வெள்ளி, 18 ஜூலை, 2025

தையிட்டிக்கு இரகசியமாக சென்ற அமைச்சர்!!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (17.07.25) மாலை எவருக்கும் அறிவிக்காது இரகசியமான முறையில் சென்றுள்ளனர். 

அந்நிலையில், வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள் சிலரும் விகாரைக்கு சென்று இருந்தனர். அவ்வேளை அங்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோர் அங்கு நின்றிருந்தனர். அமைச்சர் குழாம் அங்கு வருகை தருவது தொடர்பில் தமக்கு எதுவும் அறிவிக்காது இரகசியமாக வந்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம் தெரிவித்தனர். 

இரகசியமான முறையில் விகாரைக்கு சென்று பேச வேண்டிய தேவை ஏன் அமைச்சருக்கு ஏற்பட்டது என சபை உறுப்பினர்கள் தமக்குள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதேவேளை அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தையிட்டி விகாரை பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சந்திரசேகரர் தெரிவித்தார். 

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற போது அமைச்சரும் , மாவட்ட செயலரும் தையிட்டி விகாரைக்கு செல்வது தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 நேற்று நடைபெற்ற அமர்வில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிற்பகல், பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக பிரதேச சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். 

 குறித்த தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னியசிங்கம் பிரபாகரன், இந்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக வேண்டும் என தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்த தவிசாளர், குறித்த வழக்கில் பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இலவசமாகவே பணியாற்றுவார் என சபையில் வாக்குறுதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர...