திங்கள், 2 டிசம்பர், 2024

உடுப்பிட்டியில் பறந்த புலிகளின் கொடி – விசாரணைகளை தீவிரம்!

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை மற்றும், புலிகளின் கொடியினை பறக்க விடப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 


உடுப்பிட்டி பகுதியில் கடந்த 26ஆம் திகதி புலிகளின் சின்னத்துடனான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. மறுநாள் 27ஆம் திகதி ஒரு இடத்தில் புலிக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் வல்வெட்டித்துறை காவற்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, காவற்துறையினர் அவ்விடத்திற்கு சென்று அவற்றை அகற்றியதுடன், அவற்றை சான்று பொருளாக காவல் நிலையம் எடுத்து சென்று இருந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவற்துறையினர் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை தீபமலையில் மண் சரிவு !!

திருவண்ணாமலை தீபமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மயமான 7 பேரை தேடும் பணி 2-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கன மழையால் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.

இதனால் தீப மலையிலிருந்து மண் சரிவு ஏற்பட்டு வ.உ.சி நகர் 9வது தெரு மேட்டில் உள்ள வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர்.

 ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. 

 இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று பார்வையிட்டனர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். 

இந்நிலையில், 2வது நாளாக மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் என்.டி.ஆர்.எஃப். உடன் இணைந்து மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் மீது விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே வ.உ.சி. நகரில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

புலம்பெயர் வாழ் உறவுகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்!

தாயகத்தில் வடக்கு கிழக்குப்பிரதேசங்களில், அண்மையில் தாக்கிய சூறாவளி! வெள்ளப்பெருக்கினால் அல்லலுறும்,எமது தாயக மக்களிற்கு, உடனடி நிவாரணம் வழங்கும் உங்கள் உன்னத செயற்பாட்டிற்கு தலைவணங்குகின்றோம். 


இருந்தாலும் இன்று நாம் ஒரு புதுவிதமான "அரசியல் உளவியல்"போருக்கு முகங்கொடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். கடந்தகால சிங்கள அரச இயந்திரத்தைவிட "அனுர அலை"என்பது தமிழ் மக்களின் உள்ளங்களை கவர்ந்ததென்பதற்கு மாற்றுக்கருத்தில்லை, அனுரவின் தமிழர் நோக்கிய பார்வை அது நேர்மையானதா?

அல்லது கண்துடைப்பா?என்பதை காலந்தான் பதில் சொல்லும். ஆனாலும் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் அதற்கு அனுர அரசு தமிழ் மக்களிற்கு ஆற்றும் சேவை இவற்றை நாம் தூரநோக்கோடு புரிந்துகொள்ள வேண்டும். 01).உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டது. 02).அவர்களிற்கான உடனடி நவாரணமும் அரச இயந்திரத்தால் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 03).அத்துடன் அரச ஊழிர்களும், தொண்டர்களும் களத்தில் நிற்பதைக்காணக்கூடியதாகவுள்ளது.

 எம்மவர்களும் அவர்களிற்கு நிகராக களத்தில் நிற்கின்றனர். இங்குதான் நாம் புத்திசாதுர்யமாக எமது செயற்பாட்டை எமது மக்களிற்கு,ஆற்ற வேண்டிய கடைப்பாற்றில் உள்ளோம். முக்கியமா!அனுர அரசின் செயற்பாட்டிற்கு எமது தாயக மக்களின் "மனித வலுக்களை" நாம் உபயோகிப்பது அல்லது கொடுப்பது தற்போதைய அரசின் செயற்பாட்டிற்கு சாலச்சிறந்தாகும்.

 அதைவிடுத்து புலத்தில் இருந்து கடந்த காலங்களில் உடனடி நிவாரணம் வழங்கிய அதே பாணியில் நாம் ஒவ்வொரு அமைப்புக்களை உருவாக்கி செயற்படுவோமாக இருந்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தி்ல் ஏறிய கதையாப்போய்விடும். ஆகவே அன்பார்ந்த புலம்பெயர் வாழ் உறவுகளே! அங்கிருக்கும் மக்களின் அவல நிலையைப்போக்குவதற்கு,அங்கு இயங்கும் நிறுவனங்கள் அல்லது அரசு உதவிகள் மூலம் உதவிகளைப்பெற்று அம்மக்களிற்கு உதவிகளை வழங்குவது தற்போதைய அனுர அரசின் செயற்பாட்டிற்கு சாலச்சிறந்ததாகும்.இது சிங்கள அனுர அரசின் தார்மீகப்பொறுப்புமாகும்..

அனுர அரசிற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் இந்த அனர்த்த நிவாரணத்திற்கு! இந்தியா,சீனா,பாகிஸ்தான்,அமெரிக்கா உட்பட சர்வதேசங்களின் பாரிய நிவாரண உதவிகள் கடந்த காலத்தில் இருந்து கிடைத்துக்கொண்டிருப்பதை பல செய்திகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது. 

ஆகவே புலத்தில் இருக்கும் எம் அன்பான உறவுகள் இவ்விடர் காலத்தை அனுர அரசிற்கு கொடுத்து அந்த சர்வதேச நிவவாரணம் தமிழ் மக்களையும் சென்று சேர நாம் தற்போது, வழிவிட்டுக்கொடுப்போம். இந்த செயற்பாடுகள் மக்களின் தேவைகளை செயற்படுத்தாவிடின் மேற்குறித்த அரச இயந்திரங்களிற்கு சுட்டிக்காட்டுவோம். 

இவ்விடயமும் கைகூடாவிடின், எமது மக்களைப்பாதுகாக்கின்ற தார்மீகக்கடமைகளை நாமே செய்வோம்.அதுவரை பொறுமையுனும், நீண்டகால நோக்குடனும் செயற்படுவது,தமிழ் மக்களின் வளங்களை தளத்திலும் புலத்திலும் பாதுகாப்பது எமது தார்மீகப்பொறுப்புமாகும். வெறும் உணவுப்பொதியைக்கொடுத்து விட்டு அவர்களைக்கைவிடாமல் அவர்களிற்கான நீண்டகால வாழ்வாதார முறைமைகளைக்கொடுப்பது,எமதும் அரசினதும் கடமையாகும். 

முதலில் அரசின் செயற்பாடுகளை அவதானத்துடன் பார்ப்போம். இந்த நேரத்தில் ஆங்காங்கே! சிறு சிறு அமைப்புக்களாக பணத்தைச்சேர்த்து தனித்தனி செயற்படுத்தப்படாமல் ஒட்டுமொத்த ஒரு அபை்பாக கடந்தகாலங்களில்"தமிழர் புனர் ாழ்வுக்கழகம்" இயங்கிய அதே வழிமுறையில் நாங்கள் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம். 
நன்றி. 
இங்ஙனம் புலத்தில் இருந்து உங்களில் ஒருவன்

​​களனி பெத்தியாகொட காலாவதியான பெருமளவு பொருட்கள் சிக்கின!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தகவல்களை மாற்றி சந்தையில் வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட்டருந்த இறக்குமதி செய்யப்பட்ட கடலை, அரிசி மற்றும் காலாவதியான பேரீச்சம்பழம் களஞ்சியப்படுத்தப்பட்ட பல களஞ்சியசாலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.

 

 ஆய்வு கூடங்களுக்கு விநியோகிப்பதற்கு தயாரிக்கப்பட்ட 50 லீற்றர் காலாவதியான இரசாயனப் பொருட்களையும் அந்த அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட காரியாலய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

கடந்த 28ஆம் திகதி களனி பெத்தியாகொட பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அதிகாரசபை இந்த பொருட்களை கண்டறிந்துள்ளது. மேலும் கடந்த 28ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளால் பராமரிக்கப்படும் களஞ்சியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ​​காலாவதியான 4.6 தொன் காய்ந்த மிளகாய்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

காலாவதியான பொருட்களுடன் காலாவதியாகாத பொருட்களை சேமித்து வைப்பது நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குற்றமாகும், என்பதால் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பண்டிகை காலத்தில் காலாவதியான பொருட்கள், தகவல் மாற்றப்பட்ட பொருட்களை சந்தைக்கு அனுப்பும் வர்த்தகர்கள் மற்றும் களஞ்சியசாலைக்காரர்களைக் கண்டறிய மேலதிக சோதனைகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

 இதன்படி, வழங்குனர்களால் அத்தகைய பொருட்களை வழங்கும் போது அவதானமாக இருக்கமாறும், அத்தகைய தகவல்கள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் குறுகிய தொலைபேசி இலக்கமான 1977 க்கு தகவல் வழங்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டில் கிளிநொச்சி நபர் கைது!

பிரித்தானியாவில் (UK) இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு பயணத்தடை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 43 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரித்தானியாவில் இருந்து நேற்று (01) இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


 2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானிய குடியுரிமையை பெற்றுச் சென்ற சந்தேகநபர், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதற்காக பணம் சேகரித்து கொழும்பு மற்றும் வன்னிப் பிரதேசங்களில் அவ்வாறான நிதிகளை விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் நேற்று இலங்கை திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்ட 43 வயதுடையவர் என்பதும், தற்போது அவர் பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி, விமான நிலைய காவல்துறையினர் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்!!

நெல்லை: ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிபு ஆண்டனி (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.   

இவருக்கு நெல்லை, ராதாபுரத்தில் 60 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது. அந்த நிலத்தை விற்க பலரிடம் பேசிய அவர் ஆற்றங்கரைபள்ளிவாசலில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளரான கூத்தங்குழியைச் சேர்ந்த டான் பாஸ்கோ (52) என்பரிடமும் பேசியுள்ளார்.    

விலையில் இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் முடவன்குளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் புரோக்கருமான சுப்பிரமணி (38), கூத்தங்குழியைச் சேர்ந்த சரோ ஆகியோருடன் சேர்ந்து டான் பாஸ்கோ மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். திசையன்விளையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கு மீண்டும் உடன்பாடு ஏற்படவில்லை.

 இதனால் ஆத்திரமடைந்த டான் பாஸ்கோ உட்பட 3 பேர் சேர்ந்து சிபு ஆண்டனியை கடத்திச் சென்று, ஆற்றங்கரைபள்ளிவாசலில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் அடைத்து வைத்து 30 சென்ட் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் டான்பாஸ்கோ, சுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரோ என்பவரை தேடி வருகின்றனர்.

வெள்ளி, 29 நவம்பர், 2024

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை! யாழ் . பல்கலை

அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 


மேலும் தெரிவிக்கையில், யாழ்.பல்கலைக்கழகத்தில், கடந்த 03 தினங்களாக இடம்பெறவிருந்த பரீட்சைகள் யாவும் கலைப்பீடாதிபயினால் பிற்போடபட்டுள்ளது. அதேவேளை பல்கலைக்கழகத்தில் போதிய விடுதி வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பல்கலைக்கழக சூழலை அண்டிய பகுதிகளில் வாடகை கொடுத்து விடுதிகளில் தங்கி கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. அதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் எம்மால் இயன்றளவு உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம். 

இந்த சாவாலில் இருந்து நாங்கள் மீண்டு வந்து கொண்டுள்ளோம் . கலைப்பீட மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் 1020 மாணவர்களுக்கு உணவினை வழங்கியுள்ளோம். தொடர்ந்தும் உணவுகளையும் வழங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என மேலும் தெரிவித்தார். ைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள்நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். 

 இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை.

 அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழ் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள். இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். 

 அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது. வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. 

ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது. கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. 

அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் . கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக பொருளாதாரரீதியாக மேற்கொள்ளப்படுவது ஆகும் என மேலும் தெரிவித்தார்

சிவப்பு வணக்கம்

இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்!!

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள்...