புதன், 5 மார்ச், 2025

அமெரிக்கா த எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு டிரம்ப் அறிவித்தார்.

இந்தியா தனது விமானப்படையை நவீனமயமாக்குவதில், ஒரு முக்கியமான முடிவினை எடுக்க வேண்டியதாக இருக்கின்றது. அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்குவது இதற்கு தீர்வாகுமா? கடந்த மாதம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே வழங்கக் கூடிய எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

எஃப்-35 என்பது மேம்பட்ட சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் தாக்குதல் அமைப்புகள் மற்றும் தடையற்ற தகவல் பகிர்வு திறன்களைக் கொண்ட "ஐந்தாம் தலைமுறை" போர் விமானமாகும். இது எதிரிகளின் ரேடார்களில் சிக்காத வகையில் அதாவது, எதிரிகளுக்குப் புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு மிகவும் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த போர் விமானமாகும். 

ஒரு எஃப்-35 போர் விமானத்தின் விலை 80 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (எதிரி ரேடார்களுக்குப் புலப்படாமல் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்துவது என்பது "ஐந்தாம் தலைமுறை" போர் விமானத்தின் முக்கிய அம்சமாகும்.இந்தியாவின் விமானப் படையில் போர் விமானங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், சீனாவின் ராணுவப்படை மேம்பட்டு வருவதாலும், தற்போது இந்தியா மிகவும் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று பலர் கருதுகின்றனர். 

அது அமெரிக்காவில் இருந்து அதிநவீன, விலையுயர்ந்த எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதா அல்லது ரஷ்யாவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான சுகோய்-57-ஐ வாங்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. சுகோய்-57 போர் விமானங்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் ரஷ்யாவுடன் இந்தியாவுக்குள்ள பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று. 

 சர்வதேச அரசியலில் அமெரிக்கா - ரஷ்யா போட்டாபோட்டி ஊடகங்களில் பெரும்பாலும் மிகைப்படுத்திக் காட்டப்படுவதாகவும், யதார்த்தம் மிகவும் வேறுபட்டது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த மாதம், பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் போர் விமானங்களும் இடம் பெற்றிருந்ததால், இந்த விவாதம் மேலும் சூடுபிடித்தது.எஃப்-35 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்கத் தயார் என்று டிரம்ப் அறிவித்தது, வழக்கத்திற்கு மாறான ஒன்று என்று கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளர் ஆஷ்லி ஜே. டெல்லிஸ் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து பட்டதாரி பெண் !!

தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து பட்டதாரி பெண் சாதனை. நாகை மாவட்டம் வேதாரண்யம் தால...