கடந்த திங்கட்கிழமை (10) இரவு பயிற்சி பெற்று வந்த 32 வயது மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி விட்டு தப்பி ஓடிய நபரை கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் , பாதிக்கப்பட்ட மருத்துவரிடமிருந்து திருடிய அலைபேசியைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்திற்கு முந்தைய நாள் போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அவர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக