இவர்களோடு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவரிடம் அப்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
அதில், ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் கரூர் எடுத்து சென்றுள்ளனர்.
பனையூரில் இருந்து கரூர் எடுத்து சென்ற சிபிஐ அதிகாரிகள், பேருந்தில் சோதனை செய்து வருகிறார்கள். விஜய் பிரசார வாகனத்தின் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக