ஞாயிறு, 1 டிசம்பர், 2024

புலம்பெயர் வாழ் உறவுகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்!

தாயகத்தில் வடக்கு கிழக்குப்பிரதேசங்களில், அண்மையில் தாக்கிய சூறாவளி! வெள்ளப்பெருக்கினால் அல்லலுறும்,எமது தாயக மக்களிற்கு, உடனடி நிவாரணம் வழங்கும் உங்கள் உன்னத செயற்பாட்டிற்கு தலைவணங்குகின்றோம். 


இருந்தாலும் இன்று நாம் ஒரு புதுவிதமான "அரசியல் உளவியல்"போருக்கு முகங்கொடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். கடந்தகால சிங்கள அரச இயந்திரத்தைவிட "அனுர அலை"என்பது தமிழ் மக்களின் உள்ளங்களை கவர்ந்ததென்பதற்கு மாற்றுக்கருத்தில்லை, அனுரவின் தமிழர் நோக்கிய பார்வை அது நேர்மையானதா?

அல்லது கண்துடைப்பா?என்பதை காலந்தான் பதில் சொல்லும். ஆனாலும் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் அதற்கு அனுர அரசு தமிழ் மக்களிற்கு ஆற்றும் சேவை இவற்றை நாம் தூரநோக்கோடு புரிந்துகொள்ள வேண்டும். 01).உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டது. 02).அவர்களிற்கான உடனடி நவாரணமும் அரச இயந்திரத்தால் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 03).அத்துடன் அரச ஊழிர்களும், தொண்டர்களும் களத்தில் நிற்பதைக்காணக்கூடியதாகவுள்ளது.

 எம்மவர்களும் அவர்களிற்கு நிகராக களத்தில் நிற்கின்றனர். இங்குதான் நாம் புத்திசாதுர்யமாக எமது செயற்பாட்டை எமது மக்களிற்கு,ஆற்ற வேண்டிய கடைப்பாற்றில் உள்ளோம். முக்கியமா!அனுர அரசின் செயற்பாட்டிற்கு எமது தாயக மக்களின் "மனித வலுக்களை" நாம் உபயோகிப்பது அல்லது கொடுப்பது தற்போதைய அரசின் செயற்பாட்டிற்கு சாலச்சிறந்தாகும்.

 அதைவிடுத்து புலத்தில் இருந்து கடந்த காலங்களில் உடனடி நிவாரணம் வழங்கிய அதே பாணியில் நாம் ஒவ்வொரு அமைப்புக்களை உருவாக்கி செயற்படுவோமாக இருந்தால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தி்ல் ஏறிய கதையாப்போய்விடும். ஆகவே அன்பார்ந்த புலம்பெயர் வாழ் உறவுகளே! அங்கிருக்கும் மக்களின் அவல நிலையைப்போக்குவதற்கு,அங்கு இயங்கும் நிறுவனங்கள் அல்லது அரசு உதவிகள் மூலம் உதவிகளைப்பெற்று அம்மக்களிற்கு உதவிகளை வழங்குவது தற்போதைய அனுர அரசின் செயற்பாட்டிற்கு சாலச்சிறந்ததாகும்.இது சிங்கள அனுர அரசின் தார்மீகப்பொறுப்புமாகும்..

அனுர அரசிற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் இந்த அனர்த்த நிவாரணத்திற்கு! இந்தியா,சீனா,பாகிஸ்தான்,அமெரிக்கா உட்பட சர்வதேசங்களின் பாரிய நிவாரண உதவிகள் கடந்த காலத்தில் இருந்து கிடைத்துக்கொண்டிருப்பதை பல செய்திகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது. 

ஆகவே புலத்தில் இருக்கும் எம் அன்பான உறவுகள் இவ்விடர் காலத்தை அனுர அரசிற்கு கொடுத்து அந்த சர்வதேச நிவவாரணம் தமிழ் மக்களையும் சென்று சேர நாம் தற்போது, வழிவிட்டுக்கொடுப்போம். இந்த செயற்பாடுகள் மக்களின் தேவைகளை செயற்படுத்தாவிடின் மேற்குறித்த அரச இயந்திரங்களிற்கு சுட்டிக்காட்டுவோம். 

இவ்விடயமும் கைகூடாவிடின், எமது மக்களைப்பாதுகாக்கின்ற தார்மீகக்கடமைகளை நாமே செய்வோம்.அதுவரை பொறுமையுனும், நீண்டகால நோக்குடனும் செயற்படுவது,தமிழ் மக்களின் வளங்களை தளத்திலும் புலத்திலும் பாதுகாப்பது எமது தார்மீகப்பொறுப்புமாகும். வெறும் உணவுப்பொதியைக்கொடுத்து விட்டு அவர்களைக்கைவிடாமல் அவர்களிற்கான நீண்டகால வாழ்வாதார முறைமைகளைக்கொடுப்பது,எமதும் அரசினதும் கடமையாகும். 

முதலில் அரசின் செயற்பாடுகளை அவதானத்துடன் பார்ப்போம். இந்த நேரத்தில் ஆங்காங்கே! சிறு சிறு அமைப்புக்களாக பணத்தைச்சேர்த்து தனித்தனி செயற்படுத்தப்படாமல் ஒட்டுமொத்த ஒரு அபை்பாக கடந்தகாலங்களில்"தமிழர் புனர் ாழ்வுக்கழகம்" இயங்கிய அதே வழிமுறையில் நாங்கள் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம். 
நன்றி. 
இங்ஙனம் புலத்தில் இருந்து உங்களில் ஒருவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்!!

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள்...