வியாழன், 26 மார்ச், 2026

ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் US Abraham Lincoln!

ஈரானிய இராணுவ இலக்குகளைக் குறிவைத்து, யு.எஸ்எ.ஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பல் அப்பகுதியில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

 ஈரானிய இராணுவம் கப்பலைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதனால் கப்பல் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஈரான் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

இருப்பினும், தங்களது நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், திட்டமிட்டபஈரானிய இராணுவ இலக்குகளுக்கு எதிராக USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலிலிருந்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைப்படை (CENTCOM) தெரிவித்துள்ளது. டி அந்தக் கப்பல் ஈரானிய இலக்குகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ஏவுகணைத் தளங்கள், அணு திட்டம் தொடர்பான இடங்கள் உள்ளிட்ட இராணுவ இலக்குகளைத் தாக்கி வருகின்றன. 

இந்த நடவடிக்கையில் சான் டியாகோவை தளமாகக் கொண்ட நிமிட்ஸ் வகுப்பு விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.“கப்பலிலிருந்து F/A-18 சூப்பர் ஹார்னெட் போன்ற போர் விமானங்கள் தொடர்ந்து ஏவப்பட்டு ஈரானிய இலக்குகளைத் தாக்கி வருகின்றன. 

CENTCOM, “ஆபிரகாம் லிங்கன் கேரியர் ஸ்ட்ரைக் குழு ஈரானிய வான்வெளியை ஆதிக்கம் செலுத்தி வருகிறது” என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரானிய இராணுவம் (IRGC) தங்கள் கடற்கரைப் பகுதியிலிருந்து Qader க்ரூஸ் ஏவுகணைகளை யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் நோக்கி ஏவியதாகக் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks