தன்னுடைய கலை மற்றும் வர்த்தகப் பார்வையால், பல தரமான திரைப்படங்களை அளித்து, தமிழ்த் திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள ஏவிஎம் நிறுவனம் நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்திரையில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன். தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளார்.
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் கவனித்துள்ளஇவர் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக