புதன், 12 மார்ச், 2025

தலைவருக்கு வீரச்சாவு அறிவிக்க வந்துவிட்டார்கள் துரோகிகள்.

தலைவருக்கு வீரச்சாவு அறிவித்த புலம்பெயர் போலி புலிகளே உங்களில் முதுகெலும்பு உள்ளவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் தலைவரின் பாதுகாப்பு அணியில் நான் இருந்தேன் என்று ஒருவர் சொல்லுங்கள் பார்க்கலாம். துரோகிகளே உயிரோடு இருக்கும் எங்கள் தலைவருக்கு அவசரமாக நீங்கள் வீரச்சாவு அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? 


நிதி துறையில் இருந்த தமிழ் மாறனை நேற்றைய அறிவித்தலுக்கு முதல் யாருக்காவது தெரியுமா? அவரின் அறிவிப்பின் போது அவரது முகத்தை நன்கு கவனித்துப் பாருங்கள் அவரின் முகத்தில் மரண பயம் தெரிகின்றது. அவரின் மனைவி சில தினங்களுக்கு முன்னர் கூறியுள்ளார் தலைவர் எழுபது வயதில் வந்து என்ன செய்யப்போகிறார் என்று. 

அதேபோல் தமிழ் மாறனின் மகனும் சில இளைஞர்களுக்கு சொல்லியிருக்கிறார் தலைவர் வீரச்சாவு என்று அப்பா எல்லோருக்கும் சொல்லும்படி சொன்னார் என்று. இது யாரைத் திருப்திப்படுத்துவதற்காக? முட்டாள் கூட்டங்களே தலைவரின் இலட்சியத்தை தொடர்வோம் என்று உளறுகிறீர்கள் தலைவரின் இலட்சியம் தமிழீழம் என்பது உங்களுக்கு தெரியாதா? அதை உங்களால் வென்றெடுக்க முடியுமா? 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீங்கள் பெற்ற தமிழீழம் எது அது எங்கு உள்ளது ? ஒரு கரும்புலி தன் இலக்கை அடையும் போதும் தலைவரின் காலத்தில் தமிழீழம் அமையவேண்டும் என்றுதான் சொல்லுவான் அப்படிப் பட்ட தலைவனுக்கு நிகர் யார் உண்டு.

தலைவர் இறந்துவிட்டார் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உண்டு. முன்னர் தொடக்கம் இறுதிவரை தலைவரின் பாதுகாப்பின் முழுப் பொறுப்பும் பொட்டு அம்மானுடையது. தலைவரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது அவருடைய கடமை தலைவர் ஓடி ஒழிக்கவும் இல்லை தற்கொலை செய்யவும் இல்லை அவர் தற்காலிக பின்வாங்கல் முறையில் பாதுகாப்பாக உள்ளார்.

 முள்ளிவாய்க்கால் களமுனையை பொறுத்தவரையில் எமது இலக்கை அடைவதற்காக தந்திரோபாய பின்வாங்கல் சாத்தியமானது என்பதே இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அந்த முடிவை தளபதி பொட்டு அம்மான் கையில் எடுத்து செயற்பட்டார். இந்த விடையம் பங்கரில் மனைவி பிள்ளைகளோடு படுத்து கிடந்தவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. 

ராதா படையணியில் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தவர்களுக்கு தலைவரின் உள்வட்டப் பாதுகாப்பு முறைகள் தெரிய வாய்ப்பில்லை. இறுதி நேரத்தில் சுவர்ணன் தலைமயில் முக்கிய பாதுகாப்பு அணி தலைவரை பாதுகாப்பாக வெளியே நகர்த்தி இன்றுவரை தலைவருக்கு அரணாக இருக்கிறார்கள். 

சுவர்ணன் உட்பட பல போராளிகள் பற்றி இன்னமும் சிறிலங்கா அரசு தேடிய வண்ணம் உள்ளது. இதுபோன்ற இயக்க ரகசியங்கள் தெரியாமல் தலைவருக்கு வீரச்சாவு அறிவிக்க வந்துவிட்டார்கள் துரோகிகள்.

தவறான தகவல்களை சில ஆதாயங்களுக்காக பரப்பி ஏற்கனவே நொந்து போன இனத்தின் நெஞ்சில் குண்டு பாய்ச்சாதீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தலைவருக்கு வீரச்சாவு அறிவிக்க வந்துவிட்டார்கள் துரோகிகள்.

தலைவருக்கு வீரச்சாவு அறிவித்த புலம்பெயர் போலி புலிகளே உங்களில் முதுகெலும்பு உள்ளவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் தலைவரின் பாதுகாப்பு அணி...