வெள்ளி, 29 நவம்பர், 2024

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை! யாழ் . பல்கலை

அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி வருவதாகவும் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 


மேலும் தெரிவிக்கையில், யாழ்.பல்கலைக்கழகத்தில், கடந்த 03 தினங்களாக இடம்பெறவிருந்த பரீட்சைகள் யாவும் கலைப்பீடாதிபயினால் பிற்போடபட்டுள்ளது. அதேவேளை பல்கலைக்கழகத்தில் போதிய விடுதி வசதிகள் இன்மையினால் மாணவர்கள் பல்கலைக்கழக சூழலை அண்டிய பகுதிகளில் வாடகை கொடுத்து விடுதிகளில் தங்கி கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. அதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் எம்மால் இயன்றளவு உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தோம். 

இந்த சாவாலில் இருந்து நாங்கள் மீண்டு வந்து கொண்டுள்ளோம் . கலைப்பீட மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் 1020 மாணவர்களுக்கு உணவினை வழங்கியுள்ளோம். தொடர்ந்தும் உணவுகளையும் வழங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என மேலும் தெரிவித்தார். ைத்து தமிழ் மக்களை கணிப்பிடாதீர்கள்நாடாளுமன்ற தேர்தல் முடிவினை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் தீர்வினை சீனா கணிப்பிடமுடியாது என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சீனதூதுவர் தமிழ் மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார். 

 இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீன தூதுவருக்கு சிறிய தெளிவு படுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன். தமிழ் மக்களை பொறுத்தவரையில் காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை.

 அரசியல் கைதிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு வருகின்றார்கள். அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும் மாறியிருக்கின்றன தவிர தமிழ் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே இருக்கின்றார்கள். இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள். 

 அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது. வெறுமனே பாராளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி உள்ளது. 

ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக அதனை குறிப்பிட்டுள்ளது. கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது. 

அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் . கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான் இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக பொருளாதாரரீதியாக மேற்கொள்ளப்படுவது ஆகும் என மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை! யாழ் . பல்கலை

அனர்த்தம் காரணமாக தனியார்களின் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழ...