இந்தியா ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஒற்றை மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதுடன், விபத்து நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தவிர சுமார் 40 மாணவர்கள் அங்கிருந்துள்ளனர்.
இந்த கட்டிடம் ஏற்கனவே பாழடைந்து காணப்பட்டிருந்ததுடன், இது தொடர்பாக முன்னர் பல முறை முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக