துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில் நடந்த டிரோன் தாக்குதால் அங்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. சவுதி, ஓமன், பஹ்ரைன், துபாய் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தாளங்களை குறிவைத்து, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை யு.ஏ.இ மீது ஈரான் 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது.
இந்நிலையில் இன்று துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. எண்ணெய் கிடங்கில் தீ பற்றி எரிந்தது. நீண்ட நேரம் போராடி தீயை துபாய் தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் விரைந்தது. தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டது. எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை துபாய் மீட்புக்குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக