நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு மூலமாக அந்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம், தனது அனைத்து (தாக்குதல்) நடவடிக்கைகளையும் கைவிடுமாறு அவர் வலியுறுத்தினார்."ராணுவம் மீது செல்வாக்கு உள்ள எவரேனும் அதன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்," என அவர் கூறினார்.
"ராணுவ ஆட்சியாளர்கள், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்," என்றும் அவர் கூறினார்.
நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நௌங்சோவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக, பிபிசி பர்மிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு குறைந்தது மூன்று மணிநேரத்துக்குள் உள்ளூர் நேரப்படி மாலை 03.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட முக்கிய பகுதியான சர்காயிங் பிராந்தியத்தின் வட-மேற்கு பகுதியில் உள்ள சாங்-யூ டவுன்ஷிப்பில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றதாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கிளர்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இக்குழுக்கள் ராணுவ ஆட்சியை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக போராடி வருகின்றன.
ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு (என்யூஜி), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் "தங்களை பாதுகாத்துக்கொள்ள எதிர் தாக்குதல்களை தவிர்த்து, இன்றிலிருந்து (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு வாரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக," அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
ராணுவம் இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக, அவமானகரமான தோல்விகளை சந்தித்து, பெருமளவிலான நிலப்பகுதியை இழந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஏற்படும் எதிர்ப்பை எதிர்கொள்ள வான்வழித் தாக்குதல்களையே ராணுவம் பெருமளவில் நம்பியுள்ளது.
நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள சர்காயிங் பிராந்தியத்தின் பெரும்பகுதிகள் ஜனநாயகத்துக்கு ஆதரவான எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து நான்கு ஆண்டுகளாகியும் நாட்டின் கால்வாசி பகுதிகள் கூட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என, பிபிசி நடத்திய புலன் விசாரணை மூலம் தெரியவந்தது.
கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் நாட்டின் 42% நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள பகுதியில், பெரும்பாலான இடங்களில் சண்டை நடந்து வருவதாகவும் புலன் விசாரணை கூறுகிறது.
வான்வழி தாக்குதல்களில் ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. வான்வழி தாக்குதல்களை முறியடிப்பதில் எதிர்ப்பு குழுக்களுக்கு போதாமை உள்ளது.
எவ்வித பாரபட்சமும் இன்றி, ராணுவத்தால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மிக மோசமான வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர்.
"ராணுவ நிர்வாகம் உண்மையை வெளிப்படுத்தாது என்பதே, கடந்த காலங்களில் ஏற்பட்ட மானுட பேரழிவுகள், இயற்கை பேரழிவுகளில் இருந்து எங்களுக்கு தெரிந்தது. மனிதநேய உதவிகள் எங்கு அதிகம் தேவைப்படுகிறதோ அங்கு அவற்றைத் தடுக்கும் வழக்கத்தையும் ராணுவம் கொண்டுள்ளது," என்றார் அவர்.
"உதவிகளை அவர்கள் ஆயுதமாக்கிக் கொள்வார்கள். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உதவி பொருட்களை அனுப்பிவிடுவார்கள், தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்கு அனுப்ப மறுத்துவிடுவார்கள்.
"எங்கெல்லாம் அதிக உதவிகள் தேவைப்படுகிறதோ, அங்கு வழிகளை மறித்து, அவற்றை கொண்டு செல்வோரை கைது செய்வார்கள், கடந்த காலங்களில் இயற்கை பேரிடர்களுக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதில் அவர்களின் அணுகுமுறை இப்படித்தான் இருந்தது.
"இந்த பேரிடரிலும் இப்படித்தான் நடக்கும் என நான் அஞ்சுகிறேன், அப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக