ஞாயிறு, 1 டிசம்பர், 2024

பயங்கரவாத குற்றச்சாட்டில் கிளிநொச்சி நபர் கைது!

பிரித்தானியாவில் (UK) இருந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு பயணத்தடை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 43 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரித்தானியாவில் இருந்து நேற்று (01) இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


 2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானிய குடியுரிமையை பெற்றுச் சென்ற சந்தேகநபர், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதற்காக பணம் சேகரித்து கொழும்பு மற்றும் வன்னிப் பிரதேசங்களில் அவ்வாறான நிதிகளை விநியோகித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் நேற்று இலங்கை திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்ட 43 வயதுடையவர் என்பதும், தற்போது அவர் பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி, விமான நிலைய காவல்துறையினர் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்!!

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள்...