ஞாயிறு, 30 நவம்பர், 2025

இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரட்டைப் பேரழிவில் 600 பேர் பலி!!

 வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 600 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா என்பது அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் சீரற்ற காலநிலையை எதிர்கொள்ளும் தீவுக்கூட்டம் ஆகும். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள கடுமையான பருவமழை, மண்ணின் ஈரப்பதத்தை அதிகரித்து, தொடர்ந்து வந்த நிலநடுக்கத்துடன் இணைந்து, பல பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளுக்கு வழிவகுத்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பல இடங்களுக்கான வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றடைவதில் பெரும் சவாலை எதிர்கொள்வதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தோனேசியா சந்தித்துள்ள இந்த இரட்டைப் பேரழிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks