பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனால் கூட்டம் நீண்ட இழுபறியுடன் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.தையிட்டி விகாரைக்கு என 19 பேரின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தங்கள் காணிகளின் உறுதிகளை விகாரை பிரச்னையை தீர்த்து வைக்கிறோம் என வரும் சகல தரப்பினருக்கும் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில் விகாரை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு குழுவிடமும் எங்கள் காணி உறுதியை வழங்கியுள்ளோம்.
ஆனால் , விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அவர்கள் இதுவரை பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
அந்த கலந்துரையாடல் எவற்றுக்கும் எம்மை அழைக்கவில்லை. விகாரதிபதியை மாத்திரம் அழைத்து கலந்துரையாடுகின்றனர்.
இது ஒரு பக்க சார்பான நடவடிக்கை என்பது அப்பட்டமானது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கொழும்பில் கூடி கலந்துரையாடுகின்றனர்.
அங்கு என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் எமக்கோ , ஊடகங்களுக்கோ எவரும் தெரிவிப்பதில்லை.
இரகசிய கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் இருந்து மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , தையிட்டி விகாராதிபதி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடுகின்றனர்.
கலந்துரையாடலுக்கு சென்ற மாவட்ட செயலரோ , கலந்துரையாடலை நடத்தியவர்களோ , கூட்டத்தில் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் வெளியே சொல்லாது , இரகசியமாகவே கலந்துரையாடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக