பொலிஸாரின் உடல்கள் கிணற்றில் கிடந்து அழுகி சில நாட்களுக்குப் பின் ராணுவம் கைப்பற்றியது. பிரபாகரனும், அன்ரனியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் அங்கு சென்றனர். அந்த உடல்களை மூன்றாவது நாள் கிணற்றில் எட்டிப் பார்த்ததில் இந்த உடல்களின் அகோரநிலையால் பிரபாகரன் மிகக் கிலேசமடைந்ததாகவும் இதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்ததில் மூன்று நாட்கள் பரந்தனில் 5ம் வாய்க்காலிலுள்ள வீடொன்றில் தங்கி இருந்ததாகவும் அந்த வீட்டினர் சொன்ன தகவலும் ஒன்று உண்டு.

இதன் முக்கிய கட்டமாக வவுனியாவில் இன்பம், பாலேந்திரன் உட்பட 4 தமிழ் இளைஞர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர். மேலும் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்ட அமுலும் பல தமிழ் இளைஞர்களை முக்கியமாக பண்ணைகளில் செயற்பட்டவர்களை தலைமறைவாக்கியது.

இந்நிலையில் புலிகள் அமைப்பினரும் சிதறி இந்தியா வரையில் சென்று தப்பினர். இந்நிலையில்தான் இந்தியாவில் வைத்து புலிகளின் உடைவு இடம்பெற்றது. ‘உணர்வுகுழுவாக ஒன்றும்புதியபாதைகுழுவாக ஒன்றுமாக பிரிந்தனர்.

காந்தீயப் பண்ணைகளில் இருந்தவர்கள் மிக கவனமாக குடியேற்றங்களிலும் வேலைத் திட்டங்களிலும் ஈடுபட்டதாலும் காந்தீயம் என்ற பெயர் ஒரு பாதுகாப்பை அளித்ததாலும் இவர்களுக்கு பெரிதாக அச்சுறுத்தல்கள் இருக்கவில்லை.

ஊர்மிளாவின் மரணம்:
முன் குறிப்பிட்டதுபோல் புலிகள் உடைந்து போனதில் இந்தியாவிலும் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில்லாத நிலையில் அவர்களுக்கு உள்ளும் தலைமறைவுகள் தவிர்க்க முடியாததொன்றாகியது. இந்நிலையில் மஞ்சட் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளா வவுனியாவிற்கு திரும்பி காந்தீய செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியான சாந்தியின்சாந்தி கிளினிக்கில் வைத்தியம் பார்த்தார்.

ஊர்மிளா வருத்தம் மிக முற்றிய நிலையில் இங்கு வந்ததால் இவரை சுகப்படுத்த முடியாத நிலையில் மரணமானார். இவ் மரணத்தின்போது மண்டூர் மகேந்திரனும், டாக்டர் சாந்தியும் அருகில் இருந்தனர். இவரது மரணம் 1980 மே 17ம் திகதி என்பதுவும் இதையடுத்து மரண அடக்கம் வவுனியா மண்ணில் மே 19ல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தமிழீழ விடுதலைக் கழகம் தோற்றம்:
புலிகளின் உடைவில் உமாமகேஸ்வரன் புலிகளின் மரண தண்டனைக்கு தப்பி இந்தியாவில் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் சந்ததியும் ராஜனும் வவுனியாவில் பேசிமுடிவெடுத்து ராஜன் இந்தியாவிற்கு சென்று உமாவை சந்தித்து இங்கு அழைத்து வருவதாக இருந்தது

இந்த முடிவின்படி ராஜன் தலைமன்னாரினூடாக (ராஜன் தலைமன்னாரில் படகிற்காக காத்து நிற்கும் போது தான் ஊர்மிளா இறந்த செய்தி கிடைத்தது.) இந்தியா சென்று மற்றாஸ் மண்ணடி என்னும் இடத்தில் உமாவை சந்தித்து பல விடயங்கள் பேசி ஒரு புதுக்கட்டமைப்பில் செயற்படுவதற்கு உமாவும் உடன்பட்டார்.

இதன்பின் ராஜன் புறப்பட்டதும் உமா நாட்டிற்கு திரும்பிவரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு உமாவும் வந்து சேர்ந்தார். இதை அடுத்து 1980 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சங்கானை தொண்டர் கந்தசாமி என்பவரின் வீட்டில்தமிழீழ விடுதலைக் கழகம்என்ற பெயருடன் ஏற்கனவே 1979ல் தெரிவு செய்யப்பட்ட கொடிநிறங்களுடன் முதலாவது கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வசந்தன் என்ற சந்ததியார், ராஜன் என்ற ஞானசேகரன், முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன், சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி, மாணிக்கம்தாசன், அவ்வீட்டு கந்தசாமியின் மகன் கண்ணன் (தற்போது ஜேர்மனில் இருப்பவர்) ஆகியோர் உறுப்பினர்களாயினர்.

இதற்குப் பின் சில வாரங்களில் இவ் உறுப்பினர்கள் சந்தித்து முதலாவது மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது. இதில் சந்ததியார், ராஜன், உமாமகேஸ்வரன், சுந்தரம், பாபுஜி தெரிவு செய்யப்பட்டனர்.

சுந்தரத்தால் மானிப்பாயைச் சேர்ந்த காத்தான் என்ற கிருஷ்ணகுமார் 1979ல் கழகத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.கழகத்தின் இராணுவ நடவடிக்கைகள்:

இதன்பின் கழகத்தின் முதலாவது ராணுவ நடவடிக்கையாக 1980 செப்டம்பரில் ஒரு செயற்பாடு கழகத்தில் முடிவெடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. அந்த முடிவிற்கமையவே ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். வவுனியா, கிளிநொச்சி, பரந்தன் ஆகிய பகுதிகளில் .தே.கட்சி அலுவலகம் திறக்க ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக காமினி திசநாயக்கா இங்கு வந்தவேளையில் இக்கொலை நடைபெற்றது.

அடுத்ததாக கிளிநொச்சி வங்கிக்கொள்ளை 1981ல் ஒக்டோபர் 20ம் திகதி நடைபெற்றது. இவ் வங்கிக் கொள்ளையில் 116 கிலோ தங்கம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது. பணம் இருக்கவில்லை. இதில் ராஜன், சுந்தரம், நிரஞ்சன், உமா, பாருக் (பின் புலிகளால் கடத்தி இதுவரை இல்லாமல் போனவர்) அன்பழகன், (இவர் திருகோணமலை திரியாயை சேர்ந்தவர். வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டவர்.) றொபேட் (தெல்லிப்பளையைச் சேர்ந்த இவரும் வெலிகடைச் சிறையில் கொல்லப்பட்டார்), பாபுஜி, சிவசுப்பிரமணியம் (பரந்தன்) உட்பட 12 பேர் பங்காற்றினர்.

சரியாக ஒருமாதத்தில் நவம்பர் 20ம் திகதி ராஜன் மடுப்பகுதி வீட்டில் தங்கியிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டில் ராணுவம் சுற்றிவளைத்ததில், மதில் சுவரால் குதித்து ஓட முற்பட்ட நிலையில் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததால், இறந்ததாக நினைத்து கொண்டு இராணுவம் சென்றுவிட்டது. ஆனால் ராணுவ வைத்தியசாலையில் சில நாட்களுக்குப்பின் கண்விளித்தார். தொடர்ந்து மாணிக்கம்தாசன், பாபுஜி, பாருக், றொபேட், அன்பழகன் ஆகியோர் ஓரு மாதத்தின் பின் அடுத்தடுத்து தமது கவனக் குறைவால் பிடிபட்டனர்.

இயக்க மோதல்கள்:
1982ல் புலிகளால் தேடப்பட்ட சுந்தரம் தை 2ம் திகதி யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த சுந்தரத்தின் கொலைக்கு இறைகுமாரனே (இவரின் பொறுப்பில் தான் புலிகளின் உணர்வு பத்திரிகை இருந்தது) காரணம் என்று சந்ததியாரால் முடிவெடுக்கப்பட்டு இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரும் பின்னால் கழகத்தில் இணைந்த வடலியடைப்பு கண்ணன் என்ற ஜோதீஸ்வரன் என்பவரால் கொலை செய்யப்பட்டனர். (இவர் 1984ல் கழக படைத்துறைச்செயலராக நியமிக்கப்பட்டார்.)

கழகத்தில் கந்தசாமி அல்லது சங்கிலி என்பவர் 1981ல் பண்ணை வேலைத் திட்டத்திற்காக சந்ததியாரால் (வவுனியாவில் ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில்) கொண்டு வரப்பட்டவர். சங்கிலி 1984ல் புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். புளொட் அமைப்பில் இடம்பெற்ற உட்படுகொலைகளில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1988ல் வவுனியா முள்ளிக்குளம் புளொட் முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினாலும் இணைந்து தாக்கப்பட்ட போது கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இருதரப்பிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

உமா மகேஸ்வரன் செயலதிபரானார்:
கழகத்தை உருவாக்கிய அடிமட்டத் தோழர்களும், மத்திய குழு உறுப்பினர்கள் அதிகமானோரும் கைது செய்யப்பட சந்ததியாருடன் உமா முன்னணி அங்கமானார். இதில் உமாவின் கடந்தகால புலிகளின் தீவிர அரசியலும், உமாபிரபா இணைவுபிரிவு என்பது மட்டும்தான் சராசரி மக்களுக்கோ இலங்கை அரசுக்கோ பரவலாக தெரிந்து இருந்தது. உமாவின் தலைமைத்துவ ஆளுமைப் பண்புகளும், 1982ல் பாண்டி பஜார் உமாபிரபா சூடுபாடும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதும் உமாமகேஸ்வரனுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்தது

உமாமகேஸ்வரனை கழகத்தின் செயலதிபர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. கழகத்தை உருப்படுத்திய ராஜன் உள்ளேயும் சந்ததியாரின் அட்டகாசமில்லாத, அமைதியான, ஆழமான சுபாவமும் உமா மகேஸ்வரனை கழகத்தின் முதன்மையாக்கியதில் ஆச்சரியம் இல்லை.

ஆரம்பத்தில் இருந்து காந்தீயத்தினூடாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் எனக் காலற நடந்து தேடிக்கண்டு பிடித்த எத்தனையோ செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து ராஜசுந்தரம், டேவிற் ஜயா அவர்களின் பெரிய பொருளாதார வெளிநாட்டு நிதிகளுடன் கூடிய சமூகஸ்தாபன நகர்வுகளும் கழகத்தின் மத்திய குழுவிலிருந்து அடிமட்டம் வரை பெரியளவில் எமது போராட்டப் பாதைக்கு உரமிட்டது.

சந்ததியாரால் 1980, 1981, 1982 என்று ஒவ்வொரு கட்டமாக காந்தீய வேலைத்திட்டம் பண்ணைகளூடாக பிரதேச ரீதியாக பரவலாக உள்வாங்கப்பட்ட திருமலையில் ஜெயச்சந்திரன், ஜான், சலீம், கேசவன், மட்டக்களப்பு வாசுதேவா, ஈஸ்வரன், யோகன் கண்ணமுத்து, வவுனியா முரளி, ஆதவன், பொன்னுத்துரை, கந்தசாமி, சறோஜினி, பெரிய செந்தில் ஆகியோருமாக பின் மத்திய குழுவரை இவர்களின் பாத்திரம் நகர்ந்தது.

கழக மத்திய குழு உறுப்பினர்கள்:
1. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன்செயலதிபர். யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர். இயக்க உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.

2. வசந்தன் என்ற சந்ததியார்அரசியல் துறைச் செயலாளர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டார்.

3. ராஜன் என்ற ஞானசேகரன்பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். புளொட் உள்முரண்பாட்டில் அதிலிருந்து விலகி ஈஎன்டிஎல்எப் அமைப்பை உருவாக்கியவர். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.

4. வாசுதேவாமட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இவரும் இவருடன் சென்றவர்களும் தந்திரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

5. கண்ணன் என்ற ஜோதீஸ்வரன்படைத்துறைச் செயலராக இருந்தவர். யாழ்ப்பாணம் வடலி அடைப்பைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

6. சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்திபுதியபாதை பத்திரிகையை ஆரம்பித்து நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாகக் கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளி இவர். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

7. காத்தான் என்ற கிருஸ்ணகுமார்யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவர்.

8. ஜக்கடையா என்ற ஆதவன்வவுனியாவைச் சேர்ந்தவர். உட்படுகொலையில் கொல்லப்பட்டவர்.

9. பெரியமுரளிவவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது மத்திய கிழக்கில் வாழ்கிறார்.

10. ஈஸ்வரன்மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஹொலண்ட்க்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

11. அசோக் என்ற யோகன் கண்ணமுத்துஅம்பாறைப் பொறுப்பாளராக இருந்தவர். புளொட் உள்முரண்பாட்டில் ஈஎன்டிஎல்எப் அமைப்புடன் இணைந்து பின்னர் அதிலிருந்தும் வெளியேறியவர். பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த இவர் தொடர்ந்தும் அரசியல், கலை இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

12. பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன்தள இராணுவப் பொறுப்பாளர். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் கூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார். திருகோணமலையைச் சேர்ந்தவர்.

13. காந்தன் என்ற ஜான்பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர். உள்முரண்பாட்டில் புளொட்டை விட்டு வெளியேறி தீப்பொறி குழு ஆகச் செயற்பட்டவர்களில் முக்கியமானவர். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர். மே 18 இயக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கியமானவர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.

14. பாலன் என்ற சலீம்தள நிர்வாகப் பொறுப்பாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர். தீப்பொறிக் குழு உடன் வெளியேறியவர்.

15. கேசவன்தீப்பொறிக் குழுவைச் சேர்ந்தவர். புதியதோர் உலகம் நாவலின் ஆசிரியராக இவரது பெயரே குறிப்பிடப்பட்டு உள்ளது. திருகோணமலையைச் சேர்ந்தவர்.

16. பாபுஜிஅனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் ஈஎன்டிஎல்எப் இல் இணைந்து கொண்டவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார்.

17. செந்தில்அனைத்து முகாம் பின்தள பொறுப்பாளராக இருந்தவர். வவுனியாவைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலை இயக்கத்தினால் கொல்லப்பட்டார்.

18. மாணிக்கம் தாசன்இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தவர். உமா மகேஸ்வரன் கொலை செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது போது இவர் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார்

ஆனால் பின்னர் உமா மகேஸ்வரனின் கொலையை நிறைவேற்றிய ராபினையும் அவரது மனைவியையும் ஹொலண்டில் வைத்துப் படுகொலை செய்ததில் மாணிக்கம்தாசன் சம்பந்தப்பட்டு இருந்தார்

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இறுதியில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

19. குமரன் என்ற பொன்னுத்துரைதளப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்தவர். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார்.

20. சங்கிலி என்ற கந்தசாமிபுலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இயக்கத்தினுள்ளும் வெளியேயும் நடந்த பல படுகொலைகளுக்கு இவரே பொறுப்பாக இருந்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்.

21. சறோஜினிஇவர் வவுனியாவைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார். மத்திய குழுவில் இருந்த ஒரே பெண் உறுப்பினர் இவர்தான்.

22. நிரஞ்சன் அல்லது காக்கா என்ற சிவனேஸ்வரன்யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர். உட்படுகொலை செய்யப்பட்டவர்.

23. சீசர்இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். தொழிலாளர் பாதை அமைப்பைச் சேர்ந்தவர்.

24. சேகர்இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரி. இவர் மத்திய குழு உறுப்பினரல்ல எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அனைத்து மத்திய குழு கூட்டங்களிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். அதனால் அவரது பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.

தமிழீழ விடுதலைக் கழகம்தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆனது:
1983ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வவுனியாவிலுள்ள காந்தீய தலைமை அலுவலகம் இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. டாக்டர் ராஜந்தரமும் டேவிட் ஐயாவும் கைது செய்யப்பட்டு பதட்டமான சூழல் இருந்தது

இந்நிலையிலும் 1983ம் ஆண்டு மேதினம் திருகோணமலையில் சின்ன முற்றவெளியில் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) தலைமையில் தமிழீழ விடுதலை கழகம் என்ற பெயரிலேயே நடைபெற்றது. இதன்போது 3 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கழகக் கொடியின் கீழ் இம் மேதினம் நடைபெற்றது.

இதற்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் கழக உறுப்பினர்கள் வந்திருந்தனர். இதில் மட்டக்களப்பு பொறுப்பாளர் வாசுதேவா தலைமையிலும் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் யோகன் கண்ணமுத்து தலைமையிலுமாக கிழக்கிலிருந்து உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டனர்

யாழ் மாவட்ட பொறுப்பாளர் பொன்னுத்துரை தலைமையில் ஒரு பேரூந்து நிறையவே உறுப்பினர்களும் முல்லைத்தீவு பொறுப்பாளர் சுந்தரம் என்ற நவம் தலைமையில் ஒரு குழுவும் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் ஒரு குழுவுமாக கழக உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்களுமாக பலர் கலந்து கொண்டனர்.

இதில் விசேட பேச்சாளராக வாசுதேவா, யோகன் கண்ணமுத்து இன்னும் சிலரும் உரையாற்றியிருந்தனர். ஜான் மாஸ்ரர் மருத்துவபீட பல்கலைக்கழக நுழைவு கிடைத்த புதிதென்பதால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றும் திருமலை முன்னணி இளைஞர்களான ஜெயகாந்தன், ராதாகிருஸ்ணன் (இவர்கள் தற்சமயம் லண்டனில் வசிப்பவர்கள்.) ஆகியோரும் மத்திய குழு உறுப்பினர் சலீம் உட்பட பல கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தமிழீழ விடுதலைக் கழகம் என்ற பெயரும் 3 நட்சத்திரங்கள் அமைந்த கழக கொடியுடன் நடந்த கடைசி நிகழ்வும் ஆகும். இந்த மே தினக் கூட்டம் இலங்கை அரசின் உன்னிப்பான கண்காணிப்புக்கு உட்பட்டு புகைப்படங்களும் அவர்களால் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லா மாவட்ட காந்தியமும் அரசின் விசாரணைக்குட்பட்டு மூடப்பட்டு கழககாந்தீய உறுப்பினர்கள் ராணுவ கெடுபிடிகளுக்கு உட்பட்டனர்

இதனையடுத்துக் கூடிய மத்திய குழு தங்கள் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அறியப்பட்டதனால் தங்கள் அமைப்புக்கு பெயரையும் கொடியையும் மாற்ற முடிவெடுத்தனர். தமிழீழ விடுதலைக் கழகம், ‘மக்கள் உள்வாங்கி தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆனது. கழகக் கொடியில் இருந்த மூன்று நட்சத்திரங்களில் இருண்டு நட்சத்திரங்கள் நீக்கப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புதிய கொடியைப் பெற்றது.

1983 இனக்கலவரமும் அதன் பின்னரும்:
1983 யூலை வெலிக்கடைப் படுகொலையில் எமது மக்கள் விடுதலைப் பாதையின் அச்சாக சுழன்று திரிந்த டாக்டரின் இழப்பு பேரிழப்பாகியது. அதனைத் தொடர்ந்த 1983 இனக்கலவரம். இழப்புக்களுடனும் ஒரு வெறித்தனமான உத்வேகத்துடனும் எமது விடுதலைப் போராட்டத்தை அசாதாரண வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. இதில் கழகத்தின் வளர்ச்சியானது வீங்கி முட்டி ஊதிப்பெருத்த நிலையில் 1983 பிற்பகுதியில் உள்முரண்பாடுகளுக்கு உட்பட்டது.

இதில் சில தனி நபர்களின் பலம்பலவீனம் தான் வரலாற்றுடன் நகர்ந்தது. உமா மகேஸ்வரன் தனது பாதுகாப்பிற்கென தனதருகில் வைத்திருக்கக் கூடியவர்கள் தன்னைச் சுற்றிய விசுவாசிகளாகவும் தனது சொல்பேச்சுக் கேட்பவர்களாக மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார்

இந்தத் தகுதியின் அடிப்படையில் பதவிகள் நிர்வாகங்கள் தெரிவு செய்யப்பட்டமையும் மூத்த உறுப்பினர்களை ஓரம்கட்டி அதுவும் சந்ததியார், ராஜன் ஆகியோரின் பாத்திரங்களையும் பதவிகளையும் முடக்கி அரசியலின் அரிச்சுவடு தெரியாத வாசுதேவாவை அரசியற் துறைச்செயலராகவும்

எதற்கும் தலையாட்டும், ராணுவம் என்பது என்னவென தெரியாத கண்ணனை படைத்துறை செயலாளராகவும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை உமா தன் கைவசப்படுத்தியும் வைத்திருந்தார். அதற்காக தனிநபர் விசுவாசத்தை மட்டுமே தகுதியாக கொண்டோரை கொண்ட ஒரு புலனாய்விற்கே சம்பந்தம் இல்லாதோரை தனது கைக்குள் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் வரையறுக்கப்பட்ட அரசியலை ஒழுங்குபடுத்தி செய்து வந்த நிலையில் சந்ததியாரின் 1983ற்கு பின்பான நிகழ்வுகள் அவரை நெருக்கடிக்குள் தள்ளியது. கழகத்தின் இந்த அபரீத வளர்ச்சி கட்டுக்கடங்காமல் போனதும் நாட்டை விட்டு அந்நிய தேசத்தில் போராட்டம் திசை திரும்பிய நிலையுமாக பல எதிர்கால கேள்விகளையும் குழப்பத்தையும் இவருக்கும் இவரை சுற்றியிருந்த அல்லது இவரை மையப்படுத்தியவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது

முடிவு தெரியாதமுடிவெடுக்க முடியாத சூழல் இவர்களை இறுகியது. இவரின் சூட்சுமமான பேச்சு, நிதானமான போக்கு இவரை இந்த வேகமான வளர்ச்சிக் கட்டத்தில் காலத்தின் கைதியாக்கியது.

மேலும் இதற்கு பின்வந்த வரலாறு பின்னால் எல்லோருக்கும் தெரியப்பட்டதே. காந்தீயத்தினூடு கழகம் கட்டமைக்கப்பட்ட சம்பவங்களிற்கு முன்னால் காந்தீயத்திற்கான ஒவ்வொரு மாவட்டத்திற்கான செயற்பாடுகளும் அதில் டாக்டர் ராஜசுந்தரம், டேவிட் ஐயாவின் நகர்த்தல்களும் தனி ஒருபதிவிற்கானது.

கழகத்தின் உட்படுகொலைகளில் உயிரிழந்த போராளிகளுக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
நிலா(முன்னாள் கழகப் போராளி)


.தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்தனை இழிவு????*

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான் நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும் துணி என்ணெய் மாவு பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால் இது தமிழர்களின் ‘தேசிய திருவிழா’ போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழாவாக அமைகிறது.



தமிழர் திருவிழா – இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள் இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம் வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா திருவாதிரைத் திருவிழா தைப்பூசத் திருவிழா மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா பங்குனி உத்திரம் சித்திரைப் பிறப்பு வைகாசி விசாகம் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.


தீபாவளி தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீபூஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே. உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.



‘நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா’ என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.


மானமில்லா மக்களே தீபாவளி கொண்டாடுகிறார்கள்

இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது பார்ப்பனர்களின் பண்டிகை தமிழர் திருவிழா அல்ல என பல தமிழ் அறிஞர்களும் தலைவர்களும் சொன்னவற்றின் சில குறிப்புகள் பின்வருமாறு:

மறைமலை அடிகள் சொன்னது:

1. ‘ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி’ – ‘தமிழர் மதம்’ என்ற நூலில்

2. ‘ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.’

இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் விவேகானந்தர் சொன்னது:

1.தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்’

பி.டி.சி சீனிவாசய்யங்கார் சொன்னது:

இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்யூக்கள் இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’

முனைவர் தொ.பரமசிவன் ‘அறியப்படாத தமிழகம்’ நூலில்:

1. தீபாவளி தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும்.

2. தீபாவளியைக் குறிக்கும் வெடி அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.

4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்

5. விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது

பெரியார் சொன்னது:

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை அவனது தலைமைக்கு அடிமை மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

 

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கல்வி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால் எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

தீவாளியா? – பாரதிதாசன் பாடல்:

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?

நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன்என்றவனை அறைகின் றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?

இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்

சேட்டை பன்னுகின்றனர் என்பது பொய்யா?

இவைகளைநாம் எண்ண வேண்டும்.

எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது

படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?

வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.

ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்

தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம்

நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?’

என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்!

உனக்கெது தெரியும் உரைப்பாய்’ என்று

கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை

ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள்.

தீவா வளியும் மானத் துக்குத்

தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!

தமிழரை கொன்ற வடவரின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு. இறப்பை தமிழர்கள் ஒருபோதுமே கொண்டாடுபவர்கள் இல்லை.

எதற்காக தீபாவளியை கொண்டாடுகின்றீர்கள்? என கேட்டால் எம் முன்னோர் கொண்டாடினார்கள் அதனால் கொண்டாடுகின்றோம் என கூறுகிறார்கள்.

பண்டை தமிழர்கள் தீபாவளி கொண்டாடிய வரலாறு இல்லை. சுமார் சில நூறு ஆண்டுகள் மட்டுமே தெள்ளு தமிழுக்கு ஏற்பட்ட தாழ்ச்சியின் விளைவாக கொண்டாடுகிறோம்.


கார்த்திகை விளக்கீடு வேறு. தீபாவளி வேறு.63 நாயன்மார் காலத்திலும் 12 ஆழ்வார் காலத்திலும் கொண்டாடப்படாத தீபாவளி இன்று தமிழர்களால் கொண்டாடப்படுவது ஏன்?

தமிழர்களின் திரு நாள் தை திரு நாள். தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்பதற்கும் அப்பால் தீபாவளி தமிழர்களை இழிவு படுத்தும் ஒரு விழா என்ற உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விழாக்களை கொண்டாடுவதற்கு முன்பு எதற்கு கொண்டாடுகின்றோம் என ஆய்ந்து அறிந்து கொண்டாட வேண்டும்.

அன்புடன்- தமிழவன்

மிழர்களின் அளவைகளில் சில..!!

முகத்தல்அளவைகள் :

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.

ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.

 நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)

ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன் = நான்கு கிராம்.

 கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.

இரண்டரை நாழிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை = ஒரு நாள்.

ஏழரை நாழிகை = ஒரு சாமம்.

ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.

இரண்டு பொழுது = ஒரு நாள்.

பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

இரண்டு பக்கம் = ஒரு மாதம்.

ஆறு மாதம் = ஒரு அயனம்.

இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.



 

தமிழ்நாட்டின் பல இடங்களில் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை செய்துவருகிறது. நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்துகிடந்த வரலாற்றின் எச்சங்கள் மாநிலத்தின் பல இடங்களிலிருந்தும் மேலெழ ஆரம்பித்துள்ளன.


2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. ஆனால், கீழடி அகழாய்வை நடத்திவந்த இந்தியத் தொல்லியல் துறை, மூன்றாம் கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வேறு அகழாய்வுகளை நடத்தவில்லை. நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகளையும் வெளியிடவில்லை.

இதற்குப் பிறகு எழுந்த கோரிக்கைகளால், நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநிலத் தொல்லியல் துறையே நடத்தி முடித்தது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வை நடத்த முடிவுசெய்தபோது, கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் அகழாய்வுகளை நடத்த மாநில தொல்லியல் துறை முடிவெடுத்தது.கடந்த ஆண்டே கீழடி மட்டுமல்லாமல், அதன் அருகில் உள்ள சில ஊர்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டது.

 அதன்படி கீழடி தொகுப்பு (கீழடி, அகரம், கொந்தகை, மணலூர்), ஆதிச்சநல்லூர், கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மார்ச் மாதத்தில் துவங்கிய அகழாய்வு கொரோனா ஊரடங்கு காரணமாக மே 10ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

ஊரடங்கு காலகட்டம் முடிந்த பிறகு, ஜூன் மாத இறுதியில் இருந்து மீண்டும் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக அகழாய்வுப் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதால் தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கீழடியைப் பொறுத்தவரை தொடர்ந்து தொல்லியல் பொருட்கள் கிடைத்துவரும் பகுதியாக இருந்து வருகிறது. 2019 -20ல் நடந்த அகழாய்வில் 25க்கும் மேற்பட்ட தாழிகள் உட்பட பல தொல்லியல் பொருட்களும் கலைப் பொருட்களும் கிடைத்தன.இந்த முறை நடந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஓடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்திருக்கின்றன. இங்குள்ள தரைகள் செங்கல் கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களை இணைக்க களிமண்ணும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அகரம் தளத்தில் நடந்த அகழாய்வில் சில நாட்களுக்கு முன்பாக சுடுமண்ணால் ஆன அடையாளம் தெரியாத ஒரு விலங்கின் உடல் பாகத்தின் உருவ பொம்மை கிடைத்தது. பத்து சென்டிமீட்டர் அலகமும் நான்கு சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த பொம்மை எந்த விலங்கைக் குறிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும் இதே அகரம் பகுதியில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரராயன் காசுகளும் கிடைத்தன.

இந்த ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மட்டும் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூரில் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு நடத்திய புதைமேடு சுமார் 114 ஏக்கர் பரப்பளவுடையது. அந்தப் பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வுகள் நடத்த அனுமதியில்லை. ஆகவே அதற்கு அருகில் உள்ள பகுதியில் ஆய்வு நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி பெற்றுள்ளது.

ஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பகுதி. இதற்கு அருகில் மக்கள் வசித்த இடமாக கருதக்கூடிய பகுதியில் ஆய்வை நடத்த தொல்லியல் துறை விரும்பியது. அதில் பெரும்பகுதியில் மத்திய கால ஏரி ஒன்று இருக்கிறது. ஆகவே அருகில் உள்ள கிராமத்தில் அகழாய்வு நடந்துவருகிறது.இவை தவிர, நூல் நூற்க உதவும் தக்கிளி, புகைப்பான், கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பழங்கால மற்றும் இடைக்கால கருவிகள், எலும்புகள், நடுகற்கள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரைப் போலவே இங்கும் மூன்று பண்பாட்டு அடுக்குகள் காணப்படுகிறன. இங்கு கிடைத்த ஈமத் தாழிகளில் கிடைத்த பொருட்களை ஓஎஸ்எல், டிஎல் டேட்டிங் செய்து பார்க்கும்போது ஒவ்வொரு பண்பாட்டு அடுக்கின் காலமும் தெளிவாகத் தெரியவருமெனத் தொல்லியல் துறை நம்புகிறது.கொற்கை
பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக இருந்ததாகக் கருதப்படும் கொற்கையில் 1968ல் முதல்முதலாக ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை 1961ல் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தத் துறையின் சார்பில் முதல்முதலில் நடந்த அகழாய்வே இங்குதான் நடத்தப்பட்டது. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து, இந்த இடத்தின் காலம் என்பது கி.மு. 785 என கணிக்கப்பட்டிருக்கிறது. இடைச் சங்ககால பாண்டியர்களின் துறைமுக நகரமாக கொற்கை இருந்ததாகக் கருதப்படுகிறது.

இங்கு இப்போது நடத்தப்பட்டுவரும் அகழாய்வில், பல பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த வாரம் துளையிடப்பட்ட குழாய்கள் ஒன்பது அடுக்குகளாகக் கிடைத்திருக்கின்றன. இதற்குள் உள்ள பொருட்களை ஆய்வுசெய்த பிறகு, இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியவரக்கூடும்.

கீரிபாறை, காளிகேசம் வனபகுதி கன்னியாகுமரி...!

கன்னியாகுமரி மிகவும் அழகிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கீரிபாறை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக பார்க்க முடியும். கீரிபாறையை இந்தியாவின் செழிப்பான காடுகள் பார்க்க விரும்பும் சர்வதேச பார்வையாளர்களுக்கான இயற்கை மலையேற்ற இடமாக மாறியுள்ளது.அதை பற்றி பார்ப்போம் ..

கீரிபாறை வன பகுதி :

பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவிகள் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்ததற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

கீரிபாறையில் பலவிதமான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன, அவை உலகில் உள்ள வேறு இயற்கை மலையேற்றங்கள் மற்றும் வாழ்விடங்களில் ஒப்பிடுகையில் இணையற்றவை. கீரிபாறையின் சமவெளிகளில் பெரிய யானைகளை பார்ப்பது மிகவும் எளிது. கூடுதலாக, பல மிருகங்களும் சுலபமாக காணில் படும் மேலும் மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்கள் உள்ளன ...

கீரிபாறை வனத் துறையால் கண்காணிக்கபட்டுவருகிறது இப்பகுதியில் சில சிறிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன - பிரபலமான வட்டப்பாறை நீர்வீழ்ச்சி. கீரிபாறையின் மலைகளில் மேல் உள்ளது இது காட்டு யானைகளுக்கு பிரபலமானது.

தென்னிந்திய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழையற்றில் பூதப்பாண்டி கிராமத்திற்கு அருகே கீரிபாறை ரிசர்வ் வனத்தில் வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த 20 கிமீ பரப்பளவானது வனவிலங்கு சரணாலயமாக உள்ளது.

இந்த காட்டில் காணப்படும் பல்வேறு தாவர வகைகள் இயற்கை கட்சிகளும் வனப்பகுதிகளுக்கும், மலையேற்றங்களுக்கும் இந்த வனம் ஒரு கடவுளின் வரப்பிரசாதமாக உள்ளது. பல சிறிய நீரோடைகள் மற்றும் ஆறுகள் காட்டுப்பகுதிகளில் ஓடுகின்றன. கூடுதலாக, இயற்கை ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த இடம். ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவின் சில பாதுகாக்கப்பட்ட காடுகளில் கீரிபாறையும் ஒன்று.

காடுகளில் வன விலங்குகள் சிறிய மரங்கள் பூக்கும் குன்று, புதர்கள், மதிப்புமிக்க மூலிகைகள், பல்வேறு வகையான மரங்களைக் கொண்டிருக்கின்றன. தேக்கு, ரோஸ்வூட், வேங்கை மற்றும் ஐனி ஆகியவை முக்கியமான மரங்களும் உள்ளன. இந்த இடத்தில் குறைந்தபட்சம் 25 வகையான பாலூட்டிகளால் நிறைந்திருக்கிறது, சுமார் 60 வகையான பறவைகள், 14 வகையான புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பல வகையான மீன்கள், ஊர்வன மற்றும் புலி, யானை, மான், மற்றும் காட்டுப்பன்றி ஆகியவை அடங்கும் பார்ப்பதற்கு அருமையான இந்த பகுதியை கன்னியாகுமரி வந்தால் மிஸ் பண்ணாதிங்கள் நண்பர்களே

 


(EPRLF)பத்மநாபா வரலாறு
பத்மநாபா (ரஞ்சன்)19 நவம்பர் 1951 இல் பிறந்தார்.அவர் வடக்கு இலங்கையில் உள்ள காங்கேசந்துரையைச் சேர்ந்தவர்.

பத்மநாபா 1960 களின் பிற்பகுதியில் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டினார். தரநிலைப்படுத்தலின் பாரபட்சமான கொள்கையின் எதிர்வினையாக 1972 இல் உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் கூட்டமைப்பு / தமிழ் மாணவர் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக அவர் இருந்தார்.1974 தமிழ் மாநாட்டு சம்பவம் பத்மநாபத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
ELO
1974/75 ஆம் ஆண்டில் பத்மநாபாவும் மற்றவர்களும் ஈழம் விடுதலை அமைப்பை (ஈழ விடுதலை இயக்கம்) (ELO) நிறுவினர். மே 10, 1976 அன்று, புலோலியில் உள்ள புலோலி பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வங்கியை ELO அமைப்பு கொள்ளையடித்தது.
பத்மநாபா தனிப்பட்ட முறையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருந்தார்.இந்த கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களில் வரதராஜ பெருமாள் (பின்னர் வட கிழக்கு மாகாண முதலமைச்சர்) வி. பாலகுமாரன் (பின்னர் மாணவர்களின் ஈழம் புரட்சிகர அமைப்பின் தலைவர்) மற்றும் எஸ்.தவராஜா (பின்னர் ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.பி. மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்) வடக்கு மாகாண சபை).கொள்ளைக்குப் பிறகு பத்மநாபா இந்தியா ஓடிவந்தார்.
அதே நேரத்தில் பாதுகாப்பு ஒடுக்குமுறை காரணமாக ELO அமைப்பு சிதைந்தது.
GUES / EROS
கணக்கியல் படிப்பதற்காக பத்மநாபா 1976 இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.இங்கே அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மற்ற தமிழர்களை சந்தித்தார். அவர்கள் ஒன்றாக ஈழம் மாணவர்களின் பொது ஒன்றியம் (GUES) மற்றும் மாணவர்களின் ஈழம் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகியவற்றை உருவாக்கினர். 
லண்டனில் உள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரதிநிதியான ஹம்மாமி உதவியுடன் பத்மநாபா உள்ளிட்ட ஒரு சிறிய குழு லெபனானில் இராணுவப் பயிற்சி பெற உதவினார்.
1978 ஆம் ஆண்டில் அவர் GUES / EROS க்கான ஒரு தளத்தை நிறுவ இந்தியா சென்றார்.பின்னர் அவர் இலங்கைக்குத் திரும்பினார் ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரைத் தேடிக்கொண்டிருந்தனர் எனவே அவர் மாறுவேடத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ்
பத்மநாபா மற்றும் டக்ளஸ் தேவானந்தா, வரதராஜ பெருமாள் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் 1981 இல் ஈரோஸை விட்டு வெளியேறி தங்கள் சொந்த போராளிக்குழுவை உருவாக்கி ஈள மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்) என்று அழைக்கப்படுவார்கள்.புதிய குழுவை நிறுவுவதற்காக பத்மநாபா 1981 ஆம் ஆண்டில் இந்தியாவின் மெட்ராஸில் உள்ள கோடம்பகம் சென்றார்.

1982 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எஃப் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மக்கள் விடுதலை இராணுவத்தை உருவாக்கியது. பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியால் பி.எல்.ஏ இராணுவப் பயிற்சி ஆரம்பம்.அதனைத் தொடர்ந்து ஈழத்திலும் வடக்குக்கு கிழக்கில் தற்கொடைப் பயிற்சி மற்றும் இரானுவப் பயிற்சிகள் தொடர்ந்தன.

1986 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஈபிஆர்எல்எவ் தலைமைக்கு இடையிலான மோதல்கள் ஈபிஆர்எல்எஃப் (ரஞ்சன்) மற்றும் ஈபிஆர்எல்எஃப் (டக்ளஸ்) என இரு பிரிவுகளாகப் பிரிந்தன.

டிசம்பர் 1986 இல், போட்டியாளர்களான தமிழீழ விடுதலை புலிகள் இலங்கையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மீது தாக்குதல் நடத்தியது, பெரும் இழப்பை ஏற்படுத்தியது மற்றும் சாவகச்சேரி நுனாவிலில் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவத் தளபதியான கபூரைக்  கொன்றது.பல ஈபிஆர்எல்எவ் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் ஈபிஆர்எல்எஃப் முகாம்கள் மற்றும் ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

தோல்விக்கு தோழர் டக்லஸ் தேவானந்தா குற்றம் சாட்டப்பட்டார்.
1987 ஆம் ஆண்டில் ஈபிஆர்எல்எவ் (டக்ளஸ்) பிரிவு முறையாக ஈபிஆர்எல்எப்பிலிருந்து பிரிந்தது. இது ஆரம்பத்தில் பரந்தன் ராஜன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் பிரிந்த பிரிவைக் கொண்டு ஈம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை உருவாக்கியது, ஆனால் பின்னர் தன்னை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாக மாற்றியது.

அரசியல் கட்சி
இராணுவ தோல்வியின் பின்னர், ஈபிஆர்எல்எவ் தன்னை அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் (ஐ.பி.கே.எஃப்) தன்னை இணைத்துக் கொண்டது.

ஈபிஆர்எல்எஃப் அரசியலில் முதன் முதலில் நுழைந்தது 1988 மாகாண சபை தேர்தல்களில் குறைபாடுடையது. ஐ.பி.கே.எஃப் உதவியுடன் ஈபிஆர்எல்எவ் வடகிழக்கு மாகாண சபையின் 71 இடங்களில் 41 இடங்களைப் பெற்றது. [4] டிசம்பர் 10, 1988 அன்று வரதராஜா பெருமாள் வடகிழக்கு மாகாண சபையின் முதல் முதல்வரானார்.

ஈபிஆர்எல்எஃப் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஈம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை அமைப்பு மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது. கூட்டணி 188,593 வாக்குகளை (3.40%) வென்றது, பாராளுமன்றத்தில் 225 இடங்களில் 10 இடங்களைப் பிடித்தது. 10 கூட்டணி எம்.பி.க்களில் 7 பேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அக்டோபர் 1987 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எஃப்) இடையே சண்டை வெடித்ததைத் தொடர்ந்து, இந்தியா சார்புடையதாகக் கருதப்பட்ட ஈபிஆர்எல்எவ்க்கு எதிரான புலிகளின் விரோதப் போக்கு அதிகரித்தது.எல்.ரீ.ரீ.ஈ 1998 வடகிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்தது.

போட்டியிடும் எவரும் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்கள்.ஆயினும்கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப் போட்டியிட்டது இந்திய இராணுவமான ஐ.பி.கே.எஃப் ஒத்துழைப்புடன் வடகிழக்கு மாகாண சபையின் 71 இடங்களில் 41 இடங்களைப் பெற்றது. 
தோழர் வரதராஜ பெருமாள் வடகிழக்கு மாகாணத்தின் முதல்வரானார். மார்ச் 1, 1990 அன்று ஐ.பி.கே.எஃப் இலங்கையிலிருந்து விலகத் தயாராகி கொண்டிருந்தபோது தோழர் வரதராஜப் ​​பெருமாள் வட கிழக்கு மாகாண சபையில் ஒரு சுயாதீன ஈழம் என்று அறிவித்து ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்.

ஐ.பி.கே.எஃப் வெளியேறியவுடன் மீண்டும் புலிகளால் ஏற்படும் விளைவுகளுக்கு பயந்து, ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமை இந்தியாவுக்கு தப்பி ஓடியது.மார்ச் 11 1990 அன்று பத்மநாபா திருகோணமலையில் இருந்து புவனேஸ்வரிற்கு ஒரு இந்திய இராணுவ விமானத்தில் பறக்கவிடப்பட்டார்.ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மார்ச் 25, 1990 அன்று வடகிழக்கு மாகாணத்தில் நேரடி ஆட்சியை விதித்தார்

ஜூன் 19, 1990 மாலை, ஈ.டி.ஆர்.எல்.எஃப் மத்திய குழு கோடம்பாக்கத்தில் உள்ள சாக்ரியா காலனியில் ஒரு பிளாட்டில் சந்தித்தது.இரவு 7 மணியளவில் துப்பாக்கி ஏந்தியவர்கள் பிளாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். 

தோழர் பத்மநாபா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.யோகசங்கரி, மாகாண அமைச்சர் பி.கிருபகரன் உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளின் தொகுதிக்கு வெளியே காத்திருந்த ஐந்து ஈபிஆர்எல்எஃப் காவலாளிகளும் கொல்லப்பட்டனர்.இந்த படுகொலை  தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஸ்ரீ" ரெலோ சபாரத்னம் 

28 ஆகஸ்ட் 1952 இல் பிறந்தார்.1972 மற்றும் 1975 க்கு இடையில் அரசாங்கக் காவலில் இருந்தபோது, அவரது சிறைச்சாலை அவரை "உயரமான ஸ்ரீ" என்று அழைத்தார், அவரை காவலில் உள்ள மற்றொரு ஸ்ரீயிலிருந்து வேறுபடுத்தினார்கள். 
வங்கி கொள்ளை
மார்ச் 25, 1981 அன்று வடமராச்சியில் பணம் சேகரித்த பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய மக்கள் வங்கி வேன் நீர்லியில் உள்ள யாழ்ப்பாண  பருத்தித்துறை சாலையில் 8 மில்லியன் பணம் கொள்ளையடுக்கப்பட்டது. என்.தங்கவேலு (மாற்று தங்கதுரை), எஸ்.யோகச்சந்திரன் (மாற்று குட்டிமானி), செல்வதுரை சிவசுப்பிரமணியம் (மாற்றுத் தேவன்), நவரத்னரா (நடராஜா) சிவபதம் (அல்லது சிவபாலன் மாஸ்டர்) மற்றும் வைதிலிங்கம் நடேசதன் ஆகியோருடன் கைது செய்யப்பட்டனர்.
சபாரத்னம் இல்லாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டது.கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நவம்பர் 2, 1982 அன்று தொடங்கியது, 1983 பிப்ரவரி 24 அன்று ஆறு பிரதிவாதிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.
ஜூலை 1983 இல் வெலிடை சிறை படுகொலையின் போது தங்கத்துரை மற்றும் குட்டிமானி கொல்லப்பட்ட பின்னர் ஸ்ரீ சபாரத்னம் டெலோவின் தலைவரானார்.
இறப்பு
ஏப்ரல் 1986 இல், தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) டெலோவை தடைசெய்து அதன் தலைவர் ஸ்ரீ சபரத்தினத்தை கொலை செய்யத் தொடங்கினர்.கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் பிரதான தளத்திலிருந்து நீர்வெலி வழியாக பின்னர் கோபாய் மற்றும் இறுதியாக கொண்டவில் வரை தப்பி ஓடினார்.அவர் கொண்டவிலில் இருப்பதை எல்.ரீ.ரீ.ஈ கண்டுபிடித்தது.
அவர்கள் கிட்டு தலைமையில் அந்த பகுதியை சுற்றி வளைத்து வீடு வீடாக தேடலைத் தொடங்கினர். உரத்த ஹெயிலர்களைப் பயன்படுத்தி உள்ளூர்வாசிகளுக்கு சபாரத்னத்தை பாதுகாப்பவர்களுக்கு மரண தன்டனை என எச்சரித்தனர்.மே 6, 1986 அன்று எல்.ரீ.ரீ.ஈ உரும்பராய் புகையிலைத் தோட்டத்தில் சபாரத்னத்தை கண்டு பிடித்து அவர் தப்பிப்பதைத் தடுக்க கிட்டு அவரை காலில் சுட்டார்.
சபாரத்னம் தனது வாழ்க்கைக்காக கிட்டுவிடம் மன்றாடினார் ஆனால் கிட்டு ஒரு இயந்திர துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரை சுட்டுக் கொன்றார்.சபாரத்னத்தின்  உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு கோண்டவில் பஸ் ஸ்டாண்டில் மக்கள் முன் காட்டப்பட்டது.
தோழர்களே எமக்காய் எம் மக்களுக்காய் போராடிய நீங்கள் என்றும் உயர்வானவர்களாய் மரியாதை செலுத்துவோம்.தமிழரின் தாகம் தமிழீழத்தாகம்.



11உதிரம் படிந்த பாதங்கள் 26

மறக்க மறுக்கும் அந்த இரவு.........!

உஷ் ....... உஷ்....... ஆமி வந்திட்டான்!

ஈழமணியை பாதுகாத்தாரா குணமணி?

2 படைகளின் முற்றுகைக்குள் டேவிற்சன்!

சரணடைந்தாரா? சமாளித்தாரா?

இயக்க கட்டமைப்பு வேலைகள், அன்று ஆரம்ப காலகட்டமாக இருந்தமையால், தோழர்கள் இரண்டு பிரதான பிரிவுகளாக செயற்பட்டார்கள் .மக்கள் மத்தியில் பகிரங்க அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு, முன்னணி அமைப்புகளை கட்டும் தோழர்கள் ஒரு பிரிவாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக தம்மை இயலுமானவரை பகிரங்க படுத்தாமல், முழுமையான ஆயுத போராட்ட இயக்கத்தை கட்டியமைக்க வேண்டிய பணிகளை மேற்கொண்ட தோழர்கள் இன்னொரு பிரிவாகவும் செயற்பட்டனர். ஆரம்ப காலங்கள் என்ற காரணத்தால் இவ்விரு பிரிவினருக்குமிடையேயான தொடர்புகள் தவிர்க்க முடியாததானதாக இருந்தது


தம்மை பகிரங்க படுத்தாமல் அமைப்பு வேலைகள் செய்த தோழர்கள், பொது இடங்களில் டேவிற்சனை சந்திக்கும் சந்தர்ப்பங்களில், கண்டும் காணாதவர்கள் போல் சென்று விடுவார்கள். அவ்வப்போது மூடிய அறைகளுக்குள் ஒன்றாக பழகும் தோழர்கள் அவ்வாறு கண்டும் காணாதது போல் செல்லும் தருணங்கள் அன்று முழுவதும் டேவிற்சனின் மனதை நோகடித்து, விரக்தியில் உற்சாகம் இழக்க செய்துவிடும். ஒன்றாக படித்தவர்கள், உறவினர்கள் தான் (பயம் காரணமாக) இப்படியெண்டால், இவர்களுமா

என டேவிற்சனுக்கு எண்ணத் தோன்றும். அன்றய கால கட்ட, தவிர்க்க முடியாத இந்த யதார்த்தத்தை மெல்ல... மெல்ல….டேவிற்சன் ஜீரணிக்கப் பழகிக்கொண்டார்…..அரச உளவுப்பிரிவினரின் கழுகுப் பார்வையில் இருந்து தப்ப, இந்த யதார்த்தத்துக்கு பழகித்தான் ஆக வேண்டும், என்தை டேவிற்சன் போகப் போகப் புரிந்து கொண்டதுமல்லாமல் தன்னை அந்த யதார்தத்திற்கு பழக்கப் படுத்தியும் கொண்டார்.

டேவிற்சன், தான் தனது வீட்டுக்கு செல்லும் நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தன்னை தேடி வருவது ஓர் எதிர்பாராத, ஆனால் பொருந்திப் போகின்ற சம்பவங்களாக இருக்கின்றதே? என டேவிற்சனின் மனதில் அன்றய காலகட்டத்தில் கேள்வி எழுந்திருந்தது. அதைப் பற்றி டேவிற்சன் ஆழமாக ஆராயவில்லை. அரச உளவுப்படைகளின் தகவல்கள் தான், இந்த எதிர்பாராத சம்பவப் பொருத்தங்கள் என்பதை போகப் போக டேவிற்சன் புரிந்து கொண்டார். டேவிற்சனிடம் உதவி கேட்பவர்களாக வறிய வாலிபர்கள் போல் வேடமிட்டு சிலர் டேவிற்சனின் வீடு தேடி வந்தார்கள் .வெளி மாவட்டங்களில் இருந்து வேலை தேடி வரும் வாலிபர்களை அரச உளவுப்பிரிவினர் இதற்காககப் பயன்படுத்திக் கொண்டார்கள். டேவிற்சன் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த வேளையில் டேவிட்சனின் மாமிமார்களில் ஒருவர் யாழ்ப்பாண போலீஸ் உயரதிகாரி திரு ஆனந்தராஜாவை சந்திக்க, அவருக்கு வேண்டப்பட்ட ஒருவருடன் அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு நின்றிருந்த நபர் ஒருவரை அவர் அடையாளம் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார். ஆம் அந்த நபர் தான் சில வாரங்களுக்கு முன்னர் டேவிட்சனிடம் உதவி கேட்டு அவரின் வீட்டுக்கு வந்தவர். அங்கு வீட்டு வேலைக் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இப்படியான சில நபர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் நையப் புடைக்கப்பட்ட சம்பவங்களும் அன்றய கால கட்டத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அன்றாடம் மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, இரவில் வெவ்வேறு மறைவிடங்களுக்கு நித்திரைக்காகச் செல்வது, ஈழ மாணவர் பொது மன்ற (GUES) உறுப்பினர்களாக மக்கள் பணியாற்றிய தோழர்களின் நாளாந்த வாழ்க்கையாகிவிட்டது

டேவிற்சனும் இவ்வாறு பொது நூலகங்கள், கோவில்கள், ஆதரவாளர் வீடுகளில் பாதுகாப்பான நித்திரைக்குச் செல்வது வழமை.

80களில் நீருக்குள் (மக்கள்) வாழ்ந்த மீன்கள் (போராளிகள்)

1980 களின் ஆரம்பகாலச் சூழ்நிலையில், வில்லங்கத்தை விரும்பி வரவழைக்கின்றோம் என்று தெரிந்தும், போராளிகளுக்கு பாதுகாப்பளிக்க முன்வந்த நூற்றுக் கணக்கான ஆதரவாளர்களையும் இக் கணத்தில் நன்றியோடு நினைவு கூரத்தான் வேண்டும். பகிரங்கமாக தேடப்படுபவர் எனத் தெரிந்து கொண்டு டேவிற்சனுக்கும் தோழர்களுக்கும் உதவியவர்கள் பலர்.

திரு. நேசராஜா: காலம்சென்ற நேசராஜா அவர்கள், பெயரில் மட்டுமல்ல நியத்திலும் இவர் நேசத்திற்கு ராஜா தான். நவாலி ஊரையும், உதை பந்தாட்டத்தையும் இவர் அளவுக்கு அதிகமாக நேசித்தார். நிம்மதியான நித்திரைக்கு டேவிற்சன் கஸ்டப்படுகின்றார் என அறிந்ததும், தனது வீட்டில் ஓர் அறையை டேவிற்சனுக்காக ஒதுக்கிவிட்டார். டேவிற்சன் வீட்டின் பின்புறமாக செல்லன் வளவுக்கூடாக சென்று குச்சொழுங்கைகளுக்கூடாக இவரின் வீட்டிற்க்குச் சென்றுவிடலாம். எந்த நாளும், எந்த நேரத்திலும் இங்கு வந்து படுத்துறாங்கலாம் என டேவிற்சனுக்கு அவர் சொல்லிவிட்டார். அவரும் அவரின் அன்பு மனைவியும் அதிகாலையில் தேநீரும் கொடுத்து டேவிற்சனை, வழியனுப்புவார்கள். டேவிற்சன் இந்தியா சென்ற பின்னரும் டேவிற்சனின் தோழர்களுக்கும் இவரின் குடும்பத்தினர் பாதுகாப்பளித்திருக்கின்றனர். கடமையில் இருந்தபோது விபத்தில் மரணமடைந்த தோழர் வினோத்திற்கும் (நுணாவில்) பாதுகாப்பளித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோழர் திலக் குடும்பத்தினர்: EPDP யில் தற்போது செயல்பட்டு வரும் தோழர் திலக் பற்றி குறிப்பிட்ட பின் தான் அவரின் குடும்பத்தவர்கள் பற்றி கூறமுடியும். தோழர் திலக், இவரை, வாலிப வயதில், மானிப்பாய் சந்தியில் மாலை வேளைகளில், நாளாந்தம் பல்வேறு நவ நாகரீக உடைகளுடன் காணலாம். நண்பர்களுடன் கூடி, வாலிப குறும்புகளுட ன் நாட்களை போக்கிக்கொண்டிருந்த திலக்கை அமைப்பு, பிரச்சாரத்தின் மூலம் உள்வாங்கிவிட்டது. அன்று தொடக்கம் அவர் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த ஓர் மனிதராக மாறி, மக்கள் மத்தியில் வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆரம்பத்தில் தோழர் டேவிற்சனின் பாதுகாப்புக்கு, தானும், தனது அம்மா, அக்கா, தங்கைமார்களும் ((திருமதி நாகமுத்து, திருமதி புவனேஸ்வரி சின்னத்தம்பி, திரு திருமதி சின்னராசா, தோழர் மஞ்சு) கூட்டு குடும்பமாக வாழும் தனது இல்லத்தை உபயோகிக்க அனுமதித்தார். டேவிற்சனுடன் 2, 3 என தோழர்கள் இணைந்து சென்று இரவிலே படுத்துறங்குவார்கள். பொருளாதார ரீதியில் பெரிய வசதி வாய்ப்புக்கள் உள்ள குடும்பமாக இல்லாது இருந்தாலும், அவரின் அம்மா, அக்கா தங்கைமார்களின் உபசரிப்புகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை


அந்த நேரத்தில் குடும்பங்களில் இருந்த, பொருளாதாரப் பிரற்ச்சனைகள் பற்றிய முழுமையான புரிதல்கள் இளம் வயது போராளிகளான, டேவிற்சனுக்கும் ஏனைய தோழர்களுக்கும் இருக்கவில்லை. இப்போது அந்த நாட்களைப் பற்றியும், போராளிகளைப் பராமரிக்க அவர்கள் செய்த செலவுகள் பற்றியும் இப்போது எண்ணிப் பார்க்கின்றபோது வியப்பாக இருக்கிறது


இப்படி வளர்ந்த உறவு பின்னர், திலக் தோழரின் கூட்டுக் குடும்ப வீடு, ஒரு முகாம் போலவே மாறிவிட்ட உறவாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. சுற்றுவட்டாரமும் போராளிகளுக்கு பாதுகாப்பளித்துக்கொண்டிருந்தார்கள். நூற்றுக் கணக்கான தோழர்கள் அங்கு பாதுகாப்பாக படுத்துறங்கிய அந்த நாட்களை எப்படி மறக்க முடியும். இவர்களின் குடும்பத்தாரின் பங்களிப்புகளுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது.

வதனா நடராஜா: தோழர் அசோக் ((மானிப்பாய்) அவர்களின் சகோதரர். கட்சித் தோழர்களுக்கு எந்த நேரமும் அவரின் வீடு திறந்தே இருக்கும். அவரின் விருந்தோம்பலை போராளிகள் என்றும் மறக்க மாட்டார்கள். அவரையும் அவரின் குடும்பத்தினரையம் நன்றியோடு நாம் நினைவு கூரவேண்டும்.

மறைந்த தோழர் செழியன் (சிவகுமாரன் -உரும்பிராய்) புலிகளால் கொல்லப்பட் தோழர் றொபேர்ட் (சுபத்திரன் நுணாவில்-முன்னாள் மாநகரசபை உறுப்பினர்) தோழர் கி பி (கிருஷ்ணபிள்ளை - சிறுப்பிட்டி - ஈபிடிபி தேசிய அமைப்பாளர்) ஆகிய தோழர்களின் குடும்பத்தவர்களும் அமைப்பின் வளர்ச்சிக்கும், போராளிகளுக்கும் செய்த உதவிகளை எப்படி மறக்கமுடியும். நன்றி! நன்றி! நன்றி!

இராசமணி அக்கா: குணமணி அக்காவின் சகோதரர். ஆரம்பகால கட்டத்தில் ஈழ மாணவர் பொது மன்றம் (GUES), பென்னாம் பெரிய பிரச்சாரச் சுவரொட்டிகளை யாழ் குடாநாடு எங்கும் இரவிரவாக ஓட்டுவது வழக்கம். அந்தச் சுவரொட்டிகளை தயாரிப்பதற்கு தனது முழு வீட்டையுமே தந்துதவியவர்.அவரின் பங்களிப்புகளை நன்றியோடு நினைவு கூரவேண்டும்.

கந்தசாமி ஐயா: நுணாவிலில் வீட்டோடு கடை வைத்திருந்தார். நுணாவில் தோழர்கள் இவரின் வீட்டிலும், நாவற்குழியிலும், டேவிற்சனை மறைத்து வைத்து பாதுகாத்தார்கள். கந்தசாமி ஐயாவின் துணிவையும், விருந்தோம்பலையும் எப்படி மறக்க முடியும். கந்தசாமி ஐயாவிற்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

நண்பர் ஜோதிலிங்கம்: விரிவுரையாளர், சட்டத்தரணியாக பணியாற்றி வருபவர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் அமைப்பின் நடவடிக்கைகளில் முன்னணியில் நின்று பங்களித்தவர். நண்பரும், தனது குப்பிளான் வீட்டில் டேவிட்சனுக்கு பாதுகாப்பளித்தார். நண்பர் ஜோதிலிங்கம் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

சின்னராசா அண்ணை: எல்லா தோழர்களுடனும் பாசமாக இருக்கும் சின்னராசா அண்ணர், ஆரம்பகால அமைப்பின் தாக்குதல் நடவடிக்கைகளின் தயாரிப்பு வேலைகளுக்கு இவரின் வீட்டை தாராள மனதுடன் தந்தும் உதவினார். தோழர்களின் கடின உழைப்பைப் பார்த்து, அவர்களை உற்சாகமூட்டுவதுடன், தனது வீட்டில் சுவையாக சமைத்து தோழர்களுக்கு விருந்தோம்புவார். பொருளாதார ரீதியில் வசதியானவர் இல்லையென்றாலும், போராளிகளை பராமரிக்கவேண்டும் என்னும் அவரின் உணர்வை பாராட்டியே ஆக வேண்டும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

நவாலியூர் தோழர் மில்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர், சுன்னாகம், கல்லாக் கட்டுவான் ஊரைச் சேர்ந்த சின்னத்துரை அண்ணை குடும்பத்தினர் (தோழர் பவானின் குடும்பத்தினர்) வட்டுக்கோட்டை தோழர் ராஜு குடும்பத்தினர், மானிப்பாய் கண்ணன் (புவனேஸ்வரன்) குடும்பத்தினர் அனைவரும் எமது அமைப்பின் ஆரம்ப கால செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து பங்களித்தார்கள். இவர்களின் விருந்தோம்பல்களை எப்படி மறக்க முடியும்? குடும்பத்தினர் அனைவர்க்கும் எமது நன்றிகள்! தோழர் மில்ஸ், சின்னத்துரை அண்ணை இருவரும் புலிகள் பிரேமதாசா தேன் நிலவுக் காலத்தில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்!

திரு. சண்முகநாதன் (மானிப்பாய்): அங்கிள் என போராளிகளால் அன்பாக அழைக்கப்படுபவர். தோழர்களை என்றும் அன்போடு உபசரித்து ஆலோசனைகளுடன் ஆதரவும் நல்குபவர். அங்கிளுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

மானிப்பாய் ஸ்ரீ அண்ணா: ஆரம்ப காலத்தில் அவரும் அவரின் குடும்பத்தினர்கள் அனைவரும் அமைப்புக்கு சகலவிதமான உதவிகளும் நல்கியவர்கள் என்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றோம். இவரின் தீவிரமான ஆதரவை பொறுக்கமுடியாத புலிகள், இந்திய இராணுவ பிரசன்ன கால கட்டத்தில் இவரை இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இவரின் மகள் திருமதி சுஜி சர்மா (EPDP), தற்போது மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினராக மக்கள் பணியாற்றிவருகின்றார்.

தோழர் மித்திரன் குடும்பத்தினர்: மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், ஆரம்ப காலத்தில் அமைப்பின் வளர்ச்சிக்கு உதவிகள் செய்தவர் தோழர் மித்திரன். துவிச்சக்கர வண்டிகளையே மற்றவர்களின் உபயோகத்திற்கு தர முகம் சுளிக்கும் அந்தக் காலத்தில் தனது மோட்டார் சைக்கிளையே அமைப்பின் வளர்ச்சிக்காக தந்துதவியவர். பாதயாத்திரை முன்னேற்பாடுகளுக்காக, அவர் தந்துதவிய மோட்டார் சைக்கிளிலேயே குடாநாடு எங்கும் சுற்றிவரக் கூடியதாகவிருந்தது. சில வருடங்களின் பின்னர் அமைப்புடன் இணைத்து, முழுநேர உறுப்பினராக பங்களித்தவர். தற்போழுது ஈபிடிபி யின் தவிசாளராக செயல்பட்டு வருகின்றார். இவரின் அன்னை காலம் சென்ற லூர்தம்மா மரியம்பிள்ளை (டேவிற்சனின் மாமியார்) அந்த ஆரம்ப கால கட்ட ங்களில் பல போராளிகளுக்கு விருந்தோம்பல் செய்ததுமல்லாமல், தான் நடத்திய சிறிய கடையில் அடைக்கலமும் கொடுத்து பங்களித்தவர். நன்றி! நன்றி! நன்றி!

மொணிக்கா முடியப்பு: டேவிட்சனின் தாயார்: இராணுத்தினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது துணிவோடு வாதிடுபவர். டேவிற்சன் இந்தியா சென்ற பின்னர் பல போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், விருந்தோம்பலும் செய்து பங்களித்தவர்

ஈழவிடுதலைப் போராட்த்தின் முதல் பெண் போராளி தோழர் ஷோபா, புலிகளால் கொல்லப்பட்ட தோழர்கள் பெஞ்சமின், பிரேம், இப்ராஹிம் போன்ற பல போராளிகள் இவரின் வீட்டை ஓர் சிறு முகாம் போல் பாவிக்க இடமளித்ததுடன் பல பங்களிப்புகளையும் ம் செய்தவர். இவரின் சகோதரர்களும் (டேவிர்சனின் தாய் வழி, பெரியம்மா-யாழ் பெரியகோயிலடிசின்னம்மா-கொழும்புத்துறை) டேவிற்சனுக்கு அடைக்கலம் கொடுத்து பங்களிப்பு செய்துள்ளனர். நன்றி! நன்றி! நன்றி!

தோழர் ரவி குடும்பத்தினர்: தோழர் லைப்ரரி ரவி (மானிப்பாய்) பற்றி முன்னைய பதிவில் விரிவாக எழுதப் பட்டுள்ளது. அவரின் குடும்பத்தினரும் அந்த ஆரம்ப நாட்களில் செய்த மறக்க முடியாத பங்களிப்புகளையும் நன்றியோடு பதிவிடவேண்டும்.

பத்மா அன்டி /அரவிந்தன்: சங்கானையில் வசித்து வந்த டேவிற்சனின் வகுப்புத் தோழனும் அவரின் அம்மாவும் ((திருமதி .பத்மா விமலதாசன்-ஆங்கில ஆசிரியர்) டேவிட்சனுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தனர். அதே ஊரில் வசித்து வந்த திரு.நாகேஸ்வரன் குடும்பத்தினரும் டேவிற்சனுக்கு பாதுகாப்பளித்தார்கள். இவர்களுக்கெல்லாம் நன்றிகள்.

திரு.லோகேஸ்வரன்: பெருமாள் கோவிலடியை சேர்ந்தவர். யாழ். பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கணக்காளராக பதவி வகித்தவர். 1981 ம் ஆண்டு "மாணவர் ஒன்றியம்" என்ற அமைப்பின் மூலம் யாழ் திறந்த வெளி அரங்கில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட மாணவர் எழுச்சிக் கூட்டதின் முன் னேற்பாடுகளை கவனிக்க தனது வீட் டைத் தந்து உதவியதுடன் விருந்தோம்பலும் செய்தார். அவருக்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகள்

சிறுப்பிட்டி, மத்தாளோடை, உரும்பிராய், நுணாவில், தீவகத்தில் பல கிராம மக்களுக்கும் பல உதவிகளை அந்த ஆரம்பநாட்களில் நல்கினர், அவர்கள் எல்லோருக்கும் எமது நன்றிகள்

இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய வடமராட்சியிலும் நியூட்டன்,நிவாஷ்,விந்தன்,கபூர்,நாபா,பிரதீப் போன்ற பல தோழர்கள் ...... இணைந்து அமைப்பைக் கட்டியெழுப்ப பங்களித்தார்கள் . இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து அன்று ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகளையும் , கூட்ட்ங்களையும், விருந்தோம்பல் செய்த தோழர்களையும் , குடும்பத்தினரையும் நினைவுறுத்திப் பார்க்கின்றோம்!

விடுதலைப் போராளிகளை கௌரவப் படுத்தும் எம்மில் பலர் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு உணர்வுடன் பங்களித்த ஆதரவாளர்களை கௌரவப்படுத்துவதற்கும், நினைவுறுதிப் பார்ப்பதற்கும் தவறி விடுகின்றோம். விடுதலை இயக்கங்கள் முளை விட்ட அந்த ஆரம்பகாலத்தில் இவர்களின் பங்களிப்புகள் காத்திரமானவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அச்சுறுத்தல்கள் மிகுந்த அந்தக் கால கட்டத்தில் துணிவுடன் பங்களித்தவர்கள் இவர்கள். 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்களையும் நன்றியோடு நினைவுறுதிப் பார்க்கின்றோம். 40 ஆண்டுகளின் பின்னர் இப்பதிவை எழுதுகின்றபோது, சிலரை தவறவிட்டு விடுவோமோ என பயப்பட வேண்டியுள்ளது. அப்படி யாரையாவது இப் பதிவில் பதிவிட தவறிவிட்டோமெனின் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

தனியொரு தோழரால் எழுதப்படும் தொடர் என்பதால், எல்லாப் பிரதேசங்களிலும், ஆரம்ப கால கட்டங்களில் ஆதரவளித்துச் செயல்பட்ட அனைவரையும் இப்பதிவில் முழுமைப்படுத்துவது சாத்தியமானதல்ல என்பதை கருத்தில் கொண்டு, தோழர்களே! நண்பர்களே! உங்களின் நினைவில் நிற்கும், அனைத்து ஆதரவாளர்களையும் உங்கள் கருத்துக்களில் நினைவுபடுத்தி அவர்களையும் கௌரவியுங்கள்.

1985 ம் ஆண்டுகளில் டேவிற்சன் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் நிலைமைகள் மாறியிருந்தன. முகாம்களை விட்டு வெளியேறாதவாறு போராளிகள், இராணுவத்தினரை முடக்கியிருந்தனர். விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ஆங்காங்கே தமக்கென முகாம்களை அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வீடுகளிலும் விடுதலைப் போராளிகளை வலிந்து, வலிந்து அழைத்து மக்கள் விருந்தோம்பினார்கள். சிலர் தமது பெண் பிள்ளைகளுக்கு, விடுதலைப் போராளிகளை திருமணம் முடித்து வைப்பதற்குகூட, இயக்கங்களின் பொறுப்பாளர்களுடன் சம்மந்தமும் பேசினார்கள்.

மக்கள் மத்தியில் வேலை செய்வதில் உள்ள பலம் இது தான். பரந்துபட்ட மக்கள், போராளிகளை பராமரித்ததுமல்லாமல் துணிந்து பாதுகாத்தும் இருக்கின்றார்கள்.

மக்களை நேசிக்கும் போராளிகள் என்றாலும், குடும்ப பந்த, பாசங்களை இலகுவில் தூக்கியெறிந்துவிட முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவது கடிதமானதாக இருக்க முடியாது. டேவிட்சனும் இதற்கு விதிவிலக்கல்ல. அமைப்பு வேலைகளுக்கு மத்தியில் இடையிடையே வீட்டுக்குச் செல்வதும் அம்மாவினதும், உறவினர்களினதும் உணவை உண்ணும் வழக்கத்தையும் டேவிற்சனால் முற்றாக நிறுத்திவிட முடியவில்லை. ஆபத்தை விலைக்கு வாங்கும் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டும், டேவிற்சன் இடையிடையே இந்த தவறை மேற் கொண்டார்.

அழகிய நவாலியின் மாப்பான வளவு

டேவிற்சன் வாழ்ந்து வந்த கிராமத்தின் பெயர் நவாலி. அந்த அழகிய கிராமத்தின் ஓர் மூலையில்" மாப்பானர் வளவு" என்னும் ஓர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பகுதியில் தான் டேவிற்சனின் வீடு அமைந்திருந்தது.

1970களின் ஆரம்ப காலத்தில் அக் கிராமத்திலிருந்து பலர் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். 1979 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் அமூலாக்கப்பட்ட மறு நாள் இன்பம் என்ற இளைஞர் கடத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு, நடு வீதியில் வீசப்பட்டார். பாலேந்திரா இராமலிங்கம் (தோழர் பாலா)) என்ற இளைஞர் காணாமலாக்கப்பட்டார். (காணாமலாக்கப்பட்ட முதல் ஈழப் போராளி) இச் சம்பவங்கள் இக் கிராமத்தில் இரவோடு இரவாக அரங்கேறியிருந்தது. இச் சம்பவங்கள் இக் கிராமத்திலிருந்தும், தமிழ் பிரதேசங்களில் இருந்தும் இளைஞர்கள் விடுதலைப் போராடத்தில் உத்வேகத்துடன் செயல் படுவதற்கு ஓர் காரணமாகவும் அமைந்திருந்தது. ஆரம்பத்தில் போலீஸ் படைகள் தேடுதல்களையும், கைதுகளையும் மேற்கொண்டனர். போராளிகளின் தாக்குதல்களுக்கு போலீஸ் படைகள் ஈடு கொடுக்க முடியாத திருப்புமுனையான நிலை ஏற்பட்ட போது பெருமளவினரான இராணுவத்தினர் இக் கடைமைகளை தமது கைகளில் எடுத்துக்கொண்டனர்.

அக் காலகட்டத்தில் பெருமளவிலான போலீஸ் படைகள், இன்பம், பாலா போன்ற இளைஞர்களை தேடி கிராமத்துக்குள் நுழைவது அடிக்கடி நிகழும் நிகழ்வுகளாயிருந்தது. போராளிகளை நேசித்த கிராம மக்கள், படையினரின் தேடுதல் வேட்டைகளின்போது, போராளிகளுக்கு தகவல் கொடுக்கும் நடைமுறைகளுக்கு, நவாலிக் கிராம மக்கள், தாமாகவே தன்னெழுற்சியாக தம்மை பரீட்சயப் படுத்திக் கொண்டுவிட்டனர். டேவிற்சன் பலமுறை தப்புவதற்கும், இக் கிராம மக்கள் தன்னெழுற்சியாகவே இவ்வாறான உதவிகளை செய்தார்கள்.

இராணுவம் நவாலி பிரதான வீதிக்கு வரும் பொழுதே, கிராம மக்கள், படைகள் வரும் செய்தியை கிடுகு வேலிகளுக்கூடாக கடத்தி, டேவிற்சன் வீட்டுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள். படைகள் குச்சொழுங்கையூடாக டேவிற்சன் வீட்டிற்கு வந்து சேர்வதற்க்குள், டேவிற்சன் தனது வீட்டின் பின்னாலுள்ள செல்லன் வளவு பற்றைக் காணிக்குள்ளால், முள்வேலி பாய்ந்து ஓடி மானிப்பாய்க்கு தப்பித்து சென்றுவிடுவார். இதனால் படையினர் பலமுறை ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். அதனாலேயே "மாப்பானர் வளவு" என்னும் ஓர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் பகுதியில் தான் டேவிற்சனின் வீடு அமைந்திருந்தது என முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

இச்சந்தர்ப்பதில், திரு செல்லன் பற்றியும், செல்லன் வளவு பற்றியும் குறிப்பிட்டேயாகவேண்டும்.

திரு செல்லன்: பார்க்கும் போது கொஞ்சம் பயப்படக்கூடிய தோற்றம் கொண்ட மனிதர். கூரிய பார்வையுடைய கண்கள்….. பழுப்பு நிற நீண்ட தலைமுடி…..சற்று வயதான கட்டுடல் கொண்ட மனிதர்…... மேலாடையின்றி அரிவாளுடனும் , கொடுக்கு கட்டுடனும், அந்த பற்றைக் காட்டு வளவுக்குள் நடமாடும் மனிதர்…..கடின உழைப்பாளி

செல்லன் வளவு: மாமரங்களும், கொய்யா மரங்களும், பயனற்ற செடி கொடிகளும் கொண்ட ஓர் பற்றைக் காடு…….

டேவிற்சன் தனது பள்ளிப் பருவத்தில், மாங்காய், மரத்திலேயே பழுத்த மாம்பழம், கொய்யாக்காய் போன்றவற்றைச் சுவைப்பதற்கு இவ் வளவிற்கு இடைக்கிடை செல்வதுண்டு. சில வேளைகளில் வேலி பாய்ந்து டேவிற்சன் வருவதை பற்றைக்குள் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்துவிட்டு டேவிற்சன் பழங்களை பிடுங்கும் நேரத்தில் “...அடோய்என கத்திக்கொண்டு செல்லன் அரிவாளுடன் கலைப்பார்,

தலை தெறிக்க ஓடி வேலி பாய்ந்து வீட்டுக்குள் ஓடிவிடுவார் டேவிட்சன். கோபத்துடன் வேலி ஓரத்திற்கு வரும் செல்லன், டேவிற்சனின் பெற்றோரிடம் முறைப்பாடு செய்து விடுவார்… .....பின்னர் என்ன நடக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

சிறு வயதில் செல்லன் மீதிருந்த பயம் காரணமாக, படைகளிடமிருந்து தப்பியோடும் போது, செல்லன் வந்துவிடுவாரோ? என்ற பயமும், இடையிடையே டேவிற்சனுக்கு வந்து போகும்.

1982 அக்டோபர் மாதத்தில் விடுதலை செய்யப்பட்ட டேவிற்சன், மீண்டும் வெகுஜன இயக்கத்தை கட்டும் பணிகளில் தொடர்ந்தும் தோழர்களளோடு இணைந்து தீவிரமாக உழைத்தார். கொடிய பயங்கவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதென அமைப்பு முடிவெடுத்தது. 1983 ம் ஆண்டு சித்திரை மாதம் 5ம் 6ம் 7 ம் திகதிகளில் குடாநாடு தழுவிய பாதயாத்திரை ஒன்றை நடத்துவதெனத் தீர்மானிக்கப் பட்டது.

மறக்க முடியாத அந்த ஆபத்தான இரவு.........

சரணடைந்தாரா?? சாணக்யமாக சமாளித்தாரா???

பாதயாத்திரை நெருங்கும் நாளொன்றில் (பங்குனி 1983) பல கிராமங்களுக்கு சென்று முன்னேற்பாடுகளை கவனித்துவிட்டு இரவு நேரம், காலதாமதமாக வந்த டேவிற்சன், குளித்துவிட்டு அம்மாவின் சமையலை சுவைத்த பின்னர் இடையிடையே பாதுகாப்பான நித்திரைக்கு செல்லும் ஆதரவாளர் திரு. நேசராஜா வீட்டுக்கு நித்திரைக்குச் செல்லலாம் எனத் தீர்மானித்திருந்தார். நேரத்தையும், களைப்படைந்திருந்த டேவிற்சனையும் கணக்கிலெடுத்த, அவரின் மாமியும் (மறைந்த திருமதி லூர்த்தம்மா), குடும்பத்தினரும், டேவிற்சனை தமது வீட்டிலேயே அன்றிரவு நித்திரைக்குச் செல்லுமாறு அன்புடன் வலியுறுத்தினர் .அவர்களின் அன்றைய அன்பு கலந்த வலியுறுத்தலை ஏற்று மாமியார் வீட்டின் மூலையில் அமைந்திருந்த அறையொன்றில் நித்திரைக்குச் சென்றார் டேவிற்சன். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நாளாந்தம் இராணுவம் தன்னை கைது செய்வது போன்ற கனவுகள், அடிக்கடி வருவது போன்ற மனரீதியான சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார் டேவிற்சன். அன்றும் கண்களை மூடுவதற்கு முன்னர் எதோ ஒருவிதமான உள்மன உணர்வு, இன்று கட்டாயம் இராணுவம் வரும் என்று டேவிற்சனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.

மாப்பான வளவு மின்விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அந்த வளவில் இருள் சூழ்ந்திருந்தது.

டேவிற்சனும் களைப்பு மிகுதியால் அயர்ந்து தூக்கத்தில் தன் கண்களை மூடும் அந்தக் கணத்தில், திடீரென இருளைக் கிழித்துக்கொண்டு, அந்த அறைக்குள் மோட்டார் வாகன ஒலியுடன் பிரகாசமான ஓர் மின் ஒளி பாய்ச்சப்பட்டதை உணர்ந்த டேவிற்சன், கட்டிலிருந்து துள்ளி எழுந்து, செல்லன் வளவை நோக்கி ஒட்டமெடுத்தார்

இதனால் மாமியாரின் வீடு அல்லோல கல்லோலப் பட்டது. பக்கத்துக் குடிசையில் படுத்திருந்த சித்தப்பாவும் சின்னம்மாவும் (திரு, திருமதி ஆரோக்கியநாதன்) எழுந்து வந்து மாப்பானர் வளவுக்குள் வந்த மோட்டார் வாகனத்தை பற்றிய விபரத்தை அறிய முயற்சித்தனர். கிராமத்து வாடகை வாகனம் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. செல்லன் வளவுக்குள் இருந்த டேவிற்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கை சம்பவத்தின் பின்னர் மீண்டும் உறவினர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டம் போட்டு சித்தப்பாவின் குடிலுக்குள் பாய் போட்டு, டேவிற்சனை நித்திரைக்கு அனுப்பினார்கள். டேவிற்சனும் அயர்ந்து தூங்கிவிட்டார்.

எல்லோரும் மீண்டும் நித்திரைக்குச் சென்றுவிட்டனர். சித்தப்பாவும் சின்னம்மாவும் தமது குழந்தைகளுடன் குடிலின் முன் விறாந்தையில், கட்டிலில் படுத்துறங்கிவிட்டனர். சில மணி நேரங்கள் சென்றிருக்கும்,

டக் கிரீச், டக் கிரீச், டக் கிரீச் டக் கிரீச் ......என்ற சத்தம் முதலில் சிறிதாகவும் பின்னர் அதிகரித்தும் சென்றது ...இந்த இராணுவ பூட்சுகளின் சத்தத்தைக் கேட்டு டேவிற்சனின் சின்னம்மா (குணமணி அக்கா) திடுக்கிட்டு எழுந்து விட்டார் ....டக் கிரீச், டக் கிரீச்இந்த சத்தம் இப்போது பலமடங்காகவும் கேட்டது ....நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் இப்போது டேவிற்சன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அந்தக் காலத்தில் ஆங்காங்கே இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடக்கும் காலமாகையால், ரோந்து செல்லும் போதோ, தேடுதல் வேட்டையின் போதோ இராணுவத்தினர் இவ்வாறு அதிகளவானவர்களாகவே செல்வார்கள். இராணுவத்தினர் முதலில் சிறிதளவினர் வந்து நிலை எடுத்துக் கொண்ட பின்னர், இன்னுமொரு பிரிவினர் அவர்களைத் தொடர்ந்து வருவார்கள், பின்னர் அதிகளவினர் வருவார்கள். ....சிலர் மாமியார் வீட்டையும் சுற்றி வளைத்தனர் ....சில இராணுவத்தினர் மதில்கள் மீது ஏறி நின்று நிலை எடுத்துக்கொண்டனர்.

திடுக்கிட்டு எழுந்த டேவிற்சனின் சின்னம்மா, திரேசம்மா ஆரோக்கியநாதன் (சின்னம்மாவை குணமணி அக்கா என்றே டேவிற்சன் அழைப்பார்) உஷ்…..உஷ் ...என்றவாறு தனது கணவரின் வாயை மூடியபடி, அவர்கள் வந்து விட்ட செய்தியை சொல்லி என்ன செய்யலாம் என இருவரும் ஓர் அவசர ஆலோசனை நடாத்தினர் ....நேரம் தாழ்த்துவது நல்லதல்ல ….. ..

தான் கேட்டுத் தானே அவன் இங்கு வந்து படுத்தவன் …. அவனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என பதபதைத்தார் டேவிற்சனின் சித்தப்பா. குடிலுக்குள் இருந்த அனைவரும், இப்போது காலம் தாழ்த்தாது தாமும் நிலையெடுத்தாக வேண்டும். தவழ்ந்து தவழ்ந்து…. டேவிற்சன் படுத்திருந்த அந்த குடிசைக்குள் இருந்த சிறிய அறைக்குள் வந்த சின்னம்மா

உஷ்....உஷ் ...என்றவாறு டேவிற்சனின் வாயை பொத்தியபடி, இரகசியமாக கதை கொடுத்தார்.

அவங்கள் வந்திட்டாங்கள்பயப்படாதே, உடனடியாக தவழ்ந்து தவழ்ந்து வந்து எமது கட்டிலுக்கடியில் படு"

டேவிற்சனும் காலம் தாழ்த்தாது கட்டளையை நிறைவேற்றினார். சின்னம்மா அப்போது நிறைமாத கர்பிணி பெண்ணாக இருந்தார். அவர்கள் முன்னரே திட்டமிட்டபடி, கட்டிலின் அடிப்பாகம் மறைந்திருக்குமாறு, போர்வையால் போத்துக்கொண்டு மல்லாக்காக படுத்துவிட்டார் டேவிற்சனின் சின்னம்மா. சித்தப்பாவும் குடிலுக்கு வெளியே நிலையெடுத்துவிட்டார்.

டேவிற்சனின் வீட்டில் சோதனைகள் ஆரம்பித்துவிட்டன. வீட்டின் முகடு, குளியலறை, கட்டில்களின் கீழ், புகைக் கூடு ...இவ்வாறு சல்லடை போட்டு தேடுதல் நடத்தினார்கள் படையினர். அடிக்கடி இராணுவம் வந்து போனதால் அவர்களோடு வாதிட்டுப் பழக்கப்பட்டுப் போன, டேவிற்சனின் அம்மா திருமதி. மொணிக்கா முடியப்பு, அவர்களுடன் தர்கித்துக்கொண்டிருந்தார். சகோதரர்களும், தந்தையார் டேவிட் முடியப்புவும், எல்லா வீடுகளிலும் சோதனைகள் நடப்பதை அவதானித்தபடி, தப்ப முடியாது என்ற பயத்தோடு அமைதியாக இருந்தனர்.

மாமி வீட்டு திறந்த வெளி விறாந்தையில் படுத்திருந்த, பூமாமி என டேவிற்சன் அழைக்கும் மறைந்த திருமதி லூர்தம்மா மரியாம்பிள்ளை, பூட்ஸ் சத்தங்கள் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கணத்தில் முன் மதிலின் மேல் இயந்திர துப்பாக்கியுடன் நிலையெடுத்திருந்த இராணுவ வீரனைப் பார்த்ததும் நடு நடுங்கிவிட்டார். படுக்கைக்குப் போகும்போது எப்போதும் தனது தலையணையின் கீழ் வைத்திருக்கும் செப மாலையை எடுத்தவர், எழுந்து நின்று

"பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் ......."

கைகள் கும்பிட்டவாறு, கண்களை மூடியவாறு ஜெபிக்கத் தொடங்கிவிட்டார்.....

மாமியார் வீட்டில், டேவிற்சன் முதலில் படுத்திருந்த அந்தக் கட்டிலின் படுக்கை விரிப்புகள் கலைந்திருப்பதைக் கண்ட படையினர், இங்கு படுத்திருந்த டேவிற்சன் எங்கோ மறைந்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்துடன் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி களைப்படைந்துவிட்டனர்.

மச்சாள்மாரை கேள்வி கேட்டபோது, அது விருந்தினர்கள் வந்தால் பாவிக்கும் அறை எனக் கூறிவிட்டார்கள்.

சித்தப்பா வீட்டுக் குடிலுக்குள் மறைந்திருந்த டேவிற்சன், இரண்டு படைகளின் முற்றுகைக்கு முகம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அடோய் என்ன….. .. என்னஏன் வெளிய வந்தது ...... உள்ள போ….... உள்ள போ….. ...

சித்தப்பாவை அதட்டினான் ஓர் இராணுவ சிப்பாய்…...

இல்லை ஐயா ... வயிற்றிலே பிள்ளை…... அவ நித்திரை கொள்ளுறா ..... குழந்தைகளும் நித்திரை கொள்ளுகின்றார்கள் ஐயா ...கெஞ்சிக் கேக்குறன்…..

மன்றாடும் தொனியில் வேண்டுகோள் விடுத்தார் சித்தப்பா.

நம்ப மறுத்த அந்த இராணுவச் சிப்பாய்.உள்ளே சென்று பார்த்தான், டேவிற்சனின் சின்னம்மா கட்டிலை விட்டு எழும்ப முயற்சிப்பது போல் பாசாங்கு செய்தார்.

படுங்கோ அம்மே, படுங்கோஅம்மே, எழும்ப வேண்டாம்

என்று சொன்ன அந்தச் சிப்பாய் சோதனை செய்தது போல் பாசாங்கு செய்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்

அந்தச் சிப்பாயின் மனது அந்த கட்டிலைப் பார்த்ததும் இளகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

குடிலுக்குள் செல்ல, கூட்டமாக வந்த தனது சக சிப்பாய்களையும் தனது முடிவை ஏற்றுக் கொள்ள வைத்து, அவர்களை குடிலுக்குள் போகவிடாமல் தடுத்து விட்டான். மற்ற இராணுவத்தினர் உள்ளே சென்றுவிடுவார்களோ என்று எண்ணிய அந்தச் சிப்பாய் ஓர் காவலாளி போலவே நீண்ட நேரம் குடிலுக்கு முன் நின்றிருந்தான். எதிர்பார்த்ததை விடவும் எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருந்தது ...ஆனால் பொறுத்துப் பொறுத்துப் பொறுமையிழந்த டேவிற்சன், இந்த எதிரியை விட அந்த எதிரியிடம் (இராணுவத்திடம்) சரணடைவதே மேல் என முடிவு செய்து கட்டிலுக்கடியிலிருந்து வெளியே வரத் தீர்மானித்தார்.

சரணடைந்தாரா?? சாணக்யமாக சமாளித்தாரா???

பாதங்கள் தொடர்ந்து பதியும்.

 வடக்கிருந்து உயிர் துறத்தல்:

தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது. வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

"வடக்கிருத்தல் என்பது அக்கால தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்று," என்று கூறிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், "ஊருக்கு வடக்குப் பகுதியில் வட திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாமல் நோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் என்று இலக்கியங்கள் விவரிப்பதாக" கூறினார்.

முற்காலத் தமிழர்களில், போர்களின்போது முதுகிலே புண்பட்ட வீரர்கள், அதை அவமானமாகக் கருதினர். இதனால், "அந்தப் போர்க்களத்திலேயே வடக்கு திசை நோக்கியபடி உணவேதும் உண்ணாமல் பட்டினியிருந்து தமது உயிரைத் துறந்தனர்."

அக்காலத் தமிழர்கள், "தனக்கு இழுக்கு நேர்ந்தாலோ, மானம் இழந்தாலோ, அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனநிலை ஏற்படும்போது, வடக்கிருந்து உயிர் விட்டனர்," என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ். மேலும், பிரச்னை அல்லது துன்பத்தை எதிர்கொள்ள இயலாமல், வாழும் வழியிருந்தும் மனக்குறைபாடு ஏற்படும் நிலையிலும் உணவு மறுத்து உயிர் துறப்பது பெரும் பண்பாக அக்காலத்தில் பார்க்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார். மேலும் "வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் தமிழரின் மரபாகவே இருந்து வந்துள்ளது."

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும்வெண்ணிப் பறந்தலைஎன்னும் இடத்தில் போர் நடைபெற்றது. அதில் வளவன் செலுத்திய வேல் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே ஊடுருவிச் சென்று புண்ணாகிப்போனது. "அக்காலப் போர் மரபின்படி முதுகில் புண்படுதல் என்பது புறமுதுகிட்டு ஓடுதல் என்னும் வீரக்குறைபாடாகும்," என்கிறார் ரமேஷ்.

"தமிழ் மக்கள் போர்க்களத்தில் மார்பில் புண்பட்டு இறப்பதை கௌரவமாகக் கருதினர். ஆனால் முதுகில் புண்படுதலை அவமானமாகக் கருதினர். எனவே, முதுகில் புண் ஏற்பட்டுவிட்டதை மானக் குறைபாடாக எண்ணிய சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான். இதை புறநானூறு 65, 66ஆம் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன," எனத் தெரிவித்தார்.

அதேபோல் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரிக்கும் புலவர் கபிலருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இந்த நிலையில் மன்னன் பாரி இறந்ததும் அவர் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பின்பு புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்று புறநானூற்று பாடல் தெரிவிப்பதாகவும் கூறினார் அவர்.

அதேபோல் "உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழன் அரசுரிமைக்காக சினம் கொண்டு தன் மகன்கள் மீது கோபம் கொண்டார். அவர்கள் மேல் போர் செய்யவும் முயன்றார். அப்போது புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அறிவில்லாத மகன்களின் மேல் தந்தை போர் செய்வது தவறு என்று எடுத்துக் கூறி அதைத் தடுத்தார். பின்னர் தனது மகன்களின் செயலால் வருத்தப்பட்டு கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் தீர்மானிக்கிறார்.அவ்வாறே அவன் வடக்கு திசையில் அமர்ந்து உண்ணாமல் இறந்து போகிறார்."

மேலும், சோழனுடைய நண்பர் பிசிராந்தையார் என்னும் புலவர் தன் நண்பர் கோப்பெருஞ்சோழன் உயிர் விடுவதைக் கண்டு மனம் வருந்தி அவரும் வடக்கிருந்து உயிர் விட்டதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். கொப்பெருஞ் சோழனுடைய மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மனம் வருந்தி வடக்கிருந்து உயிர்விட்டார் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

சிறுபஞ்சமூலம் என்னும் உரைநூல் இதைக் கீழ் வருமாறு தெரிவிக்கிறது.

''வலி இழந்தார் மூத்தார் வடக்கு இருந்தார் நோயின், நலிபழிந்தார் நாட்டறை போய் நைந்தார்- மெலிவொழிய, இன்னவரால் எண்ணாராய் தந்த ஒரு துற்று, மன்னவராச் செய்யும் மதிப்பு"

இந்தப் பாடல் மூலம் வடக்கிருத்தல் பற்றித் தெளிவாக அறிய முடியும்.

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மூன்று கல் தூண்களில் பெண்களும் வடக்கிருந்து உயிர்துறந்தது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஸ்வஸ்தி ஸ்ரீ பாலுச...' எனத் தொடங்கும் கல்வெட்டில் ஒன்று பாலூர் உடையான் பெருங்காடன் என்பவரின் மகள் பொக்கி என்பவர் உண்ணாநோன்பு நோற்று இறந்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் கிராமத்தில் நைனார் தெருவில் பரமசிவம் வீட்டுத் தோட்டத்தில் வேடன் கோவில் மேட்டில் உள்ள பலகைக் கற்களில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி (கல்வெட்டில் பொறிக்கப்படும் எழுத்தின் ஒரு வகை வடிவ அமைப்பு) கொண்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டு குப்பை பிராமணி என்ற சமணர் 12 நாள் நோன்பு நோற்று மறைந்த பின்னர் அவர் நினைவாக நடப்பட்ட நீசிதிகை பற்றியது.

'ஸ்வஸ்தி ஸ்ரீ ஓம் க்ரீம் ரிம் க்ரீம் குப்பை பிராமணி..' என அந்தக் கல்வெட்டு தொடங்குகிறது. அதேபோல், திருக்கோவிலூர் வட்டம் வசந்த கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் நடப்பட்டுள்ள கல்வெட்டில் எச்சில் நங்கை என்பவர் நோன்பு நோற்று மறைந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கணியாம்பூண்டி கிராமத்தில் வீரபத்திர சாமி கோவிலில் கற்பலகையில் உள்ள கல்வெட்டில் ஆன்றாள் என்பவரின் மகள் நங்கையான பெற்றாள் என்பவர் நோன்பு நோற்று உயர் நீத்துள்ளார் என்பதைத் தெரிவிக்கின்றது. செஞ்சி வட்டம் பறையன் பட்டு கிராமத்தில் சுனை பாறை என்ற மலைப்பகுதி குகையில் சமணப் படுக்கையும் அதன் மேற்பகுதியில் வட்டெழுத்துக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

"நமோத்து பாணாட்டு...." எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டு பாண நாட்டைச் சேர்ந்த வச்சணந்தி என்கின்ற ஆசிரியரின் மாணவர் ஆராராதன் என்பவர் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.

"கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள விஜயமங்கலத்தில் இருக்கும் சந்திரப்பிரப தீர்த்தங்கரர் ஆலயத்தின் முன் மண்டபத்தில் ஒரு தூணில் கீழ்ப்புறமாகக் கிரந்தத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், சாமுண்ட ராஜனின் தங்கை புல்லப்பை என்ற பெயருடைய சமணப் பெண்மணி "நிசீதிகை' செய்து கொண்டதாகக் கூறுகிறது. சாமுண்டராஜன் கங்க அரசர்களிடம் அமைச்சராக இருந்தவர்.

இதில் நோன்பிருந்து உயிர் நீத்த சமணப் பெருமாட்டி புல்லப்பை என்பவரின் குவிந்த கரங்களுடன் தவநிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருவுருவமும் காணப்படுகின்றன," என்று விவரித்தார் பேராசிரியர் ரமேஷ்.

நிசீதிகை - வடக்கிருத்தல் வேறுபாடு:

"நிசீதிகை' என்றால், சமண நெறியில் உண்ணா நோன்பால் உயிர்விடும் நெறி என்பதாகும். இதை "நிஷிதா' என்றும் அழைப்பர். தமிழகத்தில் கொள்கைக்காகவும் மானத்துக்காகவும் நாணப்பட்டு அரசர்களும் புலவர்களும் வடக்கிருத்தல் என்னும் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உயிர் துறந்தனர். சமண நெறியைக் கடைப்பிடிக்கும் துறவியரும் உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பார்கள். இவை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சமணத் துறவியர் உயிர் துறந்த இடத்தில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் "நிசீதிகை' எனப்படும். உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் அனசனம் (வடக்கிருத்தல்) ஆகும்.

சல்லேகனை - இதுவும் உயிர் துறக்க சமண நெறியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வகை நோன்பாகும். "தமிழர்களின் வடக்கிருத்தலுக்கும் சமணர்களின் சல்லேகனைக்கும் இருக்கும் ஒற்றுமைகளாகத் துயர் பொறுக்கும் துணிவையும், யாக்கைப் பற்றின்மையையும் அடிப்படைப் பண்புகளாகக் கூறலாம்," என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், பெருஞ்சேரலாதன், கபிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை ஆகியோர் வடக்கிருந்து உயிர் துறந்தமையைச் சங்க நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது.

அதைத் தொடர்ந்து சல்லேகனை வடக்கிருத்தல் குறித்து திருச்சியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பார்த்திபன் பிபிசி தமிழிடன் விவரித்தார்.

"வடக்கு நோக்கி விரதம் (உண்ணா நோன்பு) இருப்பதை உத்ரக மனம், மகாப் பிரத்தானம் என்று வரலாறு கூறுகிறது. அவமானம், போர்க்களத்தில் தோல்வி, நட்பு கருதி உயிர்நீத்தல், நோக்கம் நிறைவேறாமைக்குப் பொறுப்பேற்றல், கோரிக்கை நிறைவேற, கவனம் உண்டாக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்த உண்ணா நோன்பிருந்து உயிர்விடும் வழக்கம் தமிழக மக்களிடையே இருந்துள்ளது.

சமண மதத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும்.

சல்லேகனை என்னும் சொல் ஆரம்பக் காலத்தில் ஆராதனை, நிசீதி என வழங்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் வரும்`வடக்கிருத்தல்' வழக்கமே சல்லேகனையாக வந்திருக்கக்கூடும்," என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.

ஐங்குறுகாப்பியங்களில் ஒன்று நீலகேசி. அது, நீலகேசி என்னும் பெண், குண்டலகேசி என்னும் பௌத்த பெண்ணிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாய் அமைந்த ஒரு காப்பியம். அதில் முகமலர்ந்து விரும்பியேற்கும் சாவினை `தற்கொலை' என குண்டலகேசி கூறுகிறது. அதை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம் (சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது. இவ்விரதம் இருப்போர் பிறவா நிலையடைவோர் என நீலகேசி கூறுகிறது.

57 நாட்கள் உண்ணாமல் இருந்து உயிர் நீத்த நிசீதிகைக் கல்வெட்டுகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் திருநாதர்குன்று என்னும் மலைக்குன்று உள்ளது. இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், `ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி சிரிகரு நிசீதிகை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சந்திரநந்தி என்னும் சமண ஆசிரியர் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து அங்கு உயிர்நீத்துள்ளார். மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டு.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில், இரண்டு குன்றுகள் காணப்படுகின்றன. அதில் இரண்டாவது குன்றின் உச்சியில் முருகர் கோவில் அமைந்துள்ளது. குன்றின்மேல் உள்ள முருகர் கோவிலைக் கடந்து குன்றின் உச்சியில் ஒரு பழமையான வட்டெழுத்து நிசீதிகை கல்வெட்டு காணப்படுகிறது.

''நமோத்து பாணாட்டு வசணந்தி சாரி...' எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டில் ஆராராதன் என்பவர் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த நீசிதிகை (இடம்) என்று இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல், அல்லது வடக்கிருத்தல், சல்லேகனை தொடர்பான கல்வெட்டுகள் மற்றும் நடு கற்கள் காணப்படுவதாகக் கூறுகிறார் வரலாற்று ஆர்வலர் பார்த்திபன்

 




சரி
யான சூழல் அமைந்தால், ஒரு மரத்துண்டு கல்லாக மாறிவிடும். தமிழகத்திலேயே "கல் மரங்கள்" உள்ளன. சில சமயங்களில் மரம் புதைந்து கரியாகி, அந்தக்கரி அழுத்தம், வெப்பம் காரணமாக பல லட்சம் ஆண்டுகள் கழித்து வைரமாகவும் மாறும்.

படத்தில் உள்ள ஓபெல் கல்மரம், க்வார்ட்ஸ் கல்லாக மாறியுள்ளது. இந்த மரக்கல்லின் வயது, கம்மிதான், 225 மில்லியன் வருடங்கள்...! ஒரு மில்லியன்னா பத்து லட்சம் வருடங்கள், கணக்கு போட்டுக்கோங்க...!


வடுகன் திருமலை நாயக்கனிடம் தளவாயாக இருந்த வடுகப்பார்ப்பான் ராமப்பய்யன் தமிழினப் பகைவன் எனபது தமிழர்கள் அறிந்ததே.இப்போது இந்த ராமப்பய்யன் எனது மூதாதை என்று சுப்ரமணியசாமி டுவிட்டரில் தெரிவித்திருப்பதன் மூலம் இந்த சுப்ரமண்யசாமி தமிழர்களின் பரம்பரைப் பகைவன் எனபது உறுதியாகி விட்டது.

டுவிட்டரில் சுப்ரமணியசாமி வெளியிட்ட தகவல்:

"எனது மூதாதை ராமப்பய்யர் என்பவர் மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் பிரதானியாகவும் தளபதியாகவும் இருந்தார். அவர்தான் ராமநாதபுரத்திலிருந்து மைசூர் வரை பரவியிருந்த இசுலாமிய ஆட்சிகளை அகற்றினார். அவர்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து மைசூர் வரை இந்து சாம்ராஜ்யத்தை மீள் உருவாக்கம் செய்தார்."

தனது முப்பாட்டன் ராமப்பையனைப் பற்றி சுப்ரமணியசாமி சொன்ன மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சுத்தப் பொய். ராமப்பய்யனைப் பற்றி உண்மையான, ஆதாரபூர்வமான, வரலாற்றுத் தகவல்களை கீழே தந்துள்ளேன்.

தகவல் 1

பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு விஜய நகர அரசை வேலூரிலிருந்து அகற்றியவன் இந்த ராமப்பய்யன்.

ராமப்பய்யன் தளபதியாயிருந்த திருமலை நாயக்கனின் முப்பாட்டன் விஸ்வநாத நாயக்கனை கி.பி. 1530 ஆம் ஆண்டு மதுரை மன்னனாக்கி அழகு பார்த்தவன் விஜய நகரத்தை ஆண்ட துளுவ வம்சத்தை சேர்ந்த காப்பு பலீஜாவான கிருஷ்ணதேவராயன். இந்த கிருஷ்ண தேவராயனின் தம்பி மகனான சதாசிவ ராயர் விஜய நகர மன்னனாக இருந்தபோது அஹமது நகர், பீறார், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார் ஆகிய 5 சுல்தான்களும் விஜய நகரின்மீது படை எடுத்தார்கள். 1565 ஜனவரி 23ல் இப்போரில் சதாசிவராயர் தோற்கடிக்கப்பட்டார். விஜய நகரம் முற்றுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தப்பியோடிய சதாசிவ ராயர் வடபெண்ணை நதிக்கரையிலிருந்த பெனுகொன்டாவை தலைநகராக்கி அங்கிருந்து ஆண்டார்.

கி.பி. 1601ல் பெனுகொன்டாவை தலை நகராகக் கொண்டு ஆண்ட விஜய நகர மன்னன் இரண்டாம் வேங்கடவன் மீது பீஜப்பூர் சுல்தான் படையெடுத்து தோற்கடித்தான். பெனுகொன்டாவை விட்டு வெளியேறிய இரண்டாம் வேங்கடவன் வேலூருக்கு வந்து வேலூரை தலை நகராகக் கொண்டு ஆளத் தொடங்கினான். 

அன்று முதல் வேலூர் ராயர்வேலூர் ஆனது. விஜய நகர அரசின் தலை நகராகவும் ஆனது. கி.பி. 1649ல் வேலூரை தலை நகராகக் கொண்டு ஆண்ட விஜய நகர மன்னன் ஸ்ரீரங்கன் மீது மீண்டும் பீஜப்பூர் சுல்தான் படையெடுத்து வந்து அவனை வென்று வெளியேற்றினான். அதோடு விஜய நகர சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. கடைசி விஜய நகர மன்னன் ஸ்ரீரங்கன் நிற்க நிழல் இன்றி அனாதையாக அலைந்து தெரிந்து இறந்து போனான். ஆற்காடு துருக்கியர் வசமாயிற்று. இம்முறைதான் துருக்கியர் தமிழகத்தில் வலுவாக காலூன்றினர்.

அந்த சமயத்தில் மதுரையை ஆண்டவன் திருமலை நாயக்கன். அவனது தளபதி ராமப்பய்யன். கிருஷ்ண தேவராயனிடம் அடப்பக்காரனாய் இருந்த தன் முப்பாட்டன் விஸ்வநாதனை மதுரை மன்னனாக்கிய கிருஷ்ண தேவராயனின் வழித்தோன்றல் ஸ்ரீரங்கனுக்கு ஆபத்து என்றவுடன் திருமலை நாயக்கன் ஓடிப்போய் உதவியிருக்க வேண்டாமா? உதவி செய்யவில்லை என்பதோடு இதில் கொடுமை என்னவென்றால் பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்ட வடுகப் பார்ப்பான் ராமப்பய்யாவின் பேச்சை கேட்டு பீஜப்பூர் சுல்தானை வேலூரின்மீது படையெடுக்க செய்து விஜய நகர பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவனே இந்த திருமலை நாயக்கன்தான்.

இவ்வாறு பீஜப்பூர் சுல்தானிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு திருமலை நாயக்கர் மூலம் விஜய நகர இந்து அரசை முடிவுக்கு கொண்டு வந்த இந்த ராமப்பய்யன்தான் ராமநாதபுரத்திலிருந்து மைசூர் வரை இஸ்லாமிய அரசுகளை அகற்றினான் என சுப்ரமணியசாமி அண்டப்புளுகை ஆகாசப்புளுகை டுவிட்டர் மூலமாக புளுகியுள்ளார்.

தகவல் 2

கோவாவிலிருந்த போர்த்துகீசியரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு திருமலை நாயக்கனை தூண்டி விட்டு ராமநாதபுரம் சேதுபதி மீது படைஎடுக்கச் செய்து சேது சீமையை பலவீனப்படுத்தி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கிறிஸ்துவ மதம் பரவ காரனமாயிருந்தவனும் இந்த ராமப்பய்யனே.

இந்த ராமப்பய்யன் திருமலை நாயக்கனிடம் தளபதியாக யிருந்தபோது ராமநாதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னர் தளவாய் சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கண் சேதுபதி. இந்த சேதுபதிகள் சைவ வைணவ கோயில்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கில் ஐயனார் கோயில்களையும், புதுப்பித்தும் புதிதாக கட்டியும் சைவ, வணைவ ஆகம வழிபாடுகளோடு ஐயனார் வழிபாடும் ராமநாதபுரம் சீமை எங்கும் சிறந்து விளங்கச் செய்தனர். வட நாட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு பாதுகாப்போடு திரும்புவதற்கு ராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சியே காரணமாக இருந்தது. மேலும் தென்னிந்தியாவின் மேற்கு கரையில் கோவாவில் காலூன்றிவிட்ட போர்த்துகீசியர்கள் தமிழக கடற்கரை ஓரங்களில் காலூன்ற விடாமல் சேது நாடுதான் தடுத்து வந்தது.

சுப்ரமணிய சாமியின் மூதாதை ஆன இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் என்ன செய்தான் தெரியுமா? கோவா சென்று அங்குள்ள போர்துகீசியருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, அவர்களிடம் கணிசமான தொகையையும் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு மதுரை திரும்பி மறவர் சீமை வலுவடைந்து விட்டால் அது மதுரை நாயக்கர் அரசுக்கு எதிர்காலத்தில் பேராபத்தாகி விடும் என திருமலை மன்னனுக்கு தூபம் போட்டு ராமநாதபுரம் சேதுபதிமீது திருமலை நாயக்கனை படைஎடுக்கச் செய்தான்.

 

தமிழ்நாட்டிலுள்ள 72 பாளையங்களையும் சேர்ந்த பெரும் படையோடு இந்த ராமப்பய்யன் தலைமையில் சேது நாட்டிற்கு படையெடுத்து சென்றது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மறவர் படை தோற்றது. தளவாய் சேதுபதி சிறை பிடிக்கப்பட்டு மதுரையில் 4 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ராமநாதபுரம் மறவர் குல மக்கள் கிளர்ந்து எழுந்தனர். அவர்களின் எழுசியைக் கண்டு பயந்த திருமலை நாயக்கன் தளவாய் சேதுபதியை மீண்டும் ராமநாதபுரம் மன்னனாக்கினான்.

 

ஆனால் வடுகப் பார்ப்பான் ராமப்பய்யனின் சூழ்ச்சியின் காரணமாக சேதுச் சீமையில் வாரிசுப் போட்டி ஏற்படுத்தப்பட்டு சேது சீமை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அதன் ஆட்சியுரிமை மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு ராமப்பய்யனால் ராமநாதபுரம் மறவர் சீமை திட்டமிட்டு பலவீனப்படுத்தப் பட்டது.

 

அதன் காரணமாக கீழைக் கடல் எங்கும் போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் மேலோங்கி கரையோர மக்கள் கிறித்துவத்தை தழுவினார்கள். இவ்வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் போர்த்துக்கீசியர் ஆதிக்கமும் , கிறித்துவமும் வேரூன்ற காரணமாயிருந்தவன் மறவர் சீமையை பலவீனப் படுத்திய இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன்தான்!

தகவல் 3

ராமப்பய்யன் திருமலை மன்னனுக்கும் துரோகம் செய்தவன்.

இந்த வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் மன்னன் திருமலை நாயக்கனுக்காவது விசுவாசமாக இருந்தானா என்றால் அதுவுமில்லை. மைசூர் உடையாருடன் திருமலை நாயக்கன் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒருமுறை மைசூர் உடையாரிடம் திருமலை நாயக்கனை காட்டிக்கொடுக்க ஒரு பெருந்தொகையை பேரம் பேசிக்கொண்டிருந்தபோது, விருப்பாச்சி பாளையக்காரர் சின்னப்ப நாயக்கரிடம் கையும் களவுமாக பிடிபட்டு, அப்போது மதுரைப்படைக்கு தலைவராயிருந்த கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்னாவினால் அடித்து உதைத்து விரட்டப்பட்டான்.

 

அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து திருமலை நாயக்கனிடம் மீண்டும் போய் ஒட்டிக் கொண்டான். அந்த மடையன் திருமலை நாயக்கனும் இந்த ராமப்பய்யனை மீண்டும் மதுரை பிரதானியாக்கிக் கொண்டான்.

காசுக்காக எதையும் செய்யும் காதகன் தான் இந்த ராமப்பய்யன். அப்படியே அச்சுப் பிசகாமல் அவனைப் போலவே வந்திருக்கிறான் அவன் வழி வந்த இந்த சுப்ரமணிய சாமி.

அன்று வடுகப் பார்ப்பான் ராமப்பய்யன் அரவா வடுகன் திருமலை நாயக்கனோடு சேர்ந்து கொட்டமடித்தது போலவே அவன் வாரிசான இந்த வடுகப் பார்ப்பான் சுப்ரமணிய சாமி ஸ்ரீலங்கா வடுகன் ராஜபக்சேவுடன் சேர்ந்து கொட்டமடித்தான். புதிய அதிபர் சிறிசேனாவுடனும் சேர்ந்து இனி கொட்டமடிப்பான் இந்த சுப்ரமணிய சாமி. ஏனென்றால் சிறிசேனாவும் இன்னொரு ஸ்ரீலங்கா வடுகந்தானே?

துரோக தோலுரிப்பு இனியும் தொடரும்

(நன்றி : வரலாற்று அறிஞர்கள் எஸ்.எம் .கமால், சு. வெங்கடேசன், யுவபாரதி மற்றும் பலர்.

 

 


இலங்கைத் தமிழர்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் எப்படி வந்தது?

பல இலங்கைத் தமிழர்கள் ஆங்கிலம் அல்லது ஐரோப்பிய பெயர்களைக் கொண்டுள்ளனர், மேலும் பெரும்பாலும் பர்கர்கள் அல்லது யூரேசியர்களுடன் குழப்பமடைந்துள்ளனர். இது எவ்வாறு உருவானது என்பது நவீன இலங்கையின் பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவின் மீது பிரிட்டிஷ் படையெடுப்பு மற்றும் இதுவரை டச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தாழ்நிலங்களைக் கைப்பற்றியதில் இருந்து கதை தொடங்குகிறது. 

முந்தைய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலல்லாமல், பிரித்தானியர்கள் இந்தியா தொடர்பான சிலோனின் மூலோபாய நிலைப்பாட்டில் அதிக அக்கறை கொண்டிருந்தனர், எனவே தீவின் மீது அவர்களின் முடிவெடுப்பதில் விருப்பமும் வரவு செலவுக் கட்டுப்பாடுகளும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. 


 1796 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை ஆக்கிரமித்த பிறகு, முன்னாள் காலனித்துவ சக்தியால் பணியமர்த்தப்பட்ட ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்களான டச்சு பர்கர்களை நிர்வாகத்தில் பதவிகளில் அமர்த்தினார்கள், அவர்களுக்கும் பூர்வீக மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்தனர். 

வரலாற்றாசிரியர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி கொல்வின் ஆர் டி சில்வா, பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சி இலங்கையின் ஆரம்ப காலகட்டம் (பக்205-208) பற்றிய தனது நினைவுச்சின்ன ஆய்வில், ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி எந்திரங்களை, பெரும்பாலும் தென்னிந்திய பூர்வீகக் குடிமக்களைக் கொண்டு வந்தனர் என்று குறிப்பிட்டார். முட்லியார் மற்றும் ஆராச்சி வகுப்புகளின் சொந்த "தலைவர்களை" மாற்றவும். இது 1797 இல் ஒரு கிளர்ச்சிக்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து பிரித்தானியர்கள் சமூகத்தின் உயரமான இடங்களில் பர்கர்களுக்கு துணையாக சலுகை பெற்ற சிறுபான்மையினரான "பூர்வீக மக்களை" உருவாக்கினர். 

இந்த சலுகை பெற்ற உயரடுக்கு சமூகத்தின் மிகவும் படித்த உறுப்பினர்களிடமிருந்து வந்தது, அவர்களில் விகிதாசார எண்ணிக்கையில் தமிழர்கள், வரலாற்றின் ஒரு விசித்திரமான சூழ்நிலையின் காரணமாக. அமெரிக்க மிஷனரிகள் டி சில்வாவின் சிலோன் பிரித்தானிய ஆக்கிரமிப்பின் படி, வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக தீவின் கல்விக்கான செலவீனங்களை பிரித்தானிய அரசாங்கம் குறைத்தபோது, ​​கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கிறிஸ்தவ மிஷனரிகளையே பெரிதும் நம்பியிருந்தது. இந்த முயற்சியின் கணிசமான பகுதியானது, 

அமெரிக்க ஆணையாளர் சபையின் சுவிசேஷ முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கையின் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கே யாழ்ப்பாணத்தில், 1813 இல், ரெவ. சாமுவேல் நியூவெல் அவர்களால் நிறுவப்பட்ட அமெரிக்கன் சிலோன் மிஷன் (ACM) மூலம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பணிகளுக்காக. 1788 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கர்கள் தீவுக்கு மசாலா வியாபாரிகள் மற்றும் திமிங்கல வியாபாரிகளாக வருகை தந்தாலும், பிரான்சுடன் நடந்து வரும் போரைக் காரணம் காட்டி, ஆங்கிலேயர்கள் அமெரிக்கர்களை வேறு இடங்களில் மதமாற்றம் செய்ய அனுமதிக்க மறுத்தனர் - இது 1809-1814 போரை விட நீண்ட காலம் நீடித்தது. 

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட நெப்போலியன் போர்களின் இறுதிக் கட்டம். விக்கிபீடியா வழியாக அமெரிக்க சிலோன் மிஷன் படத்தை நிறுவிய ரெவ் சாமுவேல் நியூவெல் 1816 ஆம் ஆண்டில், தமிழ் ஆதிக்கம் நிறைந்த வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள ‘தில்லிப்பள்ளி’யில் (தெல்லிப்பள்ளை நகரம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்), இன்றைய யூனியன் கல்லூரியில் ஒரு பள்ளியை ACM நிறுவினார். 

1823 ஆம் ஆண்டில், இலங்கையின் முதல் நவீன பல்கலைக்கழக அளவிலான கல்வி நிறுவனமான மட்டக்கோட்டை செமினரியை (இது யாழ்ப்பாணக் கல்லூரியாக உருவானது) வடக்கிலும் வட்டுக்கோட்டையில் திறந்து வைத்தார். அடுத்த ஆண்டு, பிரபல ஏசிஎம் மிஷனரி ஹாரியட் வின்ஸ்லோ (பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் ஃபோஸ்டர் டல்லெஸ் மற்றும் சிஐஏ தலைவர் ஆலன் வெல்ஷ் டல்லஸ் ஆகியோரின் மூதாதையர்) உடுவில் பெண்கள் கல்லூரி, ஆசியாவின் முதல் பெண்கள் உறைவிடப் பள்ளியான வடக்கில், தமிழ் ஆதிக்கம் செலுத்தினார். 

 1848 ஆம் ஆண்டில், அமெரிக்க மருத்துவரும் மிஷனரியுமான டாக்டர் சாமுவேல் ஃபிஸ்கே கிரீன் சிலோனில், மானிப்பாய்வில் முதல் நவீன மருத்துவப் பள்ளி மற்றும் போதனா மருத்துவமனையை (தெற்காசியாவின் இரண்டாவது நவீன போதனா மருத்துவமனை, பின்னர் பசுமை நினைவு மருத்துவமனை என்று அறியப்பட்டது) - மீண்டும், தீவின் வடக்கு பகுதி. ACM 1820 இல் வடக்கில் முதல் அச்சகத்தை நிறுவியது மற்றும் 1841 இல் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாள், மார்னிங் ஸ்டார், அங்கும் தொடங்கியது.





ஈழம் -சிவபூமி

சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40  இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். 

அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது
பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் காணக் கிடைத்தது. பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப்  பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன்.


இக்கால கட்டத்தில் 130 வருடங்களுக்கு முன்பு எச்.சி.பி.பெல் எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதியிருந்த ஆய்வுக் குறிப்புகளைத் தேடி இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்திற்கு சென்று அவை பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்தேன். அதில் அனுராதபுரத்தின் வடக்கில் இருந்த ஆறு கோயில்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அவரது குறிப்பின் படி இந்த ஆறு கோயில்களும் ஒரே இடத்தில் உள்ளன. இவற்றை பெல் அவர்கள் தமிழர் இடிபாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மூன்றாவது தடவையாக அனுராதபுரத்திற்கு சென்றேன். அனுராதபுரம் பெளத்த யாத்திரீகர்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும் ஓர் சுற்றுலாத்தலம். அன்றும் அப்படித்தான். கூட்டம் களை கட்டியது. இந்தத்தடவை பெல் அவர்கள் குறிப்பிட்டிருந்த கோயில்களைத் தேடி அபயகிரி விகாரையின் வடக்குப் பக்கம் உள்ள பங்குளிய, பெருமியன் குளம், அசோகாராம, விஜேராம ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் பெல் குறிப்பிட்ட கோயில்களின் சுவடுகளைக் காண முடியவில்லை.
அப்போதுதான் இவ்விடங்களுக்கு நடுவில் இருந்த ஓர் காட்டுப்பகுதி என் கவனத்தை ஈர்த்தது. 

அக்காட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது.
அப்பகுதியில் தற்செயலாக சந்தித்த இரு சிங்கள தம்பிமாரின் உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தேன். சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்லாத இடம். பட்டப் பகலில் கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடம். பறவைகளும், காட்டு வண்டுகளும் கத்தும் ஓசை மட்டுமே காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சமே படாமல் சற்று இருட்டாக அக்காட்டுப்பகுதி காணப்பட்டது.
காட்டுக்குள் சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தடுக்கி விழப் பார்த்தேன். என் காலில் தடுக்கியது என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அது  சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஓர்  நாகக்கல். முக்கால்வாசி மண்ணுள் புதையுண்டு அக்கல் காணப்பட்டது. 

ஆர்வம் மேலிட அப்பகுதியில் இருந்த பற்றைகளையும், காய்ந்த சருகுகளையும் விலக்கிப் பார்த்த போது ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தேன். அவ்விடத்திலே காட்டுப் பற்றைகளுள் மறைந்தும், மண்ணுள் புதையுண்டும் ஏராளமான கோயில்களின் இடிபாடுகளும், பரந்த அளவில் நூற்றுக்காணக்கான கற்தூண்களின் துண்டங்களும், செங்கல் அத்திவாரங்களும், கட்டிடங்களின் சிதைவுகளும், ஓர் தீர்த்தக் கேணியின் இடிபாடுகளும், தீர்த்தக் கேணியின்   படிக்கட்டுகளும் காணப்பட்டன.  அதுதான் எச்.சி.பி.பெல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கோயில்களின் வளாகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
என்னோடு வந்த தம்பிமார் இருவரும் இதுதான் "தமிழர்கள் அழித்த பெளத்த விகாரைகளின் சிதைவுகள்" எனக் கூறினார்கள்  அந்த சிறுவர்களுக்கு இப்படித்தான் உண்மைக்குப் புறம்பாக ஓர் பொய்யைக் கூறி வைத்துள்ளார்கள் என்பது புரிந்தது. சுமார் 400 மீற்றர் நீள, அகலம் கொண்ட இக்காட்டுக்குள் எல்லா இடத்தையும் சுற்றி வந்தேன். ஒரு மணி நேரத்தின் பின் வெளியே வந்தோம்.
இது போன்று பாதையின் அடுத்த பக்கத்தில் உள்ள காட்டிலும், விஜேராம விகாரைக்கு செல்லும் வீதியில் உள்ள காட்டிலும் அழிக்கப்பட்ட விகாரைகளின் சிதைவுகள் இருப்பதாகக் அவர்கள் கூறினர். 

சிங்களத் தம்பிமார்களின் உதவியோடு பாதையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள காட்டிற்கும் சென்று பார்த்தேன். அங்கும் கோயில்களின் சிதைவுகளைக் கண்டேன். பின்பு தம்பிமார் இருவரையும் அனுப்பிவிட்டு விஜேராம காட்டுப் பகுதிக்குச் சென்றேன். அங்கும் சிதைவுகள் பெருமளவில் காணப்பட்டன.1000 வருடங்களுக்கு முன் ஒரே கோயில் வளாகமாக இருந்த இப்பிரதேசம் இப்போது பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று துண்டுகளாகப் பிரிக்கப் பட்டு விட்டது.
சுமார் 700 மீற்றர் அகலமும், 1500 மீற்றர் நீளமும் கொண்ட அந்தக் காட்டுப்பகுதி முழுவதும் கோயில்களின் சிதைவுகள் பரந்து காணப்பட்டன. 

மொத்தமாக இக்காட்டுப் பகுதியில் சுமார் 20 கட்டிடங்களின் இடிபாடுகள் காணப்பட்டன. குறைந்தது ஆறு கோயில்கள் இவ்விடத்தில் இருந்தன. வரலாற்று ஆய்வாளர் எச்.சி.பி.பெல் அவர்களின் ஆய்வுக் குறிப்புகளில் இவற்றை “Tamil Ruins” (தமிழர் இடிபாடுகள்) எனக் குறிப்பிட்டுள்ளார். 1893 ஆம் ஆண்டு பெல் அவர்கள் இவ்விடத்தில் இருந்து இரண்டு சிவலிங்கங்கள், மூன்று அம்மன் சிலைகள், மூன்று சூரிய பகவான் சிலைகள் உட்பட பல தொல்பொருள் சின்னங்களைக் கண்டெடுத்தார். 

அக்குறிப்புகளில் பெல் குறிப்பிட்டுள்ள அத்தனை இடங்களும் இங்கே துல்லியமாகக் காணப்பட்டமை ஆச்சரியத்தையும், பெருமகிழ்ச்சியையும் உண்டாக்கியது.
1000 வருடங்களுக்கு முன்பு அனுராதபுரத்தில் ஓர் சைவ சாம்ராஜ்யம் செழிப்புடன் விளங்கிய இடம் இன்று மனிதர்கள் உற்புகக்கூட முடியாத அளவிற்கு அடர்ந்த காடு மண்டிப்போய் கிடக்கிறது. மந்திர முழக்கமும், மணி ஓசையும் இடை விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த ஓர் இடம் இன்று மயான அமைதியுடன் உறங்கிக் கொண்டிருந்தது. இந்துக் கோயில்கள் காணப்படும் இக்காட்டுப் பகுதியைச் சுற்றி இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் “பெருமியன் குளம் ஒதுக்கப்பட்ட பிரதேசம்” என பெயர் பலகை போடப் பட்டுள்ளது.


பண்டைய அனுராதபுர நகரில் உள்ள பெளத்த வழிபாட்டிடங்கள் அனைத்தும் கலாசார முக்கோணத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு பெளத்த மக்கள் வழிபடும் வகையில் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால் சைவ மக்களின் மூதாதையர்களால் வழிபடப்பட்ட இந்துக் கோயில்கள் எதுவும் புனரமைக்கப்படாமல் தேடுவாரற்று காடுகளுக்குள் மறைந்து போய்க் கிடக்கின்றன. இதன் மூலம் புராதன அனுராதபுர இராச்சியத்தில் சைவசமயம் இருக்கவில்லை எனும் தோற்றப்பாட்டை எதிர்கால சந்ததியினர் நோக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் இங்கிருந்து எடுக்கப்பட்ட அழகிய இந்து தெய்வச்சிலைகள் இலங்கையின் நூதன சாலைகளையும், தொல்பொருள் காட்சிச் சாலைகளையும் அழகு படுத்திக் கொண்டு, உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்படிக்கு
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை

தை-பொங்கல் தமிழா் திருநாள்.
தமிழர் எழுச்சி - நாள்!
தைப்பொங்கலுக்கென சில சமய சார்பு, கடவுள் சார்பு கதைகள் உள்ளன.
சில வரலாற்றுக் கதைகளும் உள்ளன.
ஆனால், தைப்பொங்கலானது, உன்மையில் மனித உளவியல் சார்ந்த ஒரு திருநாள் ஆகும்.
இங்கு பொங்கல் என்பது வெறும் "பொங்கல்" அல்லது "புக்கை" எனப்படும் உணவைக் குறிப்பதல்ல.
வருடம் முழுவதும் உழைத்தும், சுமந்தும், களைத்தும் போன மனிதா்கள் தம் வாழக்கையை ”மீண்டும் தொடங்கு மிடுக்கு” போல ஒரு எழுச்சியுடன், ஒரு பாய்ச்சலுடன், ஒரு புத்துணா்ச்சியுடன் தொடங்கும் வகையில்...
வானவியல், உளவியல் மற்றும் சமூகவியல் சாத்திரங்களுக்கமைய வடிவமைக்கப்பட்டு...
அந்த வகையில் பெயரும் இடப்பட்ட ஒரு திருநாள் அல்லது சடங்கே,
தை - பொங்கல்!
இந்த தை – பொங்கல் அல்லது தை-எழுச்சி நாளானது 4 நாட்களைக் கொண்டது அல்லது 4 சடங்குகளை உள்ளடக்கியது அல்லது 4 கட்ட ஆற்றுப்படுத்தல்களைக் கொண்டது.
நாள் 1 - போகி (தை 1 க்கு முதல்நாள்)
"போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு" என பழையதை எல்லாம் மறக்க வைத்து வரும் வருடத்தை புதிதாக, ப்ஃரெஷாக ஆரம்பிப்பதற்கு மனதைத் தயார்ப்படுத்தும் நாள்.
நாள் 2 – பொங்கல்
வீட்டின் முற்றத்தில் பானை வைத்து, குடும்ப அங்கத்தவா் எல்லோரும் சோ்ந்து நெருப்பு மூட்டி, ஊதி, தீச் சுவாலை பற்றியெரிய வைத்து…
அந்தப் பானையிலிருந்து பால் பொங்கி எழும் அந்தக் கணம்!
குடும்பம் முழுவதுக்கும் கூட்டாக புத்தெழுச்சியும், நம்பிக்கையும் பொங்கி எழும்…
அந்தப் பொழுது… அதுதான் பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
நாள் 3 – மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல்
எல்லாரும் நினைக்கிற மாதிரி இது மாடு வைத்திருக்கிறவா்கள் கொண்டாடுகிற நாள் அல்ல.
பட்டி என்றால் ”இனவிருத்தி” (Reproduction)
இது இனவிருத்தியைக் கொண்டாடுகிற அல்லது இன விருத்தியை ஊக்கிவிக்கிற சடங்கு!
ஆதியில் மனிதா்கள் இரண்டு விடயங்களைக் கொண்டாடினா். ஒன்று தமது உணவு. மற்றது இன விருத்தி.
அந்த வகையில் நாள் 2 உணவுக் கொணடாட்டம்.
நாள் 3 இனவிருத்திக் கொண்டாட்டம் எனவும் கொள்ள முடியும்.
நாள் 4 – காணும் பொங்கல்
இது குடும்பத் தளத்தில் இருந்து வெளியே வந்து சமூக வெள்ளத்தில் கலக்கும் நாள்.
பரஸ்பரம் வீடுகளுக்குச் செல்லுதல், ஒன்றாக விளையாடுதல், சாகசங்கள் செய்தல்…
சமூகமாக ஒன்று சோ்தலை ஊக்கிவிக்கும் சடங்கு இது.
தமிழா்களாகிய நாம் தமிழா்கள் என்ற உணா்வில் இந்த நான்கு நாட்களையும் உள்ளடக்கிய,
தை – பொங்கலை (தை – எழுச்சியை)
முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வரும் பட்சத்தில்….
நாம்,தனியாட்களாகவும்...சமூகமாகவும்...ஒரு இனமாகவும்...
ஆளுமை மிக்கவா்களாகவும், பலம் கொண்டவா்களாகவும், பண்பாடு மிக்கவா்களாகவும் மிளிர்வோம்… எழுவோம் என்பது உறுதி.
ஆகவே....கொண்டாடுவோம்... உரக்கக் கொண்டாடுவோம், சத்தமிட்டே கொண்டாடுவோம், முழு மூச்சுடன் கொண்டாடுவோம், மூச்சு உள்ளவரை கொண்டாடுவோம்!

 உலகம் முழுவதும் பரந்து வாழும் 8 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ளது பொங்கல் திருநாள். மார்கழி மாதத்தின் இறுதிநாளில் போகிப் பண்டிகையுடன் தொடங்கும் பொங்கல் திருவிழா அடுத்தடுத்த நாட்களில் பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தமிழர் இல்லங்களில் களைகட்டும்.

இந்தியா, இலங்கை மட்டுமின்றி புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களும் தங்களது பண்பாட்டு விழுமியங்களை மீண்டும் ஒருமுறை இறுகப்பற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது பொங்கல் திருவிழா. ஜாதி, மதம் கடந்து கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை எவ்வளவு தொன்மையானது?

பொங்கல் பண்டிகையின் தொன்மை

சங்க காலங்களில் அறுவடைத் திருநாளாக அறியப்பட்டது, சமகாலத்தில் பொங்கல் திருநாளாக அறியப்படுகிறது.

தை மாதம் என்பது சங்ககாலந்தொட்டே தமிழர்களின் வரலாற்றில் கொண்டாட்டத்திற்கு உரிய மாதமாக இருந்து வந்துள்ளது.

தைஇத் திங்கள் தண்கயம் படியும்என்று நற்றினையிலும், ‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்துஎன்று ஐங்குறுநூறிலும், ‘வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோஎன்று கலித்தொகையிலும், ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்என்று குறுந்தொகையிலும், ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்என்று புறநானூற்றிலும் தை மாதத்தை கொண்டாட்டத்திற்குரிய மாதமாக சித்தரிக்கும் வகையில் பல குறிப்புகள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து நேரடிக் குறிப்பு இல்லை என்றாலும் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையோடு அதைத் தொடர்புபடுத்துவதற்கான கூறுகள் இருப்பதாகக் கூறுகிறார் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அறவேந்தன்.

``சங்க இலக்கியங்களில் அறுவடைத் திருநாள், தைநீராடல், தை மாதத்தை உயர்வாகக் கருதும் பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. அதேபோலத் திருக்குறளில் மழையைப் போற்றுதல், உழவைப் போற்றுதல் பற்றி தனி அதிகாரங்களே உள்ளன. உழவைப் போற்றுதல் என்பதுதான் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கான அடிப்படை. இதிலிருந்தே பொங்கல் பண்டிகை என்பது தொல்தமிழரின் பண்டிகை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்`` என்கிறார் பேராசிரியர் அறவேந்தன்.

வேளாண்பெருங்குடி மக்கள் பயிர் செய்ததை அறுவடை செய்யும் காலகட்டமான தை மாதத்தின் முதல்நாளில் தங்கள் வேளாண்மைக்கு உதவிய சூரியனுக்கும் மாட்டிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையின் நோக்கமாகும்.

``இன்றைக்கு தேங்க்ஸ் கிவ்விங் டே என்று மேற்கத்திய நாடுகளில் நடத்துகிறார்களே அது போன்ற ஒரு நிகழ்வுதான் பொங்கலும். அன்றைக்கு இருந்த பிரதான தொழில் உழவுதான். ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி மாதம் விதைப்புக்கு என்றால் தை மாதம் அறுவடைக்குரியது. அறுவடை வெற்றிக்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வுதான் பொங்கல். அறுவடை வெற்றிக்கு பிரதான காரணம் சூரியனும் மாடும். அதற்காக இவை இரண்டுக்கும் நன்றி சொல்லும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்`` என்கிறார் புலவர் செந்தலை .கவுதமன்.

வீட்டில் தேவையற்றதாக கருதும் பொருட்கள் மார்கழி இறுதிநாளான போகி தினத்தன்று தீயிலோ அல்லது நீரிலோ தூக்கியெறிப்படும். தேவையற்றதாக கருதும் பொருட்களை நம் வீட்டில் இருந்தும் வாழ்க்கையில் இருந்தும் போக்குவதுதான் போகிப் பண்டிகையின் நோக்கம். பழைய கழிதலும் புதியன புகுதலும் என்பதோடு புத்தொளியுடன் தொடங்கும் பொங்கல் திருநாளில் மேல்த்தோல் நீக்காத பச்சரிசியில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்படும்.

மறுநாள் உழவுக்கு உதவிய மாட்டினை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். மேற்கண்ட மூன்று தினங்கள் இன்றும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தாலும், காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் அரிதாகிவருவதாகக் கூறுகிறார் புலவர் செந்தலை .கவுதமன்.

அரிதாகிவரும் காணும் பொங்கல்

``காணும் பொங்கல் என்பது நம்முடைய வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தவர்களை நேரில் சென்று சந்திக்கும் நாள். இது உறவுகளை வலுப்படுத்துவதற்கான நாள். அன்றைய காலங்களில் காணும் பொங்கல் என்பது ஆணும் பெண்ணும் காணும் பொங்கலாகவும் இருந்திருக்கிறது. திருமணம் தொடர்பான பேச்சுகள்கூட காணும் பொங்கல் நாளில் நடந்துள்ளன.

அந்தக் காலத்தில் காணும் பொங்கல் தினத்தில் ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஏரிக்கரை போன்ற பகுதிகளுக்குத் தங்கள் உறவினர்களுடன் சென்று நேரத்தைக் கழிப்பது, கிராமிய விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இன்று காணும் பொங்கல் அரிதாகிவருகிறது`` என்கிறார் புலவர் செந்தலை .கவுதமன்.

இந்தியாவில் அனைத்து பண்பாட்டு அடையாளங்களையும் இந்துத்துவ மயப்படுத்தும் வேலைகள் நடந்துவருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையும் அதிலிருந்து தப்பவில்லை. பொங்கல் பண்டிகை இந்துக்களின் பண்டிகை என்ற கருத்தை அண்மைக்காலங்களில் அதிகம் கேட்க முடியும் நிலையில், பொங்கல் என்பது மதத்தைக் கடந்து தமிழர்களின் கூட்டுப் பண்பாட்டு நிகழ்வு என்கிறார் செந்தலை .கவுதமன்.


ஈழத்தின் யாழ்ப்பாண அரச வரலாறு!

இலங்கையின் வடபகுதியில் உள்ளது யாழ்ப்பாணம். இப் பெயர் தற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தையும் குறிக்கப் பயன்படுவது என்றாலும், நாம்யாழ்ப்பாண அரசுஎன குறிப்பது இவற்றிலும் பெரிய ஒரு நிலப்பகுதியை ஆகும்.

 அதாவது, இன்றைய வடமாகாணம் முழுவதையும், கிழக்கின் பகுதிகளையும், புத்தளம் வரையிலான மேற்குக் கரையோரங்களையும் உள்ளடக்கி இருந்தது. இதனுடைய எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது ஆயினும், இதனுடைய தலைமை இடமும், மக்கட்செறிவும் யாழ்ப்பாணக் குடானாட்டிற்கு உள்ளேயே இருந்து வந்திருக்கிறது. இதனாலேயே யாழ்ப்பாண அரசு எனப்படுகிறது.

 பல நூற்றாண்டு காலமாக மாறி மாறி அந்த அரசாட்சிகள் அனைத்தும் இவ்வாறே செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன.

 யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றானவையாபாடல்இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது.

 யாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்.

 ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்)

ஆரியச் சக்கரவர்த்திகளின் காலம் (கி.பி 12 ஆம் நூஆகி.பி 1620)

குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 – கி.பி 1948)

ஆங்கிலேயர் ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்)

  ஆட்சிக் காலம் (கி.பி 1972 – கி.பி 2009 வரையான தமிழீழ நிழல் அரசுக் காலம்)

இராஜேந்திர சோழரின் கடாரபடையெடுப்பு 1000 மாவது ஆண்டு. ( 1025 - 2025)

கி.பி.10 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சோழர்களின் கடற்படை உலகளவில் பரவலாக பேசப்பட்டது. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையோரப்பகுதி முழுவதும் சோழமண்டலக்கரை என்று பெயர் பெற்றிருந்தது. சுமார் 1076 கி.மீ. நீளமுள்ள இக்கடற்கரைப் பரப்பு முழுவதும் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

முதலாம் பராந்தக சோழன் (கி.பி - 907-953) காலத்தில் இலங்கையின் மீது கடற்படையெடுப்பு நடந்தது.

கி.பி.993 ஆம் ஆண்டு முதலாம் இராஜராஜன் இலங்கையின் மீது படையெடுப்பு நடத்தி சிங்களர்களை வென்று இலங்கையின் வடபகுதி முழுவதையும் கைப்பற்றினார். இக்கடற் போரில் சோழர்களின் மிகச்சிறந்த கப்பல் படை பங்கேற்றது. நாகப்பட்டினத்துக்கும் இலங்கைக்கும் நடுவே கடலில் கப்பல்கள் மூலம் பாலம் கட்டி இலங்கையை இராஜராஜன் வென்றதாக திருவாலங்காடு செப்பேடுகள் பதிவு செய்கின்றன.

முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழ கடற்படை உலகத் தரத்துடன் மிகச் சிறந்த கட்டமைப்பு பெற்று தனித்துவமான பெயரும் பெற்றிருந்தது.

இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் இராஜேந்திரனின் சோழர் கடற்படை வென்றது அயல்நாட்டுக்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் என்ற பெருமை இராஜேந்திர சோழனைச் சாரும் என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு.

அலைகடல் நடுவே பல கலஞ்செலுத்தி இந்த நாடுகளை வென்றதாக இராஜேந்திரனின் கல்வெட்டுகள் கூறுகிறது.

இராஜேந்திரனின் இந்தப் படையெடுப்பின் நோக்கம் தனது சோழநாட்டு வணிகர்களின் நலன் சார்ந்ததாக இருந்தது.

சோழநாட்டு வணிகர்கள் ஸ்ரீவிஜய துறைமுகத்தைக் கடந்து சீனதேசம் வரை சென்று வணிகம் செய்தனர்.

தமிழகம் - சீனா வரை உள்ள கடற் பாதையில் உள்ள மிக முக்கியத் துறைமுகம் ஸ்ரீவிஜயம் ஆகும்.

கி.பி.1015 ஆம் ஆண்டு.

சீன அரசர் Ma - twan - lin

காலத்தில் இராஜராஜனின் ஆவணங்கள் தாங்கிய வணிகத் தூதுக்குழு ஒன்று சீனா சென்றதாக சீன நாட்டு ஆவணங்கள் பதிவு செய்கின்றன. இந்த ஆவணங்கள் இராஜராஜனை Lo - cha - lo -cha என்றழைக்கிறது.

இராஜேந்திரன் காலத்திலும் வணிகத் தூதுக்குழு ஒன்று சீனா செல்கிறது. இராஜேந்திரனை சீன ஆவணங்கள்

Shi- li - lo - cha என்றழைக்கிறது..

சோழநாடு சீனாவுடன் கொண்ட வணிகத் தொடர்பில் ஸ்ரீவிஜயம் ஏதேனும் தடைகளைச் செய்ததாலே தன் வணிகர்களின் நலம் காக்கவே இராஜேந்திரனின் கடார படையெடுப்பு என்பது ஆய்வாளர்கள் முடிவு.

ஸ்ரீவிஜயத்தை சோழர்கள் தாக்கியபோது சீனாவிற்கு எந்த வணிகக் கப்பலும் செல்லவில்லை.

போர் முடிந்தப்பிறகே 1028 ஆம் ஆண்டில்

ஸ்ரீவிஜய தூதுக்குழு சீனா சென்றது.பிறகு சோழர் தூதுக்குழுவும் சென்றது. பிறகே தமிழர்களின் வணிகக் கப்பல்கள் ஸ்ரீவிஜயம் வழியே சீனா வரை சென்றது.

( Svuarnadvipa. by - Dr.c. majumdar.)

ஸ்ரீவிஜயப் பகுதிகளில் கடற்கொள்ளையகளின் ஆதிக்கம் மிகுந்து சோழநாட்டு வணிகக் கப்பல்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாயின. ஸ்ரீவிஜய அரசு கடற்கொள்ளையர்களை ஒடுக்காமல் கடற்கொள்ளையருக்கு உதவி செய்துள்ளனர். ஸ்ரீவிஜயத்தில் அப்போது ஏற்பட்ட வாரிசுரிமை போர்களும் இப்பிரச்சனைக்குக் காரணமாக அமைந்தன.

ஸ்ரீவிஜயத்திற்கு பாடம் புகட்டி, கடற் கொள்ளையர்களை ஒடுக்கி தனது சோழநாட்டு வணிகர்களின் நலம் காக்கவே இராஜேந்திரசோழன் ஸ்ரீவிஜயத்தின் மீது தாக்குதல் தொடுத்தார் என்பதும் அறிஞர்கள் கருத்து.

அன்றைய ஆசியாவின் மிகச்சிறந்த கடற்படைகளைக் கொண்டதாக மூன்று பேரரசுகளை வரையறை செய்கின்றனர்.

சீனாவின் தாங் அரசமரபு,

பாக்தாத் அப்பாசீக கலீபகம்

மற்றும் சோழர்கள்.

இம்மூன்று பேரரசுகளே அன்றைய மிகச்சிறந்த கடல் வணிகம் மற்றும் கடற்படை கட்டமைப்புகளைக் கொண்டிருந்தன.

உலகளவில் பெரிதும்பேசப்பட்ட சோழர்களின் கடற்படை பற்றிய விபரங்கள் தமிழக கல்வெட்டு சாசனங்களில் பெருமளவு கிடைக்கவில்லை என்றாலும் சமகால அயல் நாட்டு ஆவணப்பதிவுகளில் இவ்விபரங்கள் காணக் கிடைக்கின்றன.

கடற்கரைக் காற்று,

அது விசும் திசை, கடற்பாதை என்று அனைத்திலும் சோழக் கடலோடிகள் திறன் பெற்றவர்களாக இருந்துள்ளார்கள்..

கடற்காற்றை ----

ஈழக்காற்று ,

சோழக்காற்று,

கன்னிக்காற்று,

கச்சன் காற்று

என்று வகைப்பிரித்துள்ளனர்.

காற்று வீசும்திசை மற்றும் கடல் நீரோட்டம் பற்றியும் தெளிவு பெற்றிருந்தனர்.

தென்மேற்கு பருவ கடல்நீரோட்டத்தை சோளி என்றும் தென் மேற்கிலிருந்து வடகிழக்கான நீரோட்டத்தை சோளி மீமாரி என்றும் மேற்கிலிருந்து கிழக்கை மேம்மாரி என்றும் அழைக்கப்பட்டதாக. B. அருணாச்சலம் அவர்கள் எழுதிய Chola navigation package என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்..

கடல்நீரோட்டம் பற்றிய உயர் அறிவு சோழக் கடலோடிகளுக்கு இருந்தது. திசை அறியும் தொழில்நுட்பமும் அவர்களுக்கு அத்துப்படி.

நாகை - கடாரம் 84 யாமம் பயணத்தொலைவு. அதாவது நாகையிலிருந்து புறப்பட்டு 15 நாட்களில் ஸ்ரீவிஜயத்தை அடையலாம் என்கிறார்கள்.

சோழர்களின் கடற்படையில் எத்தனைக் கப்பல்கள் இருந்தன.? அவற்றுக்கு என்ன பெயர்.? அதன் தளபதிகள் வீரர்கள் பற்றிய விபரம்.? கப்பல்கள் வடிவம்.? படை நகர்வு? உணவு, ஆயுதங்கள், மருத்துவ வசதிகள் பற்றிய விபரம்.? இவை போன்ற விபரங்கள் அனைத்தும் அயல்நாட்டு ஆவணங்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.

முற்காலச் சோழர்களின் கடற்படையெடுப்பில் பயன்படுத்திய கப்பல்களின் பொதுப்பெயராக சொழாந்தியம் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது.

இவற்றில் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பசிபிக் தீவுகள் வரையில் முற்காலச் சோழர்களால் கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவைகள் மிகப்பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களைச் சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

(K.M.Panikkar in "geographical factors in indian history",

The Colandia type of vessels were employed for voyages between the Coramandel coast on the one hand and the Gangetic delta and Khryse

Ramchandran, Dr A. (23 October 1996). "The cultural history of Lower Kṛṣṇa Valley: its contacts with Southeast Asia".)

பிற்காலச் சோழர்களின் போர்க்கப்பல்கள் கீழ்கண்ட பிரிவுகளாக. வகைப்படுத்தப்பட்டன.

கண்ணி -

சிறி வகை போர்க்கப்பல்.

அதிக பட்சம் ஐந்து கப்பல்கள் இப்படைப்பிரிவில் இருக்கும். மிக வேகமாகச் செல்லும் . எதிரிகளின் கடற் பகுதியில் உள் நுழைந்து உளவு வேலைகள் பார்க்கும். எதிரிக் கப்பல்களின் எண்ணிக்கை அவற்றின் ஆயுத பலம் போன்ற விபரங்களைச் சேகரிக்கும். தேவைப்படின் சிறிய வகைத் தாக்குதல்களையும் மேற்கொள்ளும். இப்படைப்பிரிவின் தலைவர் களபதி என்னும் பெயரால் அழைக்கப்படுவார்.

தளம் -

நிரந்தரமான போர்க்கப்பல்பிரிவு அமைப்பாகும். இதன் தலைவர் ஜலதளதிபதி என்றழைக்கப்படுவார்.

5 பிரதான போர்க்கப்பல்கள்,

3 ஆயுத விநியோக கப்பல்கள்,

1 அல்லலது 2 உணவு ,தண்ணீர்

மற்றும் மருந்துப்பொருட்கள் அடங்கிய கப்பவ்களின் மொத்தத் தொகுப்பாக இப்படைப்பிரிவு இருக்கும்.

மிகக் குறுகிய காலத்தில் கடற் போருக்கு தயாராகும் முன்னேற்பாட்டில் இருக்கும்.

புலனாய்வு, சுற்றுக்காவல், வழிமறிப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும்.

பூரணமாக ஆயுதந்தரித்த

கப்பல் படைப்பிரிவாகும.

மண்டலம் -

மிகப்பெரும் கடற்படைப் பிரிவு. . வெளிநாட்டு படையெடுப்பிற்காக பயன்படுத்தப்படும் போர்க்கப்பலாகும். இப்படைப்பிரிவின் தலைவர் மண்டலதிபதி என்றழைக்கப்படுவார். 40-50 கப்பல்கள்களை கொண்டதாக இப்படைப்பிரிவு இருக்கும்..

இவை தனி சண்டைப் பிரிவாக மற்றும் அபாயகரமான ஆழ் கடல் நடவடிக்கைகளுக்கு பயன்படும். கடற்போரின்போது இக்கப்பல்களே முதலில் தாக்குதலைத் தொடுக்கும்.

கனம் -

100 -150 கப்பல்களைக் கொண்ட படைப்பிரிவு. இப்படைப்பிரிவின் தலைவர் கனதிபதி என்றழைக்கப்படுவார்.

மண்டலம் கப்பல் படை பிரிவுக்கு பின்புற எல்லையை சூழ்ந்து செல்லும். அதிவேகமாக எதிரிக் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. முழுமையாக அனைத்துவகை ஆயுதங்களையும் கொண்ட கப்பல்.

அணி -

3 கனங்களின் தொகுப்பு அணி வகை கப்பல்பிரிவாகும். 300 - 500

கனம் கப்பல்களின் தொகுப்பு அனி என்றழைக்கப்படும்.

ஒட்டுமொத்த கப்பற் படைத்தலைவர் அரசனேயாவார்.

கடற்படையின் கட்டளை அதிகாரி :ஜலதிபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார். இவரே கடற்படையின் முதன்மைத் தலைவர் ஆவார்.

போர்க்கப்பல்களின் படைத்தலைவர் நாயகன் என்ற பெயரால் அழைக்கப்படுவார். கடற்படையின் துணைத் தலைவர் இவரே.

போர்க்கப்பல்களின் தனித்தனி படைப்பிரிவுகளின் தலைவர் கனதிபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார்.

கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரி இவர்.

குழு படைத்தலைவர் மண்டலதிபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார். கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரி.

ஒவ்வொறு தனிக்கப்பல் படைத்தலைவர் கலபதி என்ற பெயரால் அழைக்கப்படுவார்.

கப்பலின் ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி காப்பு என்ற பெயரால் அழைக்கப்படுவார்.

கப்பலோட்டிகளின் பொறுப்பதிகாரி சேவை என்ற பெயரால் அழைக்கப்படுவார்.

ககப்பல் இயக்கம் மற்றும் பழுது நீக்கும் பொறியியல் அதிகாரி ஈட்டிமார் என்ற பெயரால் அழைக்கப்படுவார்.

(" The History and Culture of the Indian People,

By Prof R.C. Majumdar

The History shipbuilding in the sub-continent , By Prof R C Majumdar..)

இவைகளுடன் மேலும் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் பிரத்யோக கடற்படைப்பிரிவுகளும் கப்பல் வகைகளும் இருந்ததாக R.C.Majumdar

தனது நூலில் பதிவு செய்கிறார்.

(The History and Culture of the Indian People, By Prof R.C. Majumdar ..

The History shipbuilding in the sub-continent , By Prof R C Majumdar,)

தாரணி -

ஆழ்கடல் பகுதியில் அதிவேகமாகச் சென்று தாக்கும் போர்க்கப்பல்.

எந்த சூழலிலும் தாக்குப்பிடிக்கும் பிரத்யோக பயிற்சிபெற்ற கடற்படை வீரர்கள் இடம்பெறுவார்கள்.மிக மிக வலுவாக கட்டப்பட்ட கப்பல் இது. எதிரிகளின் கப்பல்களை முட்டி மோதி தகர்க்கும் திறன் பெற்ற கப்பல் வகை இது.

வஜிரா -

அளவில் சிறிய கப்பல்.

அதிவேகத்துடன் கடலில் பாய்ந்து சென்று தாக்கும் திறனுடையது.

திரிசடை -

மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட கப்பல். பல அடுக்குகளும் தளங்களும் கொண்டது. ஆயுத சேகரிப்பு மற்றும் தளவாடங்கள், வீரர்கள் தங்கும் அறைகள் கொண்ட மிகப்பெரும் போர்க்கப்பல்.

இந்த மகத்தான கடற்படையைக் கொண்டுதான் சோழர்கள் பெரும் கடற்பரப்பை ஆதிக்கம் செய்தார்கள். தென்கிழக்காசிய நாடுகளை வென்றார்கள்.

இவ்வெற்றியின் நினைவாக இராஜேந்திரசோழன் கடாரம் கொண்டான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். வெற்றியின் நினைவாக கடாரம்கொண்டான் என்னும் பெயர் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சூட்டப்பட்டு இன்றும் அவ்வூர்கள் கடாரம் கொண்டான் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

இராவணன்

இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது

திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.

இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள். இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக கூறப்பட்டு வருகிறது.

கன்னியா வெந்நீர் கிணறுகளையும், அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன். அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்தது

மலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளது, அதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி,  நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறி, தனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார். மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன். அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன்

அதன்பின் 2014 ஆம் ஆண்டுயார் இந்த இராவணன்எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போது, இராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. அது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன். கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லை. இராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார். இந்த ஆதாரத்தை வைத்துயார் இந்த இராவணன்கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன். 2018 ஆம் ஆண்டுயார் இந்த இராவணன்?” புத்தகமாக வெளிவந்தது.

இது இப்படி இருக்க, கடந்த வருடம் கன்னியா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டது. அப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில், பிள்ளையார் கோயில், இராவணனின் தொடர்பு, இராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும், ஐதீகங்களும் மட்டுமே இருந்தன. இவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.

இந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும் என்பதே.

கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன். கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை அவ்வளவு பழைய ஆதாரங்கள் அல்ல. இருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன். விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன். இறுதியில் இங்கிலாந்து, கலிபோர்னியா(அமெரிக்கா), கனடா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தன. இங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள். மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தன. இவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும். இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.

பிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும். இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கி, நீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும். இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளன.

கன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளது. இவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டது. அடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளது. இது 100 மீற்றர் உயரமானது. கன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும். இக்காடு கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும், மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும், தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும்.

கன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

தீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும், தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளது.

இத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள். தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.

கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும். தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு நீளமாக ஏன் இருக்க வேண்டும்?

அதற்கும் ஓர் காரணம் உள்ளது.

கன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும். இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும். எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 அல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும், அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.

இராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்?

அதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளது. இராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும். ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. தாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார்

அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான். இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம். எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும் எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும். இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும், சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.

இச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர். இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லை. மாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.

கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.

ஜேம்ஸ் கோர்டினரின் குறிப்பு

கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

“On the Summit of the above mentioned Hill are shewn two monumental piles of earth enclosed with loose stones, one thirty-six feet in length, and ten in breath, the other ten feet long, and three broad. They are said to be the dimensions of a giant and his son, who were buried there at a very remote period in the fabulous History of Ceylon.”

இக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறது. இவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும்இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.

இவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும், இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளன. அண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள் 60 அடி சமாதி எனப் பெயரிட்டு, இது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.

சைமன் காசிச்செட்டியின் குறிப்பு

மேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார். இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.

சார்லஸ் ப்ரிதாமின் குறிப்பு

இதே குறிப்பை சார்லஸ் ப்ரிதாம் எனும் ஆராய்ச்சியாளர் 1849 ஆம் ஆண்டு தான் எழுதிய “An Historical Political and Statistical of Ceylon” எனும் நூலில் “The Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் குறிப்பிட்டுள்ளார்.37

மூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு

கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார். மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும் “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர். இது இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும். இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும். இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பின் பின்பகுதி கீழ்வருமாறு.

“According to them King Ravanna, during his long war with Vishnu, was informed by that deity that Kanya virgin mother of the King of Ceylon, was dead. Ravanna naturally had to set about the task of performing the necessary obituary services for the beloved dead, and Vishnu to help him … and incidentally to accomplish his main design of delaying him … Caused hot springs to burst out of the ground for the Giant’s use. and there they remain.

மேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. இப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும்.

இதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளது. இதுவெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து திடீரெனத் தோன்றின. அங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறது. இதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார்.

எனவே “Tombs of a Giant and his Son” என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.

1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி

கன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறது. அது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும். இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதி) எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

 இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருப்பதாகவும் , இதன்மூலம் இங்கு வாழ்ந்தவர்கள் இறை சக்தியோடு தொடர்பு கொள்ளத்தக்க வகையில் இந்தக்கோட்டையை திட்டமிட்டு அமைத்திருக்க வேண்டுமென்றும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்

சிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய " நெற்றிப் பொட்டுகளை ", சுரண்டி அழித்தது

இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது

 

அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது.இந்தக்கோட்டையைப் பற்றி நிறைய எழுதலாம்

இன்று தங்கத்தால் உடல் முழுவதும் பூசி அடக்கம் செய்த இலங்கை ராவணனின் அதிசயக் கல்லறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம் இதனால் பல தகவல்கள் புராதன அடையாளங்கள் கிடைத்துள்ளதாம்.

அதன் விளக்கங்கள்-

 

பரராசசேகரன் உலா

வையாபாடல் - 15ஆம் நூற்றாண்டு - வையாபுரி

கைலாயமாலை - 16ஆம் நூற்றாண்டு - முத்துராசக்கவிராசர்

வைபவமாலை - 18ஆம் நூற்றாண்டு -

மாதகல் மயில்வாகனப்புலவர்

பிரித்தானியர் கால நூல்கள்

History of Jaffna - 1884 - S.Kasishetty

Jaffna Today and Yesterday - 1907 - Duraiyappa Pillai

History of Jaffna - 1912 - Muththuthampy Pillai

யாழ்ப்பாண வைபவ கௌமுதி - 1918 - வேலுப்பிள்ளை

Ancient Jaffna - 1926 - Rajanagam

Critiques of Jaffna - 1928 - Njanappiragasar

Tha Jaffna Kingdom

The Ancient People of Sri Lanka are Tamils

யாழ்ப்பாண பூர்வீக வைபவம்

யாழ்ப்பாண குடியேற்றம்

புதிய நூல்கள்

இலங்கைவாழ் தமிழரின் வரலாறு - கே.கணபதிப்பிள்ளை

Tamils and Ceylon - நவரட்ணம்

Kingdom of Jaffna - 1978 - Pathmanathan

Early Settlements in Jaffna - Ragupathy

யாழ்ப்பாண இராட்சியம் - சிற்றம்பலம்

பூனகரி தொல்பொருள் - புஸ்பரத்தினம்

இவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தார்




 1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217

3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404

4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2)

7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்

எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10, ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11, காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12, கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13, தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15, அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(😎

17, பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18, பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19, முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20, அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22, தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23, பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை. IPC-295

24, மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25, ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல். 3 ஆண்டு சிறை IPC-419

26, ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27, சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28, கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29, முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை. IPC-495

30, IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்

IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.

CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும். 


அடிமைகள்

 பழந்தென்னகத்தில் அடிமைகள் ஒரு பொருளாதார நிர்பந்தமாக இருந்ததே ஒழிய சமூகக் கட்டாயமாக இருந்தது இல்லை. ஆண்டான் அடிமை என்பது பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட ஒன்றாக பெரும்பாலும் இருந்தன.

சில இடங்களில் தண்டனைக்காக பிராமணர் முதல் செட்டியார்கள் வரையிலான பெண்கள் கூட அடிமையாக விற்கப்பட்டனர்.

மத்திய காலத்தில், தென்னிந்தியாவில் அடிமைத்தனம் ஒரு சமூக அமைப்பாக நிலவியது. விஜயநகரப் பேரரசு காலத்தில் வாழ்ந்த பயணிகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

சட்ட வல்லுநரான விஜ்ஞானேஸ்வரர், தனது 'மிதாக்ஷரா' என்ற நூலில், 15 வகையான அடிமைகளையும், அவர்கள் விடுதலை பெறுவதற்கான வழிகளையும் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். இருப்பினும், அவருடைய கோட்பாடுகள் எந்த அளவுக்கு நடைமுறையில் இருந்தன என்பதைப் பார்ப்பது சுவாரசியமானது.

கிடைக்கப்பெற்ற கல்வெட்டு மற்றும் பழமையான ஆவணங்களின் ஆதாரங்களின்படி, மத்திய காலத்தில் பல்வேறு வகைகளில் அடிமைகள் இருந்தனர்.

1. பிறப்பால் அடிமை: ஒரு குடும்பம் அடிமையாக இருந்தால், அவர்களின் சந்ததியினரும் அடிமைகளாகவே கருதப்பட்டனர். கல்வெட்டுகளில், "மரணன்-உள்ளிட்டர்" என்ற குடும்பம் இறைவனுக்கு அடிமையாகக் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் சந்ததியினரும் அடிமைகளாகவே இருப்பார்கள்.

2. விலைக்கு வாங்கப்பட்ட அடிமை: கோயில்கள் தனிநபர்களை விலைக்கு வாங்கி அடிமைகளாக வைத்திருந்தன. ஒரு கல்வெட்டில், ஒரு சிற்பி, அவருடைய மனைவி, மற்றும் நான்கு மகன்கள் ஒரு மடத்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. பரிசாகப் பெறப்பட்ட அடிமை: ஒருவரால் பரிசாகக் கொடுக்கப்பட்ட அடிமைகள்.

4. பரம்பரை அடிமை: பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான அடிமைகள்.

5. பஞ்ச காலத்தில் கிடைத்த அடிமை: பஞ்சம் அல்லது வறுமை காரணமாக ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தால், அந்த நபர் அடிமையாக இருக்கலாம்.

6. கடனுக்காக அடிமை: கடன் தீர்க்க முடியாதவர்கள், தங்கள் கடனாளிகளுக்கு அடிமையாக இருந்தனர்.

7. போர்க் கைதி அடிமை: போரில் தோற்றவர்கள் அல்லது பிடிபட்டவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

8. தன்னைத்தானே விற்றுக்கொண்ட அடிமை: கடும் வறுமை காரணமாக, ஒருவர் தன்னைத்தானே அடிமையாக விற்றுக் கொள்வதும் வழக்கத்தில் இருந்தது. ஒரு கல்வெட்டின்படி, ஒரு வேளாளன் கடுமையான பஞ்சத்தின் காரணமாக, தன் இரண்டு மகள்களையும் சேர்த்து ஒரு கோயிலுக்கு அடிமையாக விற்று, கோயிலிடம் இருந்து 110 காசுகளைப் பெற்றான்.

இந்த எட்டு வகைகள் மட்டுமின்றி, வேறு சில வகையான அடிமைகளும் இருந்தனர். உதாரணமாக, ஒழுக்கக்கேடு எனக் குற்றம் சாட்டப்பட்ட பெண்கள், 'சர்க்கார் மனைவிகள்' என அழைக்கப்பட்டு, ஏலத்தில் விற்கப்பட்டனர். கேரளாவில், எந்த வேலையும் இல்லாத இளைஞர்கள், அரசால் பிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டனர்.

சர்க்கார் மனைவியர்

அக்காலத்தில், ஒழுக்கக்கேடு எனக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு வெவ்வேறு விதமான தண்டனைகள் வழங்கப்பட்டன. பிராமண மற்றும் கோமட்டி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் விற்கப்படவில்லை; மாறாக, அவர்கள் தங்கள் சாதியில் இருந்து விலக்கப்பட்டு, கையில் சூடு போட்டு விபச்சாரிகள் என முத்திரை குத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தொகையை இஜார்தார் (குத்தகைக்காரர்) என்பவருக்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் இறந்த பிறகு, அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் இஜார்தாருக்குச் சொந்தமாகின.

ஆனால், பிற இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் எந்தவித இரக்கமும் இன்றி இஜார்தாரால் விற்கப்பட்டனர். இருப்பினும், அவர்களின் உறவினர்கள் முன்வந்து இஜார்தாரின் கோரிக்கையை நிறைவேற்றினால், அவர்கள் விற்பனையில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இந்த அடிமை விற்பனை ரகசியமாகவோ, மறைவான இடங்களிலோ நடக்கவில்லை. பெங்களூரு போன்ற பெரிய நகரங்களிலேயே, ஐரோப்பியர்களின் கண்களுக்கு எதிரிலேயே இந்தத் துயரமான நிகழ்வுகள் நடந்தன. இந்த துரதிர்ஷ்டவசமான பெண்களை தங்க வைக்க ஒரு பெரிய கட்டிடம் கூட ஒதுக்கப்பட்டிருந்தது. 1833 ஜூலை மாதத்தில், இந்த அருவருப்பான வணிகத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆணையர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிட்ட பிறகே இந்த கொடுமை முடிவுக்கு வந்தது.

1235 ஆம் ஆண்டின் ஒரு கல்வெட்டு, ஒரு கோயிலுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் அடிமைகளின் பட்டியலைத் தருகிறது. இந்த அடிமைகள், மூன்றாம் குலோத்துங்க சோழனின் 9 மற்றும் 10 ஆம் ஆட்சி ஆண்டுகளில் (1187-1188) அரசனின் ஆணைப்படியும், தனிநபர்களின் அன்பளிப்பு மற்றும் விற்பனை மூலமாகவும் கோயிலுக்குச் சொந்தமானவர்கள்.

வெளிநாட்டு அடிமைகள்

தென்னிந்தியாவில் உள்நாட்டு அடிமைகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அடிமைகளும் இருந்தனர். குறிப்பாக, இஸ்லாமியப் படையெடுப்புகளுக்குப் பிறகு, இந்த வழக்கம் அதிகரித்தது. உதாரணமாக, 1471-ல் யூசுப் என்ற மந்திரி, சர்காசியா, ஜார்ஜியா மற்றும் அபிசீனியா ஆகிய நாடுகளில் இருந்து அடிமைகளைத் தன் மன்னனுக்குப் பரிசாகக் கொடுத்தார். இவர்களில் பலர் திறமையான பாடகர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும் இருந்தனர்.

அடிமை வணிகம்

கேரளா மற்றும் கிழக்குக் கடற்கரைக்கு இடையே அடிமை வணிகம் நடந்ததற்கான சான்றுகளும் உள்ளன. பஞ்சம் ஏற்படும் காலங்களில், மக்கள் தங்கள் பிள்ளைகளை நான்கோ அல்லது ஐந்தோ பணம் கொடுத்து விற்பனை செய்ததாகப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.

தேவரடியார்கள்

தென்னிந்தியாவின் அடிமைத்தனம் பற்றிப் பேசும்போது, **தேவரடியார்கள்** பற்றி விரிவாகப் பேச வேண்டும். கோயில்கள் பல வழிகளில் அடிமைகளைப் பெற்றன:

விலை கொடுத்து வாங்குவது: கோயில்கள் நேரடியாக அடிமைகளை விலைக்கு வாங்கின.

தன்னையே அர்ப்பணித்தல்: சில குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளைத் தாங்களாகவே கோயில் சேவைக்காக அர்ப்பணித்தனர்.

பரிசு: தனிநபர்கள் அடிமைகளை கோயிலுக்குப் பரிசாகவும் வழங்கினர்.

பயணியான மார்க்கோ போலோ, கோயில்களில் இளம் பெண்கள் சிலை முன்பு நடனமாடி, பாடி சேவை செய்வதை விவரித்துள்ளார். இந்த பெண்கள், தங்களின் கணவனை இழந்த இளம் விதவைகளாகவோ அல்லது தாங்களாகவே கோயில் சேவைக்கு வந்தவர்களாகவோ இருக்கலாம்.

1235 ஆம் ஆண்டின் ஒரு கல்வெட்டு, ஒரு கோயிலுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் அடிமைகளின் பட்டியலைத் தருகிறது. இந்த அடிமைகள் சில சமயங்களில் சூலம் அல்லது மற்ற அடையாளங்களால் குறிக்கப்பட்டனர். இது, அவர்கள் மன்னரின் அடிமைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது.

தேவரடியார்களின் முக்கியப் பணி, கோயிலின் சடங்குகள், விழாக்கள், சுத்தம் செய்தல், நெல் குத்துதல், ஆடை துவைத்தல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்வது. இந்த வேலைகள் மூலம் அவர்கள் கோயிலை நம்பி வாழ்ந்தனர். சில சமயங்களில், அவர்கள் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படும்போது, அவர்களின் பராமரிப்பிற்காக நிலம் அல்லது வீடும் வழங்கப்பட்டது.

பொருளாதார நிலை

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், தேவரடியார்கள் முழுமையாகக் கோயிலைச் சார்ந்தே இருந்தனர். அவர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியது அவர்களின் கடமையாக இருந்தது. வேலையில் இருந்து தப்பி ஓடினால், கோயில் அதிகாரிகள் அவர்களைத் தண்டித்து மீண்டும் சேவைக்கு அழைத்து வர அதிகாரம் பெற்றிருந்தனர்.

இதை தெய்வீக சேவை என்ற கண்ணோட்டத்தில் சிலர் பார்க்க முற்பட்டாலும், வெளிநாட்டுப் பயணியான பார்போசா கூறுவதுபோல, சில பெண்கள் தங்கள் உடல் மூலமும் பணம் ஈட்டித் தந்திருக்கலாம். எனவே, அவர்களின் நிலை அடிமைகளின் நிலைக்கு ஒத்ததாகவே இருந்திருக்கிறது. இது குறித்து இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.


இலங்கை


அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்களின் இனத்தவரே என்னும் கருத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

[17] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் பரவி வாழ்ந்த இடைக் கற்கால மக்களின் வழித் தோன்றல்களே இன்றைய இலங்கைத் தமிழரும், சிங்களவரும் என்பதும், தமிழ் பேசுவோரோ அல்லது பிராகிருத மொழி பேசுவோரோ பெருமளவில் இலங்கையில் குடியேறி அங்கிருந்த மக்களை அகற்றவில்லை என்பதும் இந்திரபாலாவின் கருத்து.

18] கிறித்தவ ஆண்டுக்கணக்கின் தொடக்கத்தை அண்டிய காலப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் தெற்குப் பகுதிகள், இலங்கை என்பன ஒரே பண்பாட்டு வலயமாக இருந்தன என்றும், தமிழும், பிராகிருதமும் மக்களின் இடப் பெயர்வினால் அன்றிப் பண்பாட்டுப் பரவலினாலேயே இலங்கைக்கு வந்தன என்றும் அவர் கூறுகிறார்.[19]

வரலாற்றுக் காலம்
வடக்கே பூநகரியில் இருந்து தெற்கே திசமகாராமை வரை எழுத்துக்களோடு கூடிய மட்பாண்டத் துண்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றுள் குடிப்பெயரான வேள என்பதும் காணப்படுகின்றது. இது பண்டைத் தமிழ் நாட்டில் இருந்த வேளிர் குடியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பண்டைத் தலைநகரமான அனுராதபுரத்திலும், இலங்கையின் பிற பகுதிகளிலும், கிமு 2 ஆம் நூற்றாண்டில் இருந்தே தம்மை தமேலா அல்லது தமேதா (பிராகிருத மொழியில்) என அழைத்துக்கொண்டவர்கள் (தமிழர்) வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன

இவ்வாறான ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்திலும், ஒன்று திருகோணமலை மாவட்டத்தில்உள்ள சேருவிலையிலும், ஒன்று அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்னும் இடத்திலும், இன்னொன்று பண்டைய தலைநகரமான அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்டவை

இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திசமகாராமையில் நடந்த அகழ்வாய்வுகளின்போது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட உள்ளூர் நாணயங்கள் கிடைத்தன. இவற்றில் சிலவற்றில் தமிழர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன

இது அக்காலத்தில் இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரத்தில் தமிழ் வணிகர்கள் முனைப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது. விசாகா என்னும் தமிழ் வணிகனின் பெயரும், உள்ளூரில் வாழ்ந்த சமன என்னும் தமிழன் ஒருவனின் பெயரும், கரவா என்னும் தமிழ் மாலுமிஒருவனின் பெயரும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன

கிமு இரண்டாம் நூற்றாண்டில் தமிழர் தோணிகளில் இலங்கைக்குக் குதிரைகளைக் கொண்டு வருவது குறித்த இலக்கியச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலும், இக்குதிரைகள் குதிரைமலை என இன்று அழைக்கப்படும் இடத்தில் இறக்கப்பட்டிருக்கலாம். வரலாற்றுப் பதிவுகளின்படி, கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் நாட்டில் இருந்த தமிழ் இராச்சியங்கள் இலங்கை விடயங்களில் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்தமை தெரிய வருகின்றது

கிறித்துவுக்கு முந்திய சில நூற்றாண்டுகள் இலங்கையின் வட பகுதியில் இருந்த குதிரைமலை, கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய நகரங்களுக்கும், தமிழ் நாட்டு நகரங்களுக்கும் இடையே தமிழ் வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலமும், தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டு இருப்பதில் இருந்தும், யாழ்ப்பாணக் குடாநாடு, முத்து, சங்கு போன்ற கடல்படு பொருட்களுக்கான பன்னாட்டுச் சந்தையாக இருந்ததும், தமிழ் வணிகர்கள் இங்கே வணிகத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவருகிறது.

சிங்களவர்களின் வரலாறு கூறும் நூலான மகாவம்சம், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே பல தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமை குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சேன, குத்தக என்னும் இரு தமிழர்கள் கிமு 177 தொடக்கம் கிமு 155 வரை 22 ஆண்டுகால ஆட்சி புரிந்துள்ளனர்

சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளன் என்பவன் கிமு 145 காலப்பகுதியில் இலங்கையைக் கைப்பற்றி 44 ஆண்டுக்காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளான். பின்னர் கிமு 104ல் ஏழு தமிழர்கள் அநுராதபுரத்தைக் கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிமு 87 வரை இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். கிமு 47 அண்டிய காலத்திலும் இரண்டு தமிழர்கள் ஏறத்தாள இரண்டு ஆண்டுகாலம் இலங்கையை ஆண்டுள்ளனர்

இவற்றை விட, கிபி முதலாம் நூற்றாண்டுன் பின்னர், சிங்கள அரச குடும்பங்களில் ஏற்பட்ட வாரிசுப் போட்டிகள் காரணமாக அரசிழந்தவர்கள் தமிழ் நாட்டில் இருந்து படை திரட்டி வந்து ஆட்சியைப் பிடித்தமை பற்றிய குறிப்புக்களும் உண்டு.மிகு தொன்மைக் காலத்திலிருந்தே இலங்கையில் தமிழர் வாழ்ந்ததற்கானசான்றுகள். அங்கு சைவமே தழைத்தோங்கி நின்றது

இதை மெய்பிக்கும் வகையில் தொன்மங்களில் குறித் இராவணன். தமிழ் மன்னனாகவே கருதப் படுகிறான். இன்றளவும் அவன் புகழை மக்கள் விரும்பியே உள்ளனர். குமரி கடற் கோளுக்கு முன்பு இலங்கை குமரியொடு இணைந்ததாகவே இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.இலங்கைத் தமிழரை நம்மினின்று பிரித்தல் இயலாது.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுத் தோல்விக்கான அடிப்படைக் காரணம் கொரில்லா போர்முறையைக் கைவிட்டது!!

 வரலாற்று ஆய்வாளர்கள் உலக அளவில் வலியுறுத்தும் மிக அடிப்படையான உண்மை ஒன்றுண்டு

ஒரு சிறிய அமைப்பு அல்லது படை, ஒரு பெரிய அரசின் முறையான இராணுவத்தை எதிர்கொள்ளும்போது, அது கடைப்பிடிக்க வேண்டிய முதல் மற்றும் முக்கிய விதிஎப்போதும் நகரும் தன்மையுடன் இருத்தல், எதிரியுடன் நேரடியாக மோதுவதைத் தவிர்த்தல்" என்பதுதான்.

இதுவே வியட்நாம், அல்ஜீரியா, கியூபா மற்றும் உலகின் பல விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற அமைப்புகள் பின்பற்றிய வெற்றி மந்திரம்.

ஆனால், இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம், இந்த வரலாற்றுப் பாடத்தை மறந்து, முற்றிலும் மாறான பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் அவர்களின் மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவாகவும், இறுதித் தோல்விக்கான மூலகாரணமாகவும் அமைந்தது.

உலக விடுதலைப் போராட்டங்களின் பாடம்: நிலத்தை அல்ல, எதிரியைத் தாக்குதல்

வியட்நாம் விடுதலைப் போரையும், அல்ஜீரிய சுதந்திரப் போரையும் நாம் ஆழ்ந்து பார்க்கும்போது, அங்குள்ள தலைவர்கள் புரிந்துகொண்ட ஒரு முக்கிய உண்மை தெளிவாகிறது.

அவர்கள் ஒருபோதும் "நிலப்பரப்பைக் காப்பாற்றுவது" தமது இலக்கு என்று கருதவில்லை.

அவர்களுக்கு நிலம் முக்கியமல்ல; அவர்களின் படை வலிமை, போராளிகளின் உயிர், நீடித்து நிற்கும் திறன் ஆகியவைதான் முக்கியமாக இருந்தன.

வியட்நாமில் வியட் காங் அமைப்பினர்: அமெரிக்க இராணுவம் போன்ற மிகப்பெரிய, நவீன ஆயுதங்கள் கொண்ட படையை எதிர்கொண்டபோது, அவர்கள் நேரடியாக மோதவில்லை.

காடுகளுக்குள்ளும், கிராமங்களுக்குள்ளும் மறைந்து, திடீர்த் தாக்குதல்களை நடத்தி, எதிரிக்கு இழப்புகளை ஏற்படுத்திவிட்டு, மீண்டும் மறைந்தனர்.

அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட எல்லையையும் அல்லது நகரத்தையும் "கடைசிவரை காப்பாற்றுவோம்" என்று நினைக்கவில்லை.

தேவைப்படும்போது பின்வாங்கினர்; நிலத்தை விட்டுக்கொடுத்தனர்; ஆனால் தங்கள் படை வலிமையை ஒருபோதும் இழக்கவில்லை.

இதன் மூலம் அமெரிக்கப் படைகளை நீண்ட காலத்திற்கு இழுத்தடித்து, அவர்களை மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சோர்வடையச் செய்து, இறுதியில் வெற்றியைப் பெற்றனர்.

அல்ஜீரியாவில் விடுதலை முன்னணியினர்: பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியபோதும், அதே தந்திரோபாயத்தைத்தான் பயன்படுத்தினர்.

நகரங்களில் மறைந்து தாக்குதல், மலைப்பகுதிகளில் இருந்து திடீர் தாக்குதல் என நகரும் தன்மையுடன் செயல்பட்டனர். அவர்கள் நிரந்தரமாக எங்கும் நிற்கவில்லை.

இதனால் பிரான்ஸ் இராணுவத்தால் அவர்களை முற்றிலுமாக அழிக்கவோ, ஒரே இடத்தில் சுற்றிவளைக்கவோ முடியாமல் தவித்தது.

ஆண்டுக்கணக்கில் போர் நீடித்ததால், பிரான்ஸ் நாட்டிற்கு பெரும் செலவாகிப் போய், மக்கள் ஆதரவு குறைந்து, இறுதியில் பின்வாங்க நேர்ந்தது.

இந்த வரலாற்று வெற்றிகளுக்குப் பின்னால் இருந்த அடிப்படைக் கொள்கை தெளிவு:

"நாம் நிலத்தை இழக்கலாம்; ஆனால் படை வலிமையை இழந்துவிட்டால், போராட்டமே முடிந்துவிடும். எனவே, நிலத்தைக் காப்பதற்காக அல்ல, எதிரியை சோர்வடையச் செய்வதற்காகவும், அவருக்கு இழப்புகளை ஏற்படுத்துவதற்காகவுமே போராட வேண்டும்."

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால வெற்றி: கொரில்லா முறையின் வலிமை

விடுதலைப்புலிகள் இயக்கமும் தனது தொடக்க காலத்தில் இந்த உலகப் போர் முறைகளை நன்கு பின்பற்றியது.

1980 கள் மற்றும் 90 களின் ஆரம்பம் வரை, அவர்களிடம் பெரிய அளவிலான ஆயுதங்கள் இல்லை, போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போது அவர்கள் கையாண்டது தூய கொரில்லா முறைதான்.

சிறிய குழுக்களாகப் பிரிந்து, இலங்கை இராணுவ முகாம்களைத் தாக்குதல், கண்ணிவெடித் தாக்குதல்கள் மூலம் வாகன அணிகளைச் சிதறடித்தல், திடீரெனத் தாக்கி வேகமாகப் பின்வாங்குதல் என்ற முறையில் செயல்பட்டனர்.

அவர்களுக்கு நிலப்பரப்பை நன்கு அறிந்திருந்த அனுபவமும், மக்கள் ஆதரவும் பெரும் பலமாக அமைந்தன.

இந்த முறையால்தான், இலங்கை அரசின் பெரிய படைகளாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இராணுவம் எங்கே திரும்பினாலும், அங்கே தாக்குதல் நடப்பது போல் தோன்றியது; ஆனால் தாக்கியவர்களைக் கண்டுபிடிக்கவோ, பிடிக்கவோ முடியவில்லை.

இந்தக் கட்டத்தில் விடுதலைப்புலிகள் ஒரு முக்கிய உண்மையைப் புரிந்து வைத்திருந்தனர்: "நாம் ஒரு நாட்டின் இராணுவத்தைப் போல் அல்ல, ஒரு இயக்கமாக, ஒரு போராட்ட அமைப்பாகத்தான் இயங்குகிறோம்.

எனவே நாம் நகரும் தன்மையுடன் இருந்தால் மட்டுமே உயிர்வாழ முடியும், வெற்றி பெற முடியும்." இந்த நெகிழ்வுத்தன்மைதான் அவர்களை பல ஆண்டுகள் வலுவாக நிற்க வைத்தது.

வரலாற்றுப் பிழை: கொரில்லாவைக் கைவிட்டு மரபுவழிக்கு மாறுதல்

1990 களின் நடுப்பகுதியில் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது.

இயக்கம் வளர்ச்சியடைந்ததன் விளைவாக, கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் கிடைத்த உதவிகள் மூலம் தாங்கிகள், பீரங்கிகள், கனரக ஆயுதங்கள் கைக்கு வந்தன. போராளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்தது.

இந்த வளர்ச்சியே தலைமைக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது. "நாமும் இப்போது ஒரு முழுமையான இராணுவம் போல் ஆகிவிட்டோம்; நேரடியாகப் போரிட்டு நிலங்களைக் கைப்பற்றி நிற்கலாம்; நமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நிரந்தரமாக வைத்திருக்கலாம்" என்ற முட்டாள்தனமான முடிவு எடுக்கப்பட்டது.

இதன் விளைவாக, உலக இராணுவ வரலாற்றில் சிறிய அமைப்புகள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு நிகழ்ந்தது:

கொரில்லா போர்முறை முற்றிலும் கைவிடப்பட்டது.

நகரும் தன்மை கைவிடப்பட்டது.

பதிலாக, இலங்கை இராணுவம் போலவே மரபுவழி இராணுவ அமைப்பும், தந்திரோபாயங்களும் பின்பற்றப்பட்டன.

காலாட்படை, கடற்படை, வான்படை என பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நிரந்தரமான அரண்கள், அகழிகள், தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன.

குறிப்பிட்ட எல்லைகள் வரையறுக்கப்பட்டு, "இந்த எல்லைக்குள்தான் நாம் இருப்போம், இதை விட்டுக்கொடுக்கமாட்டோம்" என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

இது என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது?

முன்பு எங்கும் இல்லாமல் எங்கும் இருந்த படைகள், இப்போது குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப்போயின.

முன்பு எதிரிக்குத் தெரியாமல் தாக்கியவர்கள், இப்போது தங்கள் இருப்பிடத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டு நின்றனர்.

முன்பு தேவைப்படும்போது எளிதாகப் பின்வாங்கியவர்கள், இப்போது "நிலத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்ற பெயரில் உயிரைக் கொடுக்கத் தொடங்கினர்.

தவறின் விளைவுகள்: வலிமையை இழத்தலும், சுற்றிவளைக்கப்படுதலும்

இந்த ஒரு முடிவுதான் இயக்கத்தின் முழு வலிமையையும் அழித்துவிட்டது. உலக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் வகையில், இலங்கை அரசு இராணுவ ரீதியாகப் பெரியதாகவும், வளம் மிக்கதாகவும், நவீன தொழில்நுட்பம் கொண்டதாகவும் இருந்தது.

மரபுவழிப் போர் என்பது அவர்களின் பலத்திற்கு ஏற்ற போர்க்களம். அங்கே சிறிய அமைப்பு பெரிய அமைப்புடன் மோதும்போது, பெரிய அமைப்புதான் வெல்லும் என்பது கணித ரீதியான உண்மை.

1. வளங்கள் விரயமாக்கப்பட்டன

மரபுவழி இராணுவத்தை பராமரிப்பது மிகவும் செலவு பிடிக்கும் செயலாகும். நிரந்தரமாக நிற்கும் படைகளுக்கு தொடர்ந்து உணவு, உடை, வெடிமருந்துகள் வழங்க வேண்டும். நிலங்களைப் பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கான வீரர்கள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், வெறுமனே காவலுக்கும் அரண்களைக் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டனர்.

கிடைத்த வரையறுக்கப்பட்ட பணமும், ஆயுதங்களும் அனைத்தும் இந்தப் பராமரிப்பிற்கே செலவழிக்கப்பட்டன; புதிய திட்டங்களுக்கோ, நகரும் தாக்குதல்களுக்கோ எதுவும் மிச்சமில்லை.

2. எதிரிக்கு இலக்கை எளிதாக்கினோம்

குறிப்பிட்ட எல்லைகளுக்குள் முடங்கியதால், இலங்கை இராணுவத்திற்கு தங்கள் தாக்குதல் திட்டங்களைத் தெளிவாக வகுக்க முடிந்தது. சுற்றிவளைத்தல், படிப்படியாக முன்னேறுதல், கனரக பீரங்கிகளால் குண்டு மழை பொழிதல், வான்வழித் தாக்குதல் போன்ற நவீன முறைகளை பயன்படுத்த முடிந்தது.

முன்பு காடுகளுக்குள் மறைந்திருந்தவர்களை, இப்போது திறந்த வெளிகளிலும், அரண்களுக்குள்ளும் அடைத்துவிட்டனர். கண்ணிவெடிகள் போட்டாலும், நவீன கருவிகள் மூலம் அவற்றை அகற்றி முன்னேற முடிந்தது.

3. பின்வாங்க முடியாத நிலை

"ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் போராட வேண்டும்" என்ற கட்டளை மிகப்பெரிய சாபமாக அமைந்தது. யாழ்ப்பாணக் குடா இழப்பு (1995-96), வன்னிப் போர்கள் மற்றும் இறுதிக் கட்டப் போர்கள் அனைத்திலும் இந்தத் தவறான கொள்கைதான் உயிரிழப்புகளை பெருமளவில் அதிகரித்தது.

நிலைமை சாதகமாக இல்லாதபோதும், வீரர்கள் பின்வாங்க அனுமதிக்கப்படவில்லை. நிலத்தை விட்டுக்கொடுத்து வீரர்களைக் காப்பாற்றியிருந்தால், அவர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து கொரில்லா முறையில் தொடர்ந்து போராடியிருக்கலாம். ஆனால் நிலத்தைக் காப்பாற்ற முயன்று படைகளையே முழுமையாக இழந்துவிட்டனர்.

4. நெகிழ்வுத்தன்மை முற்றிலும் அழிந்தது

கொரில்லாப் படைகள் எதிரியின் நகர்வுகளுக்கு ஏற்ப தங்கள் தாக்குதல் முறைகளை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் மரபுவழி அமைப்பில் கட்டளைகள் மேலிருந்து கீழே வரும்; மாற்றங்களை உடனடியாக செய்ய முடியாது.

இலங்கை இராணுவம் காலப்போக்கில் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டது, உளவுத்துறையை வலுப்படுத்தியது, புதிய தந்திரங்களைக் கையாண்டது. ஆனால் விடுதலைப்புலிகளின் போர் முறைகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. முன்பு வெற்றி தந்த அதே முறைகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தினர்.




















 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks