அதாவது, கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் எண்ணெய் சரக்கு அமெரிக்க டொலருக்கு பதிலாக சீன யுவான் நாணயத்தில் (Yuan) வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டால், சீனாவுடன் உள்ள பொருளாதார உறவுகளை பாதுகாப்பதோடு, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உலக எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீாிணை வழியாக உலகளவில் அனுப்பப்படும் எண்ணெயின் பெரும் பகுதி கடந்து செல்கிறது. இதனால் அந்தப் பகுதியில் எடுக்கப்படும் எந்த முடிவும் உலக எரிசக்தி சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், சீனாவுடன் தொடர்புள்ள கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கும் திட்டம், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தமாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக