எனினும், இதன்போது, எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை என ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.கைவிடப்பட்டுள்ள தனியார் காணியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் காவல்துறை அனுமதியை பெற்றனர்.
இதனையடுத்து, குறித்த காணியில் அடையாளமிடப்பட்ட நிலத்தை இன்று (10.01.2026) காலை 9 மணிக்கு ஏறாவூர் காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையில் கிராம உத்தியோகத்தர் உட்பட தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனையிட்டனர்.இந்த சோதனையில் எந்த விதமான ஆயுதங்களோ பொருட்களோ மீட்கப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக