பிள்ளைகளுக்கு அதீத செல்லம் & செல்வம் கொடுப்பதை விட கொஞ்சம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய காலம் இதுவென இப்போதாவது உணர்வீர்களானால் தப்பிக் கொள்ளலாம்.
இப்போதெல்லாம் பிள்ளைகள் over smart ஆக இருக்கின்றார்கள்.
எல்லாம் செய்து விட்டு துஷ்பிரயோகம், சிறுவர் உரிமைகள் என்ற போர்வையில் புகுந்து கொள்கிறார்கள்.
அண்மையில் ஒரு சம்பவம் ஹோமாகம பகுதியில் பதினைந்து வயது மாணவி சக மாணவ நண்பர்கள் மற்றும் காதலனால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.
இதில் அவர்களிடம் தான் போனதாகவும் ஒரேநாளில் மூன்று வெவ்வேறு வீடுகளில் தன்னை மாற்றி மாற்றி அழைத்துச் சென்று இந்த துஷ்பிரயோகம் இடம்பெற்றது என்றும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
என் கேள்வி எல்லாம் இதை எந்த அடிப்படையில் துஷ்பிரயோகம் என்றும் வல்லுறவு என்றும் சொல்லலாம்? வெறும் மாணவியின் வயதை வைத்து இலங்கை சட்டத்தை வைத்து மட்டுமே.
மற்றபடி இங்கே பாலர் பள்ளி பிள்ளைகளுக்கு கூட தொடுகையை இனம்பிரிக்கத் தெரியும்.
தினம் தினம் பலநூறு ஆசிரியர்கள் நாடெங்கும் பொலிஸ் நிலையத்தில் குற்றவாளிகளாக தலைகுனிந்து வாக்குமூலம் பதிவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஏன் என்றால் உங்கள் பிள்ளைகளை கண்டித்து கற்பித்த குற்றத்திற்காக…
இப்ப யாரைக் கேட்டாலும் “நாம் நம்மட கடமையை செய்வோம் அது படிச்சா என்ன? விட்டால் என்ன சேர்?”என்று ஆதங்கத்துடன் சொல்வதைத் தான் பார்க்க முடிகிறது.
ஆசிரியரும் வைத்தியரும் கடமையை கடமைக்கு செய்தால் “சுகம் வரும் ஆள் தப்பாது”
இதில் முன்னாள் நீதிவான் இளஞ்செழியன் ஐயாவும் தன் பங்கிற்கு புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.ஒரு பேச்சில் அவர் சொன்னார் “படிப்பிக்கிற வேலையை மட்டும் பாருங்கள்”என்று
ஐயா!
சத்தியமா இப்ப அதை மட்டும் தான் பார்க்கிறோம்.
எங்களுக்கு நூற்றுவீத சித்தி காணும்.மரியாதை எல்லாம் யாருக்கு வேணும்?
யாராவது ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்குள்ளாவதற்காக வழக்கு பதிவு செய்தால் நாடெங்கும் பல வழக்குகள் வரும்..
இனியாவது யோசிப்பீங்களா பெற்றோர்களே?
ஆதங்கத்துடன்
மோ.கோகுலன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக