பூஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தவிர, 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (27) காலையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மேற்பார்வையின் கீழ், சிறைச்சாலை பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவில் உள்ள சிறைக்கூடங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக