ஞாயிறு, 27 அக்டோபர், 2024

த.வெ.க முதல் மாநாடு - குவியும் தொண்டர்கள் !!

நடிகர் விஜயை காண பொதுமக்கள் காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அக்டோபர் 26ஆம் தேதியன்று மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்ட விஜய் மக்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.மாநாடு மாலை 4 மணி அளவில் ஆரம்பிக்கவுள்ளது. கொடியேற்றத்திற்குப் பிறகு கட்சித் தலைவர் விஜய்க்கான பாடலும் வெளியிடப்பட உள்ளது. 

குறைந்தது 75 ஆயிரம் நபர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள், 8 பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன. மேடையின் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மாநாடு நடக்கும் இடத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.மாநாடு நடக்கும் இடத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திடலின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

திடலின் உள்ளே 20க்கும் மேற்பட்ட அவசர ஊர்தி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.மாநாட்டிற்கு இன்று காலை முதலே ஆயிரக்கணக்கில் மக்கள் வந்த வண்ணம் இருப்பதால், திடலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டேங்குகளில் மதியம் 12 மணியளவிலேயே குடிநீர் தீர்ந்துவிட்டது. 

 "ஒரு குடிநீர் பாட்டில் வாங்க வேண்டுமென்றாலும், திடலுக்குள் இருந்து குறைந்தது 1-2 கி.மீ வரவேண்டும். மாநாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த டேங்குகளிலும் குடிநீர் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக" கூறுகிறார் பிபிசி செய்தியாளர் முரளிதரன்.

மேலும், அந்தப் பகுதியைச் சுற்றிப் பெரியளவில் கடைகள் இல்லாததால், உணவு கிடைப்பதும் ஒரு பிரச்னையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், மாநாட்டிற்கு வந்துள்ளவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். மிகக் கடுமையான வெயில், குடிநீர் மற்றும் உணவு கிடைப்பதில் சிக்கல், அதீத கூட்டம், இருக்கைகளின் போதாமை ஆகியவற்றால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தடுப்பூசி சந்தேகம் "அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்-டிரம்ப்

"தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், மாசுகள், பூச்சிக்கொல்லிகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு சேர்க்கைகள்" ஆகியவற்றிலிருந்து பாதுகா...