யாழ்ப்பாணம் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன் , காவல்நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்து வந்த நிலையில், காவல்துறை அதிகாரியின மகன் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு மன்று காவல்துறையினருக்கு கட்டளையிட்டுள்ளது.
அதேவேளை சந்தேக நபரின் தந்தையான காவல்துறை அதிகாரி முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்கு இடமாற்றபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக