புதன், 22 அக்டோபர், 2025

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் “மிடிகம லாசா” என்றும் அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொல்லப்பட்டு்ளார். இனம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் இன்று புதன்கிழமை (22.10.25) இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. 

பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவற்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு மரணமடைந்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks