இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மய்யம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமியின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்தது.
இது 27.40 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.38 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (15.2.2026) இரவு 8.50 மணியளவில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சாங்லாங் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மய்யத்தின் தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கி.மீ. ஆழத்தில், 27.32 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 96.12 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் மய்யம் கொண்டிருந்தது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக