தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் தமிழ்நாடு கரை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகரும். அப்படி நகரும் போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கரைகளை ஒட்டி நிலவக் கூடும். அதற்கு அடுத்த 12 மணி நேரங்களில் வட தமிழ்நாடு, புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கரைகளை ஒட்டி இது நகரக்கூடும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.தமிழகத்தில் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக