சனி, 9 நவம்பர், 2024

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. நவம்பர் 8-ஆம் தேதி கூட்டத் தொடர் துவங்கியதும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் அந்தத் தீர்மானத்தை திரும்பப் பெறக் கோரி, வேண்டுகோள் விடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக, சபாநாயகரின் மார்ஷல்கள் சலசலப்பை ஏற்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்த பிறகு அங்கே நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் இதுவாகும். சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஐந்து நாட்களைக் கொண்ட முதல் சட்டசபை கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தது.கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 4-ஆம் தேதி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி - PDP) சட்டமன்ற உறுப்பினர் வஹீத் உர் ரஹ்மான் பாரா, சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுப்பது குறித்த முன்மொழிவைச் சட்டப்பேரவையில் முன்வைத்தார். அன்றிலிருந்தே சலசலப்பு துவங்கியது. தேசிய மாநாட்டுக் (என்.சி - NC) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக இது செய்யப்படுகிறது என்று குற்றம் சுமத்தினார்கள். "இந்த முன்மொழிவில் முக்கிய அம்சங்கள் ஏதும் இல்லை. கேமராக்களுக்காகவே இது இங்கே முன்மொழியப்படுகிறது. உண்மையாகவே இந்தத் தீர்மானத்தின் மூலம் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் முறையாக எங்களிடம் அதனை பகிர்ந்து, அது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பார்கள்," என்று கூறினார் ஒமர் அப்துல்லா. 

அதே நேரத்தில் பி.டி.பி., கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி, வஹீத் உர் ரஹ்மான் பாராவை சமூக வலைதளத்தில் பாராட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில், "அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்த பாராவை நினைத்து நான் பெருமையடைகிறேன்," என்று அவர் எழுதியிருந்தார். 

கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுப்பதற்கான முன்மொழிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த முன்மொழிவை ஆளும் கட்சியான தேசிய மாநாடு முன்வைத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த முன்மொழிவை வரவேற்றுள்ளன. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியது.அமர்வின் நான்காவது நாளில், அவாமி இத்தேஹாத் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குர்ஷித் அகமது ஷேக் சட்டமன்றத்தில் பதாகை ஒன்றை வைத்தார். 

 ‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, அரசியல் கைதிகளாகச் சிறையில் உள்ள நபர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்தப் பதாகையில் எழுதப்பட்டிருந்தது. 

குர்ஷித் அகமது ஷேக், நாடாளுமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத்தின் சகோதரர் ஆவார். இன்ஜினியர் ரஷீத் என்று பலராலும் அறியப்படும் அவர் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். குர்ஷித் இந்த பதாகையை வைத்தவுடன், அவையில் இருந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். 

குர்ஷித்திற்கு ஆதரவாகப் பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. நவம்பர் 8ம் தேதி அன்று, பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் பீப்பிள்ஸ் கான்ஃபரன்ஸ், பி.டி.பி மற்றும் அவாமி இத்தேஹாத் கட்சியினரும் சச்சரவில் ஈடுபட்டனர். அதன் பிறகு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மார்ஷல்களால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சிலர் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபைக்கு வெளியே உள்ள புல்வெளியில் அமர்ந்து தனியாக கூட்டம் ஒன்றைத் துவங்கி, மக்கள் பிரச்னைகளை கேட்க இங்கு கூட்டத்தொடரை தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பாம்புகளின் தீரா பசிக்கு மொத்தமாக அழிந்து போன பறவை இனங்கள்!!

மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவில், அதற்கு அருகிலுள்ள தீவுகளுடன் ஒப்பிடும்போது 40 மடங்கு அதிக சிலந்திகள் உள்ளன. மேலும் இந்...