இவ்வாறு வெள்ளத்தில் இருந்து விமானம் ஊடாக மீட்கப்பட்டவர்கள் சீனா பே விமான படை தளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர்.
இதேவேளை மேலும் 22 பேர் விமானம் மூலம் மீட்க பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது தெரிவித்தார்.மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 13 இடங்களில் உடைப்பெடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக