இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர். இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்த போது தான் சாத்திரம் பார்த்து கூறுவதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு சாத்திரம் பார்த்துள்ளார்.
இதன் போது இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசிய நிலையில் இருவரும் சுய நினைவை இழந்த நிலையில் குறித்த பெண் அணிந்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.
மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவன் ஒருவருடன் குறித்த பகுதியில் வீதியால் சென்ற CCTV .விடியோ கட்சியும் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக