ஞாயிறு, 27 அக்டோபர், 2024

150 அரிய வகை சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாக்கும் 27 வயது பழங்குடியினப் பெண்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 150 வகையான பாரம்பரியான சிறுதானிய விதைகளை சேகரித்து பாதுகாத்து வரும் 27 வயது இளம் பெண் கவனம் ஈர்த்து வருகிறார். காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு, தண்ணீர் தட்டுப்பாடு, விதை முதல் உரம் வரை ரசாயன கலப்பு என பல பிரச்சனைகள் இந்திய வேளாண்மைக்கு பெரும் சவாலாக அமைந்தாலும், அதனை காக்கவும், அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் செல்லவும் அடுத்தடுத்து விவசாயிகள் இளம் தலைமுறையில் இருந்தும் வர ஆரம்பித்துள்ளனர். 



அந்த வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஒருவர் பாரம்பரிய விதைகளின் மீட்பராக விளங்கி வருகிறார். 150 வகை விதைகள்: கருவரகு, சாமை, வெள்ளை தினை, ராகி, பனி வரகு உள்ளிட்ட பாரம்பரிய சிறுதானியங்களின் விதைகளை சேமித்து வரும் லஹரி பாய், முதலில் அவற்றை தனது நிலத்தில் விதைத்து, விளைவித்துள்ளார். 

அதன் பின்னர்,, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை பத்திரமாக சேமித்து வைத்ததோடு, அதனை சுற்றியுள்ள 15 முதல் 20 கிராம விவசாயிகளுக்கு வழங்கி விதை உற்பத்திக்கும் உதவி வருகிறார்.

லஹரி பாயின் விதைகள் தற்போது 54 கிராமங்கள் வரை பரவியுள்ளன. குறிப்பாக பைகா பழங்குடியினர்களுக்கு விதைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறார். அதற்கு பதிலாக விவசாயிகள் விளைச்சலில் கிடைக்கும் சிறிய பகுதியை லஹரிக்கு பரிசாக வழங்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தடுப்பூசி சந்தேகம் "அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்-டிரம்ப்

"தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், மாசுகள், பூச்சிக்கொல்லிகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு சேர்க்கைகள்" ஆகியவற்றிலிருந்து பாதுகா...