இந்துஸ்தான் யுனிலீவரின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.6567 கோடி சரிந்து ரூ.5,11,236 கோடியாக குறைந்தது. கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு ரூ.2301 கோடி, எஸ்பிஐ சந்தை மதிப்பு ரூ.4462 கோடி குறைந்தன.
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், ஏர்டெல் ஆகியவற்றின் சந்தை மதிப்பு ரூ.49,834 கோடி உயர்ந்தது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.25,459 கோடி அதிகரித்து ரூ.8,83,202 கோடியாக உயர்ந்துள்ளது.
எச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.12,592 கோடியும் ஐடிசி சந்தை மதிப்பு ரூ.10,073 கோடியும் அதிகரித்துள்ளன. பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ.911 கோடியும் பார்த்தி ஏர்டெல் சந்தை மதிப்பு ரூ.798 கோடி உயர்ந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக