செவ்வாய், 27 ஜனவரி, 2026

திருகோணமலையில் பதற்றம் - மூவர் மாயம்:

திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான லாஹீரின் மகனான முக்சித் என்பர் தொடர்பிலேயே இவ்வாறு உதவி கோரப்பட்டுள்ளது. தரம் 12 இல் ஸ்ரீ கோணேஸ்வர இந்து கல்லூரியில் கல்வி கற்கும் குறித்த மாணவர், நேற்று (26-01-2

026) திங்கட்கிழமை காலை 7.00 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவரின் துவிச்சக்கர வண்டி மற்றும் புத்தகப் பை என்பன இந்து கல்லூரியின் மைதானத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று (27-01-2026) காலை வரை எவ்வித தகவலும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரிந்தவர்கள் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். திருகோணமலையை சேர்ந்த மேலும் இருவரும் இவ்வாறு காணமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தநிலையில், குறித்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பரபரப்படைய வேண்டாம் என்றும் மற்றும் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks