இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கோப்பாய் காவல்துறையினா் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் , நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 வரையில் காவல்துறையினா் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக