இன்று கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக-வை சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி.வில்சன், அதிமுக-வைச் சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் முன்னுறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தோ்வாகினர்.
திமுக கூட்டணியின் ஆதரவுடன் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 6 பேரும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த 6 எம்.பி.க்களும் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி ஏற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இதேபோல, திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் தமிழில் உறுதி ஏற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அதிமுகவின் இன்பதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. தனபால் ஆகிய இருவரும் வருகிற ஜூலை 28ம் தேதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக