திங்கள், 30 மார்ச், 2026

நாவற்குழி சிறுமி துஸ்பிரயோகம் நாவற்குழி பிக்கு கைது.

நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

 இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினாட குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியவேளை பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks