ஒரு மாநிலக் கட்சியின் தலைவராக இருந்தும், தன் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலும், பொதுப் பேருந்துகளிலும் பயணித்து எளிமைக்கு இலக்கணம் வகுத்தவர்.
ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராகவும், தாமிரபரணி உள்ளிட்ட நதிகளைக் காக்கவும் நீதிமன்றப் போராட்டங்களை முன்னெடுத்தவர்.
தமிழக அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதையும், அதனுடன் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் மக்கள் நலனுக்காக அரசிடமே திருப்பிக் கொடுத்தவர்.
அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக