வெள்ளி, 25 ஜூலை, 2025

ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலய உரிமையாரின் விளக்கமறியலில்!

 ஹம்பாந்தோட்டை நாகரவெவ பறவைகள் சரணாலய உரிமையாளரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


குறித்த சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்ட பகுதியில் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டார். இந்நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் சமீபத்தில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மீட்கப்பட்டன. 

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், பறவைகள் சரணாலய வளாகத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 4 கஞ்சா செடிகளுடன், சரணாலயத்தின் மேலாளர் மற்றும் களஞ்சிய கட்டுப்பாட்டாளர் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks